Friday, April 29, 2011

குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்கிறதா?

குரான் 4.34 வசனம்


(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

__________
இதனை நண்பர் இக்பால் செல்வன் மனைவியை அடி - ஆண்களுக்கு இஸ்லாம் தரும் உரிமை என்ற பதிவு இட்டு இருந்தார் அதில் ஒரு இஸ்லாமிய நண்பர் அளித்த விளக்கத்தை கீழே தருகிறேன்.


Saha, Chennai said...

ஐயா வணக்கம்.

நல்லா படிச்சிட்டு யோசிங்க ஐயா. நல்லொழுக்கமுடைய பெண்ணை அடிக்க சொல்லலை, கணவனுக்கு துரோகம் செய்யும், தாம்பத்யத்துக்கு துரோகம் செய்யும் பெண்ணை அவள் திருந்தாத பட்சத்தில்தான் அடிக்க சொல்லியிருக்கு. இஸ்லாத்தில் நம் அனைத்து செயல்களுக்கும், அனைத்து சந்தேகங்களுக்கும், அனைத்து தேவைகளுக்கும் பதில் இருக்கின்ற நிலையில், தனக்கு துரோகம் செய்யும் மனைவியை எப்படி Handle செய்வது என்றுதான் சொல்லிக்காட்டப்பட்டிருக்கு. இந்த சூழ்நிலை பற்றி முறையான விளக்கங்கள் கிடைக்காத நிலையில்தான் கொலை செய்ய எத்தனிக்கும் மனிதர்களை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வேற எதுவும் (கொலை) செஞ்சுடாதீங்கனு சொன்னா தப்பா?


அய்யா, குருடன் யானையை தடவிப்பார்த்து அதை வர்ணிப்பதைபோல உள்ளது உங்களின் இஸ்லாத்தின் மீதான பார்வை.

நல்ல தலைப்பு வைச்சீங்க போங்க, தலைப்பை வேணா இப்படி மாத்துங்களே. " துரோகம் செய்யும் மனைவியை அடித்தாவது திருத்துங்கள், ஆனால் கொலை செய்து விடாதீர்கள்.- இஸ்லாம் " (இத தான் சொல்லிருக்கு.) (அதுக்கும் நெறைய ஹிட் கெடைக்கும்.)
_______________
நண்பர் சாஹாவின் கூற்றுப்படி கணவனுக்கு துரோகம் செய்யும் கள்ளத்தொடர்பு உள்ள மனைவியை மட்டுமே அடிக்க சொல்வதாக கூறுகிறார்.இது சரியா என்று பார்ப்பது நமது கடமை.இந்த முறையில் அவருடைய கூற்றை ஆய்வோம்


இங்கு ஒரு மத குரு என்ன்மோ சொல்ராக,அதனை கேட்டாலே யாரை அடிப்பது என்று புரிந்து விடும்..
PART(A)

நம் எப்போதும் ஒரு குரான் வசனத்திற்கு பொருள் கொள்ளும் போது தமிழ் மொழி பெயர்ப்பு இரண்டும்(டான்சில்.இன்ஃபோ,பி.ஜே) ஆங்கில மொழி பெயர்ப்பு இரண்டு(ஃபித்கல்,யூசுஃப்ஃ அலி) அவசியம் பார்த்து விடுதல் வழக்கம்.
1.
_____________
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
______________
2.பி.ஜேவின் மொ.பெ
34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.[திரு பி.ஜேவின் விளக்கம் 66]

3.ஃபித்கல்
4.34
Pickthall: Men are in charge of women, because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property (for the support of women). So good women are the obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear
rebellion, admonish them and banish them to beds apart, and scourge them. Then if they obey you, seek not a way against them. Lo! Allah is ever High, Exalted, Great.

4.,யூசுஃப்ஃ அலி
4.34
Yusuf Ali: Men are the protectors and maintainers of women, because Allah has given the one more (strength) than the other, and because they support them from their means. Therefore the righteous women are devoutly obedient, and guard in (the husband's) absence what Allah would have them guard. As to those women on whose part ye fear
disloyalty and ill-conduct, admonish them (first), (Next), refuse to share their beds, (And last) beat them (lightly); but if they return to obedience, seek not against them Means (of annoyance): For Allah is Most High, great (above you all).


இப்போது முதல் பகுதி முடிந்தது பி.ஜேவின் மொழி பெயர்ப்பு விளக்கத்தை பார்த்தாலே இது கருத்து வேறுபாட்டை பற்றி கூறுவதையும்,அத்னை தீர்ப்பது பற்றி கூறுவஹை காண்லாம்.

ஃபித்கல் கணவ‌னுக்கு மனைவின் எதிர்ப்பு( rebellion,) என்கிறார், யூசுஃப்ஃப் அலி விசுவாயமின்மை,மோசமான நடத்தை(disloyalty and ill-conduct,
) என்கிறார்.

இரு வசனங்களும் அடிக்க தகுந்த மனைவியின் செயலில் வேறு படுகின்றன.

முதல் பகுதியில் முடிவு

இப்படி மொழி பெயர்ப்புகள் எதிரான பொருள் தந்தால் பல பொருள் கொள்ள இயலும். இதில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்க இரண்டாம் பகுதிக்கு செல்வோம்.அதற்கு முன் கட்டார் தொலைக்காட்சியில் அரபியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் நிகழ்ந்த காணொளி பாருங்கள்.இங்கு மனைவின் பணிய மறுபு (Disobedience) என்பதே அடிக்கும் காரணமாக கூறப்படுகிறது.


*                           *                         *

PART(B)


இந்த பகுதியில் மூல‌ அரபிவார்த்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.இதில் முக்கியமாக இரு அரபி வார்த்தைகளே இவசனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.,
முதல் வார்தை மட்டும் இப்பகுதியில் பார்ப்போம்.
I)
(4:34:24)nushūzahunna=their ill-conduct,"Rise up((58:11:16),desertion(4:128:6) .துர் நடத்தை,எதிர்த்தல்,விட்டு பிரிதல்

குரான் 4.128 லும் இதே வார்த்தை ஒரு ஆண் பெண்னை விட்டு பிரிந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறது.

1.டான்சில்.இன்ஃபோ
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

2.பி.ஜேவின் மொ.பெ
128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத் தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

3.ஃபித்கல்

Pickthall: If a woman feareth ill treatment from her husband, or desertion, it is no sin for them twain if they make terms of peace between themselves. Peace is better. But greed hath been made present in the minds (of men). If ye do good and keep from evil, lo! Allah is ever Informed of what ye do.

4.,யூசுஃப்ஃ அலி
Yusuf Ali: If a wife fears cruelty or desertion on her husband's part, there is no blame on them if they arrange an amicable settlement between themselves; and such settlement is best; even though men's souls are swayed by greed. But if ye do good and practise self-restraint, Allah is well-acquainted with all that ye do.

(4:128:6) nushūzan=ill-conduct,ill treatment,cruelty or desertion,பிணக்கு, புறக்கணிப்பு

ஆணுக்கு என்று வரும்போது பிரிதல் ,புறக்கணிப்பே மொழியாகக்ங்களில் பயன் படுத்தப் படுவதால் குரான் 4.34லும் இதே அர்த்தம் பயன் படுத்தப் படவேண்டுமென்று விளங்கும்.
மனைவிய அடிபதற்காக காரணம்
அ) மனைவி கணவனை வெறுத்து ஒதுக்கினால்
ஆ)கொடுமை படுத்தினால்
இ) மோசமான நடத்தை(என்ன என்று சரியாக கூற முடியாது)

குரான் த்வறான பாலுறவுகளுக்கு பல தண்டனைகளை வழங்குகிறது

விபசாரத்திற்கான தண்டனை

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

__________

ஒரு பெண்ணின் மீது அபாண்டமாக குற்றம் சொல்பவருக்கு என்ன தண்டனை?குரான் 24.4

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

_____________

கணவன் சந்தேகப் படுகிறான் ஆனால் சாட்சி இல்லை என்ன செய்வது?


24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:

24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
____________குரான் என்பது ஆறாம் நூற்றாண்டு மனிதர்களின் வாழ்வுக்கு எளிதாக புரியும் வகையில் சில தீர்வுகளை கூறுகின்றது.அத்னை மதவாதிகள்

எக்காலத்திற்கும் பொருந்துவது என்று ஏமாற்றுவதுதான் பிரச்சினை.இது அக்காலத்திற்கு மட்டும்,இப்போது இல்லை.


அதுவும் சிறு தவறுக்கு கடைசி வாய்ப்பாக சொல்லி இருக்கிறது,இப்போதைய நாகரிக உலகில் இதனை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினால் பரவாயில்லை.


இரண்டாம் பகுதி முடிந்தது.அதாவது பெண்ணை அடிக்க சொல்வது அவள் பணிவின்மை அல்லது கணவனை வெறுத்து ஒதுக்குவதற்காக மட்டுமே,ஒருவேளை அவள் துரோகம் செய்தால் குரான் அளிக்கும் தண்டனை வேறு ஆகும்
இன்னும் ஒரு எடுத்துக் காட்டாக ஒரு ஹதிது பாருங்கள்.
5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மைஅடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். 
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி 
(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். 
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்' என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' அல்லள்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். 'இவர்கள் உங்கள் புதல்வர்களா?' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்' என்றார்கள்.45 
Volume :6 Book :77.
*                *                *

PART(C)

அவ்வள‌வுதான் முடிந்தா என்கிறீர்களா,யாரை அடிக்க சொல்கிறது என்பதைதான் பார்த்தோம்.இப்போது உண்மையிலேயே அடிக்கத்தான் சொல்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம்.

நான் சொல்ல நினைத்தது எல்லாவற்றையுமிக்காணொளியில் ஒரு நண்பர் மிக அருமையாக கூறியுள்ளார். நான் சொல்வதற்கு ஏதுமில்லை.
இப்போது சொல்லுங்கள் குரான் மனைவியை அடிக்க சொல்லி இருக்கிறதா?

Thursday, April 28, 2011

இந்துமதம் ,இந்துக்கள்,இந்துத்வவாதிகள்


இப்பதிவில் நண்பர் ஒருவர் பதிவில் இந்து மதத்தினர் மத புத்தகம் படிக்காததால் சாமியார்களிடம் ஏமாறுகின்ற்னர் என்று எழுதியுள்ளார்.அதற்கு சில விளக்கங்கள் கேள்வி பதிலாக அளிப்பது சிறந்த்து என எண்ணுகிறேன்.

1.இந்துக்கள் என்பவர் யார்?

இக்கேள்விக்கு பிற மதங்கள் போல் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள‌ கடவுளை,கூறப்பட்ட விதமாக வழிபட்ட்டால் அம்மதத்தை சேர்ந்தவன் என்று கூற முடியாது.

நமது நாட்டு சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் இஸ்லாமியர்,கிறித்தவர் அல்லாத பல தெய்வ வழிபாட்டு முறை கொண்டவர்கள் என வரையறுக்கப் படுகிறது.பல இனக் குழுக்கள்(சாதிகள்) ,தங்கள் குல தெய்வம்,இடம் சார்ந்த தெய்வங்கள் என்று வணங்கி வந்த்னர்.பல தெய்வங்கள் குறிப்பிட்ட நிலப்பகுதியில் மட்டுமே வழிபடப் பட்டனர். இவர்களை இஸ்லாமியர்,கிறித்தவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இந்த பொதுப் பெயர் புழக்கத்திற்கு வந்தது.

2.இந்து மத வேதங்கள் யாவை?

வேதங்கள் என்று பல குறிப்பிடப்பட்டாலும்,அவை அனைத்துப் பிரிவு மக்களாலும் தெரிந்து கொள்ளப் படுவதோ,ஏற்றுக் கொள்ளப் படுவதோ இல்லை.

பல ஞானிகள்(!) பல கருத்துகலை கொண்ட பல புத்த்கங்களை வழங்கி சென்றாலும் அது சில பிரிவினரால் மட்டுமே படிக்கப் படுகின்றது.சார்வாகம் என்னும் பொருள்முதல் வாத கொள்கை கூட இங்குதான் தோன்றியது.


3.இந்து மத வேதங்களில் மனித விரோத கருத்துகள் உண்டா?

சில புத்தக்ங்களில் சாதி உயர்வு,தாழ்வு,பல தாரமணம்,உடன் கட்டை ஏறுதல்,நரபலி கொடுத்தல் போன்ற கருத்துகள் இருக்கின்ற்ன.அதே சமயம் பலவித தத்துவம்,விவாதம்,யோகம்,மருத்துவம் போன்ற்வையும் மிகுதியாக உள்ளது.இதன் தத்துவங்கள் பன்முகத்தன்மை உடையவை.. 

4.இந்து மதத்தின் கடவுள் கொள்கை என்ன?

இதுவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.சில புத்தகங்கள் உருவமற்ற ஒரே கடவுள் என்பதும்,பல புத்தகங்கள் பல தெய்வ உருவ வழிபாட்டை கூறுவதும் ஆகிய‌ பல் முரண்கள் உடையது.உங்களுக்கு பிடித்த விதத்தில் இறைவனை வழிபடும் சுதந்திரம் அளிக்கும் மதம்.

5.இந்து மதத்தில் மதவாதிகளின் பங்கு என்ன?

பிற மதங்களில் மதவாதிகளின் பங்கு எனவோ,அதுதான்.இந்து மதத்தையும் பிற மதங்கள் போல் நிறுவனப் படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கிறார்கள்.இவர்கள் இந்துத்வவாதிகள் என்றழைக்கப் படுகின்றனர்.

6.இந்து மதத்தில் பல கடவுள்கள்,கொள்கைகள் இருப்பதால் இவர்களை ஒன்று திரட்ட முடியுமா?

இதற்கு இந்து மத வாதிகள்,ஆபிரஹாமிய மத வாதிகளிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்தே செயல் பட ஆரம்பித்தார்கள்.
இஸ்லாமுக்கு முந்திய அரேபியாவை நினைவு கூறுங்கள் பல்வேறு அரபு இன குழுக்கள்,அவர்களின் பல் தெய்வ உருவ வழிபாடு,யூத கிறித்தவ மத பெருமிதமும்,உயர்ந்த நிலையும் புதிய மதம் தோன்றக் காரணம் ஆகிற்று.அது அரேபியாவில் கிழக்கில் கிறித்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் இடமில்லாமல் செய்தது.

இங்கும் இப்போது சூழ்நிலை அபடித்தான் பல தெய்வ வழிபாடு கொண்ட பல் இந்திய இன குழுக்கள்,கிறித்தவ,இஸ்லாமிய மத பெருமிதம்.ஒரே மாதிரி சூழ்நிலை நிலவுவதாக எனக்கு தோன்றுகிறது.


7.ஆபிரஹாமிய மதவாதிகளின் செயல்முறை என்ன?

a).பழைய புத்தகங்களின் கருத்துகளை தொகுத்து ஒரு மத புத்த‌கம் உருவாக்குவது.தொகுத்த வரலாறை மறைப்பது,விமர்சன‌ங்களுக்கு கடும் தண்டனை அளிப்பது.

b).மத ரீதியான ஆட்சிமுறைகள்,சட்டங்கள் உருவாக்குவது

c). நாடு ஆக்கிரமிப்பு போர்கள் மதப் போர்வையில் செய்யப்படும்.

d).பிற மதத்தினரை இரண்டாம் கட்ட குடிமக்களாக்கி மதம் மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்குதல்  

8. இந்துத்வ வாதிகளின் செயல்முறை என்ன?

a) இந்து மதத்தின் பன்முகத்தன்மையை மறைப்பது.இந்த வேதங்க்ள் மட்டுமே சரி என்று அங்கீகரிப்பது.இவ்வகையான வாழ்வுமுறைகளே சரி என்பது.

b) இந்துத்வவாதிகளும் சிறிது ,சிறிதாக ஒரு தெய்வம், பல பெயர்கள் என்ற கொள்கையை கொண்டு வர முயற்சிப்பார்கள்.எடுத்துக்காட்டாக இராமன் என்னும் ஒரு கடவுளுக்காக கோயில் என்பது ஒரு இந்துத்வ அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்தியது.  

c) நாட்டில் நிலவும் பல பிரசினைகளுக்கும் பிற மதத்தவரே காரணம் என்று பரப்புரை.கிறித்தவ ,இஸ்லாமிய‌ மதங்களில் யூதர்களே எதிரிகள் என்ற பரப்புரை மதம் பரப்ப உதவியாக இருந்ததை இவர்களும் செய்கிறார்கள்.

d) சில மதத்தினரின் பரப்புரையில் என்மதம் மட்டுமே ச்ரி என்ற மதப் பரப்புரைகளை இந்து மதத்தை அழிக்கும் முயற்சி என்பர். 

9.இவர்கள் முயற்சி வெற்றி பெறுமா?

இப்போது எதுவும் சொல்ல முடியாது.வாய்ப்பு இருக்கிறது.இவர்களுக்கு பெரும் உதவி செய்வது ஆபிரஹாமிய மதவாதிகளே!!..மாற்றங்களை ஏற்க மறுப்பதும்,ஆபிரஹாமிய மத ரீதியான சட்டங்கள் சிற‌ந்தவை என்று பரப்புரை செய்வதும் இந்துத்வவாதிகளுக்கு சாதகமாக் எளிதில் திசை திருப்பப்டுகிறது.என் மதம் மட்டும் சரியானது என்ற கொள்கைக்கு ஒருவன் வந்து விட்டால் அவன் மதத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வான்.

________________  மதத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் அவர்களது மத ஆட்சி,மதரீதியான சட்டங்கள்,நமது நாட்டிலும் அத்னையே கோருகின்றனர்.நாம் மட்டும் என்ன குறைந்தவரா என்னும் பிரசாரம் நன்றாகவே எடுபடுகிறது.தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து இருப்பதால் `எளிதில் பரப்புரை ஆதாரங்களுடன் முன்னெடுக்கப் படுகிறது.
நரேந்திர மோடியின் இப்பிரச்சாரம் பெரும் வெற்றி பெற்றதால் ,அவரை இந்தியா முழுவதற்குமான தலைவராக முன்னெடுக்கும் உத்திகளை வரும் காலங்களில் பார்ர்க்கப் போகிறோம்.

10.இந்தியா மத சார்பற்றதாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் மதம் என்பது அரசியலே என்பதை புரிந்து கொண்டால் மதங்களில் வித்தியாசம் இல்லை என்று புரியும்.இந்துத்வ அரசியலை முன்னெடுப்பவர்கள் உயசாதி,மத்திய தர வகுப்பினரே என்பதும்.இட ஒதுக்கீட்டினால் இழந்தவற்றை அரசியல் அதிகாரத்தின் மூலம பெற முயல்வதும் அறியலாம்.

ஆபிரஹாமிய மதவாதிகள் தங்கள் மத பரப்புரைகளை விட்டு விட்டு தங்கள் சமுதாய மக்களின் நல்னுக்காக கல்விசாலைகள், மருத்துவமனைகள் கட்டினால் நல்லது.யாரும் இங்கே முட்டாள்கள் இல்லை,நீங்கள் அவர்களை திருத்த வந்த தூதர்கள் இல்லை.அனைத்தும் ஏற்கென்வே என் மத புத்த்கத்தில் கூறப்பட்டுள்ளது என்ற கூற்றுக்கு நகைக்க மட்டுமே முடியும். 

இதில் இறை மறுப்பாளர்களின் பங்கு மிக அதிகம்,அனைத்து மதங்களுமே விமர்சிக்கப் படவேண்டும்.அதன் ஆதாரமூலங்கள்,எல்லைகள் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். இந்த திராவிட பாணி இறை மறுப்பு அதாவது இந்து மதம் மட்டும் பிற்போக்கானது,மூட நம்பிக்கைகள் நிறைந்தது என்பதும்,பிற மதங்கள் குறைகளற்ற சமரச சன்மார்க்கம் என்பதும் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கியுள்ளன.

ஆக்வே மதம் அரசியலில் கலக்காமல் பார்த்துக் கொள்வது அனைவரின் பொறுப்பு.எப்படி அனைவரும் ஒன்றாக வாழ்வது பற்றியும் , இன,மொழி,மத சிக்கல்களை தீர்ப்பது பற்றி விவாதித்தால் அனைவரும் நலமாக் இருக்கலாம்.

Monday, April 25, 2011

இலங்கை போர்க்குற்றம் பற்றிய ஐ.நா அறிக்கை[U.N Report on Srilankan Warcrimes]

இஸ்லாமிய வங்கி:வீட்டுக் கடன்: ஒரு சாமான்யனின் பார்வை


.
இந்த மதத்தில் அறிவியல் என்ற குரலுக்கு அடுத்து ஒலிப்பது மதத்தில் பொருளியல் என்பதும் இஸ்லாமிய வங்கி என்பது சகல பொருளாதாரா பிரச்சிஅனைகளுக்கும் சர்வ ரோகநிவாரணி என்ற பரப்புரைகளும் அறிந்ததே.இது பற்றி தமிழ் பேப்பர் இணையய தளத்தில் எழுத்தாளர் இரா.முருகன் ஒரு தொடர் எழுதியுள்ளார்.1.இஸ்லாமில் ரிஃபா எனப்படும் வட்டி,தடை செய்யப்பட்ட ஒன்று.பணத்தை கொடுத்து திருப்பி வாங்கும் போது கூடுதலாக வங்குவது வட்டி எனப்படுகிறது.
A  என்பவர் B விற்கு 100 ரூபாய் கடன் தருகிறார்.B ஒரு மாதம் கழித்து 101 ரூபாய் 'A' இடம் திருப்பி அளிக்கிறார். அந்த கூடுதல் ஒரு ரூபாய் வட்டி ஆகும்.

2.இஸ்லாம் வணிகம் செய்வதை த்டை செய்யவில்லை.நியாயமான் முறையில் இலாப ஈட்டுவதையும் தடுக்கவில்லை.


3.அத்தொடரில் பல தரப்பட்ட வங்கி நிதி அளிக்கும் முறைகளை பற்றி பேசுகிறார். அரபி சொற்கள் அதற்காக விளக்கம்(இங்கும் அப்படித்தானா) என்று போகிறது .

 4. அதில் ஒரு வகையான முஷாரகா பற்றி ,அதுவும் அதில் வீட்டுக் கடன் பற்றி மட்டும் ஒரு எடுத்துக் காட்டுடன் பார்ப்போம்.

முஷாரகா என்பது என்ன?


இருவர் சேர்ந்து தொழில் செய்யும் போது வரும் இலாபம்/நஷ்டம் பிரிக்கும் முறை என்று கூறலாம்.வீட்டுக் கடன் இம்முறையின் குறையும் (Diminishing Musharaka) முஷாரகாவின் கீழ் வருவதால் இவ்வார்த்தையை விளக்க வேண்டியதாயிற்று.


 இஸ்லாமிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவத்தின் தளத்தில் இருந்து சில தகவல்கள் திரட்டி ஒரு எடுத்துக் காட்டுடன் உங்களுக்கு அளிக்கிறேன்

நீங்கள் வீட்டுக் கடனாக 200,000$ முஷாரகா முறையில் பெற விரும்பிகிறீர்கள்.நீங்கள் 20 வருடத்தில் ,வருடத்திற்கு ஒரு முறை தவணை செலுத்த முடிவு செய்கிறீர்க்ல் என்று எளிதாக வைத்துக் கொள்வோம். உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும்? ஆகா வட்டிதான் இல்லை. வருடம் நான் 10,000$ கட்ட வேண்டி இருக்கும் அவ்வளவுதான் என்றுதானே!. கொஞ்சம் பொறுங்கள்.

இப்போது வங்கிக்கு செல்கிறீர்கள்.அவர்கள் சொல்கிறார்கள்.

வங்கி மேலாளர்: வருக சகோதரரே உங்களுக்கு சேவை செய்வதில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் வருமானம் குறித்த விவரங்கலை சரி பார்த்து உங்களுக்கு கடன் தருவதாக முடிவு செய்துவிட்டோம்.

சார்வாகன்:நன்றி அய்யா,இந்த கடன் பற்றியும்,நான் 20 வருடத்தில் வருடம் ஒருமுறை தவணை கட்ட வெண்டுமென்றால் எவ்வளவு கட்ட வெண்டும் என்பதை கூறுங்கள்.

வ.மே:இந்த வங்கி வீட்டு கடன் மற்ற முறைகளை விட‌ சிறப்பானது.எப்படியென்றால் வட்டி கிடையாது......!!!!! ??????.

சார்:: நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் அய்யா,எனக்கு இன்னொரு அலுவல் இருப்பதால் நான் வருடம் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை மட்டும் கூறினீர்கள் என்றால் நலம்.

வ.மே:பொறுமை சகோதரரே,நிங்கள் விரும்பும் வீடு,நகரின் வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் உள்ளது.இருபது வருடங்களில் அத்ன் மதிப்பு பல மடங்கு ஆகிவிடும். இந்த முறையில் இந்த வீட்டுக்கு நாங்கள் பணம் தருகிறோம்,முதலில் நாங்கள் 100% உரிமையாளர்.நீங்கள் மொத்தப்பணத்தில் 20 வருடமும் ஒவ்வொரு தவனை(5%) செலுத்தும் போதும் தவணை செலுத்தும் உங்கள் பங்கு அதிகரிக்கும்,எங்கள் பங்கு குறையும்.

சார்.:பதிவு செலவு இரு முறை ஆகும் போல் இருக்கிறதே.சரி நான் வருடம கட்ட வேண்டியது 200,000/20=10,000$ மட்டும்தானே.

வ.மே:அது எப்படி ச்கோதரரே?.எங்கள் சொத்தை நீங்கள் அனுபவிக்கும் போது அதற்கு வாடகை கொடுப்பதுதானே முறை.அந்த இருபது வருடமும் நீங்கள் எங்களுக்கு வாடகை தர வேண்டும்.

சார்:?. வட்டி இல்லை என்றீர்களே

வ.மே: சகோதரரே கவனியுங்கள்,இதில் வட்டி எங்கு வந்தது.?முதலில் வீடு வங்கிக்கு 100% சொந்தம் நீங்கள் குடியிருக்கிறீர்கள்.வாடகை ஒரு கணக்கிற்கு 5% என்று வைத்து கொள்வோம்.நீங்கள் கட்டுவது.200,000/20+0.05*200,000=20,000$

இரண்டாம் வருடம் வீடு வங்கி 95% ,உங்கள் பங்கு 5%.

இப்போது நீங்கள் கட்டுவது 200,000/20+0.05*190,000=19,500$
இந்த அட்டவணையை பார்த்தால் உங்களுக்கு புரிந்து விடும்.
சார்: (மனதிற்குள் ஃப்ளாட் ரேட்டில் வட்டி 2.625% வருகிறது)இது கொஞ்சம் மறைமுகமான வட்டி போல் உள்ள்து என்றாலும் இருபது வருடங்களின் நான் கட்டும் கூடுதல் தொகை(வட்டி என்றால் பாவம்!) 105000$.
இருமுறை பதிவு,பத்திர செலவு என்று பார்த்தால் கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் அஆஇஈ வங்கியை விட உங்கள் வங்கி கொஞ்சம் பரவாயில்லை .அவ்வளவுதானே.முதல் வருடம் நான் 20,000$ கட்ட ஆரம்பித்து ,இரண்டாம் வருடம் 19,500 என்று இருபதாம் வருடம் 10,500$ செலுத்தினால் முடிந்தது.
 அவ்வளவுதானெ.

வ.மே: ச்கோதரரே ,கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் .5% வருட இலாபம் என்று ஒரு எடுத்துக் காட்டுக்காக சொன்னேன்.நாங்கள் நிபுணர் குழு மூலம் 20 வருடங்களில் அந்த வீடு எந்த விலை போகுமோ அதனை கணித்தே இத்னை நிர்னயிப்போம்.

சார்: அப்போது வீடு விலை குறைந்தால் பணம் திரும்ப‌ கிடைக்குமா?.அதாவது இப்போது 200,000 ஆக உள்ளது15 வருடத்தில் 150,000 ஆகிவிடுகிறது என்றால் அப்படியே நிறுத்தி கொள்ளலாமா!!!

வ.மே: அப்படியெல்லாம் கடவுள் எங்களை கைவிட மாட்டார்.ஒருவேளை 10% வருட இலாபம் என்றால் இரண்டாம் அட்டவணையை பாருங்கள்.

சார்:அய்யா:எனக்கு தலை வலிக்கிறது. நான் பிறகு வந்து உங்களை சந்திக்கிறேன்.நன்றி

வ.மே: உங்களுக்கு அமைதி உண்டாவதாக.

சார்: இனி எங்கே வாயை திறப்பது.!!!அமைதிதான் வேண்டும்.!!!!
___________

இந்த காணொளியிலும் இத்னை விளக்கி உள்ள்னர்.


ஏதாவது இலவசம் என்றால் அலையும் தமிழ்ரின் குணத்துக்கு சார்வாகனும் என்ன விதிவிலக்கா?.

நான் இதனை முற்று முதலாக குறை கூறவில்லை.நான் கூறிய வண்ண‌ம் கணக்கீடு செய்து,இலாபமாக இருந்தால் வாங்குமாறு பரிந்துரைக்கிறேன்.இன்னும் சில பலன்களாக சில விஷயங்களை இன்சுரன்ஸ்(இது அனுமதிக்கப் பட்டதா!),தாமத கட்டண அபராதமின்மை போன்றவற்றை குறிப்பிடுகின்றனர்.

தகவல்களுக்கு 1‍_8666 தொடர்பு கொள்ளலாம்.இங்கு பேசித்தான் இந்த உரையாடல் நடந்தது..
http://guidanceresidential.com/contact-us


இன்னொரு விஷயம் ஒருவேளை நீங்கள் பணம் கட்ட முடியாத சூழ்நிலை வந்தால் அந்த வீட்டில் உங்கள் பங்கு அப்டியே இருக்கும்.இன்னொருவர் அவ்வீட்டை வாங்கினார் என்றால் உங்கள் பங்கு பணம் அப்போதைய லாப கணக்கின்படி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.இத்னை அனுபவப் பட்டவர்கள் கூறினால் நலம்.அப்போதைய சூழ்நிலையில் வீட்டில் குடியிருக்க முடியாது என்பதனையும் தெரிந்து கொள்ளுதல் நலம்.

ஒரு வீடு 20 வருடத்தில் விலை 400% அதிகரிக்கும் எனும்போது ,உங்களுக்கும் வங்கிக்கும் உடன்பாடு 50/50 எனில் வங்கிக்கு கொடுக்க வேண்டிய  இலாப  விகிதம்=200/20=10%
இப்பதிவில் கூறிய எடுத்துக் காட்டு வீடு 20 வருடத்தில் 200% விலை அதிகரிக்கும்,உங்களுக்கும் வங்கிக்கும் உள்ள உடன்பாடு 50/50 என்றால் வங்கிக்கு கொடுக்க கூடிய இலாபவிகிதம் 5% என்பது புரியும்.


.வட்டி என்பதற்கு பதில் இலாபத்தில் பங்கு என்று சொலவதுதான் இஸ்லாமிய வங்கியியல். இதில் எவ்வளவோ பல முறைகள் இருக்கின்றன.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 100 ரூபாய்(பொருள் மீதான) கடன் 110 ரூபாய் ஆக திரும்புவதுதான் பொருளாதாரம். இத்ற்கு மாற்றாக கட‌வுளால் கூட  எதுவும் செய்ய முடியாது என்பதையே இவ்வங்கி முறை காட்டுகிறது.இக்கட்டுரையை மறுப்பவர்கள் ஒரு எடுத்துக் காட்டுடன் பதிவிட்டு , இது குறித்து வெளிப்படையான தகவல்களை தெரியப் படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.


இரண்டாவது காணொளியை பார்த்தால் இஸ்லாமிய வங்கிகள் கூட்டு வட்டியை (Compound Interest) மட்டும் தவிர்ப்பது புரியும்.பணம் கடனாக கொடுக்கப்படக் கூடாது என்பது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பதும் விவாதத்திற்குரியதே..சொத்துகள் வாங்குவதற்கு மட்டுமே கடன் என்பது வங்கிகளின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனால் இந்த இலாப கணக்கீட்டு முறைகள் எப்படி நடைமுறைபடுத்தப் படுகின்றன என்பதும்,சில சம்யம் சாதாரண வங்கி கடனை விட கூடுதல் தொகை(வட்டி என்று சொல்லக் கூடாதுஅல்லவா!!!!) கட்டும் படி கூட நிலைமை ஏற்படலாம்.ஆகவே ஜாக்கிரதையாக இந்த கணக்கீடுகளை ஒப்பீடு செய்து பயன் படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் .

இஸ்லாமிய வங்கி முறை என்பது பொருள்களின் மீது மட்டும் கடன் கொடுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமான கூடுதல் தொகை[சாதாரண வட்டி(Simple Interest) rate] முறை என்று வரையறுக்கலாம்.

Sunday, April 24, 2011

சாயி பாபா சென்று விட்டார்!,அரசுக்கு ஒரு வேண்டுகோள்!!

Bye!!!  Bye!!!!


சத்யநாராயண ராஜூ என்ற சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா. 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, , ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா(1838_1918) 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர் ஒரு சுஃபி துறவி என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவினார், அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.இவர் கடந்த‌ ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று(24/4/2011) காலை மரணம் அடந்தார்.


சரி இப்பதிவில் நாம் சொல்ல வருவது என்ன?

1.மனிதனாக பிறந்த யாரும் இறப்பது இயல்பே. இவருடைய மரணத்திற்கு பின் நடை பெறும் நிகழ்வுகளில் அரசு கவனம் செலுத்த‌த வேஎண்டும்.

2. பெரும்பாலும் இம்மாதிரி மதஸ்தாபகர்களின் மறைவுக்கு பிறகு வாரிசுப் போட்டி ஏற்படுவது வரலாற்று ரீதியாக உண்மை.அதிலும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபக்கமும் சீடர்கள் ஒரு புறமும் நின்று சச்சரவு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான உண்மை. இதில் அரசு முக்கிய பங்காற்றி ,சாயிபாபா நிறுவனத்தை,அதன் சொத்துகளை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாக்க வேண்டும்.

3. பல்கலை கழகம்,மருத்துவமனையில் இலவச கல்வி,சேவை வழங்க ஆவண செய்ய வேண்டும்.

4. இது போன்ற அனைத்து மத ஆன்மீக குருக்களின் மறைவுக்கு பிறகு சொத்துகளை அரசு கையகப் படுத்த சட்டம் கொண்டுவரவேண்டும்.அனைத்து மத அமைப்புகளின் வருமானங்கள் கண்கானிக்கப் படவேண்டும்.வருமான வரி செலுத்த வகை செய்ய வேண்டும்.


சரி இவருடைய‌ ஒரு பக்தர் தயாரித்த பரப்புரை காணொளி.17வது நிமிடம் வரும் விபூதி கொட்டும் அதிசயம் மலைக்க வைக்கிறது!!!!!!!!!.
Monday, April 18, 2011

மனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா!!!!!!!!!!!!!!!!

இப்பதிவில் நகைச்சுவையாக இப்படி கூறியிருந்தேன்."இந்த இளைய பூமி கொள்கையாளர்கள் எல்லா விலங்குகளும் டைனோசார் உட்பட மனிதனுடன் படக்கப் பட்டன என்றே நம்புகிறார்கள்.டைனோசார்கள் எல்லாம் நோவாவின் வெள்ளப் பெருக்கில் அழிந்துவிட்டன என்ற கருத்தும் உண்டு.டைனோசார் அழிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் தோன்றியது என்றால் நம்மை பார்த்து ஒரு புன்முறுவல் புரிவார்கள்."

அத்னை உண்மையாக்கி சில பரப்புரைகள் வெளிவர ஆரம்பித்து விட்டது. இப்பதிவில் இத்னை பற்றிப் பார்ப்போம். முதலில் சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1.அறிவியல் மதத்தை கண்டு கொள்வதில்லை,ஆனால் மதங்கள் அறிவியலின் எந்த ஒரு புதிய கண்டு பிடிப்பும் மதத்தின் ஆதார விஷயங்களை பொய்யாக்கி விடக்கூடாடது என்பதில் மிக தெளிவாக இருக்கின்றனர்.

2. ஏதேனும் நன்றாக நிரூபிக்கப் பட்ட கருத்தாக இருந்தால் இது ஏற்கெனவே மத புத்தக்த்திலும் கூறப்பட்டது என்று வார்த்தை விளையாட்டு காட்டுவார்கள்.மத புத்தகத்தில் கூறப்படும் கருத்து நேரெதிராக இருந்தால் ,அப்போதைய புரிதல் தவறு இப்படித்தான் சரியாக அர்த்தம் கொள்ள வேண்டுமென்று கூறுவர்.

3.இந்த பரிணாமக் கொள்கை மட்டும் அபிரஹாமிய மத வாதிகளை மிகவும் தொல்லைப் படுத்துகிறது. இந்து மதத்தில் பரிணாமம்  குறியீடாக விஷ்ணுவின் அவதாரங்களில் கூற்ப்பட்டுவிட்டது,ஆகவே ஏற்பதில் ஆட்சேபனை இல்லையென்று கூறுகிறார்கள்.ஆபிரஹாமிய‌ மத படைப்பியல் கொள்கையின் படி இறைவன் ஆறு நாட்களில் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தார். ஆதம்,ஏவாள் இருவரை படைத்தார். இவர்களில் இருந்தே சந்ததி பலுகி பெருகியது..

ஆகவே பரிணாமக் கொள்கையை மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் மதவாதிகள். இதற்காக சில பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். அதன் அடிப்படை விஷயங்கள் சில‌

பரிணாமக் கொள்கையின் படி ஒரு செல் உயிரில் இருந்து, இயற்கைத்தேர்வு(Natural Selection) மற்றும் சிறு மாற்றத் தன்மை (Mutation) காரண‌மாக பல செல் உயிர்கள்,...பல உயிரினங்கள் தொன்றியது.இப்பரிமாணத்தில் சிறு பரிணாமம்,(Micro evolution)  பெரும் பரிணாமம்(macro evolution)  என்ற பிரிவுகள் உண்டு.
மேற்கூறிய ஒரு செல்லில் இருந்து அனைத்து உயிர்களும் தோன்றிய‌து என்பது பெரும் பரிமாணம்,ஒரு உயிரில் காலப் போக்கில் ஏற்படும் சிறு மாற்றங்கள் சிறு பரிமாணம் எனப்படுகிறது. 

பரிணாமம் பற்றி பல பதிவர்கள் தமிழில் விளக்கமான் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.இது குறித்து விளக்கம் வேண்டுபவர்கள் கீழ்க் கண்ட சுட்டிகளை  பார்க்கும் படி வேண்டுகிறேன்.ம்த புத்தகங்களின் மீதான ஆய்விலேயே ஈடுபாடு காட்டுவதால் பரிணாமம் பற்றி தேவை பட்டால் மட்டுமே எழுதுவேன்.இந்த சிறு பரிமாணம் நேரடியாக சோதித்து அறிய முடியும் என்பதால் மத வாதிகள் இதனை மறுக்க மாட்டார்கள்.தங்களுக்கு சாதகமாக ஆதம் 90 அடி(60 முழம்) உய்ரம் இருந்தார் என்பதை சிறு பரிமாணத்திற்கு ஆதரவாக காட்டி விடுவார்கள்.
______________
3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்..எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
____________

அவர் சந்த்தி உருவத்தில் குறைந்து வ்ருவதாக மதத்தில் அறிவியல் என்று கூறிவிடலாம். இது உண்மையா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்..

இப்போது மதவாதிகள் பெரும்பரிமாணத்தை மட்டும் மறுத்தால் போதும். சரி என்ன விமர்சன கேள்வி எழுப்புகிறார்கள்?.

அ) ஒரு செல் உயிர்கள் எப்படி தோன்றின? அறிவியலாளர்களால் ஒரு செல் உயிரையாவது படைக்க முடியுமா?

ஆ) உலகத்தின் வயதை கணக்கிட கார்பன் டேட்டிங் முறை பயன் படுத்தப் படுகிறது. இது 60,000 ஆண்டுகளுக்குள் மடுமே துல்லியமாக் இருக்கும்.பரிணாம விதிப்படி மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.ஆகவே சரியாக கணிப்பதில் சில சிக்கல்கள் உண்டு.

இ) பெரும் பரிணாமம் நெரடியாக உயிரினங்களில் சோதிக்க முடியாது.[சில நுண்ணுயிர்களில் பரிணாம மாற்றம் விரைவாக நடபப்தும் அது சோதித்தறியப் பட்டதையும் மத வாதிகள் ஏற்பதில்லை.]


ஈ) இறைவைன் படைத்த அனைத்து உயிரினங்களும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியே இருக்கின்றன.ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக் பரிணமிக்காது என்பதை மத வாதிகள் நிரூபிதால் மட்டுமே துல்லியமற்ற மத படைப்பியல் கொள்கையை காக்க‌ முடியும்.

இதில் இன்னொரு நகைச்சுவையான விஷயம் உண்டு.பரிணாமம் ஒருவேளை தவெறென்றால் கூட மத படைப்பியல் கொள்கை சரியாகி விடாது.ஆனால் ஒரு அளவிற்கு தாக்கு பிடிக்கலாம்.

உ) மத படைப்பியல் கொள்கையை வரையறுத்து பரிணாம கொள்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பரிணாமமே வாய்ப்பு அதிகமாக இருப்பதால்,பரிணாம்த்தை விமர்சிக்கும் மத வாதிகள் மத படைப்பியல் கொள்கையை விவாதிக்க மாட்டாட்கள்.

ஒரு வகை ஆப்பிரிக்க குரங்கினம்[ஹோமோ சேபியன் இடல்டு] பரிணாம வளர்ச்சி அடந்து மனித இனமாக [ஹோமோ சேபியன்] 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மாறியது என்பது பரிணாம கொள்கை.

இறைவன் (களி)மண்ணில் இருந்து மனித்னையும்(ஆதம்),மனிதனின் விலா எலும்பில் இருந்து மனுஷியையும்(ஏவாள்) படைத்தார் என்பது ஆபிரஹாமிய‌ மத படைப்பியல் கொள்கை.

_________

இவ்வளவும் அடிப்படை விஷயங்களே ,இப்போது பதிவுக்கு வருவோம்!!!!!!!!!!!!.


இந்த கொள்கை (ஈ)ன் படி இறைவன் படைத்த எல்லா உயிரினங்களும் சில சிறிய மாற்றங்களோடு அபப்டியே இருக்கின்றன என்று காட்டினால் தான் இறைவன் ப்டைத்தார் என்று கூற முடியும்.

டைனோசார் என்பது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன என்பது அறிவியலாளர்களின் கருத்து.கிறித்தவர்களின் ஒரு படைப்பியல் கொள்கை இளைய பூமி கொள்கை.அதாவது பூமி,பிரபஞ்சம் ,உயிரினங்கள் அனைத்தும் 6000 ஆண்டுகளுக்கு முன்(பைபிளின் படி) படைக்கப் பட்டது. இவர்கள்தான் டைனோசோரும்,மனிதனும் சம காலத்தில் வாழ்ந்தனர்,வாழ்கின்றன‌ர் என்று பரப்புரை செய்கின்றனர். 

இவர்கள் கூறுவது என்ன?

1.. டைனோசார் என்பது முற்காலங்களில் ட்ராகன்(Dragon) என்று அழைக்கப் பட்டது.

2. பலர் மார்க்கோ போலோ உட்பட இதனை பார்த்தாக ,சில சீன அரசர்கள் ட்ராகன் படை வைத்து இருந்ததாக்வும் கூறுகின்றன்ர்.

3.ஆப்பிரிக்க காங்கோ நாட்டின் இருண்ட காடுகளில் வாழும் பழங்குடியினர் இப்போதும் பார்த்தாக கூறுகின்றனர்.

4. பைபிளில்,குரானில் பல இடங்களில் டைனோசார் பற்றி கூறப்படுவதாகவும் கூறுகின்றனர். 

_________
இக்காணொளி கிறித்தவ இளைய பூமி கொள்கையாளர்களின் பரப்புரையாகும்.இவர்களின் கூற்றுகளை எப்படி முறுப்பது என்பதை பினூட்டமிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.

வாருங்கள் டைனோசாரின் கதை கேட்போம்.


Saturday, April 16, 2011

MR Radha speech-M.G.R-ரை ஏன் சுட்டேன்?நண்பர்களே 
அம்.ஆர் இராதாவிற்கு இருக்கும் ரசிகர்கள் ஆத்ரவு மலைக்க வைக்கிறது.அவருடைய காவியத் திரைப்படம் இரத்தக்கண்ணீர் நமது திரைத்தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.கண்டு களியுங்கள்.


பேசுவ‌தற்கு ஒன்றுமில்லை

பைபிளில் இரகசிய குறியீடுகள் உண்டா?இப்பதிவுகளில் மதம்,மனிதம் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறோம்.மதம் என்பது சிலரின் அரசியல்,பொருளாதார காரணங்களுக்காக பாதுகாக்கபடவேண்டும் என்பதால் அதற்காக சில பரப்புரைகளை தயாரித்து இணையம் உட்பட்ட ஊடகங்களின் மூலம் பரபுகிறார்கள்.அதில் ஒன்றுதான் இந்த பைபிளில் இரகசிய குறியீடுகள் என்பது.

இரகசிய குறியீடுகள் என்றால் என்ன?

பைபிளின்(பழைய ஏற்பாடு) மூல மொழி ஹீப்ரு இந்த ஹீப்ரு பைபிளில் சில எழுத்துகளை குறிப்பிட்ட வரிசையில் சேர்த்தால் பலவித தீர்க்க தரிசனங்கள் முனுரைக்கப்பட்டு உள்ளதை கண்டறிய முடியும் என்பதுதான் இந்த இரகசிய குறியீடு. சரி இந்த எண்களை எப்படி கண்டறிவது என்றால் அதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள்.இதற்கு பல இணைய தளங்கள் உள்ளன.
இந்த இரகசிய குறியீட்டு முறையில் ஒன்று சம அளவு தொட்ர் வரிசை என்பது பிரபல்மான ஒன்றாகும்.எடுத்துக்காட்டாக பைபிளின் ஒரு இடத்தில் ஆரம்பித்து அந்த எழுத்தை குறிக்கவேண்டும் சம அளவு 10 என்றால் அந்த எழுத்தில் இருந்து 1,11,21,... அப்ப்டியே சென்று ஏதாவது பெயர் அல்லது சம்பவம் குறிப்பாக வருமாறு செய்ய வேண்டும். எங்கே ஆரம்பிப்பது,எப்படி சம அளவு தீர்மானிப்பது என்றால் நாத்திகன் போல் பேசக் கூடாது,கடவுள் வழிநடத்துகிறார்,இரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்ற நம்பிக்கையோடு படித்தால் மட்டுமே புரியும்.நன்றாக பிரார்த்த்னை செய்தால் எங்கே ஆரம்பிப்பது,எந்த அளவில் தேடுவது அத்னை எப்படி விளக்குவது என்று அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வார்.ஒரு குறிப்பிட்ட தெளிவான அர்த்தம் வந்ததும் அத்னை பிரபலப் படுத்துவது மட்டுமே அடியார்களின் வேலை.
இந்த காணொளியில் அமெரிக்க இரட்டை கோபுர 9/11 தாக்குதல் பைபிளில் கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை பாருங்கள்.
சரி இவர்களில் ஏமாற்றுவேலையை அம்பலப் படுத்தும் காணொளிகளும் இணையத்தில் உண்டு.இக்காணொளியில் அருமையாக இத்னை பற்றி விளக்கி இருக்கிறார்கள்.கண்டு களியுங்கள்.


Friday, April 15, 2011

ஏன் இராஜபக்சேவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்?


டைம் பத்திரிக்கை உலகின் உலகின் முக்கியமான் 100 மனிதர்கள் யார் என்பதற்கு ஒரு இணைய வாக்களிப்பு நடத்துகின்றது.இதற்கு பல பதிவர்கள் எதிர்த்து வாக்களிக்குமாறு பதிவிட்டு வேண்டுகோள் விடுத்தனர்.  தருமி அய்யவின் இது போன்ற பதிவில் ஒரு பின்னூட்டம் எதிர்த்து வாக்களித்தால்  தமிழ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்ததாகும் என்று ஒரு கருத்தை தெரிவித்தது.அது பற்றிய ஒரு ஒரு கருத்தாய்வு.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
____________
பல இந்தியர்களுக்கும்,பல் தமிழர்களுக்குமே இலங்கை பிரசினை பற்றி பல தகவல்கள் தெரியாது.அதனாலேயே அது குறித்து பேசுவதையே தவிர்த்து விடுவார்கள். பல பழைய திரைப்படங்களில் கதாநாயகனையும், எதிர்நாயகனையும் எளிதில் கண்டு கொள்ளும் விதத்தின் நடை உடை பாவனைகளை,அமைத்து இருப்பார்கள்.எதிர்நாயக‌ன் பார்த்தாலே பயப்படும் ,கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவராகவும், நாயகன் மென்மையான, நல்லவராகவும்  சித்தரிக்கப் படுவார்கள். ஆனால் சில படங்களில் யார் நாயகன்,எதிர் நாயகன் என்பதே மர்மம் ஆக் இருக்கும். இக்கால நிகழ்வுகளில் இது போன்ற சூழ்நிலையே நிலவுகிறது.

______________________

பொதுவாக இலங்கைத் தமிழர் பிரச்ச்னை என்றால் நம்முடைய புரிதல் என்ன?

1.இலங்கையின் அரசியல்மைப்பு சட்டம் மதசார்பானது,புத்த மதம்,சிங்கள‌ மொழிக்கு முனுரிமை தருகிறது.

2.அதிகார பக்ர்வு தமிழர்களுக்கு அளிக்கப் படவில்லை.

3. கல்வி வேலை வாய்ப்புகளில் சிங்களருக்கு மூனுரிமை அளிக்கும் தரமப் படுத்தல் போன்ற சட்டங்கள் அமல் படுத்தப் பட்டன. 

4.சிங்களர் தமிழ் பகுதிகளில் குடியேற்ற‌ப்பட்டு தமிழர்கள் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப் படுகின்றன.

5.இந்த சூழ்நிலையில் சிங்கள்,தமிழ் அரசியல்வாதிகள் இப்பிரச்சினையை  சுமுகமாக் தீர்க்க முயலாமல் அரசியல் இலாபத்திற்கு பயன் படுத்தியதால் இன ரீதியான பிளவு கூர்மைப்பட்டது. இது ஆயுதப் போராட்டமாக் உருவெடுத்தது,அபோதைய இந்திய அரசு ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது.

6.பல்வேறு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்து இனப் பிரச்சினை ச்கோதர யுத்தமாக் மாறியது.

7.இந்திய இராணுவம் இலங்கை சென்றதும், புலிகளுடன் போரிட்டதும் , முன்னாள் பிரதமரின் கொலையும் இப்பிரச்சினைக்கு இந்திய தமிழ்நாட்டில் எதிர்ப்பு தோன்ற காரணமானது.

8.சகோதர யுத்தம்,சிலபல குண்டு வெடிப்புகள் பல நாடுகளில் இப்பிரச்சினைக்கு இருந்த ஆதரவு குறைவதற்கு காரண்மாகியது.

9.அமைதிப்படை வெளியேறியதும் நிலவிவந்த சமாதான உடன்படிக்கை திரு ராஜபக்சே பதவியேற்ரதும் ,ரத்து செய்து யுத்தம் தொடுக்கப்பட்டது..இரு வருடங்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் ஆயுதம் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது..போரின் முடிவு,விளைவுகள் பற்றி பல வதந்திகளே உலவி வருகின்றன. 

10.இப்பிரசினையில் இன்னும் உள் பிரசினயாக ,இஸ்லாமிய தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழர்களின் சாதி முரண்பாடுகள் என்று இப்பிரச்சினைக்கு பல முகங்கள் உண்டு.  
____________
சரி இப்போது பதிவுக்கு வருகிறேன்.
நான் சிகப்பு எழுத்தில் எழுதி இருந்ததை மீண்டும் ஒரு முறை படியுங்கள். ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் மகாத்மா ஆகவோ,மனித் விரோதியாகவோ சித்தரிக்க முடியும்.உலகமய்மாக்குதலில் பொருளாதாரம்  மட்டுமே எல்லாவற்றுக்கும் ஆதார பிரச்சினை ஆகிவிட்டது. கொள்கை,சுதந்திர போராட்டம்,ஆக்கிரமிப்பு போன்றவற்றை எப்படி வேண்டுமானாலும் ஊடகங்களால் சித்தரிக்க முடியும்.

பொருளாதார ஆதிக்க சக்திகள் வளங்கள் உள்ள நாடுகளை தங்கள் கட்டுப் பாட்டில் வைக்க முயல்வதும்,இதற்காக பல ஆயுதக் குழுக்களை உருவாக்குவதும் ,நினைத்த நோக்கத்தை அடைந்துவிட்டால் அதனையே அழிப்பதும் இக்கால கட்டத்தில் நடைமுறையில் உள்ள விஷயம். தலிபான் உருவாகப் பட்டுது சோவியத் யூனியனை பல்வீனப் படுத்த. லிபியாவில் கடாஃபிக்கு எதிரான குழுவிற்கு உதவி செய்யப் படுகிறது. தனக்கு விசுவாசமான் ஆட்களையே(கட்சி) எல்லா நாடுகளையும் ஆள விரும்புகின்றன.இந்த விக்கி லீக்ஸ் தகவல்களில் கூட பல விஷயங்கள் வெளிவந்தன. 

இந்த தமிழ் ஆயுதக் குழுப் போராட்டத்திலுமே இப்படித்தான் ஏதாவது நடந்திருக்கும் என அனுமானிக்கலாம். 
___________________
இலங்கை அரசாங்கம் இறுதி போரில் பல நாடுகளின் ஆதரவை பெற்றது.இத்னால் பல போர்க் குற்றங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முயல்கிறது. தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை துடைத்து மனித உரிமைகலை பாதுகாகும் அரசு என்ற பெயரை பெற முயல்கிறது.
இந்த ஆதிக்க சக்திகள் மிக்வும் புத்திசாலிகள்.செய்துவிட்டு அப்படியா என்று கேட்பார்கள்.ஊடகங்களின் சக்தியை நன்கு பயன்படுத்துவார்கள்.இப்போது இலங்கையில் முதலீடுகளை ஈர்த்து ஒரு சந்தையாக மாற்றும் முயற்சியில் ஒரு தலை சிறந்த தேசப் பற்றுள்ள ,நிர்வாகத்திற்மையுள்ள ஒருமனிதருக்கு மீள் கட்டமைப்பு செய்ய உதவுதாக காட்ட வேண்டும்.

இதற்கு திரு இராஜப்க்சேவை ஒரு சிறந்த மனிதராக காட்ட வேண்டிய அவசியம் எழுகிறது.போரில் உதவி செய்த அனைத்து சக்திகளுக்கும் வாக்களித்த பலன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி பிரச்சினை இல்லாமல் நடக்க வேண்டும்.

இப்படி கட்டாயத்தில் இருப்பவர் என்ன செய்வார்?

1.சிங்களர்களுக்கு இனப் பெருமிதம் மட்டும் வழங்கி அவர்களை காக்க வந்த கடவுளாக் உருவ்கப் படுத்தி கொள்வார்.எந்த சிங்கள் நடுநிலை,எதிர்க் கட்சினரின் விமர்சனமும் சிங்கள தேசிய வாதத்திற்கு,பெருமிதத்திற்கு எதிராக கருதப் படும்.

2.தமிழர்களூக்கு அதிகாரப் பகர்வல் அளித்தால் ,ஒழுங்கான தேர்தல் என்றால் இவர் தமிழர்களாலும் ஆதரிக்கப் படுபவர் என்ற மாய தோற்றத்தை உடைந்து விடும்.போரினால் பாதிக்கப் பட்ட தமிழர்கள் நிச்சயம் இவரை ஆதரிக்க மாட்டார்கள். ஆகவே தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்க மாட்டார்.உரிமை கேட்டு எதிர்க்கும் தமிழர்கள் புலிகள் ஆக்கப் பட்டு தண்டிக்கப் படுவர்.

3. முதலீடுகளை ஈர்த்து மீள் கட்டமைப்பில் நாட்டை சுரண்ட ஆதிக்க சக்திகளுக்கு உதவி செய்வார்.
_______________________

இதில் நம் பங்கு என்ன?

சிங்களர்கள் அனைவருமே இனவாதிக்ள் அல்ல.சில சிங்கள அரசியல்வாதிகளின் செயலே இந்நிலைக்கு இட்டு சென்றது.

சிங்களர்,தமிழர் ஒற்றுமையாக வாழ இப்பிரச்சினையை சுமுகமாக் தீர்க்கும்  ஆட்சி வரவேண்டும். .இதற்கு ராஜப்க்சேவின் மனித புனிதன் என்ற முகமூடி கிழிக்கப் பட வேண்டும். இந்த பயங்கரவாதம் என்பது யார் உருவாக்கியதோ,ஆயுதம் வழங்கி பயிற்சி அளித்தார்களோ அவர்கள்தான் வெட்கப் படவெண்டும்.. அதே சக்திகள் இப்பிரச்சினையை தீர்க்காமல் அப்ப்டியே நீறு பூத்த நெருப்பாக வைத்து சமயம் நேர்ந்தால் பயன் படுத்தவும் திட்டமிடலாம்.புலிகள் குறித்த பயம் இருக்கும் வரையில் மட்டுமே திரு ராகஜப‌க்சே நாயகன்.. இப்போது இலங்கை தமிழரின் உரிமைகளை மறுக்கும் ராஜபக்சேவை விமர்சிக்க தயக்கம் அவசியமில்லை.

போரில் வென்றதால் மட்டும் தமிழர்களின் நியாய‌மான் உரிமைகளை மறுக்க முடியாது..ஏதோ தமிழர்கள் என்ப்தால் ஆதரிக்கவில்லை,தமிழர்களில் நிலவி வந்த சாதிக் கொடுமை,இஸ்லாமிய தமிழரை துரத்தியதும் கண்டிக்க பட வேண்டியவைகளே. இப்பிரச்சினை தீர்க்கும் போது இவையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களே. 

இணையத்தால் உலகின் எவ்விடத்திலும் நடக்கும் ஒரு செயலுக்கு நம் கருத்தை நம்மை பாதிக்காத வகையில் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பை கூட செய்ய மாட்டோம் என்றால் என்ன சொல்வது ? இக்கவிதை ஞாபகம் வருகிற‌து..

என் அண்டை வீட்டு யூதனை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் யூதன் இல்லை,
என் எதிர் வீட்டு கம்யுநிஸ்டை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை,
அடுத்த நாள்
என்னையும் இழுத்து சென்றார்கள்
ஏன் என்று கேட்க நாதி இல்லை.


மார்ட்டின் நிமோலியர்1892–1984)