Friday, April 29, 2011

குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்கிறதா?

குரான் 4.34 வசனம்


(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

__________




இதனை நண்பர் இக்பால் செல்வன் மனைவியை அடி - ஆண்களுக்கு இஸ்லாம் தரும் உரிமை என்ற பதிவு இட்டு இருந்தார் அதில் ஒரு இஸ்லாமிய நண்பர் அளித்த விளக்கத்தை கீழே தருகிறேன்.


Saha, Chennai said...

ஐயா வணக்கம்.

நல்லா படிச்சிட்டு யோசிங்க ஐயா. நல்லொழுக்கமுடைய பெண்ணை அடிக்க சொல்லலை, கணவனுக்கு துரோகம் செய்யும், தாம்பத்யத்துக்கு துரோகம் செய்யும் பெண்ணை அவள் திருந்தாத பட்சத்தில்தான் அடிக்க சொல்லியிருக்கு. இஸ்லாத்தில் நம் அனைத்து செயல்களுக்கும், அனைத்து சந்தேகங்களுக்கும், அனைத்து தேவைகளுக்கும் பதில் இருக்கின்ற நிலையில், தனக்கு துரோகம் செய்யும் மனைவியை எப்படி Handle செய்வது என்றுதான் சொல்லிக்காட்டப்பட்டிருக்கு. இந்த சூழ்நிலை பற்றி முறையான விளக்கங்கள் கிடைக்காத நிலையில்தான் கொலை செய்ய எத்தனிக்கும் மனிதர்களை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வேற எதுவும் (கொலை) செஞ்சுடாதீங்கனு சொன்னா தப்பா?


அய்யா, குருடன் யானையை தடவிப்பார்த்து அதை வர்ணிப்பதைபோல உள்ளது உங்களின் இஸ்லாத்தின் மீதான பார்வை.

நல்ல தலைப்பு வைச்சீங்க போங்க, தலைப்பை வேணா இப்படி மாத்துங்களே. " துரோகம் செய்யும் மனைவியை அடித்தாவது திருத்துங்கள், ஆனால் கொலை செய்து விடாதீர்கள்.- இஸ்லாம் " (இத தான் சொல்லிருக்கு.) (அதுக்கும் நெறைய ஹிட் கெடைக்கும்.)
_______________
நண்பர் சாஹாவின் கூற்றுப்படி கணவனுக்கு துரோகம் செய்யும் கள்ளத்தொடர்பு உள்ள மனைவியை மட்டுமே அடிக்க சொல்வதாக கூறுகிறார்.இது சரியா என்று பார்ப்பது நமது கடமை.இந்த முறையில் அவருடைய கூற்றை ஆய்வோம்


இங்கு ஒரு மத குரு என்ன்மோ சொல்ராக,அதனை கேட்டாலே யாரை அடிப்பது என்று புரிந்து விடும்..




PART(A)

நம் எப்போதும் ஒரு குரான் வசனத்திற்கு பொருள் கொள்ளும் போது தமிழ் மொழி பெயர்ப்பு இரண்டும்(டான்சில்.இன்ஃபோ,பி.ஜே) ஆங்கில மொழி பெயர்ப்பு இரண்டு(ஃபித்கல்,யூசுஃப்ஃ அலி) அவசியம் பார்த்து விடுதல் வழக்கம்.
1.
_____________
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
______________
2.பி.ஜேவின் மொ.பெ
34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.[திரு பி.ஜேவின் விளக்கம் 66]

3.ஃபித்கல்
4.34
Pickthall: Men are in charge of women, because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property (for the support of women). So good women are the obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear
rebellion, admonish them and banish them to beds apart, and scourge them. Then if they obey you, seek not a way against them. Lo! Allah is ever High, Exalted, Great.

4.,யூசுஃப்ஃ அலி
4.34
Yusuf Ali: Men are the protectors and maintainers of women, because Allah has given the one more (strength) than the other, and because they support them from their means. Therefore the righteous women are devoutly obedient, and guard in (the husband's) absence what Allah would have them guard. As to those women on whose part ye fear
disloyalty and ill-conduct, admonish them (first), (Next), refuse to share their beds, (And last) beat them (lightly); but if they return to obedience, seek not against them Means (of annoyance): For Allah is Most High, great (above you all).


இப்போது முதல் பகுதி முடிந்தது பி.ஜேவின் மொழி பெயர்ப்பு விளக்கத்தை பார்த்தாலே இது கருத்து வேறுபாட்டை பற்றி கூறுவதையும்,அத்னை தீர்ப்பது பற்றி கூறுவஹை காண்லாம்.

ஃபித்கல் கணவ‌னுக்கு மனைவின் எதிர்ப்பு( rebellion,) என்கிறார், யூசுஃப்ஃப் அலி விசுவாயமின்மை,மோசமான நடத்தை(disloyalty and ill-conduct,
) என்கிறார்.

இரு வசனங்களும் அடிக்க தகுந்த மனைவியின் செயலில் வேறு படுகின்றன.

முதல் பகுதியில் முடிவு

இப்படி மொழி பெயர்ப்புகள் எதிரான பொருள் தந்தால் பல பொருள் கொள்ள இயலும். இதில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்க இரண்டாம் பகுதிக்கு செல்வோம்.அதற்கு முன் கட்டார் தொலைக்காட்சியில் அரபியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் நிகழ்ந்த காணொளி பாருங்கள்.இங்கு மனைவின் பணிய மறுபு (Disobedience) என்பதே அடிக்கும் காரணமாக கூறப்படுகிறது.


*                           *                         *

PART(B)


இந்த பகுதியில் மூல‌ அரபிவார்த்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.இதில் முக்கியமாக இரு அரபி வார்த்தைகளே இவசனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.,
முதல் வார்தை மட்டும் இப்பகுதியில் பார்ப்போம்.
I)
(4:34:24)nushūzahunna=their ill-conduct,"Rise up((58:11:16),desertion(4:128:6) .துர் நடத்தை,எதிர்த்தல்,விட்டு பிரிதல்

குரான் 4.128 லும் இதே வார்த்தை ஒரு ஆண் பெண்னை விட்டு பிரிந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறது.

1.டான்சில்.இன்ஃபோ
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

2.பி.ஜேவின் மொ.பெ
128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத் தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

3.ஃபித்கல்

Pickthall: If a woman feareth ill treatment from her husband, or desertion, it is no sin for them twain if they make terms of peace between themselves. Peace is better. But greed hath been made present in the minds (of men). If ye do good and keep from evil, lo! Allah is ever Informed of what ye do.

4.,யூசுஃப்ஃ அலி
Yusuf Ali: If a wife fears cruelty or desertion on her husband's part, there is no blame on them if they arrange an amicable settlement between themselves; and such settlement is best; even though men's souls are swayed by greed. But if ye do good and practise self-restraint, Allah is well-acquainted with all that ye do.

(4:128:6) nushūzan=ill-conduct,ill treatment,cruelty or desertion,பிணக்கு, புறக்கணிப்பு

ஆணுக்கு என்று வரும்போது பிரிதல் ,புறக்கணிப்பே மொழியாகக்ங்களில் பயன் படுத்தப் படுவதால் குரான் 4.34லும் இதே அர்த்தம் பயன் படுத்தப் படவேண்டுமென்று விளங்கும்.
மனைவிய அடிபதற்காக காரணம்
அ) மனைவி கணவனை வெறுத்து ஒதுக்கினால்
ஆ)கொடுமை படுத்தினால்
இ) மோசமான நடத்தை(என்ன என்று சரியாக கூற முடியாது)

குரான் த்வறான பாலுறவுகளுக்கு பல தண்டனைகளை வழங்குகிறது

விபசாரத்திற்கான தண்டனை

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

__________

ஒரு பெண்ணின் மீது அபாண்டமாக குற்றம் சொல்பவருக்கு என்ன தண்டனை?



குரான் 24.4

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

_____________

கணவன் சந்தேகப் படுகிறான் ஆனால் சாட்சி இல்லை என்ன செய்வது?


24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:

24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
____________



குரான் என்பது ஆறாம் நூற்றாண்டு மனிதர்களின் வாழ்வுக்கு எளிதாக புரியும் வகையில் சில தீர்வுகளை கூறுகின்றது.அத்னை மதவாதிகள்

எக்காலத்திற்கும் பொருந்துவது என்று ஏமாற்றுவதுதான் பிரச்சினை.இது அக்காலத்திற்கு மட்டும்,இப்போது இல்லை.


அதுவும் சிறு தவறுக்கு கடைசி வாய்ப்பாக சொல்லி இருக்கிறது,இப்போதைய நாகரிக உலகில் இதனை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினால் பரவாயில்லை.


இரண்டாம் பகுதி முடிந்தது.அதாவது பெண்ணை அடிக்க சொல்வது அவள் பணிவின்மை அல்லது கணவனை வெறுத்து ஒதுக்குவதற்காக மட்டுமே,ஒருவேளை அவள் துரோகம் செய்தால் குரான் அளிக்கும் தண்டனை வேறு ஆகும்
இன்னும் ஒரு எடுத்துக் காட்டாக ஒரு ஹதிது பாருங்கள்.
5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மைஅடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். 
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி 
(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். 
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்' என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' அல்லள்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். 'இவர்கள் உங்கள் புதல்வர்களா?' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்' என்றார்கள்.45 
Volume :6 Book :77.
*                *                *

PART(C)

அவ்வள‌வுதான் முடிந்தா என்கிறீர்களா,யாரை அடிக்க சொல்கிறது என்பதைதான் பார்த்தோம்.இப்போது உண்மையிலேயே அடிக்கத்தான் சொல்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம்.

நான் சொல்ல நினைத்தது எல்லாவற்றையுமிக்காணொளியில் ஒரு நண்பர் மிக அருமையாக கூறியுள்ளார். நான் சொல்வதற்கு ஏதுமில்லை.




இப்போது சொல்லுங்கள் குரான் மனைவியை அடிக்க சொல்லி இருக்கிறதா?

9 comments:

  1. சார்வாகன்! இன்னும் சில நாட்களில் சிறந்த ஒரு இஸ்லாமிய அறிஞராக மாறிவிடுவீர்கள். நானும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. //24:4‍எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க)நான்கு சாட்சிகள் கொண்டு வரவில்லையோ,அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள்//

    உண்மையிலேயே ஒரு பெண் நடத்தை சரியில்லாத பட்சத்தில்,சாட்சிகளும் இல்லாத பட்சத்தில் அப்பெண்ணுக்கு எதன் அடிப்படையில் தண்டனை வழங்குவது என்பது விளங்கவில்லை. எந்தப் பெண்ணும் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற தவறுகளை சாட்சிகள் இல்லாமல் செய்ய இயலும்.அதுபோல் தவறே செய்யாத பெண்களும் வீண் பழி சுமத்தப்பட்டு பொய் சாட்சியால் தண்டனை பெற இயலும். இச் சிக்கலுக்கு தீர்வு என்ன? இறைவன் மீது ஆணையிட்டு சொல்லிவிட்டால் மட்டும் போதுமானதா?

    ReplyDelete
  3. //உண்மையிலேயே ஒரு பெண் நடத்தை சரியில்லாத பட்சத்தில்,சாட்சிகளும் இல்லாத பட்சத்தில் அப்பெண்ணுக்கு எதன் அடிப்படையில் தண்டனை வழங்குவது என்பது விளங்கவில்லை.//
    நண்பர் யாசிர்,
    உலக முழுவதும் உள்ள சட்டங்களும் இதைத்தான் கூறுகின்றன.ஒரு குற்றம் என்றால் அது ஆதார பூர்வமாக நிரூபிக்கப் படவேண்டும்.குரானும் சாட்சிகள் இல்லாவிட்டால இறைவன் மீது ஆணையிட சொல்கிறது.இறை நம்பிக்கை உடையோருக்கு இது உண்மையை உணர வைக்கலாம் என்ற நோக்கில் கூறப் பட்டது.

    ReplyDelete
  4. நண்பர்கள் தெய்வமகன்,சுவனப் பிரியன்
    இந்த காணொளி பார்த்துதான் இந்த கருத்தை தெரிந்து கொண்டேன்.இந்த கருத்தாய்வு அளித்த நண்பருக்கே பாராட்டு உரியது.வருகைக்கும்,கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. இஸ்லாம் மனைவியை அடிக்கச் சொல்வதாகவே எனக்கும் படுகின்றது. ஆனால் இது அக்கால வழிமுறை இன்றையக் காலத்துக்கு ஏற்றார் போல மாற்றுங்கள் என்று சொன்னால் - ஒரு கும்பல் அடித்தால் என்ன தவறு என்கின்றது, இன்னொரு பிரிவு தப்பு செய்பவளை அடித்தால் என்ன தவறு என்கின்றது. ஆனால் அடிக்கக் கூடாது என்று இஸ்லாத்தினை பின்பற்றும் எவருமே சொல்ல மறுக்கின்றார்கள்.

    இது தான் பிரச்சனையே. !!! விவாதித்து விவாதித்து எனக்கு சலித்தேப் போய்விட்டது. உங்களின் பதிவையும், காணொளியைப் பார்த்தாலும் கடைசி வரைக்கும் ஏற்கும் மனோபாவத்தில் எவரும் இல்லை. மனைவியை அடிப்பதில் என்ன தவறு? இது தான் அவர்களின் பொதுவானக் கருத்தாக இருக்கின்றது.

    ReplyDelete
  6. வாங்க நண்பரே,
    குரானின் பல வசன‌ங்களுக்கு பல பொருள் கொள்ள முடியும். அதில் உள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.பதிவின் காணொளியில் அந்த இரு அரபி வார்த்தைகளுக்கு கூறிய அர்த்தம் தவறென்றால் யாராவது மறுப்பு கட்டுரை வெளியிடுங்கள்.
    ____________
    39:18. அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.
    __________

    குரான் வசனத்தை பல பிரிவினர் பலவாறாக அர்த்தம் கொள்வதில்தான் இஸ்லாமின் பல பிரிவுகள் உருவாக‌ காரணம்.மாற்று சிந்தனைகள் இஸ்லாமிலும் உருவாகின்ற‌து என்பதற்காகவே இப்பதிவு.
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. /இது தான் பிரச்சனையே. !!! விவாதித்து விவாதித்து எனக்கு சலித்தேப் போய்விட்டது. உங்களின் பதிவையும், காணொளியைப் பார்த்தாலும் கடைசி வரைக்கும் ஏற்கும் மனோபாவத்தில் எவரும் இல்லை. மனைவியை அடிப்பதில் என்ன தவறு? இது தான் அவர்களின் பொதுவானக் கருத்தாக இருக்கின்றது.//
    நண்பரே
    உங்களின் முயற்சி பாராட்டுக்குறியது என்பதில் ஐயம் வேண்டாம்.இந்த அள்விற்கு பலரும் பதிவிட்டு விவாதிப்பதாலேயே பல இஸ்லாமியர்களுக்க் பல விஷயங்கள் தெரிய வருகின்ற்ன.
    பல இஸ்லாமியர்களுக்கு தங்கள் வேதத்தில் என்ன சொல்லி இருகிறது என்றே தெரியாது.மத பிரச்சாரகர்கள் சொல்வதே சரியாகிவிடுகிறது. மனைவியை அடிப்பதி சரி என்ற ஒரு கொள்கையாக்கப் பிரச்சாரம் சொல்லிக் கொடுக்கப் பட்டதால் அத்னையே " என்ன கையை பிடித்து இழுத்தியா?" என்று திருப்பி திருப்பி கேட்பார்களே தவிர பிற (ஆங்கில) மொழி பெயர்ப்பு, மூல வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு பிடித்தல் போன்றவற்றை செய்ய மாட்டார்கள்.
    தொடர்ந்து இம்மாதிரி சமுக கருத்துள்ள பதிவிடுங்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. Saarvaakan,

    I asked a muslim about the meaning of the verses he was reciting. He answered me, that will be understood only in Arabic and he does not know Araby.
    He was taught to forbid even reading a translation. There is no way those folks will ever understand their religion.

    ReplyDelete