Wednesday, July 20, 2011

இந்து மதவாதிகளின் பரிணாம கொள்கை விமர்சனம்


பொதுவாக இந்து மதவாதிகள் பரிணாம்த்தை எதிர்ப்பது இல்லை என்று பலரும் நம்புகின்றோம்.விஷ்னுவின் அவதாரங்கள் பரிணாம் கொள்கையை குறியீடாக கூறுகின்றது என்று கூறுவோறும் உண்டு.ஆனல் மதங்களில் தெளிவாக உலகம் மிக பழமையானது என்று எப்போதும் கூறி வந்தது இந்து புராணங்களே.ஆபிரஹாமிய மதங்கள் அனைத்துமே உலகத்தின் பழமை நிருபிக்கப் பட்ட பிறகுதான் அது தங்கள் மத புத்தக்த்தில் சொல்லியதாக் கூறுவது என்று வழக்கமான சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.சென்ற நூற்றாண்டு வரை உலகம் படைக்கப் பட்டது 6000+ ஆண்டுகள் என்றே மக்களை முட்டாளாக்கி வந்தனர்.

 இப்பதிவில் இந்து மத கொள்கையாளர்களுள் முக்கியமான்வர்களான உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின்(ISKON) பரிணாம விமர்சனம் பற்றி பார்ப்போம். அதவது இந்து மத புரானங்களின் படி உலகம் பழமையானது.உயிர்கள் தொன்றுவதும் மறைவதும் சுழற்ச்சி முறையின் பால் ஆனது.அதாவது பிரம்மா ஒவ்வொரு முறையும் படைக்கிறார். உயிர்கள் அனைத்தும் அழிவது படைப்பது சுழலாக தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது.

சில காலக் கணக்கீடுகள் கற்றுக் கொள்வோம்.
***********************
மனிதர்களின் ஒரு வருடம்(365 மனித நாட்கள்)= தேவர்களின் ஒரு நாள்.

மனித வருடங்கள் 360=தேவர்களின் ஒரு வருடம்

கிருதயுகம் – 4980 (தேவ வருடம்) =17. 28 இலட்சம் மனித வருடங்கள்

திரேதாயுகம் – 3960  (தேவ வருடம்) =12.96 இலட்சம் மனித வருடங்கள்

துவாபரயுகம் – 2940  (தேவ வருடம்) =8.64 இலட்சம் மனித வருடங்கள்

கலியுகம் – 920 (தேவ வருடம்) =4.32 இலட்சம் மனித வருடங்கள்

ஒரு சதுர்யுகம்.=தேவ வருடம் 12,000=12,000 *360=43.2இலட்சம் மனித வருடங்கள்

இரண்டாயிரஞ் சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும்

பிரம்மாவின் ஒரு நாளிலேயே பல்முறை படைப்பு அழிப்பு நடைபெறுகிறது.செய்யும் செயல்களுக்கேற்ப மறு பிறவி என்று அப்ப்டியே போய்க் கொண்டே இருக்கிறது.

[நன்றி முத்துக் கமலம்.காம்]
***********

ஆக இந்து மதத்தின் படி படைப்பும் ,அழிவும் சுழற்ச்சி முறையில் தொடர்ந்து நடை பெறுகின்றன என்றால்

1. பரிணாம்த்தின் இப்போதைய கால கணக்கீடு தவறு என்று காண்பிக்கப் படவேண்டும்.

2.முற்கால்த்திலும் மனிதர்கள் நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்று காட்டப் படவேண்டும்.

பரிணாம்த்தின் படி இப்போதைய நாகரிக மனிதர்கள் ஹோமோ சேஃபியன்கள் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கூறப் படுகிறது.அபோது இருந்து சிறிது சிறிதாக் நாகரிக மடைந்து இப்போதைய நிலைக்கு வந்தான் என்றே கருதப் படுகிறது. 


இந்த காணொளியில் மனித இனம் பல் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல் பகுதிகளில் வாழ்ந்தாகவும்,அவர்களின் வாழ்வுமுறை சிறப்பாக முன்னேறியதாக் இருப்பதாக்வும் சில ஆதாரங்களை காட்டுகின்றனர்.இவை அனைத்தும் இப்போதைய அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை அல்ல அதையும் அவர்களே காணொளியில் கூறுகிறார்கள்.மாற்றுக் கருத்தையும் காது கொடுத்துக் கேட்பதே அறிவு.காணொளி பாருங்கள்.

The Origins of Man: Problems with the Evidence
part 1
http://krishnatube.com/video/296/The-Origins-of-Man--Problems-with-the-Evidence
Part 2
http://krishnatube.com/video/294/The-Origins-of-Man--Problems-with-the-Evidence-Part-2

Hidden History of the Human Race Authors Tour 1994
http://krishnatube.com/video/295/Hidden-History-of-the-Human-Race-Authors-Tour-1994


book
http://www.humanityunitedforum.com/Michael%20A.%20Cremo%20Richard%20l.%20Thompson%20-%20The%20Hidden%20History%20of%20the%20Human%20Race%201998.pdf


Forbidden Archeology


5 comments:

  1. Hidden History, Hidden Agenda

    A Review of The Hidden History of the Human Race, by Michael A. Cremo and Richard L. Thompson. Badger, CA: Govardhan Hill Publishing. 1994.

    By Bradley T. Lepper
    ***************
    http://www.talkorigins.org/faqs/mom/lepper.html

    ReplyDelete
  2. http://www.talkorigins.org/faqs/mom.html

    NBC's "The Mysterious Origins of Man"

    Copyright © 1996-1998 by Jim Foley
    [Last Update: June 12, 1996]

    ReplyDelete
  3. இவர்கள் அவர்களை விட polished ஆக இருக்கிறார்கள். இந்து மததில் படைப்புக் கொள்கைக்கு இவ்வளவு பிரச்சாரம் நடக்கின்றது என்று இப்பொழுதுதான் தெரியவருகிறது.

    ஏன் எல்லோரும் வெள்ளைகாரர்களாகவே இருக்கிறார்கள்.

    இன்னொரு விஷயம், iskon பிரச்சாரம் செய்யும் இந்த படைபு கொள்கையை நம்பாமலும் ஒருத்தர் கிருஷ்ண பக்தராகவும் இருக்கலாம். பரிணாமம் அறிவியல் ரீதியாக உண்மை என்பதால், அவர்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்டது என்று நினைப்பதில்லை. மாற்று கருத்து உள்ளவர்களை திட்டுவதில்லை. மிக சிலரே தவிர ஆன்மிகம் வேறு அறிவியல் வேறு என்ற நிலைக்கு வந்து விட்டனர். அறிவியலையும் ஆன்மீகத்தையும் synchronize செய்ய முயற்சிக்கின்றனர்.

    http://www.thehindu.com/sci-tech/article2277067.ece
    இதைப் பற்றி லேட்டஸ்ட்

    ReplyDelete
  4. iskon என்றவுடன், நினைவுக்கு வருவது, ஏன் எல்லா மத குருமார்கள், முல்லாக்கள் உட்பட pedophile ஆக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. /ஏன் எல்லோரும் வெள்ளைகாரர்களாகவே இருக்கிறார்கள்./

    வாங்க நரேன்,
    அதுதானே ,ஏன் அப்படி?.இந்த இஸ்லாமிய மத அறிவியலாளர்கள்(?) கூட பலரும் வெள்ளையரே!!!!!!!!.வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையா?.இன்னும் அடிமைப் புத்தி ஒட்டிக் கொண்டிருப்பதை காட்டுகிறதா?.

    /அறிவியலையும் ஆன்மீகத்தையும் synchronize செய்ய முயற்சிக்கின்றனர்./

    வேறு வழியில்லை.இன்னும் பலருக்கும் இது புரிவது இல்லை.

    /இதைப் பற்றி லேட்டஸ்ட்/
    அருமையான் விஷயம் நன்றி.
    /iskon என்றவுடன், நினைவுக்கு வருவது, ஏன் எல்லா மத குருமார்கள், முல்லாக்கள் உட்பட pedophile ஆக இருக்கிறார்கள்./

    உண்மையிலேயே இது ஒரு ஆய்வுக்கு உட்படுத்த்ப் பட வேண்டிய விஷயம் .ஏன் மத குருக்கள் காமத்தில் அதிக ஈடுபாடும்,த்வறான நடைமுறைகளை செயல்களில்
    காட்டுகிறார்கள் ?
    இன்னும் மதவாதிகளுடன் ஆன விவாதங்கள் கடைசியில் காமத்தை நோக்கியே செல்லும் என்பது என் அனுபவம்.மதவாதிகளின் காம‌ம் பற்றிய கேள்விகள் மற்றும் விளக்கங்கள் என்று தொடர் பதிவே எழுதலாம்.

    உடல் உழைப்பு,உணவு பழ்க்க வழக்கங்களின் மூலம் ஒரு அளவுக்கு காம உணர்வை கட்டுப் படுத்தலாம் என்பது என் கணிப்பு.உணவில் கட்டுப்பாடு இல்லாத்வர்க்ளுக்கு காம உணர்வு கட்டுப் படுத்தவே முடியாது.

    பொதுவாக இந்த மத குருக்களின் அருகில் ஆண்,பெண்,குழந்தைகள் செல்லாமல் இருப்பது பாதுகாப்பு.!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete