Showing posts with label மனிதம். Show all posts
Showing posts with label மனிதம். Show all posts

Tuesday, May 17, 2011

தமிழர்களுக்கு நீதி கிடைகக‌ட்டும்




முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.இப்போர்க் குற்ற விசாரணை நேர்மையாக நடந்து தமிழர்களுக்கு நியாயமான் தீர்வு கிடைக்க வேண்டும். படிக்கும் அனைவரும் இது குறித்து ஏதாவது ஒரு முறையில் தமிழ‌க அரசுக்கும்,சர்வ தேசத்திற்கும் உங்கள் கருத்தினை
தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.நன்றி   

Friday, April 15, 2011

ஏன் இராஜபக்சேவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்?


டைம் பத்திரிக்கை உலகின் உலகின் முக்கியமான் 100 மனிதர்கள் யார் என்பதற்கு ஒரு இணைய வாக்களிப்பு நடத்துகின்றது.இதற்கு பல பதிவர்கள் எதிர்த்து வாக்களிக்குமாறு பதிவிட்டு வேண்டுகோள் விடுத்தனர்.  தருமி அய்யவின் இது போன்ற பதிவில் ஒரு பின்னூட்டம் எதிர்த்து வாக்களித்தால்  தமிழ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்ததாகும் என்று ஒரு கருத்தை தெரிவித்தது.அது பற்றிய ஒரு ஒரு கருத்தாய்வு.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
____________
பல இந்தியர்களுக்கும்,பல் தமிழர்களுக்குமே இலங்கை பிரசினை பற்றி பல தகவல்கள் தெரியாது.அதனாலேயே அது குறித்து பேசுவதையே தவிர்த்து விடுவார்கள். பல பழைய திரைப்படங்களில் கதாநாயகனையும், எதிர்நாயகனையும் எளிதில் கண்டு கொள்ளும் விதத்தின் நடை உடை பாவனைகளை,அமைத்து இருப்பார்கள்.எதிர்நாயக‌ன் பார்த்தாலே பயப்படும் ,கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவராகவும், நாயகன் மென்மையான, நல்லவராகவும்  சித்தரிக்கப் படுவார்கள். ஆனால் சில படங்களில் யார் நாயகன்,எதிர் நாயகன் என்பதே மர்மம் ஆக் இருக்கும். இக்கால நிகழ்வுகளில் இது போன்ற சூழ்நிலையே நிலவுகிறது.

______________________

பொதுவாக இலங்கைத் தமிழர் பிரச்ச்னை என்றால் நம்முடைய புரிதல் என்ன?

1.இலங்கையின் அரசியல்மைப்பு சட்டம் மதசார்பானது,புத்த மதம்,சிங்கள‌ மொழிக்கு முனுரிமை தருகிறது.

2.அதிகார பக்ர்வு தமிழர்களுக்கு அளிக்கப் படவில்லை.

3. கல்வி வேலை வாய்ப்புகளில் சிங்களருக்கு மூனுரிமை அளிக்கும் தரமப் படுத்தல் போன்ற சட்டங்கள் அமல் படுத்தப் பட்டன. 

4.சிங்களர் தமிழ் பகுதிகளில் குடியேற்ற‌ப்பட்டு தமிழர்கள் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப் படுகின்றன.

5.இந்த சூழ்நிலையில் சிங்கள்,தமிழ் அரசியல்வாதிகள் இப்பிரச்சினையை  சுமுகமாக் தீர்க்க முயலாமல் அரசியல் இலாபத்திற்கு பயன் படுத்தியதால் இன ரீதியான பிளவு கூர்மைப்பட்டது. இது ஆயுதப் போராட்டமாக் உருவெடுத்தது,அபோதைய இந்திய அரசு ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது.

6.பல்வேறு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்து இனப் பிரச்சினை ச்கோதர யுத்தமாக் மாறியது.

7.இந்திய இராணுவம் இலங்கை சென்றதும், புலிகளுடன் போரிட்டதும் , முன்னாள் பிரதமரின் கொலையும் இப்பிரச்சினைக்கு இந்திய தமிழ்நாட்டில் எதிர்ப்பு தோன்ற காரணமானது.

8.சகோதர யுத்தம்,சிலபல குண்டு வெடிப்புகள் பல நாடுகளில் இப்பிரச்சினைக்கு இருந்த ஆதரவு குறைவதற்கு காரண்மாகியது.

9.அமைதிப்படை வெளியேறியதும் நிலவிவந்த சமாதான உடன்படிக்கை திரு ராஜபக்சே பதவியேற்ரதும் ,ரத்து செய்து யுத்தம் தொடுக்கப்பட்டது..இரு வருடங்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் ஆயுதம் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது..போரின் முடிவு,விளைவுகள் பற்றி பல வதந்திகளே உலவி வருகின்றன. 

10.இப்பிரசினையில் இன்னும் உள் பிரசினயாக ,இஸ்லாமிய தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழர்களின் சாதி முரண்பாடுகள் என்று இப்பிரச்சினைக்கு பல முகங்கள் உண்டு.  
____________
சரி இப்போது பதிவுக்கு வருகிறேன்.
நான் சிகப்பு எழுத்தில் எழுதி இருந்ததை மீண்டும் ஒரு முறை படியுங்கள். ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் மகாத்மா ஆகவோ,மனித் விரோதியாகவோ சித்தரிக்க முடியும்.உலகமய்மாக்குதலில் பொருளாதாரம்  மட்டுமே எல்லாவற்றுக்கும் ஆதார பிரச்சினை ஆகிவிட்டது. கொள்கை,சுதந்திர போராட்டம்,ஆக்கிரமிப்பு போன்றவற்றை எப்படி வேண்டுமானாலும் ஊடகங்களால் சித்தரிக்க முடியும்.

பொருளாதார ஆதிக்க சக்திகள் வளங்கள் உள்ள நாடுகளை தங்கள் கட்டுப் பாட்டில் வைக்க முயல்வதும்,இதற்காக பல ஆயுதக் குழுக்களை உருவாக்குவதும் ,நினைத்த நோக்கத்தை அடைந்துவிட்டால் அதனையே அழிப்பதும் இக்கால கட்டத்தில் நடைமுறையில் உள்ள விஷயம். தலிபான் உருவாகப் பட்டுது சோவியத் யூனியனை பல்வீனப் படுத்த. லிபியாவில் கடாஃபிக்கு எதிரான குழுவிற்கு உதவி செய்யப் படுகிறது. தனக்கு விசுவாசமான் ஆட்களையே(கட்சி) எல்லா நாடுகளையும் ஆள விரும்புகின்றன.இந்த விக்கி லீக்ஸ் தகவல்களில் கூட பல விஷயங்கள் வெளிவந்தன. 

இந்த தமிழ் ஆயுதக் குழுப் போராட்டத்திலுமே இப்படித்தான் ஏதாவது நடந்திருக்கும் என அனுமானிக்கலாம். 
___________________
இலங்கை அரசாங்கம் இறுதி போரில் பல நாடுகளின் ஆதரவை பெற்றது.இத்னால் பல போர்க் குற்றங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முயல்கிறது. தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை துடைத்து மனித உரிமைகலை பாதுகாகும் அரசு என்ற பெயரை பெற முயல்கிறது.
இந்த ஆதிக்க சக்திகள் மிக்வும் புத்திசாலிகள்.செய்துவிட்டு அப்படியா என்று கேட்பார்கள்.ஊடகங்களின் சக்தியை நன்கு பயன்படுத்துவார்கள்.இப்போது இலங்கையில் முதலீடுகளை ஈர்த்து ஒரு சந்தையாக மாற்றும் முயற்சியில் ஒரு தலை சிறந்த தேசப் பற்றுள்ள ,நிர்வாகத்திற்மையுள்ள ஒருமனிதருக்கு மீள் கட்டமைப்பு செய்ய உதவுதாக காட்ட வேண்டும்.

இதற்கு திரு இராஜப்க்சேவை ஒரு சிறந்த மனிதராக காட்ட வேண்டிய அவசியம் எழுகிறது.போரில் உதவி செய்த அனைத்து சக்திகளுக்கும் வாக்களித்த பலன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி பிரச்சினை இல்லாமல் நடக்க வேண்டும்.

இப்படி கட்டாயத்தில் இருப்பவர் என்ன செய்வார்?

1.சிங்களர்களுக்கு இனப் பெருமிதம் மட்டும் வழங்கி அவர்களை காக்க வந்த கடவுளாக் உருவ்கப் படுத்தி கொள்வார்.எந்த சிங்கள் நடுநிலை,எதிர்க் கட்சினரின் விமர்சனமும் சிங்கள தேசிய வாதத்திற்கு,பெருமிதத்திற்கு எதிராக கருதப் படும்.

2.தமிழர்களூக்கு அதிகாரப் பகர்வல் அளித்தால் ,ஒழுங்கான தேர்தல் என்றால் இவர் தமிழர்களாலும் ஆதரிக்கப் படுபவர் என்ற மாய தோற்றத்தை உடைந்து விடும்.போரினால் பாதிக்கப் பட்ட தமிழர்கள் நிச்சயம் இவரை ஆதரிக்க மாட்டார்கள். ஆகவே தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்க மாட்டார்.உரிமை கேட்டு எதிர்க்கும் தமிழர்கள் புலிகள் ஆக்கப் பட்டு தண்டிக்கப் படுவர்.

3. முதலீடுகளை ஈர்த்து மீள் கட்டமைப்பில் நாட்டை சுரண்ட ஆதிக்க சக்திகளுக்கு உதவி செய்வார்.
_______________________

இதில் நம் பங்கு என்ன?

சிங்களர்கள் அனைவருமே இனவாதிக்ள் அல்ல.சில சிங்கள அரசியல்வாதிகளின் செயலே இந்நிலைக்கு இட்டு சென்றது.

சிங்களர்,தமிழர் ஒற்றுமையாக வாழ இப்பிரச்சினையை சுமுகமாக் தீர்க்கும்  ஆட்சி வரவேண்டும். .இதற்கு ராஜப்க்சேவின் மனித புனிதன் என்ற முகமூடி கிழிக்கப் பட வேண்டும். இந்த பயங்கரவாதம் என்பது யார் உருவாக்கியதோ,ஆயுதம் வழங்கி பயிற்சி அளித்தார்களோ அவர்கள்தான் வெட்கப் படவெண்டும்.. அதே சக்திகள் இப்பிரச்சினையை தீர்க்காமல் அப்ப்டியே நீறு பூத்த நெருப்பாக வைத்து சமயம் நேர்ந்தால் பயன் படுத்தவும் திட்டமிடலாம்.புலிகள் குறித்த பயம் இருக்கும் வரையில் மட்டுமே திரு ராகஜப‌க்சே நாயகன்.. இப்போது இலங்கை தமிழரின் உரிமைகளை மறுக்கும் ராஜபக்சேவை விமர்சிக்க தயக்கம் அவசியமில்லை.

போரில் வென்றதால் மட்டும் தமிழர்களின் நியாய‌மான் உரிமைகளை மறுக்க முடியாது..ஏதோ தமிழர்கள் என்ப்தால் ஆதரிக்கவில்லை,தமிழர்களில் நிலவி வந்த சாதிக் கொடுமை,இஸ்லாமிய தமிழரை துரத்தியதும் கண்டிக்க பட வேண்டியவைகளே. இப்பிரச்சினை தீர்க்கும் போது இவையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களே. 

இணையத்தால் உலகின் எவ்விடத்திலும் நடக்கும் ஒரு செயலுக்கு நம் கருத்தை நம்மை பாதிக்காத வகையில் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பை கூட செய்ய மாட்டோம் என்றால் என்ன சொல்வது ? இக்கவிதை ஞாபகம் வருகிற‌து..

என் அண்டை வீட்டு யூதனை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் யூதன் இல்லை,
என் எதிர் வீட்டு கம்யுநிஸ்டை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை,
அடுத்த நாள்
என்னையும் இழுத்து சென்றார்கள்
ஏன் என்று கேட்க நாதி இல்லை.


மார்ட்டின் நிமோலியர்1892–1984) 






Monday, April 4, 2011

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.



கிபி 1948ஆம் ஆண்டு வஎளியிடப்பட்ட மனித உரிமை பிரகடனத்தை இப்பதிவில் வெளியிடுகிறேன்.பிடிஎஃப் பிரதி வேண்டுவோம் இவ்விணைப்பில் பெற்றுக் கொள்லலாம்.கூடுமனவரை அனைவருக்கும் பகிருமாறு வேண்டுகிறேன்.






















Wednesday, March 16, 2011

பஹ்ரைன் போராட்டம் பற்றிய விவாதம்


 

பஹ்ரைனில் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது சவூதி மன்னர் ஆயிரம் பேரை கொண்ட இராணுவத்தை கடந்த திங்கள் கிழமைபஹ்ரைனுக்கு அனுப்பியுள்ளார் துபாயும் 500 பேரை கொண்ட படை ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிகின்றன  பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது இதன் பெரிய தீவு 55 கி.மீ நீளத்தையும் 18 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது இங்கு உள்நாட்டு மக்களை விடவும் வெளிநாட்டு மக்கள் அதிகம் வாழ்கின்றனர் இந்த நாட்டின் மக்கள் தொகை 12 இலட்சத்தி 35 ஆயிரம் என்ற மிகவும் சிறிய மக்கள் தொகையை கொண்டுள்ளது.

ஆனால் மக்கள் தொகையில் 54 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் இதில் இலங்கையர் , இந்தியர் பிலிபைன் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை அதிகம்  கொண்டுள்ளது. அதிகம் வெளிநாட்டவர்களை கொண்டுள்ளமையால் முஸ்லிம்களின் வீதம் 81.2 ஆக குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது கிறிஸ்தவர்கள் 8 வீதமும் ஏனைய மதத்தவர்கள் 9.8 வீதமும் உள்ளனர் இவார்களில் கணிசமான யூதர்களும் , இந்துக்களும் உள்ளனர் இந்தியர்கள் 3 இலட்சம் பேர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர்.
பஹ்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்‌டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.அவசரநிலை : பஹ்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...

Sunday, February 6, 2011

சூடான், எகிப்து என்ன நடக்கிறது?



கடந்த சில நாட்களாக செய்திகளில் அடிபடும் ஆப்பிரிக்க நாடுகள் சூடான் மற்றும் எகிப்து. இதனை பற்றி நமது பார்வை.

சூடான்

 ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கார்த்தௌம் ஆகும்
எண்ணெய் வளம் உடையது.

1956 வரை எகிப்துடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.அந்த ஆண்டே எகிப்திடம் இருந்து பிரிந்து சுதந்திர நாடாகியது.அரபு,நுபுய மஸ்லிம்கள் வடபகுதியிலும்,கிறித்தவ,ஆதிவாசிகள் தெற்கிலும் பெரும்பான்மை இனத்தவராக வசித்து வருகின்றனர். அரசாங்கம் வடபகுதி இஸ்லாமியர்களால்(4 கோடி) நடத்தப் பட்டதை தென் பகுதி மக்கள்( 1கோடி) ஏற்கவில்லை.

தென் பகுதி மக்கள் சுய நிர்ணய உரிமை கோரியதை அரசு இராணுவம் மூலம் அடக்க முயல் உள்நாட்டுப் போர் மூண்டது. 1955 முதல் 1972 வரை நடை பெற்ற முதல் சூடானிய போரில் 5 இலட்சம் மக்கள் மடிந்தனர்.அடிஸ் அபா ஒப்பந்தம் 1972ல் ஏற்பட்டது. கொஞ்ச நாள் அமைதி.வடக்கு மாறவில்லை தனது இன ரீதியான ஒடுக்குதல்களை தொடர்ந்ததால் மீண்டும் 1982ல் மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டது.

இது 2005 வரை தொடர்ந்தது.சுமார் 20 இலட்சம் மக்கள் இறந்தனர்,

ஒசாம பின் லேடன்.

தீவிரவாத இயக்கமான அல் கொய்தாவின் தலைவன் ஒசாம பின் லேடன் 19992 ல் சூடானில் அல்கார்டும் என்ற இடத்தில் தனது முகாமை அமைத்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.

அங்கிருந்து சவுதி மன்னர் ஃபாக்த் அவர்களை விமர்சனம் செய்ததால் சவுதி அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க சூடான் அரசை கேட்டு கொண்டது..
இதனைடையில் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்புக்கும் ஒசாமா உதவி செய்தார்..இந்த இயக்கம் 1995 ல் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கை கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்தது.இதனால்.சூடன் அரசின் மீதான,எகிப்து,சவுதி,அமெரிக்க அரசுகளின் அழுத்தம் அதிகமானது. 1996ல் அங்கிருந்து ஒசாமா ஆப்கானிஸ்தான் சென்று விட்டார். எகிப்திய ஜிஹாத் அமைப்பு தடை செய்யப் பட்டது.
இந்த அமைப்பு மறைவாக எகிப்தின் இஸ்லாமிய சகோதர்த்துவ  கட்சியோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது.
இ.ச்.கட்சிக்கு நைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் கிளைகள் உண்டு.இந்தோனேஷியா முதல் ஸ்பெயின் வரை உள்ள அகண்ட இஸ்லாமிய பேரரசு அமைப்பதே இவர்கள் நோக்கம்.
------
சூடான் பிரிவினை

திருப்பி சூடானுக்கு வருவோம். 2005ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.இடையே சூடான் அதிபர் ஃபஷீர் போர்க் குற்ற வாளியாக குற்றம் சாட்டப் பட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் படி 20011 ஜன‌வரியில் வாக்கெடுப்பு நட‌த்தி தென் சூடான் தனி நாடு ஆவதா இல்லையா என்று  தீர்மானிக்கப் படும் என்று முடிவெடுக்கப் க பட்டது.

20011ல் நடை பெற்ர வாக்கெடுப்பில் 95% மேலாக தென் சூடான் பிரிவதற்கு ஆத்ரவு கிடைத்தது. சீக்கிரமே தனி நாடு ஆகும் தென் சூடானுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.
பிரிவுக்கு காரணம் என்ன?

1.அரசாங்கம் வர சூடானியராலேயே நடத்தப் பட்டது.
2. இஸ்லாமிய ஷாரியா சட்டம் அமல் படுத்தப் பட்டது.இந்த சட்டம் அமலுக்கு வர இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் பங்கு மிக அதிகம்.
3.ஏண்ணெய் வளம் அதிகம் இருந்தும் தென் சூடான் எந்த முன்னேற்றமும் பெறவில்லை.

தென் சூடானின் போராட்டக் குழுக்கள் ஒரு இனத்தையோ,மதத்தையோ சேர்ந்தவர்கள் அலல,இருப்பினும் அடக்குமுறை அவர்களை ஒன்றினைத்தது.

http://en.wikipedia.org/wiki/Sudan

http://countrystudies.us/sudan/65.htm.

________

இப்போது எகிப்து நாட்டை பற்றி பார்ப்போம்.



எகிப்தின் வரலாறு

1953க்கு முன் மன்னர் ஆட்சி இருந்தது.1954ல் நடந்த புரட்சியில் திரு நாசர் ஆட்சிஅயி கைபற்றினார். சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கி மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்தார். இங்கிலாந்து,ப்ரான்ஸ்,இஸ்ரேல் எகிப்து மீது தாகுதல் நடத்தி சூயஸை தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

பிறகு ஐநா தலையீட்டில் ஆக்கிரமிப்பு விலக்கப் பட்டது. .1967ல் இஸ்ரேலுடன் நடந்த 6 நாள் போரில் எகிப்து தோவி அடைந்தது .எகிப்தின் சினாய் பிரதேசம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தது. 
  
தோல்விக்கு பொறுப்பேற்று நாசர் பதவி விலகினார்.அரபு தேசியமே மூச்சாக கொண்ட த்லைவர் நாசருக்கு பிறகு அன்வர் சதாத் பதவி ஏற்றார். இழந்த பிரதேசத்தை மீட்பதற்காக 1973ல் இஸ்ரேலுடன் நடந்த அக்டோபர் போரிலும் எகிப்து தோல்வி அடைந்தது.

சதாத் 1977ல் இஸ்ரேலுக்கு சென்று அமைதி பேசு வார்த்தை நடத்தினார்.இதனால் 1979ல் இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு விலகியது.இந்த ஒப்பந்தம் அரபு நாடுகளிடம் பகையை தோற்றுவித்தது. அமைதியை ஏற்படுத்திய அன்வர் சதாத் 1981ல் ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் பிறகு 1981ல் இருந்து 2011 வரை ஹோஸ்னி முபாரக் ஆண்டு வருகிறார்.இப்போது இவருடைய ஆட்சி எதிர்த்து போராட்டம் நடை பெறுகிறது.
 _____

இப்போது மக்கள் புரட்சி செய்வதாகவும்,அதற்கு பல் காரணங்கள் கூறப் பட்டாலும் இது இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவோடு இந்த போராட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதே உண்மை.இவர்களை பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 இது பல அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமிய பழமை வாஅத அமைப்பாகும்.
இஸ்லாமே சர்வ ரோஹ நிவாரணி என்ற கொள்கையுடையவர்கள்.குரன் மற்றும் ஹதிதுகளின் படி தனி மனித ,சமூக,நட்டின் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்று கூறுபவகள்.

1936ல் எகிப்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் பல நாடுகளுக்கும் பரவியது.சிரியாவில் 1982ல் இராணுவத்தால் ஒடுக்கப் பட்டது.எகிப்தில் தடை செய்ய பட்டாலும் தேர்தலில் சுயேச்சையாக வேட்பாளர்களை நிறுத்தி வந்தது.20% இடங்களை கடந்த தேர்தலில் கைப்பற்றியது.


இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசித்து 9/11 தாகுதலுக்கு கண்டணம் தெரிவித்து,பெண்கள் ஆடை விஷயத்தில் கண்டிப்பு காட்ட மாட்டோம் என்றும் கூறி வருகிறார்கள்.இர‌ண்டும் முரணாக உள்ளதே என்றால் அரசியலில் எல்லாம் சகஜம் என்பதே நிஜம்.
_____
சூடானின் அதிபர் பஷீர் இஸ்லமிய சகோதரத்துவ கட்சியை ஆதரிப்பவர்.ஹமாஸ்
கூட இதன் நட்பு இயக்கமே.
ஒரு வேளை இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?

1.இஸ்லாமிய சட்டம்(ஷாரியா) அமல் படுத்தப்படும்.

2.ஜன நாயகம் இருக்காது.

3.இஸ்ரேலுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகும்.போர் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.

4.ஆப்கானிஸ்தான் பாதையில் எகிப்து செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

5.இது பிற இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஊக்கமாக அமையும்.

6.அகண்ட ஆட்டோமான் பேரரசை திரும்பவும் அமைக்கும் முயற்சிக்கு அமெரிக்க உட்பட்ட நாடுகள் நிச்சயம் தடைக்கல்லாக இருக்கும்.  

மனித சமுதாயத்தை வழிந்டத்த இரு அருமையான கொள்கைகள் பல்வேறு சோதனைக்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப் பட்டு பல நாடுகளின் அமல் படுத்தப் பட்ட்டு வருகின்றது. அவை 

1.மத சார்பற்ற மனித உரிமை சட்டங்கள்

2.மக்களாட்சி

இதனை விட எந்த முறையும் சிறந்ததாக வரலாற்றில் காட்ட முடியாது.இவற்றிலும் சில குறைகள் இருந்தாலும் மக்கள் கையில் உரிமை இருப்பதால் ஆட்சியாளரை மக்கள் மாற்ற முடியும்.
ஷாரியா சட்டம் 25 இலட்சம் மக்களை சூடானில் கொன்று விட்டு எகிப்திற்கு வர பார்க்கிறது.என்ன நடக்குமோ?.பொறுத்திருந்து பார்ப்போம்.





  

Friday, January 14, 2011

மத வன்முறை வரலாறு புத்தகம் 1


மதங்களை நாம் விமர்சிப்பது மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்பதை உணர்த்தவும் அதன் எல்லைகளை அறிந்து கொள்ளவற்கே. எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்றே. இறைவனை பற்றி ஒரு கொள்கையாக்கமும் அதனை நிறுவ பல புத்தகங்களும்,அழிவில்லாப் பெரு வாழ்வை அடைய கூறப்படும் வழிமுறைகளுமாக எல்லா மதங்களும் ஒன்றே.மக்கள் வாழும் இடம் ,சூழ்நிலை காரணமாக சில வித்தியாசமான‌ நடைமுறைகள் மதங்களுக்கு உண்டு.

ஏன் மதத்தின் எல்லைகளை அறியவேண்டும் என்று கேட்கும் நண்பர்களுக்காக எல்லை மீறி வன்முறை வெறியாட்டம் ஆடிய ஒரு வரலாற்று கால கட்டத்தை பற்றி இப்பதிவு எழுதுகிறேன்.

நமக்கு கிறித்தவம் என்றாலே அன்பின் திரு வடிவம்,அமைதியின் மறு வடிவம் என்று ஒரு பிம்பம் உண்டு. ஆனால் வரலாறு அவ்விதமாக கூறவில்லை .இந்த அன்பு,அமைதி பேசும் மத வாதிகள் யூதர்கள்,பிற பிரிவு கிறித்தவர்கள், பிற மதத்தினர், மற்றும் சூனியக்காரர்கள்(அப்படி நம்பப் பட்டவர்களை) கூட்டம் கூட்டமாக பல நூற்றாண்டுகளாக கொன்று குவித்தார்கள். 

இந்த மத வன்முறைகளில் மிக கொடுமையானது ஸ்பானிஸ் மத வன்முறை(1478_1614).இதை பற்றிய ஒரு புத்தகம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்கவும்,பகிர்ந்து கொள்ளவும்.

இன்னும் ஒரு புத்தகத்தில் சூனியக் காரர்களை எப்படி விசாரணை செய்வது ,தண்டிப்பது என்றெல்லாம் ஒரு செய்முறைன விளக்க்மே போட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் செய்வதற்கு இப்போது உள்ள கிறித்தவர்ம் எப்படி பொறுப்பாக முடியும் என்றும்,கிறித்தவ மதத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவே இப்படி எல்லாம் நடந்தது என்று கூறும் நண்பர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.
கொள்கையில் அன்பிருப்பதாக நீங்கள் நம்பும் ஒரு மத‌மே இப்படி மத அடிப்படைவாதிகளால் வழி நடத்தப்படும் வாய்ப்பு மதம் சார்ந்த அரசியலில் அதிகம் என்பதையே புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

இந்த புதகங்களை படித்து மதத்தின் மீதான‌ நம்பிக்கை எல்லை மீறும் போது 
மதவாதி மிருகமாக மாறுவான் என்பதை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.