Saturday, April 9, 2011

குரான் ஹதித் கதைகள் எங்கிருந்து வந்தது?




பைபிளில் பல கதைகள் உண்டு.குரானிலும் சில கதைகள் அதே விதமாகவோ அல்லது மாற்றமாக்வோ கூறப்படுவது உண்டு.பைபிள் என்பது பழங்கால்த்தில் வழங்கி வந்த பல் நூல்களில் ஒரு பகுதியை தொகுத்தே இப்போதைய பைபிள் தொகுக்கப்பட்டது என்பதை காயீனின் மனைவி பதிவில் கூறியதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும்.

அது போலவே ஒவ்வொரு குரான் உள்ள பல் கதைகளை அப்புத்தகங்கள்  ஏதாவது ஒன்றில் அப்படியே காட்ட முடியும் என்றால் எப்படி இருக்கும்?

இந்த் காணொளியில் நன்றாக விளக்கி இருக்க்கிறார்கள்.ஏதாவது விளக்கம் வேண்டுமானால் அளிக்கிறேன்.  இபதிவில் சொல்லாத வேறு எங்குமே காட்ட முடியாத குரான் கதை உண்டா என்று தேடிக் கொண்டு இருக்கிறேன்.நண்பர்கள் உதவலாம்.கண்டு மகிழுங்கள்.


13 comments:

  1. அரபி தூதர்கள் சாலிஹ்,ஹூத் இவர்கள் ஆது,தாமுத் கூட்டங்களுக்கு அனுப்ப பட்டவர்கள். இவர்கள் கதை பைபிள், பிற புத்தகங்களிலும் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன்.
    http://religionresearchinstitute.org/quran/analysis.htm

    ReplyDelete
  2. இஸ்லாமிய நம்பிக்கையின் படி, முகமது என்பவர் இறைவனின் தூது செய்தியை கொண்டு வந்தவரே அன்றி வேறில்லை.அவருக்கென்று எந்த தனிப்பட்ட சலுகைகளும் கிடையாது .அவரும் ஐவேளை தொழ வேண்டும். ஆனால் முகமது மட்டும் எப்படி நான்கு மனைவிகளே அனுமதிக்க பட்ட நிலையில் 12 பெண்களை மணம் செய்து கொண்டார். இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் இஸ்லாமியர்கள் வாய் திறப்பதில்லையே.

    ReplyDelete
  3. /ஆனால் முகமது மட்டும் எப்படி நான்கு மனைவிகளே அனுமதிக்க பட்ட நிலையில் 12 பெண்களை மணம் செய்து கொண்டார். இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் இஸ்லாமியர்கள் வாய் திறப்பதில்லையே./
    நண்பர் மது ,
    திரு முகமது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதால் இக்கால நடைமுறை கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. .இது விஷயமாக பலர் விளக்கம் அளித்துள்ள்னர்.அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ அது வேறு விஷயம்.திரு பிஜே அவர்களின் தளத்தில் இத்ற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/

    இறை மறுப்பாளராக மதவாதிகளின் ஆதாரங்களை சரியா என ஆராயும் பணியில் கூடுமான்வரை தனி மனிதர்கள் மீது விமர்சனம் வேண்டாமே.
    மத புத்தகங்களில் சொல்லப் படும் விஷயங்களுக்கு வரலாறு ரீதியாக சான்றுகள் உண்டா என்றே கேள்வி எழுப்பிகிறேன்.

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி..

    ReplyDelete
  4. // இறை மறுப்பாளராக மதவாதிகளின் ஆதாரங்களை சரியா என ஆராயும் பணியில் கூடுமான்வரை தனி மனிதர்கள் மீது விமர்சனம் வேண்டாமே.
    நண்பர் சார்வகன், இது ஒரு தவறான கருத்து என்பது என் எண்ணம். தற்சமயம் நீங்கள் குரானை பற்றி எழுதி வருகிறீர்கள். நீங்கள் முன் வைக்கும் ஒரு வாதம், குரான் அதற்கு முற்பட்ட யூத, பாகன், கிறிஸ்துவ மத கதைகளை இறைவனே கூறியது போல் கூறுகிறது, என்பது. இந்த வாதத்தின் இயல்பான அடுத்த கட்டம் என்ன? எதற்க்காக குரானை உண்டு பண்ணிய முகமது இதை செய்ய வேண்டும் என்பது தானே? முகமது அரபு மக்களை ஒன்று திரட்டி ஒரு சாம்ராஜ்யம் அமைக்க இந்த குரானை ஒரு கருவியாக உருவாக்கினார் என்ற ஒரு முடிவுக்கு தானே உங்கள் வாதம் நம்மை இட்டு செல்கிறது. குரான் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்ற கேள்வி, குரான் முகமது செய்த ஒரு machiavellian விஷயம் என்ற பதிலுக்கு தானே நம்மை அழைத்து செல்கிறது? இந்த பதில் மேலும் கேள்விகளை எழுப்புகிறது. முகமது தம் மக்களின் நலனுக்காக செய்தாரா அல்லது தன் நலனுக்காக இதையெல்லாம் செய்தாரா? மக்களுக்கு தாம் இட்ட கட்டளையை மீறி 12 திருமணம் செய்து கொண்டது, தாமே அரசாண்டது போன்றவற்றை வைத்து பார்க்கும் போது தன் நலனுக்காகவும் தான் குரானை உண்டு பண்ணியுள்ளார் என்ற எண்ணம் எழுவது இயல்பே. இந்த கேள்விகளும் பதில்களும் முகமது குரானை உண்டாக்கி விட்டு பலனை அனுபவிக்காமல் துறவியாய் இருந்திருந்தால் தவிர்க்கப்படிருக்கும். நிற்க. இவ்விடத்தில் என் கருத்து, மதத்தை கேள்வி எழுப்பும் போது மத குருமார்களையும் பற்றிய கேள்விகள் எழுவது இயல்பே என்பதே.

    இன்னும் சொல்ல போனால் உங்களுடைய முந்தைய பதிவே ஒரு தனி மனிதன் சாய்பாபா பற்றியது தானே. நீங்கள் முகமதின் திருமணங்களை பற்றிய கேள்விக்கு சுட்டிய PJ பதிவை போலவே சாய்பாபா எவ்வாறு இளைஞ்சர்களை நக்சல் ஆகாமல் இந்து மத வழிகளை பின்பற்ற வைத்த ஒரு முக்கிய சக்தி என்பது போன்ற சமாளிப்பு கருத்துகள் இருக்க தான் செய்கிறது. இறை மறுப்பு என்பது இது போன்ற deification கதைகளை மறுப்பதும் தான் அல்லவா?

    ReplyDelete
  5. நன்பர் கணேசன்,
    நீங்கள் சொல்லும் கருத்தும் சரியானது.அதுவும் ஒரு வித்தியாசமான் பார்வையே. இஸ்லாமை விமர்சிப்பவர்கள் இருவிதமாக செய்கிறார்கள்.
    1. இஸ்லாமின் கூற்றுகளுக்கு வரலாற்று ரீதியாக் ஆதாரம் உண்டா என்று வினவுபவர்கள்.
    2.இஸ்லாமியர்களின்(முகமது முதல் ஒவ்வொரு இஸ்லாமியரும்),இஸ்லாமிய அரசுகளின் செயல்களை விமர்சிப்பது.

    இரண்டாவது செயலுக்கு முத்ல் விஷயமே ஆதாரம் என்பதால் முதல் விஷயம் குறித்தே என் கவனத்தை செலுத்துகிறேன்.ஒரு மனிதன் எல்லா விதங்களிலும் சரியாக இருக்க வேஎண்டுமென்பது அதிகப் படியான எதிர்பார்ப்பே. என்னை விமர்சிக்கும் கருதுகளை கூட அப்படியே வெளியிடுவேன்.
    __________

    என் பதிவுகள் இஸ்லாமியர்களை குற்றப் படுத்தாமல் ,சிந்திக்க வைக்க வேண்டுமென்பதில் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன்.முகமது என்பவர் வரலாற்றில் வாழ்ந்தாரா என்பது குறித்தும் ஆய்வு செய்வதனால் அது பற்றி இப்போது எழுத விரும்பவில்லை.
    __________

    நண்பர் மது இஸ்லாமியர்கள் இதை பற்றி கருத்து கூறவ்வில்லை என்பதை கூறியதால் பி.ஜே அளித்த விளக்கத்தை கட்டினேன். இஸ்லாமிய பிரச்சார்கர்களிலே கருத்துகளை தெளிவாக கூறுபவர் பி.ஜே என்ற விதத்தில் அவ்ருடைய குரான் விளக்கங்களை ஒரு குறிப்பாக எடுப்பது வழக்கம்.

    அவருடைய கருத்துகளை ஏற்காவிட்டாலும் என்ன சொல்கிறார் என்பதை கேட்டே விமர்சிக்க வேண்டும்.

    _________________________

    சாய்பாபா,தினகரன் போன்றோர் இப்போது வாழும் மனிதர்கள் என்பதாலேயே விமர்சிக்கிறேன். சாயிபாபா எழுதிய புத்தகம் கொடுத்தால் அதன் மீதும் விமர்சிக்கலாம்.அற்புதம் செய்வது என்பது ஆளை ஏய்க்கும் வேலையே.அப்ப்டி செய்வதென்றால் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்ய முடியும்.

    முக்மது நிலவை பிளந்தார் என்று குரான் கூறினால்,முகமதுவின் விண்வெளிபயணமோ ஆதாரம் இல்லையென்று மறுப்போம்.

    சாய்பாபா தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்வதுதான் பிரச்சினை. அதனை நிரூபிக்க அற்புதங்களை(மேஜிக்) செய்வதுதான் ஏமாற்றுவேலை.

    மத புத்தகங்கள் இறைவன் அளித்தது என்பதற்கு அதில் அறிவியல் உள்ளது என்பதும் இது போன்ற செயலே .
    _________________________


    புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை விட பெரிய தத்துவம் உலகிலேயே கிடையாது.கடவுள் மனிதனிடம் பேசுவது,வெறும் கையில் பொருள்கள் வர வைப்பது போன்ற அற்புதம் செய்வது என்பது நடக்காத கரியம்,தேவையற்றது ,ஏமாற்று வேலை என்பது நம் கருத்து.

    ___________________
    அடிக்கடி வாருங்கள்.கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  6. சார்வாகன்
    //கடவுள் மனிதனிடம் பேசுவது,வெறும் கையில் பொருள்கள் வரவழைப்பது போன்ற அற்புதம் செய்வது என்பது நடக்காத காரியம்//

    உண்மை நண்பரே அத்துடன் கடவுள் மனிதனிடம் பேச மாட்டான் அவனுக்கு பதிலாக வானவர் மூலமாக பேசுவான் என்று குரான் கூறுவதும் ஒருபோதும் நடக்காத காரியம்தான்.ஆக வேதங்கள்,மதங்கள்,கடவுள்கள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் உண்மையே. வேதங்கள் யாவற்றிலும் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம் அதுபோல் தேவையற்றவைகளை கடைபிடிக்கவும் தேவையில்லை எனவே கடவுளும் தேவையில்லை.

    ReplyDelete
  7. நண்பர் யாசிர்,
    ஆன்மீகம் என்பது மரணத்துக்கு பின் அழியாப் பெரு வாழ்வை நோக்கிய பயணம் என்றால் அந்த விதமான ஆய்வுகளை வரவேற்கிறோம் . இறைவன் சாதாராரண மனிதர்களிடம் இப்போதும் தொடர்பு கொள்கிறாரா, வெளிப்பாடு கொடுப்பாரா? அந்த தொடர்பு வெளிப்படட்டுக்கு மதத்தில் என்ன முக்கியத்துவம் என்பதை மதவாதிகள் பேச மாட்டார்கள்.
    இறைவன் இப்போதும் ஏதோ ஒரு வழியில் மனிதர்களிடம் பேசுகிறான் என்றாம் மதம்,புத்தகங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும். பேசமாட்டார் என்றால் இவ்வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?ஆதாரம் அற்ற மறை பொருளாகவே இருந்து ,உலகம் போகும் போக்கில் போக விட்டு ,இறிதிநாளில் மட்டும் பஞ்சாயத்து செய்வாரா?
    மதத்தில் பல ஆன்மீக கருத்துகள் பல பொருள் கொள்ளும் வண்ணம் இருக்கும். இதை பற்றி விவாதித்தால் மரட்டுமே மதத்தின் நம்பிக்கையின் எல்லைகள் புரியும்.உண்மையான ஆன்மீகவாதிகளுக்கு மதம்,கடவுள் பற்றி (உண்மையான?) தேடல் மட்டுமே தொடரும்.இதுதான் சரி என்று ஆணவத்துடன் கூற மாட்டார்கள்.எல்லாரும் அறியாத போது உபதேசம் பண்ணுவதெப்படி?
    ______________
    இதனை மறைக்க அறிவியல் என்றும்,எல்லாம் இப்புத்தகத்தில் இருக்கிறது என்பதும்,ஒரு வித அரசியலே.புத்த்கத்தை தங்களின் நலனுக்கு ஏற்ப கொள்கையாகம் செய்வதலேயே பிரச்சினை
    வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி

    ReplyDelete
  8. என்ன சார், ஏதோ ரொமாண்டிக் மூட்லே இருக்காப்லே இருக்கு. பாட்டு நடனம்னு உங்க புதிய பதிவுகள் எல்லாம் அதகளபடுதே, அதை சொல்றேன் :)

    // .கடவுள் மனிதனிடம் பேசுவது,வெறும் கையில் பொருள்கள் வர வைப்பது போன்ற அற்புதம் செய்வது என்பது நடக்காத கரியம்,தேவையற்றது ,ஏமாற்று வேலை என்பது நம் கருத்து.//
    உங்கள் கருத்துடன் ஒத்து போகும் நிலைப்பாடுதான் என்னுடையதும். ஒரு சக சார்வகன், லோகயத்தன் என்று வைத்து கொள்ளுங்களேன்.

    //ஆன்மீகம் என்பது மரணத்துக்கு பின் அழியாப் பெரு வாழ்வை நோக்கிய பயணம் என்றால் அந்த விதமான ஆய்வுகளை வரவேற்கிறோம//.
    சார்வகன் என்ற பெயரை வைத்து கொண்டு நீங்கள் அழியா பேரு வாழ்வை பற்றி ஆய்வை வரவேற்பதே, ஒரு இனிய முரணாக படிகிறது :) . லோகயத்தரின் கீழ்கண்ட செய்யுளை வைத்து இதை சொல்கிறேன்..

    Springing forth from these elements itself
    solid knowledge is destroyed
    when they are destroyed—
    after death no intelligence remains.


    பொதுவில் இந்த பெருவாழ்வு பற்றிய ஆய்வெல்லாம் தேவையற்ற ஆய்வு என்பது என் நிலைப்பாடு, குறிப்பாக ஆன்மிகவாதிகளுக்கு . இதை செய்ய வேண்டியது பல துறைகளை சார்ந்த விஞ்ஞானிகளே அன்றி இவர்கள் அல்ல. இன்றய விஞ்ஞான கோட்பாடுகளை கொண்டே இந்த ஆன்மா என்பதெல்லாம் கட்டுக்கதை என்று வாதிட முடியும் என்றே எண்ணுகிறேன். அதிகப்படியாய் பேசுவது போல் உங்களுக்கு தோன்றலாம். இந்த விஷயத்தை பற்றி நிறைய தேடி படித்துதான் இதை சொல்கிறேன். இந்த வாதத்தை ஒரு தனி பதிவாக போட ஆசை. இது ஒன்றும் விஞ்ஞானத்தால் இன்றைய தேதியில் அறுதியிட்டு சொல்லப்பட்ட விஷயம் அல்ல என்ற போதிலும், விஞ்ஞானம் ஆன்மா என்ற கேள்விக்கான பதிலை நோக்கி பயணிக்கும் பாதையை வைத்து எனது இந்த கருத்தை முன் வைக்கிறேன். உதாரணத்துக்கு இந்த ஆர்டிகளை பார்க்கலாம்
    http://jap.physiology.org/content/104/6/1844
    இதில் சொல்லியுள்ளது போலவே, மனமும் ஒரு emergent phenomena என்ற நிலைப்பாடே cognitive science ஏரியாவிலும் பெருகி வருகிறது. கடைசியில் புத்தரின் அனட்டாவுக்கும், லோகயதர்ரின் மரணத்தோடு அனைத்தும் முடிகிறது என்ற நிலைபாடுதான் ஜெயிக்கும் போல் இருக்கிறது. பார்போம்.

    // புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை விட பெரிய தத்துவம் உலகிலேயே கிடையாது //
    இதற்கும் ஒத்து போகிறேன். புத்தர் என்னுடைய ஹீரோக்களில் ஒருவர். ஆனால் பாருங்கள் இந்த மனுஷ பிறப்பில் எந்த ஒரு கொள்கையையும் இது தான் இறுதி உண்மை என்று சொல்ல முடியாத ஒரு dichotomy . ஆசை இன்றி வாழும் ஒரு வாழ்கை ரொம்பவே போரடிக்கும் என்றே படிகிறது :), பொருளாதார துறையில் இருந்து பார்த்தால் புத்தரின் இந்த கோட்பாடு நம்மையெல்லாம் காந்தி, ஜோசப் குமரப்பா போன்றோரின் காதி பொருளாதாரதிக்குதான் இட்டு செல்லும். அந்த உலகத்தில் எங்கே இன்டர்நெட், இப்படி ஜாலியான அரட்டை எல்லாம் சாத்தியம்? புத்தரிடம், கஷ்டமோ, நஷ்டமோ நாங்களே பாத்துகிறோம், உங்களோட mindfullness எல்லாம் எங்களக்கு வேண்டாம்னு சொல்லணும் நினைப்பேன். அவரும் உடன்படுவார்னு தான் நினைக்கிறேன் :)

    ReplyDelete
  9. அழியாப் பெருவாழ்வு இல்லையென்று நான் நம்புகிறேன். அழியாப் பெருவாழ்வு பற்றி மதவாதிகள் வாக்குறுதி தருவார்களே தவிர ஆய்வு செய்ய மாட்டார்கள்,அது முடியாது என்பதும்,குழப்ப்ங்களையே ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குதான் நன்கு தெரியும்.
    _____________
    பெரும்பாலும் இறை மறுப்பாளர்கள் மதத்தின் படைப்புக் கொள்கைக்கு மாற்றாக பரிணாம கொள்கையை வைத்து விவாதிப்பார்கள்.இபோது மதவாதிகளின் பரிணாமம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இறை மறுப்பாளர்கள் ஆகின்றார்கள். ஒரு வேளை பரிணாமம் குறித்து எல்லா கேள்விகளுக்கும் விடையளித்து ,ஆய்வு பூர்வமாக நிரூபித்தாலும்,பரிணாமத்தின்
    செயல் பாடுகளில் ஒன்றான இயற்கைத் தேர்வு(natural selection) என்பது இறைவனின் வழிநடத்துதலின் படியேதான் நடக்கின்றது என்று சொல்லிவிடுவார்கள்.
    இப்படி சொல்லும் ஆட்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.பரிணாம் சரியென்று ஐயந்திரிபர நிரூபிக்கப் பட்டால் இவர்கள் பிரபலமடைந்து விடுவார்கள்.

    http://www.alislam.org/topics/quran/QURANIC%20CONCEPT%20OF%20EVOLUTION.pdf

    அதனால் மத புத்தகங்களில் கூறப்படும் பல விஷயங்களை ஆய்வு செய்து நிரூபிக்க முடியாது என்பதை தெளிவாக சொல்ல வேண்டுமென்பதற்காகவே இப்படி சொல்கிறேன்.
    இஸ்லாமிய மதவாதிகள் மதங்களை விமர்சிப்பவர்களை இந்தியாவில் இந்துத்வாவாதி,பிற நாடுகளில் யூத ,கிறித்தவ தீவிரவாதி என்று கூறி இவர்கள் மதத்திற்கு எதிராகத்தான் சொல்வார்கள் என்று சொல்லி விடுவார்கள்.நான் அதற்காக்வே வரலாற்ற்று ,அறிவியல் சார்ந்து மட்டுமே விமர்சிக்கிறேன்.
    _______________
    புத்தரின் கொள்கை உயர்ந்தது என்று சொன்னது இதனை விட சிறந்த கருத்து மத புத்தகங்களில் இல்லை என்பதை சுட்டவேகூறினேன்...புத்தர்,கிருஷ்னர்,இயேசு ஆகியோர் ஒருவர் அல்லது மரபு வழி கதைளின் நாயகர்கள் என்ற கருத்தே இப்போது வலுப்பெற்று வருகிறது,
    http://www.truthbeknown.com/sunsofgod.htm
    அதனை அப்படியே அவர் மாதிரியே கடைபிடிக்க வேண்டுமென்றால் எப்படி நண்பரே.?
    ஏதோ கொஞ்சம் தேடலில் ,படிப்பதை எழுதுகிறேன்.நானும் ஒரு மத்திய தர ,மனைவி ,குழந்தை ,வருமான் வரி கணக்கு என்று வாழும் சாதாரண மனிதன். சில சமயம் என் மனைவிக்காக் ஆலயம் செல்வதுண்டு. அதற்காக மதம் கூறும் கடவுளை நம்புகிறேன் என்று பொருளா?.மதம் என்பது ஆன்மீகமாக் மட்டும் இல்லாமல் வாழ்க்கை நடைமுறை ஆகிவிட்டது.ஒருவரின் மதம் என்பது அவரின் அடையாளமாகி பல கால்மாகிவிட்டது விட்டது.ஒருவேளை குடும்பத்தில் அனைவருமே இறை மறுப்பாளராக இருக்கும் பட்சத்தில் இந்த அடையாளத்தில் இருந்து விடை பெற முடியலாம். என் குடும்பத்தினர் என் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க உரிமை உண்டு.என் குடும்பத்தினர் எங்காவது செல்ல வேண்டுமென்றால் நான் அழைத்து செல்லவேண்டிய கடமையும் உண்டு.என் தேடல் தொடர்கிறது.பதிவுகளும் தொடர்கிறது.
    வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி

    ReplyDelete
  10. http://www.flex.com/~jai/satyamevajayate/index.html

    ReplyDelete
  11. //என் குடும்பத்தினர் என் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க உரிமை உண்டு.என் குடும்பத்தினர் எங்காவது செல்ல வேண்டுமென்றால் நான் அழைத்து செல்லவேண்டிய கடமையும் உண்டு//

    ஆமாம் ... ஆமாம் .......

    ReplyDelete
  12. ஹடீத்களில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்க, ஏன் இஸ்லாமியர் அதையும் இறுகப்பிடித்து நிற்கிறார்கள்?

    ReplyDelete
  13. @ தருமி
    ஷாரியா,பல வாழ்வியல் நடைமுறைகள் ஹதித்களில் இருந்தே பெறப் பட்டன.

    ReplyDelete