Monday, July 11, 2011

தென் சூடானுக்கு வாழ்த்துகள்!!!!!!!!

தென் சூடான் உலகின் 193 வது நாடு ஆகியுள்ளது.சுதந்திரம் பெற்றது பெரியதல்ல ஒரு நாட்டை மதச் சார்பற்றதாக,ஜ்னநாயக் பாதையில் வழி நடத்தும் பொறுப்பு புதிய ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.புதிய அரசியலமைப்பு சட்டங்கள் மனித உரிமைகளை பேணுவதாக் இருக்க வேண்டும்.
இதன் தலை நகரம் ஜுபா,
பரப்பளவு: 619,745 km2 (45th)
மக்கள் தொகை 8.3 மில்லியன்(83 இலட்சம்)

போரினால் பாதிக்கப்பட்ட தென் சூடானின் பல பகுதிகளை சீரமைப்பது,கல்வி ,சுகாதாரம் கட்டமைப்பு என்று பல வேலைகள் இருக்கின்றன.எண்ணெய் வளம் இருப்பதால் ஊழல் இல்லாத பட்சத்தில் இவையெல்லாம் எளிதாக் முடியும்.. நமது வாழ்த்துகளை தெரிவிப்போம்.இத்னால் தமிழ் ஈழம் அமைய வாய்ய்ப்பு இருப்பது போல் தோன்றினாலும் அதற்கு பல படிகள் கடக்க வேண்டியுள்ளது.முதலில் தமிழர்கள் மத,சாதி அடையாளம் தவிர்த்து ஒன்று சேர்ந்தால் மட்டுமே நடக்கும்.தென் சூடான் தமிழ் ஈழத்தை அங்கீகரித்து இருப்பது தென் சூடான் மீது ஒரு பாசத்தை ஏற்படுத்துகிறது. நம் தென் சூடான் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்.நடப்பது இனி நல்லதாக்வே இருக்கட்டும்.
தென் சூடானின் சூழ்நிலை பற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியின் காணொளி

.

1 comment:

  1. //இத்னால் தமிழ் ஈழம் அமைய வாய்ய்ப்பு இருப்பது போல் தோன்றினாலும் அதற்கு பல படிகள் கடக்க வேண்டியுள்ளது.முதலில் தமிழர்கள் மத,சாதி அடையாளம் தவிர்த்து ஒன்று சேர்ந்தால் மட்டுமே நடக்கும்.//
    தென் சூடானிலிருந்து, ஈழத்திற்கு பொருந்தும் படிப்பினை நிறையவே இருக்கின்றன. தனிப் பதிவிடுவேன்.
    சூடான் நிதர்சனத்தை பற்றி சொன்னால் இஸ்லாம் வெறி எதிர்ப்பாளன் என்ற முத்திரை வந்து விழும். அமைதியாக இருப்பதே மேல். வடக்கு சூடான் மக்கள் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றவில்லை!!!!!!

    ReplyDelete