Monday, April 11, 2011

ஃப்ரான்ஸின் முகத்திரை தடை பற்றிய விவாதம்


இன்று(11/4/2011) முதம் ஃப்ராஸ் நாட்டில் பெண்கள் முகத்திரை அணிய தடை விதிக்கப் பட்ட்டுள்ளது.அப்படி அணிபவர்கள் 150$ அபராதம் எனவும் அரசாங்க அறிவிப்பு கூறுகிறது.







ஃப்ரான்ஸில் சுமார் 50  இலட்சம்(5%) இஸ்லாமியர்கள்  வசிக்கின்ற்னர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் உலக்ப் போருக்கு பின் வட ஆப்பிரிக்க நாடுகள்,ஃப்ரான்ஸின் முந்தைய காலனி நாடுகளில் இருந்து வேலை வாய்ப்புகளுக்காக புலம் பெயர்ந்த‌வர்கள்.. ஐரோப்பாவில அதிக சதவீத இஸ்லாமிய மக்களை கொண்ட நாடுகளில் ஃப்ரான்ஸும் ஒன்று.
_____________________________

Algeria                                   1,550,000
Morocco                               1,000,000
Tunisia                                     350,000
Turkey                                    315,000
Sub-Saharan Africa                250,000
Middle East                           100,000
Asians                                   100,000 (mostly from Pakistan and Bangladesh)
Converts                                 40,000
illegal immigrants or 
awaiting regularisation  350,000
Other                                  100,000
___________________________
Total                                4,155,00
____________________________


இப்போது ஃப்ரான்ஸ் அரசாங்கம் தடை விதிப்பதை எதிர்த்து மத வாதிகள் என்ன கூறுவார்கள்?

இது எங்கள் மத கடமை.இதில் அரசு தலையிடக் கூடாது என்பார்கள்.இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக் வசிக்கும் பல நாடுகளில் இந்த முகத்திரை என்பது தனிப்பட்ட விருப்பமாகவே இருக்கிறது. சவுதியில் கூட முகத்தை மறைக்கும் திரை பெண்கள் அணிவது விருப்பம் சார்ந்தது.நாங்கள் விரும்பி அணியும் ஆடை,இதை தடை செய்வது மனித விரோதம்.

ஃப்ரான்ஸ் அரசாங்கம் என்ன கூறுகிறது?

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் திரை அணிவது பெண் அடிமைத்தனமாகவும்,பாதுகாப்புக்கு இடையூறாகவும் இருப்பதால் தடை செய்தோம்.
________________________
சரி இதில் என்ன உண்மையில் நடக்கிறது?

மீண்டும் பதிவின் முதல் பகுதியை படிக்கவும். ஃப்ரான்ஸின் மக்கள் தொகையில் 5% இஸ்லமியர். அபோது சுமார் 2.5 % பெண்கள்.  ப்ரான்ஸில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பல்வேறு நாடுகளை சேர்தவர்கள் என்று பார்தோம். ஒவ்வொரு நாட்டிலும் பல விதமான ஆடைகளை மத சம்பிரதாயமாக் பயன் படுத்துகின்றன்ர்.பணி புரியும்,படிக்கும் பெண்களில் முகத்தை மறைக்கும் திரை அணிபவ‌ர்கள்  சுமார் 1% என்று கொள்ளலாம்.

1%( 5 லட்சம்) பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்று கொண்டால் அது அரசுக்கு பிரச்சினை இல்லையே!!!!.

பிறகு ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சட்டம் இயற்ற‌ வேண்டும்?

மீண்டும் அந்த மக்கள் தொகை விவரங்களை பார்க்கவும்.

1. ஃப்ரான்ஸில் இரண்டாம் உலக்ப் போருக்கு பின் மீள் கட்டமைப்பிற்கு குறைந்த கூலியில் ஆட்கள் தேவைப் பட்டதால் மட்டுமே இஸ்லாமியர் உட்பட பல்ருக்கு குடியுரிமை வழங்கப் பட்டது.

2.குடியுரிமை வழங்கப் பட்டால் அவர்களின் வருமானம் நாட்டிற்கு உள்ளேயே செலவு செய்யப் படும்.பொருளாதாரம் பாதிக்காது.

3. இப்போது வேலை வாய்ய்ப்பும்,பொருளாதாரமும் மந்த நிலை காணப் படுவதால் அனைத்து ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளும் குடியுரிமை வழங்குதல் விதிகளை கடுமை யாக்கி வருகின்றன.இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிவேகத்தில் அதிகரிப்பதாகவும்,ஐரோப்பா அமெரிக்கா இஸ்லாமிய நடுகள் ஆகிவிடும் என்ற பரப்புரைகளும் திட்டமிட்டு அரங்கேற்றப் படுகின்றன



.4.இப்போது இத்தடை மூலம் எதிர்ப்பு வலுக்க வேண்டும் என்றே ஃப்ரான்ஸ் அரசு விரும்புகிறது.அதன் மூலம் பலரை வெளியேற்றலாம்.சில வசதி உள்ளவர்கள்(அரபு) இஸ்லாமியர்கள் புலம் பெயர்ந்து தங்கள் நாட்டுக்கே செல்லலாம்..

5. சரியான விசா இல்லாதவர்களை மதவாத முத்திரை குத்தி எளிதாக நாடுகடத்தலாம்..மனித உரிமை மீறல் பிரசினையாக அல்லாமல் மதவாததிற்கு எதிரான போராட்டமாக் சொல்லிக் கொள்ளலாம்.

6.எதிர்கால இஸ்லாமிய குடியேற்றங்கள் தடுக்கப் படும்.ஃப்ரான்ஸ் ஒரு தொடக்கமே.எல்லா ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுமே இப்போக்கை கடைப் பிடித்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
___________________


இந்த மதவாதிகள் இந்த மாதிரி மத விஷயங்களுக்கு பொங்கி எழுந்துபோராடும் அளவிற்கு,இஸ்லாமியர்களின் ஜன்நாயக,கல்வி ,பொருளாதார,வேலை வாய்ப்பு பிரச்சிகளை கண்ர்டு கொள்ள‌ மாட்டார்கள்.

ஃப்ரான்ஸ் அரசு மதவாதிகளை மலை போல் நம்பியே இத்தடையை கொண்டு வந்திருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த முகத்திரை பற்றி ஒரு விவாதம் இதையும் பாருங்கள்.




No comments:

Post a Comment