Friday, May 20, 2011

ஜாதக கணிப்புகள் உண்மையாகும் வாய்ப்பு என்ன?



ஒரு பிரபலமான மனிதரின் ஜாதகத்தை கணிக்கிறேன் என்று பலர் வதந்திகளை பரப்புவதால் நம்க்கு இது குறித்து ஆய்வு செய்யலாம் என்ற எண்னம் ஏற்பட்டு, சோதிடம் பற்றி தெரிந்து கொள்ள்வும் அதனை உங்களோடு பகிரவுமே இப்பதிவில் முயற்சிக்கிறேன்.ஜாதகத்தில் என்க்கு நம்பிக்கை இல்லை.ஆனால் பலர் நம்புகிறார்கள்.பலர் தங்களின் உண்மையான ஜாதகத்தை வெளியே காட்ட மாட்டார்கள்.அவ்வளவு பயம்!!!!!!!!!!!!!!!.. 

நமது நாட்டிலும் சரி,பல நாடுகளிலும் சரி நம்முடைய எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆசை பலருக்கு உண்டு.இந்த எதிர்காலத்தை அறியும் பல முறைகள் இருப்பதாக நம்பப் படுகின்றது. ஒருவர் பிறந்த நேரம் ,தேதி ,கைரேகை,கால் ரேகை,பெயர், உடலமைப்பு போன்றவற்றை வைத்து ஒருவரிடைய குணாதிசயங்கள்,எதிர்காலம் முதலியற்றை கணிக்கும் முறை வழக்கத்தில் உண்டு.இதில் இந்த ஜாதகம் ,கைரேகை என்பவை மிக பிரபல்மான முறைகள் ஆகும்.இப்பதிவில் ஜாதகம் என்பதை பற்றி மட்டும் பார்ப்போம்..எதை ஆராய்ச்சி செய்தாலும் அந்த முறை வரலாற்று ரீதியாக எப்போது,எவ்வாறு பயன் பாட்டில் உள்ளது,அதன் ஆதார மூலங்கள் என்ன என்பதை பார்ப்பது நல்லது.பொதுவாக இறை நம்பிக்கை உள்ளவர்களே  இம்மாதிரி செயல்களை நம்புவதால் இக்கலை இறைவனால் அவன் அடியார்களுக்கு வழங்கியதாகவும்,அதனை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாய்மொழியாக பாதுகாத்து ,போதித்தி,பயன் படுத்து வந்ததாகவும் அவ்ற்றில் சில நூல்கள் வடிவிலும் உள்ளது என்று கூறுவது வழக்கம்.நம் முந்தைய பதிவுகளை படித்த நண்பர்களுக்கு வேறு விஷயங்கள் ஞாபகம் வந்தால் அவ்ர்களை பாராட்டுகிறேன். 

மனித மனம் மிகவும் விந்தையானது.தனக்கு சரி என்று தோன்றும் சூழ்நிலை,சிந்தனை,செயலிலேயே நிலைத்திருக்க முயல்கிறது.பிறந்த சமூக பொருளாதார‌ சூழ்நிலை, வளர்ப்பு அனுபவங்களே ஒருவருடைய நம்பிக்கைகளை தீர்மானிக்கிறது.எதிர்காலத்தை கணிப்பது என்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்துமா என்று யோசித்தாலேயே இதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.  

இன்னும் ப்ல மனித சமுதாயங்கள் ஆதிவாசிகளாகவே வாழ்கின்றனர்.அவர்கள் குடும்ப அமைப்பு கூட வித்தியாசமாக் இருக்கிறது.இனக்குழுக்களாக வாழும் அவர்கள் கிடைக்கும் பொருள்களை பகிர்ந்து வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களின் வாழ்வு ஒரே மாதிரியாக இருக்கும்.ஒருவரின் பிறப்போ இறப்போ கூட விளைவுகளை ஏற்படுத்தாது.தனிப்பட்ட ,தனிக்குடும்ப அமைப்பு இல்லாத சமுகத்தில் இந்த சோதிடத்திற்கு வாய்ப்பு இல்லை.விலங்குகளுக்கும் சோதிடம் பொருந்தாது. மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கு என்றால் அவ்னுக்கு பொருந்துமா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.சோதிடம் உண்மையாக வேண்டுமென்றால் கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையானால் மட்டுமே வாயப்பு உள்ளது.ஆக சோதிடம் பரிணாம கொள்கைக்கு எதிரானது.சோதிடம் என்பது என்ன ?அது எவ்வாறு கணிக்கப்படுகின்றது? அது உண்மையாகும் வாய்ப்பு எவ்வளவு? என்பதை இப்பதிவுகளில் பார்ப்போம்.(இந்திய சோதிடம் என்பது கிரேக்கத்தில் இருந்தே வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அலெக்சாண்டரின் படையெடுப்பும்,பல கிரேக்கர்கள் இங்கேயே தங்கி விட்டதும் இக்கலையை இங்கு பரப்பியிருக்க வேண்டும்.யவனஜாடகா(சாண்டில்யன் யவன ராணி ஞாபகம் வருகிறதா?) என்னும்( பொ.மு 200 ல்) சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் இந்திய சோத்டத்தில் மிக பழமையானதாகும். கிரகங்கள் ஆண் பெண் என்று பிரிப்பது கூட கிரேகக புராண் கதைகளை அடிப்படையாக கொண்டதாகும்.(.தென்)இந்திய சோதிடம் அல்லது வேத ஜாதக முறை என்பது வராக மிகிரார்(பொ.ஆ 505_587)  எழுதிய ப்ரஹா சம்ஹிதா என்னும் சம்ஸ்கிருத நூலை ஆதாரமாக கொண்டது.அதற்கு முன் எகிப்து,மெசபடோமிய ,கிரேக்க நாகரிகங்களிலும் சோதிடம் இருந்தமைக்கு ஆதாரங்கள் உண்டு.

சோதிடம் உண்மையாக வேண்டுமெனில் இவையும் நிரூபிகப்படவேண்டும்.

1.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன்,பரிணாமக் கொள்கை தவறு.

2.கிரேக்க,இந்திய புராணக் கதைகள் அனைத்தும் வரலாறு ஆகும்.

3. இந்த சோதிட நூல்களில் சொல்லப்படும் வானவியலே சரியானது.

4.இது நாகரிகமடையாத ஆதிவாசி இனக்குழுக்களுக்கு பொருந்தாது. 


கிரகங்களின் நகர்வுகள் ஒவ்வொரு மனிதர்களையும் கட்டுப்படுத்துகிறது என்னும் போது மனிதனுக்கு சுய சிந்தனை(self will) செயலாற்றல் உண்டா என்னும் கேள்வியும் வருகின்றது.பொதுவாக சோதிடம் என்பதும், கடவுள் ஏற்கெனவெ எல்லாவற்ரையும் தீர்மானித்து விட்டார் அதன்படி மட்டுமே நம்மால் நடக்க முடியும் என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை..சோதிடத்தில் கடவுள்(கள்)ன் இருப்பு அவசியமா என்பதும் சிந்திக்கப் பட வேண்டிய விஷயமே.


இந்த காணொளிகள் வேத சோதிடத்தை பற்றி ஒரு நடுநிலையான ,விளக்கமான் குறிப்புகளை தருகின்றன. இதனை பார்த்தால் சோதிடத்தின் மீதுள்ள‌ நம்பிக்கை ஒழியாது போனாலும் அதன் எல்லைகளை உணர முடியும்.பொழுது போகவில்லை என்றால் சும்மா பாருங்கள். சோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.கற்றுக் கொண்ட பின் பலருக்கு கணித்து பிற கணிப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள். சோதிடத்தை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள் என்பதே என் வேண்டுகோள். 
http://mathinamaideen.webs.com/




Is Your Destiny in the Stars Horoscope Astrology

3 comments:

  1. சோதிடம் உண்மையாக வேண்டுமெனில் இவையும் நிரூபிகப்படவேண்டும்.

    1.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன்,பரிணாமக் கொள்கை தவறு.
    2.கிரேக்க,இந்திய புராணக் கதைகள் அனைத்தும் வரலாறு ஆகும்.
    3. இந்த சோதிட நூல்களில் சொல்லப்படும் வானவியலே சரியானது.
    4.இது நாகரிகமடையாத ஆதிவாசி இனக்குழுக்களுக்கு பொருந்தாது.

    சரியான சாட்டையடி ......

    ReplyDelete
  2. ஆரம்பக் கால மனிதனின் வானவியலைக் கண்டறிந்தான்.. வானவியலுக்கு வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினான் .. பின்னர் ? வானவியல் ஜோதிடமாக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டது .. ஆனால் இன்று வானவியல் தனி அறிவியலாக வளர்ந்த பின்னரும் ஜோதிடத்தையும் நம்பி வருவது காமேடியாக இருக்கின்றது .

    ReplyDelete
  3. 3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
    என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    Volume :3 Book :59

    ReplyDelete