Saturday, July 2, 2011

நோவா கப்பல் கதை உண்மையா?


இப்பதிவு நோவா காலத்தின் வெள்ளப் பெருக்கு நட்ந்ததா என்று அலசுகிறது.யூத,கிறித்தவ மத புத்தகங்களின் படி உல்க முழுவதும் இறைவன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி நோவாவின் குடும்பம் தவிர அனைவரையும் அழிக்கிறார்.அவர்கள் மட்டும் ஒரு கப்பல் கட்டி ,அனைத்து விலங்குகளையும் ஒவ்வொரு ஜோடி கப்பலில் ஏற்றி தப்பித்ததாக கூறப்படுகின்றது.இஸ்லாமிய மத அறிவியலின் தந்தை மௌரிஸ் புகைல் இது உலக முழுவதும் ஏற்படவில்லை அப்பகுதியில் மட்டும் ஏற்பட்டது என்று கூறுகிறார்.

ஜாகிர் நாயக்கின் காணொளியிலும் அவர் அப்ப்குதியில் மட்டுமே ஏற்பட்டது என்று கூறுவதை பாருங்கள்.நல்லவேளை குரானில் கால அளவு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுவது அருமையான‌ நகைச்சுவை. ஒரு இடத்தில் நட்ந்தால் எதற்கு கப்பல்? அதில் ஒவொரு பிராணியும் எதற்கு ஏற்ற வேண்டும்?.உண்மை என்னவெனில் குரான் வழக்கம் போல் இந்த விஷய்த்தையும் பொத்தாம் பொதுவாக கூறிவிட்டது.

அகழ்வாராய்ச்சி முடிவுகள் மாறு படுவதால் எப்படியாவது தப்பிக்க வேண்டுமல்லவா?.அதற்கு இப்படி கூறித் தபிக்க முயற்சி.அப்போது பழைய குரான் விளக்கங்களில் இப்படி கூறப்பட்டிருக்கிறதா?.

இத்னை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இப்படி பல விளக்கங்கள் எப்படியாவது அறிவியலுக்கு முரண்படாமல் அளிக்க வேண்டும் என்பதே ஜாகிர் நாயக்கின் கொள்கை.

இப்படி அவர்கள் கூறுவது அப்ப்குதியில்(எங்கே?) மட்டும் நடந்தது என்றால்  இத்னை அகழ்வாராய்சி ஏதாவது நிரூபிக்குமா? அப்படி ஏதாவது ஆய்வு நடை பெற்று உள்ளதா? என்று கேட்க கூடாது.சொன்னது சரியா?
***********************
குரான் 11:40. இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
********************
11:44. பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
********************

71:26அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
71:27“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
*****************************************

இப்போது 


பூமி=நோவாவின் நாடு மட்டும்


வானம்=நோவாவின் நாட்டின் மேல் உள்ள மேகங்கள்

உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

மிக சிறந்த குரான் விளக்கங்களை எழுதிய இபின் கதிர் (C.E 1301–1373) என்ன கூறுகிறார்.

http://www.islamawareness.net/Prophets/nuh.html

இபின் கதிர் உலக முழுவதும் வெள்ளப் பெருக்கு என்றே கூறுகிறார்.இது குறித்த இன்னொரு கட்டுரை.

http://answering-islam.org/Shamoun/flood.htm

*************************************************************

சரி கிறித்தவர்களின் மத புத்தக்த்தின் தெளிவான கூற்றான உலகளாவிய வெள்ளம் என்பதை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.. படைப்புக் கொள்கையாளர்கள் பரிணாம்த்திற்கு ஆதாரமாக காட்டப் ப‌டும் படிமங்கள்(fossils) நோவாவின் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டது என்று சமாளிப்பது உண்டு. இவை அனைத்தும் இக்காணொளியில் ஆய்வு செய்கின்றனர்.
கண்டு களியுங்கள்.8 comments:

 1. சகோ. சாகிர் நாயக் சொன்னதைப்போல், அந்த பூமியும் வானமும் ஒரு குறிப்பிட்ட இடததை சொல்கின்றது என்றால், அந்த இடம் எது. அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடைப்பெற்று, வெள்ளம் நடந்தது நிருபிக்கப்பட்டதா. அதிசியம்... மதவாதிகள் அகவாராய்ச்சியை ஒத்துக்கொண்டு நம்புவது.

  அறிவியல் யாருக்கு தேவைப் படுகின்றதோ இல்லையோ இந்த மதவாதிகளின் வியாபாரத்திற்கு தேவைப்படுது.

  ReplyDelete
 2. நண்பர் நரேன்
  இந்த மௌரிஸ் புகைல் என்பவர் சொன்ன் கருத்துகளையே இந்த மத அறிவியல் பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள் என்பதும்,அதற்கு முந்தைய விளக்கங்களை திரித்துக் கூறுவதையே நான் இங்கு வலியுறுத்துகிறேன்.

  இங்கு அறிவியல்(?)கருத்து (எப்படியாவது) காட்ட முடியும் , ஆகவே மற்ற அனைத்தும் சரி என்பது இதை தவிர அவர்களிடம் வேறு சரக்கு இல்லையென்பதையே இது காட்டுகிறது.ஆகவே நாம் மதத்தில் அறிவியல் என்று கூறுவது ஏமாற்று வேலை என்பதை விளக்கும் முயற்சியில் இருக்கிறோம்.நம் முயற்சிகளை மிக எளிதாக்கும் மத அறிவியல் பிரச்சாரக்ர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 3. http://theflatearthsociety.org/cms/

  Welcome to the Flat Earth Society!

  ReplyDelete
 4. http://www.youtube.com/watch?v=6Va3hgTB2zk&feature=related
  Flat earth theory explored

  ReplyDelete
 5. இங்கு சென்றால் சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்

  www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/222-joothi-malai-meethu/+ஜூதி+மலை+கப்பல்

  ReplyDelete
 6. நன்றி நண்பர் சுவன்ப் பிரியன்.

  ReplyDelete
 7. ஐயா ,ஒரே குழப்பமாக உள்ளது, சுவனப்பிரியன் தந்த கொடுக்கியில், தலைவர் பி.ஜெ, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்……
  எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லும் தலைவர், இந்த ஆராய்ச்சி குழுவை பற்றி விளக்கங்கள் செய்திகளை சொல்லவில்லை.
  அவர்களுக்கு சாதமானவற்றை மேற்க்கோள் காட்டும் விக்கிபீடியாவில்
  //In contrast to the Jewish tradition, which uses a term which can be translated as a "box" or "chest" to describe the Ark, surah 29:14 refers to it as a safina, an ordinary ship, and surah 54:13 describes the Ark as "a thing of boards and nails".//
  //The medieval scholar Abu al-Hasan Ali ibn al-Husayn Masudi (d. 956) wrote that Allah commanded the earth to absorb the water, and certain portions which were slow in obeying received salt water in punishment and so became dry and arid. The water which was not absorbed formed the seas, so that the waters of the flood still exist. Masudi says that the Ark began its voyage at Kufa in central Iraq and sailed to Mecca, circling the Kaaba before finally traveling to Mount Judi (in Arabic also referred to as "high place, hill), which surah 11:44 states was its final resting place. This mountain is identified by tradition with a hill near the town of Jazirat ibn Umar on the east bank of the Tigris in the province of Mosul in northern Iraq, and Masudi says that the spot where it came to rest could be seen in his time.//
  //Noah left the Ark, and he and his family and companions built a town at the foot of Mount Judi, named Thamanin ("eighty") in reference to their number. Noah then locked the Ark and entrusted the keys to Shem. Yaqut al-Hamawi (1179–1229) mentions a mosque built by Noah which could be seen in his day//
  ஜுதி மலை ஈராக்கில் உள்ள மொசுலில் உள்ளது என்கிறது.
  http://www.icr.org/article/4987/
  //Yes, the search for Noah's Ark does go on and should go on. Some day, when the time is right, God will reveal it to a lost and dying world that needs it so. And when He does, may He receive all the glory.//
  அரராத் மலையில் அந்த கப்பல் (boards and nails) இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை என்று சொல்லுகிறது. கிருத்துவர்களுக்கு கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது, அவர்களே இல்லை என்கின்ற பொழுது தலைவர் எப்படி கடவுளின் அத்தாட்சி என்கிறார். பரிணாம வளர்ச்சியில் carbon dating கூடாது என்பவர்கள், இதற்கு ஆமாம் என்பார்களா.

  ReplyDelete
 8. நண்பர் நரேன்
  அந்த கப்பலை தேடியவர்கள் பற்றி ஒரு பதிவு எழுதுவேன்.சுமார் 3 வருடங்களுக்கும் முன்வரை அவர்கள் கொடுக்கும் சுட்டிகள் சரியா என்று பார்த்து கொண்டு இருந்தேன்.இப்போது அவசியமில்லை என்ற கருத்திற்கு வந்து விட்டென்.இக்கதை முதன் முதலில் ஜில்காமேஷின் ப்ராணக் கதையில் கூறப் படுகின்றது.வருகைக்கு நன்றி

  ReplyDelete