Wednesday, June 29, 2011

சவுதி செல்ல பெண்களுக்கு இந்தோனேஷியா தடை(18++)


நாம் பல பதிவுகளில் சவுதியின் சட்டங்கள் உலக் மனித உரிமைகளுக்கு விரோத்மாக இருப்பதையும் பிற நாட்டவர்,மதத்தவர் அந்நாட்டு சட்டத்தின் படி தண்டிக்கப்படுவது தவறு என்று எழுதி வருகிறோம்.

கடந்த சனிக்கிழமை(18/6/2011)இந்தோனேஷியாவை சேர்ந்த பணிப்பெண் சவுதியில் மரண தண்டனை விதிக்கப் பட்டு கொல்லப் பட்டதால் அவ்வரசு பெண்களுக்கு தடை விதித்துள்ளது.  இது பற்றி நிறைய எழுதலாம் ஆனால் கஷ்டம் தனக்கு வந்தால் மட்டுமே குரல் கொடுப்பேன் என்பதோடு சவுதி அரசின் சட்டங்களே உலகில் சிறந்தது என்று கூறும் நண்பர்களை என்ன செய்வது.ஒருவர் தவறாக குற்றம் சாட்டப் பட்டு தண்டிக்கப் படுவதற்கு கூட வாய்ப்பு உண்டு.. அப்பெண்ணின் எஜமானியை கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டு பல்ர் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டது.என்ன நடந்ததோ நம்க்கு தெரியாது. இதுவரை அதிகம் தண்டிக்கப் பட்டவர்கள்  பிற  நாட்டினர்ரே என்பது மிகவும் வருத்தத்திற்குறிய விஷயம்.

வேறு யாரும் இது போல் தண்டிக்கப்ப்டாமல் இருக்க பணியாற்றும் நண்பர்கள் கவனமாக் இருக்க வேண்டுகிறோம். 






இது பற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியின் காணொளி விவாதம்

http://english.aljazeera.net/programmes/insidestory/2011/06/20116297232774383.html

9 comments:

  1. மனித சமுதாயத்தின் நாகரிகத்திற்கு தடையான எதுவுமே வரலாற்றில் நீடித்ததது இல்லை.முதலில் ஒரு ஆட்சியில் இப்படி நடந்தது என்றால் அது அவதூறு பிரச்சாரம்,அப்படி இல்லை என்று எதிர் வாதம் செய்யும் வாய்ப்பு இருந்தது.ஆனால் ஒவொரு விஷயமும் ஆவணப் படுத்தப் படுவதால் அப்ப்டி செய்யும் வாய்ப்பு குறைவு.
    உலகில் எந்த ஒரு விஷயமும் அரசியல் ,பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அனுகப் படுவதால் இம்மதிரி மனித உரிமை மீறல்கள் இவ்விரண்டு விஷய்த்திற்கு முரண்படாத வரையில் தொடரும். செய்த தவறுக்கு நியாயமான தண்டனை என்று வாதிடும் நண்பர்களே, முறையான வெளிப்படையான விசாரணை, தண்டனை கூட நாக்ரிகமான முறையில் நிறைவேற்றப் படவேண்டும்.அந்தப் பெண் ஒன்றும் விலங்கு அல்ல.மனிதம் மதிக்கப் பட வேண்டும்.
    இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு நம் வன்மையான கண்டனங்கள்.

    ReplyDelete
  2. "பேய்கள் ஆட்சி செய்தால் பிணந் திண்ணும் சாத்திரங்கள்"
    சவுதி அரசு இந்தோநேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு விசா வழங்குவதை இன்று (29/6/2011) நிறுத்தியுள்ளது.ஒரு தவறில் இருந்து திருத்திக் கொள்வது மனித இயல்பு.காலம்,சூழ்நிலை எப்போதும் ஒரு நாட்டுக்கே ஆதரவாக் இருக்காது.
    http://www.youtube.com/watch?v=li1XrY5ncPI&feature=relmfu

    ReplyDelete
  3. முதல் காணொளி உண்மையாக இருக்கும் பட்சத்தில், மக்களை இந்த செயல்களை செய்யும் தூண்டும் கலாச்சாரம் மற்றும் அதை நியாயபடுத்தும் செயல் ஆகியவற்றின் தூண்டுக் கோல் மற்றும் காரணி எது என்பது வெட்ட வெளிச்சம்.

    ReplyDelete
  4. வாங்க நண்பரே,
    இது அங்கு ஆளும் வர்க்கத்தினரின் செயல் மட்டுமே.இத்னை எதிர்த்து சுதந்திரமாக் கருத்துகளை கூறும் உரிமை குடிமகன்களுக்கு மறுக்கப் படுகின்றது என்பதே உண்மை.அங்கு பணி புரிபவர்கள் பல்ரின் கதி இதை விட மோசம்.ஒன்றுமில்லை எத்தனை விசா மோசடி நடக்கிறது!.இதனை தடுக்க ஏதாவது முயற்சி செய்கிறார்களா!. இதனை மறைக்கவே அங்கிருந்து பெரும் செலவில் கருத்தியல் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது.

    கொஞ்ச நாளில் மிக பெரும் நகைசுவை நாடக்த்தை அரங்கேற்றி, ஹா ஹா ஹா ,இன்னும் கொஞ்ச நாநளில் இவர்கள் உண்மையாக் கொள்கையை பின்பற்றவில்லை என்று பல்டி அடிப்பதும் நடக்கும்.

    ReplyDelete
  5. நணபரே, சவுதி மற்றும் மேற்காசிய நாடுகளிள் வேலைச் செய்யும் இன்றைய எதார்த்த நிலை, எக்ஸ்பிரஸில் வந்துள்ளது.
    http://expressbuzz.com/states/kerala/maids-from-gulf-flocking-to-kerala-for-mtp/289773.html

    ஒரு மதத்தினால் ஒரு மனிதன் கண்ணியமிக்கவனாக இருப்பானா என்ற கேள்விக்கு, விடை -ஆம் என்றால் இந்த செய்தியினால் அந்த மதம் கண்ணியமில்லை, -இல்லை என்றால் அந்த மதத்தை உண்மையாக பின் பற்ற முடியாது.

    ReplyDelete
  6. நண்பரே
    நாம் என்ன சொல்கிறோம் ஒரு வெளி நாட்டில் பணியாற்ற செல்லும் மனிதனை இப்பொதைய பிற (அவனுடைய) நாடுகளில் உள்ள சட்டங்கள் மூலமே விசாரித்து தண்டிக்க கூறுகிறோம். அதனையும் நாகரிகமாக் நிறைவேற்று என்றே கூறுகிறோம்.

    மத புத்தகத்த்தில் இப்படித்தான் கூறியிருக்கிறது என்ற கருத்து தவறு.அதே மதத்தினை சேர்ந்த பிற நாடுகளில் இதே விஷயம் வேறுவிதமாக் தீர்ப்பளிக்கப் படுகின்றதே.இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது.மக்களை கட்டுக்குள் வைக்க எல்லார் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றி,பயமேற்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் தந்திரமே.

    இன்னும் ஒரு இலங்கை முஸ்லிம் பெண் ஒருத்தி சிறையில் மர‌ண தண்டனை எதிர்நோக்கியுள்ளார்.அச்சகோதரியாவது பத்திரமாக் நாடு திரும்ப முயற்சி செய்வோம்.இத்னை எதிர்த்து ஒரு குரல் கூட அந்நாட்டில் எழும்ப வில்லை[முடியாத சூழ்நிலை] என்பது வருத்ததிற்கு உரியது.

    இது சீக்கிரமே ஒரு உலகளாவிய பிரச்சினையாக் உருவெடுக்கும். அடிமை முரை சட்ட விரோதமாக்கப் பட்ட‌து போல் இதுவும் இல்லாமல் போகும்.
    நன்றி

    http://www.humanrights.asia/news/forwarded-news/AHRC-FAT-032-2011

    ReplyDelete
  7. நம்ம மத‌ பிரசார பீரங்கிகள் எல்லாம் சும்மா.இங்கேதான் பயங்கர உதார் விடுவார்காள்,அங்கே கப்சுப்னு [திறந்தா ஊர் வர முடியாது]அப்படி ஒன்று நட்க்காத மாதிரி இங்கேதான் எல்லாம் பிரச்சினைனு பேசுவார்கள். ஆகவே சகோதரர்களே ஜாக்க்கிரதையாக‌ இருந்து ஊர் வந்து சேருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.அங்கே நம்ம தூதரகம் கூட எதுக்கும் உதவி செய்ய மாட்டார்கள்.

    ReplyDelete
  8. http://www.keralamonitor.com/saudimigrantlabourabuse.html

    ReplyDelete
  9. Caught on CCTV: Moment gay Saudi prince attacked manservant in hotel lift... months before he 'sexually abused and battered him to death'

    Read more: http://www.dailymail.co.uk/news/article-1317865/Gay-Saudi-prince-sexually-abused-battered-manservant-death-hotel.html#ixzz1REhYBlf6

    http://www.dailymail.co.uk/news/article-1317865/Gay-Saudi-prince-sexually-abused-battered-manservant-death-hotel.html

    http://www.youtube.com/watch?v=7slkTCMjBf8

    ReplyDelete