இறை நம்பிக்கையாளர்கள் வழக்கமாக இறைவனை பார்க்க் முடியுமா என்னும் கேள்விக்கு அவரை [மனதில்] உணர மட்டுமே முடியும் என்று கூறுவர். இந்த கூற்றினை பல மதங்களின் பார்வையில் ஆய்வோம் .
உணர்தல் என்றால் என்ன?
ஐம்புலன்களின் மூலம் பெறப் படும் தகவல்கள் மனதில்[மூளை] ஏற்படுத்தும் மாற்றம்.சில சமயம் மனதில் நடந்த சம்பவங்களை நினைத்தோ,கற்பனை செய்தும் கூட இந்த மாற்றம் ஏற்படலாம்.
_________
From Webster's Dictionary
Definition of FEELING
1
a (1) : the one of the basic physical senses of which the skin contains the chief end organs and of which the sensations of touch and temperature are characteristic : touch (2) : a sensation experienced through this sense
b : generalized bodily consciousness or sensation
c : appreciative or responsive awareness or recognition
2
a : an emotional state or reaction <a kindly feeling toward the boy>
b plural : susceptibility to impression : sensitivity <the remark hurt her feelings>
3
a : the undifferentiated background of one's awareness considered apart from any identifiable sensation, perception, or thought
b : the overall quality of one's awareness
c : conscious recognition : sense
4
a : often unreasoned opinion or belief : sentiment
b : presentiment
5
: capacity to respond emotionally especially with the higher emotions
6
: the character ascribed to something : atmosphere
7
a : the quality of a work of art that conveys the emotion of the artist
b : sympathetic aesthetic response
______________
இறைவன் என்பது என்ன?
இப்பிரபஞ்சத்தை படைத்து,வழிநடத்துவதாக கருதப்படும் சக்தி(கள்).ஆண் ,பெண் ,ஒருமை,பன்மை என்று பலவித தன்மைகள் இதற்கு மதங்களால் சூட்டப் படுகின்றது.
இறைவனை உணர்வது என்றால் என்ன?
மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் இணைத்து பார்த்தால்,அந்த இறைவன் மனிதனின் உணர்வில் வேறு எதுவும் தர இயலாத ஒரு மாற்றத்தை சிந்தனையில் கொண்டு வருகின்றது,.எப்படியெனில் சில சமயம் ஐம்புலன்களின் மூலமாகவோ,அல்லது விளகக முடியாத தகவல் தொடர்பாகவோ மூளைக்கு செய்தி வருகின்றது .இந்த இறைவனோடு தொடர்பு கொள்ள முடிந்ததாக கூறிய பலரை இறைவனின் பிரதிநிதிக்களாக பலர் ஏற்கின்றனர்.இந்த இறைவனை உணர்தல் பல மதங்களில் பல வகைகளில் கூறப்படுகின்றது.
___________
இறை மறுப்பாளர்கள் இந்த பிரபஞ்சத்தின் படைப்பு, நடக்கும் செயல்கள் அனைத்தையும் அறிவியலின் துணை கொண்டு விளக்கி கொண்டிருகின்றார்கள்.இன்று விளக்க முடியாத ஒவ்வொரு இயற்கையின் புதிரும் நாளை விளக்கப் படும்.இதற்கான தெடலில் பல்வித ஆய்வுகள் மூலமே ஒரு ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்திற்கு வருகின்றார்கள். அக்கருத்தும் பல்வித ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டு மற்றி அமைக்கவும் படலாம்.
இறை மறுப்பாளர்கள் இறைவனின் இருப்பை உறுதி செய்ய அறிவியல் ரீதியான முறைகளையே பயன் படுத்துவார்கள்.அறிவியலின் மூலம் இறைவனை உணர முடியுமா?
இந்த சரியாக வரையறுக்கப் பட்ட நிலைதான் இறை மறுப்பாளர்களின் கருதுகோள் ஆகும்.
________________
இந்து மதம்:
இது பல மதங்களின் சங்கமம் என்பதால்,இறைவன் மனித அவதாரம் எடுப்பதும்,இன்னும் சிலர் அவதாரங்களாக போற்றப் படுவதும்,இறைவனை உணர்வது மிக எளிதான செயலாக கூறலாம்.ஒரு கோயிலின் உள்ளே செல்லும் போது பக்தி பரவச நிலையை அடைவதையே அவர் இறைவனை உணரும் நிலையாக கூறும் போது அதற்கு மறுப்பில்லை.கனவில் இறைவன் வந்தார்,சாமியாடி மூலம் பேசினார் என்பதெல்லாம் நடைமுறை வழக்கமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது.ஒவ்வொரு உணர்தலும் சிலருக்கு நம்பிக்கைக்கு ஆதாரமாகின்றது..
மத புத்தகம் சாராத மதம். ஆகையால்,வாழ்வில் தொன்று தொட்டு நிலவும் அனுபவங்களின் அடிப்படையிலேயே இறைவனை உணர்தல் என்னும் பிரச்சினை இங்கே அணுகப் படுகின்றது.சங்கரரின் அத்வைதத்தின் மனிதன் கடவுளை அடைய முயற்சிக்க வேண்டுமென்பதும்,இரமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தில் மனிதனும் கடவுளும் ஒன்று என்பதும் கூட முக்கியமான் கொள்கையாக்கங்கள்.
ஆக இந்து மதம் என்று சொல்லப்படும் மத தொகுப்பில் பெரும்பாலானோருக்கு கடவுளிடம் நேரடியாகவே தொடர்பு கொள்ளும் உணர்வை பெற இயலுவதாக நம்புகிறார்கள்.இறைவனின் சிலையையோ,புகைப்டத்தையோ,தூரத்தில் ஒரு மலையையோ பார்க்கும் போது கூட ஒருவர் உணர்வு நிலை அடைவதும்,அது இறைவனிடம் வந்த வெளிப்படுத்தலாக் அவர் எடுத்துக் கொள்வதும் இங்கு மிக இயல்பானது.இந்த உணர்வுகளை பெறவே சிலர் விரதம்,பூஜை,சடங்குகள் செய்கிறார்களா என்பதும் ஆய்வுக்குறியது.இது பற்றி நிறை விவாதிக்க இயலும் என்றாலும் பதிவின் த்லைப்பான இறைவனை உணர முடியும் என்ற கேள்விக்கு ஐயந்திரிபர முடியும் என்றே பதில் அளிக்கிறது என்று கொள்ள முடியும்..ஒரு விஷயத்தை[திருமணம்,புதுமன புகுதல்...] செய்யும் முன் ஆருடம் பார்ப்பது போன்ற செயல்கள் இறைவனின் விருப்பு/வெறுப்பை தெரிந்து கொள்ளும் முயற்சியே ஆகும். உணர முடிவதாக் மட்டுமல்ல தகவல் பரிமாற்றம் கூட செய்ய முடியும் என்றே இந்துக்கள் நம்புகிறார்கள் என்பதே நம் முடிவு.
இன்னும் கொஞ்சம் மாறுபட்ட விளக்கங்களுக்கு இந்த பதிவுகளை பார்க்கலாம்.
http://hayyram.blogspot.com/2010/12/blog-post_17.html
http://www.eegarai.net/t37366-topic
*************
கிறித்தவம்
இம்மத கொள்கையாககத்தின் படி மூவரில் ஏகன்[Trinity] என்ற பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலைகளில் இருக்கிறார். பைபிளின் பல வசனங்கள் இப்போது மனிதன் பரிசுத்த ஆவி எனப்படும் இறைவனின் வெளிப்படுத்துதல்,அல்லது தேவனை உணரும் நிலையை இப்போதும் கூட அடைய முடியும் என்றே கூறுகின்றது.ஏதேனும் கிறித்தவ பிரச்சாரகர்கள் நடத்தும் கூட்டத்திற்கு சென்றால் இறைவனுடன் பலவித மொழிகளில் பேசுவதாக சத்தமிடுவதும்,சில பிரச்சாரகர்கள் ஒருவரை பேர் சொல்லி அழைக்கிறேன் என்பதும், இங்கும் இறைவனை உணர்வது மட்டுமல்ல,தகவல் பரிமாற்றமும் இயல்பான காரியமாக் கிறித்தவர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.
http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=34536300
_____________
இஸ்லாம்
இப்போது மத பிரச்சாரம் அதிக அளவில் செய்யும் நண்பர்கள் நிறைந்த மதம்.இகேள்விக்கு குரானில் இருந்து மட்டுமே கூற முயல்கிறேன்.ஏனெனில் ஒவ்வொரு பிரிவினரும் ஒவொரு ஹதிதுகளை பின் பற்றுவதும்,அவர்களே இது வலிமை வாய்ந்தது,பல்கீனமானது என்று குழப்புவதால் இந்த நிலை.
க்டவுளை இருப்பை அறிய குரான் கூறும் வழி என்ன? இப்போது குரானின் படி அறிய முடியுமா?
குரானின் கடவுள் ஒருவர், குரான் அவரை ஆண் பால் விகுதியிலேயே அழைக்கிறது.
5:40. நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
இங்கு கொள்கையாக்கம் இறைவன் படைக்கும் போதே ஒருவர் சொர்க்கம்,நரகம் செல்வார் என்று தீர்மானிக்கப் பட்டதாக கூறுகின்றது.நாடியவர்களை வழிநடத்துவதும் நாடாதவர்களை நரகத்திற்கும் அனுப்புகிறார்.இறைவன் நாடாதவர்கள் நிச்சயம் உணர முடியாது.
இறைவனின் இருப்பை பல வித இயற்கை நிகழ்வுகளை அத்தாட்சிகளாக காட்டுகிறது குரான்.
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
நிச்சயம்
நாடியவர்கள் மட்டுமாவது கூட இறைவனை உணர முடியுமா?
இதுகுறித்து தெளிவான செய்தி இல்லை.இறைவன் இறைத்தூதர்கள் என்ற்ழக்கப் படும் சில தேர்ந்தெடுக்கப் பட்ட மனிதர்களுக்கு சில செய்திகளை அளித்து அவற்றில் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று குரான் கூறுகின்றது. நம்பினால் சொர்க்கம்,நம்பாவிட்டால் நரகம் என்றே கூறுகின்றது.சுய சிந்தனை,பழக்க வழக்கங்கள் செயல்கள் அங்கீகரிக்கப் பட்ட மத புத்தகங்களின் படி மட்டுமே இருக்க வேண்டும்.
இறைமறுப்பு நம்பிக்கை கொள்ள மனதற்ற, பிற மதங்களின் கருத்தாக்கங்களில் விருப்பமற்றவர்கள் குரானிய கருத்தாக்கம் பிடித்து நம்பிக்கை கொண்டால் இஸ்லாமிய நம்பிக்கை [ஈமான்] கொண்டவ்ராகிறார். நம்பிக்கை கொண்டாலும் இது அவருடைய சுய செயலாக இருக்க முடியாது எற்கெனவே தீர்மானிக்கப் பட்டது.
முகமது இறுதி தூதர் ,குரான் இறுதி செய்தி என்பது சுன்னி பிரிவு இஸ்லாமியர்களின் கொள்கையாகக்ம் என்பதால் இறைவனை தொடர்பு கொள்ள இயலாது.குரான் படிக்கும் போது உணர்வதாக உணந்தால் அத்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது.
____________
இந்து,கிறித்தவர்கள் இறைவனை தொடர்பு கொள்வதை அறிவியல் ஆய்வு செய்வதும் இல்லை,அதனை ஏற்பதும் இல்லை.இஸ்லாமில் குரானை படிக்கும் இறைவன் நாடியவர் மட்டுமே உணர முடியும்.இறை நம்பிக்கையாளர்கள் படித்து உணரவில்லையென்றால் இறைவன் நாடவில்லை என்று கூறிவிடுவார்கள்.. இன்னும் பல விஷயங்களை கூற இயலும்.அவசியமெனில் இன்னொரு பதிவில் விவாதிப்போம்
இந்து மதத்தில் கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு impersonal ஆக இல்லாமல் personal ஆக உள்ளது என நினைக்கிறேன். அதனால் கடவுளுடன் பக்தன் தன்னை அடையாளம் மற்றும் சொந்தப் படுத்தி உணர்வுபூர்வமாக உறவு வைத்துக்கொள்ள முடியும்.
ReplyDeleteயூத மதத்தில் கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு coldly impersonal ஆக இருந்தது என நினைக்கிறேன். அதனால் ஏற்ப்பட்ட மனத் தேக்கத்தை உடைக்க இயேசு வந்தார். இப்பொழுது கிருத்துவர்கள் பிதாவை விட இயேசுவிடம் தான் தங்களை உணர்வுபூர்வமாக அடையாளப்படுத்தி உணர முடிகின்றது என கருதுகிறேன். கிருத்துவர்களுக்கு impersonal கடவுளை விட personal ஆக உள்ள இயேசு முக்கியமானவராக ஆகிவிட்டார்.
இஸ்லாமை எடுத்துக்கொண்டால், கடவுளுக்கும் மூமினிக்கும்( பக்தர்) உள்ள உறவு, பக்தன் என்ன என்ன அல்லாவுக்கு செய்ய வேண்டும் என்பதை குரானும் அதீஸ்சும் சொல்லும் வரையரைகுட்பட்டது.
அல்லாவுக்கும் அடிமைக்கும் உள்ள உறவு dead cold stone impersonal. நான் அறிந்த வரையில் அல்லாவிடம் ஒருவன் நேருக்கமாக இருக்கும் தருணம் அல்லது அவ்வாறு அனுமதிக்கப் பட்ட தருணம், ஒருவன் வணக்கம் செய்யும் பொழுது அல்லா தன்னை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அல்லது தான் அல்லாவை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், என்ற எண்ண தருணத்தில் தான்.
இந்த நிலைமைப் போக்கத்தான் சூபிஸம் (sufism) என்ற ஒரு இறை வழிப்பாடு இஸ்லாத்திற்கு வந்தது. இதனால் அல்லாவிடம் ஒரு உணர்வுப்பூர்வமான் உறவுமுறை ஏற்பட்டது.
என்ன.... ஒருப் பிரச்சனை அல்லாவிடம் டைரக்ட் லைனா என்று கோபமுற்ற வகாபிகள் அதை பிதாத்து என்று அறிவித்து அவுலியாக்களிடம் போர் புரிகிறார்கள்!!!!!!!
வணக்கம் நண்பர் நரென்,
ReplyDeleteசரியான பார்வை.உண்மையில் மத பிரச்சாரகர்கள் இறையியல் கோட்பாடுகளையும்,மனித ஒழுக்க விழுமியங்கள் பற்றி பேசுவதில்லை.அதன்னல் இம்மதிரி வேலைகலை நாம் செய்ய வேண்டியுள்ளது.
**********
அதற்கு பதிலாக மதத்தில் அறிவியல் அத்னால் நம்பு என்று சொலவ்து இவர்கள் இறையியல் கோட்பாடுகளில் பல்கீனமான்வர்கள் என்பதையே உணர்த்துகின்றது.
வருகைக்கும் ,கருத்து பதிவிற்கும் நன்றி.
சார்வாகன்!
ReplyDelete//அதாவது இந்த அத்தாட்சிகளை எல்லாம் பார்த்து ,பிற [மத அறிவியல்] விளக்கங்களை விட ,குரான்(வஹாபி கொள்கையாக்கம்),சுன்னி பிரிவு ஹதிதுகள் மட்டும் சொல்லும் விளக்க்ங்கள் சரியாக உங்களுக்கு படுவதை இறைவனை உணர்தல் என்று கூறுகிறீர்கள் .சரியா?//
திரு மூலர் மந்திரம், மற்றும் நான்கு வேதங்கள், திருக்குறள் என்று நம்மிடமும்(தமிழர்கள்) இறை தேடல் அந்த காலத்திலேயே சிறந்து விளங்கியுள்ளது. இவை அனைத்திலும் இறைவனின் கருத்துகளும் ஆங்காங்கே தென்படுவதைக் காணலாம். எவை எல்லாம் மனிதனின் கருத்துகள் எவை எல்லாம் இறைவனின் கருத்துகள் என்று துரதிர்ஷ்டவசமாக நம்மால் பிரித்தறிய முடியவில்லை. அதுதான் பிரச்னையே!
//இருந்தாலும் சிலரை நரகத்திற்கே படைத்தோம் எனில் ,அவர்கள் நினைத்தாலும் உங்கள் கொள்கையை ஏற்கமுடியாது என்றுதானே அர்த்தம்.அப்போது உங்களுக்கும் மறுமை நாள் வரை நீங்கள் நம்பிக்கையாளரா இல்லையா என்பது தெரியாது. எந்த இஸ்லாமிய பிரிவு சரியானது என்பதும் குழப்பம் இல்லையா!!!!!!!!!!!!!!//
நீங்கள் கேட்பது விதியைப் பற்றி! இதைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்று முகமது நபி தடுத்துள்ளதால் முன்பு நான் கொடுத்த ஒரு சிறிய விளக்கத்தை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
'தன்னிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை இறைவன் மாற்ற மாட்டான்'
-குர்ஆன் 13:11
மனிதர்கள் முயற்ச்சிக்க வேண்டும். அந்த முயற்ச்சியின் பலனாக இறைவனும் அந்த மக்ளை நேர்வழியில் செலுத்துகிறான். அதாவது தூண்டினால் துணை செய்வேன் என்கிறான் இறைவன்.
விதி என்ற ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்கு தெரியாது என்று ஆகிவிடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி என் இறைவனாக இருக்க முடியும்? விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம். விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்.
விதி என்ற ஒன்றுக்கு மட்டும் எப்படி விளக்கம் அளித்தாலும் குழப்பமே வந்து நிற்கும். அதற்குரிய அறிவை இறைவன் நமக்கு கொடுக்கவில்லை.
'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதில் நீங்கள் பூரித்து போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'-குர்ஆன் 57:23
நடந்து விட்ட காரியங்களுக்குத்தான் விதியை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் நம் விதி எது என்று நமக்கு தெரியாத காரணத்தால் விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளை ஒரு விபத்தில் எனது காலும் கையும் வெட்டப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். இன்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியுமா? எனவே விதியைப் பற்றிய ஒரு தெளிவின்மை மனிதர்களுக்கு நன்மையே தருகிறது. எனவே தான் உலக கணக்கெடுப்பில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் முஸ்லிம்களிடம் மிக மிக கம்மியாக இருக்கிறது. எது நடந்தாலும் இறை விதிப்படியே என்று முஸ்லிம்கள் நம்புவதுதான் இதன் காரணம்.
'இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது வைப்பான்: அவனிடமே தாய் ஏடு உள்ளது.'-குர்ஆன் 13:40
ஒரு மனிதன் வருங்காலத்தில் தான் நல்லவனாக வாழ வேண்டும், தனக்கு சொர்க்கத்தில் இறப்புக்குப் பிறகு வாழ்வு வேண்டும் என்றும் நற் கருமங்கள் செய்வதாகவும் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்தால், அந்த பிரார்த்தனையை ஏற்று தான் எழுதிய விதியை தானே மாற்றுகிறான் இறைவன்.
இதையேதான் வள்ளுவரும்
'ஆகூழால் தோன்றும் அசைவன்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'-குறள் 371 என்கிறார்.
செல்வம் வந்து சேர வேண்டிய நல்ல வேளை வந்து விட்டால் ஒருவனிடம் ஊக்கமும் வாடா முயற்சியும் வந்து விடும். போக வேண்டிய வேளை வந்து விட்டால் சோம்பல் வந்து செயலிழக்கச் செய்து விடும். எனவே நமது எண்ணத்தில் நமக்கு நல்ல விதியாக வருங்காலம் வர வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
விதியை உங்கள் வாழ்க்கையில் விலக்க நினைத்தாலும் உங்களையும் மீறி அநத விதி உங்கள் முன்னால் வந்து நிற்கும் என்று குறள் 380ல் வள்ளுவர் விளக்குகிறார். இதில் மேலும் விளக்கப் புகுந்தால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வந்து விடுவோம். :-(
2:28 PM
நண்பர் சுவனப் பிரியனுக்கு வணக்கம்
ReplyDeleteஇஸ்லாமின் கோட்பாடுகளில் சிலவற்றை திருமூலர்[சுமார் ஏழாம் நூற்றாண்டு],திருவள்ளுவர்[முதல் நூற்றாண்டு] குறிப்பிட்டு இருந்தால் எனக்கு ஆட்சேப்னை இல்லை.
இஸ்லாம் என்பதன் இறையியல் கொள்கைகளை ஐயந்திரிபர எளிதாக வரையறுக்கும் சில முயற்சிகளை மேற்கொள்கிறேன்.மேற்கூறிய பெரியவர்களின் கருத்துகளோடு ஒப்பிடுவதும் அவசியம் இல்லையென்று நினைக்கிறேன்.
மிகவும் எளிதாக்வே குறிப்பிடுகின்றேன்.
இஸ்லாமில் இறைவனை உணர்வதை எப்படி வரையறுக்கிறீர்கள்?.சில பதிவர்கள் உணர்ந்ததாக கூறுவது எப்படி?
இறைவன் நாடியவர்கள் மட்டுமே நேர்வழியை (இஸ்லாம்)அடைய முடியும் என்று குரான் தெளிவாக்வே கூறுகின்றது.
_______________
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
_____________
இந்த வசனத்தின் படி
1.முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
2.இதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.
ஆக ஒருவர் சுய புரிதலில் மட்டும் இஸ்லாமியராக முடியாது. அதாவது நடுநிலைமையோடு வேதங்களை பகுத்தறிந்து(?) மட்டும் நேர்வழி அடைய முடியாது.
அருமையான பதிவு சகோ.
ReplyDeleteகடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதை விடவும் ? உணர முடியுமா இல்லையா என்பது இன்னும் சுவாரஸ்யமான ஆய்வாகும்.
கடவுள் உணர்ச்சியினை இன்ன பிற உணர்ச்சியோடு தொடர்புப் படுத்திப் பார்க்கலாம் - நவரசம் எனப்படும் ஒன்பது உணர்வுகளை எடுத்து ஆய்ந்தால், அந்த ஒன்பது உணர்வுக்கு எதோ ஒரு புலனுறுப்பு ஊடாகவே உணர்தல் நடக்கின்றது.
ஆனால் கடவுளை உணர்வது என்பது வெறும் மனம் ( மூளை ) மட்டுமே ஆகும், அதாவது உள்ளம் மட்டுமே கடவுளை உணர்வதாக அறிய முடிகின்றது. அதனால் தான் என்னவோ கடவுள் எனப் பெயரிட்டார்களோ என்னவோ ?
அது வெறும் நம்பிக்கை, உணர்வின் அடிப்படையிலானவை எனும் போது அங்கு ஆராய்ச்சி நிகழ்த்த வாய்ப்பே இல்லை, ஆனால் அது முற்றிலும் உண்மை எனக் கூற முனையும் போது அவர்களால் நியாயமான தரவுகளை வைக்க முடிவதில்லை...
இஸ்லாமியர்களின் கூற்றுக்கு வருவோம் ?
ReplyDeleteஇறைவனை இஸ்லாம் எவ்வாறு define செய்கின்றது. அனைத்தையும் கட்டிக் காக்கும் ஒரு பரம்பொருள். அதாவது அந்த பரம்பொருளின் அங்கமாக உயிர்கள் இல்லை என்பதே இஸ்லாம் சொல்லும் தத்துவம். பரம்பொருளின் படைப்பு, அவர் எஜமானர், நாம் வேலையாள் என்பதைப் போலான ஒரு கொள்கை அல்லவா ?
அடுத்து எஜமானார் தான் எல்லா முடிவுகளையும் எடுக்கின்றார், எஜமானாரின் முடிவுகளை வேலையாட்களுக்குக் கொடுக்கின்றார். வேலையாள் அதைச் செய்ய வேண்டும், செய்தால் கூலி, இல்லை என்றால் தண்டனை.
அடுத்து எஜமானார் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துக்கின்றார், மேற்பார்வை செய்கின்றார், ஒருவனை நாடி அவனுக்கு நல்ல வேலைகளைக் கொடுத்து அதற்கான நல்ல கூலியையும் கொடுக்கின்றார். ஆனால் சிலரை வேண்டுமென்றே எஜமானார் தவறான வேலை செய்வதற்கே படைத்துள்ளார், அவர்கள் நல்லது செய்தாலும் அது முடியாதக் காரியம், அவர்களுக்கு தண்டனை PREDETERMIND செய்யப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றார். PREDETERMIND செய்யப்பட்ட ஒருவர் செய்யும் பாவங்களுக்கு எப்படி அந்த ஒருவர் பொறுப்பாவார், அவருக்கு தண்டனைக் கொடுக்க முடியும் ( ரோபோக்கள் சொல்வதைத் தான் செய்யும், அவை தப்பு செய்யவே படைக்கப்பட்டன, தப்பு செய்த போது, தண்டிக்கப்பட்டன - என்ன நியாயம் சார் இது )
அடுத்து எஜமானார் தான் அனைத்தையும் கண்ட்ரோல் செய்கின்றார், கிட்டத்தட்ட வேலையாட்கள் அனைவரும் ஒருவகை ரோபோட்கள் போலத்தான், ஆனால் சில ரோபோட்கள் தானாகவே இயங்குவதாக வைத்துக் கொள்வோம் ( ARTIFICIAL INTELLIGENCE ) - அவற்றை தானாக இயங்கும் படி படைத்தது யார் குற்றம் ? ஏன் இவ்வளவு செய்தவருக்கு தானாக இயங்கும் படி படைக்க வேண்டும், அப்படி தானாக இயங்கும் படி படைக்கப்பட்டது தானாக இயங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு படைக்கப்பட்ட பொருள் எப்படி குற்றவாளியாக ஆக முடியும். படைத்தவரின் பிழை தானே அது !!!
அதற்கு விதி எனக் கூறுகின்றார்கள். அப்படி எனில் விதியினை கடவுளால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று தானே அர்த்தம் - கடவுளாலேயே விதியினைக் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை எனில், கடவுள் படைத்த நம்மால் விதியினை மாற்ற முடியாது அல்லவா ? அப்படியானால் நாம் செய்யும் ஆகூழ் ( கெட்ட விதிப் பயன்களுக்கு ) நாம் எப்படி பொறுப்பாக முடியும் .... ஹிஹிஹி !!!
// இதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும். //
ReplyDeleteஅருள் புரியாத பட்சத்தில் - அவர் நம்பிக்கைக் கொள்ளாமைக்கான பொறுப்பு கடவுளையே சாரும் அல்லவா ? பிறகேன் தண்டனை மட்டும் மனிதருக்கு .. சரிதானே !!!
நல்ல பாய்ண்ட் சகோ.
@சகோ இக்பால் செல்வன்
ReplyDeleteநான் எழுதுவது உங்களுக்கு எளிதில் புரிகின்றது அல்லவா!!!!!!!.பாருங்கள் நம்ம இஸ்லாமிய சகோதரர்கள் இறைவன் நாடியவர்கள் மட்டுமே ,இஸ்லாமியர் ஆக முடியும்,எவரும் தன் சுய சிந்தனையில் குரானை படித்து விளங்கி இஸ்லாமியர் ஆக முடியாது என்பதை ஏற்காமல் மழுப்புவார்கள்.இது மத பிரச்சாரத்திற்கு பெரும் முட்டுக் கட்டையாக இருக்கும் என்பதால்.
___________
இறையியல் கொளகை வரையறுப்பில் நாம்தான் உதவி செய்ய வேண்டும் போல் இருக்கிறது.
கருத்துப் பதிவிற்கு நன்றி
//இறைவனை இஸ்லாம் எவ்வாறு define செய்கின்றது. அனைத்தையும் கட்டிக் காக்கும் ஒரு பரம்பொருள். அதாவது அந்த பரம்பொருளின் அங்கமாக உயிர்கள் இல்லை என்பதே இஸ்லாம் சொல்லும் தத்துவம். பரம்பொருளின் படைப்பு, அவர் எஜமானர், நாம் வேலையாள் என்பதைப் போலான ஒரு கொள்கை அல்லவா ?//
ReplyDeleteஅருமை சகோ,
படைப்பிற்கு அப்பாற்பட்டு[வெளியே] பரம்பொருள் என்பதே ஆபிரஹாமிய [யூதகிறித்தவ,இஸ்லாமிய] மதங்களின் கோட்பாடு.அவரால் படைக்கப்ப்ட்ட பிரபஞ்சத்தில் அவ்ரும் ,அவரது சிம்மாசனமும் இல்லை .அறிவியல்ரீதியாக இப்படி இருக்க முடியாது அல்லது அறிவியல் ரீதியாக விளங்க,உணர முடியாது.
மனதில் ஏற்படும் உணர்ச்சிகள் மட்டுமே கடவுளை உணர்வது என்றால் கடவுள் மூளையில் மட்டுமே இருக்கிறார்.பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட எந்த மூலையிலும் இல்லை.
அன்பு வணக்கங்கள்,
ReplyDeleteவலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.
நன்றி !
நண்பர் ஷெரீஃப்,
ReplyDeleteவாழ்த்துக்கள்.மற்றவர்களுக்கு உதவி செய்யும் அள்விற்கு கற்றுக் கொள்ளவில்லை என்றே எண்ணுகிறென்.என்னுடைய கற்றல், விருப்பம்,தேடல்களை மட்டுமே எழுதுகின்றேன். உங்களுடைய தேடல்களுக்கு தொடர்ப்பாக எழுதும் பதுவுகளை படியுங்கள்,அது தொடர்பான புத்தகங்கள், சுட்டிகள் செகரித்து அந்த விவரங்களை வைத்து பின்னூட்டமிடுங்கள்.தானாக பதிவுகள் வெளிவர துவங்கும்.மதம் குறித்து எழுதும் போது விவரங்களை சில பதிவுகளோடு ஒப்பிட்டு சரிபார்ப்பது பல சிக்கல்கலை தவிர்க்கும்.
அடிக்கடி வாருங்கள்
நன்றி
http://suvanappiriyan.blogspot.com/2011/06/blog-post_18.html
ReplyDelete//உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை ஏன் அடையவில்லை?//
எந்த உயிரினத்திற்காவது அந்த உறுப்பு அப்ப்டியே இருக்கிறதா ?
/இதற்கு அறிவியல் ஆதாரங்கள் எதனையும் அவரோ அவரது சிஷ்யர்களோ சமர்ப்பிக்கவில்லை/
அறிவியலில் சஅனைத்து கருத்துகளுமே முதாலில் தோராய கருத்தாக உருவாக்கப் படும்ஆதாரம் இல்லாமல் ஆய்வு பத்திரிகைகளில் பதிவிடப் படாது.அவரோ அவருக்கு பின் வருபவர்களோ அதன் மீது பல சோதனைகள் செய்து அக்கூற்றை வலுப் படுத்தலாம். அல்லது எதிர்க்கலாம்.அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல் அவர் பதிவிட்டார் என்பதனை எப்படி கூறுகிறீர்கள்?.
http://en.wikipedia.org/wiki/Charles_Darwin
டார்வின் இக்கொள்கையை புதிதாக ஏற்படுத்தியவர் அல்ல,இவரின் கண்டுபிடிப்பு பரிணாம் வளர்ச்சிக்கு காரணம் இயற்கை தேர்வு நடைமுறை என்பது மட்டும்தான்.
இவருக்கு முன் 1809 ல் ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் போன்ற பல்ர் பரிணாம்த்தை ஆய்வு செய்தவர்கள்.
http://en.wikipedia.org/wiki/Transmutation_of_species
கோழி முட்டை கதை ஷேஃப்ஃபீல்ட் விஞ்ஞானிகளின் ஒரு கருத்து.அதற்கு பிரபல இறைமறுப்பாளர் பி.எம் மேயரின் கருத்து.
http://scienceblogs.com/pharyngula/2010/07/chickens_eggs_this_is_no_way_t.php
___________
ஒரு கொளகை அறிவியலைல் மீளாய்வு செய்யப்ப்டுவதும்,அது கொஞ்சம் மாறறப்மடைந்து வேறு கொள்கையாவதும் கூட பரிணாம வளர்ச்சியே.
கடவுள்,மத கோட்பாடுகள் கூட இப்படித்தான் தோன்றின
எல்லா உயிரினங்களும் இப்போது இருக்கும் அதே அளவிலேயே படைக்கப் பட்டது என்றால் ஆதம் 90 அடி உயரம் என்று ஹதிது கூறுகின்றது.இன்னும் மறுமை நாளில் அனைவரும் அதே அளவு ஆகிவிடுவோம் என்றும் கூறுகிறது..
ஏன் மனிதன் சுருங்கினான்?.
ஏதேனும் ஒரு 90[10 to 90 OK] அடி உள்ள ஒரு மனிதனின் உடலை உலக முழுவதும் தோண்டி எடுத்து காட்டினால் நீங்கள் சொல்வதற்கு ஆதாரமாகி விடும்.பரிணாமம் பொய்த்து விடுவது மட்டுமல்ல இஸ்லாமின் அறிவியல அனைவரும் ஏற்பார்கள்.பல பரிசுகள் கிட்டும்.