Friday, June 24, 2011

முதல் காரணி வாதமும் பெரு வெடிப்பு கொள்கையும்



நீங்கள் ஒரு இறை மறுப்பாளராகவோ அல்லது ஒரு மத பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் போது அதனை ஏன் எப்படி என்று கேட்பவராக இருந்தால் நேரடி விவாதத்திற்கு வாருங்கள் என்று அறை கூவல் விடுப்பதை கேட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மதவாதிகள் இவ்வளவு தைரியமாக இப்படி கூப்பிடுகிறார்கள் இறைவன் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் இதில் எப்படி விவாதித்து இறைவன் இருக்கிறாரா என்று முடிவு செய்ய முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.அது குறித்தே இப்பதிவு.

விவாதம் என்றால் என்ன என்பதை முதலில் அறிவோம். 
**********************************
de·bate
noun,From Dictionary.com
1.a discussion, as of a public question in an assembly, involving opposing viewpoints: a debate in the Senate on farm price supports.
2.a formal contest in which the affirmative and negative sides of a proposition are advocated by opposing speakers.
3.deliberation; consideration.
***************************************
ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது மாறுபட்ட கருத்துகளை எடுத்துரைத்தல்,இதில் நேரடி,இணைய,தொலை பேசி,தொலைகாட்சி  என்று பல வகையில் நடை பெறலாம்.
என்னை பொறுத்தவரை எழுத்து பூர்வமான் விவதத்தில் கருத்தை சிதைவில்லாமல் ,மாற்றாமல் கூற இயலும்.ஆகையால்தான் எந்த சொத்திற்கும் பத்திரம் எழுதி பதிவு செய்து கையெழுத்தும் வாங்குகிறார்கள்.அதில் எழுதும் போது மாற்றம் என்றால் பெரிய வில்லங்கம் ஆகிவிடும் என்பதால் எழுத்து பூர்வமான விஷயங்களுக்கு அங்கீகாரம் அதிகம்.
இன்னும் ஒரு விஷயம் இந்த மத ச்புத்தகங்களின் சமகால புத்தக்ங்கள் கிடைத்து அதனை படித்தால் மத புத்தக்த்தில் மிகைப் படுத்திக் கூறப்பட்ட பல விஷயங்களை அறிய முடியும்.சில சம்யங்களில் மத புத்தகம் பற்றியே சர்ச்சைக் குறிய கருத்துகள் நம்ப்கமான சமகால் குறிப்புகளில் இருந்து கிடைக்கும். முரண்படும்,மாறுபடும் சம கால்க் கருத்துகளை பெரும்பாலும் மதவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பல சம கால கருத்துகள் சில மட்டும் புத்தகமாக எழுதப் பட்டு பாதுகாக்கப் பட்டதா,அல்லது அப்போது அவை ஏற்றுக் கொள்ளப் பட்டதன் காரணமாகவோ இப்போதும் கிடைப்பதுண்டு.அதனை எதிரிகள் சதி என்று பல கதை இணையத்தில் படிக்கிறோம். ஒவ்வொரு கருத்தும் ஆவணப் படுத்தப்படுவது இக்கால சிந்த்னைகளை பிறகால்த்தவ்ருக்கு எடுத்துச் சொல்லும் முயற்சி ஆகும்.இணையப் புரட்சி ஏற்பட்டதால் யாருடைய கருத்தும் ஆவணப் படுத்தக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதை உபயோகப் படுத்த வேண்டுமெனில் மத கருத்துகளை விவாதங்களை எழுத்து பூர்வமாக் ஆவணப் படுத்துவது நல்லது.

இப்படி ஆவணப் படுத்தப் பட்ட கருத்துகளை 'அ' என்பவர் ,அப்போது, இதனை கூறினார்.அக்கருத்து இப்போது 'ஆ'என்பவரால் இப்படி கூறப்படுகின்றது என்பதை அறிய முடியும்.ஒரு ஆய்வுக் கட்டுரை படிக்கும் போது ஒரு பிரச்சினையை பலர் ,பல கால கட்டங்களில் எவ்வாறு அணுகிணார்கள்,அதன் சாதக ,பாதகங்கள் குறித்தும் எழுதி,இப்போது இக்கட்டுரையில் பரிந்துரைக்கும் முறை இதுவரை பின் பற்றப் பட்ட அணுகுமுறையில் இருந்து எப்படி மேம்பட்டது என்பதையும் கூறுவார்கள்.மதம் குறித்த கட்டுரைகளிலும் இம்மாதிரி அணுகுமுறை வர வேண்டும் என்பதே நம் ஆசை.

ஒரு மத பிரச்சாரகர்களிடம் நீங்கள் கூறும் கருத்தாக்கம் மதம் தோன்றிய[இது உலகம் தோன்றிய நாள் முதல் மதம் இருக்கிறது என்ற கூற்றும் சொல்வார்கள்]நாள் முதல் அப்ப்டியே இருக்கிறதா ,இல்லை காலத்திற்கு ஏற்ப பரிணமித்தா அதாவது பழையன் கழிதலும்,புதியன புகுதலும் என்று மாறியிருக்கிறதா என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?

இது இறைவனால் ஏற்படுத்தியது மனிதனின் கருத்திற்கே இடமில்லை.அன்று முதல் இன்றுவரை ஒரே மாதிரி இருக்கிறது,மனிதர்கள்,இன்னும் பலர்(?) சேர்ந்தாலும் இதில் ஒரு எழுத்தை கூட மாற்ற முடியாது என்பர்.பழைய பிரதி மத புத்தக்த்திற்கும்,இப்போதைய புத்தக்த்திற்கும் சில வித்தியாசங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் என்றால்,நாங்கள் தலைமுறை தலைமுறையாய் மனன்ம் செய்தே பரப்புகிறோம் அகவே இதை மட்டும் பாருங்கள் என்பார்கள்.இவர்கள் சொலவ்து உண்மையா பொய்யா என்பது அறிய முடியாது.இன்னும் ஒரு 100 வருடத்திற்கு முந்தைய கருத்தாக்கங்கள்,மாறுபட்ட பிரச்சாரங்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் படாமல்,ஒருவிதமான் அரசியல் சார்ந்த கொள்கையாக்கம் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.

முந்தைய கருத்தாக்கங்கள் அனைத்தும் தவறு,வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரமுடியுமா? என்பார்கள்.மேற்கூறிய நாம் கூறிய கருத்துகளை அசை போட்டால் இந்த நேரடி விவாதம் என்பது எப்படி இருக்கும் என்பதை புரிந்து கோள்ளலாம்.இந்த விவாதங்களில் மதங்கள் பற்றி அதன் ஆதார மூலங்கள்,வரலார்று ரீதியான கருத்தாக்க மாற்றங்கள் என்று அறிவியல் பூர்வமாக விவாதிக்க மாட்டார்கள்.இன்று இப்போது நான் சொல்லும் விளக்கம் மட்டுமே சரியாது என்று பேசுவார்கள்.அங்கே அவர் அப்ப்டி சொன்னார் என்றால்,இதுதான் சரி,அவர் பெரிய ஆளுங்க என்று சொன்னால் அதுவும் சரி,இதுவும் சரி என்பார்கள்.இந்த நேரடி விவாதங்களே ஒரு நகைச்சுவையான பொழுது போகே தவிர வேறொன்றுமில்லை.
**************
இந்த நேரடி விவாதங்களின் அடிக்கடி நடப்பது இறைவன் உண்டா இல்லையா என்பதாகும்.இதனை சென்ற பதிவில் சிறிது ஆய்வு செய்தோம் என்றாலும் இதில் ஒரு முதல் காரணி விவாதம் என்பதையும் இதனை எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

முதல் காரணி கொள்கை என்றால் என்ன?

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணி[cause] உன்டு.காரணி இல்லாமல் ஒன்றும் நடக்க முடியாது.பிரபஞ்சம் ஒன்று இருந்தால் அதனை படைத்தவர் என்று ஒருவர் உண்டு.ஆக்வே இறைவன் இருக்கிறார்.அப்போது இறைவனை படைத்தவ்ர் யார்? என்றால் நம்மை எள்ளி நகையாடி இறைவனுக்கு இது பொருந்தாது என்றும் இருப்பவர் என்று சொல்வார்கள்
.
 இதனை கூறுபவர்கள் சொந்த சரக்கு போல் கூறுவதும்,அவரது சிஷ்யர்கள் ஆஹா நம்து குரு என்னே அபாரமாக் வாதிடுகிறார் என்று மெய் மற்ப்பதும் இயல்பான விஷயங்கள். இந்த ஆச்சரியத்தினால்தான் யாரை பார்த்தாலும் நேருக்கு நேர் வருகிறாயா என்றழைப்பது. சரி இந்த முதல் காரணி கருதுகோள் தத்துவத்திற்கே திரும்பி வருவோம்.இந்த முதல் காரணி கருதுகோள் முதலில் பிளாட்டொ (c. 427–347 BC) ,அர்ஸ்டார்டில்(c. 384–322 BC),மற்றும் தாமஸ் அக்கினோ[ 1225 – C.E 1274).ஆகியோர்களால் உருவாக்கி ,பண்படுத்தப்பட்டது.ஆக்வே இந்தக் கொள்கை மிகப் ப்ழமையான‌து என்பதையும், இதனை பண்படுத்திய சரித்திர தத்துவ‌ நாயகர்களை மேற்கோள் காட்டாமல் சொலவ்து தவறு. 

 இன்னும் இந்த கொள்கையில் பல மாறுபட்ட வகைகள் உண்டு,ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் போதும் பரிணமித்தது என்பதை அறிதல் நலம்.பிரபஞ்சம் தோன்றியது பெரு வெடிப்பின்[Big Bang Theory] மூலம் என்பதே இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரபஞ்ச தோற்ற‌ கொள்கை[Orgin of universe]. .நம்ம மதவாதி அண்ணாச்சி ஒரே போடாக பெரு வெடிப்பிற்கு காரணம் என்ன?அதனை வெடிக்க வைத்ததே எங்க இறைவன்தான் என்று அனைவரையும் புல்லரிக்க வைத்து விடுவார்.அடேயப்பா இவரை இறைவன் எப்படி பயன்படுத்துகிறான் பாருங்கள் என்று மெய் மறப்பர் சிஷ்யர்கள்.
_________
சரி நாம் இப்போது இதனை ஆய்வு செய்வோம்.

பெரு வெடிப்பு கொள்கை என்றால் என்ன?

பெரு வெடிப்பு கொள்கை பிரபஞ்சம் எப்படி தோன்றியது பற்றிய அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பற்றிய இப்போதைய கருது கோள் ஆகும். பொ.ஆ 1927ல் ஜார்ஜ் லாமெடர் என்ற பெல்ஜியத்தை சேர்ந்த,கத்தோலிக்க மதகுரு மற்றும் ஆய்வாளரால் வரையறுக்கப் பட்டது.மிக அதிக‌ வெப்பமும்,மிக அதிக அடர்த்தியும் கொண்ட ஒரு வினோத ஓர்மைப் புள்ளி[singularity) அணுவில் இருந்து 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விரிவடைய ஆரம்பித்து பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இக்கொள்கை.
திடிரென்று வெடிப்பு ஒன்றும் ஏற்படவில்லை,ஒரு பலூன் ஊதினால் என்ன நிகழுமோ அதுபோல் நிகழ்ந்து கொண்டிருப்பது.இக்கொள்கை எப்படி சரி என்று கருதப்படுகின்ற‌து என்றால் இரு வேறு கால கட்டங்களில்நட்சத்திர மண்டலங்களுக்கிடையே உள்ள தூரம் அதிகரிப்பதும்,வெப்பம் குறைவதை வைத்து ஒரு கால கட்டத்தில் அனைத்துமே ஒரு வினோத ஓர்மை புள்ளியில் இருந்திருக்கலாமோ என்ற கண்க்கீட்டில் உறுதிப் படுத்தப்பட்டது. இன்னும் சில கருதுகொள்களும்'[hypothesis] போட்டியில் இருக்கின்ற‌ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எந்த மத புத்தக்த்திலும் இறைவன் வானங்களையும்,பூமியையும் படைத்து முடித்து விட்டார்.இங்கே முதல் க்ஷன‌த்தில் நடந்தது போலவே இப்போதும் நடகின்ற‌து ஆகவே இந்த பெரு வெடிப்பு கொள்கை மத புத்தகங்களில் கூறப்படும் இறைவனின் படைப்பை வழி மொழிகிறதா என்பதை யோசிக்கலாம்.

சரி பெரு வெடிப்பு என்பதை விட தமிழில் பெரும் விரிவடைதல் கொள்கை என்பதே பெயர் சரியாக இருக்கும்.

***********
   

இப்போது திருப்பி நம் முதல் காரணி கொள்கைக்கு வருவோம்.

மதவாதிகள் என்ன கூறுகிறார்கள்,இந்த ஒரு புள்ளியில் இருந்து விரிவடைய செய்து கொண்டிருப்பவர் இறைவன்(கள்) என்கிறார்கள்.இது அறிவியலின் படி அந்த புள்ளிக்கு முன் வெளி(இடம்),காலம் இல்லை.அங்கிருந்துதான் இரண்டும் ஆரம்பிக்கின்றன.அந்த வினோத ஓர்மை புள்ளி[singularity] என்பதும் ஒரு பொருள்.அதற்கு வெளியில் இருந்து இறைவன் என்னும்சக்தி என்பது அறிவியலின் படி தவறு.அந்த புள்ளியில் உள்ள மிக அதி சக்தி(அதி வெப்பம்+அதி அடர்த்தி) அத்னை விரிவடைய செய்கிறது என்பதும் ஒரு குறிப்பிட்ட அள்விற்கு விரிவடைந்ததும் பின் திருப்பி சுருங்கி பழைய நிலைக்கு வந்துவிடும் என்பதும் இக்கொள்கையின் அம்சங்களே.இத்னை மத புத்தகங்கள் ஏற்காது.ஆக சுருங்குவதும் விரிவதும் ஒரு முடிவற்ற செயல் என்ற் கருத முடியும்.நாம் முதல் விரிவாக்த்தில்தான் இருக்கிறோம் என்று அறுதியிட்டு கூற இயலாது.
Big crunch(End of Big bang)

இப்படி பிரபஞ்சத்தில் 0.000001% பூமியில் உள்ள மனிதனுக்காக் இப்படி பிரபஞ்சம் விரித்து சுருக்குவது அவ்வளவு திறமையுள்ள படைப்பாளி செய்யும் வேலை அல்ல.பிரபஞ்சம் நிலையானது என்பதும் எண்ணற்ற முறை விரியும் சுருங்கும் என்பது ஒரே மாதிரியே.ஒருவேளை அந்த சக்தி தீர்ந்து விட்டால அப்ப்டியே நின்றும் விடலாம்.ஆக நடைமுறையில் உல்ள பல் மதங்களின் படைப்பு கொள்கைக்கு இது ஒத்து வராது. பெரும் விரிவாக கொள்கையை முதல் காரணி வாதத்திற்கு பயன் படுத்த ஒரு புது மதம் உருவாக்கப் பட்டால் அதற்கு உபயோகப் படலாம்.இக்காணொளி பாருங்கள் இவர்கள் வேறு முறையில் பிரச்சினையை அணுகுகிறார்கள்.




18 comments:

  1. வினோத ஓர்மை புள்ளி[singularity]

    who create this .....................

    its come from nothing or what?

    in science no answer

    ReplyDelete
  2. /who create this .....................

    its come from nothing or what?

    in science no answer/
    அறிவியலின் படி அந்த ஓர்மை புள்ளிக்கு வெளியே ஒன்றும் இருக்க முடியாது. அது சுருங்கி விரிந்து கொண்டே இருக்கிறது. முக்கியமான விஷயம் என்னவெனில் ஏன் விரிவதை கூறும் மதவாதிகள்,திருப்பி சுருங்குவதை சொல்லவில்லை?
    அதற்கு வசனம் இல்லையா?
    முதலில் விரிவது என்று மத புத்தக்ம் கூறுவதே ஒரு கதை.வேண்டுமானால் குரன் 21:30 ஐ பிரப்ஞ்ச விரிவடைதலோடு மட்டும் விளக்குங்கள்.
    *************
    எதுக்கும் அந்த சிறு புள்ளியை படைத்த பெரும்புள்ளி(அப்ப்டி யாராவது இருந்தால்?) யை தக்வல் பரிமாற்றம் முடிந்தால் கேட்டு சொல்லுங்கள்.
    *********
    தக்வல் கிடத்தால் புது புத்தகம்,புது மதம்,பழைய இறைவன் என்று புதிதாக் நீங்களே ஆரம்பிக்க்லாம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கடவுள் என்ற பெரும்புள்ளி எப்போதும் இருப்பார் என்றால் இந்த வினோத ஓர்மை சிறு புள்ளியும் எப்போதும் விரிந்து சுருங்கிக் கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  4. நண்பரே நீங்கள் அறிவியலை அணுகும் விதம் என்னை மைசிலிர்க்க வைக்கிறது உங்களை பொறுத்தவரை அறிவியல் உங்களின் மதம். ஒன்றும் சொல்வதிர்க்கில்லை உங்களின் கொள்கை உங்களுக்கு எங்கள் கொள்கை எங்களுக்கு அப்படி இருக்கும் போது கண்ட பொய் களின் மூலம் ஏன் அவதூறுகள் பரப்ப வேண்டும்? இதற்க்கு யார் உங்களுக்கு பணம் கொடுக்கிரார்கள்? நீங்கள் ஏன் நேரடி விவாதம் தவிற்கிரீர்கள் இதை சிந்திக்கும் போது பல உண்மைகள் விளங்குகின்றது நேரடி விவாதத்தில் ஒருவர் ஒன்றை பொய் என்று ஆதாரத்தோடு நிருபிக்கும் போது எதிராளி தப்ப முடியாது ஆனால் வலை உலகில் எளிதாக தப்பிக்கலாம் மற்ற ஒருவரை ஏவிவிட்டு தலைப்பை மாற்றி தனது தவறை திசை திருப்பி என் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று காடிக்கொள்லாம் இது எனக்கு கூட நடந்திருக்கிறது நான் நண்பர் இக்பால் செல்வனிடம் விவாதம் பண்ணும் போது அவர் சொன்ன பொய் ஒன்றை ஆதாரமாக நிறுவி கேள்வி கேட்ட உடன் நண்பர் ஆரோனியன் வந்து இடையில் புகுந்து தலைப்பை மாற்றி அவர் அதிலிருந்து தப்ப உதவினார் ஆகையினால் தான் நேரடி விவாதத்தில் பங்கு கொள்ள உங்களை போன்ற வர்களுக்கு பயம் இன்னும் சொல்கிறேன் உங்களுக்கு உண்மையிலே உங்களின் கொள்கைகளின் மீது அதீத நம்பிக்கை, பிடிப்பும் இருந்தால் அவர்களுடன் ( TNTJ ) நேரடி விவாதத்தில் பங்கு கொண்டு உங்களின் கொள்கைகளை நிலைநிறுத்த முயற்சிக்கவும்

    ReplyDelete
  5. அருமை நண்பரே ,
    /நண்பரே நீங்கள் அறிவியலை அணுகும் விதம் என்னை மைசிலிர்க்க வைக்கிறது/
    இதற்குமா!!!!!!!!!.மிக்க நன்றி.
    /உங்களை பொறுத்தவரை அறிவியல் உங்களின் மதம். ஒன்றும் சொல்வதிர்க்கில்லை /
    அறிவியல் கால்த்திற்கேற்ப ,சான்றுகளை பொறுத்து மாறும்,எவரின் கூற்றும் ஆய்வுக்கும்,மாற்றத்திற்கு உடப்ட்டதே .இன மொழி பேத்மற்ற‌து.மத சார்பற்றது.மனித உரிமை காக்கும் காரணி.ஆக்வே என்க்கும் பிடிக்கிறது.சும்மா அறிவியல் எது வேண்டுமானாலும் சொல்லுங்கள் கொவிக்க மாட்டோம்.ஒரு மறுப்பு பதிவு வெளியிடுவேன்.
    /உங்களின் கொள்கை உங்களுக்கு எங்கள் கொள்கை எங்களுக்கு அப்படி இருக்கும் போது கண்ட பொய் களின் மூலம் ஏன் அவதூறுகள் பரப்ப வேண்டும்? /
    என்ன அவ்தூறு என்று கூறினால் மறுக்க வசதியாக் இருக்கும்.இதுவரை மத பிரச்சாரகர்கள் சொல்லும் கூற்று உண்மையா என்று மட்டும் சரி பார்க்கிறேன்.அவ்வளவுதான்.
    /உங்களுக்கு பணம் கொடுக்கிரார்கள்? /
    இதுக்கு எல்லாம் யார் கொடுப்பார்கள்?.ஏதோ அறிந்த விஷயம் கிடைக்கும் சம்யத்தில் எழுதுகிறேன்.பெரும்பாலும் விவாதிக்கும் போது கிடைக்கும் கேள்விகளுக்கெ விடை அளிக்கிறேன். அதன் மறுப்பு பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிடுகிறேன்.படிப்பவ்ர்கள் எது சரியோ எடுக்கட்டும்.
    /நீங்கள் ஏன் நேரடி விவாதம் தவிற்கிரீர்கள் /
    பதிவ்ல் கூறியிருந்தேன் சரி நீங்கள் மிகவும் ரசித்த ஒரு நேர் அடி(?!!!!!!!) விவாதம் ஒன்றை பரிந்துரை செய்யுங்கள்.அதன் மீது ஒரு விமர்சன பதிவிடுகிறேன்.
    /இதை சிந்திக்கும் போது பல உண்மைகள் விளங்குகின்றது நேரடி விவாதத்தில் ஒருவர் ஒன்றை பொய் என்று ஆதாரத்தோடு நிருபிக்கும் போது எதிராளி தப்ப முடியாது /
    அப்ப்டியா!!!!!!!!. கொடுங்கள் காணொளி சுட்டி.பார்க்கிறேன்.
    /ஆனால் வலை உலகில் எளிதாக தப்பிக்கலாம் /
    மனித வாழ்வில் கூட தப்பித்தான் பல விஷயம் இன்னும் தொடர்கின்றது.
    /தலைப்பை மாற்றி தனது தவறை திசை திருப்பி என் மீசையில் மண் ஒட்ட வில்லை /
    இங்கேயும் அப்படியா!!!!!!!!!!!
    /இது எனக்கு கூட நடந்திருக்கிறது /
    இது எனக்கு கூட நடந்திருக்கிறது !!!!!!!!
    /உங்களின் கொள்கைகளின் மீது அதீத நம்பிக்கை, பிடிப்பும் இருந்தால் அவர்களுடன் ( TNTJ ) நேரடி விவாதத்தில் பங்கு கொண்டு உங்களின் கொள்கைகளை நிலைநிறுத்த முயற்சிக்கவும்/
    நண்பரே நீங்கள் என் கட்டுரை படித்தீர்கள்.விமர்சனம் எழுதுங்கள் தலை வணங்கி ஏற்கிறேன்.
    உலக்ம் முழுதும் நான் சொவதை ஏற்க வேண்டும் என்று நான் கூறவே இல்லை.என் வலைப்பதிவை தினமும் சுமார் 50 பேர் மட்டுமே படிக்கிறர்கள்.உங்கள் போன்ற நண்பர்களுடன் விவாதிக்கும் கருத்துகளையே பதிவிடுகிறேன்.யார் கேள்வி எழுப்பினாலும் பதில் தெரிந்தவரை இடுவேன்.அவ்வளவுதான்.இது என் பொழுது போக்கு. மற்றபடி என் பதிவை படித்து யாராவது மாறிவிடுவார்களா என்ன?
    நானே நம்ப மாட்டேன்.உங்களுக்கு பிடிப்பதால் ஒரு கொள்கையை பின் பற்றுகிறீர்கள் அது உங்களுக்கு மன் சாந்தியை தருகின்றது.அதில் நீங்கள் சொன்ன மத பாதுகாவல் ஆட்கள் கூறாவிட்டால் நம்ப மாட்டீர்களா?
    நீங்களும் நிறை படியுங்கள் விவாதியுங்கள் நீங்கள் நம்பும் கொள்கைக்கு இன்னொருவர் ஆதரவு கேட்க கூடாது.உங்களுக்கு ஊக்கம் இருக்கிறது.தேடல் வளர்த்தால் பதில் அளிக்க முடியும்.நீங்கள் ஏன் பதிவிடக் கூடாது?
    **********************
    எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் நண்பரே,பொழுது போகவில்லையெனில் அடிக்கடி வாங்க சண்டை போடலாம்.

    ReplyDelete
  6. இனியமுறை யில் விவாதிக்க பல முறை வருவேன் பதிவிடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை எனக்கு நேரம் இல்லை பதிவு களை பார்பதிற்கே நான் புதியவன்

    ReplyDelete
  7. நன்றி நண்பரே!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. //விவாதத்தில் பங்கு கொள்ள உங்களை போன்ற வர்களுக்கு பயம் இன்னும் சொல்கிறேன் உங்களுக்கு உண்மையிலே உங்களின் கொள்கைகளின் மீது அதீத நம்பிக்கை, பிடிப்பும் இருந்தால் அவர்களுடன் ( TNTJ ) நேரடி விவாதத்தில் பங்கு கொண்டு உங்களின் கொள்கைகளை நிலைநிறுத்த முயற்சிக்கவும் //

    யாருங்க அந்த TNTJ உலகில் உள்ள மொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளா அவர்கள் ? சரி தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பிரதிநிதிகளா அவர்கள் ? எதுவும் இல்லை. எதோ ஒரு சிறு அரசியல் அமைப்பு. அவர்கள் செய்யும் அடாவடித்தனங்களை தமிழக முஸ்லிம் மக்களே பலர் விரும்புவதில்லை ..

    மக்களை குழப்பும் பணியில் இருப்பவர்கல்...

    ReplyDelete
  9. வாங்க சகோ,
    அவர்கள் ஒரு நகைச்சுவை பேர்வழிகள்.நாமும் சரியாக விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை குழப்பவாதிகளுக்கு கொண்டாட்டம்.
    *********************
    யாருக்கேனும் இந்த மத அறிவியல் குறித்து சந்தேகம் இருந்தால் அதற்கு அருமையாக் விளக்கம் அளித்து குழப்பம் இங்கே தீர்க்கப் படும்.
    கேள்விக்கு பதிவில் பதில் அளிக்கப்படும்.
    *********************
    இதுக்கு மேலே என்ன செய்வது!!!!!!!!!!
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  10. மதவாதி: இறைவன் இல்லையென்று நிரூபி பார்க்கலாம்.

    இறை மறுப்பாளர்:ஏன் இல்லையென்று நிரூபிக்க் வேண்டும்,பதிவில் இதற்கு பதில் கூறப் பட்டுள்ளதே.

    மதவாதி:முதலில் இருந்தே இறைவன் உண்டென்று மக்கள் நம்பி வந்த்னர்.நீங்கள் இப்போது நாத்திகம் பேசுவதால்,உங்கள் கருத்து பிந்தியது ஆகவே இறைவன் இல்லையென்று ந்ரூபிக்க வேன்டும்.

    இறை மறுப்பாளர்:அப்ப்டியா,இறை மறுப்பும் பழைமையான‌துதான்.மதம் தோன்றியதில் இருந்துஏ மாற்றுக் கருத்தாளர்களும் இருந்து வருகிறார்கள்.உங்கள் மதம் 6ஆம் நூற்றாண்டில் தோன்றியது அதற்கும் முன் இருந்த அனைத்து மத, இறை மறுப்பு கருத்துகளையும் ஆய்வு பூர்வமாக மறுத்தால் உங்கள் கூற்றை நீங்களே மெய்ப்பிப்தாக இருக்கும்.

    மதவாதி:நீங்கள் சொல்வது தவறு.எங்கள் மதம் முதல் மனிதன் ஆதமின் மதம்.ஆகவே நாங்கள்தான் முதல்.

    இறை மறுப்பாளர்: இதனை எப்படி கூறுகிறீர்கள்?

    மத்வாதி :எங்கள் புத்தகம் கூறுகின்றது

    இறை மறுப்பாளர் அந்த புத்தக்ம் 6 ஆம் நூற்றாண்டு அல்லவா!!!!!!!!. அப்புத்தக்த்தை நான் ஏற்பது இல்லை.உங்களுக்கு முந்திய சகோதர மதங்கள் உங்கள் கூற்றை ஏற்றால் மட்டுமே அதின் தொடர்ச்சி என்று ஏற்க முடியும்.
    இல்லையெனில் உங்களுக்கு பிந்தைய உங்கள் மத பிரிவுகளின் கருத்தை நீக்கள் ஏற்க வேண்டும்.ஆதம் மட்டுமே முதல் மனிதன் என்பதற்கு மாற்று கருத்து கொண்டவர்களும் உங்கள் மதத்தில் இருக்கிறார்கள்.

    1.முதலில் புத்தக்த்தை ஏற்கும் அனைவரும் ஒரு ஒத்த கருத்துக்கு வரவேண்டும்.

    2.மத புதக்த்தில் சொன்ன ஆட்கள்[முதலி யார்?],சம்பவங்கள்[எங்கே, எப்போது] அனைத்தும் வரலாற்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகள் ரீதியாக (இதுவரைக்கும் ஒன்னுமே இல்லை) ஐயந்திரிபர உறுதிப்படுத்த வேண்டும்.இது விஷ்யமாக பல‌ கேள்விகள் என்னால் தர முடியும்.

    3. முந்தைய சகோதர மதங்களின் மதவாதிகள் உங்கள் புத்தக்த்தை அங்கீகரிக்க வேண்டும்.

    4.பிறகு இறைவன் இல்லை என்று நிரூபிக்க கேட்கலாம்.நான் இல்லையென்று உண்மையாக தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் புத்தக்த்தின் மீது நம்பிக்கையில் தேடாமல் அதில் சொன்னவற்றை கடைபிடித்தால் போதும் என்று பொய்யாக வாழ்கிறீர்கள்.

    ReplyDelete
  11. What happened before the big bang ? வீடியோ பார்த்தேன். அதில் கூறப்படும் எந்த தியரியும் பிரபஞ்சம் உருவாக 'முதல் காரணி' தேவையில்லை என்று கூறுவதாக தெரியவில்லை. கொஞ்சம் விளக்கவும்.

    ReplyDelete
  12. நண்பரே,
    அறிவியல் சான்றுகளை வைத்து நடப்பதற்கு மிக அதிகமான் வாய்ப்பை மட்டுமே கூறும்,அதுவும் ஆய்வுகளுக்கு உட்பட்டு மாறும்.பல பிரபஞ்சங்கள் உள்ளது என்பதும், ஒரு கருப்பு புள்ளிதான் பெரு விரிவாக்மான்து என்பதும் கூட ஆய்வில் உள்ள விஷயங்கள்.

    அறிவியலில் விஷயம் எத்னையும் அறுதியிட்டு கூற பல நாட்கள் பிடிக்கும்.ஒரு கருத்து பரிணாம் வளர்சி பெற்றே கூற்று ஆகும்.

    இது முழுவதும் சரி தவறு என்பது அறிவியல் கருத்தியலில் இல்லை,எவ்வளவு சரியின்,தவ‌றின் அருகில் உள்ளது உள்ளதுதான் அதன் இருப்பை,மாற்றத்தை தீர்மானிக்கிறது.

    இப்போது இது ஏன் இப்படி இருக்கிறது என்று மட்டுமே கூற முடியும்.ஒரு விஷயம் ஆய்வின் மூலம் விஷயம் சரியென்று நிரூபிக்கப் படும் போது ,அதே ஆய்வில் இன்னொருவரும் செய்து அதே முடிவுக்கு வர வேண்டும் அதுதான் சரி.இதைத்தான் பள்ளி ஆய்வுக் கூடங்களில் செய்கிறோம்.

    தெரிந்த,புரிந்த , எவரும் சரிபார்க்க முடிந்த விஷயங்கள் மட்டுமே கூறுவது அறிவியல்.தெரியாத,புரியாத ஒருவரும் சரி பார்க்க முடியாத விஷயங்கள் கூறுவது மதம்.

    ReplyDelete
  13. சார்வாகன்

    அறிவியல் மற்றும் மதம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

    என்னுடைய கேள்வி இதுதான் :

    இந்த பதிவில் big bang theory மற்றும் ஏனைய தியரிகளை கொண்டு 'முதல் காரணி வாதத்தை' மறுக்க முயன்றிருக்கிறீர்கள். ஆனால் தற்போது உள்ள எந்த தியரியும் 'first cause' தேவையில்லை என்று கூறவில்லை. பிறகு எவ்வாறு 'முதல் காரணி வாதத்தை' மறுக்கிறீர்கள். அல்லது தற்போது உள்ள அறிவியலில் இதற்கு விளக்கமில்லை என்று கூறுகிறீர்களா ?

    ReplyDelete
  14. தேவை என்றும் கூறவில்லை.அப்படி முதல் காரணம் இருக்கவேண்டிய வசியமில்லை என்று அப்ப்திவின் காணொளியில் கூறப்பட்டு விட்டது.

    ReplyDelete
  15. உங்களுக்கு பிரியற மாதிரி சொல்றேன்

    அப்பதிவு வெறும் அறிவியல்.இப்பதிவு முதல் காரணி மறுப்பு பதிவு.
    இந்து புராணத்தில் இருந்து ஒரு கதை சொல்கிறேன்.
    படைப்புக் கடவுளான் பிரம்ம,ககும் கடவுளான் விஷ்னுவுக்கும் போட்டி யார் பெரியவர் என்பதில் ஏற்பட்டது.பதில் வேண்டி சிவனிடம் செல்ல அவர் ஒரு போட்டி வைக்க்கிறார்.பிரம்ம என் த்லையை அடைய வேண்டும்,விஷ்னு என் காலடியை அடைய வேண்டும் எவர் முதலில் அடைகிறீர்களா அவ்ரே வெற்றி பெற்றவர் என்றார்.
    பிரம்மாபறைவை ரூபம் கொண்ரு மேலே பறக்க விஷ்னு கீழே செல்ல ,இருவருக்கும் எதுவுமே தட்டுப் படவில்ல,யுக‌ யுகங்களாக சென்றும் தட்டுப் படவில்லை,பிரம்ம மேலே செல்லும் போது ஒரு தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது.அதனிடம் பிரம்மா இன்னும் த்லைக்கு எவ்வளவு தூரம் என்று கேட்க அது பல கோடி யுகங்கள் என்றது.
    த்லையை அடைய முடியாத பிரம்மா திரும்பி வந்து பூவை காண்பித்து கண்டேன் என்று கூற சிவன் அவரை ச்பித்ததால் அவ்ருக்கும் பூமியில் கோயில்,வழிபாடு இல்லாமல் போனதாக் சொல்லும் கதை உண்டு.
    இக்கதை இதற்கு பொருத்தமாக கால்க் கண்க்கீடுகள் கூட ஒத்து வருவதால்
    இத்னை ஏற்றுக் கொள்ளவும்.
    http://in.answers.yahoo.com/question/index?qid=20090310214336AAWi8nj

    ReplyDelete
  16. உலக முழுதும் வழங்கும் படைப்புக் கதைகள்.
    http://www.gly.uga.edu/railsback/CS/CSIndex.html

    ReplyDelete
  17. This Maori story explaining the orgin of nature and humanity was compiled by Sir George Grey in the 1840's and 1850's when he was British governor of New Zealand. Faced with the need to communicate with Maori tribes then in rebellion against British rule, Grey compiled the tales to which many chiefs aluded in their negotiations with him. Grey's compilation was published in Maori in 1854 and in English in 1855.

    *****************************
    இங்கேயும் வானமும் பூமியும் சேர்ந்திருந்து பிரிந்தது.இதோ பெரு வெடிப்பு கொள்கை.

    The Separation of Heaven and Earth
    *************************

    All humans are descended from one pair of ancestors, Rangi and Papa, who are also called Heaven and Earth. In those days, Heaven and Earth clung closely together, and all was darkness. Rangi and Papa had six sons: Tane-mahuta, the father of the forests and their inhabitants; Tawhiri-ma-tea, the father of winds and storms; Tangaroa, the father of fish and reptiles; Tu-matauenga, the father of fierce human beings; Haumia-tikitiki, the father of food that grows without cultivation; and Rongo-ma-tane, the father of cultivated food. These six sons and all other beings lived in darkness for an extremely long time, able only to wonder what light and vision might be like.

    Finally the sons of Heaven and Earth decided something must be done. Tu-matauenga, the father of fierce human beings, urged his brothers to slay their parents. However, Tane-mahuta, the father of the forests and their inhabitants, argued that they should separate their parents, making Rangi the distant sky over their heads and Papa the earth close to them like a mother. After long debate, the brothers agreed to this plan, except for Tawhiri-ma-tea, the father of winds and storms, who was distraught at the idea of separating their parents. The other brothers nonetheless proceeded with their plan.

    Rongo-ma-tane, the father of cultivated food, rose and struggled to separate his parents, but he could not do it. Tangaroa, the father of fish and reptiles, also struggled but could not tear them apart. Haumia-tikitiki, the father of food that grows without cultivation, had no better luck at separating their parents. Tu-matauenga, the father of fierce human beings, likewise failed. Tane-mahuta, the father of the forests and their inhabitants, slowly rose up and struggled, but with little success. Then he put his head against the earth and, with his feet against the skies, slowly pushed them apart. His parents cried out in anguish, asking how their sons could do this, but Tane pushed and pushed until the sky was far above. As light spread across the earth, the multitude of humans that Rangi and Papa had parented were revealed.

    Tawhiri-ma-tea, the father of winds and storms, was furious that his brothers had so cruelly separated their parents and thrust their father away. Tawhiri-ma-tea followed his father and hid in the sky and plotted his revenge. Soon he sent down storms and squalls and fiery clouds and hurricanes to punish his brother Tane-mahuta, the father of the forests and their inhabitants, breaking off the tall trees and leaving the forests in shambles. Likewise the storms swept down on the oceans of Tangaroa, the father of fish and reptiles, and piled up waves and generated great whirlpools. Tangaroa, frightened by the havoc in oceans, dove deep to escape Tawhiri-ma-tea's wrath.

    ReplyDelete
  18. Tangaroa abandoned his two granchildren, the father of the fish and the father of the reptiles. The fish and reptiles were left not knowing what to do, and they debated how to escape the storm. Finally, the reptiles fled to the land and hid in the forests, and the fish fled for refuge to the sea. Tangaroa, angered at the reptiles' desertion and the forests' willingness to receive and protect them, now struggled with Tane-mahuta, the father of the forests and their inhabitants, who in turn fought back. Thus Tane provided the canoes, spears, and fish-hooks from the trees, and nets woven from fibrous plants, to capture the fish of Tangaroa's seas, and Tangaroa's waves attacked the shores of the forests, washing away the land and all the life it holds.


    Tawhiri-ma-tea, the god of winds and storms, also lashed out at his brothers Haumia-tikitiki, the father of food that grows without cultivation, and Rongo-ma-tane, the father of cultivated food, for their role in the separation of his parents and exile of his father. However, Papa, the earth-mother whom the brothers had taken as their home, clasped up Haumia-tikitiki and Rongo-ma-tane and held them close in her to save them from Tawhiri-ma-tea's fury.

    Only Tu-matauenga, the father of fierce human beings, withstood Tawhiri-ma-tea's wrath as the winds and storms attacked. Tu-matauenga was impervious, having planned the death of their parents and having been abandoned by his brothers on the Earth. When Tawhiri-ma-tea's gales finally subsided, Tu-matauenga began to plan his revenge on his cowardly and weak brothers. First he turned to Tane-mahuta, the father of the forests and their inhabitants, both because Tane had abandoned him and because he knew Tane's offspring were increasing and might ultimately overwhelm Tu-matauenga's human progeny. Taking the leaves of the whanake tree, he made them into snares and hung them in the forests, where he caught Tanes's offspring and subdued the forest. Then he took on Tangaroa, the father of the seas and its life, and with nets he dragged Tangaroa's children from the seas. With a hoe and basket he dug up the children of Haumia-tikitiki, the god of food that needs no cultivation, and Rongo-ma-tane, the god of cultivated food. He dug up all kinds of plants and left them in the sun to dry, to gain revenge on those two brothers.

    Tu-matauenga, the father of fierce human beings, thus consumed all his four brothers on Earth, and they became his food. Only one brother, Tawhiri-ma-tea, the god of winds and storms, remained unconquered, and to this day his storms attack human beings on both land and sea in revenge for the rending of Heaven and Earth.





    George Grey, 1956, Polynesian Mythology (ed. by William W. Bird): Christchurch, Whitcombe and Tombs Ltd., 250 p. (BL 2615.G843p 1956)

    ReplyDelete