Tuesday, March 29, 2011

மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.



இப்போது இணையத்திலும்,தொலைக்காட்சியிலும் எங்கள் மத புத்தகத்தில் அறிவியல் கோட்பாடுகள் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை  அனைவ்ரும் அறிவோம்.இதில் ஆபிரஹாமிய மதங்களே இப்படிமத பரப்புரையில் ஈடுபடுகின்ற்ன. தமிழர்களில் கிறித்தவ,இஸ்லாமிய மதத்தவர் இக்கூற்றுகளை தமிழில் பரப்பி வருகின்றனர்..கிறித்தவர்களின் வேத தமிழ் மொழி பெயர்ப்பை படித்தாலே அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை எளிதாக சரிபார்க்கலாம்.

குரான் அரபியில் இருப்பதாலும்,மொழி பெயர்ப்புகள் வித்தியாசமாகவும்  குழப்பமாகவும் இருப்பதாலும் குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது குரான்,இஸ்லாம் விமர்சிக்க படுவது அதுவே இறுதி உண்மையான நெறி(மத வாதிகளின் கூற்று) ,பிற மதத்தினரின் சதி என்பது தவறு.இஸ்லமை ஆன்மீக கொள்கையாக கொண்டு மர‌ணத்திற்கு பின் அழிவற்ற வாழ்க்கையும், எல்லையற்ற பேரின்பமும் அடைய விரும்பினால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.நமது சகோதர நாடான பாகிஸ்தான்,பங்களா தேஷ் ஆகியவ்ற்றில் நடைபெறும் நிலையற்ற ஆட்சி,மனித உரிமை மீறல்கள் அனைத்துமே மத ரீதியான ஆட்சியால் இந்த் கால கட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஆட்சிமுறையை வழங்க முடியாது என்பதையே காட்டுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மக்கள் எழுச்சியும் கூட ஜனநாயகத்தை நோக்கிய ஒரு போராட்டமே.மத ரீதியான ஆட்சி நடத்துதுவதாக காட்டிக் கொள்ளும் அரசர்கள் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளாக நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க உதவுவதும்,இதனை மறைக்க மத பிரச்சாரங்களுக்கு பொருளுதவி செய்வதும்,உலகளாவிய மத தலைவராக முயல்வதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.

இந்த மத பரப்புரைகள் எந்த சூழ்நிலையில் வளரும் நாடுகளில் உள்ள மக்களை நோக்கி செய்யப்படுகின்றன என்பதை பார்த்தோம். மதம் ஆன்மீகமாக இல்லாமல் சர்வ ரோஹ நிவாரணி என்னும் மாயவலையில் ம்தத்திற்காக எதையும் செய்ய வேண்டுமென்ற மன்நிலைக்கு ஒரு சாதாரண மனிதனை ஆளாக்க கூடாது.இந்தியாவில்,பிற மத நாடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்றால் பிற மத நாடுகளில் பேரளவிலாவது ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகம்,மதமற்ற அரசியல் போன்றவை இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மிக அரிது.ஒன்ற்ரண்டு விதி விலக்குகள் இந்தோநேசியா,மலேசியா போன்ற நாடுகள் இருக்கலாம். அவையும் இந்த பரப்புரையில் விழுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஆட்சி மாற்ற‌த்திற்கு மனித உயிர்கள் பலையாவதும் மத்திய கிழக்கில் வழக்கமான் செயல் ஆகிவிட்டது.  மதத்தின் ஒரு குறிப்பிட்ட ரீதியான விளக்கம்,மதம் சார்ந்த்த அரசியல் என்பதே இப்பரப்புரைகளின் நோக்கமாகும் என்பதில் ஐயம் இருந்தால் இந்த பரப்புரையாளர்களிடம் ஷாரியா சட்டம் இல்லாமல் இஸ்லாம் இருக்க முடியுமா என்று கேளுங்கள்.ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படி அவர்கள் ஷாரியாவின் மீதான இஸ்லாமிய அரசு இப்போதைய சட்டங்களை விட எப்படி சிறந்தது என்று சொல்ல மாட்டார்கள்,அதை விவாதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குரானில் அறிவியல் உள்ளது ஆகவே இது இறைவனின் வார்த்தை ,ஷாரியாவும்,இஸ்லாமிய அரசும் இறைவனின் கட்டளைகள் என்று மெதுவாக கருத்தாக்கம் செய்வார்கள். இஸ்லாமிய நாடுகளின் கல்லெறிந்து கொல்லுதல்,சவுக்கடி,கையை வெட்டுதல் என்பதெல்லாம் பிற நாடுகளில் மனித உரிமை மீறலாக கருதப்படுவதும் அறிந்ததே. இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தினர் மட்டுமல்ல,பிற் பிரிவு இஸ்லாமியர்,நடு நிலைமையான இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாற்றுக் கருத்தானது வன்முறை கொண்டே எதிர்க்கப்படுகின்றது.பதிவை படிக்கும் நண்பர்கள் இது மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது மட்டுமே,தனிப்பட்ட தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களின் மதம்,ஆன்மீகத்தில் இருந்து தொடர்பு அற்றது என்பதை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். 

இஸ்லாமிய மத பரப்புரைகளை எப்படி சரி பார்ப்பது,அவர்களின் கூற்றுகளை எப்படி மறுப்பது என்பதற்காக இந்த பதிவு.

குரானே தன்னிடத்தில் புரியாத வசனங்கள் உண்டு என்றே கூறுகிறது.

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.

_______________

இப்பதிவில் உலகம் உருண்டை என்று எங்கள் புத்தகத்தில் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை எடுத்துக் கொள்வோம்.







இந்த யு டியூபிலும் இந்த பரப்புரைகள் அதிகமாக கிடக்கின்றன.இந்த காணொளியில் குரான் 79.30 ல் பூமி நெருப்புக் கோழி முட்டை போல் உள்ளது என்று கூறுவதை கேளுங்கள்.

1.முதலில் யாரேனுமிந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினால் உடனே அவ்வசனத்தை குறித்து கொள்ளுங்கள்..

அவ்வசனத்தை தமிழிலும்,ஆங்கிலத்திலும்,வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பில் பார்த்தால் ஒரு அளவிற்கு அந்த வசனம் என்ன கூறுகிறது என்று புரியும். குரான் வசனம் சரிபார்க்க  இந்த தளத்தில் பார்க்கவும்.ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு பித்கல்,யூசுஃப் அலி(இவர் இந்திய போஹ்ரா பிரிவு இஸ்லாமியர்) எளிதாக இருக்கும்..ஆனால் யூசுஃப் அலி மொழி பெயர்ப்பில் எப்போதும் அறிவியலை ஒத்து வருமாறே மொழி பெயர்ப்பார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.



79:30 இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.


Sahih International: And after that He spread the earth.


Pickthall: And after that He spread the earth,


Yusuf Ali: And the earth, moreover, hath He extended (to a wide expanse);


Shakir: And the earth, He expanded it after that.


Muhammad Sarwar: After this, He spread out the earth,


Mohsin Khan: And after that He spread the earth;


Arberry: and the earth-after that He spread it out,

Waalarda baAAda thalika dahaha


வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் இத்தளத்தில் கிடைக்கும்.
http://corpus.quran.com/


Waalarda -And the earth
baAAda -after
thalika -that
dahaha-He spread it.

இந்த வசனத்தை பார்த்தாலே நெருப்புக் கோழி முட்டை என்பது குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும்.இபோது இரண்டாவ்து கட்டத்திற்கு செல்வோம்.

2.குரான் என்பது 1400 வருடங்களுக்கு முந்தைய புத்தகம்.அது அப்போது எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டதோ, விளங்கப்பட்டதோ அப்படியே இப்போதும் சொல்லப்பட்டால் மட்டுமே அது உண்மையான விளக்கம். 


இதற்கு பல குரான் விளக்கங்கள்(தஃப்சீர்) உண்டு.இதில் இபின் அப்பாஸ்(முகமதுவின் உறவினர் 618_678),அல் சுயுட்டி போன்றவர்களின் விளக்கங்கள் ஒரு அளவிற்கு இந்த வசனங்கள் 6ஆல் நூற்றாண்டில் எப்படி பொருள் கொள்ளப்பட்டதோ அது போலவே இருக்கும். இந்த வசனத்தின் விளக்கத்தை பார்ப்போம்.

anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

(And after that He spread the earth) even then He spread it on the water; it is also said: 2,000 years after that He spread it on the water,


* تفسير Tafsir al-Jalalayn 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

and after that He spread out the earth: He made it flat, for it had been created before the heaven, but without having been spread out;

படித்தால் பூமி தட்டை என்று சொல்வது போல் இருக்கிறதே என்றால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

3.மேற்கூறிய இரு செயல்களை கொண்டு இந்த பரப்புரைகளை எளிதில் மறுக்கலாம். விவாதிக்க அவசியம் இல்லையென்று நினைத்தாலும் சரி பார்த்தோம் என்ற ஒரு திருப்தி வரும். பல நண்பர்கள் யு டியூபிலும் இந்த பரப்புரைகளை மறுத்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த காணொளியில் நாம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் செய்முறை விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாருங்கள். தெளிவு பெருங்கள்.








குரானின் பல வார்த்தைகளுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஏதாவது ஒன்றை அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்ற மாதிரி காட்ட முடியும்.இதில் என்ன ஏமாற்று வேலை என்றால் ஏற்கெனவே இல்லாத அர்த்தம் எல்லாம் புதிதாக க‌ண்டுபிடித்தல், அதாவது இந்த டஹாஹ[dahaha] என்ற வார்த்தைக்கு புதிதாக நெருப்புக் கோழி முட்டை என்று ஒரு அர்த்தம் புதிதாக கண்டு பிடித்து பாருங்கள் அறிவியலை என்று கூறுவதில் இருந்து படிக்கும் நண்பர்கள் இந்த மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.ஜாகிர் நாயக்கின் விளக்கத்தில் இருந்து அது நன்றாக விளங்கும்.


45 comments:

  1. விளக்கத்திர்க்கு நன்றி.

    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  2. வருக கண்ணன்.மதம் என்பது மனிதனின் குணங்களை மேம்படுத்தும்,மனித சமுதாயத்தை நாகரிகமடையச் செய்வதாக‌ இருக்க வேண்டும்.ஒரு மதம் மட்டுமே சரியானது பிற மதங்கள் தவறு என்ற மத பெருமிதமே பல்வேறு வகுப்பு கலவரங்களுக்கு காரணமாகின்றன.அறிவியலை மத புத்தகம் கொண்டு சரி பார்ப்பது அவசியமில்லாதது.

    மதத்தில் அறிவியல்(அரசியல்) என்ற கருத்தாக்கத்தின் குரல் அதிகமாக ஒலிப்பதால் அதற்கு எதிராக இந்த சாமான்யனின் சின்ன எதிர்ப்பு.
    வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் ஆய்வுகள் மூடநம்பிக்கைகளின் பல கதவுகளை திறந்து விடுகிறது தல!
    தொடருங்கள்!

    ReplyDelete
  4. நண்பர் வால்பையன்
    வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  5. Your Blog is really great and your effort for it is amazing.

    ReplyDelete
  6. வருக பரணி கண்ணன்.
    மதங்களை அதன் மூலங்களில் இருந்து பார்த்தால் ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.இறை நம்பிக்கயாளராகவோ,மறுப்பாளராகவோ இருப்பது அவருடைய விருப்பம் என்றாலும்,இந்த மத பெருமித கருத்தாக்கம் என்பது தவிர்க்கப் படவேண்டும் என்பதே நமது ஆசை.

    ReplyDelete
  7. சார்வாகன்!

    //இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.//

    ஒரு இசமோ மார்க்கமோ மதமோ வளர்வதால் அதனால் சமூகத்துக்கு நன்மை கிடைத்தால் அதை வரவேற்பதுதானே முறை! பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? அவரால் சாதியை ஒழிக்க முடிந்ததா? இன்னும் எத்தனை பெரியார்கள் முயன்றாலும் இந்திய சாதி சமூக கட்டமைப்பை உடைக்க முடியாது. மத புத்தகங்களில் வர்ணாசிரமம் இருக்கும் வரை, சாதியை ஒழிக்க முடியாது. எல்லோரும் படித்து விட்டால் சாதிகள் ஒழிந்து விடும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. முன்பு கத்தி அரிவாளால் வெட்டிக் கொண்டவர்கள் இன்று மானிட்டர், கீ போர்ட, மௌஸ் மூலமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேரமிருப்பின் வினவு பக்கமும் டோண்டு பக்கமும் சென்று பார்ப்பனர்கள், படையாச்சி,தேவர், ஆதிதிராவிடர் சம்பந்தமாக வந்த பதிவுகளையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் சற்று பார்வையிடவும்.

    பிராமணர்கள் அல்லாத மற்றவர்களை சூத்திரன் என்று சொல்லும் இந்து மதம், அதே இனத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய என்னை சொல்ல மனம் வருமா? சொல்லத்தான் முடியுமா? சொல்லத்தான் விடுவோமா? இது இஸ்லாத்தால் எங்களுக்கு கிடைத்த பேறு அல்லவா!

    தமிழகத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் சவுதி அரேபியாவின் புகழ் பெற்ற ஒரு மசூதியில் தலைவராக நின்று பல முறை தொழுகை நடத்தியிருக்கிறேன். என்னைப் பின்பற்றி சவுதி, எகிப்து, சூடான், பிலிப்பைன், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டவர்கள் நான் குனிந்தால் குனிகிறார்கள். நான் நிமிர்ந்தால் நிமிர்கிறார்க்ள. நான் தொழுகையை முடித்தால் என்னைப் பின்பற்றி அவர்களும் தொழுகையை முடிக்கிறார்கள். இது இஸ்லாத்தினால் எனக்கு கிடைத்த பேறு அல்லவா? நம் தமிழுக்கு கிடைத்த பெருமை அல்லவா!

    இஸ்லாத்தை கூட்டாக ஏற்ற ஒரு தாழ்த்தப்பட்ட கிராமத்துக்கு பேட்டி எடுப்பதற்காக ஜீனியர் விகடன் சென்றிருந்தது. அங்கு கல்லூரியில் படிக்கும் மாணவனிடம் 'நீங்கள் இஸ்லாத்துக்கு சென்றதால் என்ன மாற்றம் வந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?' என்று கேட்டனர். 'எந்த மாற்றம் வருகிறதோ இல்லையோ! இனி என்னை விட வயதில் சிறியவன் எல்லாம் என்னை 'டேய் சரவணா!' என்று கூப்பிடமாட்டார்கள். 'ரஹீம் பாய்' என்றுதான் கூப்பிடுவார்கள். அது ஒன்று போதும்' என்று சொன்னதைப் படித்து என் கண்கள் கலங்கி விட்டது. எந்த அளவு மனதால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த வார்த்தைகள் வரும்!

    நம் காலத்திலேயே திண்ணியம், பாப்பாரப் பட்டி, கீரிப்பட்டி, கீழ்வெண்மணி சம்பவங்களை மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நமது சமூகமும் நமது மூதாதையர்களும் சிறந்தவர்களாக இருந்திருந்தால் எங்கோ பிறந்த அரபியரான முகமது நபியை வாழ்க்கை வழி காட்டியாக எனது முன்னோர்கள் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நமது நாட்டில் இஸ்லாத்தின் முன்னேற்றம் தடைபடுமானால் அதனால் இஸ்லாத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. மாறாக பின்னடைவு நமது நாட்டுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்தான்.

    ReplyDelete
  8. நண்பர் சுவனப் பிரியன்
    உங்களின் பல கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு.நமது நாட்டில் சாதி என்றால் பிற நாடுகளில் இனரீதியான ஒடுக்குதல்கள் உண்டு.பிற இன மக்களுக்கு அரசியலில் பங்களிபு கிடைக்கவில்லையென்ற கரணத்தால்தான் மத்திய கிழக்கில் நடைபெறும் போராட்டங்கள்.இது மதம் சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை.சாதி பற்றியும் கூட உரையாடுவோம் என்றாலும் அது இப்பதிவின் சாரத்தை விட்டு வெளியே செல்வதால் நிச்சயம் அதை பற்றி ஒரு பதிவில் பேசுவோம்.

    நான் ஷாரியாவின் விமர்சிக்கத்தக்க அம்சங்களை குறித்தே பேச விழைகிறேன்.எடுத்துக்காட்டாக இந்த இரத்தப்பணம் என்ற விஷயம் சவுதி உட்பட்ட பல் நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
    ஷாரியாவில் இரத்த பணம்[Diyyஅ] என்றால் கொலை[விபத்து] செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் விரும்பினால் கொலை[விபத்து] செய்தவரிடம் இருந்து இழப்பீட்டு பணம் பெற்று மன்னிக்கலாம்.இது குரான் 5.45ஐ அடிப்ப்டையாக கொண்டது.

    5:45. அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன்னிப்பது நல்லது என்றாலும் ஆனால் மத ரீதியாக உயிரின் விலை நிர்ணயித்து உள்ளது எனக்கு சரியாக படவில்லை.
    .
    Money rates. Some examples are presented below.
    Saudi Arabia
    In Saudi Arabia, when a person has been killed or caused to die by
    another, the prescribed blood money rates are as follows
    100,000 riyals if the victim is a Muslim man
    50,000 riyals if a Muslim woman
    50,000 riyals if a Christian or Jewish man
    25,000 riyals if a Christian or Jewish woman
    6,666 riyals if a Hindu man
    3,333 riyals if a Hindu woman.
    The amount of compensation is based on the percentage of responsibility.
    Blood money is to be paid not only for murder, but also in case of
    unnatural death, interpreted to mean death in a fire, industrial or road
    accident, for instance, as long as the responsibility for it falls on the
    causer.
    ==========

    http://www.cgijeddah.com/cgijed/Welfare/deathbooklet.htm

    http://en.wikipedia.org/wiki/Diyya
    ______________


    அதாவது
    ஒரு முஸ்லிம் ஆணில் உயிர்
    =இரு முஸ்லிம் பெண்களின் உயிர்கள்
    =இரு யூத(கிறித்தவ) ஆண்களின் உயிர்கள்
    =நான்கு யூத(கிறித்தவ) பெண்களின் உயிர்கள்
    =15 இந்து ஆண்களின் உயிர்கள்
    =30 இந்து பெண்களின் உயிர்கள்.
    மத,ஆண் பெண் வேறுபாட்டின் உச்சக் கட்டமாக தெரிகிறது.ஒருவேளை இது ஷாரியவின் படி தவறாக கூட இருக்கலாம்.ஆனால் நடைமுறையில் உள்ளதும்,மனித சமுதாயத்தை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் விமர்சிக்காமல் இருக்க முடியாது.
    பாகிஸ்தானில் கடந்த மாதம் இரு பாகிஸ்தானிக்ளை கொன்ற அமெரிக்க உளவாளி இரத்தப் பணம் கொடுத்து தப்பிவிட்டன்.

    மத நிந்தனை என்று குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை.அத்னை மாற்ர முயன்ற அமைச்சர் படுகொலை,கொலையாளிக்கு பல்ர் பாராட்டு.எங்கே சென்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான்?

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

    http://www.foxnews.com/opinion/2011/03/16/cia-contractor-raymond-davis-free-time-reconsider-support-pakistans-government/

    http://www.foxnews.com/opinion/2011/03/16/cia-contractor-raymond-davis-free-time-reconsider-support-pakistans-government/

    ReplyDelete
  9. இப்பதிவில் உள்ள முதல் படம் பார்த்தேன் - Hawkins - Tyson.
    very informative one
    tyson, though dominating, was quite nice.

    have to see others soon. u have a great collection of u-tubes. have to look them all soon.

    ReplyDelete
  10. கடைசி இரு தொகுப்பொளிகளை சுவனப்பிரியன் போன்றவர்களைப் பார்க்க வைக்க வேண்டுமே ..!

    ReplyDelete
  11. வாங்க தருமி சார்
    இந்த இது மட்டுமே சரி என்ற மத பிரச்சாரம்,மத மாற்றம் என்பதெல்லாம் கடந்த கால கதை.மத சட்டங்க‌ளில் நடைமுறையில் உள்ள த‌வறுகளை திருத்த முயல்வதே அவசியம்.கடவுளின் இருப்பே மனிதனின் சிந்தனையில் மட்டுமே என்றாகி விட்ட பின் எதற்கு வீண் சண்டை சச்சரவு என்பதையே சொல்ல விழைகிறோம்.நமக்கு சரி என்று பட்டதை சொல்கிறோம்.தவறு என்றால் விமர்சிக்கட்டும் அவ்வளவுதான்.
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  12. //நமது சமூகமும் நமது மூதாதையர்களும் சிறந்தவர்களாக இருந்திருந்தால் எங்கோ பிறந்த அரபியரான முகமது நபியை வாழ்க்கை வழி காட்டியாக எனது முன்னோர்கள் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.//

    மிக மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நானும் இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நம் மூதாதையர்கள் சமூக ஒடுக்கலுக்குப் பயந்து கிறித்துவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறினார்கள் - ஆனால் நிச்சயமாக மதச் சாரங்களைப் பார்த்தல்ல. அந்த மதத்தை விட இந்த மதம் நல்லது என்று நினைத்தல்ல, இந்த மதத்தில் இருந்தால் எனக்கு மரியாதை; அந்த மதத்தில் இருந்தால் அது இல்லை என்பதே காரணம்.

    அந்த மதத்தில் ‘பிறந்ததால்’ அதன் வழியே வளர்க்கப்பட்டு, வளர்க்கப்பட்ட காரணத்தால் அதை மட்டுமே சிறந்ததென பார்ப்பது பற்றி ஏற்கெனவே பல முறை சொல்லி விட்டேன். ‘பாம்பு தோலும் .. சட்டையும்” என்றும் எழுதிவிட்டேன்.

    என் கருத்தோடு உடன்பட்டமைக்கு நன்றி.

    இன்னொரு கேள்வி: தமிழகத்தில் இந்துக்கள் மத்தியில் சாதிச் சண்டை. இஸ்லாமியர்களுக்குள் சன்னி - ஷியா பிரச்சனைகள்; ஷியா - போரா பிரச்சனைகள் உண்டு. (இதெல்லாம் அல்லா சொல்லவில்லை என்ற பதில் தேவையில்லை) ஆனால் நடைமுறை வாழ்க்கையில் உங்கள் மததிலும் வேற்றுமைகள் உண்டு.

    நம் மூதாதையர் கிறித்துவத்திற்கும், இஸ்லாமிற்கும்) மாறியது = இக்கரைக்கு அக்கரை பச்சை!

    நாலாவது ஐந்தாவது தலைமுறையினரான நமக்குக் கிடைத்த மத உணர்வுகளும், மத அறிவும் நம் முன்னோருக்கு நிச்சயமாக இருந்திருக்க முடியாது. அவர்களுக்கு வாசிக்கும் திறமையே எந்த அளவோ? எல்லாம் காதால் கேட்டு சமூகத்திற்காக மாறிய மாற்றங்கள்.

    ReplyDelete
  13. தருமி!

    //நம் மூதாதையர் கிறித்துவத்திற்கும், இஸ்லாமிற்கும்) மாறியது = இக்கரைக்கு அக்கரை பச்சை!

    நாலாவது ஐந்தாவது தலைமுறையினரான நமக்குக் கிடைத்த மத உணர்வுகளும், மத அறிவும் நம் முன்னோருக்கு நிச்சயமாக இருந்திருக்க முடியாது. அவர்களுக்கு வாசிக்கும் திறமையே எந்த அளவோ? எல்லாம் காதால் கேட்டு சமூகத்திற்காக மாறிய மாற்றங்கள்.//

    உங்கள் கருத்தை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எடுத்த முடிவு சரியான முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்து மதத்தில் சாதிகள் ஒழியப் போவதில்லை.

    'காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். ஆனாலும் பாருங்க.... பனம் பழம் மிகவும் ருசியாகவே இருக்கிறது. மற்ற பழங்களும் பனம் பழம் போல் முன்பு ருசியாகத்தான் இருந்தது. ஆனால் பயிரிட்ட பலர் சரியாக தண்ணீர் பாய்ச்சாமலும், அளவுக்கதிகமாக உரங்களை போட்டதாலும்(வேதங்களில் மனிதக் கரம் புகுதல்) பழத்தின் வீரியத்தையே குறைத்து விட்டனர். இதை நான் பல முறை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.

    ReplyDelete
  14. /உங்கள் கருத்தை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எடுத்த முடிவு சரியான முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்து மதத்தில் சாதிகள் ஒழியப் போவதில்லை.//

    சாதியின் வீர்யம் கொஞ்சம் கொஞ்சமக குறைந்து வருகின்றது என்றாலும் பல படிகள் கடக்க வேண்டியுள்ளது.சாதி தோன்றியது பற்றி ஒரு பதிவு எழுதுவேன் அப்போது இன்னும் நன்றாக அலசுவோம்.

    1.பல தெய்வ வழிபாட்டை விட ஒரு தெய்வ வழிபாடு எவ்வாறு சிறந்தது அல்லது உண்மையாவதற்கு அதிக வாய்ப்பு?

    2.ஒரு தெய்வ வழிபாடு என்றாலும்,இறைவன்,எதிரிறைவன்(ஷைத்தான்) இருவருக்கும் உள்ள தூதர்கள் குழு என்பது இரு தலைவர்கள் மற்றும் அவர்களின் குழுக்களுக்கிடையே நடைபெறும் போராட்டம் என்று கூற இயலுமா?
    இது முழுமையான ஏகத்துவமா?

    வகருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  15. சுவனப்பிரியன்,
    உங்களுக்குக் கிடைத்த ‘பனம்பழம்’ நல்ல ருசி என்கிறீர்கள் நீங்கள். எனக்கு பனம்பழத்தை விட ’பலாப்பழம்’ பிடித்திருக்கும். உங்கள் பழம் எனக்குத் தெரியாது. என் பலாப்பழம் உங்களுக்குப் பிடிக்காது. முள்ளாக இருக்கிறது என்றோ, ’மனிதக் கரம்’ பட்டுக் கெட்டுப் போச்சு என்பீர்கள்.

    சார்வாகன் சொன்னது போல் //கடவுளின் இருப்பே மனிதனின் சிந்தனையில் மட்டுமே என்றாகி விட்ட பின் எதற்கு வீண் சண்டை சச்சரவு // என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
  16. இன்னொன்று சுவனப்பிரியன்... நான் பதிய ஆரம்பித்த காலத்தில் கைபடாத நூல் என்று இஸ்லாமியர் கூறுவதை மறுத்ததில்லை. ஆனால் இன்று உங்களைப் போன்றோரிடம் ‘பேசிய’ பிறகு, வாசித்த பிறகு நீங்கள் சொல்வது ‘மதராஸாவில்’ சொல்லிக் கொடுத்த பாடத்தை நீங்கள் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.

    உங்கள் வாதத்திற்கான எதிர்ப்புகள், சான்றுகள், வரலாறு, பொத்தாம் பொதுவான கேள்விகள் என்று நிறைய தெரிந்து கொண்ட பின், உங்களது 1400 வருட வாதத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லையே.

    ReplyDelete
  17. /எடுத்த முடிவு சரியான முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. //

    உங்கள் முடிவு உங்களுக்கு சரியான முடிவு.
    அது போல் கிறித்துவனாக மாறிய ஒருவருக்கும் (எனக்கும் பல காலம்வரை இருந்த நினைப்புத்தான் அது!) அவரது முடிவே சரியான முடிவு என்று இருக்குமல்லவா? பனம்பழமா, பலாப்பழமா ...?

    ReplyDelete
  18. வணக்கம்,

    உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    ReplyDelete
  19. // ஆனால் பயிரிட்ட பலர் சரியாக தண்ணீர் பாய்ச்சாமலும், அளவுக்கதிகமாக உரங்களை போட்டதாலும்(வேதங்களில் மனிதக் கரம் புகுதல்) பழத்தின் வீரியத்தையே குறைத்து விட்டனர். இதை நான் பல முறை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.//
    மதங்களை ஆக்கபூர்வமாக விமர்சிப்பவர் இனையத்தில் மிக குறைவு.இதனை பல் மாறுபட்ட ஒலியில்(சிறிதளவே) ஓதப்படும் குரான்கள் உண்டு என்று முன் பதிவுகளில் காட்டியுள்ளோம்.வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்க நாடுகளில் பயன் படுத்தப்படுகிரது என்பதற்கு அக்குரானின் மின் பிரதியும் அளித்தோம் மாற்றமில்லாதது என்றால் எப்படி.
    குயுஃபிக் எழுத்து முரையில் இருந்து உயிரெழுத்துகளை பிரிக்க கோடு புள்ளி வைத்தார்கள் என்று அறிந்த பிரகும் கை படாமலே கோடு புள்ளி வைக்க முடியுமா?
    பழைய குரான் பிரதிகள் பற்றி சில புத்தகங்கள் மற்றும் குரான் மறுமலர்ச்சி மொழிபெயர்ப்பு இந்த இணைப்பில் தருகிறேன்.பிடித்தால் பாருங்கள்.


    http://www.scribd.com/doc/24321463/Quran-Manuscripts-Papyrus

    http://www.scribd.com/doc/45810311/Quran-Manuscsipts-at-Sotheby-s

    http://www.scribd.com/doc/25976796/Quran-Manuscripts

    http://www.scribd.com/doc/46524104/21055367-Quran-a-Reformist-Translation

    நான் மதங்களை விமர்சிப்பது அது மனிதர்களை பிரிப்பதும்,மனிதத்துவத்தின் பன்முகத் தன்மையை மறுதலிப்பதும்தான்.

    மதவாதிகளுக்கு நான் சொல்வது உங்கள் மதத்தில் அனைவருக்கும் கல்வி,சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் திருப்தியடைந்து விட்டார்கள்,அனைவரும் மிக மகிழ்ச்சியாக,சச்சரவுகளின்றி இருக்கிறார்கள் என்றால் அதனை மற்றவர்கள் நிச்சயம் பரிசீலிப்பார்கள்.

    கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  20. /உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்./
    நன்றி தோழர் சூப்பர் லின்க்ஸ்

    ReplyDelete
  21. சார்வாகன்!

    //100,000 riyals if the victim is a Muslim man
    50,000 riyals if a Muslim woman
    50,000 riyals if a Christian or Jewish man
    25,000 riyals if a Christian or Jewish woman
    6,666 riyals if a Hindu man
    3,333 riyals if a Hindu woman.
    The amount of compensation is based on the percentage of responsibility.
    Blood money is to be paid not only for murder, but also in case of
    unnatural death, interpreted to mean death in a fire, industrial or road
    accident, for instance, as long as the responsibility for it falls on the
    causer.
    பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன்னிப்பது நல்லது என்றாலும் ஆனால் மத ரீதியாக உயிரின் விலை நிர்ணயித்து உள்ளது எனக்கு சரியாக படவில்லை.//

    ஒரு வகையில் மனித உயிர்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக இந்த ஷரியத் சட்டம் இருப்பது உண்மைதான். இதை இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு பார்ப்போம். ஒரு முஸ்லிம் வட்டி வாங்கக் கூடாது. 'வட்டியை உண்போர் மறுமை நாளில் சைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்' -குரஆன் 2:275 வட்டி எவ்வளவு கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது என்பதை மேற்கண்ட வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதே போல் ஒரு முஸ்லிம் தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஒருவர் முஸ்லிமாக இருப்பதனால் தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்துகிறார். தன்னிடம் உள்ள சேமிப்புகளை அவர் வட்டிக்கும் விடுவதில்லை. இதனால் செல்வம் ஒருவரிடமே குவிந்தில்லாமல் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ஆனால் ஒரு இந்துவோ கிறித்தவரோ யூதரோ அரசுக்கு பணம் கட்ட வேண்டியதில்லை. தனது சேமிப்பை தாராளமாக வட்டிக்கும் விடலாம். இங்கு சவுதியில் முழு நேர தொழிலாகவே வட்டிக்கு விட்டு உழைக்காமல் சம்பாதிக்கும் பல இந்து நண்பர்களை பார்த்திருக்கிறேன். இந்து நண்பர் பார்வையில் வட்டிக்கு விடுவது அவர் மதத்தைப் பொறுத்தவரை தவறில்லை.

    எனவே ஒரே சம்பளத்தில் வேலை செய்யும் ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் பலனடைவதில் சேமிப்பதில் வித்தியாசப்படுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் 10 வருடம் வேலை செய்து அந்த இருவரின் சேமிப்பையும் கணக்கிட்டால் முஸ்லிமின் சேமிப்பு குறைவாகவே இருக்கும். ஏனெனில் மதக் கட்டளைகளால் அவர் தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை ஏழை வரியாக அரசுக்கு செலுத்துகிறார். இந்த நேரத்தில் ஒரு விபத்தில் அந்த இருவரும் இறந்தால் இருவருக்கும் சமமாக பணம் பங்கிடுவது நியாயமாகுமா?

    அதே போன்றுதான் பெண்களும். ஒரு குடும்ப தலைவன் இறந்தால் அவனது வருமானத்தை நம்பியிருக்கும் பிள்ளைகள் மனைவி தாய் தந்தை போன்றோர் பாதிப்படைவர். ஆனால் ஒரு பெண் இறந்தால் அந்த குடும்பத்துக்கு அவளால் வருமான இழப்பு ஏற்படுவதில்லை. ஏனெனில் பெண்களுக்கு உணவு உடை இருப்பிடம் கொடுப்பது கணவனின் மற்றும் தந்தையின் கடமையாகிறது. எனவேதான் இங்கும் தேவையை அனுசரித்து இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

    ஒரு மரத்தை சாய்த்தால் கூட அதற்கு 1000 ரியால் (12000 ரூபாய்) அபராதம் இங்கு. (பா.ம.க ராமதாஸ் கவனிக்க :-))

    இது போன்று விபத்துகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற ஏற்பாடு நம் நாட்டில் கூட கிடையாது. இந்திய அரசுதான் இழப்பீட்டுத் தொகை தருகிறது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

    அடுத்து பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் கூத்துகள் அவர்கள் இஸ்லாத்தை விளங்காததனால் வருவது. எப்படி இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி மோடி காலத்தை ஓட்டுகிறாரோ அதைப் போல. இஸ்லாமிய சட்டத்தை கூடியவரை முறையாக பயன் படுத்தி இன்று வரை சிறந்து ஆட்சி செய்யும் சவுதியை ஏன் மறந்து விடுகிறீர்கள்? இங்கு நமது இந்து நண்பர்கள் குடும்பத்தோடு 10 வருடம் 20 வருடம் என்றெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களே! எனவே இஸ்லாம் வளர்ந்தால் இந்து மதத்துக்கு ஆபத்து என்பதெல்லாம் வர்ணாசிரமத்தை காக்க பாடுபடுவர்கள் பரப்பும் பிழையான செய்தி.

    ReplyDelete
  22. //அதே போல் ஒரு முஸ்லிம் தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஒருவர் முஸ்லிமாக இருப்பதனால் தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்துகிறார். //
    நண்பர் சுவன பிரியன்,
    நீங்கள் உங்கள் மதத்தில் உள்ள பல நல்ல விஷயங்களை கடைப்பிடித்து கொண்டிருக்கலாம். ஆனால் அனைவருமே அப்படித்தான் இருப்பார்களென்று எப்படி கூற முடியும்?
    சவுதியில் பணியாற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் வட்டி வாங்குவதில்லை(கொடுப்பதில்லை) என்று நீங்கள் கூறுவது உண்மையாக் இருக்கும் பட்சத்தில் கூட இந்த பார பட்சம் தவறானது.
    மத நம்பிக்கை உள்ளவர் அனைவருமே காணிக்கை,தான தருமங்கள் செய்வதுண்டு.

    கிறித்தவர் ,இந்து இருவரும் வட்டி வாங்குகின்ற்னர் அதில் என்ன வித்தியாசம்?

    இது சவுதி அரசில் சம்பளம் கூட உங்கள் கடவுச் சீட்டை பொறுத்தே அமையும் என்பதும் உண்மையா இல்லை மறுக்கப் போகிறீர்களா?

    சவுதி வங்கிகளில் வட்டிக்கு கடன் கொடுக்கிரார்கள் என்பது தெரியுமா?

    சவுதியை நீங்கள் மண்ணுலக் சொர்க்கம் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.அதில் வாழும் மக்களும் வறுமை.வேலை இல்லாத் திண்டாட்டம் முதலிய பிரச்சினைகளில் உள்ளார்கள். சவுதி பற்றி எழுத விரும்பினால் நிறைய விஷயம் உண்டு தேவைப் படலாம் என்ரே எண்ணுகிறேன்.

    சவுதியின் செயல்களில் மதத்தை விட அரசியலே நிறைய இருப்பதாக உறுதியாக கூற முடியும்.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________

    மனித சமுதாயம் எந்த கால கட்டத்திலும்,எந்த இடத்திலும்,எல்லா மக்களும் நிம்மதியாக இருந்ததாக காட்ட முடியாது.மனித சமுதாயத்தின் விலங்குகளை உடைக்க பல் உயிர்களை பலி கொடுத்தே முன்னேறியிருக்கிறது.

    மதம் என்ற போர்வையில் நடக்கும் ஆக்கிரமிப்புகளும்,கொள்ளைகளும் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் பார்க்கலாம்.எந்த மதமும் விதி விலக்கு அல்ல.

    மதம் என்பது ஒரு தனி மனிதனின் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு மனிதனை(நாட்டை) மத குருக்களும்,மத புத்தகங்களும் வழி நடத்தக் கூடாது.

    ___________

    ஒரு மதம் சார்ந்த அரசு(உ.ம் சவுதி) எப்படி மதத்தை பயன் படுத்துகிற‌தோ அது போலவேதான் இந்துத்வாவாதிகளும் செயல் படுகின்றனர்.அவர்கள் இருவரும் சொல்லும் பொதுவான விஷயங்கள்.

    1.நாங்கள் மதத்தின்,பின் பற்றுபவர்களின் பாது காவலர்கள்.

    2. எங்கள் மத புத்தகங்களை,மத பெரியவர்களை யாரும் விமர்சிக்க கூடாது.

    3. எங்கள் ஆட்சியில் நம் மதத்திற்கு முன் உரிமை வழங்கப் படும்.பிற மததினரின் உரிமைகளை பறிப்போம்.

    4. மதத்தில் உள்ள குறைகள் எல்லாம் பிற‌ மதத்தினரின் சதி.

    5. நாம் சய்யும் வன்முறை எல்லாம் தற்காப்பு.இதை செய்யாவிட்டால் நாம் அழிந்து விடுவோம்.

    6 மத ரீதியான ஆட்சி மட்டுமே நம் கலாச்சாரத்தை பாதுகாக்கும்,மத சார்பின்மை என்பது பிற‌ மத்த்தவருக்கே சலுகைகள் அதிகம்.

    7. பெண்கள் கலாச்சாரத்தின் படியே நடக வேண்டும்.அதற்கு நாமே பாதுகாவலர்கள்.

    8. நம் சட்டங்கள் புனிதமானவை,இடங்கள் மிக் புனிதமானது,பிற மத்த்தவர் வரக் கூடாது.

    இன்னும் நிறைய இருக்கு.....................

    ReplyDelete
  23. //மதம் என்பது ஒரு தனி மனிதனின் ஆன்மீக சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு மனிதனை(நாட்டை)மத குருக்களும்,மத புத்தகங்களும் வழி நடத்தக் கூடாது//

    மிகச் சரியான வாதம் இதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

    ReplyDelete
  24. சார்வாகன்!

    //மனித சமுதாயம் எந்த கால கட்டத்திலும்,எந்த இடத்திலும்,எல்லா மக்களும் நிம்மதியாக இருந்ததாக காட்ட முடியாது.மனித சமுதாயத்தின் விலங்குகளை உடைக்க பல் உயிர்களை பலி கொடுத்தே முன்னேறியிருக்கிறது.

    மதம் என்ற போர்வையில் நடக்கும் ஆக்கிரமிப்புகளும்,கொள்ளைகளும் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் பார்க்கலாம்.எந்த மதமும் விதி விலக்கு அல்ல.

    மதம் என்பது ஒரு தனி மனிதனின் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு மனிதனை(நாட்டை) மத குருக்களும்,மத புத்தகங்களும் வழி நடத்தக் கூடாது.//

    உங்கள் வாதப்படி உலகில் நிம்மதியாக வாழ்ந்த சமூக கட்டமைப்பே எங்கும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். உலக மதங்களையும் தூர வைத்து விடுவோம். இவை எல்லாவற்றையும் தவிர்த்து புதிய வாழ்க்கை முறை ஒன்றை தெரிவியுங்களேன். அது எப்படி இருக்க வேண்டும்? யார் அதன் தலைவராக இருக்க வேண்டும். மதங்களை தாண்டி அப்படி ஒரு வாழ்வு முறை வெற்றி பெற்ற நாடு எது? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  25. சார்வாகன்!

    //மதங்களை ஆக்கபூர்வமாக விமர்சிப்பவர் இனையத்தில் மிக குறைவு.இதனை பல் மாறுபட்ட ஒலியில்(சிறிதளவே) ஓதப்படும் குரான்கள் உண்டு என்று முன் பதிவுகளில் காட்டியுள்ளோம்.வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்க நாடுகளில் பயன் படுத்தப்படுகிரது என்பதற்கு அக்குரானின் மின் பிரதியும் அளித்தோம் மாற்றமில்லாதது என்றால் எப்படி.
    குயுஃபிக் எழுத்து முரையில் இருந்து உயிரெழுத்துகளை பிரிக்க கோடு புள்ளி வைத்தார்கள் என்று அறிந்த பிரகும் கை படாமலே கோடு புள்ளி வைக்க முடியுமா?//

    திரும்பவும் பழைய வாதத்தையே வைக்கிறீர்கள். குரஆன் புத்தக வடிவில் வரவில்லை. ஒலி வடிவமாகத்தான் குரஆன் அருளப்பட்டது. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஓலைச் சுவடிகளில் எழுதிய எழுத்து முறைக்கும் நீங்களும் நானும் பயன்படுத்தும் தற்போதய எழுத்து முறைக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? இதனால் திருக்குறளின் கருத்துக்களில் ஏதாவது மாற்றங்கள் வந்ததா? இல்லையே! இதே அளவு கோலை குர்ஆனுக்கும் வைத்துப் பாருங்கள். குர்ஆனை முழுவதும் மனனம் செய்த எத்தனையோ நபித் தோழர்கள் ஜனாதிபதி உஸ்மான் தொகுத்த குர்ஆனை சரிபார்த்தனர். இதற்காக குழுவே நியமிக்கப்பட்டது. அன்று எவரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

    மொழியின் வளர்ச்சிக்காக எழுதும் முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வருவது உலக மரபு.

    தருமி!

    //உங்கள் முடிவு உங்களுக்கு சரியான முடிவு.
    அது போல் கிறித்துவனாக மாறிய ஒருவருக்கும் (எனக்கும் பல காலம்வரை இருந்த நினைப்புத்தான் அது!) அவரது முடிவே சரியான முடிவு என்று இருக்குமல்லவா? பனம்பழமா, பலாப்பழமா ...?//

    பலாப் பழத்தை அப்படியே சாப்பிட முடியுமா? மேலே உள்ள முற்களை(ஏசுவையும், ஜிப்ரீலையும், மேரியையும் கடவுளாக்கியது) எடுத்து பலாச் சுலைகளை(ஏசுநாதர் போதித்த போதனைகளை-பவுல் போதித்தவைகளை நீக்கி) எடுங்கள். எனக்கும் தாருங்கள். நானும் சாப்பிடுகிறேன்.

    ஆஹா...அப்போது என்ன சுவையாக இருக்கும் தெரியுமா?

    ReplyDelete
  26. தருமி,சார்வாகன்!

    நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் கட்டுரையாளர் எந்த அளவு விபரம் உள்ளவர் என்பதை

    இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  27. //குரஆன் புத்தக வடிவில் வரவில்லை. ஒலி வடிவமாகத்தான் குரஆன் அருளப்பட்டது. //

    அதாவது முதலில் என்னவாக குரான் இருந்ததோ அதனை சரி பார்க்கவே முடியாது.ஆதரம் இல்லாதது.

    ஒரு நம்பிக்கை மட்டும்தானா,இல்லை குரான் ஒலி வடிவிலதான் வழங்கப்பட்டது என்பதற்கு குரானில் இருந்தா,சமகால ஆதாரமாக எதனையாவது காட்டமுடியுமா?

    //திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஓலைச் சுவடிகளில் எழுதிய எழுத்து முறைக்கும் நீங்களும் நானும் பயன்படுத்தும் தற்போதய எழுத்து முறைக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா//

    குறரருளுக்கும் ,குரானுக்கும் பல வித்தியாசம் உண்டு,குறளுக்கு முன்பே தமிழ் இலக்கணம் இருந்தது.அந்த இலக்கணத்திற்கு பொருந்தும் வண்ணமே க்றல் எழுதப் பட்டது. திருக்குறளில் உள்ள எந்த வார்த்தையும் அத்ற்கு முந்திய இலக்கியங்களில் வார்த்தையோடு ,அதே பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளன.

    குரானுக்கு முந்தி இந்த வார்த்தைகளை இதே பொருளில் பயன் படுத்திய அரபி இலக்கியம் ஒன்று கூற முடியுமா?.இது சம்பந்தமாக ஏதேனும் ஆய்வு கட்டுரை காட்ட முடியுமா?
    இஸ்லாமின் அடித்தளமே இந்த ஒரு வார்த்தைகளின் அர்த்தத்திலேயே அடங்கி இருக்கிறதி.
    இந்த 33.40 ஹாத்துமான் நபி என்பது.ஹாத்துமான என்பதற்கு இறுதி என்ற பொருள் முந்தைய இலக்கியங்களில் பயன் படுத்தப்பட்டு இருந்தால் மட்டுமே ,
    இது சரியாகும்.
    __________
    //குர்ஆனை முழுவதும் மனனம் செய்த எத்தனையோ நபித் தோழர்கள் ஜனாதிபதி உஸ்மான் தொகுத்த குர்ஆனை சரிபார்த்தனர். இதற்காக குழுவே நியமிக்கப்பட்டது. அன்று எவரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.//

    இந்த குழு சரி பார்த்த விவரங்கள்.எந்த சசுரா யார் யாரிடம் இருந்து பெறப்பட்டது,யார் எழுதியது,எபோது போன்ற விவரங்கள் பாஅதுகாக்கப் பட்டு இருக்கவேண்டும்.
    ஹ‌ஃப்சாஅவின் குரானையே உதுமான் அழித்து விட்டார்.இது சந்தேகத்தையே ஏற்படுத்தும்.
    _______

    //மொழியின் வளர்ச்சிக்காக எழுதும் முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வருவது உலக மரபு. //

    குரான் வழங்கப்படும் போது அரபி எழுத்து வளர்ச்சி அடையவில்லை. குரானின் எழுத்து முறை மாற்றம் அடந்துவிட்டது என்பதை ஒத்து க்கொள்கிறீர்கள்.

    //உங்கள் வாதப்படி உலகில் நிம்மதியாக வாழ்ந்த சமூக கட்டமைப்பே எங்கும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். உலக மதங்களையும் தூர வைத்து விடுவோம். இவை எல்லாவற்றையும் தவிர்த்து புதிய வாழ்க்கை முறை ஒன்றை தெரிவியுங்களேன். அது எப்படி இருக்க வேண்டும்? யார் அதன் தலைவராக இருக்க வேண்டும். மதங்களை தாண்டி அப்படி ஒரு வாழ்வு முறை வெற்றி பெற்ற நாடு எது? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.//
    ஏன் (இந்த்ய) தமிழ் நாடு இல்லையா.நமது நாட்டில் ஊழல் தவிர குறை இருப்பதாக தெரியவில்லை.மத ,மொழி சிறுபான்மையினர் மிக கவுரவமாக்வும்,பாதுகாப்பாகவும் வாழும் நாடு. தமிழர்களின் இரத்திலேயே மத சார்பின்மை ஓடுகிறது.

    சாதிரீதியாக சில சம்பவங்கள் நடந்தாலும் யாரும் அதனை எங்கள் புத்தகத்தில் எழுதியுள்ளது என்று நியாயப் படுத்த மாட்டார்கள். செய்தவனை தண்டிக்க அரசியல் மட்டுமே தடையாடய் இருக்கிறது.

    சவுதி,பஹ்ரைனில் வாழும் ஷியாக்களை விட ,இஸ்லாமிய நாடுகளில் வாழு அஹமதியாக்களை விட ,இராக்கில் வாழும் குர்துகளை விட தமிழ் நாட்டில் அனைத்து சிறுபான்மையினரும் நன்றாக்வே இருக்கிறார்கள்.

    அவர்களுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தருவதை பலரும் ஆதரிக்கின்றனர். இந்த தேர்தலைல் கூட பாஜகாவுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை.

    மனித நேயத்தின் முன் மதம் இரண்டாம் பட்ட்சம்தான் இங்கே.

    ReplyDelete
  28. சார்வாகன்!

    //அதாவது முதலில் என்னவாக குரான் இருந்ததோ அதனை சரி பார்க்கவே முடியாது.ஆதரம் இல்லாதது.

    ஒரு நம்பிக்கை மட்டும்தானா,இல்லை குரான் ஒலி வடிவிலதான் வழங்கப்பட்டது என்பதற்கு குரானில் இருந்தா,சமகால ஆதாரமாக எதனையாவது காட்டமுடியுமா?//

    'இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது'
    -குர்ஆன் 29:49
    குர்ஆன்வசனங்களை முகமது நபி காலத்திலேயே அபுபக்கர், உமர், உதுமான், அலீ போன்றோர் முழு குர்ஆனையும் மனனமிட்டு இருந்தார்கள். அதையே இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்.

    'முஹம'மதே! உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர்'
    -குர்ஆன் 87:6
    முகமது நபியின் உள்ளத்தில் குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான். எனவெ சில வசனங்களை மறந்திருப்பார்கள் என்று சொல்லவும் இங்கு இடமில்லை. மேலும் கிட்டத்தட்ட 26 நபித் தோழர்கள் குர்ஆனை மனனம் செய்து உடன் எழுதியும் வைத்தார்கள். அவ்வப்பொது இறங்கும் வசனங்களை தோல்களிலும், எலும்புகளிலும், மரப்பட்டைகளிலும் மேற்சொன்ன நபித்தோழர்கள் குறித்தும் வைத்தார்கள்.

    //இந்த குழு சரி பார்த்த விவரங்கள்.எந்த சசுரா யார் யாரிடம் இருந்து பெறப்பட்டது,யார் எழுதியது,எபோது போன்ற விவரங்கள் பாஅதுகாக்கப் பட்டு இருக்கவேண்டும்.
    ஹ‌ஃப்சாஅவின் குரானையே உதுமான் அழித்து விட்டார்.இது சந்தேகத்தையே ஏற்படுத்தும்.//

    மீண்டும் தவறான தகவல். முகமது நபியின் தோழர்கள் 24 மணி நேரமும் அவருடனே இருந்ததில்லை. காலையில் இருப்பவர் மாலையில் வேலைக்கு சென்று விடுவார். மாலையில் இருப்பவர் காலையில் வேலைக்கு சென்று விடுவார். முறை வைத்து அந்த தோழர்கள் இஸ்லாத்தை கற்றார்கள். இறை வசனம் இறங்கும்போது இந்த தோழர்கள் குறித்து வைப்பார்கள் என்று முன்பே பார்த்தோம். இவ்வாறு குறித்து வைக்கும் போது சில அத்தியாயங்கள் மாத்திரம் இப்னு அப்பாஸிடம் இருக்கும். வேறு சில அத்தியாயங்கள் அபுஹூரைராவிடம் இருக்கும். இன்னும் சில அத்தியாயங்கள் அன்னை ஆயிஷாவிடம் இருக்கும். இஸ்லாம் பல நாடுகளுக்கும் வளர்ந்தவுடன் பல மக்களுக்கும் குர்ஆனின் தேவை அதிகரித்தது. எனவே உஸ்மான் பலரிடமும் சிறு சிறு அத்தியாயங்களாக இருந்த குர்ஆன் ஒன்று திரட்டினார். குர்ஆனை மனனம் செய்திருந்த அனைத்து நபித் தோழர்களையும் அழைத்து சரி பார்த்து அனைவரின் ஒப்புதலோடு குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

    அதில் இரண்டு பிரதிகளில் ஒன்று தாஷ்கண்ட் மியூஸியத்திலும், மற்றொன்று இஸ்தான்புல் மியூஸியத்திலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் கையில் உள்ள குர்ஆனை அந்த மூலப்பிரதியோடு ஒப்பிட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

    தோல்களிலும், எலுமபுகளிலும் சிறு சிறு அத்தியாயங்களாக எழுதி பலரிடமும் இருந்த குர்ஆன் ஆவணங்களை குழப்பம் வர வேண்டாம் என்று கருதி அனைத்தையும் கொளுத்திவிட ஆணையிடுகிறார் உஸ்மான். இப்படி செய்யாமல் இருந்திருந்தால் கிறித்தவர்களைப் போல் நாட்டுக்கு ஒரு பைபிள் குர்ஆனிலும் செயல்படுத்தப்பட்டிருக்கும். உங்களைப் போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கும் மிகுந்த வசதியாய் போயிருக்கும். அதற்க்கெல்லாம் முடிவு கட்டிய உஸ்மான் பாராட்டுக்குரியவர்.

    ReplyDelete
  29. //26 நபித் தோழர்கள் குர்ஆனை மனனம் செய்து உடன் எழுதியும் வைத்தார்கள். //

    இதை நம்புவதை விட ஆச்சரியப்படத்தான் முடிகிறது. மனித எல்கைகளுக்கு அப்பால் உள்ளது!

    ReplyDelete
  30. உலகம் முட்டை மாதிரி இருக்கிறது - இதைப் பற்றி ஒன்றும் சுவனப்பிரியன் சொல்லவே இல்லையே!

    ReplyDelete
  31. மதவாதிகளுக்கு 60 கேள்விகள்.
    http://www.bible.ca/islam/islam-questions.htm

    ReplyDelete
  32. நண்பர் சுவனப் பிரியன்
    கிறித்தவர்களின் வேதம் குறித்து உங்கள் கருத்துகளை இங்கு பரிமாறிக் கொள்ளலாம்.
    http://isakoran.blogspot.com/

    ReplyDelete
  33. //அதில் இரண்டு பிரதிகளில் ஒன்று தாஷ்கண்ட் மியூஸியத்திலும், மற்றொன்று இஸ்தான்புல் மியூஸியத்திலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் கையில் உள்ள குர்ஆனை அந்த மூலப்பிரதியோடு ஒப்பிட்டும் பார்த்துக் கொள்ளலாம்.//

    சமர்கண்ட் MSS (குர்‍ஆன்) வுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு - பின் இணைப்பு A - பாகம் 1

    http://isakoran.blogspot.com/2008/09/mss-1.html

    ReplyDelete
  34. தருமி!

    //உலகம் முட்டை மாதிரி இருக்கிறது - இதைப் பற்றி ஒன்றும் சுவனப்பிரியன் சொல்லவே இல்லையே!//

    'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
    -குர்ஆன் 79:30

    'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும். ஜாகிர் நாயக்கும் இதை ஒத்துக் கொள்கிறார்.

    மேலதிக விபரமாக தனது சொந்த விளக்கமாகத்தான் 'முட்டை' வடிவிலானது என்ற கருத்தை வைக்கிறார் ஜாகிர் நாயக். இவர் ஒரு டாக்டர். அறிவியல் அறிஞர் கிடையாது. எனவே இவரது கருத்தில் தவறும் இருக்கலாம்.

    'சார்பியல்' தத்துவத்தை சொன்னபோது ஐன்ஸ்டீனே தவறிழைக்கவில்லையா? 1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் 'தான் செய்த மாபெரும் தவறு ' என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதி பலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!
    ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.


    'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
    -விஞ்ஞானி ஹப்பிள்.

    இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா திரு தருமி!

    'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!

    //26 நபித் தோழர்கள் குர்ஆனை மனனம் செய்து உடன் எழுதியும் வைத்தார்கள். //- -சுவனப்பிரியன்

    இதை நம்புவதை விட ஆச்சரியப்படத்தான் முடிகிறது. மனித எல்கைகளுக்கு அப்பால் உள்ளது!- -தருமி//

    இதை நம்பமுடியவில்லையா! எங்கள் ஊரில் வருடத்திற்கு 5 அல்லது ஆறு மாணவர்கள் குர்ஆனை முழுவதும் மனனம் செய்தவர்களாக மதரஸாக்களிலிருந்து வெளியாகின்றனர். வருடா வருடம் இதற்காக பட்டமளிப்பு விழாக்களே நடைபெறும். தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அந்த சிறுவர்களே குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யும் போது அபுபக்கருக்கும் உமருக்கும் உஸ்மானுக்கும் அலிக்கும் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.

    பிறகு என்ன சார்! இனி இறைவனை ஒத்துக் கொள்ளலாமா! வழக்கம் போல இதை மறந்து விட்டு சொர்க்கம்...நித்திய கன்னிகைகள் என்று போவீர்கள். என் பின்னூட்டங்கள் ஒரு தொடர்கதையாகி விட்டது.:-( ஓ.கே இந்த விவாதங்களினால் நானும் சில விபரங்களை தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  35. குரானை யாரும் முழுதும் மனம் செய்து இருக்கவில்லை 9 ஆம் சூராவின் கடைசி இரு வசனங்களை ஒருவ்ரிடம் இருந்து மட்டுமே பெற்றதாக ஹதிது கூறுவதை கேளுங்கள். ஹஃப்சாவின் குரான் முழுமை பெற்றது என்று ஒத்துக் கொண்டால் அதனை உத்மான் ஏன் அழிக்க வேண்டும்?.ஹஃப்சாவின் குரானும்,உத்மானின் குரானும் வெவேறாக இருந்த்தாலா?


    4986. (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்
    யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) .

    (பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129)
    (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.
    Volume :5 Book :66
    _____________

    ReplyDelete
  36. மத நூல்களில் அறிவியல் கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பது இயற்கையானது,ஆனால் அதுவே அறிவியல் ஆகாது. வேதங்கள் எனும் மத நூல்களை கடவுள் அருளினார் என்பதில் தான் அதன் மதிப்பைக் கூட்டுவதற்கும் மிகைப்படுத்திக் கூறுவதற்கும் இடம் தந்துவிடுகிறது. கடவுள் தந்தார் என்கிற ஒரு பொய்யில் தான் வேதங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுவருகிறது,இல்லையேல் என்றோ குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கும். திருவள்ளுவர் தன் குறலை கடவுள் தந்ததாகக் கூறியிருந்தால் அதுவும் இன்று புனித நூலாக்கப்பட்டிருக்கும்,அவர் உண்மையைச் சொன்னதினால் சற்று குறைவாக மதிப்பிட வைத்துவிட்டது. புளுகினால் தான் புனிதமாகும் என்று அன்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

    ReplyDelete
  37. நண்பர் யாசிர்
    உலகம் அறிவியலின் துணையால் முன்னேற்றப்ப பாதையில் செல்லும் போது மதத்தின் பெயரால் பலதார ம்ணத்தை ,மனித உரிமை மீறல்களை(அடுத்த பதிவில் உலகில் மனிதாகா உள்ளவருக்கு உள்ள உரிமைகள் பற்றிய பிரகடனம் உள்ளது) நிய்யப் படுத்தினால் அவர்கள் கூறும் ஆதார மூலங்களை கேள்விக்குள்ளக்கும் அவசியம் எழுகின்றது.

    ஒருவன் காம இச்சைக்காக நான்கு திருமணம் செய்வதை மத சட்டம் அனுமதிக்கும் என்றால் நியாமான் எவருக்கும் சரியாக படாது.நான்கு(நான்காவது) திருமணம் செய்த ஆணோ, பெண்ணோ அது எப்படி சிற‌ந்தது என்று பதிவு எழுதினால் விவாதிக்க நலமாக இருக்கும்.ஒரு திருமணம் செய்த இஸ்லாமிய நண்பர்கள் பல திருமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஒரு நகை முரண்.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  38. சார்வாகன்!

    //நான்கு(நான்காவது) திருமணம் செய்த ஆணோ, பெண்ணோ அது எப்படி சிற‌ந்தது என்று பதிவு எழுதினால் விவாதிக்க நலமாக இருக்கும்.ஒரு திருமணம் செய்த இஸ்லாமிய நண்பர்கள் பல திருமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஒரு நகை முரண்.//

    //ஆனால் சுவனப் பிரியன் ,பி.ஜே உட்பட 99.9% தமிழ் இஸ்லாமியர்கள் ஒரு தாரம் உடையவர்கள் ஏன் இப்படி?.99.9 % பேர் இஸ்லாமை விட ந்ன்னெறி கொண்டவர்கள் அப்ப்டித்தானே!!!!.0.1% ஆட்களுக்காக மொத்த சமுதாயமும் ஏன் பேச வேண்டும்?
    அதனையும் கண்கானித்து ஒழுங்கு செய்தால்தானே நல்லது.//

    சுவாரஸ்யமான கேள்வி!

    நான் திருமணம் முடித்த நாளிலிருந்து இன்று வரை எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து அதற்கு காரணம் என் மனைவி என்று மருத்துவர் சொல்ல வேண்டும். இரண்டாவதாக என் மனைவி தாம்பத்திய உறவுக்கு உடல் ரீதியாக தகுதியில்லாதவராக இருக்க வேண்டும்.

    கல்யாணம் ஆன முதல் வருடமே குழந்தை பிறந்தது. தாம்பத்திய உறவிலும் எந்த சிக்கலும் இல்லை. திருப்தியான வேலை. இறைநம்பிக்கையோடு கூடிய மனைவி மக்கள் சொந்தபந்தங்கள் என்று சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நான் இரண்டாம் திருமணம் மூன்றாம் திருமணத்தைப் பற்றி சிந்திப்பது தவறல்லவா!

    மேலே சொன்ன குறைகள் ஏதும் என் மனைவியிடத்தில் இருந்தால் நான் கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்திருப்பேன். ஏனெனில் எனது மார்க்கம் இதற்கு அனுமதி அளிக்கிறது. இதை எல்லாம் விளக்கிச் சொல்லி என் மனைவியின் சம்மதத்தோடு நான் இரண்டாம் திருமணம் முடித்திருப்பேன். அதற்க்கெல்லாம் அவசியம் இல்லாமல் செய்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

    மேலும் குறை என்னிடம் இருப்பதாக மருத்துவர் சொன்னால் அந்த நிமிடமே என் மனைவியை பிரிந்து அவருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க முயற்ச்சிப்பேன். என்னால் அந்த பெண்ணின் வாழ்வு பாழ்படக் கூடாதல்லவா!

    'கல்லானாலும் கணவன்: புல்லானாலும் புருஷன்', 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்பதெல்லாம் இன்று காணாமல் போய் விட்டது.

    மேலும் பலதார மணம் என்பது தேவையுடையவர்களுக்கு உள்ள அனுமதிதானேயொழிய கட்டாய கடமை கிடையாது.

    //ஷாரியாவில் உள்ள சில இக்காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை சுட்டிக் காட்டி மாற்றுங்கள் என்றே கேட்கிறோம்.//

    ஷாரியாவில் வேண்டுமானால் குர்ஆனுக்கு மாற்றமில்லாமல் சில திருத்தங்கள் கொண்டு வரலாம். ஆனால் பலதார மண அனுமதியை தடை செய்ய முடியாது. ஏனெனில் அது குர்ஆனில் உள்ள சட்டம். இறை சட்டத்தை மனிதர்கள் எப்படி மாற்ற முடியும்? விருப்பமில்லாதவர்கள் தங்கள் பெண்களை இரண்டாம் தாரமாகவோ மூன்றாம் தாரமாகவோ திருமணம் முடித்து கொடுக்காமல் தடை செய்து கொள்ளலாம். மேலும் இன்றைய விலைவாசியில் ஒரு மனைவியோடு வாழ்வதே பெரும்பாடாக இருக்கிறது. இதில் மற்ற திருமணங்களை பற்றி சிந்திக்க நேரம் ஏது?

    நமது தமிழக முதல்வர் இரண்டு மனைவியோடு சந்தோஷமாக இல்லையா? நமது முன்னால் முதல்வர் இன்றும் செல்வியாக இருந்து கொண்டிருப்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயமல்லவா! திருமணம் முடிக்காமல் அந்தரத்தில் விட்டுச் சென்றது எம்.ஜி.ஆர் செய்த தவறல்லவா! இவை எல்லாம் இந்திய சட்டத்தில் உள்ள குளறுபடிகளே!

    ReplyDelete
  39. யாசிர்!

    முதல்ல இது போல் முஸ்லிம் பெயர்களில் ஒளிந்து கொண்டு பின்னூட்டம் இடுவதை தவிருங்கண்ணா! ஏன்னா... நீங்க யாருன்னு எல்லோருக்கும் தெரியும்.:-)

    //திருவள்ளுவர் தன் குறலை கடவுள் தந்ததாகக் கூறியிருந்தால் அதுவும் இன்று புனித நூலாக்கப்பட்டிருக்கும்,அவர் உண்மையைச் சொன்னதினால் சற்று குறைவாக மதிப்பிட வைத்துவிட்டது. புளுகினால் தான் புனிதமாகும் என்று அன்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.//

    'குறல்' இல்லை 'குறள்'


    அவர் புளுகினாலும் இங்கு நம்புவதற்கு யாரும் தயாரில்லை. ஏனெனில் 'திங்களை பாம்பு கொண்டற்று' , 'பெய்யென பெய்யும் மழை' 'விலங்குகள் கை கூப்பி தொழும்' என்று எண்ணற்ற இடங்களில் அறிவியலுக்கு முரண்படுகிறார் வள்ளுவர். இது பற்றி விரிவாக எனது பழைய பதிவுகளை பார்வையிடவும்.

    ஆனால் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றோடு ஒப்பிட முடியாத அளவுக்கு சிறந்த தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டிய தமிழரின் நூல் திருக்குறள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இரண்டு வரிகளில் சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்வதும், மொழி ஆற்றலும் திருக்குறளில் மிகைத்திருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதுவே இறை வேதத்துக்கு தகுதியாகி விட முடியாது.

    ReplyDelete
  40. சுவனப்பிரியன்
    முதலில் யார் சொன்னார் என்பதைவிட என்ன சொன்னார் என்பதே சிறந்தது. பெயரில் என்ன தம்பி இருக்கிறது இப்ப தமிழ்ப் பெயரில் நீங்க வரவில்லையா? அது போலத்தான்.

    //அவர் புளுகினாலும் இங்கு நம்புவதற்கு யாரும் தயாரில்லை//

    அப்படியா....! பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றாலும்,இயேசு கை பட்டவுடன் பெருவியாதி குணமாகும் என்றாலும்,மூஸா கைத்தடியால் தட்டி பாம்பு வரவழைத்தாலும்,கடல் விலகி பாதை அமைத்துத் தந்தார் என்றாலும்,வானவர் பூமிக்கு வந்து வேதத்தை ஒலி வடிவில் தந்தார் என்றாலும்,மின்னல் வேகத்தில் புராக் என்ற விமானத்தில் தூதர் அழைத்துச் செல்லப் பட்டார் என்றாலும் நம்புவதற்கு ஆளிருக்கும்போது,யாரும் நம்புவதற்கு தயாரில்லை என்றால் எப்படி? இதுபோல் எண்ணற்ற அறிவியலுக்கு முரணான கருத்துக்கள் எல்லா வேத புத்தகத்திலும் உண்டு.

    ReplyDelete
  41. சுவனப்பிரியன்
    //இதுவே இறைவேதத்திற்கு தகுதியாகிவிட முடியாது//

    முதலில் திருக்குறளை இறைவேதம் என்று யாரும் கூறிக்கொள்ளவில்லை என்பதை அரியவும். குறளில் தவறே இருக்காது என்று யாரும் வாதிடவில்லை,குறளை அப்படியே நம்பித்தான் ஆக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை,ஒரு சாதாரண மனிதர் தான் அதை எழுதினார் கடவுள் சொல்லித்தான் நான் எழுதினேன் என்று அவர் பொய்யுரைக்கவில்லை,ஏதோ ஒன்றை அறிமுகம் செய்து வைத்து அதுதான் கடவுள் அதைத்தான் வணங்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கவில்லை, வணங்கினால் சொர்க்கம் வணங்காவிட்டால் நரகம் என்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லை.திருக்குறள் இறைவேதம் அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள
    //குறல் இல்லை குறள்//
    பிழைதிருத்த‌ம் செய்த‌த‌ற்கு ந‌ன்றி.

    ReplyDelete
  42. இங்கு முதலில் கூறப்பட்டுள்ளது போல அல் குர்ஆன் வெரும் கற்பனாவாதமாக அமையவில்லை..நீங்கள் கூறுகின்றது சரி என ஒத்துக் கொன்டால் இப்போ கூறுங்கள் குர்ஆனை யார் எழுதி இறுப்பார்கள்?
    குர்ஆனில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் பொய் என்று சொல்கிறீர்களா?
    அப்படி என்றால் இதைப் பாருங்கள்..

    ..விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்..
    .............................................

    ”அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125”


    விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
    இதை உங்களால் மறுக்க முடியுமா??
    இது அறிவியல் சொன்ன உன்மை என்கிறீர்களா?
    ஆனால் இந்த உன்மை 1400 வருடங்களுக்கு முன்னர் குர்ஆன் கூறிவிட்டதே..அது எப்படி?
    சரி அதையும் மனிதன் தான் 1400 வருடங்களுக்கு கூறி இறுப்பான் என்று சொல்வீர்களா?
    அப்படி என்றால் 1400 வருடங்களுக்கு முன்னர் எந்த மனிதன் எந்த உபகரனத்தைக் கொண்டு ஆராய்ந்தான் என்று உங்களால் சொள்ள முடியுமா?
    இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை.வானத்திற்கு மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

    இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை..
    ??????

    ReplyDelete
  43. நண்பருக்கு வணக்கம்,
    இறைவனுக்கு தன்னை அறிவியல் மூலம் நிரூபிக்கும் கட்டாயம் இருக்கிறது போலும் சரி உங்கள் விஷயத்தை ஆராய்வோம்.
    குரான் மட்டுமல்ல அனைத்து மத ப் புத்தகங்களின் தொகுப்பின் பிண்ணனியில் அரசியல் மட்டுமே இருக்கும்.
    //”அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125”
    விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
    இதை உங்களால் மறுக்க முடியுமா??
    இது அறிவியல் சொன்ன உன்மை என்கிறீர்களா?
    ஆனால் இந்த உன்மை 1400 வருடங்களுக்கு முன்னர் குர்ஆன் கூறிவிட்டதே..அது எப்படி?//


    இத்னை இப்பதிவில் குறிப்பிட்ட வசனத்தை எடுத்துக் கொள்வொம்.இவ்வசனத்தின் சாரம்.

    1.இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் நெஞ்சை இறைவன் விரிவாக்குகிறார்.
    2.யார் ஏற்றுக் கொள்ளாதவர்களோ அவர்களின் நெஞ்சம் வானத்தில் எறுபவன் நெஞ்சை போல் சுருக்குகிறான்.
    A)
    முதல் கருத்திற்கு நெஞ்சு என்பதற்கு மனம் என்று பொருள் கொள்கிறீர்கள் அல்லவா,அதே சமயம் இரண்டாவது கருத்துக்கு இதயம் என்று பொருள் கொள்கிறீர்கள் இரண்டு வார்த்தைக்குமே மூல அரபி வார்த்தை
    (6:125:7) ,(6:125:14) ṣadrahu =his breast
    இந்த வார்த்தை குரானில் 46 இடங்களில் நெஞ்சம்[ மனம்] என்ற பொருளிலேயே பயன் படுத்தப் பட்டுள்ளது.இதயம் என்ற வார்த்தையை குறிக்க தனி வார்த்தை அரபியில்பயன்பாட்டில் இல்லையா? இருகிறதே பின் ஏன் இப்படி?
    What is Heart in arabic?
    Qalb or Alb

    வானம் என்று ஒன்று இல்லை,பூமியை தவிர்த்த பிரபஞ்சம் என்பதை குரானில் குறிப்பிடும் வானம் என்று பொருள் கொள்வோம்.

    ReplyDelete
  44. B)இபின் கதிர் தஃப்சிர் என்ன கூறுகிறது என்றால் இறைவன் நாடுபவர்களின் மனதை நம்பிக்கை கொள்ள வைக்கிறா.நாடாதவர்களின் இதயத்தை சுருக்கி நம்பிக்கை கொள்ளாமல் செய்கிறான்,இது எப்படி ஒரு மனிதன் வானத்தில் ஏற முடியாதோ அது போல் என்று கூறப்படுகின்றது.
    http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=970&Itemid=61#1


    (125. And whomsoever Allah wills to guide, He opens his breast to Islam; and whomsoever He wills to send astray, He makes his breast closed and constricted, as if he is climbing up to the sky. Thus Allah puts the wrath on those who believe not.) Allah said,

    ﴿فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلإِسْلَـمِ﴾


    (and whomsoever He wills to send astray, He makes his breast closed and constricted,) refers to inability to accept guidance, thus being deprived of beneficial faith.

    ﴿كَأَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَآءِ﴾

    (. ..as if he is climbing up to the sky.) because of the heaviness of faith on him. Sa`id bin Jubayr commented that in this case, "(Islam) finds every path in his heart impassable.'' Al-Hakam bin Aban said that `Ikrimah narrated from Ibn `Abbas that he commented on:

    ﴿كَأَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَآءِ﴾

    (...as if he is climbing up to the sky), "Just as the Son of Adam cannot climb up to the sky, Tawhid and faith will not be able to enter his heart, until Allah decides to allow it into his heart.'' Imam Abu Ja`far bin Jarir commented: "This is a parable that Allah has given for the heart of the disbeliever, which is completely impassable and closed to faith. Allah says, the example of the disbeliever's inability to accept faith in his heart and that it is too small to accommodate it, is the example of his inability to climb up to the sky, which is beyond his capability and power.'' He also commented on Allah's statement,

    ﴿كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لاَ يُؤْمِنُونَ﴾

    (Thus Allah puts the Rijs (wrath) on those who believe not.) "Allah says that just as He makes the heart of whomever He decides to misguide, closed and constricted, He also appoints Shaytan for him and for his likes, those who refused to believe in Allah and His Messenger. Consequently, Shaytan lures and hinders them from the path of Allah.'' `Ali bin Abi Talhah reported that Ibn `Abbas said that, Rijs, refers to Shaytan, while Mujahid said that it refers to all that does not contain goodness. `Abdur-Rahman bin Zayd bin Aslam said that, Rijs, means, `torment'.

    ﴿وَهَـذَا صِرَطُ رَبِّكَ مُسْتَقِيماً قَدْ فَصَّلْنَا الآيَـتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ - لَهُمْ دَارُ السَّلَـمِ عِندَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُواْ يَعْمَلُونَ ﴾

    ______________

    இபின் கதில் இரண்டுக்குமே மனம் என்றே பொருள் கொள்கிறார்.ஆன்மீக ரீதியக்வே பொருள் கொள்கிர்றார்.இன்னும் விளக்கம் வேண்டுமெனில் தனி பதிவு இடுகிறேன்.அறிவியல் விளக்கம் எதற்குமே இந்த பழைய தஃப்சீர்களை காட்ட மாட்டார்கள்.அந்த விளக்கம் தவறு இப்போதைய விளக்கம் சரி என்றால் குரானின் அர்த்தம் காலத்திற்கேறபடி மாறுகின்றது

    ReplyDelete
  45. இபின் கதிரின் கூற்றுப் படி தமிழில் மொழி பெயர்த்தால்
    "இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய மனதை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய மனதை இறுக்கி ,சுருக்கி , வானத்தில் ஏற எத்தனிப்பவன் போல் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்."
    ___________________
    வானத்தில் ஏறுவது முடியாத காரியம் போல் இறைவன் நாடாதவன் மனம் நம்பிக்கைக்கு விரிந்து கொடுக்காது.இதுவே அவனுக்கு தண்டனை.
    ___________
    இது திரு பி.ஜே வின் மொழி பெயர்ப்பு

    6:125. ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

    ReplyDelete