Monday, June 20, 2011

நீல் எல்ட்ரெட்ஜ் : பரிணாமத்தின் வழக்கு

 பல் இஸ்லாமிய மத வாதிகள் பரிணாம்த்தை ஏற்றுக் கொண்டனர் என்பதும்,மத பிரச்சாரம் அதற்கு ஏற்ற மாதிரி மாறி வருகின்ரது என்பதுதான் எதார்த்தம்.பரிணாம்த்தை எதிர்க்கும் மத ஆதரவாளர்களில் கூட‌ .கருத்து வித்தியாசம் என்பது இயல்பானது.
ஒரு துறையின் சமீபத்திய கண்டு பிடிப்பு முந்தைய கண்டு பிடிப்பில் சிறிது மாற்றம் தெரிவித்தால் மட்டுமே அது அறிவியல். மாற்ற்மே அடையாமல் எதுவுமே இருக்காது.

 நீல் எல்ட்ரெட்ஜ் என்பவரின் கருத்துகள் டார்வினின் கருத்துகளுக்கு எதிராக இருப்பதாகவும்,ஆகவே பரிணாம விஞ்ஞானிகளுகிடையே ஒத்த கருத்து இல்லயென்று மதவாதிகளால் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.

இவரும் ஒரு பரிணாம விஞ்ஞானியே,இயற்கை தேர்வுக்கு மாற்றாக ஒழுங்கமைக்கப் பட்ட சம்நிலை என்ற தத்துவத்தை 1972ல் வரையறுக்கிறார்..அவருடைய 1986 வருட புத்தகத்தில் இருந்து சில வரிகள் டார்வினின் இயற்கைத் தேர்வு முறையை விமர்சிக்கும் மேற்கோள் காட்டினீர்கள்.2002ல் இவர் ஆற்றிய உரை காணொளியில்,படைப்புக் கொள்கையை எதிர்ப்பதை பாருங்கள்.
அறிவ்யலாளர்களின் கருத்து வித்தியாசங்கள் பரிணாம கொள்கையை பண் படுத்துவதில்தான் .பரிணாம(மதமும் அப்படித்தான்) கொள்கை கூட பரிண‌மித்தே வளர்கிறது என்பதே பரிணாம கொள்கைக்கு நிரூபணம் அல்லவா!!!!!!!!!!!!.

டார்வின் [1809_1882] இவர் சொன்ன அறிவியல் கருத்து அப்படியே மத புத்தகம் போல் மாறாமல்[நம்ப மாட்டோம்ல!!!!!!!] இருக்க வேண்டும் என்பதுதான் மதவாதிகளின் எதிர்பார்ப்பு.டார்வின் ஒன்றும் இறைத்தூதர் என்று நான் கூறவில்லை,லாமார்ர்க் கொள்கையை அவர் மேம்படுத்தினார்,இப்போது நியோ டார்வினிஸ்ம் என்ற கொள்கை நடைமுறையில் இருக்கிறது.அது பற்றிய ஒரு காணொளி
நான் சொல்வது இதுதான் பரிணாம்த்திற்கென்று வரும் பல ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றை தவறென்று ஆய்வுக் கட்டுரை எழுதி பதிவிட்டால் பல பரிசுகளும்,பதவிகளும் கிட்டும்.ஆகவே முதலில் இந்த பத்திரிக்கைகளில் நீங்கள் தவ்றென்று நினைக்கு சமீபத்திய [2010_11] தேர்ந்தெடுக்கவும்.அதற்கு எதிர் குரல் கொடுக்காமல்,எதிர் கட்டுரை எழுதவும்.நீங்கள் கேட்கும் கேள்விகள் சம்பந்தமாக் இதுவரை ஏதாவது பதிவுகள் இருக்கும்.எதிர் க்ட்டுரையில் வழக்கம் போல் ஏதாவது மதம் சம்பந்தமாக் எழுதாமல் இக்கட்டுரை உண்மையாக் இருக்க முடியாது என்று பதிவிடவும்.  ஒட்டக சிவிங்கி பற்றி முதலில் ஆய்வு செய்யுங்கள் அதற்கே அதன் அடிப்படை கல்வி அறிவு,கடும் உழைப்பு தேவைப்படும்.ஒட்டகச் சிவிங்கி பற்றி கட்டுரை தருகிறேன்.அதன் மீது எதிர் கட்டுரை எழுதி பதிவிடுங்கள்.பிறகு பார்க்கலாம்.

http://www.weloennig.de/LaryngealNerve.pdf
http://www.weloennig.de/GiraffaSecondPartEnglish.pdf

நான் இவ்வள‌வு உறுதியாக பரிணாம கொள்கையை ஆதரிக்கிறேன் என்பதை கூறுகிறேன்.பரிணாம் விதிகளை அடிப்படையாக கொண்ட பரிணாம நெறிமுறை என்ற அல்காரிதம்evolutionary [algorithm] பயன்படுத்துவது உண்டு..இந்த அல்காரிதம் டார்வினின் கொள்கையின் அடிப்படையில் ப்ரோக்ராம்[program] ஆக மாற்றப் பட்டது.இயற்கையின் நடவடிக்கை அனைத்திலும் பரிணாம வளர்ச்சி நடைமுறையில் இருப்பதை பார்த்து சைமுலேட்[simulation] செய்தது.இந்த முறைகள் பல துறைகளில் பயன் பாட்டில் உள்ளது.  


இதை பற்றி விரும்பினால் எவ்வளவு விவரம் வேண்டுமானாலும் தருகிறேன்.மாதிரி சரி என்பதால் அசலும் சரியாக்த்தான் இருக்க வேண்டும்.8 comments:

 1. என்ன பாஸ் ஓரே போடா போடுறீங்க.. பாவம் அவர்கள் .. விழிப் பிதுங்கி குரானில்பதில் தேடி வருகின்றார்கள் .. தொடருங்கள் சகோ

  ReplyDelete
 2. சும்மா எல்லாம் ஒரு விளையாட்டுதான்.நன்றி

  ReplyDelete
 3. அவர்களுக்கு வேறு வழியில்லை,மதம் என்பதால் கப்பர்றப் பட வேண்டும்.கடவுள் எங்களுக்கு கொடுத்த நாடு என்று டுபாக்கூர் விட்டு பாலஸ்தீனத்தை கைப்பற்றிய யூதர்களில் இருந்து ,கிறித்தவ‌,இஸ்லாமிய ஆட்சியாளர்,மதகுருக்களுக்கு ம்தத்தின் தேவை இருக்கிறது.

  *********
  ஒட்டக சிவிங்கியின் கழுத்து நீண்டது போல் மான்களின் கழுத்து ஏன் நீளவில்லை என்பதுதான் கேள்வி,இரண்டுக்கும் வெவேறு தொடர்பு சங்கிலி ஒட்டக சிவிங்கி பரிணாமம் பதிவில் மான்கள் பரிணாம்ம் வளர்ச்சி பற்றிய சுட்டி இங்கே
  ஒப்பிட்டால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.ஒரு விஷயம் எப்படி நிகழ்ந்தது என்பதை காரண காரியங்கள் கண்டு பிடிக்கலாம்,ஏன் இப்படி நட்க்கவில்லை என்று கேட்டால் நிச்சயம் ஒப்ட்டு பார்த்தால் புரியும்.
  http://thebestdeerrepellent.com/deerrepellent/deer-of-the-world-their-evolution-behavior-and-ecology-by-valerius-geist

  ReplyDelete
 4. //ஒட்டக சிவிங்கியின் கழுத்து நீண்டது போல் மான்களின் கழுத்து ஏன் நீளவில்லை //

  இதற்கான பதில் ரொம்ப ஈஸி !! ஒரு செல் உயிரினம் ஏன் மனிதனாக மாறியது, இன்னொன்று நாயாக மாறியது ....

  எனத் திரும்பி கேட்டுப் பாருங்க ... ஹிஹி !!!

  ******************************'

  குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்

  ReplyDelete
 5. வணக்க்ம @இக்பால் செல்வன்
  அதாவது மத வாதிகள் ஒரு மனித இனம் இன்னொரு இனமாக் மாறுவதை ஏற்கிறார்கள்.அதற்கும் இதே இயற்கைத்தேர்வு முறையே செயல்படும் முறை என்பதை யோசித்தாலே ப்ரிந்து வியடும்.ஒரு தமிழரும்,சீனரும் மண உறவு கொள்கிறார்கள் புது இனம் தோன்றுகிறது,இந்த ஒரு பக்க மூக்கு நீள்மாக இருக்க் வேண்டும்,இன்னொரு பக்க மூக்கு சப்பையாக் இருக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறோம் இரு அம்சங்களும் ஒரு விகிதத்தில் கல‌ப்பதை கண்கூடாக காண்லாம்.
  சில குதிரைக்கும்,கழுதைக்கும் கலப்பு கோவேறு கழுதை பிறப்பது போல் ஒத்து வரக்கூடிய விலங்குகள் இனப்பெருக்கம் செய்யும் போது புது விலங்குகள் தோன்றாதா?நியாண்டர்தால் என்ற மனிதன் போன்ற ஒரு இனம் இருந்ததும் அது அழிந்ததும் கூட ஒரு நிரூபணமே.
  evolution=natural selection+cross over+mutation

  கடைசியாக மதவாதிகள் பரிணாம்த்தை ஏற்காமல் இருப்பதே மிகவும் நல்லது.மதத்தை வேரோடு ஒழிக்க[உங்க தீய கலாச்சார ஒழிப்பு போல்தான்] எளிதாகிவிடும்.இப்ப்டியே கூறிக் கொண்டிருந்தால் மக்களுக்கு பரிணாமம் புரியும் வண்ணம் எளிமைப் படும் போது மத்மென்பது ஏமாற்றும் வேலை என்பது புரிந்து விடும்.ஆனால் இப்படி இரண்டையும் கலப்பது மதங்களை நீடிக்க செய்யும் என்பதுதான் நம் கவலை.

  ReplyDelete
 6. மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ. பல மதங்கள் இப்படி மத நம்பிக்கைகளையும், அறிவியலையும் கலப்பதில்லை.

  குறிப்பாக பௌத்தம், இந்து மதம், சமணம், ஏன் கிறித்தவர்களில் கூட சில பிரிவினர் கலப்பதில்லை... ஆனால் இஸ்லாமியரும், கிறித்தவர்களில் சில பிரிவினரும் இப்படியான கலப்படங்களை உருவாக்கி அறிவியல் முன்னேற்றத்துக்கு ஆப்படிக்க ஆரம்பித்துள்ளனர்.

  அவர்களின் கலப்பு எல்லாம் இப்படித் தான் பரிணாமத்தில் இருந்து கொஞ்சத்தை எடுத்து மதப் புத்தகத்தோடு கலந்து ஒரு மாதிரி கேவலப்படுத்தி ஒன்றும் தெரியாதவர்களை குழப்பிவிடுவதே...

  இப்படியான போக்குகளை உடைக்க சரியான உண்மைகளை வெளிக் காட்டவேண்டிய காலமிது என நினைக்கின்றேன்...

  ReplyDelete
 7. நல்ல பதிவு. நிறைய அறிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கு . :)

  ReplyDelete
 8. நண்பர் ஆரோணன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நன்றாக எழ்துகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete