Thursday, April 28, 2011

இந்துமதம் ,இந்துக்கள்,இந்துத்வவாதிகள்


இப்பதிவில் நண்பர் ஒருவர் பதிவில் இந்து மதத்தினர் மத புத்தகம் படிக்காததால் சாமியார்களிடம் ஏமாறுகின்ற்னர் என்று எழுதியுள்ளார்.அதற்கு சில விளக்கங்கள் கேள்வி பதிலாக அளிப்பது சிறந்த்து என எண்ணுகிறேன்.

1.இந்துக்கள் என்பவர் யார்?

இக்கேள்விக்கு பிற மதங்கள் போல் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள‌ கடவுளை,கூறப்பட்ட விதமாக வழிபட்ட்டால் அம்மதத்தை சேர்ந்தவன் என்று கூற முடியாது.

நமது நாட்டு சட்டப்படி இந்துக்கள் என்பவர்கள் இஸ்லாமியர்,கிறித்தவர் அல்லாத பல தெய்வ வழிபாட்டு முறை கொண்டவர்கள் என வரையறுக்கப் படுகிறது.பல இனக் குழுக்கள்(சாதிகள்) ,தங்கள் குல தெய்வம்,இடம் சார்ந்த தெய்வங்கள் என்று வணங்கி வந்த்னர்.பல தெய்வங்கள் குறிப்பிட்ட நிலப்பகுதியில் மட்டுமே வழிபடப் பட்டனர். இவர்களை இஸ்லாமியர்,கிறித்தவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இந்த பொதுப் பெயர் புழக்கத்திற்கு வந்தது.

2.இந்து மத வேதங்கள் யாவை?

வேதங்கள் என்று பல குறிப்பிடப்பட்டாலும்,அவை அனைத்துப் பிரிவு மக்களாலும் தெரிந்து கொள்ளப் படுவதோ,ஏற்றுக் கொள்ளப் படுவதோ இல்லை.

பல ஞானிகள்(!) பல கருத்துகலை கொண்ட பல புத்த்கங்களை வழங்கி சென்றாலும் அது சில பிரிவினரால் மட்டுமே படிக்கப் படுகின்றது.சார்வாகம் என்னும் பொருள்முதல் வாத கொள்கை கூட இங்குதான் தோன்றியது.


3.இந்து மத வேதங்களில் மனித விரோத கருத்துகள் உண்டா?

சில புத்தக்ங்களில் சாதி உயர்வு,தாழ்வு,பல தாரமணம்,உடன் கட்டை ஏறுதல்,நரபலி கொடுத்தல் போன்ற கருத்துகள் இருக்கின்ற்ன.அதே சமயம் பலவித தத்துவம்,விவாதம்,யோகம்,மருத்துவம் போன்ற்வையும் மிகுதியாக உள்ளது.இதன் தத்துவங்கள் பன்முகத்தன்மை உடையவை.. 

4.இந்து மதத்தின் கடவுள் கொள்கை என்ன?

இதுவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.சில புத்தகங்கள் உருவமற்ற ஒரே கடவுள் என்பதும்,பல புத்தகங்கள் பல தெய்வ உருவ வழிபாட்டை கூறுவதும் ஆகிய‌ பல் முரண்கள் உடையது.உங்களுக்கு பிடித்த விதத்தில் இறைவனை வழிபடும் சுதந்திரம் அளிக்கும் மதம்.

5.இந்து மதத்தில் மதவாதிகளின் பங்கு என்ன?

பிற மதங்களில் மதவாதிகளின் பங்கு எனவோ,அதுதான்.இந்து மதத்தையும் பிற மதங்கள் போல் நிறுவனப் படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கிறார்கள்.இவர்கள் இந்துத்வவாதிகள் என்றழைக்கப் படுகின்றனர்.

6.இந்து மதத்தில் பல கடவுள்கள்,கொள்கைகள் இருப்பதால் இவர்களை ஒன்று திரட்ட முடியுமா?

இதற்கு இந்து மத வாதிகள்,ஆபிரஹாமிய மத வாதிகளிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்தே செயல் பட ஆரம்பித்தார்கள்.
இஸ்லாமுக்கு முந்திய அரேபியாவை நினைவு கூறுங்கள் பல்வேறு அரபு இன குழுக்கள்,அவர்களின் பல் தெய்வ உருவ வழிபாடு,யூத கிறித்தவ மத பெருமிதமும்,உயர்ந்த நிலையும் புதிய மதம் தோன்றக் காரணம் ஆகிற்று.அது அரேபியாவில் கிழக்கில் கிறித்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் இடமில்லாமல் செய்தது.

இங்கும் இப்போது சூழ்நிலை அபடித்தான் பல தெய்வ வழிபாடு கொண்ட பல் இந்திய இன குழுக்கள்,கிறித்தவ,இஸ்லாமிய மத பெருமிதம்.ஒரே மாதிரி சூழ்நிலை நிலவுவதாக எனக்கு தோன்றுகிறது.


7.ஆபிரஹாமிய மதவாதிகளின் செயல்முறை என்ன?

a).பழைய புத்தகங்களின் கருத்துகளை தொகுத்து ஒரு மத புத்த‌கம் உருவாக்குவது.தொகுத்த வரலாறை மறைப்பது,விமர்சன‌ங்களுக்கு கடும் தண்டனை அளிப்பது.

b).மத ரீதியான ஆட்சிமுறைகள்,சட்டங்கள் உருவாக்குவது

c). நாடு ஆக்கிரமிப்பு போர்கள் மதப் போர்வையில் செய்யப்படும்.

d).பிற மதத்தினரை இரண்டாம் கட்ட குடிமக்களாக்கி மதம் மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்குதல்  

8. இந்துத்வ வாதிகளின் செயல்முறை என்ன?

a) இந்து மதத்தின் பன்முகத்தன்மையை மறைப்பது.இந்த வேதங்க்ள் மட்டுமே சரி என்று அங்கீகரிப்பது.இவ்வகையான வாழ்வுமுறைகளே சரி என்பது.

b) இந்துத்வவாதிகளும் சிறிது ,சிறிதாக ஒரு தெய்வம், பல பெயர்கள் என்ற கொள்கையை கொண்டு வர முயற்சிப்பார்கள்.எடுத்துக்காட்டாக இராமன் என்னும் ஒரு கடவுளுக்காக கோயில் என்பது ஒரு இந்துத்வ அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்தியது.  

c) நாட்டில் நிலவும் பல பிரசினைகளுக்கும் பிற மதத்தவரே காரணம் என்று பரப்புரை.கிறித்தவ ,இஸ்லாமிய‌ மதங்களில் யூதர்களே எதிரிகள் என்ற பரப்புரை மதம் பரப்ப உதவியாக இருந்ததை இவர்களும் செய்கிறார்கள்.

d) சில மதத்தினரின் பரப்புரையில் என்மதம் மட்டுமே ச்ரி என்ற மதப் பரப்புரைகளை இந்து மதத்தை அழிக்கும் முயற்சி என்பர். 

9.இவர்கள் முயற்சி வெற்றி பெறுமா?

இப்போது எதுவும் சொல்ல முடியாது.வாய்ப்பு இருக்கிறது.இவர்களுக்கு பெரும் உதவி செய்வது ஆபிரஹாமிய மதவாதிகளே!!..மாற்றங்களை ஏற்க மறுப்பதும்,ஆபிரஹாமிய மத ரீதியான சட்டங்கள் சிற‌ந்தவை என்று பரப்புரை செய்வதும் இந்துத்வவாதிகளுக்கு சாதகமாக் எளிதில் திசை திருப்பப்டுகிறது.என் மதம் மட்டும் சரியானது என்ற கொள்கைக்கு ஒருவன் வந்து விட்டால் அவன் மதத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வான்.

________________  மதத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் அவர்களது மத ஆட்சி,மதரீதியான சட்டங்கள்,நமது நாட்டிலும் அத்னையே கோருகின்றனர்.நாம் மட்டும் என்ன குறைந்தவரா என்னும் பிரசாரம் நன்றாகவே எடுபடுகிறது.தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து இருப்பதால் `எளிதில் பரப்புரை ஆதாரங்களுடன் முன்னெடுக்கப் படுகிறது.
நரேந்திர மோடியின் இப்பிரச்சாரம் பெரும் வெற்றி பெற்றதால் ,அவரை இந்தியா முழுவதற்குமான தலைவராக முன்னெடுக்கும் உத்திகளை வரும் காலங்களில் பார்ர்க்கப் போகிறோம்.

10.இந்தியா மத சார்பற்றதாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் மதம் என்பது அரசியலே என்பதை புரிந்து கொண்டால் மதங்களில் வித்தியாசம் இல்லை என்று புரியும்.இந்துத்வ அரசியலை முன்னெடுப்பவர்கள் உயசாதி,மத்திய தர வகுப்பினரே என்பதும்.இட ஒதுக்கீட்டினால் இழந்தவற்றை அரசியல் அதிகாரத்தின் மூலம பெற முயல்வதும் அறியலாம்.

ஆபிரஹாமிய மதவாதிகள் தங்கள் மத பரப்புரைகளை விட்டு விட்டு தங்கள் சமுதாய மக்களின் நல்னுக்காக கல்விசாலைகள், மருத்துவமனைகள் கட்டினால் நல்லது.யாரும் இங்கே முட்டாள்கள் இல்லை,நீங்கள் அவர்களை திருத்த வந்த தூதர்கள் இல்லை.அனைத்தும் ஏற்கென்வே என் மத புத்த்கத்தில் கூறப்பட்டுள்ளது என்ற கூற்றுக்கு நகைக்க மட்டுமே முடியும். 

இதில் இறை மறுப்பாளர்களின் பங்கு மிக அதிகம்,அனைத்து மதங்களுமே விமர்சிக்கப் படவேண்டும்.அதன் ஆதாரமூலங்கள்,எல்லைகள் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். இந்த திராவிட பாணி இறை மறுப்பு அதாவது இந்து மதம் மட்டும் பிற்போக்கானது,மூட நம்பிக்கைகள் நிறைந்தது என்பதும்,பிற மதங்கள் குறைகளற்ற சமரச சன்மார்க்கம் என்பதும் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கியுள்ளன.

ஆக்வே மதம் அரசியலில் கலக்காமல் பார்த்துக் கொள்வது அனைவரின் பொறுப்பு.எப்படி அனைவரும் ஒன்றாக வாழ்வது பற்றியும் , இன,மொழி,மத சிக்கல்களை தீர்ப்பது பற்றி விவாதித்தால் அனைவரும் நலமாக் இருக்கலாம்.

11 comments:

 1. நல்ல பகிர்வு - ஆனால் இந்த் மதம் ஒரு மதமே இல்லை ... அது ஒன்று போல இல்லாத ஆனால் வெளியாருக்கு ஒன்று போலத் தெரியும் இந்திய சுதேசி மதங்கள் தான். ஆப்பிரிக்க சுதேசி மதங்கள் ( animists ) போல இது இந்திய சுதேசி மதங்கள். இங்கு பாப்பனர்கள் தமது மத நம்பிக்கையை பிற இந்திய சுதேசி மதத்தினர் மீது திணிக்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்கு காந்திரமான ஏற்பாடுகள் இல்லாமல் போனதேன் .

  ReplyDelete
 2. //இந்த் மதம் ஒரு மதமே இல்லை ... அது ஒன்று போல இல்லாத ஆனால் வெளியாருக்கு ஒன்று போலத் தெரியும் //

  வாங்க நண்பரே,
  இப்போதைய கால கட்டத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை விடா எப்படி தோன்றுகிறோம் என்பதே முக்கியமாக் படுகிறது.பல மதங்களின் தொகுப்பான ஒன்றை பெயரிட்டு ஒன்றாக்கியது பிற மதத்தினரே.

  இவர்களின் பரப்புரைகள் இறை மறுப்பாலரல்லாத, இந்துக்களிடம் நன்றாக எடுபடுகின்றது.மிகவும் அமைதியாக, தெளிவாக செய‌ல் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

  அனைத்து சாதியினரிலும் வசதியுள்ளவர்கள் மத பற்றுள்ளவர்களாக இருப்பதை பார்க்கலாம்.இவர்கள்தான் இந்துத்வவாதிகளின் இலக்கு


  //இதனால் ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்கு காந்திரமான ஏற்பாடுகள் இல்லாமல் போனதேன் .//
  யார் செய்வார் இந்த வேலைகள்.ஒரு அம்பேத்காரோ,நாராயண குருவோ,பூலேவாதான் செய்ய முடியுமா?.இதில் என்ன சிக்கல் என்றால் அம்பேத்காரை ஒரு தலித் தலைவர் மட்டுமே என்று காட்டி அதில் வெற்றி பெற்று விடார்கள்.அவருடைய சீர் திருத்த கருத்துகள் காற்றில் போய் விட்டன.அவர் எழுதிய புத்தகம் ஒன்று தருகிறேன்.படியுங்கள்.

  http://www.scribd.com/doc/955436/Riddles-in-Hinduism

  ReplyDelete
 3. பண்டைய அரேபியாவில் யூத,கிறித்த்வ மத பிரச்சாரகர்கள் தங்கள் மத பெருமிதங்களை பிரச்சாரம் செய்து ,மத மாற்றம் செய்ய முயற்சித்தனர். அரபியர்கள் பல தெய்வ வழிபட்டு முறையில் இருந்த வரை கிறித்தவ யூதர்களுக்கு பாதுகாப்பு இருந்தது.அரபுகளும் ஒரு தெய்வ(அதே கட்வுளாம்!!!) வழிபாட்டுக்கு மாறிய போது யூத,கிறித்தவர்கள் கதை பரிதாபமாகி போனது.

  இந்துத்வவாதிகள் செய்யு நினைத்த வேலையை சில கிறித்தவ,இஸ்லாமிய பிரச்சாரகர்கள் இந்து வேதங்களிலும் ஒரே கடவுள் (அதுதான் இது) என்பது ஆப்பசைத்த குரங்கின் கதையாக முடியும்.

  ReplyDelete
 4. தங்களின் இந்து மத விளக்கம் சரியாகப் படவில்லை. தற்காலத்தை விடச் சொல்லுகின்றீர்கள். சரி தற்காலத்தைப் பற்றிப் பேசவில்லை. சுமாரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கே இந்து மதம் இருந்தது? அப்போது தமிழ்நாட்டில் வைணவமும், சைவமும் இரண்டு எதிர் எதிரான இரு மதங்கள் - போரிட்டுக் கொண்டன.

  அப்படியே இன்னும் ஒரு ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்றால் - இந்தியா முழுதும் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு மதம் இருந்தது. அது இந்து மதமா என்பதே எனதுக் கேள்வி? அவற்றில் ப்ராமணர்களின் இந்து மதம் தான் வைதிக மதமாக, சனாதன தர்மமாக போதிக்கப்பட்டது. அவர்களின் போதனை பெரும்பாலும் ஷத்திரியர்களை மதம் மாற்றுவதாகவே இருந்து. அதற்கு அரசியல், பொருளாதார லாபம் அடைவதே நோக்கமாகக் கொண்டனர்.

  சரி சொல்லுங்கள் - இந்து மதம் எப்போது எங்கே தோன்றியது? பன்முகத்தன்மையான வேதங்களையும், உபநிடதங்களையும், வேதாந்தங்களையும், சாஸ்திரங்களையும் , ஆயுர்வேதங்களையும் கொண்டது இந்து மதம் எனச் சொல்லுகின்றீர்கள். அதனை எழுதியது யார்?

  ப்ராமணர்கள் தானே !!! ப்ராமணர்களாக அல்லாமல் வெகு இயல்பான மக்களாக இருக்கும் விவசாயியும், மீனவனும், வேடுவனும் எழுதிய பங்களிப்புக்கள் எல்லாம் எங்கே சார் போச்சு !!! ஒருவேளை அவர்கள் எழுதவே இல்லையா???

  இன்றும் சரி ! அன்றும் சரி இந்து மதமாக இருப்பதும், வளர்ந்து வந்ததும் ப்ராமண மதமே ஆகும். நாட்டார் வழிபாடுகளை பிழைப்புக்காக உள்வாங்கிக் கொண்டு பன்முகத்தன்மையானது என கதைவிடுதல் ஏற்கத்தக்கது அல்ல சாரே !!

  ReplyDelete
 5. //தங்களின் இந்து மத விளக்கம் சரியாகப் படவில்லை. தற்காலத்தை விடச் சொல்லுகின்றீர்கள். சரி தற்காலத்தைப் பற்றிப் பேசவில்லை. //
  இப்பதிவே தற்காலத்தில் இந்து மதம்,மக்கள் எப்படி இந்துத்வவாதிகள் அரசியல் வலைக்குள் கொண்டு வரப் படுகிறார்கள் என்பதை பற்றியது.
  நான் எப்போது தற்காலத்தை விட சொன்னேன்?
  _____________
  //சுமாரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கே இந்து மதம் இருந்தது? அப்போது தமிழ்நாட்டில் வைணவமும், சைவமும் இரண்டு எதிர் எதிரான இரு மதங்கள் - போரிட்டுக் கொண்டன.//
  ஆமாம் அப்போது கிறித்தவமும் இஸ்லாமும் போரிடுவதற்கு இல்லாததால் வேறென்ன செய்வது?. இன்னும் பௌத்தம் ,சமணம் ,சார்வாகர்கள் இவர்களுக்கிடையேயான விவாதங்கள் பற்றியெல்லாம சொல்லலாமே!.இயங்கியல் தத்துவப்படி முரண்பாடுகளே ஒன்றையொன்று வளர்க்கும்.
  _______________
  //அப்படியே இன்னும் ஒரு ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்றால் - இந்தியா முழுதும் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு மதம் இருந்தது. //
  ஆமாம்.
  /அது இந்து மதமா என்பதே எனதுக் கேள்வி?//
  மொத்தம் 10000 இனக்குழு என்றால் ஒவ்வொரு இனக்குழுவும் (இந்து/10000) மதம்.இந்து என்பது பொதுப்பெயர் வைத்தவர்கள் இஸ்லாமியரும் ,பிரிட்டிஷாரும்.மற்றபடி இந்துக்கள் என்றால் கிறித்தவர்,இஸ்லாமியர் அல்லாத பல தெய்வ உருவ வழிபாடு உடையவர்கள்.ஒருவேளை கிறித்தவமும்,இஸ்லாமும் இங்கு வராமல் இருந்திருந்தால் இந்து மதம் ஒரு பெயரில் அழைக்கப் பட்டு இருக்காது.பல மதங்களாகவே அழைக்கப் பட்டு இருக்கும்.
  _______________
  //அவற்றில் ப்ராமணர்களின் இந்து மதம் தான் வைதிக மதமாக, சனாதன தர்மமாக போதிக்கப்பட்டது. அவர்களின் போதனை பெரும்பாலும் ஷத்திரியர்களை மதம் மாற்றுவதாகவே இருந்து. அதற்கு அரசியல், பொருளாதார லாபம் அடைவதே நோக்கமாகக் கொண்டனர். //
  இது வரலாற்றில் இயபல்புதானே.ஒரு இனக்குழு தன் கலாச்சாரத்தை,இன்னொரு இனக்குழுவிற்கு பரப்புதல்,அதன் மூலம் நீங்கள் கூறிய இலாபங்களை அடைதல்.
  ___________
  //சரி சொல்லுங்கள் - இந்து மதம் எப்போது எங்கே தோன்றியது? பன்முகத்தன்மையான வேதங்களையும், உபநிடதங்களையும், வேதாந்தங்களையும், சாஸ்திரங்களையும் , ஆயுர்வேதங்களையும் கொண்டது இந்து மதம் எனச் சொல்லுகின்றீர்கள். அதனை எழுதியது யார்//

  ஒரு மதம் என்றால் உலகம் தோன்றிய போதே தோன்றியதவே கூற வேண்டும் .அப்போதுதான் மதிப்பு.வரலாறு ரீதியாக பார்த்தால் சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட பசுபதி என்ற காளை மாடு காவல் தெய்வம் வணங்கப் பட்டு உள்ளது.

  பொதுவாக உருவ வழிபாடு,இயற்கை வழிபாடு அனைத்தையுமே இந்து மதம் என்றும் சிலர் கூறுவர்.வேதங்கள் அக்காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள்.அவற்றை யார்,எத‌ற்காக எழுதினார்களோ எழுதியருக்கு மட்டுமே தெரியும்.
  //ப்ராமணர்கள் தானே !!! ப்ராமணர்களாக அல்லாமல் வெகு இயல்பான மக்களாக இருக்கும் விவசாயியும், மீனவனும், வேடுவனும் எழுதிய பங்களிப்புக்கள் எல்லாம் எங்கே சார் போச்சு !!! ஒருவேளை அவர்கள் எழுதவே இல்லையா??? //
  ப்ராமணர் அல்லாதவர்களும் சில புத்தகங்களை எழுதியதாக கூறுகின்றனர்.
  இராமாயண‌ வால்மீகி ஒரு தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்தவர் என்ற கருத்து உண்டு. மஹாபாரத‌ வியாசர் மீனவ பெண்ணுக்கு பிறந்தவர்.

  பல நாட்டார் தெய்வ்ங்கள் பற்றிய சாமான்யர்களின் பாடல்கள் இன்னும் நாட்டுப் புறப் பாடல்களாகவே இருக்க்ன்ற்ன.
  __________________________
  //இன்றும் சரி ! அன்றும் சரி இந்து மதமாக இருப்பதும், வளர்ந்து வந்ததும் ப்ராமண மதமே ஆகும். நாட்டார் வழிபாடுகளை பிழைப்புக்காக உள்வாங்கிக் கொண்டு பன்முகத்தன்மையானது என கதைவிடுதல் ஏற்கத்தக்கது அல்ல சாரே !!//
  அவர்கள் வாழ வேண்டாமா!!!!!.
  இந்த இரகசியம் உங்களுக்கும் தெரிந்து விட்டதா,இத்னை அம்பேத்காரும்,பெரியாரும் எப்போதோ கூறிவிட்டனர்.
  ____________

  இந்த பன்முகத் தன்மையை மறைத்து ஒரே முகமாய் இந்து மதத்தை காட்டுவதில்தான் இந்துத்வ அரசியலின் வெற்றி அடங்கி இருக்கிறது.
  ___________
  இந்து மதம் என்பதை ஒன்றாக காட்ட‌ எப்படி முடிகிறது?

  இஸ்லாமிய‌,கிறித்தவ மதத்திற்கு மாற விரும்பாத ,இம்மத பெருமித மாற்ற பிரச்சாரத்தை வெறுக்கும் மக்கள் இந்துத்வ கொள்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
  இவர்கள் தனித்தனியாக் இருக்கும் பட்சத்தில் எளிதாக மத மாற்றம் செய்யப் படுவதாக கூறி இந்துத்வவாதிகள் நாட்டார் தெய்வங்களை விட ,உயர்சாதியினரின் தெய்வங்களையே வணங்க பரப்புரை செய்கின்றனர்.இதுவும் ஒருவகை மத மாற்றம் என்றாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை.

  ReplyDelete
 6. Sarvaakan,

  A small request. As you did for Islam, please do some reading about the religions of India (or Sub Continent).
  Because the name Hinduism was created by outsiders who were not able to neither imagine nor understand the religions in Subcontinent.
  In India or Subcontinent there were always multiple religion and various cults (Even in Vedic period). All religion referred the Vedha as collection of books.
  Please note I am not an Hinduist :-) But expecting more powerful articles from you. You did an amazing job with Islam which i saw in Darumi's blog. Expecting the same for Hiduism

  ReplyDelete
 7. நண்பரே வணக்கம்
  நாம் மதங்களை விமர்சிப்பது மனிதம் வளர்க்கவே.அனைத்து மதங்களுமே அரசியல் காரணங்களுக்காகவே தோற்றுவிக்கப் பட்டு,பரப்பி,பாதுகாக்க படுகின்றன‌அதன் எல்லைகளை புரிய்ந்து கொண்டால் என் மதம் மட்டுமே சரியென்ற‌ பிரச்சினை வராது.இஸ்லாம் பற்றி நடுநிலைமையான இறைமறுப்பு பதிவுகள் மிக குறைவு, தோழர் செங்கொடி,தருமி அய்யா போன்று விரல் விட்டு எண்ணி விடலாம்.ஆகவெதான் இஸ்லாமை ஒரு இறைமறுப்பு நடிநிலைமை பார்வையில் ஆய்ந்து பதிவிடுகிறேன்.
  இந்துமதம் என்றால் எது என்பதை வரையறுப்பதில் பல சிக்கல்கள்.வேண்டுமானால் இந்து மதத்தில்(அதாவது வேதங்களை அடைப்படையாக கொண்ட சனாதன தர்மம்) ஆய்வு செய்யலாம்.மதங்களை பற்றி ஆபாசம் என்று விமர்சிப்பது நமக்கு பிடிக்காத செயல்.நடு நிலைமையான பார்வையில் நிச்சயம் எழுதுவேன்.வேதங்கள் தோற்றம்,மொழி, எழுதப் பட்ட காலம் பற்றி ஆய்வோம்.வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 8. பாராட்டுகள் நண்பர் நாராயணன்
  ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் தன் மதத்தை ஆய்வு செய்யும் படி கூறுவது மிக அருமை,இதே கருத்தை அனைத்து மதத்தினரும் அவர்கள் மத குருக்களிடம் கேட்க ஆரம்பித்தால் மனித சமுதாயத்திற்கு விடிவுகாலம் வந்துவிட்டது என்று பொருள்.

  ReplyDelete
 9. @saarvaakan , //உடன் கட்டை ஏறுதல்// ,எந்த புத்தகத்தில் இது இருக்கிறது?.

  ReplyDelete
 10. ////உடன் கட்டை ஏறுதல்// ,எந்த புத்தகத்தில் இது இருக்கிறது?.//
  நண்பருக்கு வணக்கம்
  உடன்கட்டை தவிர பிற விஷயங்கள் மத புத்தகங்களில் இருப்பதை உணர்ந்தே இதனை மட்டும் கேட்கிறீர்கள் என எண்ணுகிறேன்.இன்னும் விவரம் வேண்டுமெனில் அளிக்கிறேன்.

  இத்னை இந்துத்வவாதிகள் இருவிதமாக சமாளிப்பார்கள்.

  1.இது வேதங்களில் இல்லை(அதாவது அவர்கள் வேதங்களாக ஏற்றுக் கொள்ளப்படும் புத்தகங்களில் இல்லை).கடவுள் அவதாரம் எதுவும் குறிப்பிடவில்லை.இது இடையி வந்த குறிப்பாக பிற மதத்தினரின் தாக்குதலுக்கு அஞ்சி கற்பை காத்துக் கொள்ள ,பெண்கள் கண்டுபிடித்த முறை ஆகும் என்பது.

  ஆனால் மகாபாரதத்தில் பாண்டவர்களின் த‌ந்தை பாண்டு இறந்த பின் அவருடைய ஒரு மனைவி மாதிரி உடன் கட்டை ஏறினாள் என்பதை மறைத்து விடுவார்கள்.
  இராமாயணத்தில் கூட,வேதவதி தன் முடியை ஒருவன் தீண்டினான் என்பதற்காக தீயில் புகுந்து உயிர் நீத்ததும்,சீதை கற்பை நிரூபிக்க அக்கினி பிரவேசம் செய்ததும் கூட இதன நீட்சிகளே.

  2.சில பிரிவினர் மட்டும் (அரச குடும்பத்தினர்) மட்டுமே கடைப்பிடித்தன்ர். ஆகவே பெரும்பான்மையான இந்து சமூகம் இதனை கடைப்பிடிக்கவில்லை.தாழ்த்தப்பட்ட சமுகங்களில் இப்பழக்கம் இருந்ததக குறிப்பு எதுவும் இல்லை. இது ஒரு அளவிற்கு உண்மையாக இருக்கலாம்.ஏதேனும் இருந்தால் பகிரலாம்.

  சில மத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சமீப காலங்களில் கூட (ரூப் கன்வ்ர் ,இராஜஸ்தான்) கடைப்பிடிக்கப்படுகிறது.

  வருகைக்கும் ,கருத்து பதிவிற்கும் நன்றி
  _____________
  Although the myth of the goddess Sati is that of a wife who dies by her own volition on a fire, this is not a case of the practice of sati. The goddess was not widowed, and the myth is quite unconnected with the justifications for the practice.
  The Puranas have examples of women who commit sati and there are suggestions in them that this was considered desirable or praiseworthy: A wife who dies in the company of her husband shall remain in heaven as many years as there are hairs on his person. (Garuda Purana 1.107.29) According to 2.4.93 she stays with her husband in heaven during the rule of 14 Indras, i.e. a kalpa.
  In the Ramayana, Tara, in her grief at the death of husband Vali, wished to commit sati. Hanuman, Rama, and the dying Vali dissuade her and she finally does not immolate herself. However, Sulochana wife of Indrajit (Meghanath) became Sati on his funeral pyre.[61]
  In the Mahabharata, Madri, the second wife of Pandu, immolates herself. She holds herself responsible for the death of her husband, who had been cursed with death if he ever had intercourse. He died while performing the forbidden act with Madri, who blamed herself for not having rejected his advances, although she was well aware of the curse. However, this may be a much later addition to the Mahabharata as the entire epic as it exists now was written and modified over millennia.
  Passages in the Atharva Veda, including 13.3.1, offer advice to the widow on mourning and her life after widowhood, including her remarriage.


  http://www.scribd.com/doc/43631444/Sati-Practice

  http://www.mahavidya.ca/women-in-hinduism/the-tradition-of-sati/

  ReplyDelete
 11. sati cited in vedas and puranas

  http://www.worldaffairsboard.com/international-politics/12097-sati-brahmin-annihilation-widows.html
  ______
  Hindu widow remarriage act 1856
  http://lawcommissionofindia.nic.in/51-100/Report81.pdf

  ReplyDelete