Bye!!! Bye!!!!
சத்யநாராயண ராஜூ என்ற சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா. 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, , ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா(1838_1918) 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர் ஒரு சுஃபி துறவி என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவினார், அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார்.
சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.இவர் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று(24/4/2011) காலை மரணம் அடந்தார்.
சரி இப்பதிவில் நாம் சொல்ல வருவது என்ன?
1.மனிதனாக பிறந்த யாரும் இறப்பது இயல்பே. இவருடைய மரணத்திற்கு பின் நடை பெறும் நிகழ்வுகளில் அரசு கவனம் செலுத்தத வேஎண்டும்.
2. பெரும்பாலும் இம்மாதிரி மதஸ்தாபகர்களின் மறைவுக்கு பிறகு வாரிசுப் போட்டி ஏற்படுவது வரலாற்று ரீதியாக உண்மை.அதிலும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபக்கமும் சீடர்கள் ஒரு புறமும் நின்று சச்சரவு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான உண்மை. இதில் அரசு முக்கிய பங்காற்றி ,சாயிபாபா நிறுவனத்தை,அதன் சொத்துகளை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாக்க வேண்டும்.
3. பல்கலை கழகம்,மருத்துவமனையில் இலவச கல்வி,சேவை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
4. இது போன்ற அனைத்து மத ஆன்மீக குருக்களின் மறைவுக்கு பிறகு சொத்துகளை அரசு கையகப் படுத்த சட்டம் கொண்டுவரவேண்டும்.அனைத்து மத அமைப்புகளின் வருமானங்கள் கண்கானிக்கப் படவேண்டும்.வருமான வரி செலுத்த வகை செய்ய வேண்டும்.
சரி இவருடைய ஒரு பக்தர் தயாரித்த பரப்புரை காணொளி.17வது நிமிடம் வரும் விபூதி கொட்டும் அதிசயம் மலைக்க வைக்கிறது!!!!!!!!!.
No comments:
Post a Comment