Monday, June 20, 2011

பரிணாமம்,படைப்புக் கொள்கை பாய்!!!!!!!! பாய்!!!!!!



பரிணாமம் ,படைப்புக் கொள்கை பற்றியெ சில பதிவுகளை இட்டு வருகிறேன்.இதுவரைக்கும் ஆபிரஹாமிய மதத்தவர்[குறிப்பாக இஸ்லாமிய] பரிணாமத்தை முற்றும் முதலாக எதிர்ப்பவர்கள் என்ற கருத்தையே பல் இஸ்லாமிய பிரச்சாரக பதிவர்கள் பிரதிபலித்தனர்.  இன்று பார்த்த ஒரு காணொளி அக்கருத்தை கொஞ்சம் மாற்றி விட்டது.

திரு அகம்து குட்டி என்னும் இஸ்லாமிய அறிஞர் கேரளாவில் பிறந்து ,கனடா குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார்.சவுதி மதினா பல்கலை கழகம்,கனடா மெக்கில் பல்கலைகழகம் போன்றவற்றில் பட்டங்கள் பெற்றவர்.ஷாரியாவின் முனைவர் பட்டம் பெற்றவர்.உலகின் முக்கிய 500 முஸ்லிம்களுல் ஒருவராக குறிப்பிடப் படுபவர்.இவர் பற்றி இங்கே நிறைய அறியலாம்.
இவர் எழுதிய ஒரு புத்தகம்தான் நம் பதிவின் சாரம் ஆகும் .
ஆடம் ஜீன்அன்ட் மைட்டொகான்ட்ரியல் ஈவ் என்னும் புத்தம்தான் அது.அதில் இவர் பரிணம்த்திற்கும்,படைப்புக் கொள்கைக்கும் பாலம் அமைக்கிறார்.இயற்கை தேர்வு மூலம் நடக்கும் பரிணாம் வளர்ச்சியை ஒத்துக் கொள்கிறார்.ஆதமிற்கு முன் மனிதர்கள் இருந்ததாக கூறி (இன்ப)அதிர்ச்சி அளிக்கிறார்.அதாவது பரிணாம வளர்ச்சி படி உயிரினங்கள் உருவாகின்றது,சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன் ஆத்மை இரைவன் படைத்தார் .அவரை படைத்து ,பிற மனிதர்களுக்கு தலைவர்களாக் வழிகாட்ட அவ்ருக்கு ஆலோசனைகள் வழங்கியதாக கூறுகின்ரார்.இப்படி கூற இயலும் என்பது நம் கருத்து.குரான் 21:30  படி பெரு வெடிப்பு,பிறகு நீரில் இருந்து முதல் செல்[3 million years] உயிரினம்,படிப்படி பரிணாம வளர்ச்சி,2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நகரிகமற்ற ஹோமோ செஃபியன்கள் என்று வந்து கொண்டிருகிறது.
சரியாக 12,000 ஆண்டுகளுக்கு முன்[எப்படி எல்லம் அவர்களின்  மூத்த சகோ வேதங்கள் தோரா,பைபிள் கணக்குதான்] ஆதம்,ஹவ்வா படைக்க்ப் பட்டனர்.அவர்கள் இரைவனால் படைக்கப் பட்டதல் ஞானம் மிக்கவர்களாய் இருந்தனர்,இத்னால் பூமியில் ஒழுங்கு வந்தது.ஆதமின் மக்கள் பிற மனிதர்களோடு மண உறவு கொண்டார்கள் என்று அப்ப்டியே போகிறார்.

இப்பொழுது இவர் சொல்வதை தவறென்று நிரூபிக்க முடியாது.மனிதன் பரிணாம்த்தின் படி கிழக்கு ஆப்பிரிக்காவில் தொன்ன்றினான்,ஆதம்,ஹவ்வா மெக்காவில் தோன்றினார், காயீன்,ஆபேலை கொன்று விட்டு எகிப்து போய் அங்கே ஒரு பெண்ணை திருமண‌ம் செய்தார் என்றால் திரைக்கதை வசனம் வெகு ஜோர்!!!!!!.எல்லாம் தெளிவாக இருக்கும் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்வது கஷ்டம்.யூத கிறித்தவ்ர்களும் இக்கதைகளை கொஞ்சம் மாற்றங்களோடு பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதுதான் 22ஆம் நூற்றாண்டின் மத அறிவியல்.நாம் முதலிலேயே கூறிவிட்டோம்!!!!!!!!

இவையெல்லாம் உண்மையா என்று கேட்டால்.இல்லையென்றே கூறுவேன்.இப்படி ஒரு உடன்பாடு ஏறபட மதவாதிகள் முயல்வார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்.ஏனெனில் பரிணாமம் நிரூபிக்கப் பட்ட ஒன்று.இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு அனைவருக்கும் புரியும் படி எளிமைப் படுத்தப்படும்.

அச்சமயத்தில் எதிர்க்கும் கொள்கைகள் சுத்தமாக ஒதுக்கப் படும்.ஆக்வே இப்போதே இப்படி சொல்லி வைத்தால் பிறகு பிரச்சினை இருக்காஅது.ஒரு பக்கம் எதிர்ப்போம்,இன்னொரு பக்கம் ஆதரிப்போம் எது சரியோ அது இறைவன் நாடியது என்று கூறி விடுவார்கள்.இதிலின்னொரு இலாபமும் உண்டு.நம்ம பழைய கேள்விதான் காயீனின் மனைவி யார்? என்பது.அச்சமயத்தில் வேறு யாரும் உலகில் இல்லாததால் அவர் யாரை திருமணம் செய்தார்,சகோதர மண உறவு என்பதை ஜீரணிக்க பல மத வாதிகளுக்கு இருந்த சிக்கல் தீர்ந்து விடும்.[ஒரு கல் இரு மாங்காய்!!!!!!!!]

முதலில் சூரிய மையக் கொள்கையை எதிர்த்தவரகள் பிறகு தங்கள் மதப்புத்தக்த்தில் அன்றே கூறப் பட்டுள்ளது என்ற நகைச்சுவை பொன்றதுதான்.ஆகவே பரிணாமம்,படைப்புக் கொள்கை பாய் பாய்[சகோதர்கள்]..நம் தமிழ் சகோதரர்கள் இப்படி ஒரு கல் இரு மாங்காய் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
ஆக்வே அனைவருக்கும் சாந்தியும்,அமைதியும் உண்மையிலேயே உண்டாகட்டும் என்று வாழ்த்துவோம்.



7 comments:

  1. டார்வினின் கூற்றுப்படி (உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதாக) இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லையே என்ற குழப்பம் தான்.

    "Paleontologists ever since Darwin have been searching (largely in vain) for the sequences of insensibly graded series of fossils that would stand as examples of the sort of wholesale transformation of species that Darwin envisioned as the natural product of the evolutionary process. Few saw any reason to demur - though it is a startling fact that, of the half dozen reviews of the On the Origins of Species written by paleontologists that I have seen, all take Darwin to task for failing to recognize that most species remain recognizably themselves, virtually unchanged throughout their occurrence in geological sediments of various ages." --- Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57.

    நீண்ட காலங்களாகவே தொல்லுயிரியலாளர்கள், டார்வினின் கற்பனையான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கூற்றிற்கான தொடர் நிகழ்வுகளை தேடி வருகின்றனர் (ஆனால் அவர்களது முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது)...
    ஆனால் வியப்பளிக்கும் உண்மை என்னவென்றால், Origin of Species குறித்து நான் பார்த்த அரை டஜன் விமர்சனங்களில், அவற்றை எழுதிய தொல்லுயிரியலாளர்கள், பெரும்பாலான உயிரினங்கள் தாங்கள் இருந்த காலங்களில் மாற்றமடையாமல், தாங்களாகவே இருந்துள்ளன என்பதை டார்வின் உணரத் தவறியதாக விமர்சித்துள்ளனர் --- (Extract from the original Quote of) Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57.



    இப்போது நான் பரிணாமவியலாளர்களிடம் கேட்க நினைக்கும் சில கேள்விகள்,

    • இதுவரை கண்டெடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள், உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும் அவைகளில் பெரும்பாலானவை மாற்றமடையாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை நீங்கள் ஏற்கின்றீர்களா? மறுக்கின்றீர்களா?
    • ஜே குட் மற்றும் நைல்ஸ் எல்ரெச் ஆகிய இருவரின் கோட்பாடான "puntuated Equilibria" கொண்டுவரப்பட்டதற்கு டார்வினின் கூற்று தவறு என்பதுதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா? இல்லையா?
    • டார்வின் மற்றும் ஜே குட், இந்த இருவரது கோட்பாட்டில் எது சரி? எது தவறு?. இதே கேள்வியை வேறு விதமாக கேட்பதென்றால், உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாற்றடைந்து வேறொன்றாக மாறினவா? அல்லது குறுகிய கால இடைவெளியில் விரைவாக மாற்றமடைந்து வேறொன்றாக மாறி பிறகு மாற்றமடையாமல் தொடர்ந்தனவா?
    • ஜே குட் அவர்களின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் டார்வினின் "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கருத்து தவறு என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
    • "இல்லை, இல்லை, டார்வின் சொன்னது தான் சரி" என்றால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் அவரது கருத்துக்கு எதிராக உள்ளனவே? அதற்கு உங்களது பதிலென்ன?
    • மேற்கண்ட கேள்விக்கு, "உயிரினப்படிமங்கள் இன்னும் முழுமையான அளவில் கிடைக்கவில்லை , அதனால் தான் பரிணாமம் தென்படவில்லை" என்று நீங்கள் கூறினால், பிறகு எந்த வரலாற்று ஆதாரங்களை வைத்து நாங்கள் பரிணாமத்தை நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்?
    • பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்காத போது, சென்ற காலத்தில் இப்படி நடந்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்படி நம்பமுடியும்?
    • இன்றைய நிலவரப்படி, வரலாற்று ஆதாரங்கள் "உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும், அவை சிறுகச் சிறுக வேறொன்றாக மாறவில்லை" எனவும் சொல்கின்றன. இன்றைய ஆதாரங்கள் இப்படி சொல்கின்ற நிலையில் இவற்றை நம்புவது சரியா? அல்லது ஆதாரங்களே இல்லாத, நீங்கள் சொல்கின்ற கொள்கையை நம்புவது சரியா?
    • எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பின்னப்பட்ட ஒரு கருத்தை கதை என்று கூறுவது ஏற்புடையதா? அல்லது அறிவியல் என்று கூறுவது ஏற்புடையதா?

    பரிணாமவியலில் உள்ள ஓட்டைகள் காலப்போக்கில் தங்களுடைய அளவிலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, அதிகரித்து கொண்டுதான் வருகின்றன.

    ஓட்டைகள் பல நிறைந்த இப்படியான ஒரு கோட்பாட்டை நம்ப மறுப்பவர்களை"அறிவியலை எதிர்க்கின்றார்கள்" என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதை பரிணாமவியலாளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

    நன்றி: www.ethirkkural.blogspot.com

    ReplyDelete
  2. 7. //நீங்கள் சொல்லும் சீலகாந்த், ஆர்கியாப்ட்ரிக்ஸ் --இதெல்ல்லாம் என்னவாம்?//

    இவையெல்லாம் இடைப்பட்ட உயிரினங்கள் கிடையாது. சீலகாந்த் என்பது ஒரு மீன். ஆர்கியாப்ட்ரிக்ஸ் என்பது பறவை. இவை குறித்து பதிவுகள் வர இருக்கின்றன (இன்ஷா அல்லாஹ்)....

    ஐயா, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள முயலுங்கள். ஒரு உயிரினம் மற்றொன்றாக சிறுகச் சிறுக மாறினால் நமக்கு எண்ணற்ற இடைப்பட்ட உயிரினங்கள் கிடைத்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு, '2' என்ற உயிரினம் '3' ராக மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவை சிறுக சிறுக மாற்றமடைந்தால் நமக்கு 2.1 (2.11,2.12 etc), 2.2(2.21,2.22 etc), 2.3, 2.4 etc etc என்று '3' வரும்வரை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் காட்டும் ஆதாரங்களை பார்த்தீர்களா?

    நிச்சயமாக பரிணாமத்தை நம்புபவர்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
    -Thanks. Ethirkkural.blogspot.com


    1.முள்ளம் பன்றிகள் பெற்றிருக்கும் தன் உடலில் முட்களை பரிணாம ரீதியாக எந்த உயிரின மூலத்திலிருந்து பெற்றது?
    2.அது வாழும் கால சூழலில் தன்னை பிற உயிரினங்களிருந்து காத்துக்கொள்வதற்காக அஃது உருவானதாக கொண்டால,அந்த இன்றியமையாத பயன்பாடு அவ்வுயிரினம் மூலமாக ஏனைய விலங்குகளுக்கு ஏற்படாதது ஏன்?
    3.அதுப்போலவே பச்சோந்தி என சொல்லப்படும் ஓணான் போன்ற ஒருவகை உயிரினம் தேவைகேற்ப தன் தோலின் நிறத்தை மாற்றும் பண்பை எந்த பரிணாக அடிப்படையில் பெற்றுக் கொண்டது?
    4.பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன்?-இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன்?அல்லது இரண்டும் வெவ்வேறு திணை,தொகுதி,வகுப்பு,வரிசை, துணைவரிசை, குடும்பம் கொண்டதாக இருந்தாலும் பச்சோந்தியின் சிறப்பு பண்பை ஓணான் பெறாதது ஏன்?
    5.ஆமைகளுக்கு அதன் பாதுகாப்பு அவசியம் கருதி மேல்புறமாக இருக்கும் ஓடு எந்த உயிரின மூலத்திலிருந்து எந்த சமயத்தில் பெற்றது?
    6.தேனீக்கள் தனது அபார சக்தியால் தனது (வீட்டை) கூட்டை அறுங்கோண வடிவில் அதுவும் சற்றும் கோணாலாக இல்லாமல், கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும்-இதனை எந்த பரிணாம நிலையின் போது பெற்றது?
    7.மேலும் தன் தேவைகேற்ப தேனெடுக்கப் போகும்போது தேன் இல்லாத பூக்களை விடுத்து அதிக தேனுள்ள பூக்களை மிக எளிதாக ,லாவகமாக அவற்றால் எப்படி கண்டறிய முடிகிறது? பகுத்தறிவின் மொத்த உலகமாக வர்ணிக்கப்படும் மனிதனால் அத்தகையே தேனீக்களின் சாதரண செயல்களை செயல் படுத்த முடியாதது ஏன்?
    8.ஒரு நல்ல திடமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.-இந்த நிர்வாக திறனை எந்த கட்டத்தில் பெற்றது,அதன் பின் அதன் மூலம் உண்டான(?) ஏனைய உயிரினங்களுக்கு வீடுகட்டும் ஒழுங்குமுறையும்,திறம்பட செய்ய வேண்டிய நிர்வாக திறனும் இல்லாமல் போனது ஏன்?
    10.ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.-தனது கூடு அதிகப்படியான எடையால் விழுந்துவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பான முன்னேற்பாடு அவ்வுயிர்களுக்கு எப்படி தெரிந்தது?அல்லது கால சூழலுக்கு தகுந்தவாறே தனது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கொண்டால் இந்த வகையில் அமைந்த கூடு கட்டுமானத்திற்கு முன்பாக அதன் கூடுகள் எத்தனை முறை விழுந்துள்ளது?
    Thanks Bro Gulam

    ReplyDelete
  3. 11.வண்ணத்துப்பூச்சிகள்- அதன் இறக்கைகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருக்க பரிணாம அடிப்படையில் என்ன காரணம்? ஏனெனில் பரிணாம அடிப்படையில் அதன் இறக்கையின் நிறங்கள் என்பது தேவையில்லாத ஓன்று. பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்- எனும்போது எந்த சூழ் நிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்திற்கு அப்பூச்சிகளுக்கு அவசியமே ஏற்படவில்லை.அப்படி வர்ண தேவைகள் அவசியமென்றால் பரிணாம அறிவியலில் அதற்கான ஆதாரம்?
    12.பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன அதுவும் வெவ்வேறான வர்ண மூலத்துடன்-?வர்ணங்கள் அழகுக்காவே என்றாலும் (அதுதான் உண்மையும்) கூட எந்த நிலையிலும் ஒரு உயிரினம் தனக்கான அழகை தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தானே தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இன்றளவும் மனிதனால் தன் அழகை தானே தெரிவு செய்ய முடிவதில்லை ஏன்?
    13.சிறுத்தைகளுக்கு அதி வேகமான ஓட்டம் இரைப்பிடிப்பிற்காக தன் சுய தேவையின் அடிப்படையில் காலப்போக்கில் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் தம் உடம்பில் உண்டான(இருக்கும்) கோண வடிவ வர்ண தோற்றத்திற்கு என்ன காரணம்?அதுப்போலவே வரிக்குதிரைக்கும்,ஓட்டகசிவிங்கிகளுக்கும், மான்களுக்கும், புலிகளுக்கும் -தம் உடம்புகளில் இருக்கும் பிரத்தியேக வண்ண அமைப்புகளுக்கு எந்த சூழல் அந்த மாற்றங்களை அவைகளுக்கு ஏற்படுத்தியது?
    14.மற்ற பறவைகள் போலல்லாமல் ஆந்தைகளுக்கு மட்டும் மனித முக அமைப்பு இருப்பது ஏன்? அதனை தொடர்ந்த உயிரினங்கள் அத்தகையை இயல்பை பெறாதது ஏன்?
    15.மனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகளுக்கு பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியாமல் நிறக்குருடு தன்மையே பெற்றிருப்பது ஏன்? ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் இயல்பை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம்? அவ்வாறு நிறக்குருடு அடைவதற்கு கால,சூழல் பரிணாம பிண்ணனி என்ன?
    14.நண்டு எனும் நீர் வாழ் உயிரினம் எந்த உயிரின தோற்ற வளர்ச்சியின் விளைவாக வித்தியாசமான கூட்டுக்கண்கள் அமைப்பை பெற்றுள்ளது?
    15.சிலந்தி தன் இரைக்காக தனது தன் உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் வீடு (நூலாம் படை) கட்டுவது தன் சுய தேவை அடிப்படையில் என்பது ஏற்புடையது.ஆனால் அவ்வாறு உருவாக்கிய தம் வீடு மிக மெல்லிய இழையாக இருந்த போதிலும் தான் மட்டும் அந்த சிக்கல் வழியாக இலகுவாக செல்வதற்கும்,அவ்வீட்டின் எடை அச்சிலந்தியின் எடையே விட மிக சொற்பான இருந்தாலும் எடை கணத்தால் ஒடிந்தோ,விழுந்தோ விடாமல் இருக்க எந்த கால சூழலில் அல்லது எந்த பரிமாண வளர்ச்சி கட்டத்தில் கற்றுக்கொண்டது?

    மேலே குறிப்பிட்ட விளக்கத்தின் (வினாவின்) படி உயிரினங்கள் ஒவ்வொன்றும் பொதுவான உயிரினங்களின் தொடர்பு அடிப்படை இயல்புகளில் கூட ஒற்றுமையில்லாமல் அவையாவும் தனக்கென்று தனித்தனி சிறப்பியல்புகளுடனேயே அமைய காண்கிறோம்.எனவே அத்தகையே தனி இயல்புகள் என்பது பரிணாம மாற்றத்தால் எப்படி ஏற்பட்டது என்பதை விட ,ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதே எம் தரப்பு வாதம். இப்படி ஒவ்வொரு உயிரும் சிறப்பியல்களுடன் அமைய வாழ்வதென்பது கடவுள் என்ற சக்தியால் மட்டுமே உண்டாக்க சாத்தியம் என்பதே எம் நிலைபாடு.

    உங்களை பொறுத்தவரை உலகில் முதன்முதலில் தான் தோன்றியான உயிரின உருவாக்க மூலம் தவிர்த்து அதை தொடர்ந்த ஏனைய உயிரின தோற்றம், வளர்ச்சி படி நிலை ஆகியவற்றிற்கு தெளிவான விளக்கங்கள் பரிணாமவியல் கோட்பாட்டில் இருப்பதாக சான்றுப் பகிர்கிறீர்கள்.அதன் அடிப்படைப்பில் நான் மேற்குறிப்பட்ட உயிரினங்கள் தாங்கள் கூறும் பரிணாமவியல் ஊடாக வலம் வந்ததற்கு சான்றுகள் இருக்க வேண்டும்.அதுவும் நான் மேலே குறிப்பிட்டவைகள் எதாவது ஒரு உயிரினங்களின் தொடர் வரிசையில் வந்தே ஆக வேண்டும்.ஏனெனில் ஆரம்ப நிலை மீன்கள் >தலைப்பிரட்டை >தவளை உதாரணமும், இறுதியாக குரங்கினம்> நியாண்டர்தால் > மனிதன் உதாரணமும் -போன்ற மேற்கோள்கள் பரிணாம் குறித்த உயிரின தொடர்வசரிசைக்கு ஆதாரமாக இருக்கும் போது நான் கேட்ட அனைத்து " ? " க்கும் மிக தெளிவாக,விரிவாக விளக்கங்கள் உங்கள் (பரிணாமவியல்)கோட்பாடுகளில் நிறைந்திருக்கும், அக்கோட்பாடுகளிலிருந்து விடை அளிப்பீர்கள் என நம்புகிறோம்!
    -Thanks Bro. Gulam

    ReplyDelete
  4. நண்பர் சுவனப் பிரியன்
    பல இஸ்லாமிய மத வாதிகள் பரிணமத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதும்,மத பிரச்சாரம் அதற்கு ஏற்ற மாதிரி மாறி வருகின்ரது என்பதுதான் எதார்த்தம்.
    நீங்கள் குறிப்பிட்ட நீல் எல்ட்ரெட்ஜ் ம் ஒரு பரிணாம விஞ்ஞானியே,இயற்கை தேர்வுக்கு மாற்றாக "ஒழுங்கமைக்கப் பட்ட சம்நிலை" என்ற தத்துவத்தை வரையறுக்கிறார்.அதும் பரிணாமமே.அவருடைய 1986 வருரட புத்தகத்தில் இருந்து சில வரிகள் டார்வினின் இயற்கைத் தேர்வு முறையை விமர்சிக்கும் மேற்கோள் காட்டினீர்கள்.2002ல் இவர் ஆற்றிய உரை காணொளியில்,படைப்புக் கொள்கையை எதிர்ப்பதை பாருங்கள்.
    அறிவ்யலாளர்களின் கருத்து வித்தியாசங்கள் பரிணாம் எப்படி என்பதில்தானே தவிர ,எதிர்த்து அல்ல.
    http://en.wikipedia.org/wiki/Niles_Eldredge
    http://en.wikipedia.org/wiki/Punctuated_equilibrium
    http://www.youtube.com/watch?v=wcva2dXecO0

    ReplyDelete
  5. அருமையான பதிவு சகோ. அகமது குட்டி பற்றி நானும் கேள்வியுற்றுள்ளேன்... அவரது எழுதிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாலே போதும், அவற்றில் இருக்கும் சொதப்பல்களை என்னால் பிட்டு பிட்டு வைக்க முடியும் என்பேன் ...

    மைட்டோகோண்டிரியல் ஈவ் என்பது ஒரு பெண்ணல்ல என்பது தான் உண்மை. அது ஹோமோ சாப்பியண்ஸுக்கு முன்னாள் இருந்த ஹோமினாய்ட்கள் ( மனிதக் குரங்கு போல ஒன்னு ) அதில் இருந்து வெளிப்பட ஆரம்பித்த முதல் மாற்றத்தின் MITOCHONDRIA .. MITOCHONDRIA என்பது அணுக்குள் இருக்கும் ஒரு பாகமே...

    மதவாதிகளுக்கு வேலை என்பது ரொம்ப ஈஸி இருப்பதையும் இல்லாததையும் முடிச்சிப் போட்டு பிதற்றுவதே.. தங்கள் தரப்பு ஆதாரங்களை அல்லது மறுப்பு ஆதாரங்களை வைத்ததே இல்லை ..

    ReplyDelete
  6. உண்மையிலேயே மதவாதிகளுக்கு பரிணாமம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனில் கீழ்க் கண்ட நடைமுரைகலை செய்ய்லாம்.
    1.ஏதேனும் ஒரு உயிரினத்தின் பரிணாம ,அதன் மூதாதையர்ரிடம் இருந்து பரிணாம வளர்ச்சி பெறும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதை மட்டும் ஆய்வு செய்தால் போதும்.நடக்க இயலாத ஒன்று நிகழாது.டார்வினின் இயற்கை தேர்வின் படி நடக்கும் வாய்ப்புகளில் ,சூழ்நிலைக்கு அதிகம் பொருந்துவது மட்டும் நீடிக்கிறது[அதாவது அதன் தலைமுறை தொடர்கிறது].

    2.குரங்கும்,மனிதனின் முன்னொரும் ஒரே உயிரினத்தில்[ஹோமோ] இருந்து தோன்றினர்.இதனை மட்டும் ஆய்வு செய்து தவறென்று நிரூபிக்க முயலாம். இத்துறையின் வல்லுனர்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகள்,காணொளிகள் பார்த்து அதன் மீது விமர்சம வைக்க்லாம்.

    3. பரிணம்த்தின் ஒரு மாற்றத்தின் விளக்க்த்தை நீங்கள் தவ்று என்று அறிவியல்[கவனிக்கவும்] ஆய்வு பூர்வமாக் நிரூபித்தால் கிடைக்கும் பலன்கள் அமோகம்.உலக்மே உங்களை திரும்பி பார்க்கும்.உங்கள் கருத்தை கொண்ட அறிவியலாளருடன்[கவனிக்கவும்] தொடர்பு கொண்டு விவாதியுங்கள்.அவருடைய கட்டுரைகள்,காணொளிகள் பதிவுகளில் அளிக்கலாம்.
    ***************************
    இதை விட்டு ஒட்டக சிவிங்கி,மான்,முள்ளம் பண்றி,மீன் என்று தவி தாவி கேட்பதில் இருந்தே குரங்க்கில் இருந்து மனிதன் பரிண்மித்தது தெளிவாக புரிகின்றது.

    ReplyDelete
  7. பரிணாமம் என்பது தப்பி பிழைக்கும் உடலமைப்புக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.. ஒரு சூழலுக்கு ஏற்ப தன்னை படிப்படியாய மாற்றிக்கொள்ளும் பொது அங்கு பரிணாமம் அடைகிறது..
    சில DNA பிழைகளால் பிறக்கும் வித்தியாசமான உடல் அமைப்பு அந்த சூழலில் சிறப்பாக வாழ இலகுவாக இருக்குமாயின் அது ஒரு புதிய உயிராக மாறுகிறது ..
    இதக்கு லட்சக்கணக்கில் ஆண்டுகள் தேவைப்படும்..

    பரிணாமம் உண்மை என்று 100% அறிந்த பிறகும், சிலருக்கு புரிய வைக்க முடியவில்லை.. காரணம் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை என்றோ அல்லது இயற்கையை அறிந்து கொள்ள வில்லை என்றோதான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete