Friday, April 15, 2011

ஏன் இராஜபக்சேவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்?


டைம் பத்திரிக்கை உலகின் உலகின் முக்கியமான் 100 மனிதர்கள் யார் என்பதற்கு ஒரு இணைய வாக்களிப்பு நடத்துகின்றது.இதற்கு பல பதிவர்கள் எதிர்த்து வாக்களிக்குமாறு பதிவிட்டு வேண்டுகோள் விடுத்தனர்.  தருமி அய்யவின் இது போன்ற பதிவில் ஒரு பின்னூட்டம் எதிர்த்து வாக்களித்தால்  தமிழ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்ததாகும் என்று ஒரு கருத்தை தெரிவித்தது.அது பற்றிய ஒரு ஒரு கருத்தாய்வு.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
____________
பல இந்தியர்களுக்கும்,பல் தமிழர்களுக்குமே இலங்கை பிரசினை பற்றி பல தகவல்கள் தெரியாது.அதனாலேயே அது குறித்து பேசுவதையே தவிர்த்து விடுவார்கள். பல பழைய திரைப்படங்களில் கதாநாயகனையும், எதிர்நாயகனையும் எளிதில் கண்டு கொள்ளும் விதத்தின் நடை உடை பாவனைகளை,அமைத்து இருப்பார்கள்.எதிர்நாயக‌ன் பார்த்தாலே பயப்படும் ,கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவராகவும், நாயகன் மென்மையான, நல்லவராகவும்  சித்தரிக்கப் படுவார்கள். ஆனால் சில படங்களில் யார் நாயகன்,எதிர் நாயகன் என்பதே மர்மம் ஆக் இருக்கும். இக்கால நிகழ்வுகளில் இது போன்ற சூழ்நிலையே நிலவுகிறது.

______________________

பொதுவாக இலங்கைத் தமிழர் பிரச்ச்னை என்றால் நம்முடைய புரிதல் என்ன?

1.இலங்கையின் அரசியல்மைப்பு சட்டம் மதசார்பானது,புத்த மதம்,சிங்கள‌ மொழிக்கு முனுரிமை தருகிறது.

2.அதிகார பக்ர்வு தமிழர்களுக்கு அளிக்கப் படவில்லை.

3. கல்வி வேலை வாய்ப்புகளில் சிங்களருக்கு மூனுரிமை அளிக்கும் தரமப் படுத்தல் போன்ற சட்டங்கள் அமல் படுத்தப் பட்டன. 

4.சிங்களர் தமிழ் பகுதிகளில் குடியேற்ற‌ப்பட்டு தமிழர்கள் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப் படுகின்றன.

5.இந்த சூழ்நிலையில் சிங்கள்,தமிழ் அரசியல்வாதிகள் இப்பிரச்சினையை  சுமுகமாக் தீர்க்க முயலாமல் அரசியல் இலாபத்திற்கு பயன் படுத்தியதால் இன ரீதியான பிளவு கூர்மைப்பட்டது. இது ஆயுதப் போராட்டமாக் உருவெடுத்தது,அபோதைய இந்திய அரசு ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது.

6.பல்வேறு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்து இனப் பிரச்சினை ச்கோதர யுத்தமாக் மாறியது.

7.இந்திய இராணுவம் இலங்கை சென்றதும், புலிகளுடன் போரிட்டதும் , முன்னாள் பிரதமரின் கொலையும் இப்பிரச்சினைக்கு இந்திய தமிழ்நாட்டில் எதிர்ப்பு தோன்ற காரணமானது.

8.சகோதர யுத்தம்,சிலபல குண்டு வெடிப்புகள் பல நாடுகளில் இப்பிரச்சினைக்கு இருந்த ஆதரவு குறைவதற்கு காரண்மாகியது.

9.அமைதிப்படை வெளியேறியதும் நிலவிவந்த சமாதான உடன்படிக்கை திரு ராஜபக்சே பதவியேற்ரதும் ,ரத்து செய்து யுத்தம் தொடுக்கப்பட்டது..இரு வருடங்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் ஆயுதம் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது..போரின் முடிவு,விளைவுகள் பற்றி பல வதந்திகளே உலவி வருகின்றன. 

10.இப்பிரசினையில் இன்னும் உள் பிரசினயாக ,இஸ்லாமிய தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழர்களின் சாதி முரண்பாடுகள் என்று இப்பிரச்சினைக்கு பல முகங்கள் உண்டு.  
____________
சரி இப்போது பதிவுக்கு வருகிறேன்.
நான் சிகப்பு எழுத்தில் எழுதி இருந்ததை மீண்டும் ஒரு முறை படியுங்கள். ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் மகாத்மா ஆகவோ,மனித் விரோதியாகவோ சித்தரிக்க முடியும்.உலகமய்மாக்குதலில் பொருளாதாரம்  மட்டுமே எல்லாவற்றுக்கும் ஆதார பிரச்சினை ஆகிவிட்டது. கொள்கை,சுதந்திர போராட்டம்,ஆக்கிரமிப்பு போன்றவற்றை எப்படி வேண்டுமானாலும் ஊடகங்களால் சித்தரிக்க முடியும்.

பொருளாதார ஆதிக்க சக்திகள் வளங்கள் உள்ள நாடுகளை தங்கள் கட்டுப் பாட்டில் வைக்க முயல்வதும்,இதற்காக பல ஆயுதக் குழுக்களை உருவாக்குவதும் ,நினைத்த நோக்கத்தை அடைந்துவிட்டால் அதனையே அழிப்பதும் இக்கால கட்டத்தில் நடைமுறையில் உள்ள விஷயம். தலிபான் உருவாகப் பட்டுது சோவியத் யூனியனை பல்வீனப் படுத்த. லிபியாவில் கடாஃபிக்கு எதிரான குழுவிற்கு உதவி செய்யப் படுகிறது. தனக்கு விசுவாசமான் ஆட்களையே(கட்சி) எல்லா நாடுகளையும் ஆள விரும்புகின்றன.இந்த விக்கி லீக்ஸ் தகவல்களில் கூட பல விஷயங்கள் வெளிவந்தன. 

இந்த தமிழ் ஆயுதக் குழுப் போராட்டத்திலுமே இப்படித்தான் ஏதாவது நடந்திருக்கும் என அனுமானிக்கலாம். 
___________________
இலங்கை அரசாங்கம் இறுதி போரில் பல நாடுகளின் ஆதரவை பெற்றது.இத்னால் பல போர்க் குற்றங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முயல்கிறது. தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை துடைத்து மனித உரிமைகலை பாதுகாகும் அரசு என்ற பெயரை பெற முயல்கிறது.
இந்த ஆதிக்க சக்திகள் மிக்வும் புத்திசாலிகள்.செய்துவிட்டு அப்படியா என்று கேட்பார்கள்.ஊடகங்களின் சக்தியை நன்கு பயன்படுத்துவார்கள்.இப்போது இலங்கையில் முதலீடுகளை ஈர்த்து ஒரு சந்தையாக மாற்றும் முயற்சியில் ஒரு தலை சிறந்த தேசப் பற்றுள்ள ,நிர்வாகத்திற்மையுள்ள ஒருமனிதருக்கு மீள் கட்டமைப்பு செய்ய உதவுதாக காட்ட வேண்டும்.

இதற்கு திரு இராஜப்க்சேவை ஒரு சிறந்த மனிதராக காட்ட வேண்டிய அவசியம் எழுகிறது.போரில் உதவி செய்த அனைத்து சக்திகளுக்கும் வாக்களித்த பலன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி பிரச்சினை இல்லாமல் நடக்க வேண்டும்.

இப்படி கட்டாயத்தில் இருப்பவர் என்ன செய்வார்?

1.சிங்களர்களுக்கு இனப் பெருமிதம் மட்டும் வழங்கி அவர்களை காக்க வந்த கடவுளாக் உருவ்கப் படுத்தி கொள்வார்.எந்த சிங்கள் நடுநிலை,எதிர்க் கட்சினரின் விமர்சனமும் சிங்கள தேசிய வாதத்திற்கு,பெருமிதத்திற்கு எதிராக கருதப் படும்.

2.தமிழர்களூக்கு அதிகாரப் பகர்வல் அளித்தால் ,ஒழுங்கான தேர்தல் என்றால் இவர் தமிழர்களாலும் ஆதரிக்கப் படுபவர் என்ற மாய தோற்றத்தை உடைந்து விடும்.போரினால் பாதிக்கப் பட்ட தமிழர்கள் நிச்சயம் இவரை ஆதரிக்க மாட்டார்கள். ஆகவே தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்க மாட்டார்.உரிமை கேட்டு எதிர்க்கும் தமிழர்கள் புலிகள் ஆக்கப் பட்டு தண்டிக்கப் படுவர்.

3. முதலீடுகளை ஈர்த்து மீள் கட்டமைப்பில் நாட்டை சுரண்ட ஆதிக்க சக்திகளுக்கு உதவி செய்வார்.
_______________________

இதில் நம் பங்கு என்ன?

சிங்களர்கள் அனைவருமே இனவாதிக்ள் அல்ல.சில சிங்கள அரசியல்வாதிகளின் செயலே இந்நிலைக்கு இட்டு சென்றது.

சிங்களர்,தமிழர் ஒற்றுமையாக வாழ இப்பிரச்சினையை சுமுகமாக் தீர்க்கும்  ஆட்சி வரவேண்டும். .இதற்கு ராஜப்க்சேவின் மனித புனிதன் என்ற முகமூடி கிழிக்கப் பட வேண்டும். இந்த பயங்கரவாதம் என்பது யார் உருவாக்கியதோ,ஆயுதம் வழங்கி பயிற்சி அளித்தார்களோ அவர்கள்தான் வெட்கப் படவெண்டும்.. அதே சக்திகள் இப்பிரச்சினையை தீர்க்காமல் அப்ப்டியே நீறு பூத்த நெருப்பாக வைத்து சமயம் நேர்ந்தால் பயன் படுத்தவும் திட்டமிடலாம்.புலிகள் குறித்த பயம் இருக்கும் வரையில் மட்டுமே திரு ராகஜப‌க்சே நாயகன்.. இப்போது இலங்கை தமிழரின் உரிமைகளை மறுக்கும் ராஜபக்சேவை விமர்சிக்க தயக்கம் அவசியமில்லை.

போரில் வென்றதால் மட்டும் தமிழர்களின் நியாய‌மான் உரிமைகளை மறுக்க முடியாது..ஏதோ தமிழர்கள் என்ப்தால் ஆதரிக்கவில்லை,தமிழர்களில் நிலவி வந்த சாதிக் கொடுமை,இஸ்லாமிய தமிழரை துரத்தியதும் கண்டிக்க பட வேண்டியவைகளே. இப்பிரச்சினை தீர்க்கும் போது இவையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களே. 

இணையத்தால் உலகின் எவ்விடத்திலும் நடக்கும் ஒரு செயலுக்கு நம் கருத்தை நம்மை பாதிக்காத வகையில் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பை கூட செய்ய மாட்டோம் என்றால் என்ன சொல்வது ? இக்கவிதை ஞாபகம் வருகிற‌து..

என் அண்டை வீட்டு யூதனை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் யூதன் இல்லை,
என் எதிர் வீட்டு கம்யுநிஸ்டை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை,
அடுத்த நாள்
என்னையும் இழுத்து சென்றார்கள்
ஏன் என்று கேட்க நாதி இல்லை.


மார்ட்டின் நிமோலியர்1892–1984) 






7 comments:

  1. ஈழம் குறித்து நானும் எழுதியுள்ளேன். ஆனால் இந்த பதிவை படித்து முடித்ததும் எனக்குள்ளே சற்று வெட்கமாக உள்ளது. நிச்சயம் நிறைய விசயங்களை நீங்கள் படித்து இருக்க வேண்டும். நிதானமான புரிதல்களை தெளிவாக எடுத்து எழுதியிருக்கீங்க.
    கூகுள் பஸ்ஸில் இணைக்கின்றேன்.

    ReplyDelete
  2. என்னையும் இழுத்து ஒரு நாள் இழுத்துச் செல்வார்கள் அப்போது ஏன் என்று கேட்க நாதி இருக்காது. எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும் எஸ் ஆர்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு தலைப்பும், குறிப்பாக எனக்கு பிடித்த தில்லான பார்ட்டியும் .....

    நிறைய விசயங்கள்..........

    உங்களின் அக்கறைகள் வியக்க வைத்துள்ளது.

    ReplyDelete
  4. மொத்த நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் தொகுத்து short and simpleஆக கொடுத்த விதம் நன்று.

    //ஆனால் இந்த பதிவை படித்து முடித்ததும் எனக்குள்ளே சற்று வெட்கமாக உள்ளது.//

    இதில் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கு, ஜி. உங்க எழுத்து மேலும் விபரங்களை மணிக் கணக்கில் அறிந்து கொள்ள பெயர் சொல்லி நிற்கும். சார்வாகன் கொடுத்தது in a nutshell. இரண்டுமே பிடித்திருக்கிறது .

    ReplyDelete
  5. நண்பர் ஜோதிஜி,தெக்கிட்டன்
    ராஜபக்சே அரசு உஅலக் அரங்கில் நல்லவன் போல் காட்ட நடக்கும் நாடகமே இது. இந்த நியாயமாக் நடக்கும் என்று நம்பவில்லை. நாஜபக்சே இங்கிலாந்து சென்றபோது தமிழர்களின் போராட்டத்தால் பல்கலைகழக உரை ரத்து செய்யப் பட்டு அவமானத்தோடு திரும்பியதற்கு ,இந்த டைம்ஸ் தேர்தல் மூலம் மக்கள் ஆதரவு உண்டு என காட்டும் ஒரு முயற்சி.
    இத்தளத்திற்கு சென்று பார்த்தாலே அரசாங்கமே ஏற்பாடு செய்து பரப்புரை மேற்கொள்வது தெரியும்.
    சிலர் தமிழில் கூட ஆதரவாக எழுதுவதும்,ராஜபக்சே ஆதரவாளர்களின் புலி பயமும் நகைசுவையாக இருக்கும். இவ்வளவு பயம் இருப்பவர்கள் நியாயமாக அரசியல அமைப்பு சட்டத்தை திருத்தி பாரபட்சமற்ற அதிகாரப் பகர்வல் செய்ய் வேண்டியதுதானே.
    நண்பர் அருள் பதிவில் அம்னெஸ்டி அமைப்புக்கு கடிதம் அனுப்புவது பற்றி குறிப்பிட்கிறார்.அனுப்புமாறு வேண்டுகிறேன்
    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html
    நாம் எத்ற்கு வெட்கப் படவேண்டும் ஜோதிஜி!!!!
    போராட்டத்தின் துரோகிகளே வெட்கப் படவேண்டும்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு நண்பரே. நானும் ராஜபக்சேவை எதிர்த்து வாக்களித்தேன். இணைய நண்பர் ஒருவர் சொன்னதுபோல refresh செய்து திரும்பத்திரும்ப பலமுறை வாக்களித்தேன்.ஆனாலும் எதிராக இரண்டு ஓட்டு ஏறும்போது ஆதரவாக 10ஓட்டு அதிகமானது.

    இறுதியாக நீங்கள் குறிப்பிட்ட கவிதையை எழுதியது யார் என்று தெரிந்தால் குறிப்பிடவும்.

    ReplyDelete
  7. வணக்கம் தோழர் வானம்,
    எனக்கும் இந்த வாக்கெடுப்பு போலி என்றே தோன்றுகிறது.ஒரு விஷயம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவேளை 1:10 விகிதம் உண்மையென்றால் இத்னை ஏற்பாடு செய்தவர்களுக்க்ய் நம்து எதிர்ப்பின் வலிமை காட்டப்படும் அல்லவா!!!!.உண்மையில் வென்றவர்கள் நாம் அல்லவா!!!!.

    ராஜபக்சே பதவியில் இருக்கும் வரை சுமுகத் தீர்வு வராது.புலி பூச்சான்டி காட்டிக் கொண்டே பதவியுல் நீடிக்க முயல்வதையும், அரசியல் தீர்வை கூறியபடி வழங்காததையுமே பகிரங்கப் படுத்த வேண்டும்.

    அந்த கவிதையை எழுதியவர் மார்ட்டின் நிமோலியர்1892–1984) என்ற கிறித்த்வ போதகர்.ஹிட்லரை எதிர்த்து போராடியதால் சிறத் தண்டனை அனுபவித்தவர்.அவர் பற்றிய ஒரு சுட்டி.

    http://en.wikipedia.org/wiki/First_they_came%E2%80%A6

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete