Sunday, June 19, 2011

கேள்வி அங்கே பதில் இங்கே.


நண்பர் சுவன்ப் பிரியன் பதிவில் நான் அளித்த விளக்கம் அளிக்கும் போது பல கேள்விகள் .ஆகவே அதற்கு பதிலாக பதிவிடலாம் என்றெ எண்ணியத விளைவே இப்பதிவு.முடிந்தவரை விடையளிக்கிறேன்.பரிணாமம் பற்றி கற்று வரும் ஒரு மாண‌வன் மட்டுமே என்றாலும் இந்த மதவாதிகளை சமாளிக்க முடியும் என்றே எண்ணுகிரேன்.அவர்களின் தந்திரங்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால் ,அதில் சிலவற்றையும் பயன்படுத்தி தப்பி விட முடியும்.அது என்ன தந்திரங்கள் என்று கேட்கிறீர்களா,எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டு பிடித்த இரகசியங்கள்,போனால் போகிறது அதையும் பிறகு பதிவிடுகிறேன்.பிறகு நீங்களும் எளிதாக மதவாதி ஆக்லாம் அல்லது மத விமர்சகனும் ஆகலாம்..

ஐயாக்களா...!இங்கே மொதல்ல கேள்வி கேட்டது ஆரூ?

நண்பர் சுவன‌ப் பிரியன்தான்.அவரின் பதிவே கேள்விதானே.இதில் எல்லாம் சந்தேகம் வரக்கூடாது.நான் சிலர் போல் பதில் அளிக்க கோபப் படுபவன் அல்ல.எனக்கு உண்மையிலேயே சாந்தியும்,அமைதியும் அதிகமாகவே உள்ளது.
எஃப்.ஐ.ஆர்: முதல் தகவல் அறிக்கை. மதபுத்தகங்களின் முதல் தகவல் அறிக்கை சரியில்லை என்பதனை நினைவு ப்டுத்தும் வரையில் குறிப்பிட்ட வஞ்சப் புகழ்சியினை பாராட்டாமல் இருக்கவில்லை.மத புத்தகங்களின் முதல் தகவல் அறிக்கை என்று ஒரு இப்பதிவை கூறலாம்.
FIR 1:பதில்களை காணவில்லை..!மானுக்கு ஏன் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை? மானும் ஒட்டகை சிவிங்கியைப் போல் இலை தழைகளை சாப்பிடக் கூடியதே!
நண்பர் சுவனப் பிரியன் பதிவில் கேட்ட கேள்வி ஒட்டக சிவிங்கி கழுத்து நீண்டது  இயற்கைத் தேர்வு என்றால் சில விலங்குகளின் மர்ம உறுப்பு நீண்டு ,பிறகு சுருங்குவதாக்வே உள்ளதே என்பதுதான்.இயற்கை தேர்வு என்பதில் விலங்குகளின் உருவ அமைப்பு அதன உயிர் வாழ்தல்,சூழ்நிலை,பிழைப்புக்கு ஏற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக் மாறுகின்ரது என்பதுதான்.
அ)எப்போதும் நீண்டு இருப்பது பதுகாப்பா? அடிபட்டால் உயிர் போய் விடும்.
ஆ) எப்போதும் சுருங்கி இருப்பது இனவ்ருத்திக்கு உதவுமா?இனத்தின் கதை முடிந்து விடும்.
இ) தேவையான் போது நீள்வதும்,தேவையற்ற போது சுங்குவது [ஒரு கல் இரு மாங்காய்]
[இ] தேர்வாகியுள்ளது  

`FIR 2:பதில்களை காணவில்லை..!யானைக்கு தும்பிக்கை ஏன் வந்தது? 

FIR 3:பதில்களை காணவில்லை..!கங்காருக்கு வயிற்றில் ஏன் பை வந்தது? அதற்கான காரணம் என்ன?
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் பரிணாம்த் தோற்றம் பற்றி ஆய்வு செய்யும் பல கட்டுரைகள் கீழ்க்காணும் மதிப்பு மிக்க சஞ்சிகைகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஒரு வேளை நீங்கள் ஆய்வு செய்து இக்கட்டுரைகளை மறுக்கும் அளவிற்கு சாதித்து இருந்தால் ஒருவேளை நோபெல் பரிசு கூட கிடைக்கலாம்.
ஆகவே கேள்வி மட்டும் அல்லாது,மாற்று கருத்தையும் சொல்ல வேண்டும். 'அல்லா' அப்ப்டியே படைத்தார் அப்படியே எல்லாம் பல பில்லியன் வருடங்களாக அப்படியே இருக்கின்ற‌ன என்றால் , ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இம்மாதிரி கேள்விகள் அனைத்திற்குமே ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.

இப்போதைய காலகட்டத்தில் உயிர்களின் உருவாகத்தை விளக்கும் அறிவியல் கொள்கை பரிணாமம்,ஒரு வேளை பரிணாம்த்திற்கு மாற்றாக வேறு அறிவியல் கொள்கை வந்தால் அதயும் பரிசோதித்து ஏற்றுக் கொள்வோமே தவிரே அன்றே கூறினார்  'அல்லா' என்று சொல்வது கிடையாது.
பரிமணாம்த்துக்கு மாற்று அறிவியலே அன்றி மதம் அல்ல‌.
\
உலகில் உள்ள அனைத்து குரானிய விஞ்ஞானிகளும்(இறை நம்பிக்கை உள்ள ஜின்களை கூட சேர்ந்து கொள்ளலாம்)  இம்மாதிரி சஞ்சிகைகளில் மாற்று கருத்து ஒன்றை உயிரினங்களின் படைப்பு பற்றி குரான் சுன்னா வை அடிப்படையாக கொண்டு பதிவிடுமாறு கேட்கிறேன்.. 

FIR 4:பதில்களை காணவில்லை..!பரிணாமத்தை வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு மாற்றத்தைக் கூட பதிவு செய்ய முடியவில்லையே ஏன்?

வரலாறு எழுதப் பட்ட காலம் என்றால் குரானின் படி எப்போது?. அறிவியல் சான்றுகளின் படி சுமார் 10,000 வருடங்கள் மட்டுமே .எகிப்தின் நாகரிகம்(அப்போது) அடிப்படையாக கொண்டெ வரலாற்றின் கால வரிசை கணிக்கப் படுகின்றது.
பிரபஞ்சம் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

முதல் உயிரினம் ஒரு செல் உயிரி சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள்
.
.
.
.
ஹொமொ சேபியன்கள் எனப்படும் மனித இனம் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.அக பிரபஞ்சத்தின் கடைசி மணித்துளிகளில் (0.01 %)நாம் வாழ்கிறோம்.இதற்குள் சில மாற்றங்கள் நிகழ்ந்ததை மனிதனின் மூளை அளவு பெருத்து வருவதும் கூட ஒரு மாற்றமே.சில நுண்ணுயிர்களில் பரிமாண மாற்றம் வேகமாக வளர்வதை கண்காணிக்க இயலும்.

ஆதம் ,ஹவ்வா இருவரில் இருந்து அனைத்து இனங்களும் தோன்றுவதை ஏற்க‌ முடிவது ,யூதர்களை குரங்காக,பன்றியாக அல்லா மாற்றுவது போன்றவற்றை நம்புவதை ஆய்வு இம்மாதிரி செய்ய முடியுமா?

ஏன் ஆசிக் இன்னும் ஆப்பிரிக்காரனாக்வோ,சைனாக்காரனாக மாறவில்லை என்பது போல்தான்.FIR 5:பதில்களை காணவில்லை..!டார்வினின் கோட்பாட்டின் படி தேவையின் பால் ஒரு முறை வளர்ந்த அந்த உறுப்பு திரும்பவும் பழைய நிலையை அடைய தேவையில்லை.ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட இந்த உறுப்பை பல நூறு அல்லது பல ஆயிரம் தடவை தேவையின்பால் உபயோகப்படுத்தியும் மாறிய அதே நிலையில் இருப்பதில்லை. திரும்பவும் பழையபடியே தனது பழைய நிலையை அடைந்து விடுகிறது. ஒட்டக சிவிங்கிக்கு தேவையின்பால் கழுத்து நீண்டது போல் உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை ஏன் அடையவில்லை.

பதில் கூறியாகிவிட்டது.இஸ்லாமியர்களால் ஏற்கப்ப்ட்டு மட்டும் அனைத்து அறிவியலும் வளரவில்லை.உலகில் உள்ள 99% கண்டுபிடிப்பினை குரானின் அல்லா அல்லாத கடவுளை வணங்கும் மக்களே கண்டறிந்தனர்.அதனை குரானில் கண்டவர்கள் முஸ்லிம்கள் அவ்வளவுதான்.பரிணாமம் என்பது நிரூபிக்கப் பட்ட ஒரு கூற்று.பாடமகவும் போதிக்கப்படுகின்ரது.வேண்டுமெனில் குரானிய படைப்புக் கொள்கை பற்றி கால வரிசையோடு எல்லா இரகசியங்களையும் பரிணாமம் விளக்குவதை விட மேம்பட விளக்குமாறும்,அந்த கண்டுபிடிப்புகளை காஃபிர்களுக்கு அளிக்காமல் முன்னேறும் வண்ணம் கேட்கிறேன்.

FIR 6:பதில்களை காணவில்லை..!பருவ வயது வந்தவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள ( உடன் பிறந்த சகோதர , சகோதரியானாலும் கூட, மேலும் பல உறவுகளையும் ) அறிவியலின் படி தவறு இருப்பதாக தெரியவில்லை. எங்களை போன்ற மதவாதிகளுக்கு அது பாவம். ஆனால், அறிவியலை முன்னிறுத்தும் நாத்திக வாதி அல்லது கம்யூனிஸ்ட் ஆகியோர்களாகிய உங்களின் நிலை என்ன?

அது என்னமோ தெரியவில்லை இஸ்லாமியர்களில் பலர் விவாதிப்பது இறுதியில் உடலுறவு பற்றித்தான் முடியும்..இது ஒரு ஆய்வுக்குறிய விஷயம்.ஆண் பெண் சம் உரிமை என்று கூறினால் தப்பான கண்ணோட்டத்தில் பதில் வரும்.

அதாகப்பட்டது நண்பரே,சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்புவரை நாங்கள் எப்படி வாழ்ந்தோமோ ,மண உறவு கொண்டோமோ அது போல்தான் நீங்களும் வாழ்ந்து வந்தீர்கள்,ஓரினம் ,ஓர் இரத்தம்,ஒரெ மொழி,இருந்தாலும் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.

அது பிடிக்காமல் வியாபாரம்,படையெடுத்து வந்தவர்களுடன் சேர்ந்து மதம் மாறினீர்கள்.அது உங்கள் உரிமை.இஸலாமியரான பின் உங்கள் மண உறவு குரான் 4.23&24 சார்ந்து உள்ளது.
http://en.wikipedia.org/wiki/Islamic_marital_jurisprudence
____________
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
____________
இந்த வசன‌த்தை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொல்ளலாம்.வேண்டுமானால் பதிவிடுகிறேன்.ஒரே கிளுகிளுப்பாக இருக்கும். கண்ணாடி வீட்டில் நின்று கல்லெறியக் கூடாது.இறை மறுப்பாள‌ர்கள் என்றாலும் நாங்கள் இந்த நாட்டின் மைந்தர்கள். கலாச்சரம்,மொழி, நடை உடை,பழக்க வழக்கங்கள் ஒரு தமிழர் போல் இருக்கும் என்று வைத்து கொள்ளுங்களேன்.
*************
திருமண‌ உறவு அல்லாமல் யாரிடம் உறவு வைக்கலாம்? 
__________
போரில் பிடிபட்ட பெண்களை அடிமை ஆக்கலாம்,அவர்களோடு திருமணமில்லாமலே உடல் உறவு கொள்ளலாம்.

4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
___________
2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)
Volume :2 Book :34
_________________
பரிணாமம் சில காலக் கணக்குகளை சரியாகவே கூறுகின்றது.பரிணாமத்திற்கு மாற்றம் வந்தால் அது இன்னொரு அறிவியல் கொள்கை மட்டுமே.அரபிகளின் கொள்கை அல்ல‌.ஆக பரிணாமம் பற்றி மதமில்லாத மாற்று கருத்து ஆய்வாளர்கள்,தேடுபவர்கள் மேற்கூறிய சஞ்சிகைக்ளில் தங்கள் ஆய்வுகளை பதிவ்ட்டு பெரிய பரிசு,பதவிகளை பெற வாழ்த்துகிறோம்.

மத புத்தகம் வைத்து பரிணாமம் மறுப்பவர்களின் கருத்துகள் சஞ்சிகைகளில் பதிவிட முடியாது ஆக்வே சொந்த இணையப் பக்கங்களில் மட்டும் பதிவிட்டு பொழுது போக்கும் படி ஊக்குவிக்கிறோம்.இதற்கு கிடைக்கும் இம்மை,மறுமை வெகுமதிகளை அனுபவிக்குமாறு உவகையோடு வாழ்த்துகிறோம். இவர்களை வைத்து ஒரு குரானிய அற்வியல் புத்தகம் எழுதி ,அதனை குரானிய பல்கலை கழக்த்தில் பாடமாக்கி அனைத்து இஸ்லாமியக் குழந்தைகளும் கற்கும் படி செய்துவிட்டால் இவர்களுக்கு உண்மையான அறிவியலே மறந்துவிடும். பிற மதத்தவர்கள் நிம்மதியாக இருக்கலாம்.

7 comments:

 1. ஐயா, torrential rain போல் தொடர்ந்து மூன்று பதிவுகள் போட்டு முழுவதுமாக முழக்க நனைக்க வைத்துவிட்டீர்கள் (drenched).
  நீங்கள் தமிழ் நாட்டின் Dr.zakir naik...வருக வருக....-:) -:)
  நீங்கள் அவர்ளின் பாஷையில் REFUTED, DEMOLISHED AND PROVED WRONG -:) செய்துள்ளீர்கள்
  ஐயா, மிக அழகாக பரிணாம கொள்கையின் அரிவியல் தன்மையை விளக்கியுள்ளீர்கள். அறிவியல் என்பது எளிதாக empirical study, research done in accepted method, peer review ஆகியவற்றை உள்ளடிக்கியது. பரிணாமம் கொள்கைக்கு மாற்று வேறு ஒரு அறிவியல் கொள்கையாக இருக்கமுடியுமே தவிர ஒரு தனி மனிதனின் நம்பிக்கையாக இருக்க முடியாது.

  நான் படித்த வரையில், இஸ்லாமிய பதிவர்கள் ஏதோ , தவறுகளை சுட்டி காட்டுபவர்கள் இஸ்லாத்தைப் பற்றி கேள்வி கேட்பவர்கள், இஸ்லாமையும், இறை தூதரையும் கொச்சைப் படுத்த இழிவு படுத்த முனைகிறார்கள் என நினைக்கிறார்கள்.

  நான் மூன்று வருடமாக, ஒரு இஸ்லாமிய பெரியவர் தந்த தமிழ் குரானை படித்து வருகிறேன். அதை அவநம்பிக்கை பொருளாக எண்ணியதில்லை. நம்பிக்கையுள்ளோர் எப்படி அதற்கு மதிப்பு மரியாதை தருவார்களோ அதேப்போல் தந்து படிக்கிறேன். இடையில் காஃபீர்கள் குரானை தொடலாமா எனப்பிரச்சனை வந்து, அஆஇஈ தலைவரும் எஏஐ தலைவரும் விவாதித்து, தமிழ் குரானை காஃபீர்கள் தொடலாம் என முடிவு தெரியும் வரை 2 மாதம் குரானை படிக்காமல் இருந்தேன்.

  ஆனால் நம்பிக்கை வேறு, உண்மை வேறு.

  குரான் தான் PERFECT, SCIENTIFIC, ONLY TRUTH, ETERNAL, FINAL BOOK, FINAL PROPHET, NO MISTAKE........என்ற கூவினால், கேள்விகள் வரும், எதிர் கொள்கை வரும். அதற்கு பதிலும் தேவைப் படும். நான் படித்த வரை இஸ்லாத்தில் அதற்கான சரியான பதில் இல்லை.

  ”செஸ் விளையாட்டில் புலியாக ஒரு புத்தகம்” என்ற பதிவில் கேட்க நினைத்தேன், ஏன் இஸ்லாம் சதுரங்கம் ஆடுவதை தடைச் செய்கிறது???

  ReplyDelete
 2. நண்பர் நரேன்,
  மதம் என்பது தனிப்பட்ட மனிதனின் பண்பு மேலாண்மைக்கு[நமக்கு இதுதான் ஆன்மீகம்] உதவி செய்வதாக இருந்தால் மட்டும் இருந்து விட்டு போகட்டும்.அரசியல்,மதம் சார்ந்த சட்டங்கள் என்பது மனித சமுதாயத்தை பிளவு படுத்தும் செயலாகும்.இஸ்லாமிய பிரச்சாரகர்கள் சொல்வதையே இங்கும் இந்துத்வவாதிகள் சொல்ல ஆரம்பித்த்தால் என்ன ஆகும்?அதுவும் தவறுதான்.
  பெரு வெடிப்பு கொள்கை பரிணாம கொள்கை இல்லாமல் முற்றுப் பெறாது.பூமியின் 99.99% நேரத்திற்கு பின் மனித இனம் தோன்றியது சான்றளிக்கப் பட்டுள்ளது.பிரபஞ்சத்தில் பூமி ஒரு சுண்டைக்காய்,அதில் மனிதன் சும்மா கடைசி விருந்தாளி.
  மத புத்தகங்கள் பிரபஞ்சமும்,பூமியும் மனிதனுக்க்காக படைக்கப் பட்டன என்று கூறுவது இதில் இருந்தே பொய் ஆகிவிட வில்லையா?
  ஜாகிர் நாயக் பொன்று எந்த மத வாதிகளையும் நமக்கு பிடிப்பது இல்லை.பலரை மத பெருமிதம் கொள்ள வைத்ததை தவிர என்ன செய்து விட்டார்கள்?.என்னால் எதையும் விளக்க்[குழப்ப] முடியும் ,இதை கேட்டு நீ பெருமிதம் கொண்டு பிற மதத்தினருக்கு சவால் விடு என்பதுதானே இவர்கள் கொள்கை.
  பரிணம்த்தை விமர்சிக்கும் மதவாத அறிவியலாளர்கள் ஒரு சமீபத்தில் வந்த அறிவியல் கட்டுரை எடுத்து அதனை விமர்சித்து ,அதனை வெளியிட்ட சஞ்சிகைக்கு அனுப்பலாம்.இப்படி ஏதாவது செய்து பதிவிட்டால் பெரும் புகழ் அடைவர்.பெரிய பல்கலைக் கழகங்களில் பதவி கிட்டும்.
  குரானிய அறிவியல் கருத்தரங்குகளில் கூட பிற மத குரானிய விஞ்ஞானிகளோடு இவர்கள் காணொளியும் காட்டப் படும்.
  குரானிய விஞ்ஞானிகள் என்று பல பிற‌ மதத்தவ்ரையே காட்டுபவர்கள் ஏன் இஸ்லாமிய பரிணாம உயிரியல் ஆய்வாளர்கள் எவரையும் காட்டக் கூடாது?.இவர்களே ஒரு ஆய்வு பத்திரிக்கை தொடங்கி இவர்களது ஆய்வுகளை பதிவு செய்து காப்புரிமை வாங்கட்டுமே.அறிவியல் ஒரு தொடர் பயணம்,இன்றைய கேள்விகள் நாளை பதில்கள் கண்டுபிடிக்கப் படும்,அந்த பதிலில் இருந்து பல கேள்விகள் பிறக்கும்.இது ஒரு தொடர்கதை.
  இன்னும் நிறைய எழுதுவேன்.நன்றி

  ReplyDelete
 3. /நான் படித்த வரையில், இஸ்லாமிய பதிவர்கள் ஏதோ , தவறுகளை சுட்டி காட்டுபவர்கள் இஸ்லாத்தைப் பற்றி கேள்வி கேட்பவர்கள், இஸ்லாமையும், இறை தூதரையும் கொச்சைப் படுத்த இழிவு படுத்த முனைகிறார்கள் என நினைக்கிறார்கள்./
  இஸ்லாம்,குரான் பற்றி இவர்கள் சொல்லும் கதைகளை ஆய்வாளர்கள் ஏற்பது இல்லை என்பது பெரும்பாலான் இஸ்லாமியர்களுக்கு தெரியாது.அகழ்வாய்வுகள் இவர்கள் சொல்லும் கதைகளுக்கு ஒத்துப் போவதில்லை. இம்மாதிரி ஆய்வுகளை தடை செய்கிறார்கள்.யேமன் நாட்டில் கண்டு பிடித்த குரான் பிரதிகள்[1972] பற்றி எந்த செய்தியுமே வ்ந்தது இல்லை.நிச்சயம் எண்ணெய் வளம் முடிந்த பின் வெளியிடுவார்கள்.இந்த மத பிரச்சாரத்தின் பின் அரசியல் மட்டுமே உள்ளது.இது மட்டும் உண்மை,அனைத்தும் இதில் கூறப்பட்டுள்ளது,உலகிற்கே வழி காட்டும் வேதம் என்னும் போது மத நம்பிக்கை விமர்சிக்கப்படுவது தவிர்க்க இயலாது.

  அடிப்படை விஷயங்களே சரியாக ஆய்வுக்கு உட்படுத்தப் படவில்லை,என்னும் போது நாகரிகமாக்வே விமர்சிக்க முடியும்.என் பதிவுகளில் வரலாறு,அறிவியல் ரீதியான கேள்விகளை மட்டுமே வைக்கிறேன்.
  http://en.wikipedia.org/wiki/Historiography_of_early_Islam
  http://en.wikipedia.org/wiki/Sana'a_manuscripts

  ____________
  இஸ்லாமில் செஸ் விளையட தடைக்கு இவ்விள்க்க்ம் கூறப்பட்டாலௌம் ,யாரும் கடைப் பிடிப்பது இல்லையென்றே நினைக்கிறேன்

  http://www.scribd.com/doc/26564513/Chess-in-Islam
  The playing of chess is Haram in Islam. Many people argue that, why it is prohibited when it has many good sides and Allah (swt) likes good? It is right that, chess has many good sides but we need to accept that it has many evil influences on us too and that’s why Allah has made it prohibited. Surely Allah knows the best what is good for us and what is not.The playing of chess accompanied by gambling or without, both is
  prohibited. Allah (swt) declared alcohol and gambling as forbidden, He explained the reason for this prohibition. From the light of Al-Quran we know that, Shaytan desires to create an ill feeling amongst us. He desires to create hatred among us, and to direct out attention from salah and Allah (swt)’s remembrance.Reasons for Prohibition of Chess: 1.Absorption in this game (chess) is so much, that we seek the protection of Allah (swt). The truth of the matter is that when someone becomes rooted in some practice and this practice penetrates his very blood and veins, then until death it remains overpowering, and in this very practice a man finally dies. 2.The player of chess becomes so absorbed in this game that he has no care or concern for anything else. 3.This game has no relationship with the strategies of battle or war. E.g. the knight moves so and the elephant moves so. In true and real battles these are not the moves to be found. Evidence of Prohibition of Chess: Hadhrat Ali also said: “Chess is gambling of the Ajam people (non Arabs)” Abu Dawood (4938) narrated from Abu
  Moosa al-Ash’ari that the Messenger of Allah (saw) said: “Whoever plays dice has disobeyed Allah and His Messenger.”
  (Classed as saheeh by al-Albaani in Saheeh Abi Dawood, 4129)
  Muslim (2260) narrated that the Prophet (saw) said: “Whoever plays dice is like one who has dipped his hand in the flesh and blood of a pig.” Abd-Allaah ibn Umar (ra) was asked about chess and he said: “It is worse than dice

  ReplyDelete
 4. சார்வாகன்!

  //அ)எப்போதும் நீண்டு இருப்பது பதுகாப்பா? அடிபட்டால் உயிர் போய் விடும்.
  ஆ) எப்போதும் சுருங்கி இருப்பது இனவ்ருத்திக்கு உதவுமா?இனத்தின் கதை முடிந்து விடும்.
  இ) தேவையான் போது நீள்வதும்,தேவையற்ற போது சுங்குவது [ஒரு கல் இரு மாங்காய்]//

  நான் கேட்டதற்கு இது பதில் இல்லையே சார்வாகன்! ஒட்டக சிவிங்கியின் கழுத்து தேவையின் பால் நீண்டது அப்படியே நின்று விட்டது என்பது பரிணாமம். அதே இலை தழைகளை உண்ணும் மானுக்கு ஏன் கழுத்து நீளவில்லை என்பதற்கு பதில் இல்லை. தேவையின் பால் வெளியேறிய ஆண் உறுப்பு பரிணாமத்தின் படி வளர்ந்த நிலையிலேயே இருக்க வேண்டாமா? அதை திரும்பவும் சுருங்க வைத்ததற்கு யார் காரணம்?

  அடுத்து யானையின் தும்பிக்கை, கங்காருவின் பை, ஒட்டகசிவிங்கியின் கழுத்து போன்றவை பரிமாணம் அடைந்ததாக அறிவியல் அறிஞர்களின் நிரூபிக்கப்பட்ட கூற்றுகளை கேட்டிருந்தேன்.அதையும் இதுவரை தரவில்லையே!

  நீங்கள் கொடுத்த சுட்டிகள் அனைத்தும் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கிறது. இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை.

  எப்படி ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்ற அறிஞர்களின கண்டுபிடிப்புகள் ஐயம் திரிபுற நிரூபிக்கப்பட்டதோ அதுபோல் உங்களால் டார்வினின் தியரிக்கு நிரூபணம் அளிக்க முடியாது.

  ReplyDelete
 5. இயற்கைத் தேர்வில் ஒரு இனத்திற்கு நிகழ்ந்தது பிற இனத்திற்கு நடக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.மான்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் ஒட்டக சிவிங்கிகள் வாழ்கின்ரனவா ,ஒட்டகச் சிவிங்கிகள் ஊமைகளாக்வும் இத்தேர்வினால் ஆகிவிட்டன.இது ஒரு மிக‌ சிறந்த தேர்வு இலை ஆனால் இருந்த வாய்ப்புகளில் உள்ள சிறந்த ஒன்று.
  மான்களுக்கு வேறு பல வாய்ப்ப்ய் இருந்து இருக்கலாம்.இக்கேள்வியின் மீது முனைவர் பட்டம் செய்யும் அள்விற்கு விஷயம் இருக்கின்றது நண்பரே!!!!!!.
  நான் பொறியியலாளன்,பரிணாம் குறித்த என‌து புரிதல்கள் இன்னும் வளர்க்கப் படவேண்டும். இருந்தாலும் காலக் கணக்கீடுகள் பரிணாம் ஃபாசில்கள் கூற்றை மிகவும் ஒத்துப் போகின்றது.
  இது குறித்து இன்னும் மிக சரியான விடை தேடி பல ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கிறேன்.இன்னொரு பதிவிடிவேன்உதிய பதிவு பாருங்கள்,வியப்பாக இருக்கும்..நன்றி
  பரிணாமம்,படைப்புக் கொள்கை பாய்!!!!!!!! பாய்!!!!!!
  http://saarvaakan.blogspot.com/2011/06/blog-post_20.html

  ReplyDelete
 6. சார்வாகன் நெத்தியடி என சொல்ல வேண்டும் .. கடவுள் படைத்தார் அல்லா படைத்தார் எனக் கூறுவோர், அந்தப் படைப்பினை விளக்க முடிவதில்லை. எப்படிப் படைத்தார் எனக் கேட்டால் இருப்பததே ஆதாரம் என்பார்கள் ....

  விடிய விடிய ராமயணம் கேட்டுட்டு விடிஞ்சாப்புறம் சீதைக்கு ராமன் சித்தப்பா என்பார்கள் .. ஹிஹி ....

  பரிணாமம் , டார்வினசம் என்பது மலையேரி இன்று பரிணாம உயிரியலே ஆய்வுகளில் இருக்கு, இப்போதைய ஆய்வு வரைக்கும் இந்த பரிணாம உயிரியலே பல கேள்விகளுக்கு பதில் கொடுத்தும், பதில் தேடியும் வருகின்றது.

  சினிமா முடியும் முன்னரே க்ளைமாக்ஸ்ல சொதப்பிட்டாங்க என இண்டர்வெலில் எழுந்துப் போவோரிடம் சொன்னால் சத்தியமா புரிஞ்சுக்க மாட்டாங்க..

  நம்மைக் கிட்ட ஆதாரம் கேட்பவர்கள், தமது கருத்துக்களை ஆதாரமாக நீட்ட மாட்டார்கள்.. ஹிஹி !!

  ReplyDelete
 7. பரிணாமம் என்பது நிரூபிக்கப் பட்ட கூற்று என்பது டி.என் ஏ மூலம் நிரூபிக்கப் பட்டது.இரு சிம்பன்சிகளீன் டி.என் ஏ ஐ இணைத்து மனிதன் டி.என் ஏ உருவாக்க முடியும் என்ற காணொளி பார்த்தால் கூட இப்ப்டியே சொல்வார்கள்.பரிணாம்த்தின் மீது கேள்வி வைக்கட்டும் வரவேற்கிறோம்.இதில் 0.01% அவர்கள் மத புத்தக்த்தின் மீது வைக்க மாட்டேன் என்பதுதான் நகைச்சுவை.
  பல ம்னைவர் பட்ட ஆய்வுகள் பல் இத்ன எழுதப்பட்டு விட்டன,பல சோதனை சாலை ஆய்வுகள் நட்த்தப் பட்டு விட்டதாலே பெருந்தலைகள் பிரச்சினை ஆக கூடாது என்று பாய் பாய் என்று சொல்கிறார்கள்.

  ReplyDelete