Monday, April 18, 2011

மனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா!!!!!!!!!!!!!!!!

இப்பதிவில் நகைச்சுவையாக இப்படி கூறியிருந்தேன்."இந்த இளைய பூமி கொள்கையாளர்கள் எல்லா விலங்குகளும் டைனோசார் உட்பட மனிதனுடன் படக்கப் பட்டன என்றே நம்புகிறார்கள்.டைனோசார்கள் எல்லாம் நோவாவின் வெள்ளப் பெருக்கில் அழிந்துவிட்டன என்ற கருத்தும் உண்டு.டைனோசார் அழிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் தோன்றியது என்றால் நம்மை பார்த்து ஒரு புன்முறுவல் புரிவார்கள்."

அத்னை உண்மையாக்கி சில பரப்புரைகள் வெளிவர ஆரம்பித்து விட்டது. இப்பதிவில் இத்னை பற்றிப் பார்ப்போம். முதலில் சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1.அறிவியல் மதத்தை கண்டு கொள்வதில்லை,ஆனால் மதங்கள் அறிவியலின் எந்த ஒரு புதிய கண்டு பிடிப்பும் மதத்தின் ஆதார விஷயங்களை பொய்யாக்கி விடக்கூடாடது என்பதில் மிக தெளிவாக இருக்கின்றனர்.

2. ஏதேனும் நன்றாக நிரூபிக்கப் பட்ட கருத்தாக இருந்தால் இது ஏற்கெனவே மத புத்தக்த்திலும் கூறப்பட்டது என்று வார்த்தை விளையாட்டு காட்டுவார்கள்.மத புத்தகத்தில் கூறப்படும் கருத்து நேரெதிராக இருந்தால் ,அப்போதைய புரிதல் தவறு இப்படித்தான் சரியாக அர்த்தம் கொள்ள வேண்டுமென்று கூறுவர்.

3.இந்த பரிணாமக் கொள்கை மட்டும் அபிரஹாமிய மத வாதிகளை மிகவும் தொல்லைப் படுத்துகிறது. இந்து மதத்தில் பரிணாமம்  குறியீடாக விஷ்ணுவின் அவதாரங்களில் கூற்ப்பட்டுவிட்டது,ஆகவே ஏற்பதில் ஆட்சேபனை இல்லையென்று கூறுகிறார்கள்.ஆபிரஹாமிய‌ மத படைப்பியல் கொள்கையின் படி இறைவன் ஆறு நாட்களில் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தார். ஆதம்,ஏவாள் இருவரை படைத்தார். இவர்களில் இருந்தே சந்ததி பலுகி பெருகியது..

ஆகவே பரிணாமக் கொள்கையை மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் மதவாதிகள். இதற்காக சில பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். அதன் அடிப்படை விஷயங்கள் சில‌

பரிணாமக் கொள்கையின் படி ஒரு செல் உயிரில் இருந்து, இயற்கைத்தேர்வு(Natural Selection) மற்றும் சிறு மாற்றத் தன்மை (Mutation) காரண‌மாக பல செல் உயிர்கள்,...பல உயிரினங்கள் தொன்றியது.இப்பரிமாணத்தில் சிறு பரிணாமம்,(Micro evolution)  பெரும் பரிணாமம்(macro evolution)  என்ற பிரிவுகள் உண்டு.
மேற்கூறிய ஒரு செல்லில் இருந்து அனைத்து உயிர்களும் தோன்றிய‌து என்பது பெரும் பரிமாணம்,ஒரு உயிரில் காலப் போக்கில் ஏற்படும் சிறு மாற்றங்கள் சிறு பரிமாணம் எனப்படுகிறது. 

பரிணாமம் பற்றி பல பதிவர்கள் தமிழில் விளக்கமான் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.இது குறித்து விளக்கம் வேண்டுபவர்கள் கீழ்க் கண்ட சுட்டிகளை  பார்க்கும் படி வேண்டுகிறேன்.ம்த புத்தகங்களின் மீதான ஆய்விலேயே ஈடுபாடு காட்டுவதால் பரிணாமம் பற்றி தேவை பட்டால் மட்டுமே எழுதுவேன்.இந்த சிறு பரிமாணம் நேரடியாக சோதித்து அறிய முடியும் என்பதால் மத வாதிகள் இதனை மறுக்க மாட்டார்கள்.தங்களுக்கு சாதகமாக ஆதம் 90 அடி(60 முழம்) உய்ரம் இருந்தார் என்பதை சிறு பரிமாணத்திற்கு ஆதரவாக காட்டி விடுவார்கள்.
______________
3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்..எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
____________

அவர் சந்த்தி உருவத்தில் குறைந்து வ்ருவதாக மதத்தில் அறிவியல் என்று கூறிவிடலாம். இது உண்மையா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்..

இப்போது மதவாதிகள் பெரும்பரிமாணத்தை மட்டும் மறுத்தால் போதும். சரி என்ன விமர்சன கேள்வி எழுப்புகிறார்கள்?.

அ) ஒரு செல் உயிர்கள் எப்படி தோன்றின? அறிவியலாளர்களால் ஒரு செல் உயிரையாவது படைக்க முடியுமா?

ஆ) உலகத்தின் வயதை கணக்கிட கார்பன் டேட்டிங் முறை பயன் படுத்தப் படுகிறது. இது 60,000 ஆண்டுகளுக்குள் மடுமே துல்லியமாக் இருக்கும்.பரிணாம விதிப்படி மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.ஆகவே சரியாக கணிப்பதில் சில சிக்கல்கள் உண்டு.

இ) பெரும் பரிணாமம் நெரடியாக உயிரினங்களில் சோதிக்க முடியாது.[சில நுண்ணுயிர்களில் பரிணாம மாற்றம் விரைவாக நடபப்தும் அது சோதித்தறியப் பட்டதையும் மத வாதிகள் ஏற்பதில்லை.]


ஈ) இறைவைன் படைத்த அனைத்து உயிரினங்களும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியே இருக்கின்றன.ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக் பரிணமிக்காது என்பதை மத வாதிகள் நிரூபிதால் மட்டுமே துல்லியமற்ற மத படைப்பியல் கொள்கையை காக்க‌ முடியும்.

இதில் இன்னொரு நகைச்சுவையான விஷயம் உண்டு.பரிணாமம் ஒருவேளை தவெறென்றால் கூட மத படைப்பியல் கொள்கை சரியாகி விடாது.ஆனால் ஒரு அளவிற்கு தாக்கு பிடிக்கலாம்.

உ) மத படைப்பியல் கொள்கையை வரையறுத்து பரிணாம கொள்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பரிணாமமே வாய்ப்பு அதிகமாக இருப்பதால்,பரிணாம்த்தை விமர்சிக்கும் மத வாதிகள் மத படைப்பியல் கொள்கையை விவாதிக்க மாட்டாட்கள்.

ஒரு வகை ஆப்பிரிக்க குரங்கினம்[ஹோமோ சேபியன் இடல்டு] பரிணாம வளர்ச்சி அடந்து மனித இனமாக [ஹோமோ சேபியன்] 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மாறியது என்பது பரிணாம கொள்கை.

இறைவன் (களி)மண்ணில் இருந்து மனித்னையும்(ஆதம்),மனிதனின் விலா எலும்பில் இருந்து மனுஷியையும்(ஏவாள்) படைத்தார் என்பது ஆபிரஹாமிய‌ மத படைப்பியல் கொள்கை.

_________

இவ்வளவும் அடிப்படை விஷயங்களே ,இப்போது பதிவுக்கு வருவோம்!!!!!!!!!!!!.


இந்த கொள்கை (ஈ)ன் படி இறைவன் படைத்த எல்லா உயிரினங்களும் சில சிறிய மாற்றங்களோடு அபப்டியே இருக்கின்றன என்று காட்டினால் தான் இறைவன் ப்டைத்தார் என்று கூற முடியும்.

டைனோசார் என்பது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன என்பது அறிவியலாளர்களின் கருத்து.கிறித்தவர்களின் ஒரு படைப்பியல் கொள்கை இளைய பூமி கொள்கை.அதாவது பூமி,பிரபஞ்சம் ,உயிரினங்கள் அனைத்தும் 6000 ஆண்டுகளுக்கு முன்(பைபிளின் படி) படைக்கப் பட்டது. இவர்கள்தான் டைனோசோரும்,மனிதனும் சம காலத்தில் வாழ்ந்தனர்,வாழ்கின்றன‌ர் என்று பரப்புரை செய்கின்றனர். 

இவர்கள் கூறுவது என்ன?

1.. டைனோசார் என்பது முற்காலங்களில் ட்ராகன்(Dragon) என்று அழைக்கப் பட்டது.

2. பலர் மார்க்கோ போலோ உட்பட இதனை பார்த்தாக ,சில சீன அரசர்கள் ட்ராகன் படை வைத்து இருந்ததாக்வும் கூறுகின்றன்ர்.

3.ஆப்பிரிக்க காங்கோ நாட்டின் இருண்ட காடுகளில் வாழும் பழங்குடியினர் இப்போதும் பார்த்தாக கூறுகின்றனர்.

4. பைபிளில்,குரானில் பல இடங்களில் டைனோசார் பற்றி கூறப்படுவதாகவும் கூறுகின்றனர். 

_________
இக்காணொளி கிறித்தவ இளைய பூமி கொள்கையாளர்களின் பரப்புரையாகும்.இவர்களின் கூற்றுகளை எப்படி முறுப்பது என்பதை பினூட்டமிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.

வாருங்கள் டைனோசாரின் கதை கேட்போம்.


No comments:

Post a Comment