Sunday, June 26, 2011

ஹாருண் யாஹ்யாவின் ஃபோட்டொ ஷாப் மத பிரச்சாரம்




ஹாருன் யாஹ்ய[அட்னன் ஒக்டார்] என்ற துருக்கி நாட்டை சேர்ந்த மத பிரச்சாரகர் பரிணாம்த்திற்கு எதிராக பல சான்றுகளை கண்டுபிடித்ததாகவும் ஆக்வே எங்கள் புத்தகம் இறைவனால்[என்ன சம்பந்தம்?] வழங்கப்பட்டது ஆகவே இதுவே சரியான மதம் என்பது சில தமிழ் பதிவுகளில் படித்தேன்.நம் ஏற்கெனவே சில மத பிரச்சாரக்ர்கள் பரிணாம்த்தை ஏற்றும் இருக்கிறார்கள் என்று கூறியும் இன்னும் பரிணாமம் தவறு என்று நிரூபிப்பேன் சில கேள்விகளை வைத்து காமெடி செய்வதும் ,அதற்கு சில ஆய்வுக் கட்டுரைகள் பதிலாக இருக்கிறது என்று கூறினாலும்.கேட்பது இல்லை.
                    இந்த ஹாருண் யாஹ்யா என்பவர் பரிணாமம் தவறு என்றும் இறைவன் படைத்த அனைத்து உயிரினங்களும் அப்போது இருந்து ஒரே மாதிரி இருக்கிறது என்று சில பழைய படிமங்கள் புகைப்படம்,இப்போதைய உயிரினத்தின் புகைப்படம் என்று அட்லாஸ் ஆஃப் கிரியேஷன் என்று பல வண்ணங்களில் அச்சிடப் பட்ட புத்தகங்களை செப்டம்பர் 2008ல் உலகின் பல பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும் தபாலில் அனுப்பினார்.பரிணாமத்தின் வரலாற்றில் எவருமே இப்படி கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தகது.கொஞ்சம் சர்ச்சைக் குறிய மனிதர்தான்.


இதற்கு புகழ்பெற்ற இறை மறுப்பாளரும்,பரிணாம் உயிரியல் வல்லுனருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பதில் அளிக்கும் காணொளிதான் இது.இதில் அவருடைய பல் புகைப்படங்கள் ஃபோட்டோ ஷாப் என்று மற்றும் பல ஏமாற்று வேலைகள் என்று தெளிவாக கூறுகிறார்.டாக்கின்ஸின் காணொளி இப்படி ஒருவரை கூறிய போதும் ஹாருன் யாஹ்யா அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை.இன்னும் அந்த புத்தக்த்தை இஸ்லாமிய நாடுகளில் கூட பாட புத்த்கமாக ஆகியது போல் தெரியவில்லை.

பல இஸ்லாமிய அறிஞர்கள் இவர் மீது இப்போது நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள் அல்ல. கீழே கண்ட காணொளி பாருங்கள் புரியும்.






இவர் பரிணாமத்தை எதிர்ப்பதால் நம் தமிழ் பதிவர்கள் சிலர் இவரை பற்றி தெரியாமல் பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும் இவரை நம்பினால் நம்புங்கள்.
பரிணாம்த்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிப்போம் என்பவர்களை என்ன சொல்வது?.ஹாருண் யாஹ்யாவின் பரிணாம எதிர்ப்பு உட்பட்ட அவ்ருடைய பிரச்சாரங்கள் அனைத்தும் ஏமாற்று வேலை. இல்லை இவர் மிகவும் நியாயமான் மனிதர் என்று ‍சான்றளியுங்கள்,அல்லது அவர் எப்படியோ இருக்கட்டும் அவரின் பரிணாம் சான்று மட்டும் சரி என்றாலும் இன்னும் சில விஷய்ங்களை முனெடுக்கலாம்.

இவர் மாதிரி ஆள் பற்றியெல்லாம் பதிவிட வேண்டி உள்ளதே என்று எண்ணி நாகரிகமாக் மறுத்தால்,தவறென்று நிரூபி என்ற‌ பெருமித கூச்சல் தாங்க முடியவில்லை.மதம் என்பது ஆன்மிக வழி காட்டியாக்வும்,மனித பண்பு மேம்படுத்துவதாக மட்டும் இருந்தால் போதும்.அறிவியல் மதத்தை கண்டு கொள்வது இல்லை.பரிணாமம் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.அதாவது கிடைத்த சான்று(படிமங்கள்)களை மெய்ப்படுத்தும்[பொருந்தும்] கூற்று.

பரிணாம எதிர்ப்பாளர்கள் மதத்தை அடிப்ப்டையாக் வைத்து எதிர்ப்பது தேவையற்றது.அறிவியல் அடிப்ப்டையில் எதிர்ப்பதாக் சொல்பவர்கள் ஹாருன் யாஹ்யா மாதிரி ஆட்களை காட்டுவது அவர்களின் பிற கூற்றுகளையும் கேலிக்குள்ளாக்கும்.

பரிணாம மறுப்பு என்பது முழுக்க அறிவிய‌ல் ஆய்வாளர்கள் செய்யும் வேலை ஆகும்.பரிணாமம் என்பது முற்று முதலாக் தவறு என்று எதிர்ப்பு கருத்துள்ள உயிரியல் விஞ்ஞானிகளின் கடந்த 10 வருட ஆய்வுக் கட்டுரைகளை குறிப்பிடுங்கள்.அதன் படி சரியான் ஆய்வு கருத்துகளை உங்கள் கட்டுரைகளில் எழுதுங்கள்.அப்ப்டி எழுதும் போது இவர் இப்படி இந்த சஞ்சிகையில் குறிப்பிடுகிறார் என்று கூறுங்கள்.ஒரு கருத்தை குறிப்பிடும் போது அது இவருடையது, அல்லது என் சொந்தக் கருத்து என்று சொல்ல வேண்டும்இது ஆய்வுக் க‌ட்டுரைகளின் தார்மீக நெறி.இணையத்தில் பலரது அறிவியல் கட்டுரைகளை படிக்கும் போது எப்ப்டி எழுதுகிறார்கள் என்று வியந்து போனது உண்டு.அவர்களோடு ஒப்பிட்டால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்றே கூறுவேன்.தேடலும் ,கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்கள் கேள்விகளில் பாதி பதில் இருப்பதை உணர முடியும். இதுவும் ஒரு அமெரிக்க அறிஞர் கூறியது. 
*************
A problem well stated is a problem half solved.
Charles F. Kettering
US electrical engineer & inventor (1876 - 1958)
**************
கேள்வி சரியாக் இருந்தால் பதில் நிச்சயம் கிடைக்கும்.

மத பிரச்சாரகர்கள் மத புத்தகத்தின் அடிப்ப்டையில் பரிணாம்த்தை எதிர்ப்பது என்பது நகைச்சுவையான விஷயம். 



7 comments:

  1. கல்கி அவதாராம் என்று இந்துகளிலும், இயேசு சீக்கிரமாக வருகிறார் என்று கிருத்தவத்திலும், ஒரு மிகப் பெரிய மத தொழிற்சாலை உருவாகியுள்ளது. அது இஸ்லாத்தில் மஹதி என்ற வடிவில் இருக்கிறது. மஹதி வரும்போது முக்கியமாக மேற்கினில் சூரியன் உதயமாகும், செருப்புகள் பேசும் என்பது அதீஸ்.

    ஒரு மஹதி வந்து மெக்கா காபாவை கைப்பற்ற, அவரை அடுக்குவதற்கு காஃபீர் பிராண்ஸ் தேவைப் பட்டது.

    நம்பிக்கையை ஒருப்போதும் ஏளனமாக அல்லது குறையாக சொல்ல முடியாது. ஆனால் அந்த நம்பிக்கைதான் உண்மையானது அல்லது அந்த நம்பிக்கையால் தனி மனிதன் அல்லது சமுதாயம் பாதிக்கப்படும்போது கேள்விகள் எழும்.

    சரியாகச் சொன்னீர், பரிணாமத்தை எதிர்க்க அறிவியல் ரீதியாக, அதற்கு மாற்று கருத்தை அறிவியல் ரீதியாக் தெரிவிப்பதை, மததிற்கு சான்றாக எடுத்து கேள்விகள் கேட்கககூடாது. மதத்தின் அடிப்ப்டையில் பதில் தேவை. எல்லாமே கடவுளால் படைக்கப்பட்டது என்ற பொதுவான பதில் எடுப்படாது.

    big bang முன்னால் நேரம் என்ற கோட்பாடு இல்லை என்பதை புரிந்துக் கொள்வதற்கு கடினமாக இருக்கும் என்றால், அந்த நேரம்மின்மைதான் கடவுள் என்ற பதில் வருகிறது.... என்ன சொல்ல.

    ReplyDelete
  2. வாங்க நரேன்,
    ஹாருண் யஹ்யாவின் கருத்து உயிரினங்கள் தோன்றிய(எபோது?) கால்த்தில் இருந்து உடலமைப்பு ஒரே மாதிரியாக உள்ளது என்பத்ற்கான் ஆதாரமாக அவர் காட்டௌம் படிமங்களின் புகைப்படங்களை ஆய்வுக்கு அளிக்க வில்லை.எடுத்தவுடம் அச்சிடு விட்டா.அதும் இவர் நூற்றுக் கணக்கான் த்லைப்புகளில் புத்தக்ங்கள் எழுதியுள்ளார்..கொஞ்ச நாள் அடக்கி வாசித்த இவர் இப்போது வெளிப்ப்டையாக பேசும் போது மத அரசியல் போக்கு மாறுவதாக அனுமானிக்கிறேன்.
    இவர் தன்னை மக்தி என்று வெளிப்ப்டையாக் கூறாவிட்டாலும்,அதற்காக பல விஷயங்கள் பொருந்துவதாக காட்டி வருகிறார்.நமக்கு மத பிரச்சரம் என்பது அரசியல் என்று தெரிவதால் மிக ஜாக்கிரதையாக கருத்து கூறுகிறோம்.நம் பதிவர்கள் இப்போது ஹருண் யாஹ்யா நல்லவரா,இல்லை கெட்ட்வரா[தெரியவில்லை என்று கூறுவார்களோ!!!!!!!!!) என்று மட்டும் கூறினால் அவர் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று நினைக்கிறென்.

    முக்கியமான் விஷயம் இப்போது அண்ணன் ஜாகிர் நாயக் ஹாருன் யாஹ்யாவுடன் சேர்ந்து விட்டார்.தமிழ் நாட்டு பிரச்சார்கர் எவர் யாஹ்யா பக்கம் சேர்வார்கள்?.இதன் விளைவு இந்தியவில் எப்படி மதத்தின் இறையியல் கொள்கையை மாற்றுகிறது.இதன் உலக்ளாவிய அரசியல் எப்படி இருக்கும்?
    இதற்கு முதல் மஹ்தி என்று பல்ர் தன்னை கூறி ஏமாற்றியதும் அறிந்ததே.இந்த மாதிரி வேலைகளுக்காகவே மத எதிர்ப்பு பிரச்சாரம் செய்தாக வேண்டும்.இனி மத பிரச்சாரம் மகதி வந்துவிட்டார்,ஈசா[இயேசு] வருகிறார் என்று கிறித்தவ்ர்கள்களையும் கூட சேர்த்து கூப்பாடு போட்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.இந்த 2012ஐ உலக முடிவு என்று கூறும் கதைகளில் இதுவும் ஒன்று.
    மத பிரசாசாரம் களை கட்டுது!!!!!!!!!!.

    ReplyDelete
  3. Mahdi
    http://en.wikipedia.org/wiki/Mahdi
    ************
    People claiming to be the Mahdi
    http://en.wikipedia.org/wiki/People_claiming_to_be_the_Mahdi

    ReplyDelete
  4. Photoshop பற்றி darwinists பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இங்கு ஹாருன் யஹ்யா இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனையாக கூறவில்லை. ஆனால் darwinists செய்த photoshop வேலைகள் ஏராளம். எல்லோருக்கும் தெரிந்தது குரங்கிலிருந்து படிப்படியாக மனிதன் உருவாகும் கற்பனை படம்.

    மற்றபடி டாகின்ஸ் இந்த வீடியோவில் ஹாருன் யஹ்யா atlas of creationல் செய்த சில தவறுகளை குறிப்பிடுகிறார். ஆனால் அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கு (அதாவது உயினங்கள் பல மில்லியன் ஆண்டுகளாக மாறாமல் இருப்பது) மறுப்பு ஏதும் கூறவில்லை. டாகின்ஸ் தளத்திலும் கிடைக்கவில்லை. இருந்தால் பதியவும்.

    ஹாருன் யஹ்யா டாகின்ஸை நோக்கி கேட்கும் இந்த கேள்விகளுக்கு டாகின்ஸ் பதிலளித்திருக்கிறாரா ?


    1. Archeological researches unearthed over a hundred million fossils, proving that life forms were created out of nothing. Still, there is not a single transitional fossil supporting the theory of evolution. If Dawkins is sincere in his claim, he should bring a transitional fossil and announce it to the public as "a transitional form!"

    2.The odds against a functional protein emerging randomly is 10950 to 1—a practical impossibility. (In mathematics, probabilities smaller than 1 over 1050 are accepted as "zero probability.") If Dawkins is honest, he should point at a mass of proteins that formed by chance or by means of the methods he espouses. Let Dawkins explain us how he can account for the origin of life in evolutionary terms, when even a single protein—the building block of life—cannot form by chance!

    3.Let Dawkins explain us how all colorful, lively, three-dimensional and perfectly clear images, shortly life itself, can form in the pitch dark human brain and who sees this image in the brain!

    4.Let Dawkins explain us in evolutionary terms how conversations, music and all other sounds form in the sound-isolated brain; who listens to and enjoys these sounds, who knows their meaning, who reflects on them consciously and who answers back these sounds!

    அல்லது மற்ற darwinists பதிலளித்திருந்தாலும் லிங்க் தரவும்

    ReplyDelete
  5. இஸ்லாமியர்கள் பரிணம்த்தை ஏற்கவிட்டால் ஒன்றும் குடி முழுகி போகாது.
    இருந்தாலும் இந்த கேள்விகளுக்கு பதில் அள்க்கப் பட்டு விட்டது என்பதை நிரூபிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில் உங்கள் கோரிக்கையை முன்னெடுக்கலாம்.

    இந்த கட்& பேஸ்ட் செய்வது மிகவும் எளிது.

    1.முதலில் அனைத்து கேள்விகளையும் தமிழில் மொழி பெயர்க்கவும்.

    2.விளக்க்ம அளிக்கப் பட்ட அந்த ஹாருண் யாஹ்யாவின் அட்லாஸ் ஆஃப் கிரியேஷன் புத்தகம் ஒரு ஃபோட்டோ ஷாப் ஏமாற்று வேலை என்று ஏற்க வேண்டும்.

    3.ஹாருண் யாஹ்யவின் பரிணாம் எதிர்ப்பு தவிர அவரின் பிற‌கொள்கை விளக்கங்களை ஏற்கிறீர்களா? ஹாருண் யாஹ்யா பற்றி 200 வார்த்தைக்கு குறையாமல் கொள்கை விமர்சனம் செய்க.அத்னை உங்கள் கருத்தாக பதிவு வெளியிடுவேன்.

    தெரியாது என்றால் என் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    ReplyDelete
  6. //1.முதலில் அனைத்து கேள்விகளையும் தமிழில் மொழி பெயர்க்கவும்.//
    என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன்

    1. தொல்லியல் ஆய்வுகளில் இதுவரை எந்த ஒரு transitional fossilம் (இடைநிலை படிமம்) கண்டுபிடிக்கப்படவில்லை. டாகின்ஸ் உண்மையாளராக இருந்தால் ஒரு transitional fossil ஐ கொண்டு வந்து, இது ஒரு transitional fossil என்று பொதுவாக அறிவிக்க வேண்டும்.

    2. ஒரு புரோட்டீன் தற்செயலாக உருவாகுவ‌தற்கான நிகழ்தகவு (probability) 10 to the power of 950 to 1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது நடைமுறையில் இது சாத்தியமில்லை. டாகின்ஸ் ஒரு புரோட்டீன் தற்செயலாக உருவாகியதை காட்ட் வேண்டும் அல்லது எவ்வாறு தற்செயலாக உருவாகும் என்று விளக்க வேண்டும். ஒரு உயிரின் மூலக்கூறான புரோட்டீனே தற்செயலாக உருவாக முடியாதபோது ஒரு உயிர் தற்செயலாக எவ்வாறு உருவாகும் என்று விளக்க வேண்டும்


    3. ஒளி புகமுடியாத இருண்ட மனித மூளையில் வண்ணமயமான, முப்பரிமாண, உயிரோட்டமுள்ள படங்கள் (அதாவது முழு வாழ்க்கை) எவ்வாறு உருவாகிறது மற்றும் மூளையில் யார் இதை பார்க்கிறார் என்று டாகின்ஸ் விளக்க வேண்டும்.

    4. ஒலி புகமுடியாத மூளையில் இசை மற்றும் ஒலிகள் எவ்வாறு உருவாகின்றன, யார் அதை கேட்டு மகிழ்கிறார், யாருக்கு அது புரிகிறது, யார் அதை சிந்திக்கிறார், யார் அதற்கு பதிலளிக்கிறார் என்று பரிணாமவியலின்படி டாகின்ஸ் விளக்க வேண்டும்

    //2.விளக்க்ம அளிக்கப் பட்ட அந்த ஹாருண் யாஹ்யாவின் அட்லாஸ் ஆஃப் கிரியேஷன் புத்தகம் ஒரு ஃபோட்டோ ஷாப் ஏமாற்று வேலை என்று ஏற்க வேண்டும். //

    எவ்வாறு ஏமாற்று வேலை என்பதுதான் கேள்வியே. சில தவறுகளை டாகின்ஸ் சுட்டி காட்டுகிறார். முழு புத்தகமும் photo shop ஏமாற்று வேலை என்று டாகின்ஸே கூறவில்லை. எவ்வாறு உயிரினங்கள் பல மில்லியன் ஆண்டுக்ளாக மாறாமல் இருக்கிறது என்றும் விளக்கவில்லை.

    //3.ஹாருண் யாஹ்யவின் பரிணாம் எதிர்ப்பு தவிர அவரின் பிற‌கொள்கை விளக்கங்களை ஏற்கிறீர்களா? ஹாருண் யாஹ்யா பற்றி 200 வார்த்தைக்கு குறையாமல் கொள்கை விமர்சனம் செய்க.அத்னை உங்கள் கருத்தாக பதிவு வெளியிடுவேன்.//
    எனக்கு ஸ்கூல் ஞாபகம் வருகிறது.
    ஏன் இந்த கோரிக்கை ? இது எந்த அறிவியல் விதி ?
    மற்ற கொள்கைகள் தவறு என்றால் , அவருடைய பரிணாம எதிர்ப்பு தவறு என்று ஆகிவிடுமா ? கொள்கை விமர்சனம் செய்யும் அளவுக்கு தற்போது அவரை எனக்கு தெரியாது.

    //தெரியாது என்றால் என் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.//

    உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  7. முதல் கோரிக்கை சரி நன்றி. இக்கேள்விகளுக்கு நிச்சயம் பதில் த்மிழில் பதிவிடுவேன்.எப்போது என்பது நீங்கள் என் பிற கோரிக்கைகளை பொறுத்தது.
    நீங்கள் என் கொள்கையை ஏற்க வேண்டிய அவ்சியம் இல்லை.
    **********
    Bye!!!!!!!!!!

    ReplyDelete