கடந்த சில நாட்களாக செய்திகளில் அடிபடும் ஆப்பிரிக்க நாடுகள் சூடான் மற்றும் எகிப்து. இதனை பற்றி நமது பார்வை.
சூடான்
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கார்த்தௌம் ஆகும்
எண்ணெய் வளம் உடையது.
1956 வரை எகிப்துடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.அந்த ஆண்டே எகிப்திடம் இருந்து பிரிந்து சுதந்திர நாடாகியது.அரபு,நுபுய மஸ்லிம்கள் வடபகுதியிலும்,கிறித்தவ,ஆதிவாசிகள் தெற்கிலும் பெரும்பான்மை இனத்தவராக வசித்து வருகின்றனர். அரசாங்கம் வடபகுதி இஸ்லாமியர்களால்(4 கோடி) நடத்தப் பட்டதை தென் பகுதி மக்கள்( 1கோடி) ஏற்கவில்லை.
தென் பகுதி மக்கள் சுய நிர்ணய உரிமை கோரியதை அரசு இராணுவம் மூலம் அடக்க முயல் உள்நாட்டுப் போர் மூண்டது. 1955 முதல் 1972 வரை நடை பெற்ற முதல் சூடானிய போரில் 5 இலட்சம் மக்கள் மடிந்தனர்.அடிஸ் அபா ஒப்பந்தம் 1972ல் ஏற்பட்டது. கொஞ்ச நாள் அமைதி.வடக்கு மாறவில்லை தனது இன ரீதியான ஒடுக்குதல்களை தொடர்ந்ததால் மீண்டும் 1982ல் மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டது.
இது 2005 வரை தொடர்ந்தது.சுமார் 20 இலட்சம் மக்கள் இறந்தனர்,
ஒசாம பின் லேடன்.
தீவிரவாத இயக்கமான அல் கொய்தாவின் தலைவன் ஒசாம பின் லேடன் 19992 ல் சூடானில் அல்கார்டும் என்ற இடத்தில் தனது முகாமை அமைத்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.
அங்கிருந்து சவுதி மன்னர் ஃபாக்த் அவர்களை விமர்சனம் செய்ததால் சவுதி அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க சூடான் அரசை கேட்டு கொண்டது..
இதனைடையில் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்புக்கும் ஒசாமா உதவி செய்தார்..இந்த இயக்கம் 1995 ல் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கை கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்தது.இதனால்.சூடன் அரசின் மீதான,எகிப்து,சவுதி,அமெரிக்க அரசுகளின் அழுத்தம் அதிகமானது. 1996ல் அங்கிருந்து ஒசாமா ஆப்கானிஸ்தான் சென்று விட்டார். எகிப்திய ஜிஹாத் அமைப்பு தடை செய்யப் பட்டது.
இந்த அமைப்பு மறைவாக எகிப்தின் இஸ்லாமிய சகோதர்த்துவ கட்சியோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது.
இ.ச்.கட்சிக்கு நைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் கிளைகள் உண்டு.இந்தோனேஷியா முதல் ஸ்பெயின் வரை உள்ள அகண்ட இஸ்லாமிய பேரரசு அமைப்பதே இவர்கள் நோக்கம்.
------
சூடான் பிரிவினை
திருப்பி சூடானுக்கு வருவோம். 2005ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.இடையே சூடான் அதிபர் ஃபஷீர் போர்க் குற்ற வாளியாக குற்றம் சாட்டப் பட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் படி 20011 ஜனவரியில் வாக்கெடுப்பு நடத்தி தென் சூடான் தனி நாடு ஆவதா இல்லையா என்று தீர்மானிக்கப் படும் என்று முடிவெடுக்கப் க பட்டது.
20011ல் நடை பெற்ர வாக்கெடுப்பில் 95% மேலாக தென் சூடான் பிரிவதற்கு ஆத்ரவு கிடைத்தது. சீக்கிரமே தனி நாடு ஆகும் தென் சூடானுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.
பிரிவுக்கு காரணம் என்ன?
1.அரசாங்கம் வர சூடானியராலேயே நடத்தப் பட்டது.
2. இஸ்லாமிய ஷாரியா சட்டம் அமல் படுத்தப் பட்டது.இந்த சட்டம் அமலுக்கு வர இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் பங்கு மிக அதிகம்.
3.ஏண்ணெய் வளம் அதிகம் இருந்தும் தென் சூடான் எந்த முன்னேற்றமும் பெறவில்லை.
தென் சூடானின் போராட்டக் குழுக்கள் ஒரு இனத்தையோ,மதத்தையோ சேர்ந்தவர்கள் அலல,இருப்பினும் அடக்குமுறை அவர்களை ஒன்றினைத்தது.
http://en.wikipedia.org/wiki/Sudan
http://countrystudies.us/sudan/65.htm.
________
இப்போது எகிப்து நாட்டை பற்றி பார்ப்போம்.
எகிப்தின் வரலாறு
1953க்கு முன் மன்னர் ஆட்சி இருந்தது.1954ல் நடந்த புரட்சியில் திரு நாசர் ஆட்சிஅயி கைபற்றினார். சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கி மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்தார். இங்கிலாந்து,ப்ரான்ஸ்,இஸ்ரேல் எகிப்து மீது தாகுதல் நடத்தி சூயஸை தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
பிறகு ஐநா தலையீட்டில் ஆக்கிரமிப்பு விலக்கப் பட்டது. .1967ல் இஸ்ரேலுடன் நடந்த 6 நாள் போரில் எகிப்து தோவி அடைந்தது .எகிப்தின் சினாய் பிரதேசம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தது.
தோல்விக்கு பொறுப்பேற்று நாசர் பதவி விலகினார்.அரபு தேசியமே மூச்சாக கொண்ட த்லைவர் நாசருக்கு பிறகு அன்வர் சதாத் பதவி ஏற்றார். இழந்த பிரதேசத்தை மீட்பதற்காக 1973ல் இஸ்ரேலுடன் நடந்த அக்டோபர் போரிலும் எகிப்து தோல்வி அடைந்தது.
சதாத் 1977ல் இஸ்ரேலுக்கு சென்று அமைதி பேசு வார்த்தை நடத்தினார்.இதனால் 1979ல் இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு விலகியது.இந்த ஒப்பந்தம் அரபு நாடுகளிடம் பகையை தோற்றுவித்தது. அமைதியை ஏற்படுத்திய அன்வர் சதாத் 1981ல் ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் பிறகு 1981ல் இருந்து 2011 வரை ஹோஸ்னி முபாரக் ஆண்டு வருகிறார்.இப்போது இவருடைய ஆட்சி எதிர்த்து போராட்டம் நடை பெறுகிறது.
_____
இப்போது மக்கள் புரட்சி செய்வதாகவும்,அதற்கு பல் காரணங்கள் கூறப் பட்டாலும் இது இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவோடு இந்த போராட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதே உண்மை.இவர்களை பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
இது பல அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமிய பழமை வாஅத அமைப்பாகும்.
இஸ்லாமே சர்வ ரோஹ நிவாரணி என்ற கொள்கையுடையவர்கள்.குரன் மற்றும் ஹதிதுகளின் படி தனி மனித ,சமூக,நட்டின் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்று கூறுபவகள்.
1936ல் எகிப்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் பல நாடுகளுக்கும் பரவியது.சிரியாவில் 1982ல் இராணுவத்தால் ஒடுக்கப் பட்டது.எகிப்தில் தடை செய்ய பட்டாலும் தேர்தலில் சுயேச்சையாக வேட்பாளர்களை நிறுத்தி வந்தது.20% இடங்களை கடந்த தேர்தலில் கைப்பற்றியது.
இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசித்து 9/11 தாகுதலுக்கு கண்டணம் தெரிவித்து,பெண்கள் ஆடை விஷயத்தில் கண்டிப்பு காட்ட மாட்டோம் என்றும் கூறி வருகிறார்கள்.இரண்டும் முரணாக உள்ளதே என்றால் அரசியலில் எல்லாம் சகஜம் என்பதே நிஜம்.
_____
சூடானின் அதிபர் பஷீர் இஸ்லமிய சகோதரத்துவ கட்சியை ஆதரிப்பவர்.ஹமாஸ்
கூட இதன் நட்பு இயக்கமே.
ஒரு வேளை இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?
1.இஸ்லாமிய சட்டம்(ஷாரியா) அமல் படுத்தப்படும்.
2.ஜன நாயகம் இருக்காது.
3.இஸ்ரேலுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகும்.போர் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
4.ஆப்கானிஸ்தான் பாதையில் எகிப்து செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
5.இது பிற இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஊக்கமாக அமையும்.
6.அகண்ட ஆட்டோமான் பேரரசை திரும்பவும் அமைக்கும் முயற்சிக்கு அமெரிக்க உட்பட்ட நாடுகள் நிச்சயம் தடைக்கல்லாக இருக்கும்.
மனித சமுதாயத்தை வழிந்டத்த இரு அருமையான கொள்கைகள் பல்வேறு சோதனைக்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப் பட்டு பல நாடுகளின் அமல் படுத்தப் பட்ட்டு வருகின்றது. அவை
1.மத சார்பற்ற மனித உரிமை சட்டங்கள்
2.மக்களாட்சி
இதனை விட எந்த முறையும் சிறந்ததாக வரலாற்றில் காட்ட முடியாது.இவற்றிலும் சில குறைகள் இருந்தாலும் மக்கள் கையில் உரிமை இருப்பதால் ஆட்சியாளரை மக்கள் மாற்ற முடியும்.
ஷாரியா சட்டம் 25 இலட்சம் மக்களை சூடானில் கொன்று விட்டு எகிப்திற்கு வர பார்க்கிறது.என்ன நடக்குமோ?.பொறுத்திருந்து பார்ப்போம்.
சார்வாகன்!
ReplyDelete'முஸ்லிம் பிரதர்ஹூட்' எகிபதை ஆட்சி செய்து தாலிபான்களை போல் அவர்கள் செயல்பட்டவுடன் தான் அவர்களை குறை காண முடியும். சவுதியிலும் இஸ்லாமிய ஆட்சிதான் நடக்கிறது. இந்துக்களும் கிறித்தவர்களும் குடும்பத்தோடு பல வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வரவில்லையா? சவுதியைப் போன்ற சிறந்த ஆட்சியையும் அவர்களால் கொடுக்க முடியும் தானே! பொறுத்திருந்து பார்ப்போம்.