கதை சுருக்கம்
முதல் உலக்ப் போர் நடந்த போது ஆட்டொமான் பேரரசு இங்கிலாந்து
,ஃப்ரான்ஸ் கூட்டு படைக்கு எதிராக ஜெர்மனியுடன் சேர்ந்து போரிட்டது. போரில் வெற்றி பெற பேரரசில் உள் நாட்டு கலவரத்தை தூண்டுவதும்,பேரரசை உடைத்து பங்கிடுவதுமே த்ங்களுக்கு வெற்றி கிடைக்க வழி என்று கண்ட பிரிட்டிஷ் அரசு தனது உளவுத்துறையிடம் இப்பணியை ஒப்படைக்கிறது.
அரெபியாவின் பல பகுதிகள் பேரரசின் பகுதிகளக இருந்தது.அப்பகுதியை மீட்டு அர்பிய அரசு அமைக்கும் முயற்சிகள் தோல்வியுற்றதும் ,இந்த போராட்டம் நீறு பூத்த நெருப்பாக இருப்பதையும் அறிந்த உளவுத்துறை இந்த போராட்டத்தை தூண்டி ஆட்டோமான் அரசை வீழ்த்தி விடலாம் என்று முடிவு செய்தனர்.
இதற்காக் லாரன்ஸ் என்ற உளவாளி தேர்ந்தெடுக்கப் பட்டார்.இவர் ஒரு எழுத்தாளர் அரபி,மொழியிலும் புலமை பெற்றவர்.இவர் மூலமாக மெக்காவின் இளவரசர் ஹாசிமைட் குலத்தை சேர்ந்த ஃபைசல் (இப்பொதைய ஜோர்டான் மன்னரின் சகோதரர்) என்பவருடன் லாரன்ஸ் மூலம் தொடர்பு கொள்கிறது.ஆட்டோமான் அரசை எதிர்த்டு பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்தால் அவர்களுக்கு ஆயுதம்,பணம் வழங்கப்படும்,போர் முடிந்த பின்
அர்சாட்சி ஃபைசலிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளிக்கப் படுகிறது.
சில அரபு இனக் குழுத் தலைவர்களை ஒன்றினைத்து முக்கியமான் துறைமுக நகரமான அகுபாவௌ கப்பற்றுகின்றனர். துறைமுகம் கட்டுப் பாட்டில் வந்ததால் ஆயுதங்கள் கிடைக்கின்ரனா..ஆட்டோமான் அரசு அமைத்த இரயில் பாதையை வெடி வைத்து தகர்த்து இரயிலில் வரும் செல்வங்களை கொள்ளயடிக்கின்றன்ர்.
இப்படியே டமாஸ்கள்(சிரியா) வரை கைப்பற்றப்படஉகிறது.ஆட்டோமான் பேர்ரசு அரசு போரில் தோற்று அதன் பல பகுதிகள் பிரிட்டன்,ஃப்ரான்ஸ் ஆதிகத்தில் வருகின்றது. ஃபைசல் சிரியா, பாலஸ்தீனம்(இப்போதைய இஸ்ரேல்,மேற்கு கரை மற்றும் ஜோர்டான்) தன் கட்டுப் பாட்டில் வருமென்று எதிர்பார்த்து .அவருக்கு கிடைத்தது ஹெஜாஸ் மட்டுமே.லாரன்ஸ் இங்கிலாந்து சென்று விடுகிறார்.
பிரிட்டன் திடிரென்று இபின் சவுத அப்துல் அஜீஸ் (இப்போதைய அரசர் அப்துல்லாவின் தந்தை) ஐ ஆதரித்து ஒன்று பட்ட சவுதிக்கு அவர் அரசராக உதவினர். இளவரசர் ஃபைசல் இராக்கின் மன்னர் ஆனார். அவர் சகோதரர் ஜோர்டான் மன்னர் ஆகிவிடுகிறார். ஜோர்டான் என்பது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி என்பதை இஸ்ரேல் பாலஸ்தீன பதிவில் படிக்கலாம். மத்தியக் கிழக்கு பிரச்சினைகளுக்கு அச்சாரமிட்டவர் அண்ணன் லாரன்ஸ் என்றால் மிகையாகாது.. லாரன்ஸ் 1935ல் ஒரு விபத்தில் மரண்மடைந்தார்.
படத்தில் லாரன்ஸ் என்னவோ விடுதலை போராட்டத்திற்கு உதவி செய்யும் நேர்மையான்,மனிதாபிமான் மிக்க வீரர் போல் காட்டியிருப்பார்கள்.மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் நினைத்தால் யரை வேண்டுமனாலும் மகாத்மா ஆகவோ மனித குல விரோதியாகவோ எளிதில் சித்தரிப்பார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்..
இந்த ஜேம்ஸ் ஃபாண்ட் படங்களுக்கு எல்லாம் இப்படம் முன்னோடி என்று சொல்லலாம். படம் பாருங்கள்,இது தொடர்பான வரலாறு படித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
_______
No comments:
Post a Comment