Thursday, June 23, 2011

இறைமறுப்பாளர்கள் ஒழுக்கமற்றவர்களா?



மதவாதிகளால இறை மறுப்பாளர்கள் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளுல் ஒன்று அறிவியல் ஒழுக்கத்தை[Moral] பற்றி எதுவும் கூறுவதில்லை.ஆகவே அறிவியலை மட்டும் பின்பற்றுவதாக் கூறுபவர்கள் ஒழுக்கமான்வர்களாக் இருக்க முடியாது என்பர்.இன்னும் 'வல்லது வாழும்(survival of the fittest)' என்பதே இயற்கைத் தேர்வின்[natural selection] அடிப்படை, ஆக்வே எது செய்தாவது வாழ வேண்டும் என்பத்தான் இறைமறுப்பின் கொள்கை என்றும் கூறுகின்றனர்.

இன்னும் ஒரு விவாதத்தில் ஒரு நண்பர் இறை மறுப்பாளர்கள் நெருங்கிய  உறவுமுறைகளில் கூட பாலுறவில் ஈடுபடுவார்கள்,ஓரின‌ புணர்ச்சியாளராக இருப்பார்கள் என்றும் கூறினார். ஏனெனில் இறை மறுப்பாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என்றார்.இந்த கூற்றுகளை இப்பதிவில் ஆய்வோம்.

இறுதியாக கூறிய கூற்றுகளை நண்பர் இக்பால் செல்வனின் பதிவில் நன்றாக அலசிவிட்ட படியால் அதன் சாரத்தை மட்டுமே அளிக்கிறேன்.

அ) நெருங்கிய இரத்த பாலுறவு:இந்த உறவு குறையுள்ள சந்ததிகளையே உருவாக்கும் என்பதை உணர்ந்தே சமூக கட்டுப்பாடுகள் ஆனது.ஆக்வே இது அறிவியலின் படி தவறு.அறிவியல் இன்னும் ஒரு படி மேலே போய் ஒன்று விட்ட சொந்தங்களுடன் மணம் புரிவது கூட இதே விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நிரூபிக்கிறார்கள்.இப்படிப்பட்ட திருமணங்கள் மதங்களால் அங்கீகரிக்கப் பட்ட ஒன்று என்பதை உணர்க. 

ஆ) ஓரிணப் புணர்ச்சி என்பது ஜீன் குறைபாடுகளால் ஏற்படுவது.இம்மாதிரி குறைபாடுள்ளவர்கள் பிறப்ப்தும் பரிணாம்த்தின் நிரூபணம்.
பழக்க வழக்கத்திகன் காரணமாக் இச்செயலில் ஈடுபவர்களை மருத்துவ, உளவியல் ரீதியான் சிகிச்சை அளித்து மாற்ற முடியும்.. மாற்ற முடியாத பிறவி குறை உள்ள‌வர்களுக்கும் கல்வி,வேலை வாய்ப்பு, சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெபன்தே இறை மறுப்பாளர்களின் நிலை. .ஒருவேளை இம்மாதிரி குறையுள்ளவர்கள்,மத நம்பிக்கையாளராகவோ அல்லது,இறை மறுப்பாள‌ராகவோ இருந்த போதும் ஈடுபடலாம்.ஒன்றும் வித்தியாசம் இல்லை.இவற்றை பல செய்திகளில் படித்திருக்கிறோம் அல்லவா.
 **********************
இப்போது பதிவின் முக்கிய கேள்வியான ஒழுக்கம் பற்றிய இறை மறுப்பாளர்களின் கொள்கை பற்றி விவாதிப்போம். ஒழுக்கம் என்பதை முதலில் வரையறுப்போம்.விக்கிபேடியாவில் இருந்து

Moral:A moral (from Latin morālis) is a message conveyed or a lesson to be learned from a story or event. The moral may be left to the hearer, reader or viewer to determine for themselves, or may be explicitly encapsulated in a maxim

ஒழுக்கம் என்பது ஒரு அனுபவத்தில் கற்றுக் கொண்ட உண்மை(செய்தி).இதை செய்தால் இது நடக்கும் என்று உணர்ந்து நடப்பதுதான் ஒழுக்கம்.ஒருவர் இறந்து விட்டால் திருப்பி உயிர் பெற முடியாது என்பதெலேயே கொலை என்பது பெரிய குற்றம் ஆனது.அக்கொலையே தற்காப்பிற்காக் செய்யப் படும்போது வேறு விதமாக பர்க்கப் படுகின்றது. ஒரு செயல் நடந்த போது அது நடந்த சூழ்நிலையும் இப்போது முக்கியமாக் கருதப் படுகின்றது.

ஆக ஒழுக்கம் என்பது அனுபவத்தில் கற்றுக் கொண்டு நடைமுரை படுத்தப்பட்ட இடம்,காலம்,சூழ்நிலை சார்ந்த சமூக கட்டுப் பாடுகள்..அறிவியல் என்பதைஒரு ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து இரு பொருள்களை இந்த விகிதத்தில் ,குறிப்பிட்ட சூழ்நிலையில் கல்ந்தால் புதிய பொருள் கிடைக்கும் என்பது மட்டுமல்ல. மானுட வியல்,உளவியல் ,வரலாறு,சட்டம்,மத ஆய்வு போன்ற்வையும் அறிவியலில் வரும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டால் அறிவியல்தான் ஒழுக்கத்தை வரையறுக்கிற‌து என்பது புரியும்.

அறிவியல் புத்தக்த்தில் படிப்பது மட்டுமே அறிவியல் என்ற மற்ற விஷயங்கள் அறிவியல் ஆகாது என்ற கருத்தை மதவாதிகள் கொண்டிருப்பதால் மட்டுமே அறிவியல் ஒழுக்கத்தை தராது என்பவர்கள் மத புத்தக்த்தில் சொலப் பட்ட விஷயங்களுக்கே கால அட்டவனை தந்தது அறிவியல் என்பதை மறந்து  பேசுகிறார்கள்.
ஆக மனிதன் தோன்றிய போது விலங்கு போலத்தான் வாழ்ந்தான்,மூளை வளர்ச்சி அடைய ஆரம்பித்தபின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ல ஆரம்பித்தான், அது குழுக்களாக வாழும் போது நடை முறைப் படுத்தப் பட்டது.இசூழ்நிலையில் த்னக்கு புரியாத இயற்கை சக்திகளை மேற்பட்ட சக்தியாக தெய்வங்களாக் அஞ்சி,அவைகளுக்கு பிரியமாக் நடக்க முடியுமா என்றும் யோசிக்க ஆரம்பித்தான்.

இப்படி நடைமுரையில் கற்றுணர்ந்த உண்மைகளை குழு தலைவர்கள் கூறும் போது தனக்கு இறைவன் அளித்த கட்டளை என்று கூறி விட்டால் மறு பேச்சு கேட்காமல் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.சொல்வதை கேட்டால் சொர்க்கம்,கேட்காவிட்டால் நரகம் என்று எளிய முரையில் எடுத்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

அவையனுத்தும் தொகுக்கப் பட்டே மத புத்தகங்கள் ஆன‌தும்,மதங்கள் பரப்புவதும் தோன்றியது.ஆக அறிவியலே மனித சமுதாயத்திற்கு ஒழுக்கம் கற்று கொடுத்தது.தமிழில் பாருங்கள் கட்வுள்=கட+உள் உண்மையை ஆய்ந்து அறிதல். புத்தர் யோசித்தே 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்னும் அரிய தத்துவத்தை கண்டு பிடித்தார். ஒரு கேள்விக்கு தர்க்க ரீதியாக விடை தேடுவது அறிவியலே.. மத புத்தக்த்தில் பல இடங்களில் விவாதம் போல் கேள்வி பதில்கள் ஆய்வுரீதியாக விடை தேடும் முயற்சி ஆகும்.மத புத்தங்களில் பல்ர் கற்று அறிந்த உண்மைகள் அப்ப்டியே ,அல்லது கொஞசம் மாற்றமாக்  கூறப்டுவதையும் அறிந்திருக்கிறோம்.


மதவாதிகள்தான் சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும் என்று கூக்குரல் இடுகிறார்கள்.கடுமையான சட்டங்களின் மூலமே அனைத்து குற்றங்களும் தடுக்கப் படும் என்கிறார்கள்.ஒருவர் தவறு செய்யும் போது குற்ற உணர்ச்சி ஏற்படுவதை கட்வுளால் செய்ய முடியாதா?.ஆனால் ஒழுங்கான புரிதல் உள்ள ஒருவன் சந்தப்ப்ம் கிடைத்தால் கூட தவறு செய்யும் வாய்ப்பு குறைவு.அப்புரிதல் மத் வாதிகளிடம் கூட இருக்க்லாம்.இறை மறுப்பாளர்களிலும் இருக்கலாம். அறிவியலின் வாடையே அடிக்காத ப்ழங்குடி மக்களில் கூட சில ஒழுக்க விழுமியங்கள் உல்ளது எப்படியெனில்,இதே விளக்கம்தான் அவர்கள் நடைமுரையில் தலைமுறை தலைமுறையாக் கடைப்பிடிக்கும் கோட்பாடுகள்.அதுவும் அறிவியலே முதல் தலைமுறைக்கு எப்படி கோட்பாடு கிடைத்தது என்றால் செய்து கற்றுக் கொள் தத்துவம்[Trial and Error] மட்டுமே அன்றி வேறில்லை.ஒரு தலைமுறையின் கற்றுணர்வு,அடுத்த தலைமுறையின் மத கோட்பாடு ஆகிறது.

மற்றவர்களை பற்றிய புரிந்துணர்வை வளர்க்கும் அற்வியலே மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒழுக்கத்தை  ஏற்படுத்தி,பண்படுத்திக் கொண்டிருக்கிறது. .எப்படி பண்படுத்துகிறது என்றால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வரை அடிமை முறை வழக்கத்தில் இருந்தது,அதனை மத புத்தகங்கள் அங்கீகரிப்பதால் மத்வாதிகள் ஆமோதித்தனர்.ஆபிரஹாம் லிங்கன் போன்ற பலர் போராடியே இதனை ஒழித்தனர்.

ஒருவேளை கடவுள் கொடுத்த சட்டம் எனில் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்னம் இருக்க வேண்டும்.அதில் அனுமதிக்கப் பட்ட பல செயல்கள் இப்போது ஒதுக்கப் படுகின்ற‌ன.ஆக அறிவியலாளர்கள் ஒழுக்கத்தை அறிவியல் என்றே ஏற்கிறார்கள்.அதன் மீதான சட்டங்களை மதித்தே நடக்கிறார்கள்.மாற்ற வேண்டிய சட்டங்களை எதிர்த்து குரல் கொடுகிறாகள்.சடங்களை மீறினால் அதற்குறிய தண்டனையையும் ஏற்கிறார்கள்.ஒழுக்கம் என்பதும் அறிவியல் மட்டுமே.ஆகவே அறிவியல் என்பதும் அற இயலே. இது குறித்த ஒரு காணொளி 



16 comments:

  1. நண்பரே நான் என்ன சொன்னேன் என்னநடந்தது என்று உண்மையை உள்ளவாறே நீங்கள் சொல்லவில்லை பொத்தம் பொதுவா இப்படி பதிவு போட்டு நீங்கள் நல்லவர்கள் என்று அந்தமாதிரி கருமந்தரங்கள் எங்களிடம் இல்லை ஆனால் support பண்ணுவோம் என்று சொல்வது முரண் தொடை ஆகையால் தான் நான் அவ்வாறு கூறினேன் இதோ உங்களின் வாசகர்களுக்காக
    ..............................................
    நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

    அதை விரும்புவதால்

    நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

    சமூகம் தன்னை அடையாளம் கொண்டு வெறுத்து ஒதுக்கும் என்ற பயத்தினால்

    இது தான் உண்மை நீங்கள் எப்போதுமே உண்மையை விளங்க முற்படுவது இல்லை அவ்வாறு விளங்கினாலும் குதர்க்கமான சிந்தனை நிறைய பொய் இதன் மூலம்
    சிந்தனையில் மேம்பட்ட மக்களாக முடியவே முடியாது
    ..............................................
    நாத்திகம் பேசும் உங்களை போன்றவர்களை நிறைய பார்த்து அவர்களின் எண்ணங்கள் புரிதல்கள் ஆகியவைகளை அறிந்ததினாலேயே அவ்வாறு சொன்னேன் அது சரி அந்த முஹம்மத் ஆஷிக் யின் வகை படுத்தப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்குதனே இவர் பதிவிடுகிறார் மற்ற கேள்விகள் அப்படியே உள்ளது ஏன் இந்த கேள்விக்கு மட்டும் இவ்வளவு முக்கியமாக ரொம்ப செரமபட்டு வழக்கம் போல நிறைய பொய்களுடனும் அரைகுறை அறிவியளுடனும் 4 பதிவு இது செக்ஸ் மேட்டர் என்பதினாலா அன்னக்கி நாங்கள்தான் இந்த subject யில் inrest எடுக்கிறோம் என்று அபாண்டமாக சொன்னீர்களே அது என்னாச்சி வழக்கம் போல பொய் தானே இதோ அந்த வகை படுதப்பட்ட கேள்விகள் FIR 1:
    பதில்களை காணவில்லை..!
    மானுக்கு ஏன் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை? மானும் ஒட்டகை சிவிங்கியைப் போல் இலை தழைகளை சாப்பிடக் கூடியதே!

    FIR 2:
    பதில்களை காணவில்லை..!
    யானைக்கு தும்பிக்கை ஏன் வந்தது?


    FIR 3:
    பதில்களை காணவில்லை..!
    கங்காருக்கு வயிற்றில் ஏன் பை வந்தது? அதற்கான காரணம் என்ன?

    FIR 4:
    பதில்களை காணவில்லை..!
    பரிணாமத்தை வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு மாற்றத்தைக் கூட பதிவு செய்ய முடியவில்லையே ஏன்?

    FIR 5:
    பதில்களை காணவில்லை..!
    டார்வினின் கோட்பாட்டின் படி தேவையின் பால் ஒரு முறை வளர்ந்த அந்த உறுப்பு திரும்பவும் பழைய நிலையை அடைய தேவையில்லை.ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட இந்த உறுப்பை பல நூறு அல்லது பல ஆயிரம் தடவை தேவையின்பால் உபயோகப்படுத்தியும் மாறிய அதே நிலையில் இருப்பதில்லை. திரும்பவும் பழையபடியே தனது பழைய நிலையை அடைந்து விடுகிறது. ஒட்டக சிவிங்கிக்கு தேவையின்பால் கழுத்து நீண்டது போல் உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை ஏன் அடையவில்லை?

    ReplyDelete
  2. வாங்க நண்பரே,
    இக்கேஎள்விகள் அனைத்திற்குமே பதில் அல்லது,பதில் காணும் முறை பற்றி கூறியாகி விட்டது.நியாண்டர்தால் என்ற மனித போன்ற‌ இன்னொரு இனம் இருந்த ஒன்றே மத‌ங்களுக்கும் ச்மாதி கட்ட சரியான ஆதாரமாகும்.வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  3. /நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

    அதை விரும்புவதால்/
    நாத்திகர்கள் மட்டுமே ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது இல்லை,மக்கள் தொகையில் நாத்திகர்கள் எவ்வளவு சதவீதம் உள்ளனரோ ,அந்த அளவோ கொஞ்சம் கூடக் குறையவோ ஈடுபடலாம்,பிர அனைவருமே மத நம்பிக்கையாளர்களே.
    சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இந்த விஷயத்தில் தன் ஆண் துணையை கொன்ற செய்தி அறிவீர்கள்.
    http://www.dailymail.co.uk/news/article-1321860/Gay-Saudi-prince-pictured-happily-manservant-beat-death.html
    http://www.youtube.com/watch?v=1B4TBnNixHc
    சவுதியி நடந்த ஒரு gay நடனம்
    http://www.youtube.com/watch?v=yk1HpUkZA8s&feature=related
    ___________
    பல் கிறித்தவ பாதிரிகள் சிறுவர்களை பங்கப் படுதியதும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.ஒரு மதத்தில் இருப்பதால் மட்டுமே ஒருவர் புனிதர் ஆக முடியாது.அது போல்தான் இறை மறுப்பாளர் அனைவருமே ஒழுக்கம்ற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

    ReplyDelete
  4. நீங்கள் நான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்று விளக்கமாக சொல்லாமல் என்னை வில்லனாக ஆக்குகிறீர்கள் அதனால் இதோ உங்கள் வாசகர்களுக்காக

    .................................................

    ஆரோணன் said...
    ஓரினச் சேர்க்கை என்பது அறிவியலின் படி இயற்கையானது என நிரூபிக்கப்பட்டுவிட்டது, இது பரிணாம கொள்கைப் படியோ, டார்வினசமோ அல்ல ...

    ஜெனிட்டிக்கின் படி நிரூபணமாகி உள்ளது ..

    1 http://www.jrn.columbia.edu/studentwork/cns/2002-06-10/591.asp Columbia news Science
    2 Http://www.ps.org/wgbh/pages/frontline/shows/assault/genetics/ The "Gay Gene" Debate
    3 Http://www.well.com/user/queerjhd/sxthegenedebate.htm The Gene Debate
    4 http://www.innerself.com/Relationships/accept_homosexuality.htm Accepting Homosexuality

    இந்த நிரூபணங்களை பொய் எனக் கூறும் எதிர் நிரூபணங்கள் இன்னும் வைக்கப்படவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது. ஆகையால் ஓரினச் சேர்க்கை என்பது இயற்கை அல்ல எனக் கூறுவது வெறும் விதண்டாவாதம் தான்.

    -----------------

    தகாப் பாலுறவு என்பது ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு தேவை பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒன்று. தகாப் பாலுறவு ஒரு சிலரிடம் இருக்கின்றது எனில், அதனை நம்மால் ஏன் ஏற்க கூடாது எனக் கேள்வி எழும், ஏன் ஏற்கக் கூடாது என்பதை INCEST GENETICS விளக்குகின்றது. இதில் பரிணாமம் என்பது ஒரு துளிதான் பயன்படுத்தப் பட்டுள்ளது, மீதி அனைத்தும் ஜெனிட்டிக் அறிவியல் தான்.

    1 http://www.anthonymludovici.com/eugenics.htm Eugenics and consanguineous marriages *
    2 http://www.newton.dep.anl.gov/askasci/mole00/mole00076.htm Incest Genetics
    3 http://www.youtube.com/watch?v=Dl3da490MTY Science of Sex: Incest
    4 http://anthro.ucsd.edu/~jmoore/publications/Leavitt.html Sociobiology and incest avoidance:

    -----------------

    தகாப் பாலுறவு தடுப்பு ( INCEST AVOIDANCE ) என்பது விலங்குகளிலும் இருக்கின்றது, இதற்கும் நல்லொழுக்கம், கலாச்சாரத்துக்கும் சம்பந்தமில்லை.

    1 http://www.sciencenews.org/view/generic/id/69433/title/Ants_manage_incest_without_inbreeding Ants manage incest without inbreeding
    2 http://www.sciencedaily.com/releases/2007/08/070815135114.htm Female Hyenas Avoid Incest By Causing Male Relatives To Leave Home
    3 http://www.sciencedaily.com/releases/2009/06/090629200636.htm Birds With A Nose For A Difference: Avoidance Of Inbreeding In Birds Demonstrated
    4 http://www.sciencedaily.com/releases/2009/12/091202205625.htm Scent Signals Stop Incest in Lemurs


    2

    June 23, 2011 11:38 AM


    ஆரோணன் said...
    திரு. bat-ன் கேள்விகளுக்கு பதில்கள் :

    நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

    *** ஏனெனில் அறிவியல் அதனை இயற்கைப் பாலுணர்வு எனக் கூறிவிட்டது.

    நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

    *** ஏனெனில் அறிவியல் அதனால் பிறக்கும் குழந்தைகள் நோய்நொடியோடு பிறக்கும் எனக் கூறிவிட்டது.

    :)

    June 23, 2011 11:46 AM
    bat said...
    நண்பர் ஆரோனியனுக்கு

    நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

    அதை விரும்புவதால்

    நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

    சமூகம் தன்னை அடையாளம் கொண்டு வெறுத்து ஒதுக்கும் என்ற பயத்தினால்
    இது தான் உண்மை நீங்கள் எப்போதுமே உண்மையை விளங்க முற்படுவது இல்லை அவ்வாறு விளங்கினாலும் குதர்க்கமான சிந்தனை நிறைய பொய் இதன் மூலம்
    சிந்தனையில் மேம்பட்ட மக்களாக முடியவே முடியாது

    June 23, 2011 12:04 PM

    ReplyDelete
  5. /அந்தமாதிரி கருமந்தரங்கள் எங்களிடம் இல்லை/
    இந்த ஹதிதில் பாருங்கள் ஒரு திருநங்கையுடன் கிளுகிளுப்பன உரையாடலை எதற்கு பதிவு செய்தார்கள்.?
    _____________
    5887. (நபியவர்களுடைய துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
    என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் இருந்தபோது நபி(ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அலி, என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் 'அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதைமடிப்புகளுட)னும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், '(அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்' என்றார்கள்.
    அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
    அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் 'முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் 'பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று கூறினார்.96
    'தரஃப்' (ஓரம்) எனும் சொல் ஆண்பாலாயினும், அது வெளிப்படையாகக் குறிப்பிடாததால் 'அர்பஉ' (நான்கு), 'ஸமான்' (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக) ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன.
    ______________
    Volume :6 Book :77
    அது ஒன்றும் கருமாந்தரம் அல்ல.ஜீன் குறைபாடுள்ள‌ல்வர்கள் செய்யும் ஒரு இயல்பான காரியம்.அவர்கள் வேண்டுமென்றே செய்வது இல்லை.அதில் தவறு இல்லை.
    ஒன்று விட்ட சகோதரர்களிடம் மணம் செய்வதும் தகா புணர்ச்சியென்றே[incest] அறிவியல் கூறுகின்ரது.பாகிஸ்தானியர்கள் இதனை அதிகம் செய்வதால் எப்படி மூளை வளர்ச்சியர்ற குழந்தைகள் பிரக்கிறார்கள் என்ற காணொளி.
    http://www.youtube.com/watch?v=Swadss8D8zw
    http://www.youtube.com/watch?v=Rxi6OeJcO-w&NR=1
    ___________

    ReplyDelete
  6. http://aaronankopal.blogspot.com/2011/06/15.html

    ReplyDelete
  7. Sex and sexuality in Islam
    http://islaminitsownwords.blogspot.com/2011/05/sex-and-sexuality-in-islam-part-i.html
    http://islaminitsownwords.blogspot.com/2011/05/sex-and-sexuality-in-islam-part-ii.html
    http://islaminitsownwords.blogspot.com/2011/05/sex-and-sexuality-in-islam-part-iii.html
    http://islaminitsownwords.blogspot.com/2011/05/sex-and-sexuality-in-islam-part-iv.html
    http://islaminitsownwords.blogspot.com/2011/05/sex-and-sexuality-in-islam-part-v.html
    http://islaminitsownwords.blogspot.com/2011/05/sex-and-sexuality-in-islam-part-vi.html

    ReplyDelete
  8. நல்ல பதிவு சகோ ... ஒருவனின் தனி மனித ஒழுக்கத்தை நிர்ணயம் செய்வது மதம் மட்டுமே ! மதம் மட்டுமே ! மதம் மட்டுமே !

    ஆனால் எந்த மதம் என்பதில் பலருக்கு சிக்கல் .. அந்த சிக்கலைத் தீர்த்தப் பின் நாம் விவாதிப்பதே சரியானது அல்லவா ....

    @ ஆரோணன் - நீங்க இப்படி இடையிலே பூந்து விளையாடுவீங்கனு நினைக்கல .... சூப்பர் ....

    @ சார்வாகன் - முகமதுவின் திருமணங்கள் குறித்து நாங்கள் கட்டுக்கதை கட்டுவதாக ஒருவர் நல்லா காதில பூச்சுற்றி வருகின்றார்....

    ஆனால் அந்தக் கட்டுக்கதைகள் எல்லாம் குரானிலும், அதன் வாலான புகாய் உட்பட ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹடித்களிலுமே இருக்கு !!!! என்பதை மறந்து / மறைத்து நடக்குது ஒரு பெரும் கூத்து ..............

    ReplyDelete
  9. இடையில் மேன்மைமிகு பாட் என்பவர் ஏற்கனவே கத்தோலிக்கர்கள் எடுத்துவிட்டவைகளை அச்சுப் பிசகாமல் எடுத்து இங்கே கேள்வி போல முன்வைக்கின்றார்கள் ..... ????

    நல்லது --- இப்போது மக்களுக்குத் தெரிந்திருக்கும் உண்மை நிலைமைகள் .... புரியவைப்போம் ...

    ReplyDelete
  10. அப்புறம் நாத்திகர்கள் எல்லாம் மோசமானவர்கள் .. ஆத்திகர்கள் எல்லாம் மேன்மையானவர்கள் என்ற தொனியில் கிறுக்கி வருவது நகைப்புக்குறியது ..

    நாத்திகமோ, ஆத்திகமோ, ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் கெட்டவனாக இருப்பதற்கும் தொடர்புகள் இல்லை ..

    அதே போல ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரும் நாத்திகர்களும் அல்ல, கெட்டவர்களும் அல்ல .. அனைத்திலும் அனைத்தும் உண்டு...

    இல்லை என நிரூபிக்க முடியுமா ?

    சவாலே விடுகின்றேன் ....

    ReplyDelete
  11. அப்புறம் ஒரு 10 மதவாதிகள் சேர்ந்து பதிவுலகில் இப்படியான விஷயங்களுக்கு கும்மியடித்து வருகின்றார்கள் .. மைனஸ் ஓட்டுப் போடுவதில் இருந்து ... ஆனால் நம்மைப் பார்த்து .. அதைச் சொல்லுவார்கள் ..

    அதாவது ஒருவன் இன்னொருவனை அடித்துவிட்டு, அடித்தவனே போய் ஆசிரியரிடம் அடுத்தவன் அடித்துவிட்டான் என புறணியளப்பது போல .....

    நல்ல டெக்னிக் ........ அப்படியே பாலோ பண்ணுங்க.. விளங்கிடும் ..

    ReplyDelete
  12. வாங்க நண்பரே,
    அந்த காலத்தில் இப்படி சர்ச்சைக்குறிய விஷயங்களை தொகுத்தார்கள் என்றால் உண்மையிலேயே மதத்திற்காகத்தான் தொகுத்தார்களா என்ற கேள்வி வருகின்றது.
    இஸ்லாமிய வரலாற்றின் படி பொ.ஆ 661 க்கு பிறகு முகமதுவின் பழைய எதிரி அபு சுஃபியானின் மகம் முவையா (உம்மையாது வம்சம்)ஆட்சிக்கு வருகிறார்.இவர்கள் ஆட்சி சுமார் 90 வருடம் பொ.ஆ 750 வரை நீடித்தது.இதன் பிறகு முகமதுவின் கொள்ளுப்பேரன் ஆட்சியை கைப்பற்றுகிறார்(அப்பாசித்து வம்ச கலிஃபா).
    இவர்களின் ஆட்சியில் முகமதுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக ,மதத்தை முழுமை படுத்த ஹதிது தொகுக்க ஆரம்பித்து இருக்கலாம்.இதில் சுமார் 6 இலட்சம் ஹதிதில் 7000 மட்டும் சரி என்கிறார்கள்.அதில் ஒன்றுதான் இது.அதிலேயே இப்படி முழுசும் கிடைத்தால் எப்படி இருக்குமோ?.புஹாரி எந்த அள்விற்கு நம்பிக்கையானவர் என்பதும் கேள்விக்குறியதே!!!!!!!.
    இன்னும் கொஞ்சம் விவரம் இங்கு பார்க்கலாம்.

    http://saarvaakan.blogspot.com/2011/04/blog-post_09.html
    நன்றி

    ReplyDelete
  13. /அப்புறம் ஒரு 10 மதவாதிகள் சேர்ந்து பதிவுலகில் இப்படியான விஷயங்களுக்கு கும்மியடித்து வருகின்றார்கள் .. மைனஸ் ஓட்டுப் போடுவதில் இருந்து ... ஆனால் நம்மைப் பார்த்து .. அதைச் சொல்லுவார்கள் ./
    மத அரசியலில் இது சகஜம்தான் கண்டுக்காதீங்க,நிறைய எழுதுங்கள்,உங்களுடன் நாங்களும்.

    ReplyDelete
  14. // மத அரசியலில் இது சகஜம்தான் கண்டுக்காதீங்க,நிறைய எழுதுங்கள்,உங்களுடன் நாங்களும் //

    சரியா சொன்னீங்க.. தெளிவான பார்வையும், உறுதியும், உண்மையும் இருந்தா இது எல்லாம் சகஜம் தான் .. தொடர்வோம்

    ReplyDelete
  15. பௌத்தம், சமணம் போன்ற நாஸ்திக சமயங்களின் தனிமனித ஒழுக்க மேன்மை தேடல் குறித்த கோட்பாடுகளும், விழிமியங்களும் பிற ஆஸ்தன சமயங்களை விட மேன்மையான ஒன்றை மறந்துவிடக் கூடாது ......

    தனிமனித ஒழுக்கத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் .. ஒரு தொடர்பும் கிடையாது ???

    ReplyDelete
  16. /தனிமனித ஒழுக்கத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் .. ஒரு தொடர்பும் கிடையாது ???/
    வாங்க நண்பர் ஆரோணன்,
    ஒரு சமூகத்தில் வாழும் போது அதன் வளர்ச்சிக்கு உதவும் வழியில் வாழ்வதுதான் தனி மனித ஒழுக்கும்.மத் வாதிகளுக்கு இந்த கூற்று பொருந்தாது.
    நாம் இன்னும் தொடர்ந்து எழுதுவோம்.
    நன்றி

    ReplyDelete