Sunday, February 20, 2011

இஸ்லாமிய வரலாறு திரைபடம்


ஒரு சில‌ வரலாற்று குறிப்புகள்.

பொ.ஆ 632: திரு முகமதுவின் மரணம்

பொ.ஆ 632_634 திரு அபுபக்கர் கலிஃபா

பொ.ஆ (634_644) திரு உமர்
644ல் தன் அடிமை ஒருவனால் கொலை செய்யப் படுகிறார்.

பொ.ஆ (644_656) திரு உத்மான்
656ல் சிலரால் கொலை செய்யப் படுகிறார். 

பொ.ஆ (656_661) திரு அலி இபின் அபுதாலிஃப்
பல வாரிசு போர்கள்(ஒட்டகப் போர்கள் என்றழக்கப் படுகின்றன).இவரும் கொலை செய்யப் படுகிறார்.
_____________
உம்மையாது ஆட்சி

அலியிடம் இருந்து ஆட்சி அபு சுஃபியானின் மகன் முவையா & இவரின் வமசம் பொ.ஆ 661_751 வரை ஆள்கின்றனர்.திரு முவையாவின் மகன் யசீதின் ஆட்சியில்தான்[பொ.ஆ 680_683] திரு முகமதுவின் பேரன்(அலி& ஃபாத்திமாவின் மகன்) குடும்பதோடு கொல்லபடுகிறார் .இதுமொஹரம் என்றழைக்கப் படுகிறது.திரு முகமதுவின் வம்சத்தை சேர்ந்தவர்கள் பொ.ஆ 751 ஆட்சியை கைப்பற்றி உம்மையாதுக்களின் வமசத்தையே கொலை செய்து அப்பாசித்து வம்ச கலிஃபாக்களின் ஆட்சி அமைக்கின்றன‌ர்.இந்த அப்பாசித்து கலிஃபாக்களின் கால்த்தில்தான் அனைத்து ஹதிதுகளும் தொகுக்கப் படுகின்றன.

அப்பாசித்துகளின் ஆட்சி (750 ல் இருந்து 1258 வரை நீடித்தது.பொ.ஆ 1258ல் செங்கிஸ்கான் படையெடுத்து வம்சத்தையும்,அரசையும் அழித்தார்.பிறகு ஆட்டோமான் துருக்கியர்கள் வசம் ஆட்சி சென்றது.பொ.ஆ 1299 முதல் 1921 வரை ஆட்டோமான் சம்ம்ராஜ்யமே உலக முஸ்லிம்களின் த்லைமை அரசாக அறியப்பட்டது.ஆட்டோமான் பேரரசை தோற்கடிக்க உதவியஇபின் சவுத் அப்துல் அஜீஸ்[1876_1953]  சவுதி அரச‌ராக மேலை நாடுகள் உதவி செய்தன.இபின் சவுதின் பெயரிலேயே சவுதி என்று அரேபிய நாடு அழைக்கப் படுகிறது.இவர் மகன் திரு அப்துல்லா 2005ல் இருந்து மன்னர் ஆக‌ இருக்கிறார். 
____________


மெலே கூறிய வரலாறு படித்தலே ஒரு மன்னராட்சி என்பது மாறும்போது அந்த வம்சமே அழிக்கப் படு வந்தது புலனாகும்.இதுதான் நடைமுறை இஸ்லாமிய ஆட்சியாக இருந்தது.பிற மத நாடுகள் சிலவற்றிலும் இதே நடைமுறை இருந்து வந்திருக்கின்ரன என்பதையும் ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

Part1



Part2



Part 3




The Rise and Fall of Islamic Spain: Full documentary (PBS)






Islam In India



No comments:

Post a Comment