Saturday, July 16, 2011

நித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்(பறக்கும் )மனிதன்
நித்யானந்தாவின் நடவடிக்கைகளையும் அவ்வப்போது கவனித்து வருகிறோம் அல்லவா!!!!!!.இப்போது மனிதர்கள் புவி ஈர்ப்பு விசையை மீறி பறக்க வைக்கிறேன் என்று புரளி விட்டு கையும் களவுமாக் மாட்டினார்.அந்த கூட்டத்தில் நடிகை இரஞ்சிதாவும் இருப்பதை பார்க்கலாம்.காணொளி காணுங்கள்.இதற்கும் பாருங்கள் வெளிநாடு உள்நாடு என்று அனைத்து மனிதர்களின் கூட்டம்.
திருந்தவே மாட்டார்களா!!!!!!!!!!!!!!
Some MoreTv9 - Nityananda still a 6 year old child?


Telugu

எல்லா மொழிக்காரனும் அடிக்கிற கிண்டல் நமக்கு வெட்கமாக் இருக்கிறது!!!!!!!!!!..

தமிழர்கள் மானத்தை காற்றில் பறக்க விடும் இந்த ஆளை என்ன செய்யலலாம்?!!!!!!!!!!!!!


nithiyanandhadance1607-02 by tamil2011

19 comments:

 1. தொழில் நுட்ப உதவியால் இக்கால நித்யான்ந்தாக்கள் கையும் களவுமாக எளிதில் பிடிபடுகின்றன்ர்.பல் நித்யானந்தன்கள் முற்காலத்தில் எதயோ சொல்லி வைத்து சொகுசாக் வாழ்ந்து சென்று விட்டனர்.அனைத்து நித்யானந்தன்களும் ஒன்றே!!!!!!!!!!!!!.

  ReplyDelete
 2. மனைவி பற்றி அவதூறு நித்யானந்தா மீது சட்டப்படி நடவடிக்கை இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத்

  ***************
  http://www.dinakaran.com/News_Detail_2011.asp?Nid=1399

  ReplyDelete
 3. அன்புக்குரிய சகோதரர் சார்வாகன் அவர்களே,

  மக்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு தேடி ஆன்மீகத்தை நாடுகின்றனர். அதை பயன் படுத்தி பலர் கல்லா கட்டுகின்றனர்.

  நவீன இந்திய வரலாற்றில் மிக பெரிய ஆன்மீக புரட்சியை ஏற்படுத்திய மூவர் கௌதம புத்தர், ஆதி சங்கரர் , சுவாமி விவேகானந்தர் ஆகியோர், அவர்கள் எந்த விதமான அதிசயத்தையும் நம்பி இருக்கவில்லை.

  பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தைமக்களிடம் பிரச்சாரம் செய்தனர். அந்த ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு செல்வதே இந்த பில்லியநேர் அதிசயக்காரர்களை மக்கள் அறியுமாறு செய்ய சிறந்த வழி.

  http://thiruchchikkaaran.wordpress.com/2011/04/10/spiritualism-is-not-superstition/

  மூட நம்பிக்கை உடைய முட்டாள்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்.


  இந்தக் கட்டுரையை படிக்குமாறு கோருகிறேன்.

  ReplyDelete
 4. அலைப்பேசி மற்றும் இணையம் தொடர்பில்லாத, சுவனத்திற்கு ஒரு வாரம் சென்று, 24 மணி நேரம் அந்த தொடர்புகள் உள்ள நரகத்திற்கு வந்து, நல்ல விஷயங்களை பார்க்கலாம் என்று இணையத்தை திறந்தால் இந்த கண்றாவி.

  இதற்கு மூலக்காரணம், மனிதனுக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நோய்கள் பற்றி மருத்துவம் வளர்ந்து அதை கையாள்வதற்கு மனநல மருத்துவர்கள் இருக்கின்றார்கள்.

  மேற்கத்திய நாடுகளில், மனநல மருத்தவம் வளர்ந்துள்ள நிலையில், அங்கு மக்கள் மனநல சிகிச்சை என்பது சாதாரண விஷயமாக இருக்கின்றது. மனநல மருத்துவரை பார்பது ஒரு அசிங்கமான காரியம் என்பதாக பார்பதில்லை.

  ஆனால் நம் நாட்டில் இந்த மருத்தவம் அதிகமாக வளராததும், மக்கள் மனநல மருத்தவரை பார்பதை தவிர்ப்பதுதான் நடைமுறை. அதனால் மக்கள் தங்கள் மன சம்பந்தமான பிரச்சனைகளை சாமியார்களிடம், மதப்போதகர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை. அவர்களும் அவ்வாறு தாங்கள் தான் கடவுள் என்று காட்ட வேண்டிய கட்டாயம் மற்றும் கொண்டாட்டம்.

  நண்பர் திருச்சிக்காரம் பதிவு நல்ல விளக்கம். ஆனால் நம்பிக்கைகும் மூடநம்பிக்கைகும் வித்தியாசம் அதிகமில்லை.

  ReplyDelete
 5. //நம்பிக்கைகும் மூடநம்பிக்கைகும் வித்தியாசம் அதிகமில்லை.// yes.

  We propose spirituality based on reasoning, logical analysis.

  ReplyDelete
 6. சகோ திருச்சிக்காரன் வாங்க,
  நாம் எந்த மதத்திற்கு விரோதமான்வர்கள் அல்ல.மதம் என்பது மக்கள் பண்பு மேம்படுத்துதலில் மட்டுமே பங்காற்ற வேண்டும் மற்றபடி நிறுவன அமைப்பாக அரசியல் பொருளாதாரம் சார்ந்து இயங்கக் கூடாது .
  இந்து மதத்தில் இம்மாதிரி விஷயங்களை கொண்டு வரும் இம்மாதிரி ஆட்களை எதிர்ப்பதே நல்லது.
  மதத்தில் இருப்பதில் கால்த்திற்கு ஏற்ற நல்ல விஷயங்களை மட்டும் ஆய்வு செய்து பின்பற்ற்வும்,இம்மாதிரி ஆட்களை நம்பி மோசம் போகாமல் இருக்கவே இப்பதிவை இட்டேன். இம்மாதிரி ஆட்கள் பதிவில் நீங்கள் மதிக்கும் பெரியவர்களின் பெரையே சொல்லாதீர்கள்.
  மதத்தில் அற்புதம்,அறிவியல்,சர்வ ரோஹ நிவாரனம் என்பதெல்லாமே ஏமாற்று வேலைகள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகம் கிடையாது.
  வருகைக்கும் ,கருத்து பதிவிற்கும் நன்றி.

  ReplyDelete
 7. சகோ நரேன்,
  /ஆனால் நம்பிக்கைகும் மூடநம்பிக்கைகும் வித்தியாசம் அதிகமில்லை./
  **********
  நம்பிக்கை: இது ஒரு தேடல் மட்டுமே.மதத்தில்,கொள்கையில் உள்ள ஒத்து வரும் விஷயங்களை மட்டுமே கடைப்பிடிப்பேன்.தவறுகளை கண்டிப்பேன்.
  _____________
  மூட நம்பிக்கை:மத‌ம்,கொள்கையில் அனைதுமே சரி.ஆதாரங்கள் அனைத்தும் உண்டு.சந்தேகம் இருந்தால் ஒண்டிக்கு ஒண்டி(விவாதம்!!!!!!!!) வர்ரியா?.அப்படியே நான் மட்டுமல்ல உலகில் உள்ள ஒவ்வொருவரும் பின்பற்றியே ஆக வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்வேன்.
  ********************
  //மூட நம்பிக்கை உடைய முட்டாள்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்.//
  நன்றி சகோ திருச்சிக் காரன். உண்மையான இறை தேடல் உள்ளவனுக்கும் இறை மறுபாளனுக்கும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது.
  நன்றி!!!!!!!!!!!!.

  ReplyDelete
 8. திருந்தவே மாட்டார்களா!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 9. அன்புக்குரிய நண்பர்களே,

  முதலில் நான் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

  //மூட நம்பிக்கை உடைய முட்டாள்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்//

  என்ற கட்டுரையானது சுவாமி விவேகானந்தர் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதியே.

  ReplyDelete
 10. முந்தைய ஆன்மீக வாதிகளைப் பற்றி நினைவுறுத்துவது மிக அவசியம் என நினைக்கிறேன்.

  கோடிப் பொன் மதிப்புள்ள சொத்துக்களை , வியாபாரத்தை விட்டு கட்டிய துண்டுடன் தெருவில் இறங்கினார் படினத்தார். பணத்தை என்ன செய்வது என்றார் அவரது கணக்காளர் சேந்தனார், , ஏழைகளுக்கு வழங்குங்கள் என்றார். அப்படியும் மீச்சம் இருக்குமே என்றார் சேந்தனார். தெருவிலே கொட்டுங்கள் என்றார்.10 கோடிப் பொன்னை தெருவிலே கொட்டினார் சேந்தனார்.

  இன்றைய ஆன்மீக வாதி மிநிமம் 5000 கோடி,10,000 கோடி சொத்து வைத்து இருக்கிறான்.

  இதைக் கம்பேர் செய்து மக்களுக்கு காட்ட வேண்டும்.

  ReplyDelete
 11. சகோ திருச்சிக்காரன்
  /என்ற கட்டுரையானது சுவாமி விவேகானந்தர் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதியே./
  நன்றி .இது எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும்.ஒரு முதிர்ச்சி அடைந்த ஞானியின் தேடலின் கருத்து இதுவாகவே இருக்க முடியும்.விவேகானந்தருக்கு salute!!!!
  /இதைக் கம்பேர் செய்து மக்களுக்கு காட்ட வேண்டும்./
  சொல்லுங்க தோழர் . நாங்களும் முடிந்த உதவி செய்கிறோம்.இம்மாதிரி விஷயங்களை பார்க்கும்போது வரும் கோபம்தான் அடக்க முடிவதில்லை.
  நன்றி

  ReplyDelete
 12. சகோ இராஜராஜேஸ்வரி

  /திருந்தவே மாட்டார்களா!!!!!!!!!!!!!!/
  திருந்த வேண்டும்.
  வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

  ReplyDelete
 13. அடடா..... ஆன்மீகத்தைத்தேடி நமது சொந்தங்கள் எங்கெல்லாம் அலைகின்றார். இவர்கள் குதிப்பதும் பிறகு அவர்களாலேயே சிரிப்பை அடக்க முடியாததும் வெகு ஜோர். ஒரு இடத்தில் இந்த போலி நித்தியானந்தாவே த்னனை மீறி சிரிப்பதை பார்க்கிறோம்.

  பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் ஒருக்கால் நித்தியானந்தா மந்திரியாக்கப்படலாம். எனவே கொஞ்சம் ஜாக்கிரதையாக எழுத வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 14. /பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் ஒருக்கால் நித்தியானந்தா மந்திரியாக்கப்படலாம். எனவே கொஞ்சம் ஜாக்கிரதையாக எழுத வேண்டியிருக்கிறது./
  வாங்க சகோ நலமா?
  கலி முத்திப் போச்சு.நடந்தாலும் நடக்கும்.
  நன்றி

  ReplyDelete
 15. துறவி என்பவர் எல்லோரையும் அன்புடன் நோக்குவார். ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர் மீது துறவி அன்புடன் இருப்பார். ஆனால் ஒரு துறவி பெண்களைக்
  காமக் கண்ணோட்டத்துடன் நோக்கவோ, பெண்களின் அங்கங்களை ரசிக்கவோ மாட்டார். புலனுகர்ச்சி இன்பங்களை
  துறவி நாடவே மாட்டார்.

  பட்டினத்தாரின் பாடல் வரிகளை படியுங்கள்.
  மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
  விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
  முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
  உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும் வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

  துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்

  தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
  இசையுங் கதலித் தண்டென வியம்பும்
  நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
  துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15

  மலமும் சலமும் வழும்புந் திரையும்
  அலையும் வயிற்றை யாலிலை யென்றும்

  சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
  திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
  உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

  நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
  முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
  குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;

  ReplyDelete
 16. வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
  பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
  வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
  துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30

  அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
  முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
  நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
  கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்

  நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
  ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25
  அங்கையைப் பார்த்துக் காந்தளென்றுரைத்தும்


  தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35
  கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்


  உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
  வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்


  கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
  வெய்ய வதரும் பேனும் விளையத் 40
  தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
  சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும் (
  சொற்பல பேசித் துதித்து நீங்கள்
  நச்சிச் செல்லு நரக வாயில்


  தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45
  காமப் பாழி, கருவிளை கழனி
  தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
  எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
  மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,


  நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50
  இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;

  திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
  தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
  புண்ணிது வென்று புடவையை மூடி
  உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55
  மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;

  நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
  தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
  செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
  பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60


  மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
  சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
  இத்தை நீங்க ளினிதென வேண்டா
  பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
  மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

  முத்தி நாதனை மூவா முதல்வனை
  அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
  கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
  ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
  போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70

  இந்த‌ பாட‌லை இய‌ற்றிவ‌ர் ப‌ட்டின‌த்தார்!  ந‌ண்ப‌ர்க‌ளே, இந்த‌ப் பாட‌ல் ஒரு துற‌வியால் எழுத‌ப் ப‌ட்டது, துற‌விக‌ள் மாத‌ரைப் ப‌ற்றி எப்ப‌டி நினைப்பார்க‌ள் என்ப‌தை இதை உண‌ர்த்துகிற‌து என்ப‌தைக் காட்ட‌வே நாம் இதை காட்டினோம். இந்த‌ப் பாட‌ல் இல்ல‌ற‌த்தாற்க்காக‌ எழுத‌ப் ப‌ட்ட‌த‌ல்ல‌.

  இந்த‌ப் பாட‌ல் பெண்களை குறை கூறி எழுதப் ப‌ட்ட‌ பாட‌ல் அல்ல‌ என்ப‌தையும், பெண்கள் என்றாலே வெறும் போக‌ப் பொருளாக‌ என்னும் ஆண்க‌ளின் காம‌ எண்ண‌த்தை க‌ண்டித்து எழுத‌ப் ப‌ட்ட‌ பாட‌ல் என்ப‌தையும் சுட்டிக் காட்ட‌ விரும்புகிறோம்.

  ReplyDelete
 17. பட்டினத்தார் பாடலைப் படித்தீர்களா நண்பர்களா, இதை ஒவ்வொரு தமிழர் இடத்தும் படித்துக் காட்டுங்கள்.

  வெளி வேஷம் போட்டு, தியானம் சமாதி என்று ஜோடனையாகப் பேசி மக்களை ஏமாற்றி கோடிகளைக் குவிப்போர் ஆன்மீகவாதிகளா என்று அவர்களைக் கேளுங்கள் .

  ReplyDelete
 18. நன்றி சகோ திருச்சிக்காரன்,
  பட்டினத்தார் பாடல்கள்,சித்தர் பாடல்கள் இணையத் தளத்தில் கிடைக்கிறதா?
  நன்றி

  ReplyDelete
 19. //இவர்கள் குதிப்பதும் பிறகு அவர்களாலேயே சிரிப்பை அடக்க முடியாததும் வெகு ஜோர். ஒரு இடத்தில் இந்த போலி நித்தியானந்தாவே த்னனை மீறி சிரிப்பதை பார்க்கிறோம்.//

  ஒரு நம்பிக்கைக்காரர்கள் இப்படி ‘சிரிப்பதை’ப் பார்க்கும் போது மற்ற நம்பிக்கையாளர்களும், தங்களைப் பார்த்தும் மற்ற நம்பிக்கையாளர்கள் இப்படி சிரிக்கலாம் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்?

  ReplyDelete