Sunday, June 12, 2011

பொழுது போக்கு இயற்பியல்: யாக்கோவ் பெரல்மானின் புத்தகம்.




சோவியத் யூனியன்சக்தியின் உச்சத்தில் இருந்த 80 களில் நியூ செஞ்சுரி புக் கவுஸ் என்ற பதிப்பகத்தார் பல புத்தக் கண்காட்சி நடத்துவார்கள் அதில்.பல அற்புதமான நூல்கள் மிக குறைந்த விலைக்கு கிடைத்தது.பல நூல்கள் பொது உடமை தத்துவ விளக்கம் புத்தகங்கள் என்றாலும் செஸ்,அறிவியல்,கணிதம் போன்ற நூல்களும் கிடைக்கும்.அப்போது எனது பள்ளிக்கு அருகிலேயே ஒரு புத்தக கண்காட்சியில் திரு யாக்கோவ் பெரெல்மான் எழுதிய பொழுது போக்கு பௌதிகம்(இயற்பியல்) [physics for Entertainment] என்ற புத்தகம் வெறும் 25 காசுக்கு வாங்கினேன்.  
அப்போது பல் புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு கூட கிடைக்கும்.அழகான் வடிவமைப்பில், அருமையாக அச்சிட்டு இருப்பார்கள்.பல புத்தகங்கள் வாசித்தாலும் இவருடைய பொழுதுபோக்கு பௌதிகம் என்ற புத்தகம் போல் கவர்ந்தது வேறெதுவுமில்லை.இயற்பியலின் கோட்பாடுகளை எளிய முறையில் விளக்கி இருப்பார்.

வெப்ப இயக்கவியலின்[Thermodynamics second law] இரண்டாம் விதிக்கு எதிரான எல்லையற்ற சக்தி[PERPETUAL MOTION] பெறுவதற்கான முறைகளை அருமையாக விமர்சிக்கும் பகுதி [Chapter Four ROTATION.  "PERPETUAL MOTION" MACHINES] மிக பிடித்தது. இப்புத்தகத்தை பற்றி புகழ வார்த்தைகளே இல்லை.இந்த புத்தகம் படித்தால் அறிவியல் விருப்ப பாடம் ஆகும்.தமிழில் கிடைக்குமா என்று இணையத்தில் தேடினேன் ,ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்தது. 
இப்புத்தகத்தை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அச்சிட்டு பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் இருந்தால் அளியுங்கள். 

2 comments:

  1. This book " PozhuthupOkku Bowthigam " Changed my life as a student and let me understand the real reason behind the things. This was the first encounter of discrepancies in religion when I was given this boot around 14 yrs. A great book of 2 volumes. Every time I see a NCBH exbibition, I used to look for this particular book and another, "Unakku theriyuma"

    With love.
    Pugazh

    ReplyDelete
  2. Dear friend
    Thank you for your comment.

    ReplyDelete