Friday, July 1, 2011

Top Ten Creationist Arguments




http://www.anevolvingcreation.net/standup/

Evolution: Where Are The Transitional Forms?






அதுக்கு(பெரு வெடிப்புக்கு)  முன்னாலே என்று கேட்கும் நண்பர்களுக்கு

18 comments:

  1. ஹா..ஹா...ஹா...ஹா...ஹா....

    சார்,நீங்க..."you took it out of context" ஹா..ஹா

    மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்றால் குரங்கு ஏன்... என்ற கேள்விக்கு அமெரிக்கா இங்கிலாந்து பதில் தந்து ராணியின் ரியாக்‌ஷ்ன் காட்டினார்களே...

    Pascal Wager- ஒரு மதத்தை அசிங்க அசிங்கமாக திட்டி இன்னொரு மதத்தில் சேர்ந்த, ராசிக்கல் மனொதத்துவ நிபுணர் சொன்ன காரணம் pascal wager.

    பெரு வெடிப்பு முன் என்ன இருந்தது--தேங்காய் முன் என்ன இருந்தது--ted பீர் சாப்பிடும் போது ஏற்பட்டது பெரு வெடிப்பு..ஹா..ஹா..

    கிளிப் பிள்ளைப் போல கேள்விகளுக்கு..கிளிப்பிள்ளைப் போல் சரியான பதில்

    கடைசி punch; "No amount of belief makes something a fact"..James Randi. இந்த நவீன மதபிரச்சாரர்கள் அவர்களின் நம்பிக்கையே உண்மையான் சம்பவம் என்பதால் இவ்வளவு மெனக்கெடுதல்.

    ReplyDelete
  2. நண்பர் நரேன்
    வாங்க,நாம் அறிந்தது என்ன?
    1. பரிணாம் எதிர்ப்பாளர்கள் அனைவருமே மதவாதிகள்.
    2.பரிணாம்த்தின் மீது கேட்கப் பட்ட கேள்விகள் எல்லாமே பழமையானவை. அவ்ற்றிற்கு கொடுக்கப்படும் விடையை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.அவர்கள் ஏற்றுக் கொள்ள்வில்லை என்பது யாருக்கும் அவசியமில்லை.
    பரிணாம மரத்தின் ஒவ்வொரு கிளை பிரியும் புள்ளி உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது.நுனிக் கிளையின் உயிரினங்கள்(நாமும்தான்) தவிர முந்தைய உயிரின‌ங்கள் மறைந்து விட்டன(பரிணாம வளர்ச்சி படி இருக்க முடியாது).அவைதான் படிமங்களக் கண்டறியப் பட்டுள்ள்ன.

    உலகில் தோன்றிய 99.9% உயிரினங்கள் இல்லாமல் போய்விட்டன.கிடைத்த அப்படிப்பட்ட பல் உயிரினங்களின் படிமங்களின் மறைவுக் காலம் வித்தியாசப் ப்டுகின்றது.

    .3.இந்த பரிணாம் மரம் ஜீன் ஆய்வுக்கும் பொருந்துகிறது.

    இவற்றுக்கு எல்லாம் சான்றளிக்கும் ஒரு அறிவியல் கொள்கை பரிணாம்த்திற்கு மாற்றக வருமவரை பரிணாமமே நம்து கொள்கை.

    ReplyDelete
  3. ஐயா

    பரிணாமம் போட்ட போடில் zakir naik இப்பொழுது இறைவன் உலகை 6 நாட்களில் படைக்கவில்லை 6 யுகங்களில் படைத்தான் என்கிறார்.

    அவர்களும் பரிணாம் கொள்கையை தங்கள் புத்தகத்திற்கு எவ்வாறு பொருத்தலாம் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

    பெருவெடிப்பு குரானில் உள்ளது என்றால் பரிணாமம் உண்மைதானே.

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா,

    அறிவியலை மதவாதிகள் அத்தாட்சியாக காட்டலாம்.

    அறிவியலுக்கு மத்வாதிகளின் அத்தாட்சி தேவையில்லை.

    அறிவியலுக்கு மாற்று அறிவியலே!!!!!!!!!!!!!!

    நன்றி நரேன்

    ReplyDelete
  5. http://phylofacts.berkeley.edu/front/

    ReplyDelete
  6. http://arxiv.org/abs/math/0409132

    ReplyDelete
  7. பரிணாமத்தை, கற்பனை கதை, இவர்களால் எதாவது ஒன்றை சொல்லுவார்கள் என்று மதவாதிகள் கூவுகிறார்கள். புதியதாக ஒரு துறை உதயமாகி, அந்த துறையின் கூற்றுகள் கணிதபப்டுத்தப்படுவதும், இந்த அறிவியல் இங்குள்ள மதவாதிகளுக்கு புரியுமா, புரிந்தாலும் பொழைப்பு போய்விடும் என்று பயந்து சொல்லாமல் இருப்பார்களா.

    ReplyDelete
  8. நண்பர் நரேன்
    பரிணாமம் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்தப் படும் போது,அதற்கான எளிமையான் ஆய்வுகள் கல்விக் கூடங்களில் பாடமாக்கப் படும் போது என்ன சொல்வார்கள்?.
    1. சரியான விள்க்கத்தின் படி பரிணாமத்தின் முதல் செல் உயிர்களை படைத்தது யார்? பரிணாம் வளர்ர்சியே இறைவனின் திருவிளையாடல் என்பார்.
    2. முற்காலத்தில் பரிணாம்த்தை மதத்தின் பெயாரால் எதிர்த்தவர் அனைவரும் மத விரோத இயக்கத்தின் கைக்கூலிகள். மதத்திற்கு கெட்ட பயரை ஏற்படுத்த முயற்சித்தவர் என்பார். இப்போது கூட ஒரு கோஷ்டி உலகம் த்ட்டை என்று கூறுகிறது.

    http://www.youtube.com/watch?v=wppjYDj9JUc
    http://www.youtube.com/watch?v=7YocY4DpaxA&feature=related
    அது போல் இவர்களும் வரலாற்றில் ஒதுக்கப் படுவார்கள்.

    ReplyDelete
  9. தங்கள் பதிவுக்கு நன்றி.

    பரிணாமம் இயற்கை தேர்வு (natural selection) மற்றும் மரபணுக்களில் ஏற்படும் தவறுகளால் (random mutations) செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த‌ கொள்கையின்படி படிப்படியாக மாறிய முழுமையற்ற உயிரினங்களின் படிமங்கள் (transitional fossils) எங்கே என்றுகேட்டால், பழங்காலத்தில் வாழ்ந்த அழிந்து போன‌ முழுமையான உயிரினங்களின் படிமங்களை காட்டுவர்.

    உதாரணமாக மீன்களின் துடுப்புகளே (fins) பரிணாமமடைந்து நீர்நில வாழ் உயிரினங்களின் (amphibians) கால்களாக மாறியதாக கூறுவர். இது உண்மையென்றால் துடுப்புகள் படிப்படியாக மறைவதர்கான உயிரினங்களின் ஆதாரம் இருக்க வேண்டும். அதேபோல் கால்கள் படிப்படியாக உருவாகியதற்கான உயிரினங்களின் ஆதாரம் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல random mutations மூலமாக பரிணாமம் நிகழ்வதால் நூற்றுக்கணக்கான குறைபாடுள்ள துடுப்புடைய மீன்களும், குறைபாடுள்ள கால்களுடைய நீர்நில வாழ் உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். டார்வினும் வருங்காலத்தில் இந்த ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் டார்வினின் கனவு இன்னும் நிறைவேறவில்லை.

    பரிணாமத்தை நிரூபிக்கும் 'transitional fossil' கிடைத்ததாக கூறுவதும் பின்னர் அதை தவறு என்று ஒத்துக்கொள்வதும் வாடிக்கையான‌ ஒன்றுதான். இந்த Evolution: Where Are The Transitional Forms? என்ற வீடியோவிலும் பல‌குளறுபடிகள் உள்ளன.

    1. பரிணாமத்தின் கணிப்பின்படி Gerobatrachus என்ற நிலநீர் வாழ் உயிரினத்தின் படிமம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது தவளைகள் மற்றும் ஸாலமாண்டர்களின் (salamandar) முன்னோர் என்று நிரூபிக்கப்பட்டதாகவும் வீடியோ கூறுகிறது. ஆனால் இது பற்றி உள்ள சர்ச்சைகளை கூறவில்லை.

    இந்த துறை நிபுணரான ஜான் போல்ட் (curator for fossil amphibians and reptiles at The Field Museum in Chicago Illinois) இதை மறுக்கிறார். ஒரேயொரு படிமமே கிடைத்திருப்பதாலும், அதுவும் முழுமையற்ற நிலையில் இருப்பதால் தற்போது உறுதியாக எதுவும் கூற முடியாது என்கிறார்

    "Bolt, the Field Museum expert, cautioned that it is difficult to say for sure whether this creature was itself a common ancestor of the two modern groups, given that there is only one known specimen of Gerobatrachus, and an incomplete one at that."

    பரிணாமத்தின் கணிப்பிக்கு மாற்றமாக இந்த உயிரினத்தின் காலமும் அதன் உடலமைபும் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    "The most astonishing thing to me about this study is that this animal is far more froglike than I would ever have expected from its age."

    "Nothing this nonprimitive has ever been described from this age. It's just amazing."

    தவளைகள் தோன்றியதாக கூறப்பட்ட காலத்தையும் இந்த கண்டுபிடிப்பு தவறாக்கியுள்ளது

    This new data revises the best estimate of the date when frogs and salamanders separated from each other sometime between 240 and 275 million years ago, much more recently than previous molecular data had suggested.

    http://news.nationalgeographic.com/news/2008/05/080521-frog-fossil.html

    http://en.wikipedia.org/wiki/Gerobatrachus

    ReplyDelete
  10. 2. Odontochelys என்ற புராதண ஆமையின் படிமத்தை பற்றி வீடியோ கூறுகிறது. இதன் படிமத்தில் மேல்பகுதியில் ஓடு இல்லாததால் , இது பரிணாம்வியலாலர்க்ள் மிகவும் எதிர்பார்த்த ஒரு இடைநிலை படிமமாம் (transitional fosssil). ஆனால் இந்த வாதமும் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது. டொரொன்டோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளான ரேஸ்மற்றும் ஹெட் மற்றொரு விளக்கத்தை கொடுக்கின்றனர்

    Reisz and Head propose that Odontochelys does not represent a turtle with a partly evolved shell, but that it is a descendant of an older, land–living turtle,[4] and that the shell became reversed. Such shells can be seen on modern turtles, like the leatherback turtles

    இந்த ஆமை முழுமையான ஓடுடைய ஒருவகை நில ஆமையிலிருந்து தோன்றியது என்றும் பின்னர் ஓட்டை இழந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ' leatherback turtles 'என்னும் தற்கால ஆமைகள் இவ்வாறே காணப்படுகிறது.


    இந்த கண்டுபிடிப்பு ஆமைகளின் தோன்றிய காலத்தை இன்னும் பின்னோக்கி கொன்டு செல்லும் என்றும் கூறுகிறார்

    "it pushes the story of turtle origins even further back in time."

    பரிணாமத்தின் கணிப்பை இந்த படிமம் நிரூபிக்கிறதா ?

    http://en.wikipedia.org/wiki/Odontochelys
    http://news.sciencemag.org/sciencenow/2008/11/26-03.html

    ReplyDelete
  11. 3. வெளவால்கள் உருவானவிதத்தை பரிணாமம் கண்டுபிடித்துள்ளதாக‌ வீடியோ கூறிகிறது. ஆனால் உண்மை நிலைமையோ மிகவும் பரிதாபத்திற்குரியது

    பாலூட்டிகளிலே பறக்கக் கூடுய சக்தி பெற்றது வெளவால் இனம் மட்டுமே. வெளவால்க‌ளுக்கு echolocation என்னும் சிறப்பு திறனும் உள்ளது. அதாவது ultrasonic ஒலி அலைகளை உருவாக்கி சுற்றுப்புறத்தை அறியும் அற்புதமான திறன். இந்த‌ இரண்டு திறனும் பரிணாமத்தால் உருவானது என்று நிரூபிக்க படாதபாடுபடுகிறார்கள், ஆனால் முடியவில்லை. இதை பரிணாமத்தை ஆதரிக்கும் தளமான talk origins ஒப்புக்கொள்கிறது

    GAP: One of the least understood groups of modern mammals -- there are no known bat fossils from the entire Paleocene. The first known fossil bat, Icaronycteris, is from the (later) Eocene, and it was already a fully flying animal very similar to modern bats.

    http://www.talkorigins.org/faqs/faq-transitional/part2a.html#bat

    echolocation திறன் இல்லாத Onychonycteris என்ற ஒருவகை வெளவால் இனத்தின் படிமம் கிடைத்துள்ளதாகவும், இதுவே வெளவால்க‌ளின் முன்னோடியென்றும் வீடியோ கூறுகிறது. விஞ்ஞானிகள் இதையும் மறுக்கின்றனர். இந்த வெளவால் இனத்திற்கு laryngeal echolocation என்ற திறன் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

    However, a study in 2010 has also uncovered evidence for other bone structures indicative of laryngeal echolocation, opposing the conclusions of the previous study by showing that Onychonycteris finneyi did possess the ability to echolocate after all.

    http://en.wikipedia.org/wiki/Onychonycteris

    http://www.nature.com/nature/journal/v463/n7283/full/nature08737.html

    தகவுல் தொடர்புக்கும் கடல் போக்குவர‌த்திற்கும் உபயோகப்படுத்தப்படும் SONAR என்ற தொழில்நுட்பம் echolocation அடிப்படையிலேயே செயல்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு உருவான இந்த தொழில்நுட்பம், 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மரபணுக்களில் ஏற்படும் தவறுகளால் (random mutations) திடீரென்று வெளவால்களில் உருவானது என்று கூறினால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் .

    பரிணாமம் எவ்வளவு அறிவிப்பூர்வமானது ?

    ReplyDelete
  12. //பரிணாமம் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்தப் படும் போது,அதற்கான எளிமையான ஆய்வுகள் கல்விக் கூடங்களில் பாடமாக்கப் படும் போது என்ன சொல்வார்கள்?//

    நல்ல ஐடியா

    பரிணாமத்தை நிரூபிக்கும் ஆய்வுகளை சுலபமாக செயல்படுத்தலாம். மாணவர்கள் எல்கேஜியில் பள்ளியில் சேரும்போதே இந்த ஆய்வை ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களை physics, chemistry biology ஆய்வகத்தில் தங்கள் இஷ்டம் போல ஆய்வுகளை செய்ய அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்கள் தேவையில்லை. உதாரணமாக chemistry ஆய்வகத்தில் மாணவர்கள் கெமிக்கல்களை தங்கள் விருப்பம்படி கலக்கலாம். பிடிக்காதவற்றை உடைக்கலாம். physics ஆய்வகத்தில் உள்ள கருவிகளை தங்கள் விருப்பம்படி மாற்றியமைக்கலாம். இவ்வாறே ஒரு 12 ஆண்டுகள் தொடர்ந்தால் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைக்கும். chemistry ஆய்வகத்தில் protein moleculeஐ உருவாக்கி காட்டுவார்கள் ,physics ஆய்வகத்தில் SONAR தொழில்நுட்பத்தை உருவாக்கி காட்டுவார்கள், biology ஆய்வகத்தில் ஒரு புது உயிரினத்தையே உருவாக்கி காட்டுவார்கள்.

    பரிணாமம் நிரூபிக்கப்பட்டு , அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்து விடும். செயல்படுத்துவார்களா ?

    ReplyDelete
  13. /பரிணாமம் நிரூபிக்கப்பட்டு , அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்து விடும். செயல்படுத்துவார்களா ?/
    நண்பர் சாதிக்,
    நிச்சயம் நடக்கும்.வருகைக்கும் ,கருத்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  14. /பழங்காலத்தில் வாழ்ந்த அழிந்து போன‌ முழுமையான உயிரினங்களின் படிமங்களை காட்டுவர்./
    இதன் விளக்கம் மட்டும் தருகிறேன்.
    1. பழங்காலத்தில் வாழ்ந்த பல உயிரிங்க்கள் அழிந்து விட்டன.நானும் இதையே கொஞ்சம் அழுத்தமாக சொல்கிறேன்,பூமியி வாழ்ந்த 99.9% உயிரின‌ங்கள் அழிந்து விட்டன.

    2. கிடைத்த படிமங்கள் அனைத்துமே முழுமையான் வளர்ச்சி பெற்ற உயிரினங்கள்.
    ஒரு எண் தொடர் வரிசை எடுப்போம்.இது பரிணாம் மரத்தின் ஒரு உயிரில் இருந்து இன்னொரு உயிர் நோக்கிய பயணம் என்று எடுப்போம்.

    10 ,11,12,13,....இப்படி இருப்பதாக் கூறுகிறார்.இந்த எண்களால் குறிப்பிடப்படும் ஒவொரு உயிரினமும் தனித்துவம் வாய்ந்த்வை தொடர்பற்ற்வை.

    எப்ப்டி முழுமை என்று கூற முடியும்?

    நான் சொல்கிறேன் கிடைத்த படிமங்கள்.
    10.1,11.2.11.9,13.5

    ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த உயிரினம் முழுமை பெற்றதாக்வே இருக்கும்.
    ****************
    http://www.youtube.com/watch?v=o92x6AvxCFg&feature=related

    சலமான்டர் என்பது உயிருடன் வாழும் உயிரினம் என்று ஒரு பிரச்சாரமும் உண்டு.!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

    http://www.youtube.com/watch?v=SYsLScO2vJY

    இந்த ஃபாசில் வரலாற்றை பொய்யாக்கும் அள்விற்கு கல்வித்திற்மையும், ஆய்வறிவும் உயிரியலில் உங்களுக்கு இருந்தால் இப்படி மத பிரச்சாரம் செய்து நேர விரயம் செய்யாமல் இத்னை எதிர்த்து ஒரு முனைவர் பட்டமும் நோபல் பரிசும் பெற்று விடலமே!!!!!!!!!!!!!!!.ஃபாசில் வரலாறு குறித்து நண்பர் சாதிக்கின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிக்கைகளின் சுட்டி அளிக்குமாறு வேண்டுகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  15. //சலமான்டர் என்பது உயிருடன் வாழும் உயிரினம் என்று ஒரு பிரச்சாரமும் உண்டு.!!!!!!!!!!!!!!!!!!!!!!!.//

    என்ன சொல்ல வருகிறீர்கள், சலமான்டர் உயிருடன் வாழவில்லையா ?

    ReplyDelete
  16. ஃபாசில் வரலாறு குறித்து நண்பர் சாதிக்கின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிக்கைகளின் சுட்டி அளிக்குமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  17. Salamander is a common name of approximately 500 species of amphibians. They are typically characterized by their slender bodies, short noses, and long tails. All known fossils and extinct species fall under the order Caudata, while sometimes the extant species are grouped together as the Urodela.[1] Most salamanders have four toes on their front legs and five on their rear legs. Their moist skin usually makes them reliant on habitats in or near water, or under some protection (e.g., moist ground), often in a wetland. Some salamander species are fully aquatic throughout life, some take to the water intermittently, and some are entirely terrestrial as adults. Unique among vertebrates, they are capable of regenerating lost limbs, as well as other body parts.

    ReplyDelete
  18. ஸலமாண்டர் என்பது ஒரு தொகுதி உயிரினங்களின் பொதுப் பெயர்,அந்த படிமத்தில் குறிப்பிடபடும் ஸலமாண்டர்கள்(படிமங்கள் உருவ அமைப்பு மாறவில்லை) பற்றிய பிரச்சாரம் கிறித்த்வ விஞ்ஞானிகளால்(இஸ்லாமிய மத பிரச்சாரகர்கள் கருத்து திருடும் இடம்) பிரசாரம் ஏறெடுக்கப் படுகின்றது.
    Old salamander fossil of 150 millions of years shows that salamanders have not changed since then ... The salamander is protected in most countries in Europe ...
    1.உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய சுட்டி கேட்டேன் பதிலை காணோம்.
    2. உங்களின் கருத்தியல் திருட்டுகளை ஒத்துக் கொள்ள வேண்டும்.இது குறித்து அந்த ஆய்வகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று நினைக்கிறேன்

    ReplyDelete