Monday, June 27, 2011

ஒரு மத பிரச்சாரகரின் காரியவாதப் பின்னூட்டங்கள்


ஒரு மத ப் பிரச்சாரகர் பரிணம்த்தை மறுத்து எழுதி வருகிறார்.அதற்கு அவர் உரிமையை ஆதரிக்கிறோம்.அவ்ர் மதத்தை மறுத்து எங்கள் வழியில் வர வேண்டும் என்று கோர மாட்டோம்(வேண்டாம்!!!!!!!!!!)

அவர் கேட்கும் நகைச்சுவையான் கேள்விகள் அனைவரும் அறிந்ததே.என்ன பதில் சொன்னாலும் ,ஏற்றுக் கொள்ளாமல் வாதிடுவார்.அதுவும் சரி.அவரின் உரிமை ஆதரிக்கிறோம்.

நண்பர் சுவன்ப் பிரியன் பதிவில் ,நேற்று நான் இட்ட பின்னூட்டம் இது. 

____________
_

சகோ சுவனப்பிரியன்,
ஹாருன் யாஹ்யாவின் கருத்துகளுக்கு டாக்கின்ஸ் பதில் அளித்து விட்டார். அது எனக்கு சரியாக படுகிறது.அதற்கு மேல் என்ன சொலவ்து?.யு ட்யூபில் இருக்கிறது.

பரிணாமம் மட்டுமல்ல உலகில் எல்லா கருத்துகளுமே விமர்சனம் ஆய்வுக்கு உட்பட்ட்வைகளே.கிடைக்கும் சில சான்றுகளை வைத்து பல விளக்க்ங்கள் அளிக்கப் படுகின்றன.அதில் சில ஆய்வுகளுக்கு ஒத்து வரும் கொள்கை இப்போது ஏற்கப் படுகின்றது. அதானால் பரிணாம்த்தை விட இன்னொரு கொள்கை இச்சான்றுகளை மெய்யாக்கி,இன்னும் சான்றளிக்கும் பட்சத்தில் ஏற்கப் படும்.
ஒருவேளை பரிணாமம் முற்றும் முழுதும் தவறு என்றால் எல்லா நாடுகளும் சவுதி அரசு (99% இஸ்லாமிய அரசு கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்,பரவாயில்லை மன்னிக்கவும்!!!!) போல் ஆக வேண்டுமென்பது என்பது நடக்குமா?. நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன். இது குறித்த விழிப்புணர்வு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.எல்லாரும் மதம் விட்டு இறை மறுப்பாள‌ன் ஆக வேண்டுமென்ற கொள்கை பிரச்சாரம் செய்பவன் இல்லை. பிடிப்பவர்கள் பிறரின் உரிமைகளை பாதிக்காது பின் பற்ற வேண்டும்.
என்க்கு சரி என்று தோன்றும் கருத்தை பதிவிடுகிறேன். எதிர் கருத்துகளை பின்னூட்டம் இட்டால் தலை வணங்கி ஏற்கிறேன்.அக்கருத்து கொள்ள உரிமை உண்டு என்று அங்கீகரிக்கிறேன்.இப்படி உரிமை இஸ்லாமிய மத ஆட்சியில் பிற மதத்தவர்,இறை மறுப்பாள‌ருக்கு கிடைக்குமா?.அதற்கு மதம் தடையாக் இருப்பதலேயே இஸ்லாமை அதிகம் விமர்சிக்கிறேன். அப்போதும் சில சுய கட்டுப்பாடுகளுடன்,செய்கிறேன். 

அந்த வகையில் இந்தியா மத சுதந்திரம் அளிப்பது எனக்கு மிக பெருமையாக உள்ளது.உடனே ''அஆஇஈ' பரிணாமம் பற்றி கேட்ட‌ கேள்விக்கு பதில் சொல்லவில்லை எனவே இப்படி மழுப்புகிறார் என்பதுதானே பல பின்னூட்டங்கள்?.பரிணாம சான்றுகள் அளிக்கும் காலக் கணக்கீடு அள்வுகள் மத புத்தகங்கள் அளிப்பது இல்லை.அறிவியல் மதங்களை கண்டு கொள்வது இல்லை. மதத்தின் எதிரி அறிவியல் அல்ல,அதன் சர்ச்சைக்குறிய சட்டங்கள்.

யாஹ்யாவின் பல புத்த்கங்களை வாசித்தேன்.சரியென்று படவில்லை.பதிவிடும் அள்விற்கு தரமில்லை என்றே எண்ணுகிறேன்.பரிணாம்த்தின் மீது விமர்சன ஆய்வுக் கட்டுரை எழுதிய விஞ்ஞானி ப‌லரின் இணையத் தளங்கள் கொடுங்க்ள். அவர்கள் அளிக்கும் மாற்று அறிவியல் கருத்தையும் பார்த்து சரி என்று பட்டால் பதிவிடுவேன்.
நன்றி
****************************

அதற்கு நண்பர் சுவன்ப் பிரியன் அவருடய பாணியில் விளக்கினார்.அது வேறு கதை.அது ஒரு தொடர்கதை.அவ்ரின் கருத்தை வெளியிடும் உரிமையை
ஆதரிக்கிறேன்.
___________
முக்கிய விஷயம் நமது நாயகர் பரிணாம மறுப்பாளர்(இறை நம்பிக்கையாளரை விட இந்த்ப் பெயரெ இவருக்கு பொருந்து கிறது,இவருக்கு இதுதான் மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம் ஆகையால் இப்படி) படியுங்கள்

நம்க்கு பதில் சொல்வதாக் நினைத்து.  பரிணாம மறுப்பாளர் ஒரு பின்னூட்டம் (இதற்கும் அவரின் உரிமைகளை ஆதரிக்கிறேன்) போட்டாரு பாருங்க ஒரே அதிர்ச்சி.
படியுங்கள்
***********************************

/சகோ.சார்வாகன்..!

//////நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன்./////---???

நன்றாக யோசித்துத்தான் சொல்கிறீர்களா..?

உலகிலேயே தலைசிறந்த சட்டங்களை மனித வர்க்கத்திற்கு அளித்தவர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அமெரிக்காவின் உச்ச நீதி மன்றத்தில் சிலை வைத்து கெளரவிக்க முனைந்ததே அமெரிக்க அரசு..? மறந்துவிட்டீர்களா..?

இவ்வளவு ஏன்..?

நம் நாட்டின் பல சட்டங்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஆயிற்றே..? நம்நாட்டின் சட்டத்துறையில் நிறைய அரேபிய வார்த்தைகள் இருப்பதே இதற்கு சாட்சி அல்லவா..? அதெல்லாம் நீக்க "குரல் கொடுத்து" போராடப்போகிறீர்களா? 

எல்.கே.அத்வானி கேட்கிறாரே... பாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமிய சட்டமாகிய மரணதண்டனை வேண்டும் என்று..?

மனித குலத்துக்கு நல்ல விஷயங்களை இஸ்லாம் சொல்லி இருந்ததால் எதற்கு அதை எதிர்க்க வேண்டும் நீங்கள்..?

"அத்வானி போலவாவது நியாயத்தை ஆதரியுங்களேன்..." என்று ஒரு படு மோசமான ஆளை எல்லாம் கூட முன்னுதாரணமாக கொள்ளச்சொல்லும் அளவுக்கு, அந்த நிலைக்கு, நீங்கள் ஆளாகி விட்டீர்களா சகோ.சார்வாகன்..?

===================================

இதெல்லாம் பிறகு.... முதலில்... நான் தொகுத்த அனைத்து பரிணாம FIR கேள்விகளுக்கும் ஒரு பதிவு எழுதி பதில் அளிப்பதாய் சொன்னீர்கள் அல்லவா..?

அந்த பதில் பதிவை எப்போது வெளியிடுவீர்கள்..?//

******************************
இதின் சாராம்சங்கள்.
1.அமெரிக்க திரு முகமதுவின் சிலை வைக்க முயற்சித்தது.
2.அது இவருக்கு பெருமை

3.சவுதியின் சட்டங்கள் சிற‌ந்தது.
4.அத்வானி ஷரியாவை ஆத்ரிக்கிறார்
______________

இதில் ஒரு விஷயம் என்னவெனில் சகோ இக்பால் செல்வன் ஒரு  படம் வெளியிட்டத்ற்கு ஒரு மனித நேய பதிவு இட்டு வாழ்த்தினார்.அதுவும் அவர் உரிமை.அவ்ரின் அருமையான் பிரச்சாரம்,மாற்று கருத்துகளை மதவாதிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் இன்னும் இது போல் பல பதிவு இட்டால் நம் வேலை சுலபமாகும்.
1.ஆனால் அமெரிக்கா சிலை வைக்க முயற்சித்தது( நடந்ததா இல்லையா?) இவருக்கு பெருமை என்றால் படம் வெளியிட்டததும் பெருமையாக்வே இருக்க வேண்டும்.மறுப்பு பதிவு பெருமைதான் இருந்தாலும் எங்கள் மதப்பிரிவின் நம்பிக்கையின் படி த்வறு என்றால் பிரச்சினை சுலபமாக் முடிந்து இருக்குமே!!!!!.
****************************
2.இரட்டை கோபுர தாக்குதல் தி 9/11 செய்ததே அமெரிக்கா என்று துப்பறிந்து கண்டு பிடித்தவ்ர் அமெரிக்க முகம்துவுக்கு  சிலை வைக்க முயற்சித்தது பெருமையாக் படுகின்றது.திரு முகமதுவை பெருமையாக் பேசினால் மற்ற எல்லா விஷ்யங்களும் மறந்து ஏற்றுக் கொள்ளப் படும் .

****************
3.சவுதி சட்டம் மாதிரி இந்தியாவில் கொண்டு வர முயற்சிப்பதை ஒத்துக் கொண்டது மட்டும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உங்க நேர்மை இதில் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.இதே மாதிரி பல் பதிவுகள்,முரண் படும் பின்னூட்டங்கள் இட்டால் எனக்கு எளிதாக் இருக்கும் நன்றி.
********************
4.அத்வானி ஒரு சம்யம் பாலியல் கொடுமைக்கு மரண தண்டனை என்று சொன்னராம்,ஆகவே அவ்ரே ஷாரியா ஏற்கிறார்.என்கிறார்.
ஷாரியாவின் படி மரண தண்டனையா?
இந்த சுட்டிகளை பாருங்கள்,
http://articles.cnn.com/2007-11-17/world/saudi.rape.victim_1_saudi-women-victim-saudi-arabia?_s=PM:WORLD
http://abcnews.go.com/International/story?id=3899920&page=1

_____________
ஷரியா சட்டத்தின் படி ஒரு ஆணின் சாட்சி இரு பெண்களின் சாட்சிக்கு சமம்.இன்னும் நிறைய விஷயம் உண்டு.விவாதிக்கும் போது சொலகிறேன்.
நமக்கு த்னிப்ப்ட்ட யாரையும் விமர்சிக்க பிடிக்காது.ஆனால் பரிணாம் மறுப்பாளர் பெருமித உணர்வும்,சவால் விடும் கருத்துகளும் அவருடைய சொந்தக் கருத்துகள் மட்டுமே மதத்தின் கருத்துகளாக் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் சொல்லி விடுகிறேன்ன்.

கடைசியாக இப்படி சொல்லி விடலாம்

மாமியார்(அமெரிக்கா) உடைத்தா(சிலை வைத்தால்) பொன் குடம்(பெருமிதமடைவேன்),மருமகள்(சகோ இ.செல்வன்) உடைத்தால்(படம் வெளியிட்டால்) மண்குடம்(மனித நேய பதிவு இடுவேன்).  
__________________________

மதவாதிகள் அனைவருமே ஒரே மாதிரித்தான்,அத்வானி சொன்னால் ஏற்று கொள்வதா?.உலகமே எதிர்த்தாலும் நாம் சொலவ்து சவுதியில் பின்பற்றப்படும் ஷாரியாவில் பலமனித நேயமற்ற சட்டங்கள் இருக்கின்றன.அங்கும் இது மாற்ற‌ப் படவேண்டும்.பிற மதத்தவர் ஷாரியாவின் படி தண்டிக்கப் படக் கூடாது.இதற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேஎண்டும்.

27 comments:

  1. முகமதுவுக்கு அமெரிக்காவில் சிலை வைத்துள்ளார்கள் .. அதுவும் கையில் பெரும் வாளுடன் ... அது அவர்களுக்கு பெருமை எனில் .... நான் எனது செலவில் பல சிலைகள் முகமதுவுக்கு வைக்க விரும்புகின்றேன் ( கையில் வாள் இல்லாமல் புறாவுடன் ) அவர்களுக்கு சம்மதமா ????

    நமது நாட்டில் இருக்கும் சட்ட வழக்குச் சொற்கள் அனைத்தும் உருதில் இருப்பவை .. சில உருது சொற்களுக்கு வேர்ச்சொல் அரபியில் இருந்து வந்தவை .. உருதினைப் பயன்படுத்திய பெருமை ஆங்கிலேயேரையே சாரும் ...

    சௌதியின் சட்டங்கள் உண்மையிலேயே சிறந்தது, மிகவும் முற்போக்கானது அதனால் உலகில் உள்ள அனைவரும் சௌதியைப் புகழ்கின்றோம்.. விரைவில் மனித உரிமை சபைகளில் சபாநாயகர் பதவிகளை சௌதிக்கு கொடுக்க யாம் குரல் கொடுக்க போகின்றோம் ( ஹிஹி )

    ஒரு உயிரை கொல்லுவது தான் ஷரியாவா ? இல்லை ஷரியா என்றாலே கொல்வது தானா ? அப்படிப் பார்ப்பின் சிங்கப்பூர், சீனா, அமெரிக்காவில் ஷரியாத் தான் பின்பற்றப் படுகின்றதோ ( கனடா விதிவிலக்கு இங்கு மரண தண்டனை இல்லை ! )

    ReplyDelete
  2. வாங்க நண்பரே,
    நம்ம பரிணாம் மறுப்பாள்ர் பரிணாம்த்தை மட்டும் எதிர்ப்பவர்,அதனை யார் செய்தாலும் ஆதரிப்பார்.
    முகமதுக்கு சிலை அமெரிக்கா மட்டும்(உள்ளே ரொம்ப பாசம்) வைக முயன்றால் மகிழ்ச்சி.கொடுமை அய்யா
    அத்வானி ஷாரியாவை ஆதரித்தால் மகிழ்ச்சி.இவ்ருக்கு நரேந்திர மோடி கூட உள்ளூர பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.அவரும் ஷாரியா சரி என்றால் அவ்வளவுதான்.

    ReplyDelete
  3. இஸ்லாமிய அரசு அமைப்பதும்,சவுதி ஷாரியா சட்டங்களை இங்கு,உலக் முழுதும் கொண்டு வர முயற்சிப்பதுதான் இப்பிரச்சாரங்களின் அடிப்படை என்ற உண்மையை புரிய வைக்க் நான் படாத பாடு பட்டுக் கொன்டிருக்கிறேன்.
    அது யாருக்கும் புரியவில்லை.பரிணாம் மறுப்ப்பாளரின் கூற்றையாவது நம்புங்கள்.அது போதும்.

    ReplyDelete
  4. //இஸ்லாமிய அரசு அமைப்பதும்,சவுதி ஷாரியா சட்டங்களை இங்கு,உலக் முழுதும் கொண்டு வர முயற்சிப்பதுதான் இப்பிரச்சாரங்களின் அடிப்படை என்ற உண்மையை புரிய வைக்க் நான் படாத பாடு பட்டுக் கொன்டிருக்கிறேன்.//

    அதே அதே !!! அரசியல் இல்லாத இஸ்லாத்தை நானும் ஏற்கின்றேன் .... ஆனால் இஸ்லாம் திணிக்கும் அரசியலை நான் வெறுக்கின்றேன் ...

    நாட்டின் அரசும், மத ஸ்தாபனும் ஒன்றாக இருக்கக் கூடாது .... மத ஸ்தாபனம் எவ்வகையிலும் அரசியலில் மூக்கை நுழைக்கக் கூடாது .. என்பதே எனது ஆணித் தரமான கருத்தும் .. அது இஸ்லாம் மட்டுமல்ல, இந்து, பௌத்த, கிறித்தவ என எந்த மதமானாலும் சரி !!!!

    அப்படி அரசியலில் மூக்கை நுழைக்காத எந்த கடவுளையும் நம்புங்கள், மதங்களில் இணையுங்கள், கோயில் கட்டுங்கள் ( நன்கொடை நானே கொடுக்கின்றேன் ) ... அது அவனவன் விருப்பம் ....

    தனி மனித சுதந்திரமும், ஒரு தேசத்தின் அரசியலும் மதக் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் .... முயற்சிப்போம் ... புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்

    ReplyDelete
  5. என்க்கு முகமதுவின் சிலை அமெரிக்க நீதிமன்றத்தில் இருப்பது தெரியாது. நண்பர் பரிணாம் மறுப்பாளர் கூறித்தான் தெரியும்.முகமதுவின் சிலை இருக்கும் விஷயம் இப்போது வழக்காக இருப்பதில் இருந்து படம் எனப்து இப்பொதுதான் (கடந்த 50 வருடம் சவுதியில் எண்ணெய் கண்டு பிடித்த பிறகு) தவிர்க்கப் படும் வஹாபிக் கொள்கை என்பது முடிவாகி விட்டது.
    http://www.topix.com/forum/world/denmark/TA5RI9VPA2QNN01VA
    ***********
    http://www.dailyrepublican.com/sup_crt_frieze.html
    *************
    http://www.mentalfloss.com/blogs/archives/11107
    How a Mohammad statue ended up at the Supreme Court
    ************************


    இப்போது அமெரிக்கவில் முகமதுவின் சிலை வைத்திருப்பதை ஆதரிப்பது சவுதி ஷாரியாவின் படி குற்றமா?கூறுங்கள்.
    நண்பர் பரிணாம் மறுப்பாளர் கூட‌ ஷாரியாவின் படி தண்டிக்கப் படக் கூடாது என்பதற்காக்த்தான் குரல் கொடுக்கிறோம்.
    ***************
    1.பரிணாம மறுப்பாளருக்கு முகம்வின் சிலை அமெரிக்க நீதிமன்றத்தில் இருப்பதும்,வழக்கு நடப்ப்தும் தெரியும்.
    ஆனால் சிலை வைக்க முயன்றதாக் கூறுகிறார்.அதிலும் என்ன்மோ அவ்ருக்கு மட்டுமே வைத்தது போலும்,அந்த சட்டங்களை அமெரிக்கா பாராட்டுவதாகவும் கூறுகிறார்.

    ஆக பொய் கூறுகிறார்.
    *************************
    2. சிலை வழக்கில் இருக்கிறது என்று தெரிந்தும்,நாகரிகமற்ற முறையில் படம் வெளியிட்டது உலகிலேயே முதல் முறையாக சகோ இ.செ மட்டும் செய்தது போல் ககூக்குரலிடுகிறார்.
    ********************
    3.அப்போதே நான் பின்னூட்டத்தில் முகமதுவின் படம் எப்போது இருந்து தவிர்க்கப் படுகின்ரது என்று வரலாற்று ரீதியாக பதிவிடுபங்கள் என்பதற்கு பதில் அளிக்கவில்லை.
    *************
    4.மத பிரசாரகர்கள் ஏஎமார்றுக் காரர்கள் என்பதை நன்கு புரிய வைத்த நண்பர் பரிணாம மறுப்பாளர் அவர்களுக்கு நன்றி.!!!!!!!!!!!!!!
    நான் 10000 பதிவு போட்டாலும் சாதிக்காத ஒன்றை உங்கள் ஒற்றை பின்னூட்டம் சாதிக்கும்.
    ___________________

    ReplyDelete
  6. The 18 lawgivers looking down on the justices are divided into two friezes of ivory-colored, Spanish marble. On the south wall, to the right of incoming visitors, are figures from the pre-Christian era -- Menes, Hammurabi, Moses, Solomon, Lycurgus, Solon, Draco, Confucius and Octavian (Caesar Augustus). On the north wall to the left are lawmakers of the Christian era -- Napoleon Bonaparte, Marshall, William Blackstone, Hugo Grotius, Louis IX, King John, Charlemagne, Muhammad and Justinian.

    அந்த கலாச்சார சீர்கேடர்களான அமெரிக்கர்கள்!!!! -:) என்ன சொல்ல வருகின்றார்கள் என்றால், அந்த பதினெட்டு ஆட்களும், அவர்களுடைய தாக்கத்தால் ஆளுமையால் உலகில் சட்டங்கள் தோன்றி இருக்கலாம். ஆனால் அந்த சட்டங்கள் நியாயமானதா இல்லையா என்பதை, அங்கு அமர்ந்திருக்கும் ஒன்பது நீதிபதிகள் தான் தீர்மானிக்கிறார்கள்.

    அவர்கள் பாஷையில் கும்பலில் ஒருவர்தான், எப்படிப் பார்க்க வேண்டுமோ அப்படித்தான் பார்ப்பார்கள்.

    ஷரியத் சட்டம், அமிரிக்க அரசியலைப்புச் சட்டதுடன் ஒத்துப் போகுமா என்றால் 100 விழுக்காடு ஒத்துப் போகாது, ஷரியத் தூக்கிக் கொண்டு அமெரிக்கா உச்சநீதிமன்றம் சென்றால் அந்த பிராதை என்ன செய்வார்கள் என்று சொல்லி தெரிவதில்லை.

    சரி சரி அமெரிக்காவை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் செய்ய ஒரு விஷயம் கிடைத்து விட்டது. செய்யும் ஆர்ப்பாட்டத்தால் அமெரிக்கா நடுங்கி அந்த சிலையை எடுத்து விடுவார்கள்.

    ReplyDelete
  7. வாங்க நரேன்,
    அமெரிக்க,மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பில் அர்சாட்சியை தக்க வைக்கும் சவுதி அரசு தான் மத பாதுகாவலன் என்று காட்ட நட்த்தும் நாடக்மே இந்த மத ப் பிரச்சாரங்கள்.சவுதி அரச அமெரிக்க உட்பட்ட பல நாடுகளில் பெரிய மதலீடுகள் செய்து இருப்பதும் கண்கூடு.
    எண்ணெய் முடிந்ததும் சவுதியை விட்டு ஓடி விடுவார்கள் என்பதும் நிஜம்.அதுவரக்கும் இந்த மாதிரி உளரல்களை சமாளித்தால் போதும்.
    *******************
    1.சிலை அங்கு இருப்பது தெரிந்தே இதுவரையில் யாருமே செய்யாத மாதிரி கையை பிடித்து இழுத்துட்டான் மாதிரி கூக்குரல் எழுப்பியது எப்படி இருகிறது என்றால் பல உதாரணங்கள் வருகிறது.அப்பூறம் சொல்லிக்கலாம்.
    ****************************
    2. இவரின் பரிணாம் பற்றிய கேள்விகள் எப்படி இருக்கு இந்த உயிரினத்திற்கு ,அந்த உறுப்பு எபடி வந்தது?.பரிணாம மரத்தில் அனைத்து உயிரினத் தொகுதிக்கும் ஒரு சங்கிலித் தொடராக பரிணாம் வளர்ச்சியை விளக்கும் கட்டுரைகள் உண்டு.அதன் மீதும் விமர்சனம் வைக்கும் விஞ்ஞானிகள் உண்டு.அது சங்கிலித் தொடர் விளக்கும் கட்டுரைகளின் சான்றுகள் மீது துறை சார்ந்த வல்லிய கேள்விகளை எழுப்புவார்கள்.

    இதில் பிரச்சினை என்ன வென்றால் அவர்களும் பரிணாம் வாதியாக்வே இருப்பார்கள், சங்கிலித் தொடரின் வேறு மாற்றம் பரிந்துரைப் பார்கள்.உடனே விஞ்ஞானிகளிடம் முரண்பாடு என்று இதே கையை பிடிச்சு இழுத்தியா என்று கூக்குரல்.
    ****************************
    3.குரானின் முரண்படும் வசங்களுக்கு பிந்திய வசனம் முந்தைய வசனம்(எப்படி கண்டு பிடிப்பது?) மாற்றாகிற‌து.அது போல்தான் இன்று அறிவியலில் சொல்லப் படும் கருத்தும் நேற்றைய கருத்திற்கு மாற்று ஆகிறது.
    இன்னும் நிறைய சொல்லலாம்.நிறைய பதிவுகள் வரும்,இன்னும் பேசுவோம்.
    வருகைக்கு நன்றி.
    ____________________________

    ReplyDelete
  8. @ சார்வாகன்,

    பதில் இல்லை என்றால்...
    "ஹி..ஹி.. நான் தோல்வியை ஒத்துக்கறேன்... என்னிடம் பதில் இல்லை"--என்று சொல்வதே கொஞ்சமேனும் மனிதத்தன்மை உள்ளவர்க்கு அழகு.-ashik

    @ சார்வாகன்,
    நீங்கள் சொன்னது: //////நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன்./////

    இதற்கு நான் கேட்ட கேள்வியில் மையப்பொருள் என்ன..?

    'படு தீவிர இஸ்லாமோஃபோபியா காரர்களான அமெரிக்க அரசே "இஸ்லாமிய சட்டங்கள் உலகின் தலை சிறந்தன" என்று ஒத்துக்கொண்டுவிட்டனவே' என்பதே இங்கே நம் விவாதப்பொருள் மேட்டர்.

    அதற்கு உங்களிடம் பதில் இல்லை..!

    அமெரிக்கனுக்கு ரொம்ப நல்லா தெரியும்... எதை செய்தால் முஸ்லிம்களுக்கு பிடிக்காது என்று..!

    அதனால்தான் முஸ்லிம்களை 'விருந்துண்ண வா'(Honouring Prophet) என அழைத்து நளபாக உணவு இலையில் ஒரு ஓரத்தில் நரகல்(statue) வைத்தான்.

    ஏனென்றால்... உங்களைப்போன்றவர்கள் அதைப்பற்றி மட்டும் பேச வேண்டும் என்று..!
    அல்லது,
    சாப்பிடாமல் கோபத்துடன் எழுந்து சென்ற (சிலையை எதிர்த்த)முஸ்லிம்களை பற்றி மட்டும் பேச வேண்டும் என்று.


    நான் நளபாக சமையல் பற்றி மட்டும் இப்போது உங்களிடம் கேட்கிறேன்..!


    'பதில்' என்று ஒன்று இருந்தால்.... சொல்லலாம்.
    கேள்வி இதுதான்..!.
    .
    'படு தீவிர இஸ்லாமோஃபோபியா காரர்களான அமெரிக்க அரசே "இஸ்லாமிய சட்டங்கள் உலகின் தலை சிறந்தன" என்று ஒத்துக்கொண்டுவிட்டனவே'

    நீங்கள்.... "மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன்"----என்கிறீர்களே, இது சரியா..?

    இப்படித்தான் அத்வானி சொன்னது பற்றி கேட்டேன்,
    பதில் இல்லை. அதற்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்லலாமே..!-Ashik

    ////
    Assalaamu Alaikum,

    (My) Mission Succeeded.....(alhamdhulillah)
    ..
    Bookmark this Post's Link for Future
    ..
    Close the Chapter
    .
    ..
    Move on to Next Topic


    Your Brother,
    Aashiq Ahamed A
    ////

    இதை நானும் வழிமொழிகிறேன்..!//-ashik

    இதை நானும் வழிமொழிகிறேன்-Suvanappiriyan

    ReplyDelete
  9. நண்பரே
    இதெல்லாம் ஒரு பிளப்பா? சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்கள் கேள்வியின் மைய கருத்திற்கு உங்களிடம் பதில் இல்லை என்பதிற்காக இப்படி ஒரு அம்மாளிப்பு நாடகம்// அப்படியே அவர் கருத்தை திரிகிறீர்களே உங்களின் போக்கை ஒன்றும் சொல்வதிர்க்கில்லை.......... "ஷரியா சட்டத்தின் படி ஒரு ஆணின் சாட்சி இரு பெண்களின் சாட்சிக்கு சமம்."

    சரி விசயத்திற்கு வருவோம்

    அறிவியல் படி ஆணும் பெண்ணும் சரி சமமா???

    ReplyDelete
  10. /ஷரியா சட்டத்தின் படி ஒரு ஆணின் சாட்சி இரு பெண்களின் சாட்சிக்கு சமம்."/
    /2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்./

    ReplyDelete
  11. சரி இது எனக்கு தெரியும்

    அறிவியல் படி ஆணும் பெண்ணும் சரி சமமா???
    தயவு செய்து பதில் சொல்லுங்கள்

    ReplyDelete
  12. /அறிவியல் படி ஆணும் பெண்ணும் சரி சமமா???/
    அறிவியலின் படி எந்த இரு பொருள்களும் ஒன்று போல் இருக்க முடியாது, அதனிடையே உள்ள வித்தியாசங்கள் சிறியதாக தள்ளுபடி செய்யும் அளவிற்கு இருந்தால் சமம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.(உ.ம்)
    'அ' வின் உய்ரம் 171.233 செ.மீ 'ஆ'வின் உயரம் 171.232 என்றால் வித்தியாசம் 0.01 செ மீ தள்ளுபடி செய்யலாம்.

    ஆண் பெண்களுக்கு சமாக கல்வி,சொத்துரிமை,திருமணம்,கருத்து ,அரசியல் உரிமைகள் கொடுக்கப் படவேண்டும். பெண்களின் சில தனிப்பட்ட உடல், மனம் சார்ந்த விஷயங்களுக்கும் கூடுதல் உரிமை கொடுக்கப் படவேண்டும்.
    வேலை பார்க்கும் பெண்ணுக்கு பிரசவத்தின் போது 2 மாதம் சம்பளத்தோடு கூடிய விடுப்பு போல் மனித இனத்தை காத்து வரும் செயல் செய்வதால் கூடுதல் மதிப்பும்,சட்ட பாதுகாப்பும் கொடுக வேண்டும்.நன்றி

    ReplyDelete
  13. உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்த மாதிரி தெரிய வில்லை என்று நினைக்கிறேன்
    ஆஷிக் அஹ்மத் என்பவர் எதிர்குரல் என்று வெப் வைத்துள்ளார்
    முஹம்மத் ஆஷிக் என்பவர் மற்ற ஒருவர் நீங்கள் குறிப்பிட்ட கேள்வி சகோதர் முஹம்மத் ஆஷிக் யின் கேள்வி

    ReplyDelete
  14. கிறித்தவ பரிணாம் எதிர்ப்பு பற்றி சில விஷயங்கள் எழுதுவதால் ஷாரியா சரியா என்ற தொடர் சிறிது நாள் கழித்து எதிர்பாருங்கள்.
    அமெரிக்கா சொலரான்,ஆண்டவன் சொல்ரான் என்பதெல்லாம் எனக்கு தெரியாது
    ,
    இஸ்லாமியனல்லாத ஒருவனை ஷாரியாவில் தண்டிப்பது சரியா?

    இக்கேள்விக்கு இஸ்லாமியர்கள் ஆம் என்று சொன்னால் அடுத்த பிரதமர் நரேந்திர மோடியே!!!!!!!!!!!!.த்னக்குத் தானே குழி வெட்டும் பிரசாரம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் பேசுங்கள்.

    இக்குரல் என் காதில் கேட்கிறது,உங்களுக்கு கேட்கவில்லையா!!!!!!!

    "இஸ்ல்லமிய நாட்டில் இஸ்லாமிய சட்டம்.இந்துக்கள் நாட்டில் இந்து சட்டம்(மனுநீதி[கொஞ்சம் எடிட் செய்தால் போகிறது] கொண்டு வந்தால் போச்சு!!!!!!!)"
    ஆர்ய சமாஜ் ஏற்கெனவே தொகுத்து விட்டார்கள்.

    உங்கள் பிரச்சாரம் இந்துத்வாதிகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதாக் என் கணிப்பு.

    http://www.eioba.com/a/1stp/manusmriti-the-laws-of-manu-spiritual-aryan-guidebook

    ReplyDelete
  15. நண்பர்களே,
    இந்த முகமதுக்கு சிலை வைத்ததை பாராட்டிய‌ ஆஷிக் என்பவர் ஒரு பொய்யர்,ஏமாற்றுப் பேர்வழி,இந்த மாதிரி ஆட்களை பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
    (நன்றி திரு பேட்)
    வேறு ஏதாவது உருப்படியா விஷயம் பேசலாம்.

    ReplyDelete
  16. அறிவியல் படி ஆணும் பெண்ணும் சமம் அல்ல ஆகையினால் தான் ஒலிம்பிக் யில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி தனி போட்டிகள்
    ஆண்கள் சில விசயங்களில் பெண்களை விட மேம்பட்டவர்கள் அது போல் பெண்கள் சில விசயங்களில் ஆண்களை விட மேம்பட்டவர்கள் இது தான் உண்மை இதை மனதில் வைத்து மேற்கண்ட குரான் வசனத்தை அணுகவும்

    ReplyDelete
  17. நான் ஒன்றுமே அணுகவில்லை,ஷாரியாவின் படி ஒரு ஆண் இரு பெண்களுக்கு சொத்துரிமை,சாட்சி விஷயங்களில் சமம்.இன்னும் பல் விஷய்ங்கள் உண்டு என்றாலும் இதனை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

    ReplyDelete
  18. "இஸ்ல்லமிய நாட்டில் இஸ்லாமிய சட்டம்.இந்துக்கள் நாட்டில் இந்து சட்டம்(மனுநீதி[கொஞ்சம் எடிட் செய்தால் போகிறது] கொண்டு வந்தால் போச்சு!!!!!!!)"
    ஆர்ய சமாஜ் ஏற்கெனவே தொகுத்து விட்டார்கள்............................
    அது ஹிந்து நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் கவலைப்பட வேண்டும். அப்படி ஒரு நாடு எனக்கு தெரிந்த வகை யில் ஒரே ஒரு நாடு அது நேபால். நான் நேபாளி இல்லை நண்பரே நான் ஒரு இந்தியன்

    ReplyDelete
  19. எனக்கு நேரம் இல்லை பின்பு இனிய முறையில் விவாதிக்கலாம்

    ReplyDelete
  20. நண்பரே
    இந்த இந்து என்ற கூட்டத்தை உருவாக்கியவர்கள் உங்கள் பிரச்சாரகள்,அவ்ர்கள் பாட்டுக்கு சைவம்,வைணவம்,நாட்டார் தெய்வங்கள் என்று இருந்த்வன் ஒரு கூட்டமாக் கூடும் அளவிற்கு வந்தது ஏன்.
    நம்து நாடு சட்டப் படி எவ்ரெல்லாம் கிறித்தவ் ,இஸ்லாமியர் அல்லாதவரோ அவரே இந்து.

    அவ்ர்களை ஒரே அணியில் திரட்ட பாஜக முயல்கிறது.அதற்கு இஸ்லாமிய பெருமித பிரச்சாரம் உதவுகிறது.
    இப்போது நான் இந்துத்வா,இஸ்லாமிய ஷாரியா ஆட்சியா என்றால் இந்துத்வா பரவாயில்லை,பிறப்பை வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்றுதானே நினைப்பேன்.

    இந்துத்வ ஆட்சி வருவதற்கு மிக்க வாய்பு இருப்பதாக்வே கருதுகிறேன்.இத்தேர்தலில் என்ன நடக்கிறது எனப்து முக்கியம்.

    Article 25 (2)(b) of the Constitution stipulates that “the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jain or Buddhist religion”.1 The Hindu Marriage Act of 1955 goes in greater detail to define this “legal Hindu”, by stipulating in Section 2 that the Act applies:


    “(a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,


    “(b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and


    “(c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion”.2

    ReplyDelete
  21. //'படு தீவிர இஸ்லாமோஃபோபியா காரர்களான அமெரிக்க அரசே "இஸ்லாமிய சட்டங்கள் உலகின் தலை சிறந்தன" என்று ஒத்துக்கொண்டுவிட்டனவே' என்பதே இங்கே நம் விவாதப்பொருள் மேட்டர்.//

    முகமது சிலை பொறிக்கப்பட்ட வருடம் 1929. அந்த வருடத்தில் அமெரிக்காவுக்கு எந்த போபியாவும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் அந்த கால கட்டத்தில் உலக அரசியல் சக்தியில் பங்இகளிப்பு இல்லை என்றே கூறலாம். இஸ்லாம், மேற்கத்திய அரசியல் முன்னெடுப்பவர்களின் மூலையில் ஒரு சக்தியாகவே தோன்றவில்லை. யூதர்கல் போபியா தான் அந்த கால கட்டத்தில் இருந்தது.

    முகமதுவை சரித்திரத்தில் எல்லோரையும் போல ஒரு பாத்திரமாகவே அந்த சிலை காட்டுகிறது. அதை விடுத்து வேறு எதையும் எடுப்பதும் நினப்பதும் அமெரிக்க அரசியலைமைபுச் சாசனப்படி உரிமை அவரவர்கு உரிமை உண்டு. ஆனால் அப்படி நினைப்பார்கள் என்பதற்காக எள்ளி நகையாடுவார்களே தவிர, ஏழாம் நூற்றாண்டு சட்டத்தின்படி பாமியான் சிலைகளை குண்டுகள் வைத்து உடைத்தது போல, அமெரிக்கர்கள் முகமது சிலையை உடைக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  22. எண்ணெய் மட்டும் மத்திய கிழக்கில் கண்டு பிடிக்கப் படவில்லை என்றால் உலகில் இஸ்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது.பொறுமையோடு எண்ணெய் தீர்ந்த பிரகு மதம் ,சஅரசியல் போக்கு எப்படி என்றே பார்க்க வேண்டும்.
    ________________________
    இக்கதை கேளுங்கள்.

    ஒருவர் ஒரு நாய்,பூனை வள்ர்க்கிறார்.இரண்டையும் நன்கு கவனிக்கிறார் ,நாயும் பூனையும் பேசுகின்றன‌

    நாய்: என் எஜமான்ர் என்க்கு உணவளிக்கிறார்,இருக்க இடம் கொடுக்கிறார்,பாதுகாக்கிறார்,ஆகவே அவர் கடவுளாக்த்தான் இருக்க வேண்டும்.

    பூனை: என் எஜமான்ர் என்க்கு உணவளிக்கிறார்,இருக்க இடம் கொடுக்கிறார்,பாதுகாக்கிறார்,ஆகவே நான் கடவுளாக்த்தான் இருக்க வேண்டும்.
    __________

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  23. ஐயா சார்வாகன்,
    உங்iகள் கதையின் moral of story !!!-:)

    நாயும் பூனையும் தான் கடவுள் யார் அல்லது யார் கடவுள் என்பதை பற்றி பேசும். மனிதன் தான் செய்யும் வேலையை செய்துக் கொண்டிருப்பான்.

    கடவுளை வைத்து நாயும் பூனையும் தேவையில்லாமல் அதிகமாக குறைத்தாலோ, மியாவினாலோ, மனிதன் அதை கட்டுப் படுத்த சில காரியங்களை செய்ய வேண்டும்.....!!!!-:)

    ReplyDelete
  24. மிகச் சரியான் பதில் கூறியதால்,மௌனம் கலைந்து மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறேன்
    மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி
    சார்வாக வேதாளம்

    ReplyDelete
  25. //நம்து நாடு சட்டப் படி எவ்ரெல்லாம் கிறித்தவ் ,இஸ்லாமியர் அல்லாதவரோ அவரே இந்து.
    அவ்ர்களை ஒரே அணியில் திரட்ட பாஜக முயல்கிறது.அதற்கு இஸ்லாமிய பெருமித பிரச்சாரம் உதவுகிறது.//

    என் சோகமும் இதுதான்.

    ReplyDelete
  26. முகமதுவை பத்தொன்பது பேரில் ஒருவராக வைத்ததற்கே இம்பூட்டு பூரிப்பா ...!

    ReplyDelete