Friday, April 15, 2011

வரலாற்று இயேசுவைத் தேடி 3


இந்த ஆவணப் படத்தில் சில ஆதாரங்களை கூறி இயேசு என்பவர் உண்மை என்று கூறிகிறார்கள்.சில விஷயங்களை கருத்தில் கொள்வது நல்லது.
குரான்,புதிய ஏற்ற்பாட்டில் குறிப்பிடப் படும் திரு இயேசு என்பவர் உண்மையில் வராலாற்றில் வாழ்ந்தாரா என்றே ஆய்ந்து வருகிறோம்.

இந்த கீழ்க்காணும் 3விஷயங்களை நிரூபிக்க முடியாது ஏனெனில் அறிவியலுக்கு விரோதமான் விஷயங்களாக இருக்கிறது.

1.இந்த புதிய ஏற்பாடு,குரான் படி இவர் கன்னி மேரியிடம் பிறந்தார்.
இத்ற்கு சில பிரச்சாரகர்கள் இவர் க்ளோனிங் முறையில் பிறந்து இருக்கலாம் என்று விளக்கம் கூறுகிறார்கள். 

2. பல் அற்புதங்க்ள் செய்தார்.

3. புதிய ஏற்பாடு மட்டும் இவர் சிலுவையில் அறையப்பட்டு,இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார் என்று கூறுகிறது.குரான் சிலுவையில் இறக்கவில்லை அவருக்கு பதிலாக வேறொருவர் கொல்லப் பட்டதாக் கூறுகிறது.
______________
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
________________

இஸ்லாமியர்க்ளுக்கும் இயேசுஈஸா) ஒரு முக்கியமான இறைத்தூதர். கிறித்தவ நாடுகளில் கூட தடை செய்யப் படாத டாவின்சி கோட் திரைப் படம், இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக் சொல்லவேண்டுமென்றால்

கிறித்தவம்+முகம்மது=இஸ்லாம்
இஸ்லாம்‍‍‍‍ ‍ - முகமது=கிறித்தவம்

இஸ்லாம் திரு பால் என்பவரே இயேசுவை இறைவனின் மகனென்ற கொள்கையாகம் செய்தாரென்று கூறுவதும்,கிறித்தவர்கள் குரானின் ஈஸா  புதிய ஏஎற்பாட்டின் கூறிவருவதையும் இம்மதங்களின் முரண்பாடுகளாக புரிந்து கொள்ளப் படவேண்டும்.


_________

மேற்கூறிய மூன்று விஷயங்கள் நிரூபிக்க முடியாது.

அப்படியென்றால் நம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்.

1.இயேசு என்பவர் அந்த கால கட்டத்தில்(கொஞ்சம் முன் பின் பரவாயில்லை) பிறந்தாரா? இது சமகால நிகழ்வுகளாக புதிய ஏற்பாட்டில் கூறப்படும் விஷயங்கள் அக்கால கட்டத்தில் சம்பவித்ததா?

2.இயேசுவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பிற புத்தகங்களில் குறிப்பிடப் பட்டு உள்ளதா? அபோகிரிஃபா என்னும் பழைய,புதிய ஏற்பாட்டில் சேர்க்கப் படாத மத புத்தகங்களில் இவ்வரை பற்றி சில குறிப்புகள் உள்ள்ன.அவற்றை பற்றி வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

3.உணைமையாக வாழ்ந்தவரென்றால் இயேசுவின் மரணம் எப்படி சம்பவித்தது?

4.உயிரோடு மீண்டும் வந்தாரென்று நம்பிக்கை எப்போது இருந்து வழக்கத்தில் இருக்கிறது?

5. கிறித்தவம் உண்மையில்,வரலாற்று ரீதியாக எப்போது ஆரம்பித்தது?

6. புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் எப்போது எழுதப் பட்டது? 

7.திரு பால் பற்றி வரலாற்றில் நன்றாக குறிப்பிடப் பட்டு உள்ளதால் இவர்
பற்றிய பல தகவல்களை ஆய்வு செய்தல்.ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும் பாலின் கடிதங்கள் புதிய ஏற்பாட்டு புத்தகங்களுக்கு முந்தியது என்ற கருத்தே வலுப்பெற்று வருகின்றது. பாலின் கடிதங்களில் புதிய ஏற்பாட்டு ஆகமங்களில்(மத்தெயு,மாற்கு,லூக்கா மற்றும்,யோவான்) குறிப்பிடும் சம்பவங்களை பற்றி எதுவுமே எழுதவில்லையென்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

8.புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் சில சம்பவங்கள்,செயல்கள் பற்றிய முரண்பாடுகள்.

9. புதிய ஏற்பாடி இயேசுவை மனித குமாரன்(!) என்று கூறுவதும் குரான் மிர்யமின்(மேரி) மக்னே அழைப்பதும் முரண்பாடே.

10.புதிய ஏற்பாட்டில் இயேசு தனனை இறவைன் அவதாரம் என்று ஐயந்திரிபர கூறுகிறாரா? தனனை இரைவனின் மகன் என்று உண்மையிலேயே கூறுகிறாரா?அல்லது மொழி பெயர்ப்பு,கொள்கையாக விளக்கங்லில் மாற்றி விட்டார்களா?காணொளி பாருங்கள்.இதில் நாம் மேற்கூறிய விஷயங்களை விவாதித்து உள்ளார்கள். இத்தொட பதிவில் இன்னும் ஒரு முன்னுரை பகுதியிலேயே இருக்கிறோம் என்பதை மட்டுமே இபோது சொல்ல‌ முடியும். இத்தொடர் குறித்த உங்களுடைய கருத்துகளை,தேடல்களை பதிவிட்டால்(அல்லது பின்னூட்டம்)  இத் தொடர் பதிவை மேம்படுத்த உதவியாக இருக்கும்.3 comments:

  1. நண்பர் சுவனப் பிரியன்
    வணக்கம்
    சாவுக்கடல் சுருள்கள் பற்றியும் எழுத வேண்டியுள்ளது.அது பற்றியும் பதிவில் வரும்.உங்கள் பதிவில் இருந்து சில விவ‌ரங்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.நன்றி

    ReplyDelete