Monday, July 11, 2011

ஜனநாயக‌ துருக்கியின் வெற்றிப் பயணம்


துருக்கியில் போன மாதம் தேர்தல் நடந்து ஆளும் கட்சி வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும்.ஆட்டோமான் பேரரசின் தலைமை பொறுப்பில் இருந்த துருக்கி தனி நாடு ஆனது.. இரு உலக்ப் போரில் பாதிக்கப் பட்டாலும் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து ஒரு வலிமையான‌ ஜனநாயக நாட்டை கட்டி எழுப்பி உள்ளது.சிறுபான்மையினரான குர்தியர்கள் தனிநாடு கேட்டு போராடினாலும் அவர்களையும் ஜன்நாயகப் பாதையில் திருப்பி உள்ளது மிகப் பெரும் வெற்றி ஆகும்.சில அரசியல் கட்சியினர் மதரீதியான சட்டங்களை கொண்டு வர முயற்சித்தாலும் துருக்கிய மக்கள் அவர்களை ஜன்நாயக ரீதியாக நிராகரிக்கின்றனர்.
மதச் சார்பின்மையும்,மனித உரிமையுமே இதன் சட்டங்களில் முதன்மை இடத்தை பெறுகின்றன.இத்தேர்தலில் கூட சில மாற்றங்கள் அரசியலமைப்பில் செய்யலாம என்பதை குறித்தே தேர்தல் நடைபெற்றது.இக்காணொளி அது பற்றி கூறுகிறது.நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் பாராட்டுவோம்..


No comments:

Post a Comment