Tuesday, June 28, 2011

சபாஷ் சரியான போட்டி:பரிணாம ஆதரவு விஞ்ஞானிகளின் மறுப்பு



 வணக்கம் நண்பர்களே,

சென்ற பதிவில் பரிணாம் எதிர்ப்பு அறிவியலாளர்கள் பழி வாங்கப் படுவதாக் ஒரு பிரச்சாரப் படம் பார்த்திருப்பீர்கள்.அரசியலில் ஒருவன்,ஒரு கொள்கையின் மீது அவ்தூறு பிரச்சாரம் என்பது மிகவும் இயல்பான விஷயம்.ஒரு பிரச்சாரத்திற்கு மறுப்பு, பதில் பிரச்சாரம் என்பது அனுமதிக்கப் படும் போது நடுநிலையாளருக்கு இருவர் கருத்தை அறியும் வாய்ப்பு கிடைகிறது.அவர் ஏதோ ஒன்றை ஆதரிக்க்லாம் அல்லது ,இவனுகளுக்கு வேற வேலையே இல்லை இரண்டு பேரும் அயோகிய பயலுங்க‌ என்று ஒரு சராசரி இந்திய குடிமகன் போல் கருமமே கண்ணாயினார் ஆக விலகி செல்லலாம். அனைத்து உரிமைகளும் உங்களுக்கு உண்டு.தயவு செய்து தகவல்கள் மட்டும் அறியுங்கள்.  

பரிணாம் எதிர்பு குழு திரைப் படம் எடுத்து திரையிட்டது போல் பரிணாம் ஆதரவு குழுவும் ஒரு திரைப் படம் தயாரித்தார்கள்.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது மெய்யாகி விட்டது. அந்த ப்ழி வாங்கப்பட்டதாக கூறப்படும் ஒவ்வொரு விஞ்ஞானி,ஆய்வாளரின் ஜாத்கத்தையே அலசி,நடந்தது என்ன என்று விளக்குகிறார்கள்.

அந்த படத்தையும் பாருங்கள்.

நன்ன் சொல்ல வருவது என்ன?

1.பரிணாமத்திற்கு மாற்றாக எதிர் குழு பதிவிட விரும்பு ஆய்வு எது?

2. அது குறித்த கட்டுரைகள் கிட்டுமா?

இக்கட்டுரைகளில் கடவுள் வந்தார் ,களிமண் எடுத்தார் ,பொம்மை செய்தார் ,மனிதன் வந்தான் என்று ஆய்வுக் கட்டுரை எழுதி பதிவிடுங்கள் என்றால் அப்ப்டி கேட்பவ்ர்களை மன் நிலைக் காப்பக்த்திற்குத்தான் அனுப்ப வெண்டும்.என் புத்தக்த்தில் எழுதியிருக்கிறது ஆகவே இக்கட்டுரையை பதிவிடுங்கள் என்றால் அப்புத்தகத்தை காப்பக்த்தில் வைத்து படிக்க அனுமதி கிடைக்கலாம்.

 நிச்ச்யம் அப்படி செய்ய மாட்டார்கள் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலத்தான் அறிவியல் பின் புலத்தில் சில கருத்தியல்களை உருவாக்கித்தான் செய்ய முடியும்.

ஏஎற்கெனவே நான் அறிந்தவரை பழைய பூமி கொள்கை,புதிய பூமிக் கொள்கை என்று பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி இருகொள்கைகள் உண்டு.உயிர்களின் தொற்ற‌ம் பற்றி என்ன கொள்கை அறிவியல் படி கூற இயலும்?

1. வேற்று கிரகத்தில் இருந்து (மனிதன் உட்பட அனைத்து)உயிர்கள் வந்த்ன.

2. மனிதன் மட்டும் வேற்று கிரகத்தில் இருந்து வந்த்வன் ,மற்றவை மட்டும் பரிணாமம் மூலம் வளர்ச்சி அடைந்த்ன.

3. பரிணாமத்தின் முதல் செல் உயிர்கள் எரிகற்கள் மூலம் பூமிக்கு வந்து இருக்க்லாம்.

இம்மாதிரி கருத்துகளுக்கும் ஆதாரங்கள் தேவைபடுகின்றன.ஏற்கென்வே கிடைத்த படிமங்களின் கால்க் கணக்கீட்டுக்கும் இக்கருத்து ஒத்துப் போக வேண்டும்.

வரும் பதிவுகளில் இந்த அறிவியல் படைப்புக் கொள்கை பற்றி ஆய்வு நடத்தும் மதவாதிய‌ல்லாத விஞ்ஞானிகள் யார்? அவர்களின் ஆய்வுகளில் ஏதாவது ஆச்சர்யமான் விஷயங்கள் உண்டா என்று பார்ப்போம்.

இந்த மாதிரி ஏதாவது செய்யுங்கள் என்றால் யானையின் தும்பிக்கை பற்றிய நம்பிக்கையை காட்டி எப்படி வந்தது சொல் என்கிறார்கள்.இக்கட்டுரையில் இதற்கு பதில் இருக்கிறது என்றால் ஹி ஹி பதில் தெரியலை, என் வழிக்கு வா  என்கிறார்கள்.

நாம் என்ன சொலவ்து?

"உன் நம்பிக்கையின் தும்பிக்கையை சுருட்டு ,எங்கள் வளர்ச்சிப் பாதையை தடுக்கிறது"

தேடலும் அறிவதும்,மனித இயல்பு.இந்த அறிவியல் படைப்புக் கொள்கை பற்றியும் தேடுவோம்,அதில் மதக் கசடை தவிர்த்து ஏற்றுக் கொள்ளும் வண்ண‌ம் ,பரிணாம்த்தை விட சான்றுகளை விளக்கும் விஷய்ம் இருந்தால் ஏற்போம்.

கொஞ்சம் தேடி பிறகு இது குறித்து விவாதிப்போம்.

Watch the Movie in you tube


http://www.youtube.com/watch?v=F5ixmLNwF9s&playnext=1&list=PLA3D6C9C847F27E6F

6 comments:

  1. //"உன் நம்பிக்கையின் தும்பிக்கையை சுருட்டு ,எங்கள் வளர்ச்சிப் பாதையை தடுக்கிறது"//

    This is super

    ReplyDelete
  2. வாங்க நண்பரே,
    அப்புறம் என்ன அவர்களுக்கு அவர்கள் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டி உள்ளது.விமர்சனம் கூட நட்புரீதியாக ,நாகரிகமாக் செய்ய முடியும் என்று தோணாதவர்களை என்ன செய்வது?.நான் உன்னை மதிக்கிறேன்,நீ என்ன மதி என்றால் நீ என்ன மதிப்பது நான் உயர்வான்வன் என்று உனக்கு தெரிந்து இருப்பதால் என்றால் என்ன செய்வது?

    கொஞ்சம் இந்த அறிவியல் படைப்புக் கொள்கை பற்றியும் கொஞ்சம் படிப்போம்.எல்லாரும் தரும் ஊக்கமே ஒரு மருந்து நன்றி.

    ReplyDelete
  3. சார்....சார்... உங்களை demolished, answered, exposed, rebutted, ....ஆக வைத்த சூப்பர் ஆய்வு

    //அஸ்ஸலாமு அலைக்கும்,

    என்னிடம் யாரும் பரிணாமம் குறித்து வாதிக்க வருவார்களேயானால் அவர்களிடம் நான் முதலில் கேட்கும் இரு கேள்விகள்,

    1. பரிணாமம் உண்மையென்று வாதிக்கப்போகின்ரீர்களா?

    2. முதல் கேள்விக்கு விடை "ஆம்" என்றால் என்னுடைய அடுத்த கேள்வி "பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குங்கள்?"

    இந்த இரண்டு கேள்விகளை முதலில் வைக்கவே விரும்புவேன். இதற்கான பதில்களை கொண்டு வாதிப்பவரின் பரிணாம ஞானத்தை கணக்கெடுக்க பார்ப்பேன். பின்பு அதற்கேற்றார்போல என்னுடைய கேள்விகள் அமையும்.

    பரிநாமவியலில் உள்ள ஓட்டைகள் என்பது கணக்கிட முடியாதது. அதனை எவரும் நிரூபிக்கவும் முடியாது. தங்கள் கற்பனைகளை கொண்டு ஏதாவது சொல்ல முயற்சிக்கலாமே ஒழியே ஆதாரங்களை காட்ட முடியாது. என்னுடைய தளத்தில் நமக்கும், பரிணாம ஆதரவாளர்களுக்கும் நடந்த விவாதங்களே இதற்கு சாட்சி.

    பரிணாமத்தை புரிந்துக்கொள்ள/பரிணாமம் குறித்த உங்கள் குற்றச்சாட்டுக்கு பதிலாக இதை பாருங்கள், அதை பாருங்கள், இந்த விஞ்ஞானி அப்படி கூறிருக்கின்றார், அந்த விஞ்ஞானி அப்படி கூறிருக்கின்றார் என்று பலவித லிங்குகளை கொடுப்பார்கள்.

    அங்கே சென்று படித்து பார்த்தால்/கண்டால் வெங்காய கதையாக இருக்கும். அதாவது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது.

    தங்கள் கற்பனையை கொண்டு என்னென்னமோ சொல்லிருப்பார்கள், ஆனால் ஆதாரம் மட்டும் இருக்காது.

    நம் நேரத்தை வீணாக்கியவர்களை நினைத்து நொந்து கொண்டு திரும்ப வருவோம். இதுதான் தொடர்ந்து நடக்கின்றது.

    இப்போதெல்லாம் பரிணாம ஆதரவாளர்களுடன் வாதிட நேர்ந்தால், அவர்கள் சுட்டியை கொடுத்தால், அவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது 'தயவுக்கூர்ந்து அந்த சுட்டியில் உள்ள மத்திய மேட்டர் என்னவென்று சுருக்கமாக நீங்களே சொல்லிவிடுங்கள். இந்த மத்திய மேட்டார்தான் நான் எதிர்பார்ப்பதாக இருந்தால் நான் அந்த சுட்டியை பார்க்கின்றேன்".

    அப்புறம் மற்றொரு மிக முக்கிய விசயம். பரிணாமத்தை முளையிலேயே கில்லிவிடலாம். அதாவது, அடிப்படையிலேயே பிரச்சனைகளை கொண்டது பரிணாமம். அதனால் அதை முறியடிக்க நாம் அதிக தூரம் செல்லவேண்டியதில்லை. பரிணாம அடிப்படைகள் குறித்து கேள்விகள் எழுப்பினாலே பரிணாம ஆதரவாளர்கள் திணறுவார்கள். பதில் சொல்லுவதற்கு ஆதாரம் என்று ஒன்றும் இருக்காது.

    உதாரணத்துக்கு, சமீபத்தில், பரிணாமத்தின் அடிப்படையான "பரிணாம மரத்தை" கட்டுக்கதை என்று விமர்சித்தார் பாருங்கள் வென்டர்.

    இவர்களை முறியடிக்க நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அடிப்படையில் கை வைத்தாலே போதும்.

    இன்ஷா அல்லாஹ் தொடர்கின்றேன்...//

    ReplyDelete
  4. ஐயா,

    இரவு தூக்கத்தை கெடுத்து விட்டீர்கள், அந்த காணொளிகளை இரவு முழக்க பார்க்க வேண்டியது தான். yeats கவிதை....என்ன சொல்ல.....

    ReplyDelete
  5. நண்பர் நரேன்
    அவர்கள் பரிணாம ஏற்க வேண்டாம, கொஞ்சம் சிந்த்னையில் பரிணாம முதிர்சி பெற்று
    1.பெண்கள் காரோட்டினால் அடிப்பது,
    2.கைஅயை வெட்டுவது,
    3.கல்லெறிந்து கொல்வது,
    4.வாளால் த்லை வெட்டுவது
    போன்ற நாகரிகமற்ற செயல்களை கைவிடவே கூறுகிறோம்.

    ReplyDelete
  6. நண்பர் நரேன்,
    அந்த மத பிரச்சாரகரின் பதிலில் பரிணாம்ம என்ற வார்த்தைக்கு பதிலாக குரான் என்று போட்டு பார்த்தாலும் பொருந்தும்.

    "வானமும் பூமியும் இணைந்து பிரிந்தது(குரான் 21:30)" என்றால் பிக் ஃபேங் தியரி என்று அறிவியல் புரிபவ்ர்களுக்கு பரிணாம்ம் புரிய வைக்க உலக மக்கள் அனைவரும் சேர்ந்தாலும் முடியாது.

    இவர்களுக்கு சொல்லுங்கள் "நம்பிக்கையின் தும்பிக்கையை சுருட்டு"
    ஹி ஹி ஹி

    ReplyDelete