Wednesday, June 8, 2011

வரலாற்று இயேசுவை தேடி 5 :இயேசு இந்தியாவில் வளர்ந்தாரா?





இயேசுவின் வரலாற்றை கூறும் புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் அவர் வளரும் பிராயத்தில் நடந்த பல சம்பவங்களை சொலவதில்லை.அவர் தனது 30 வயதில் இறைவனின் ஊழியத்தை யோவானிடம் ஞானஸ்தானம் பெற்று சாத்தானால் சோதிக்கப் பட்டு பிறகு ஆரம்பித்தார் என்பதையே குறிப்பிடுகின்றன.

திரு இயேசுவின் கொள்கைளுக்கு முந்தைய மத்திய கிழக்கு மதங்கள் அனைத்துமே வன்முறை,இனவெறி என்பதை மதக்கோட்பாடுகள் மூலம் நியாயப் படுத்தின.யூதர்கள் மோசஸினால் எகிப்தில் இருந்து வழிநடத்த பட்டு அவர்களுக்கு அவர்கள் கடவுள் யாவே[yaveh] அளிப்பதாக கூறிய கானான் தேசத்திற்கு வருகிறார்கள்.அப்போது மோசஸிற்கு அளிக்கப்பட்ட பஞ்ச ஆகமங்கள்[ஆதியாகமம்,யாத்திராகமம்,லேவியராகாம்,எண்ணாகமம்,உபாகமம்] தோரா[torah] என்ரழக்கப்படுகின்றன. அதை பார்க்கும் போது அக்கடவுள் யூதர்களை மட்டுமே நேசிப்பது போலவும் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாக கூறப்படுகின்றது.

புதிய ஏற்பாட்டில் எப்போதுமே ஆச்சரியம் ஏற்படுத்தும் ஒரு விஷயம் இந்த இயேசுவின் போத்னைகள் மட்டும் வித்தியாசமாக அன்பை மையமாக வைத்து இருப்பது பற்றியே.யூத மதமும்,பழைய ஏற்பாட்டு போத்னைகள் அனைத்துமே யூதர்களுக்கு கடவுள் செய்யும் உதவிகளும் சோதனைகள் மட்டுமே. .தன்னை வணங்கும் போது உதவுவது,வணங்காத போது வதைப்பது.

.யூதர்கள் இரோம ஆட்சியின் கீழ் இருந்த போது இயேசு வாழ்ந்தாகவே புதிய ஏற்பாடு கூறுகின்றது[பொ.மு4 _பொ.ஆ 27].யூதர்கள் தங்களை மீட்ட்க ஒரு இரட்சகனை மோசஸ் போல் எஸ்ரா போல் எதிர் பார்த்திருந்தனர்.இவர் அன்பை போதித்ததும்,ஆன்மீக விடுதலையை பற்றி பேசியதுமே யூதர்கள் இவரை நிராகரிக்க காரணமாயிற்று.எந்த ஒரு விஷயமும் புதிதாக உடனே தோன்ற முடியாது.ஏற்கெனவே இருக்கும் விஷயங்களே கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைகளுக்கேற்ப மாறுகின்றன.
ஆகவே இயேசு தனது  கொள்கைகளை யாரிடமிருந்தாவது கற்று இருக்க வாய்ப்பு உண்டு.


அவர் ஒரு மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவரா இல்லை அங்கேயே வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாரா  என்பதில் பலருக்கு ஐயம் உண்டு.இயேசுவின் கொள்கைகளான பகைவனை நேசித்தல்,விட்டு கொடுத்தல்  போன்ற்வை புத்த மதத்தில்(பொ.மு.600) முக்கிய கொள்கையாகும்.
நிகோலை நோட்டொவிட்ச் என்னும் இரஷ்ய அறிஞர் இந்தியாவில் இது குறித்து ஆய்வு செய்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இயேசு இந்தியாவிற்கு குழந்தையாக இருந்த போது வந்து புத்த மடாலயத்தில் வளர்ந்து ,அக்கொள்கைகளை கற்றுக் கொண்டு பாலஸ்தீனத்திற்கு சென்றதாக கூறுகின்ரார்.இதற்கு ஆதரங்களும் காட்டுகிறார்.அஹமதியா பிரிவு ஸ்தாபகரான மிர்சா குலாம் அஹமது கூட இயேசு இந்தியாவிற்கு வருகை தந்தார் என பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பாருங்கள் கிரேக்க புராணக் கதைகள் ,இந்து மத புராண‌க் கதை போலவே இருக்கும்,புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது.பொ.மு 300 அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு நடந்த போது புத்தரின் போதனைகள் மத்திய கிழக்கிற்கு சென்று அவை இயேசு என்ற மனிதராக உருவக படுத்தப் பட்டதா என்னும் சந்தேகம் எனக்கு உண்டு.புத்தர்,இயேசு, கிருஷ்னர் மூவரும் ஒருவரே என்ற கருத்தியலும் இதற்கு வலு சேர்க்கிறது.இப்பதிவில் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கூட நான் சொலவது இயேசு வளரும் போது [30 வயதுக்கு முன்] எங்கே இருந்தார்,எப்படி வளர்ந்தார் என்பது பற்றி புதிய ஏற்பாடு எதுவும் சொல்லவில்லை என்பதை மட்டுமாவது மனிதில் வைக்க வேண்டுகிறேன்.

காணொளியிலும் இது விளக்க்ப் படுகின்றது.
அந்த புத்தகம் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 









No comments:

Post a Comment