Wednesday, July 20, 2011

பள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா?


சென்ற வாரம் கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அணுப்பப் பட்டது.அதில் பள்ளிக் கால் அட்டவனையில் 3 மணி நேரம் பகவ்த் கீதை கற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட மத அமைப்பு இதனை முன்னெடுத்து செல்லும் என்று தெரிகிறது.இது குறித்து கருத்து தெர்வித்த கர்நாடக பள்ளி கல்வி அமைச்சர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காஹேரி கூறியது  தேவையற்றதாக தெரிகிறது.

அவ்ர் கூறியது

"இந்த நாட்டு மக்கள் பகவத் கீதையை நம்புகின்றனர்,இத்னை எதிர்ப்பவர்கள் தாங்கள் நம்பும் கொள்கை உள்ள இடங்களுக்கு செல்லலாம்"


This country believes in the Gita. Those who oppose it and believe in philosophies that are not of this country can go there and propagate them," he told TOI on Tuesday. 



மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்,சுய தேடல்.கட்டாயமாக்ப் படக் கூடாது.இது அரசியல் இலாபத்திற்காக கூறியது,இபடி கூறினால் பி மதத்தவர் எதிர்ப்பர், பிறகு இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற‌ பெயரை தட்டி செல்வதுதான் இலக்கு.இதனை ஓட்டுகளாக மாற்றுவதுதான் இலட்சியம்.
                
கர்நாடகாவில் யெடியூரப்பா அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நித்ய கண்டம்,பூரண ஆயுசு என்ர வகையிலேயே உயி தப்பி வருகிறது.ரெட்டி சகோதர்கள்,எதிர் கோஷ்டி சட்டமன்ற உறுப்பினர்கள்என்று பல தகிடு தத்தம் செய்தே தப்பித்தது.இன்னும் நிறைய இது மாதிரித்தான் செய்வார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

http://en.wikipedia.org/wiki/G._Janardhana_Reddy


இந்த மாதிரி ஆட்கள் தான் மதம் என்னும் விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துவார்கள் என்பது நாம் அறிந்தது. அந்த அமைச்சருக்கும் கர்நாடக் அரசுக்கும் நமது கண்டனங்கள்.

இது சட்ட ரீதியாக் சந்திக்க பட வேண்டிய‌ விஷயம்.மதம் கல்வி,அரசியலில் கலக்க் கூடாது.இதில் உடனே அந்த அமைச்சர் எதிர் பார்த்த பலன் உடனே கிடைக்க பிற மதத்தை சார்ந்த நண்பர்கள் உண‌ர்ச்சி வசப் பட்டு கூறும் கருத்துகள் தேவையில்லாதது. இந்த பதிவிற்கும் நமது கண்டனம்.

அவர்கள் மத ஆட்சி நடக்கும் நாடுகளில் பிற மதத்தவரின் மீதான் அடக்குமுறையை கண்டிக்கட்டும்..  முதலில்.இது ஒரு மாநிலத்தில் மட்டுமே நடக்கும் சட்ட ரீதியான பிரச்சினை.இத்னை தீர்க்க பல் வாய்ப்புகள் இந்தியாவில் உண்டு.பிரச்சினையை பெரிதாக்க‌ வேண்டாம் என்று வேண்டுகிறோம்.  

குழந்தைகளுக்கு மதக் கல்வி மட்டுமல்ல மதமே தேவையில்லை என்பதுதான் நம் கருத்து.பள்ளியின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்


12 comments:

  1. Malaysian 'teapot cult' woman loses Islam legal bid
    http://richarddawkins.net/articles/642208-malaysian-teapot-cult-woman-loses-islam-legal-bid
    *************
    Malaysia's civil court has refused a woman permission to leave Islam to avoid being jailed for apostasy.

    Kamariah Ali, 60, says she should not be tried under Islamic law because she is no longer a Muslim.


    Kamariah Ali has already been tried for apostasy in the Islamic courts

    She follows the Sky Kingdom sect, known as the teapot cult because it built a giant teapot to symbolise its belief in the healing purity of water.

    But judges ruled that only Malaysia's Islamic courts could decide on the case because Ms Kamariah was born a Muslim.

    Malaysia's Islamic courts have authority over only Muslims - the rest of the population are not bound by their rules.

    The BBC's Jennifer Pak in Kuala Lumpur says Ms Kamariah's case is one of a growing number of legal challenges brought by those caught between the Islamic authorities and the civil courts.

    Ms Kamariah had asked the civil courts to declare her freedom to worship, as guaranteed by the constitution.

    But the judging panel said she had to go through the Islamic courts system in order to renounce her faith - something that is rarely granted, our correspondent says.

    ReplyDelete
  2. சகோதரர் சார்வாகன் சொன்னது மிக சரி. இந்த அமைச்சர் தன்னை பிரபலப் படுத்திக் கொள்ள இப்படி செய்கிறார் என்றே தோன்றுகிறது.

    கீதையை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்வது, கட்டாயப் படுத்துவது சரியல்ல.

    இவராவது படிக்க மட்டும் தான் சொல்லுகிறார். அதே நேரம் தமிழ் நாட்டில் அரசு உதவி பெரும் பல பைபிள் கோட்பாட்டு சார்பு பள்ளிககளில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் கண்டிப்பாக மண்டி போட்டு பிரேயர் செய்ய வைக்கிறார்கள். இதை யாரும் கேட்பதில்லை. கேட்டால் பிரச்சினை வரும் என்று விட்டு விடுகின்றனர். நானும் சக மாணவர்களும் ஒவ்வொரு வாரமும் மணலில் மண்டி போட்டு பிரேயர் செய்ய வைக்கப் பட்டு இருக்கிறோம், கட்டிடத்துக்குள் வைத்து நடத்தினாலும் புழுக்கமாக மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும்.

    என்னைக் கேட்டால் வரலாற்றின் ஒரு பகுதியாக எல்லா மதங்களின் முக்கியக் கருத்துக்களையும் - நல்ல கருத்துக்கள் மட்டும் அல்ல, சர்சைக்குரிய கருத்துக்களையும் - எல்லா மாணவர்களையும் படிக்க வைக்க வேண்டும். மத வெறியினால் உலகில் நடத்தப் பட்ட சண்டைகளையும், கோடிக் கணக்கில் மக்கள் இறந்ததை வரலாறு பதிவு செய்துள்ளதையும் சொல்ல வேண்டும். பகுத்தறிவு சிந்தனையையும், இறை மறுப்புக் கோட்பாட்டையும் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proofஐ யாரும் தரவில்லை என்பதையும், வெறுமனே புத்தகங்களில் எழுதப் பட்டுள்ளவற்றை நம்பியே பலரும் கடவுள் இருப்பதாக கருதுகின்றனர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    அமைதியான வழிபாட்டை, அமைதியாக தங்கள் மதத்தை பின்பற்றுவதை நாகரிக சமுதாயம் தடுக்காது என்பதையும்,

    ஆனால் பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை, அவை இல்லாமல் போக வேண்டும்,
    தன் மதம் மட்டுமே உண்மையானது , அது மட்டுமே எல்லோராலும் பின்பற்றப் பட வேண்டும் என்கிற ஆவேசத்தில், பிற மதங்களுக்கு எதிராக சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியை பரப்பும் பிரச்சாரம் மிக ஆபத்தானது, அணு குண்டை விட ஆபத்தானது என்பதை தெளிவு படுத்தும் கல்வியானது உலகில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப் பட வேண்டும்.

    மத மறுப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது. இது தொடரும் என்றே தோன்றுகிறது . ஏனெனில் மனிதன் பலகீனமானவனாக இருக்கிறான். எனவே கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது அவனுக்கு ஒரு மொரேல் பூஸ்டர் ஆகிறது.

    எனவே மதங்களைப் புறக்கணிப்பதை விட அவற்றை நொங்கி நுங்கெடுத்து

    இது நல்லது, இது தேவையில்லாதது, உன்னுடைய மத வெறியில் மிருகமாகி வெறுப்புணர்ச்சியைக் கக்கி வாளை உருவும் நிலைக்கு செல்லாதே, என்று எச்சரிப்பது மிக முக்கியமாகும்.

    ReplyDelete
  3. இவர்களை இந்து மத தீவிரவாதிகள் என்றே சொல்லலாம். அவ்வளவு கொடியவர்கள் இவர்கள். இவன் அமைச்சர் அல்ல. இந்துத்வா அல்லக்கை.

    ReplyDelete
  4. ஆட்சி கவிழப்போவதற்கு அறிகுறிதான் இந்த மாதிரி பேச்சுக்களும் திட்டங்களும். எல்லா மத சம்பந்தமான பாடங்கள் நடத்தப்படும் என்றால் ஆட்சேபனையில்லை. ஒரு மத பாடங்கள் என்றால் அது discrimination. எப்படியும் இந்த பாடத்திட்டம் நீதிமன்றங்கள் மூலம் இரத்தாகும்.

    moral science என்ற பாடத்திட்டத்தை மேம்படுத்தலாம்.

    சமூகச் சுழலில் குழந்தைகள் மத தாக்கதிலிருந்து விடுப்பட முடியாது, வயது வளர அறிவு வளர,வாழ்கையில் மததின் நிலையை தீர்மானிக்கலாம். நம்பிக்கை இருக்கலாம் மூடநம்பிக்கை இருக்க கூடாது மத வெறி கூடாது.

    எடியூரப்பா அரசியலில் ஒரு நித்யானந்தா, பரவசத்தை ஏற்படுத்தியவர். சாமான்ய மக்களுக்கு கடவுளின் சக்தியை காட்டியவர்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோ திருச்சிக்காரன்,
    அனைத்து மத புத்தகங்களையும்,நடுநிலையான பார்வையோடு அனைவரும் விருபப் பட்டால் படிக்கலாம்.கட்டாயப் படுத்தக் கூடாது.எதிலும் அரசியல் என்னும் போது இப்படி நடக்குமா?.பல மத புத்தககங்களின் , சில கொள்கை விளக்கங்கள் மிக ஆபத்தானவை.
    பல பள்ளிகளில் நீதி போத்னை என்னும் வகுப்புகள் கூட உண்டு.மதம் சார்ந்து சில விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார்கள்.இதுவும் கூட நடுநிலையாக இருக்காது என்பதும் அறிந்த்தேஇந்த பிரச்ச்சினையை பாஜக அரசு முழுக்க முழுக்க அரசியல் இலாபட்திற்காகவே கொண்டு வந்தது என்பதுதான் உண்மை.
    அவர்களின் குறியே சில சிறுபான்மை உணர்ச்சி வசப் பட்ட இயக்கங்கள்தான். உடனே இவர்கள் பாஜகவை இந்துக்களின் ஏக(இதுதான் பிரச்சினையே!!!!!!!!!) பிரதிநிதியாக்கி விடுவார்கள். பாஜகவின் திட்டம் பலிக்க உதவுவதே இவர்கள்தான். இந்தியாவின் ஜனநாயகமும்,மதச் சார்பின்மையும் உலகின் பல் நாடுகளை விட எவ்வளவோ பரவாயில்லை. ஊழ‌ல் இல்லாத இலவச கல்வி,சுகாதாரம் நோக்கி முயற்சிப்பதே சால சிறந்தது.அரசியல் கட்சிகள் இத்னை பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள்.
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  6. / ஒரு மத பாடங்கள் என்றால் அது discrimination. எப்படியும் இந்த பாடத்திட்டம் நீதிமன்றங்கள் மூலம் இரத்தாகும்./
    வாங்க நரேன்,
    நம் இந்திய மக்கள் மத சார்பின்மை,ஜனநாயகத்தின் சுதந்திரத்தை அனுபவித்தவர்கள்.ஆகவே நீதி மன்ன்ற தீர்ப்பு நீங்கள் கூறிய வழியிலேயே கிடைக்கும்.இது பாஜகவிற்கும் தெரியும் பிறகு ஏன என்றால்.எல்லாம் நம்ம அன்பு சகோதரர்களை நம்பித்தான்.
    ஒரு 'அஆஇஈ' தலைவர் போராட்டம் நடத்தி பிரச்சினையை பெரிது ஆக்கினால் மட்டுமே இதற்கு பலன்.அவர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.இப்பதிவை பாருங்கள் ..

    ************
    இந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை யாராலும் தடுக்க முடியாது!
    http://www.sinthikkavum.net/2011/07/blog-post_7242.html
    *************
    கொடுமை,ஒரு மாநிலத்தின் செயலுக்கு,அதுவும் தவிர்க்க பல வாய்ப்புகள் இருக்கும் போதே கருத்துகளை பாருங்கள்.விஷ வித்துகள்.இவர்களை நம்பித்தான் அந்த திட்டமே.பலித்தாலும் பலிக்கும்.!!!!!!!!!!!.
    மதவாதிகள் அனைவருமே ஒன்றே!!!!!!!!!!!.
    என்ன சிறுபான்மை,பெரும்பான்மை என்ற சூழ்நிலைக்கு தகுந்த்வாறு கொஞ்சம் நடிக்கும் பாத்திரம்,பேசும் வசனம் மாறும்.!!!!!!!!!!!

    ReplyDelete
  7. //அனைத்து மத புத்தகங்களையும்,நடுநிலையான பார்வையோடு அனைவரும் விருபப் பட்டால் படிக்கலாம்.கட்டாயப் படுத்தக் கூடாது.//

    இதில் கட்டாயம் எதுவும் இல்லை நண்பரே,

    மதங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் ஒரு முக்கிய பொது அறிவு விடயமே.

    ஆஸ்திரேலியாவின் பூகோளம் பற்றி ஏழாம் வகுப்பில் விரிவாக் சொல்லப் பட்டு உள்ளது. நான் ஆஸ்திரேலியாவுக்கு போகிறேனோ இல்லையோ தெரியாது, ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு மிக குறைவு.

    ஆனால் என்னுடன் பணி புரியும் இஸ்லாமிய சமூக தோழருடன் உணவு அருந்த சென்றால் போர்க் சான்ட்விச் ஆர்டர் செய்வது அவருக்கு அசௌகரியத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது அல்லவா.

    நீங்கள் மதம் மனிதனுக்கு அவசியமில்லை எனக் கருதலாம். ஆனால் நீங்கள் விரும்பாவிட்டாலும் மதம் நமது வாழ்வில் குறுக்கிடுகிறதே. மத வரி போடுவது சரிதான் என்று சொல்லுகிறார்களே. மத சண்டைகளால் மனிதர்கள் பாதிக்கப் படுகிறார்களே. எனவே மதங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு, எல்லோரையும் இணக்கமாக வாழச் செய்வது மிக முக்கிய விடயமாகிறதே. மதம் என்ற ஒன்று வேண்டாம் என்று குரல் கூட எழுப்ப முடியாத அடக்குமுறை நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய படிக்கு மத வெறி சக்திகள் சிந்தனையாளர்களின் சக்தியை அடக்கி மேல் எழுகிறதே . மதங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவற்றோடு எப்படி டீல் செய்ய இயலும்.?

    //பல மத புத்தககங்களின் , சில கொள்கை விளக்கங்கள் மிக ஆபத்தானவை.//

    ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே. கற்கால சமூகங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கக்கப் பட்ட கொடூர முறைகளை இன்றைக்கு அப்பாவி மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வெறித் தனத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். மனசாட்சி இருப்பவர் சிந்திக்கட்டுமே. மத வெறியால் மன சாட்சியை மறந்தவர்கள், ஒரு கண நேரமாவது வருத்தப் பட வாய்ப்பு இருக்கும் அல்லவா?

    //அனைத்து மத புத்தகங்களையும்,நடுநிலையான பார்வையோடு அனைவரும் விருபப் பட்டால் படிக்கலாம்.கட்டாயப் படுத்தக் கூடாது.//

    இதில் கட்டாயம் எதுவும் இல்லை நண்பரே,

    மதங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் ஒரு முக்கிய பொது அறிவு விடயமே.

    ஆஸ்திரேலியாவின் பூகோளம் பற்றி ஏழாம் வகுப்பில் விரிவாக் சொல்லப் பட்டு உள்ளது. நான் ஆஸ்திரேலியாவுக்கு போகிறேனோ இல்லையோ தெரியாது, ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு மிக குறைவு.

    ஆனால் என்னுடன் பணி புரியும் இஸ்லாமிய சமூக தோழருடன் உணவு அருந்த சென்றால் போர்க் சான்ட்விச் ஆர்டர் செய்வது அவருக்கு அசௌகரியத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது அல்லவா.

    நீங்கள் மதம் மனிதனுக்கு அவசியமில்லை எனக் கருதலாம். ஆனால் நீங்கள் விரும்பாவிட்டாலும் மதம் நமது வாழ்வில் குறுக்கிடுகிறதே. மத வரி போடுவது சரிதான் என்று சொல்லுகிறார்களே. மத சண்டைகளால் மனிதர்கள் பாதிக்கப் படுகிறார்களே. எனவே மதங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு, எல்லோரையும் இணக்கமாக வாழச் செய்வது மிக முக்கிய விடயமாகிறதே. மதம் என்ற ஒன்று வேண்டாம் என்று குரல் கூட எழுப்ப முடியாத அடக்குமுறை நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய படிக்கு மத வெறி சக்திகள் சிந்தனையாளர்களின் சக்தியை அடக்கி மேல் எழுகிறதே . மதங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவற்றோடு எப்படி டீல் செய்ய இயலும்.?

    //பல மத புத்தககங்களின் , சில கொள்கை விளக்கங்கள் மிக ஆபத்தானவை.//


    ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே. கற்கால சமூகங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கக்கப் பட்ட கொடூர முறைகளை இன்றைக்கு அப்பாவி மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வெறித் தனத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். மனசாட்சி இருப்பவர் சிந்திக்கட்டுமே. மத வெறியால் மன சாட்சியை மறந்தவர்கள், ஒரு கண நேரமாவது வருத்தப் பட வாய்ப்பு இருக்கும் அல்லவா?

    ReplyDelete
  8. /ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே. கற்கால சமூகங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கக்கப் பட்ட கொடூர முறைகளை இன்றைக்கு அப்பாவி மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வெறித் தனத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். மனசாட்சி இருப்பவர் சிந்திக்கட்டுமே. மத வெறியால் மன சாட்சியை மறந்தவர்கள், ஒரு கண நேரமாவது வருத்தப் பட வாய்ப்பு இருக்கும் அல்லவா?/
    சகோ திருச்சிக்காரன்
    எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் அதிகம் படிப்பது மத புத்தகங்களையே.படிப்பதால் நீங்கள் சொன்ன அனைத்து சாதக் ,பாதக விஷயங்களும் ஓரளவிற்கு புரிந்தது.பொதுவாக ஒவ்வொரு மத புத்தக்த்திலும் எழுதப் பட்ட கால்த்தின் இயல்பான நடைமுறைகள் அனுமதிக்கப் பட்டு அதற்கு நியாயம் கற்பிக்கப் பட்டு இருக்கும். அவை எக்கால்த்துக்கும் பொருந்துமாறு உள்ளது, அனைத்துக் கருத்துகளுமே சரி என்றவுடன் பிரச்சினை ஆரம்பித்து விடும். எந்த மத புத்தகமானாலும் அதில் உள்ள நல்ல்வற்றை பின் பற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. காலத்திற்கு ஒத்துவராத விஷயத்தை, புத்தக்த்தில் சொல்லி இருப்பதால் மட்டுமே நியாயப் படுத்துவதை நிச்சயம் எதிர்க்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  9. நண்பர்களே,
    நமக்கு எந்த மத புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் உண்டு.மத புத்தகங்கள் வழங்கிய பதிவில் பகவத் கீதை அளிக்கவில்லை.ஆகவே மகாகவி பாரதியாரின் விளக்க உரை அளிப்பதில் மகிழ்ச்சி.சரியென்று படும் கருத்துகளை ஆய்ந்து பின் பற்ற வேண்டுகிறோம்.

    ____________
    வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான்
    வேத மன்ன மொழிகளில், “பார்த்தனே
    நீ இனிக்கவலாது அறப் போர் செய்தல்
    நேர்மை” என்றதோர்செய்தியைக் கூறும் என்
    வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள்
    வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
    தாய் இனிக்கருணை செயல் வேண்டும் நின்
    சரண மன்றி இங்கோர் சரணில்லையே.

    - பாரதியார்
    _____________
    பகவத் கீதை மகாகவி பாரதியார் விளக்கம்
    http://pm.tamil.net/pub/pm0014/pm0014.pdf
    ___________
    http://www.sangatham.com/bhagavad_gita

    ReplyDelete
  10. http://saarvaakan.blogspot.com/2011/02/blog-post_16.html

    ப‌ல மத வேதங்கள்

    ReplyDelete
  11. //ஆனால் என்னுடன் பணி புரியும் இஸ்லாமிய சமூக தோழருடன் உணவு அருந்த சென்றால் போர்க் சான்ட்விச் ஆர்டர் செய்வது அவருக்கு அசௌகரியத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது அல்லவா.//

    தோழர் beef சாண்ட்விச்சை உங்களுக்கு அசெளகரியமில்லால் சாப்பிடும்பொழுது, நீங்கள் ஏன் pork சாண்ட்விச் சாப்பிட அசெளகிரியபடுகிறீர்கள்.

    மத சம்பந்தமான விஷயங்களை குழந்தை பருவத்தில் இருந்தே மனிதன் தன் வீட்டில் அல்லது தனது சுற்றத்தில் நடப்பவற்றைகளை வைத்து அறிய ஆரம்பிக்கிறான். அதன்படி தான் அவன் எண்ணங்கள் அமையும்.
    இவ்வாறு இருக்கையில் பள்ளிகளில் மத போதனைகள் என்ன நோக்கத்திற்காக என்று முடிவு செய்து எடுத்து வந்தால் நல்லது. இல்லையேல் அது எதிர்மறையான முடிவுகளைத்தான் தரும். சிறு வயதில் இருந்து என் மதம் பெரிசா இல்லை உன் மதம் பெரிசா என்று வந்து விடும்.

    ReplyDelete
  12. இது வெறும் ‘வெற்று அரசியல்’.
    காற்றோடு போகும்; போகவேண்டும்.

    ReplyDelete