படைப்புக் கொள்கையாளர் சிலரின் விளக்கங்களையும் பார்ப்பது ஒரு நடுநிலையான ஆய்வுக்கு அவசியமாகும்.டாக்டர் டெர்ரி மோர்ட்டென்ஸன் வரலாற்று புவியியலில் முனைவர் ஆய்வு பட்டம் பெற்றவர்.அனைத்து பதில்களும் ஆதியாகமத்தில்[Answers in genesis] என்னும் அமைப்பிற்காக 2001ல் இருந்து பணியாற்றி வருகிறார்.இவ்வமைப்பு அனைத்து படைப்பு இரகசியங்களும் பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் உள்ளது என்று பிரச்சாரம் செய்யும் இயக்கமாகும்.
இவ்ர் அளித்த ஒரு காணொளியை இப்பதிவில் அளிக்கிறோம்.
இவரின் உரை டார்வின் கூறியது சரியா ? என்ற கருத்தில் அமைந்துள்ளது.இவரின் கருத்து படிமங்களின் வரலாற்றின் படி அனைத்து உயிரினங்களும் ஒரு செல் உயிரினத்தில் இருந்து தோன்றவில்லை,சில குறிப்பிட்ட மனிதன் உயிரினங்களை இறைவன் படைத்தார்,அவ்வுயிரினங்களில் இருந்தே பிற கொஞ்சம் வித்தியாசமான் உயிரினங்கள் தோன்றின என்று கூறுகிறார்.அதாவது பல உயிரினத் தோற்ற மரங்கள் மட்டுமே உண்மை,அவைகள் இடையே இணைப்பு இல்லை என்கிறார்.முதல் செல் உயிர் எப்படி தோன்றியது என்ற கேள்வி விடையளிக்கப் படவில்லை என்கிறார்.
ஆதியாகமம்,6 அதிகாரம்
17. வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
18. ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
19. சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.
20. ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.
இதற்கு ஆதாரமாக பைபிள் ஆதியாகம்த்தின் இந்த வசனங்களை காட்டுகிறார். நோவாவின் ஜல பிரலயத்தின் போது அவருடன் கப்ப்லில் ஏற்றப் பட்டது ஒவ்வொரு குழு பிராணிகளின் முன்னோர் என்கிறார்.அந்த பிராணிகளில் இருந்து பிற தொடர்பு உயிர்கள் தோன்றி விட்டன என்கிறார்!!!!!!!!!
சொல்வதை முழுவதும்தான் கேளுங்களேன்.
பாருங்கள் காணொளியை
இவரின் கொள்கையாக்கத்தை இப்படி வரையறுக்க்லாம்
1.கிடைத்த படிமங்களின் சான்றுகளை பலவற்றை ஏற்று மத ரீதியான் விளக்கம் அளிப்பது.
2.ஒரு உயிரினத்தில் இருந்து அதன் கிளை(தொடர்பு) உயிரினங்கள் தோன்றமுடியும்.ஆனால் அவற்றின் மூதாதையர்களுக்கு தொடர்பில்லை, படைக்கப் பட்டன.
3.பரிணாம் மரத்தின் மேற்கிளை கொஞ்சம் முன்னோர்கள் மட்டும் ஏற்கப் படுகின்றது.பிற கிளைகளுக்கு பதிலாக மத புத்தக் வசன்ம்.!!!!!!!!!!!!
எவரும் இந்த ஹோமோ எரெக்டஸ்,நியாண்டர்தால் ஹோமோ ஃப்ளோரன்ஸிஸ் பற்றியெல்லாம் கேட்க கூடாது.முதல் மனிதர்களுக்கே பேச தெரியும்,கப்பல் கட்டும் தோழில் தெரியும்,உயிரியல் பிரிவுகள் தெரியுமா? என்றெல்லாம் கேட்க கூடாது.
எப்படியாவது இந்த கடவுளை எப்படியாவ்து [வேறு வழியில்லாமல்] அறிவியலுடன் இணைக்கத் துடிக்கும் அவர்களின் ஆவல் நன்றாக் புரிகிறது!!!!!!!!!!!!!!
//எப்படியாவது இந்த கடவுளை எப்படியாவ்து [வேறு வழியில்லாமல்] அறிவியலுடன் இணைக்கத் துடிக்கும் அவர்களின் ஆவல் நன்றாக் புரிகிறது!!!!!!!!!!!!!!//
ReplyDeleteஆமென்.
வாங்க சார்,
ReplyDeleteஒவ்வொரு மதவாத , படைபு கொள்கைவாதியும் ஒருவிதம்.அனைவருக்கும் எதிரி பரிணாமக் கொள்கை மட்டுமே .எப்படியாவது இறைவனை இதற்குள் நுழைத்து விட்டால் பிறகு பிறகு அனைத்தையும் நியாயப் படுத்தி விடலம் அல்லவா!!!!!!!!!.
நன்றி