மும்பை, ஜூலை 13/2011 மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 21 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 141 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஜாவேரி பஜார் பகுதி, தெற்கு மும்பை ஓபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்துள்ளன. அனைத்து குண்டுவெடிப்புகளுமே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடந்துள்ளது.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.இதனை செய்தவர்கள் மனித விரோதிகள்.அவர்களை கண்டறியும் முயற்சிகள் பாரபட்சமின்றி நடக்க வேண்டுகிறோம்.
அதே சமயத்தில் இம்மாதிரி பல் சம்பவங்கள் இனி நடப்பதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று ஆலொசிப்பது மிக அவசியம்.
1.மக்கள் அதிகமாக் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பும்,கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தலாம்.
2. மக்களுக்கு அடையாள அட்டை வழங்கலாம்.முதலில் பெரு நகரங்களுக்காவது அமல் படுத்தினால் நல்லது.
இறந்த மக்களுக்கு நமது அஞ்சலி.
http://parvaiyil.blogspot.com/2011/07/blog-post_14.html
ReplyDeleteநண்பர் இராஜ நடராஜனின் பதிவு மிக தேவையான் விஷயங்களை அலசியது.அதற்கு நன் இட்ட பின்னூட்டம்,அவரின் மறுமொழி.நன்றி நண்பர் நாஜநடராஜன்.
*************
சார்வாகன் said...
நண்பரே,
தமிழகத்தின் இப்பொதைய நிலையை படம் பிடிக்கிறது.என் மனதில் உள்ளதை அப்படியே எழுதியது போல் இருக்கிறது.கோவை சம்பவத்திற்கும் ,மும்பை சம்பவத்திற்கும் காரணம் ஒன்றுதான்.செய்தவர்களுக்கு ஒரே சிந்த்னை நம்மை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதுதான்.முதலில் எல்லாம் இருவர் சண்டையிட்டால் விலக்கி விடும் வழக்கம் சாதாரணமாக் இருந்தது.இப்போது எல்லோரும் சொல்லும் காரணம் இதுதான்!!!!!!!!!
/யோவ்!அந்தாளு என்ன செஞ்சான்னு தெரியுமான்னு கூட சிலர் தலையில் கல்லைத் தூக்கிப்போடுபவனுக்கு சார்பாக எதிர்க் கேள்விகள் கேட்கலாம்!/
ஒரு பொது இடத்தில் நடக்க கூடாத சம்பவங்களை தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பது மறக்கப் பட்டு விட்டது.தான்,தன்னை சார்ந்தவ்ர்கள் பாதிக்கப் பட்டால் மட்டுமே எதிர்ப்பேன் என்பது அனைவரையுமே பாதிக்கும்.
காவல்துறையும் எந்த ஒரு விஷயத்திலும் விரைவாக,வெளிப்படையாக் நடவடிக்கை எடுத்தால் மக்களும் ஒத்துழைக்க முன் வருவார்கள்.காவல் நிலையம் சென்று புகார் கொடுப்பவனையே படுத்தும் பாட்டில் யார் சாட்சி சொல்ல வருவார்கள்?.
இதே போக்கு பதிவுலக்த்திலும் பார்க்கலாம்.கருத்து சொ(இ)ல்லாமல் பலர் விலகி செல்வார்கள். சிலர் தான் பாதிக்கப் படவில்லை என்பதால் இன்னொருவர் செய்த தவறையும் நியாயப் படுத்துவர். மகளின் கணவனக் கூலிப்படை வைத்து கொலை செய்தவ் மாமனார்,பழம் எடுக்க வந்த சிறுவனை சுட்ட இராணுவ அதிகாரி போன்றவர்களையும் நியாயப் படுத்தி சில பதிவுகள் வந்தது.
________________
மும்பை சம்பவங்கள் குறித்து நீங்கள் குறிப்பிட்ட பல வாய்ப்புகளும் உண்மையே. ஊடகங்கள் பரப்ரப்பாக சில நாட்களுக்கு மர்ம செய்தி வெளியிடுவார்கள். காவல்துறை வழக்கம் போல் கையில் சிக்கிய சிலரை கொன்று வழக்கை முடிப்பார்கள். உண்மை எதுவும் வெளி வராது.இதுவரை எந்த வழக்கில் உண்மை வெளிவந்துள்ளது?.
தேவையான பதிவு.நன்றி
July 14, 2011 4:42 PM
*******************
ராஜ நடராஜன் said...
சார்வகன்!உங்கள் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
பொதுநலன்களை விட சுயநலன்கள் பெருகிப்போய் விட்டது கண்கூடாகவே தெரிகிறது.இன்னொரு தளத்தில் கோவைக்காரர்கள் மிகவும் சுயநலம் பிடித்தவர்கள் என்று ஒருவர் பின்னூட்டம் போட்டிருந்தார்.நாம் சிறுவர்களாக இருந்த காலங்கள் இப்படியில்லையென்பதை நிச்சயம் கூறலாம்.
பெயரளவில் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறி விட்டு காவல்துறைக்கும் மக்கள் உறவுக்கும் நீண்ட இடைவெளி இருப்பது நிதர்சனம்.
இணையம் அனைத்தையும் வெளிச்சம் போட்டுக்காண்பிக்கும் போது காக்கி சட்டையின் கௌரவம் கூட இழுக்காகிறது.
பதிவுலகில் மாற்றுக்கருத்துக்கள் என்ற பெயரில் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் நுண்பொருள் மறந்து விடுவதே தவறுகளுக்கும் வக்காலத்து வாங்கும் மனப்பான்மை.
இந்த பதிவால் விரக்தி மட்டுமே மிஞ்சுகிறது.
July 14, 2011 5:26 PM
******************
இம்மாதிரி செயல்களை தவிர்க்க நாம் ஒன்றுபட மாட்டோமா?