Wednesday, March 16, 2011

ஆதம் ஏவாள் கதை:காயீனின் மனைவி யார்?


நான் படித்த இந்த பதிவின் இந்த வாக்கியங்களுக்காக இந்த பதிவு.


//ஆயின் காபேலை கொன்ற பிறகு ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறி தனக்கான துணையை தேர்தெடுத்து கொண்டான், அந்த துணை எப்படி வந்தது, அது பற்றி பைபிளில் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?//

யூத்,கிறித்தவ,இஸ்லாமிய வேதங்களின் படி இறைவன் படைத்த முதல் மனிதர்கள் ஆதம்,அவர் மனைவி ஏவாள். 
இவர்களுக்கு இரு மகன்கள் காயீன் மற்றும் ஆபேல்.ஆதியாகமம் அவர்களின் கதையை இவ்விதமாக கூறுகிறது.


ஆதியாகமம் 4 அதிகாரம்

1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

2. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

3. சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

5. காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

6. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

7. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

8. காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

9. கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

10. அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

11. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

12. நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

13. அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

14. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

15. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

16. அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17. காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

====================

இதனை படிக்கும், இயல்பாக சிந்திக்கும் யாருக்குமே வரக்கூடிய கேள்வி க்கதை நடப்பதாக சொல்லப்படும் போது உலகில் ஆதம்,ஏவாள் மற்றும் காயீன் மட்டுமே உள்ளனர்,காயீன் வேறு இடத்திற்கு சென்று விடுகிறார், அவர் மனைவி யார்?

இக்கேள்விக்கு விடை காணும் முயற்சியில் இறங்கினோம்.இதற்கு விவிலிய[பைபிள்] தொகுப்பு வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்.


விவிலிய[பைபிள்] தொகுப்பு வரலாறு 


விவிலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு,  கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.

விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை (The Deuterocanonical books) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூத மத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும் இணைத் திருமுறை புத்தகங்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.

இதுவும் இல்லாமல் பழங்காலத்தில் பல புத்தகங்கள் புனித்மாக கடைப்பிடிக்கபபட்டன. அவற்றில் சிலவற்றை தொகுத்தே விவிலியம் உருவாக்கப் பட்டது.கிறித்தவம் ரோம பேரரசின் அரசு மதம் ஆனதும் அரசர் கான்ஸ்டன்டைன்[272‍‍ _337கி.பி] அறிஞர்களை கொண்டு தொகுத்த வாட்டிகன் கோடெக்ஸ்,சினக்டிஸ் கோடெக்ஸ என்ற மூலப் பிரதிகளை கொண்டே இப்போதைய விவிலியங்கள் அச்சிட படுகின்றன.


விவிலியத்தில் இடம் பெறாமல் போன புத்தகங்கள் அபொகிரிபா[apocrypha]  என்று அழைக்கப் படுகின்றன.அப்படி ஒரு புத்தகம்தான் ஆதம் ஏவாளின் புத்தகம்.[Book-of-Adam ]இந்த புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
The Book of Adam and Eve
The 1st Book of Adam & Eve (Revised English)
இப்புத்தகம் ஆதம் ஏவாளின் கதையை கொஞ்சம் விளக்க்ச்மாகவே கூறுகிறது.ஆதம் ஏவாள் முத்லில் பெற்றது இரட்டை குழந்தைகள்.ஆண் குழந்தை காயின் மற்றும் பெண் குழந்தை லுலுவா.

Book1:Chapter 74
The birth of Cain and Luluwa. Why they received those names.

5 And God looked at His maid-servant Eve, and delivered her, and she gave birth to her first-born son, and with him a daughter.

6 Then, Adam rejoiced at Eve’s deliverance, and also over the children she had borne him. And Adam ministered to Eve in the cave, until the end of eight days;when they named the son Cain, and the daughter Luluwa.
7 The meaning of Cain is “hater,” because he hated his sister in their mother’s womb; before they came out of it. Therefore, Adam named him Cain.

8 But Luluwa means “beautiful,” because she was more beautiful than her

ஆதம் ஏவாள் இரண்டாவது பெற்றதும் இரட்டை குழந்தைகள்.ஆண் குழந்தை ஆபேல் மற்றும் பெண் குழந்தை அகிலா.

Book1:Chapter 75

11 When the children were weaned, Eve again conceived, and when her
pregnancy came to term, she gave birth to another son and daughter. They
named the son Abel and the daughter Aklia

சாத்தான் காயின் மனதில் ஆபேல் மீது பொறாமை வர வைத்ததும் கூறபடுகிறது.காயின் விரும்பிய லுலுவாவை ஆபேல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே காயீன் ஆபேலை கொலை செய்கிறார்.

Book1:Chapter 76

10 But as to the hard-hearted Cain, Satan came to him by night, showed himself and said to him, “Since Adam and Eve love your brother Abel so much more than they love you, they wish to join him in marriage to your beautiful sister because they love him. However, they wish to join you in marriage to his ugly sister, because they hate you. 1

1 Now before they do that, I am telling you that you should kill your brother. That way your sister will be left for you, and his sister will be cast away.”

12 And Satan departed from him. But the devil remained behind in Cain’s heart, and frequently aspired to kill his brother.


பிறகு காயீனும் லுலுவாவும் வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர்.

Book2:Chapter 1

The grief stricken family, Cain marries Luluwa and they move away.

1.When Luluwa heard Cain’s words, she wept and went to call her father and mother, and told them how that Cain had killed his brother Abel.

2 Then they all cried aloud and lifted up their voices, and slapped their faces, and threw dust upon their heads, and rent asunder their garments, and went out and came to the place where Abel was killed.

3 And they found him lying on the earth, killed, and beasts around him; while they wept and cried because of this just one. From his body, by reason of its purity, went out a smell of sweet spices.

4 And Adam carried him, his tears streaming down his face; and went to the Cave of Treasures, where he laid him, and wound him up with sweet spices and myrrh.

5 And Adam and Eve continued by the burial of him in great grief a hundred and forty days. Abel was fifteen and a half years old, and Cain seventeen years and a half.

6 As for Cain, when the mourning for his brother was ended, he took his sister Luluwa and married her, without leave from his father and mother; for they could not keep him from her, by reason of their heavy heart

முடிவுரை

இப்புத்தகம் ஏன் விவிலியத்தில் இடம் பெறவில்லை என்ற விவரம் தெரியவில்லை.நாம் இப்படி கூறலாம்.

1.இப்புத்தகத்தில் முறை தவ‌றிய உறவு கூறபடுவதால் நாகரிகம் கருதி தவிர்க்கப் பட்டு இருக்கலாம்.[ஆனால் பல இப்படிபட்ட‌ கதைகள் இப்போதைய விவிலியத்திலும் உண்டு]

அல்லது

2.ஏதாவது மதவாதி ஆதியாகமத்தின் விடை தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்க எழுதிய புத்தகம் என்று கண்டு பிடிக்கப் பட்டு இருக்கலாம்..

எனக்கு இரண்டாம் காரணமே சரியாக படுகிறது ஆமென்.

11 comments:

 1. கிறிஸ்தவ நம்பிக்கையின் படி 7வது நாள் ஞாயிறு. ஆனால் யூதர்கள் சனிகிழமையை புனித நாளாக கருதுவதாக கேள்விப்பட்டிருக்கிறறேன். (God has blessed the 7th day as Holy day and he took rest in that day. hence Jews might be right) (but still some christians consider saturday as rest day, and they are call as 7th day christians) i don't think that Jews has aceepted the "christians old testement:. because they have already got th Holy book named "Torah / Morah or Tanach" (simething like that.). old testament is based on "Torah" , but not the same. Jews don't accept Jesus as messaiya. if i'm wrong, please correct me.

  kannan from abu dhabi.
  http://samykannan.blogspot.com/

  ReplyDelete
 2. நல்லதொரு விளக்கம் - அபோகலிபா புத்தகம் பற்றி டாக்குமென்றியை கண்டதுண்டு ... அவையவும் இடைக்காலச் செருகல் என்பதால் அவை நீக்கப்பட்டதாக எதிரிமரபினர் (PROTESTANT) கூறுகின்றனர். ஆபேல் - காயின் தனிமனிதனா இல்லை இரு சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வரலாறா ? இந்தக் கோணத்தில் ஏதேனும் விளக்கம் உண்டா ... இது எனது சந்தேகமே !!!

  ReplyDelete
 3. இறைவனால் அருள்பட்ட ஒரு வேதம் மனிதர்களின் கரம் புகுந்ததால் இந்த நிலைக்கு வந்துள்ளது.

  'பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றித் திரிந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்' - (மத்தேயு 4:23)

  'ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்' - (மாற்கு1:14)

  யார்யாருடைய புத்தகங்களை எல்லாம் வேத முத்திரையுடன் உலா வரச் செய்த கிறித்தவ உலகம், ஏசு நாதர் மக்களுக்கு பிரசிங்கித்த 'தேவனுடைய சுவிசேஷம்' அதாவது முகமது நபிக்கு அருளப்பட்ட குர்ஆனைப் போன்ற 'இன்ஜில்' வேதத்தை பைபிளில சேர்க்கவில்லை? அந்த பிரசங்கங்களை என்ன செய்தது கிறித்தவ உலகம்? அந்த வேதம் மட்டும் நம் பார்வைக்கு வரப் பெற்றால் முற்றிலும் அது குர்ஆனின் மறுபதிப்பாக இருக்கும். தற்போதுள்ள கிறித்தவ உலகத்தின் பல நம்பிக்கைகள் தகர்ந்து விடும் அபாயமும் இருக்கிறது.

  ReplyDelete
 4. இந்தக் கோணத்தில் ஏதேனும் விளக்கம் உண்டா ... இது எனது சந்தேகமே /
  தோழர் இக்பால் வணக்கம்,
  மத புத்தகங்கள் எழுதப்பட்ட இடம்,காலம்,சூழ்நிலையை மட்டுமே பிரதிபலிக்கின்றன என்பது என் கருத்து. மத புத்தகங்களின் தொகுப்பு,மூல பிரதிகள்,மொழி பெயர்ப்பு சிக்கல்கள் பற்றி சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் விவரங்கள் கிடைப்பதில்லை.புத்தகங்களில் உள்ள ஒரு வாக்கியம் முதலில் எழுதப்பட்ட[சொல்லப் பட்ட] பொருளிலேயே இப்போதும் விளங்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் மிக குறைவு.

  உங்கள் சந்தேகத்திற்கு வருகிறேன்.

  காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.[ஒரு இடத்தில் வாழும் உழவுத்தொழில் செய்யும் மனிதன்[ம்]]

  ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்,[நாடோடியாக கால்நடைகளை மேய்க்கும் தொழில் செய்யும் மனிதன்[ம்]]

  இந்த இரு குழுவினருக்கும் ஏற்பட்ட மோதல் நாடோடி வாழ்க்கை அழிந்து குடியானவர்களாக வாழ்வு முறை மாறியது என்று தத்துவார்த்வமாக பதில் அளிக்கும் பிரச்சாரகர்களும் உண்டு.

  http://en.wikipedia.org/wiki/Cain_and_Abel

  =============


  முன்னோர்களின் [புத்தக] படைப்புத்திறன்[கருத்துகள்] தத்துவ ரீதியான விளக்கம் அளிக்கும் அளவிற்கு உயர்ந்தாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
  இறை மறுப்பு கொள்கையாளனால் இறைவன் மனிதன் மூலமாக வேதம் அளித்தார் என்பதை ஏற்க முடியாது.மத புத்தகங்களின் தொகுப்பும், மதங்களின் உருவாக்கமும் அரசியல் பிண்ணனி கொண்டவை..மதங்களின் கருத்தாக்கம் இடம்,காலம்,சூழ்நிலைகேற்ற வண்ணம் பரிணாம வளர்ச்சி அடைந்தே வருகின்றன.மதவாதிகள் எங்கள் மதம் தோன்றியதில் இருந்தே ஒரே கருத்தாக்கம் உடையது என்றால்.அது பொய்..

  மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.

  Everything grows either in positive or negative direction.
  ====================

  அப்படி ஒரு கருத்தாக்கமே மேற்கூறிய விளக்கம்.
  March 17, 2011 12:16 PM

  ReplyDelete
 5. /தேவனுடைய சுவிசேஷம்' அதாவது முகமது நபிக்கு அருளப்பட்ட குர்ஆனைப் போன்ற 'இன்ஜில்' வேதத்தை பைபிளில சேர்க்கவில்லை? /

  வணக்கம் நண்பரே,

  நீங்கள் கூறுவது குரானில் குறிப்பிடப் படும் இஞ்சீல் என்பது கிறித்தவர்கள் வேதமான புதிய ஏற்பாடு அல்ல என்பதுதான்.இது மிகவும் ஆய்வு செய்து கருத்து கூற வேண்டிய விஷயம். ஆதலால் இப்போது சரி,தவறு என்று கூற முடியாது.

  நீங்கள் இதனை வரலாற்று ஆதாரங்களுடன் பதிவிட்டால் நலம்.பதிவிட்டதும் படித்து கருத்து கூறுகிறேன்.

  வருகைக்கும்,கருத்து பதிவுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. தோழர் கண்ண்ன்
  பழைய ஏற்பாட்டின் [விவிலியத்தின்] படி சனிக்கிழமைதான் ஓய்வுநாள்.கிறித்தவத்தில் இயேசு ஓய்வு நாளை வலியுறுத்தவில்லை.சனிக்கிழமை ஓய்வுநாள்[சப்பாத்] என்பது யூதர்களுக்கு மட்டுமே என்ற கருத்தினையே முக்கிய கிறித்தவ் பிரிவினர் கூறுகின்றனர்.சிலபிரிவினர்யூதர்களின் வழக்கத்தையே பின்பற்றுகின்றனர்.

  ஞாயிற்றுக் கிழமை ஏன் என்று இந்த இணைப்பில் புதிய‌ ஏற்பாட்டின் [விவிலியத்தின்] படி விளக்கம் உள்ளது.

  http://www.gotquestions.org/Saturday-Sunday.html

  என்னுடைய ஆய்வின்படி ரோம அரசர் கான்ஸ்டன்டைன் காலத்திற்கு பின் மாறியது.அந்த கால கட்ட்ழ்த்தில் ரோமர்களின் முந்தைய மதமான சூரிய வழிபாட்டு முறைமைகளில் ஒன்றுதான் ஞாயிறு [சூரியன்=sun+day]இது.கிறித்தவத்திலும் ஊடுருவி விட்டது.வரலாற்று இயேசு தொடரில் இதை குறித்து விளக்கமாக எழுதுவேன்.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

  ReplyDelete
 7. அந்த வேதத்தை அருளும் போதே எல்லாம் வல்ல கடவுளுக்கு தெரியாதா, இந்த வேதம் நாசமா போகப்போவுதுன்னு, அது தெரியலைன்னா எப்படி எல்லாம் வல்ல தேவன்!

  இவரு புதுசு புதுசா தூதர் அனுப்பி டெஸ்ட் பண்ணி பாக்குற அளவுக்கு தத்தியா இருந்தா மத்த விசயமும் அப்படி தானே இருக்கும்!

  ReplyDelete
 8. //இவரு புதுசு புதுசா தூதர் அனுப்பி டெஸ்ட் பண்ணி பாக்குற அளவுக்கு தத்தியா இருந்தா மத்த விசயமும் அப்படி தானே இருக்கும்!//
  வணக்கம் நண்பர் வால் பையன்
  அம்பாள் எந்த காலத்தில் பேசினாள் என்பது போல் இறைவன் எந்த காலத்தில் அனுப்பினார் என்றே கேட்க வேண்டும்.
  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

  ReplyDelete
 9. நல்ல ’கதை’களுக்கு நன்றி. இதுவரை தெரியாத கதைகள்.

  ReplyDelete
 10. பைபிளில் வெளியான ஆதாம் ஏவாள் கதை எனக்கு பிடிச்சிருக்கு.அதை அப்படியே(ஜெயலலிதா அறிக்கைபோல) ஈயடிச்சான் காப்பியடிச்சி குரானில் வெளியான ஆதம் ஹவ்வா கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதைவிட நண்பர் சார்வாகன் கதை வசனம் எழுதியவிதம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

  நன்றி நண்பரே பணி தொடரட்டும்....

  ReplyDelete
 11. நண்பர் யாசிர்
  உங்களின் ஊக்கமான் வார்த்தைகளுக்கு நன்றி.இஸ்லாம் என்ற ஆன்மீகத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. மற்ற மதங்கள் போலவே இதிலும் சில நிரூபிக்கப்படாத செயல்கள் உண்டு.அதனி ஏற்று ஷாரியாவில் மனித உரிமைகள் பாதிக்கப்படாதவண்னம் மாற்ற வேண்டும் என்பதே நம் ஆசை.

  இபோது வேறு மதத்தவர் யாரும் என் புத்தகத்தில் இப்படி எழுதி இருப்பதால் எல்லாரும் இப்படித்தான் செய்ய வேண்டுமென்று சொல்வதில்லை எனும்போது உலகம் மாறிவிட்டது அதற்கு தகுந்த படி மனித உரிமை சட்டங்களும் சீர்திருத்த வேண்டியதின் அவசியத்தையும் உணரவேண்டும்.
  வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

  ReplyDelete