Wednesday, June 29, 2011

கலிலியோ கதை ஆவணப் படம்

கலிலியோ... இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15 ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார்.
இத்தாலியில் பிறந்து சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுலாரஸ்யமான தகவல்கள் இதோ.

கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைந்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான் பின்னாளில் வந்த பெளதிகவியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது. இத்தாலியிலுள்ள வைசாநகர பல்கலைக்கழகத்தில் கலிலியோவுக்கு கணிதப் பேராசிரியராக வேலை கிடைத்தது.ஆனால் தனது ஆராய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

கண்ணாடி விம்பம், மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம் சட்டைப்பையில் வைக்கும் சீப்பு, பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.
தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துக்களால் வத்திக்கான் நகரக் கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ 1633 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

1638 ஆம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தார். 1642 ஆம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின் 1737 ஆம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

உண்மைக்காக் தன் வாழ்வினையே பணயம் வைத்த அவ்ருடைய வாழ்க்கை சரிதம்.
Part 1

Part 2

3 comments:

  1. அறிவியல் வளர்ந்தது சாதாரண விஷயம் அல்ல. மதம் சமூக விஷயங்கள் எதிர்கொண்டு, ஒரு தனி மனிதனின் அதீத அறிவினால் வளர்ந்தது.அறிவியல் பல தடைகளை எதிர்கொண்டு முன்னேறி தற்பொழுது மனித மேம்பாட்டில் ஒரு அங்கமாக இருக்கின்றது.

    கலிலியோ எதிர்கொண்ட அதே dogma க்கள் இப்பொழுது பார்க்கிறோம். எங்கள் மதத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது விடையிருக்கிறது என்று சொல்லி மனதிற்கும், மூலைக்கும், இதயதிற்கும் சீல் வைத்துவிட்டு, வெள்ளைக்கார துரைமார்களின் கண்டுப்பிடிப்புகளை வைத்து சொகசாக வாழ்ந்து அந்த துரைமார்களை கொலை செய்ய வேண்டியது தான்.

    ReplyDelete
  2. நண்பர் நரேன்,

    இப்போதும் அதுதான் நடக்கிறது.பரிணாமம் குறித்த ஆய்வின் தந்தை திரு டார்வின் மீது எவ்வளவு அவ்தூறு பிரச்சாரம் பொருள் செல்வில் முன்னெடுக்கப் படுகின்றது.அறிந்த வர்லாற்றிலேயே பல விஷயங்கள், இருக்கும் ஆதாரங்களுக்கு பொருந்தும் வண்ணம் மட்டுமே கூற இயலும்.இவ்விஷய்த்தில் அறிவியலாளர்கள் இப்படித்தான் என்று குரங்குப்பிடி பிடிக்க மாட்டார்கள்.மதவாதிகளின் போக்கு எப்போதும் ஒரே மாதிரியே இருக்கும்.
    நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete