Thursday, June 2, 2011

கிரேக்க புராணக் கதைகள் அ) 12 ஒலிம்பியர்கள்



கிரேக்க புராணத்தில் ஒலிம்பஸ் மலையில் வாழும் இந்த் 12 ஒலிம்பியர்கள் முக்கியமான கடவுள்கள் ஆவர்.இப்பதிவில் இவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்..

1.ஜீயஸ் | 2.ஹீரா | 3.போசீடான் | 4.ஹெஸ்டியா |5. டெமட்டர் | 6.அப்ரடைட்டி
7.அத்தீனா | 8.அப்போலோ | 9.ஆர்ட்டெமிஸ் | 10.ஏரிஸ் | 11.ஹெப்பஸ்தஸ் | 12.ஹெர்மீஸ்


1.ஜீயஸ் (zeus), :டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் கடைசி மகன்.
  
இணையான உரோமக் கடவுள் ஜூப்பிடர். கிரேக்கத் தொல்கதைகளின் படி கடவுள்களின் அரசன் ஆவார். இவர் ஒலிம்ப்பஸ் மலையை ஆள்பவர். வானம் மற்றும் இடி ஆகியவற்றின் கடவுள். இவருடைய சின்னங்கள் இடி, கழுகு, காளை, மற்றும் ஓக் மரம் ஆகியனவாகும்.  இவருக்கு பல மனைவிகள்,காதலிகள் உண்டு..

2. ஹீரா(Hera): :ஜீயஸின் மனைவி(சகோதரி). டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள்

பெண் கடவுள். .இணையான ரோமக் கடவுள் ஜூனோ. .அப்போலோ, ஆர்ட்டெமிஸ், அத்தீனா ஆகியோர் இவரது மக்கள். . இவள் திருமணத்தின் கடவுள். இவரே கிரேக்கக் கடவுளரின் அரசி. இவருக்கு போர்க்கடவுளான ஏரிஸ் இவரது மகன் ஆவார். வீறுடையவளாகவும், மன அமைதியுடையவளுமாகவும், சித்தரிக்கப்படும் ஹீரா, வட்ட வடிவிலான மணிமுடியை தலையில் அணிந்திருப்பாள். தனது கையில், பண்டைய கிரேக்கத்தில், உதிரத்தின் அடையாளமாகவும், இறப்பின் அடையாளமாகவும் கருதப்பட்ட மாதுளம் பழத்தை கொண்டிருப்பாள்.ஹீரா தனது பொறாமை குணத்திற்கும், பழியுணர்வுக்கும் பெயர் பெற்ற கிரேக்க கடவுள்.ஜீயஸின் பிற மனைவி,காதலிகள்,அவர்கள் குழந்தைகள் மீது வஞ்சம் தீர்ப்பதே இவரது முக்கிய வேலை. 

3.போசீடான்(Poseidon): இவர் ஜீயஸின் உடன் பிறந்தவர். டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகன்

 இணையான ரோமக் கடவுள் நெப்டியூன். இவர் கடல், நிலநடுக்கம், மற்றும் குதிரை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார். இவருக்கு இணையான ரோமக் கடவுள் நெப்டியூன் ஆவார்.. இவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர்.

4.ஹெஸ்டியா: :டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள். பெண் கடவுள் . .இணையான ரோமக்கடவுள்  வெஸ்தா.இவர் ஹார்த் என்று அழைக்கப்படும் செங்கல் அல்லது கல்லால் ஆன அடுப்பிற்கு கடவுள் ஆவார். ஒவ்வோர் வீட்டிலும் உள்ள ஹார்த் இவரது உறைவிடமாகும். மேலும் நகர்மண்டபத்திலும் ஓர் அடுப்பு இருக்கும். அதுவும் இவரது உறைவிடம் ஆகும். பொதுவாக பண்டைய கிரேக்கர்கள் புதிய குடியேற்றங்களை அமைக்கும் போது இங்கிருந்து நெருப்பை எடுத்துச் சென்று புது இடத்தில் வைப்பர்.

4.a)டையோசினியஸ்: ஜீயஸ் ,ஷெமலி(மனித பெண்) ஆகியோரின் மகன்.

 இணையான இரோமக் கடவுள் பாசுஸ்.மது,களிப்பு,கொண்டாட்டங்களின் கடவுள்.கலைகளின் பாதுகாவலர்.ஹிஸ்டியாவின் இடத்தை ஒலிம்பஸ் மலையில் இவருக்கு அளித்ததாக கூறப்படுகின்றது..

5.டெமெட்டர் . இவர் டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள். ஜீயஸின் உடன் பிறந்தவர்

பெண் கடவுள் .இவர் தானியம் மற்றும் அறுவடை இவற்றுக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் சீரஸ் ஆவார். பூவியின் பசுமை பாதுகாப்பவளாகவும், திருமண பந்தத்தை காப்பவளாகவும், புதிய காலநிலைகளை அளிப்பவளாகவும் நோக்கப்பட்டாள். கிரேக்க பழங்கதைகளின் படி டெமெட்டர் அளித்த பெருங்கொடை தானியங்களேயாகும். அவற்றின் முலமே மனிதன் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு வேளாண்மையில் ஈடுபட்டான்.

6.அப்ரடைட்டி(Aphrodite ) ஜீயஸ் மற்றும் லீட்டோ ஆகியோரது மகள்

பெண் கடவுள் .இணையான ரோமக்கடவுள் வீனஸ். இவருக்கு பல காதலர்கள்.இவர் மகன் ஈரோஸ் உடனேயே சித்தரிக்கப் படுகிறார்.வேறு யாராவது ஞாபகம் வந்தால் யொசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள்..இவர் காதல், அழகு, lust இவற்றுக்கான கடவுள் ஆவார். . புறா, குருவி, அன்னம் ஆகியன இவருக்கு புனிதமானவை ஆகும்.

7.அத்தீனா : ஜீயஸ் மற்றும் மெட்டிஸ்(கடலரசி) ஆகியோரது மகள்

பெண் கடவுள் .இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவர் அறிவு, தந்திரம், போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இவருக்கு இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது.

8.அப்போலோ(Appolo) :: ஜீயஸ் மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்

.ரோம பெயரும் அபோல்லோவே.ரோமர்களின் முதன்மை தெய்வம் ஆகிவிட்டார்..ஆர்ட்டெமிஸ் இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் வேளாண்மை, கால்நடைகள், ஒளி, உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

9.ஆர்ட்டெமிஸ்(Artemis); ஜீயஸ்  மற்றும் லீட்டோ ஆகியோரது மகள்

இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.. கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார்.  இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு, அறுவடை, இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். 

10.ஏரிஸ்(Ares) : ஜீயஸ் மற்றும் ஹீரா ஆகியோரின் மகன்.. 


இணையான ரோமக்கடவுள் மார்ஸ் .இவர் போருக்கான கடவுள்..  ஆவார். போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும், ஹோமர் எழுதிய இலியட் காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும், ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.

11.ஹெப்பஸ்தஸ் (Hephaestus): :ஹீரா(Hera)ன் மகன்,(தந்தை?)

 இவர் நுட்பம், நெருப்பு, மாழைகள், மாழையியல் ஆகியவற்றுக்கும் கருமான், கைவினைஞர், சிற்பிகள் ஆகியோருக்கும் கடவுள் ஆவார். இவரே எரிமலைகளின் கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்.. ஏரிஸ் இவரது உடன்பிறந்தவர்.

12.ஹெர்மிஸ்(Hermes) : ஜீயஸ் மற்றும் மையா ஆகியோரின் மகன்.. 

இணையான ரோமக்கடவுள் மெர்க்குரி . இவர் பயணிகள், ஓடுகள வீரர்கள், புத்தாக்கம், எல்லை, இடையர்கள், கவிஞர்கள், வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார்.ஆமை, சேவல், இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள்




No comments:

Post a Comment