Friday, July 1, 2011

மறக்கப் பட்ட மத புத்தகங்கள்:எகிப்தின் இறந்தவர்களின் புத்தகம்



எகிப்து மிக பழமையான கலசாரம் கொண்ட நடு.எகிப்திய நாகரிகம் சுமார் பொ.மு 4000 என்று கணிக்கப்படுகின்றது.இதன் அடிப்படையிலேயே பிற வரலாற்று சம்பவங்களின் வருடம் குறிப்பிடப்படுகின்றது.நாகரிகமான மனித்னின் வரலாறு 10,000 வருடத்திற்கு குறைவுதான்.அதிலும் ஆதார பூர்வமாக் நிரூபிக்கப் பட்ட வரலாறும் குறைவுதான்.சான்றுகளின் அடிப்படையில் இப்படி நடந்து இருக்க்லாம் என்ற மிகவும் பொருந்தக் கூடிய அனுமான்மே வரலாறாக படிக்கிறோம்.

வரலாற்றில் பல் விலங்கினங்கள்,மனித இனங்கள்,மொழிகள்,மதங்கள் காணாமல் போவது மிக இயல்பான ஒன்று.சூழ்நிலைக்கு ஏற்ப த்ன்னை மாற்ற முடியாத எதுவும் அழிந்து விடும்.மத புத்தகங்க்ள் ஒரு மதத்தின் பல் கொள்கைகளை வரையறுக்கும் ஒன்று.பல் மதங்கள் காணாமல் போனாலும் அவ்ற்றின் மத புத்தகங்கள் சில சமயம் தேடலில் கிடைக்கும்.அப்ப்டிப்பட்ட ஒன்றுதான் இன்ந்த எகிப்திய இறந்தவர்களின் புத்தகம். இந்த புத்தகங்களை ஒரு காலத்தில் சொல்வது எல்லாம் உன்மை என்று நம்பி இருப்பார்கள்,பிரச்சாரம் செய்தும் இருப்பார்கள் என்பதும் உண்மையே.இந்த புட்த்கம் பொ.மு.2550 ல் இருந்து பொ.மு 50 வரை சுமார் 2500 வருடம் பயன் பாட்டில் இருந்தது என்றால் இம்மதம் எவ்வளவு செல்வாக்கு பெற்று இருக்கும் என்று உண்ரலாம்.

இப்புத்தக்த்தில் பல் மந்திரங்கள் இருப்பதாகவும்,அதன் மூலம் இறந்தவரின் ஆன்மாவை வேறு உலக்த்திற்கு வழி நடத்த முடியும் என்றும் குறப்படுகிறது.இதில் உள்ள சில பகுதிகள் பொ.ஆ 3000 முன் என்று கூறப்ப்டுகின்றது.இவை ஹீரோஜில்ப் என்ற எழுத்துமுறையில் எழுதப்பட்டவை.இறந்தவ்ர்களை அடக்கம் செய்யும்போது பல பிரமிட்களில் புத்தக்த்தில் வசன‌ங்களை எழுதுவது உண்டு.

ஒரு மனிதன் கல்லறையில் வைக்கப் பட்டவுடன் அவன் ஆன்மா பறவை(பெயர் பா-ba) ஆகிவிடுகிறது என்று நம்புகின்றனர்.நமது கிராமப்புறங்களில் கூட முன்னோர்களுக்கு உணவளிக்கிறோம் என்று காகத்திற்கு உணவளிக்கும் வழக்கம் போன்றது. இப்புத்தகத்தின் முக்கியமான் விஷயம் என்னவென்றால் நியாயத் தீர்ப்பு நாள் பற்றி உலகிலேயே முதன் முதலில் குறிபிடுவதாகும்.உலகின் எல்லா மனிதர்களும் கடவுள் ஓசிரிஸ் முன் நிறுத்தப் பட்டு அவர்களின் நம்பிக்கைகேற்ப பல்ன் கிடைக்கும்.கவனிக்க்வும் ஒருவரின் செயல்களைப் பொறுத்து அல்ல.உடலும் உயிர் பெறும்என்று நம்பியதால் உடல்களை பிரமிட்களில் பேணிக் காத்து வந்த்னர் .இப்புத்தகம் பிற்கால் ஆபிரஹாமிய மத புத்தகங்களின் பல கருத்துகளை ஒத்து வருவது ஆய்வுக்குறியது.

மோசஸ் எகிப்தில் இருந்து யூதர்களுக்கு வாகளிக்கப் பட்ட இஸ்ரேல் நாட்டுக்கு வரும் வழியில் வழங்கப்பட்டதுதான் பழைய ஏற்பாட்டின் முதல் 5 ஆகமங்கள்(ஆதி ஆதி ஆகமம்,யாத்திர ஆகமம்,லேவியர் ஆகமம்,எண் ஆகமம்,உபாகமம்) யூதர்களின் தோரா(சுமர் பொ.மு 1300) ஆகும்.அங்கு வந்து கடவுள் உதவியுடன் அங்கு இருந்தவர்களை கொன்று துரத்தி விட்டு நாடு பிடித்தார்கள் என்று கதை போகிறது.இப்போது நடந்ததை சொல்லவில்லை அப்போதும் இதுதான்.


இந்த கதை உண்மையிலே நடந்ததா என்பதில் பல கருத்துகள் உண்டு.இது குறித்து சில கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்கள்,அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துவதாக் கூறுவது சந்தேகத்த்திற்கு உரியது. இதை குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

இந்த எகிப்திய புத்தகத்தின் பல பகுதிகள் தோராவிற்கும்,பைபிளுக்கு சென்றிருக்க வாய்ப்பு உண்டு.மதங்கள் வருவதும்,மாற்றம் அடைவதும்,அழிவதும் வரலாற்றில் இயல்பான விஷயம்.மதத்தின் பெயரால் நடை பெறும் வன்முறை,போர்கள் எல்லாம் மறைந்து மனிதம் தழைக்க உதவியாக் இருந்தால் மட்டுமே மதம் நீடிக்க வாய்ப்பு உண்டு.இப்புத்தக்ம் இங்கே த்ரவிறக்கம் செய்து கொள்ளலாம்.அது குறித்த ஆவணப் படம்.


4 comments:

  1. //இப்புத்தகத்தின் முக்கியமான் விஷயம் என்னவென்றால் நியாயத் தீர்ப்பு நாள் பற்றி உலகிலேயே முதன் முதலில் குறிபிடுவதாகும்.உலகின் எல்லா மனிதர்களும் கடவுள் ஓசிரிஸ் முன் நிறுத்தப் பட்டு அவர்களின் நம்பிக்கைகேற்ப பல்ன் கிடைக்கும்.கவனிக்க்வும் ஒருவரின் செயல்களைப் பொறுத்து அல்ல.உடலும் உயிர் பெறும்என்று நம்பியதால் உடல்களை பிரமிட்களில் பேணிக் காத்து வந்த்னர் .இப்புத்தகம் பிற்கால் ஆபிரஹாமிய மத புத்தகங்களின் பல கருத்துகளை ஒத்து வருவது ஆய்வுக்குறியது.//

    மிக முக்கிய கருத்து.

    எகிப்தியர்களின் மதத்தில் இருந்து தான் யூத மதமும் அதன் தொடர்ச்சியான பிற அபிரகாமிய மதங்களும் உருவாகின என சொல்லுவதில் லாஜிக் இருப்பதை மறுக்க முடியாது.

    கருத்தியல் , புவியியல்,வரலாறு,கால அட்டவணைப் படி இந்தக் கருத்து உண்மையாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே
    ஆதாரபூர்வமான உண்மைகளை மட்டும் வைத்துப் பார்த்தால் அப்படித்தான்.பல் உண்மைகளை வெளியில் அப்ப்டியே சொன்னால் பல்ருக்கு கோபம் வரும் என்பதால் பல் ஆய்வு அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிட தடை உள்ளது.
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  3. சகோதரர் சார்வாகன் அவர்களே,

    வணக்கம், நான் எகிப்துக்கு சுற்றுலா சென்ற போது இந்தப் படங்கள், மம்மி, பிரமிடு இவற்றை எல்லாம் பார்க்கும் போது, இறந்த பிறகு மீண்டும் அதே உடல் பெயருடன் மீண்டும் எழுப்பப் படுவோம் என்கிற கோட்பாட்டை( இது ஒரு நப்பாசை என்றே நினைக்கிறேன்- ச்சே நமக்கு கிடைஞ்ச உடம்பு, பெயரு நம்பலை விட்டுப் போயிடுமோ, இருக்காது, அது எப்போதும் நமக்குதான் சொந்தம் என்று நினைப்பிலே -எழுந்த ஒரு ஆசை-) இதை முதலில் சொன்னது எகிப்தியரே. ஏனெனில் எகிப்தில் பஞ்சம் பிழைத்து திரும்பிப் போனதாக் சொல்லப் பட்ட காலத்துக்குப் பின்னர் தான் யூத மதம் உருவாகியுள்ளது.

    ReplyDelete
  4. அது மட்டுமல்ல நண்பரே
    இப்போது அகழ்வாய்வுகள் மோசசும் ,யூதர்களும் கூட எகிப்தியரே என்பதும்,ஒரு கூட்ட எகிப்தியர் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து அதே நாட்டின் பிற பகுதி(இப்போதைய பால்ஸ்தீனம்) சென்றனர் என்பதை கூறுகிறது. பல தெய்வ வழிபாடு ஒரு தெய்வமக்கப் படும் போது பழைய தெய்வங்கள் மோசமானதாக் காட்டப்படும் என்ற ஏகத்துவ தத்துவத்தின்ப‌டி மாற்றி மத புத்தகங்கள் எழுதப் பட்டிருக்கலாம்.
    இன்னும் கூட ஆபிரஹாமிய மதங்களில் உடலுடன் உயிர் பெறுவது ஒருஇறையியல் கொள்கையே.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete