மதசர்பற்ற பரிணாம எதிர்ப்பு விஞ்ஞானி பற்றி தேடிய போது அப்ப்டி யாரும் இதுவரை கிடைக்கவில்லை.கிறித்தவ மத படைப்புக் கொள்கையாளர்களே அதிகம் பரிணாம் எதிர்ப்பு ஆய்வுகளில் உள்ள்னர்.
ஆகவே இன்னும் சில பதிவுகளில் இந்த் [கிறித்த] படைப்புக் கொள்கையளர்கள் மற்றும் அவர்களின் பரிணாம் எதிர்ப்பு பற்றி சில கட்டுரைகள்,கருத்துகள் மொழி மாற்றம் செய்து வெளியிடலாம் என்று முயற்சிக்கிறேன். படைப்புக் கொள்கை விஞ்ஞானிகளின் கருத்தினை அப்ப்டியே வெளியிடுவதில் நம்க்கு ஒன்றும் தயக்கம் கிடையாது.ஏற்கிறேனா என்றால் விவாதிப்போம்.
இந்த விஷய்மாக் தேடலில் இறங்கிய போதுதான் இவர்கள் ஒன்றும் சும்மா இல்லை என்றும் பல விஷயங்களை செய்து வருகிறார்கள் என்று புரிந்தது.பல் கால பரம்பரை மத மாற்று தொழில் அதிபர்கள் அல்லவா!!!!!!!!!!!!.
நிறைய த்கவல் சேகரிக்க வேண்டியுள்ளதால் அவ்ர்கள் பற்றிய சில த்கவல்கள் மட்டும் தருகிறேன்.
.
1.இவர்கள் பரிணாம்த்தை எதிர்க்கும், அத்னை பொய்யாக்கும் ஆய்வு சார்ந்த கட்டுரைகளை வெளியிடுகிறார்கள் இதற்காக சில ஆய்வு சஞ்சிகைகளையும் நடத்துகிறார்கள்.
ஆக அவ்ர்களது ஆய்வுகள் ஆவணப் படுத்தப் படுகின்றன .சில ஆய்வகங்கள்,ஆராய்சி கல்லூரிகள் நட்த்தி படைப்புக் கொள்கையில் பட்டம் வழங்குகிறார்கள்.படிப்பின் முக்கிய விஷயம் பரிணாம எதிர்ப்பே.
முந்தைய இரு பதிவுகள் பரிணாம் விஞ்ஞானிகளுக்கும்,படைப்பு கொள்கை விஞ்ஞானிகளுக்கும் ஆய்வுக் கட்டுரை தொடர்பான அவ்தூறு பிரச்சாரம் குறித்து அலசியது.அந்த பிரச்சாரத்தில் தொடர்புகள் அனைவருமே இந்த அமைப்புகளில் இப்போது பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
2. கிறித்தவ படைப்புக் கொள்கை குறித்து ஒரு விக்கிபிடியாவும் ஏற்படுத்தி விட்டார்கள்.அதில் இது குறித்து பல விஷயங்கள் இருக்கின்றன.
உண்மையிலேயே மலைத்து போய் விட்டேன்.பரிணாம விஞ்ஞானிகள் செய்வது அனைத்தையும் எதிர்வகையில் அய்வுகள் மீது ஆவணப் படுத்தி வருகிறார்கள்.பரிணாம் எதிர்ப்பு தவிர,பைபிளை உறுதிப் படுத்தும் அகழ்வாய்வுகள் குறித்தும் கட்டுரை இடுகிறார்கள்.
இனி வரும் பதிவுகளில் இவர்களின் சில கட்டுரைகளை பார்ப்போம்.படைப்புக் கொள்கை அமைப்புகளில் ஒன்றான் ஐ சி ஆர்(ICR) பற்றிய காணொளி.
அப்புறம் நம்ம சகோதரர்கள் கேட்கும் பல பரிணாம் எதிர்ப்பு கேள்விகள் இங்கு ஆய்வுக் கட்டுரைகளாக் உள்ளதையும் சொல்லி விட்டால் அவ்வளவுதான்!!!!!!!!!!!.
Institute for Creation Research from Shannon Falter on Vimeo.
No comments:
Post a Comment