Tuesday, February 15, 2011

இஸ்ரேல் பாலஸ்தீனம் நடந்தது என்ன?(1900_1948)


கடந்த 60 வருடங்களாக உலகைல் தீர்க்கப் படாத பிரச்சினைகளுல் ஒன்றுதன் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை.நடுநிலைமையோடு நடந்ததை சொல்லும் ஒரு முயற்சி.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பது என்ன?

சவுதி அரேபியா,எகிப்து,ஜோர்டான்,சிரிய இடையே உள்ள பகுதிக்கு யார் உரிமை உடையவர்கள் என்பதுதான் பிரச்சினை.யூதர்கள்,பாலஸ்தீன முஸ்லிம்கள் இருவருமே உரிமை கொண்டாடிவருகிறார்கள்.இப்போது யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி இஸ்ரேல் என்ற் நாடாக அறியப்படுகிறது.பாலஸ்தீன முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகள்(,மேற்கு கரை மற்றும் காசா பிரதேசம்) பாலஸ்தீனம் என்று அழைக்கப் படுகிறது.


அவற்றை பற்றி (இப்போதைய) சில விவரங்கள்
          
இப்பொதைய இஸ்ரேல் மற்றும் பால்ஸ்தீனத்தின் வரைபடம்
.


இஸ்ரேல்

1948ல் தனி நாடாக அங்கீகரிக்கப் பட்டது.

1.பரப்பள்வு:22,072 ச.கி.மீ (தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ)

2.மக்கள் தொகை:73 இலட்சம்(ஐ நா 2010)

3.மொழி:ஹீப்ரூ,அரபி

4.மக்கள்
யூதர் :80% 
,,பாலஸ்தீன முஸ்லிம் 17% 
,,கிறித்தவர்3% 

5.சராசரி ஆண்டு வருமானம்:24000$(ஒருவருக்கு)
_____

பாளஸ்தீனம்(மேற்கு கரை,காசா பகுதி)

இப்போது இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது.

1.பரப்பள்வு: 5,970  ச.கி.மீ (சேலம் மாவட்டம் பரப்பளவு 5205 ச.கி.மீ)

2.மக்கள் தொகை:44 இலட்சம்(ஐ நா 2010)

3.மொழி:அரபி,ஹீப்ரூ

4.மக்கள்:
யூதர் :5% 
,பாலஸ்தீன முஸ்லிம் 90% 
,கிறித்தவர் 5% 

5.சராசரி ஆண்டு வருமானம்:2130 $(ஒருவருக்கு)

இந்த விவரங்கள் இப்பொதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கின்றதை காட்டவே இப்பதிவில் கூறுகிறேன்.

இந்த விவரங்களை பார்த்தவுடன் இரண்டு பகுதிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் எளிதாக புரியும்.

இப்பிரச்ச்னையின் உண்மைகளை வரலாற்று ஆதாரங்களுடன் ஆய்வு செய்வோம்.


1.கி.பி 1914 க்கு முன்பு வரை பாலஸ்தின்னம்,சிரியா,ஜோர்டன்,இராஃ பற்றும் எகிப்து,சவுதி அரேபியாவின் பல பகுதிகள் ஆட்டோமான் பேரரசின் பகுதிகளாக இருந்தன.

.

2. யூதர்கள் மக்கள் தொகை இப்பகுதியில் கி.பி 1900ல் வெறும் 78,000 மட்டுமே.அவர்கள் இங்கே பலஸ்தின்னர்களுடன் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர்.தம் மத கலாச்சார அடையாளங்களை பேணி உரிமையுடனே வாழ்ந்து வந்தனர்.

3.முதல் உலகப்போர் கி.பி.1914_1919 நடந்த போது ஆட்டோமான் பேரரசு,ஜெர்மனை ஒரு அணியிலும் இங்கிலாந்து ,ப்ரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர் அணியிலும் போரிட்டன. அதில் ஆட்டோமான் பேரரசு தோற்கடிக்கப் பட்டது.இங்கிலாந்தும்,ப்ரான்சும் ஆட்டோமான் பகுதிகளை கூறுபோட்டு பங்கு பிரித்தன்ர். அப்போது இப்பகுதி இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் வந்தது.


4.இரஷ்யா,ஜெர்மனை ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இன பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட யூதர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கு வர ஆரம்பித்தன்ர்.யூதர்கள் பெருமளவு நிதி திரட்டி பாலஸ்தீனர்களிடம் இருந்து நிலங்களை வாங்க ஆரம்பித்தன்ர். ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் யூத அரசு(இஸ்ரேல்) அமைக்க வேண்டும் என்று அரசியல் ஆதரவு திரட்ட ஆரம்பித்தன்ர்.

5.இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபோர் என்பவர் இங்கிலாந்து யூத தலைவர் ரோத்சைல்ட்கு 2 நவம்பர் 1917ல் எழுதிய கடிதத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் தனி நாடு ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறார்.


6.யூத தலைவர் வெய்ஸ்மான் என்பவருக்கும் அமீர் ஃபைசல்(அப்போதைய அரேபியாவின் ஒரு பகுதியின் இளவரசர்) இன்னொரு உடன்படிக்கை ஏற்படுகிறது.இதிலும் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு நாடு ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கப் படுகிறது. பாலஸ்தீனர்கள் யாருமே இந்த உடன்படிக்கைகளில் பங்கேற்கவில்லை.

7.யூதர்கள் அதிக்மாக குடியேறுவதும் தனிநாட்டுக்கான வரைபடங்கள்,திட்டங்கள் முதலியவற்றால் விழிப்படைந்த‌ பாலஸ்தீனர்கள் பிப்ரவரி 1920முதல் எதிர்க்க ஆரம்பிக்கின்ற‌னர். இன கல்வரங்கள் நடப்பதும்,இரு புறங்களிலும் வன்முறைகள்,உயிரிழப்பு முழு அளவில் நடக்க ஆரம்பிக்கிறது.

8.முகமது அல் ஹுசைனி (ஜெருசலேம் மசூதி மத குரு)பாலஸ்தீனர்களின் தலைவராக உருவெடுக்கிறார்.
இவர் பாலஸ்தீனம் சிரியாவின் ஒரு பகுதியாகவும்,டமாஸ்கஸ் அதன் தலைநகராகவும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல் பட்டார்.
                                            
                                                 முகமது அல் ஹுசைனி.

9.அரபு தலைவர்களின் குழு கி.பி 1922ல் ஃபெல்ஃபோர் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று இங்கிலாந்து அரசிடம் திட்டவட்டமாக கூறுகிறது.
இதற்கு சர்சில் வெள்ளை அறிக்கை இதற்கு பதிலாக 1922ல் தர்படுகிறது.அது குழப்பான வார்த்தைகளில் பாலுக்கும் காவம்,பூனைக்கும் தோழன் என்ற வகையில் இருக்கிறது.

10.பிரிட்டிஷ் தீர்ப்பு என்று பாலஸ்தீனத்தை பிரித்து அப்போதைய ஐ.நா சபையிடம் 24,ஜூலை 1922ல் ஒப்புதல் பெறுகிறது.இதன் படி மொத்த பகுதியும் பிரிட்டிஷ் பாலஸ்தீனம் மற்றும் ட்ரான்ஸ் ஜோர்டான் எனா  இரு பிரிவாக பிரிக்கப் படுகிறது.

11.ஜோர்டான் சவுதி ஹாசிமைட் வம்சத்தை சேர்ந்த அரசர் வசம் ஒப்படைக்கப் படுகிறது.இந்த பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தில் யூத நாடு அமைக்கவும் அதில் பிற இனத்தவர்களுக்கு சம் உரிமை வழங்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.

12.கி.பி 1930ல் பாஸ்ஃபீல்ட் வெள்ளை அறிக்கை யூத குடியேற்றத்தை தை செய்ய சட்டம் கொண்டு வந்தது.ஆனால் யூதர்கள் சட்ட விரோதமாக குடியேறுவது தொடர்ந்தது.யூத பிரிட்டிஷ் மோதல்களும் நடந்தது.ஹகன்னா,இர்குன் போன்ற யூத ஆயுதக் குழுக்கள் வளர்ச்சி அடைய ஆஅரம்பித்தன.

13.இதன் பிறகு 1922_36 வரை இன மோதல்களே நடை பெற்று வந்தன.எந்த முன்னேற்றமும் இல்லை.கி.பி 1937ல் சமதான‌ முயற்சி தோல்வி அடந்தது.1937_39 பல்வேறு முயற்சிகள்,ஒன்றினந்த பாலஸ்தீனம் முதல் இரு நாடு கொள்கை வரை இரு குழுக்களுமே ஒத்துழைக்கவில்லை.

14.கி.பி 1939ல் இரண்டாம் உலக்ப்போர் ஆரம்பித்தது.பாலஸ்தீன மற்றும் பல அரபுத் தலைவர்கள் பிரிட்டனுக்கு எதிரான நிலையை எடுத்தனர்.பாலஸ்தீன தலைவர் அமின் அல் ஹுசைனி ஹிடலருக்கு முழு ஆதரவு அளித்தார்.இதன் காரணமாக பிற அரபு நடுகளில் இருந்த யூதர்கள் பலரும் பிரிட்டிஷ் பாலஸ்தீனத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

15.கி.பி 1945ல் போர் முடிவுக்கு வருகிறது.இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்..ஜூலை 22 ,1946ல் கிங் டேவிட் ஹோடெல் இஸ்ரேலிய இர்குன் அமைப்பால் குண்டு வைத்து தகர்க்க படுகிற‌து.இது பிரிட்டிஷ் ஆட்சியின் அலுவல்கமாக இருந்தது.

16.பிப்ரவரி 22,1947 பிரிட்டன் ஐ நா அமைப்பிடம் இப்பிரசினையை தீர்க்க கோருகிறது.நவம்பர் 29,1947 ஐ நா சபை வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவு கிடைத்தது.
இஸ்ரேலில் வசித்த மக்கள் தொகை 498,000 யூதர்கள்+ 407,000 பாலஸ்தீனர்கள்

பாலஸ்தீனத்தில் வசித்த மக்கள் தொகை 10,000 யூதர்கள்+ 725,000 பாலஸ்தீனர்கள்.
ஐ நா பிரிவுக்கு பின் மே 14 முதம் 13 மாதங்கள் இஸ்ரேல் அரபு போர்கள் நடந்தது. அத்னை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

17.மே 15,  1948ல் இஸ்ரெல் சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது



.                           இஸ்ரேல் வரைபடம் ஐ நா வின் திட்டப்படி (1947)[72]





No comments:

Post a Comment