Monday, May 9, 2011

வரலாற்று இயேசுவை தேடி 4.இயேசுவின் பிறந்த தேதி என்ன?இத்தொடரின் கிறித்தவர்களால் இறைமகன் எனவும் ,இஸ்லாமின் ஒரு  இறைதூதராகவும் அறியப்படும் திரு இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்தாரா,அதற்கான ஆதாரங்கள் பற்றியே விவாதித்து வருகிறோம். இப்பதிவில் இயேசுவின் பிறப்பு பற்றியும் அவர் பிறந்த தேதி ஆதாரபூர்வமாக கணக்கிட முடியுமா என்பதனை பார்ப்போம்.

அனைவருக்கும் ஆங்கில கால அளவு இரு பிரிவுக‌ளாக கி.மு(கிறிஸ்துக்கு முன்) ,கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) பிரிக்கப்ப்ட்டு பபயன்பாட்டில் இருப்பது தெரிந்ததே.அதுபோல் டிசம்பர் 25 கிறிஸ்மஸ்(கிறிஸ்துவின் பிறப்பு) என்பதும் தெரியும்..பிறகென்ன‌ கி.பி 0[கி.மு 1] வருடம்,டிசம்பர் 25ல் ,வால் நட்சத்திரத்தில் சுப‌யோக, சுப இலக்கினத்தில் அவதரித்தார் இறைவனின் திருமகன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடாமல் என்ன ஆராய்சி என்று கேட்கிறீர்களா

அது எப்படி ?ஒருவர் ஏதாவது சொன்னவுடன் அவர் சொல்வது சரியா என்று ஆதாரபூர்வமாக சரிபார்ப்பது என் இயல்பு.அத்தகைய தேடல்களையே பதிவிட்டு வருகிறேன்.சென்ற பதிவுகளை படித்தவர்களுக்கு திரு இயேசுவின் வரலற்றை ,புதிய ஏற்பாடு(1 to2 நூற்றாண்டு) தவிர சில வரலாற்று குறிப்புகள் மட்டுமே உள்ளன‌ என்பது தெரியும்.. அந்த் வரலாற்றுக் குறிப்புகள் கூட இயேசுவின் பிறப்பை புதிய ஏற்பாட்டின் அடிப்ப்டையிலேயே கூறுகின்றன.சமகால வரலாற்று அறிஞர் திரு ஜோசஃபஸ் பிறப்பு (தேதி) குறித்து எதுவும் கூறவிலை என்றாலும் சில வரலாற்று நிகழ்வுகளாக அவர் குறிப்பிடுவதை வைத்து,புதிய ஏற்பாட்டு ஆகமங்களுடன் ஒப்பிட்டு கண்டு பிடிக்க முயல்கிறேன்.


முதலில் புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் அவர் பிறப்பு எவ்வாறு கூறபட்டு உள்ள‌து என்பதை பார்ப்போம். மத்தேயு,லூக்க இருவரும் பிறப்பை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளனர்.மாற்கு,யோவான் இருவரும் இதனை பற்றி ஒன்றும் கூறவில்லை.அவற்றை வாசியுங்கள்.
__________________________
மத்தேயு
1 அதிகாரம்

18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
____________
2 அதிகாரம்

1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

3. ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
*               * *********

லூக்கா
2 அதிகாரம்

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.

3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.

4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,

5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.

6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.

7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
******
லூக்கா
3 அதிகாரம்

1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,

2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

இதில் இருந்து நமக்கு ஆய்வுக்கு உதவுவது சில வசன‌ங்கள் மட்டுமே அவையாவன.
___________________
மத்தேயு(2 அதிகாரம்)

1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
____________________
லூக்கா
2 அதிகாரம்

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
.....
16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்த
_____________________
லூக்கா(3 அதிகாரம்)
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
..........................
21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;

22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.
_______________

இதில் இருந்து இந்த வரலாற்று கூற்றுகளை கூறலாம்.

1.இயேசு பிறந்த போது இரோம அரசர் அகஸ்டஸ் சீசர்

[.பிறப்பு 3 September 63 BC (Roman calendar)_இறப்பு:19 August AD 14 (Julian calendar) (aged 75),அரசாட்சி:16 January 27 BC – 19 August C.E 14
(40 years, 215 days)]

2.கலிலேயா(அப்போதைய பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி)வின் அரசன் ஏரோது.
[பிறப்பு:73/74 BCE__இறப்பு:4 BCE (aged 70),அரசாட்சி:37BCE–4 BCE

3.சீரியா நாட்டிலே சிரேனியு[Cyrenius 51 BC - AD 21)] என்பவர் அரசாண்டார்.

4. திபேரியுஸ் சீசர் (அகஸ்டஸ் சீசரின் வாரிசு) அரசாட்சி ஏற்று 15 வருடங்களுக்கு பிறகு யோவான் தன் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.அப்போது இயேசுவிற்கு 30 வயது
[.பிறப்புNovember 16, 42 BC__ இறப்பு:March 16, C.E 37 (aged 77),அரசாட்சி :18 September 14 C.E,16 March  to 37 C.E(22 years, 183 days)]

___________

இதில் இருந்த நாம் விளங்குவது.

1.இயேசுவின் பிறந்த தேதி குறிப்பிட்டு சொல்ல முடியாது.டிசம்பர் 25 என்பது சூரிய கடவுளின் பிறப்பை கொண்டாடிய இரோம மக்கள் இயேசுவின் பிறந்த நாளாக மாற்றிவிட்டனர்.

2.அரசன் ஏரோது பொ.மு 4ல் இறந்து விடுகிறார்.இதனை ஜோசஃபசும் உறிதிப்படுத்துகிறார். இன்னும் இயேசு பிறந்த பின் அவ்வயது குழந்தைகளை கொல்ல ஆணையிட்டதாக (மத்தேயு 2.16)ல் படிக்கிறோம்.
ஆகவே குறைந்த பட்சம் இயேசு பொ.மு 4கு முன்பே பிறந்து இருக்க வேண்டும்.

3.திபெரியஸ் அரசு பொறுப்பேற்றது பொ.பி 14 ஆக 14+15=பொ.பி 29 என்றால் இயேசு குறைந்த  பட்சம் பொ.மு 2அல்லது 3 ல் பிறந்து இருக்கலாம்
.
முடிவாக திரு இயேசு என்பவர் பொ.மு(BCE)  4க்கு முன்னரே பிறந்து இருக்க வாய்ப்பு உள்ளது.ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்தே நாள்காட்டி ,மக்கள் தொகை கணக்கிடும் வழக்கம் இருந்து வந்துள்ள‌து.பொ.மு 6ல் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடந்துள்ளது.முதலில் ஜூலியன் காலண்டர் எனவும் பிறகே ரோமன் காலண்டர் எனவும் நாள்காட்டி அழைக்கப்பட்டது.

போப் கிரிகாரியன் XIII ரோமன் காலண்டரை கிரிகாரியன்(கிறித்தவ) நாள்காட்டிகயாக மாற்றினார்.அதனாலேயே ரோம நாள்காட்டி கிறித்துவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு (புதிய ஏற்பாட்டின் படி) சுமார் பொ.மு 6 ல் இருந்து பொ.மு 4க்குள் என்று அறுதியிட்டு கூறலாம்.தேதி கூற முடியாது,தேதி இதுவரை யாராலும் சரியாக கூற இயலவில்லை
__________
குறிப்பு
பொ.மு:பொது வருட‌த்திற்கு முன்:B.C.E: Before Common Era
பொ.பி:பொது வருட‌த்திற்கு பின் C.E:Common Era
5 comments:

 1. பைபிளின் பழைய ஏற்பாட்டை அப்படியே காப்பியடித்து நவீனமாக்கியதுதான் குரான் என்று பேசப்படுகிறதே உண்மையா நண்பரே?

  ReplyDelete
 2. நண்பர் யாசிர்,
  எளிதாக கேட்டு விட்டீர்.பதில் கொஞ்சம் கடினம்தான்.தெரிந்தவரை கூறுகிறேன்.
  பைபிள்,தோரா இன்னும் சில புத்தக்ங்களில் கூறப்ப்பட்ட சில விஷயங்கள் (பல கதைகள்) குரானிலும் அப்படியே,சில சம்யம் கொஞ்சம் மாற்றங்களுடனும் சொல்லப் படுகிறது. குரானின் உண்மையான ஆதபூர்வமான வரலாறு கிடைத்தால் மட்டுமே உங்கள் கேள்விக்கு சரியாக விடை கூற முடியும்.

  குரான் வரலாறு பற்றி சில குறிப்புகள் தருகிறேன்.

  1.குரான் வரலாறாக மதவாதிகளால் சொல்லப்படுவதை நடுநிலைமை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
  2.இஸ்லாமிய நாடுகள் குரன் மீதான அகழ்வாராய்வு,வரலாற்று,மொழியியல் ஆய்வுகள் நடத்த‌ விடுவதில்லை.
  3.அவர்கள் சொல்லும் பல குரான் மீதான விஷயங்களுக்கு,அவர்களின் அங்கீகரிக்கப் பட்ட பிற புத்தகங்களிலேயே ஆதாரம் இருப்பதில்லை.
  4.இப்போதுள்ள குரானுக்கும் ,குரானின் பழைய பிரதிகளான சாமர்கண்ட்,டொகாப்பி இப்போதுள்ள குரானுடன் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது.
  http://debate.org.uk/topics/history/bib-qur/qurmanu.htm
  இப்போது மதவாதிகள் குரான் முழுவதும்(?) முகமதுவின் காலத்தில் பலரால் மனனம் செய்யப் பட்டு இருந்தது இருந்தாகவும் அவர்களிடனம் இருந்து பரம்பரையாக ஒலி வடிவமாகவே பாதுகாக்கப் பட்டதாக கூறுவதற்கு அவர்களின் ஹதிதுகளில் ஆதாரம் நான் அறிந்தவரை இல்லை. வெவ்வேறு பிரிவு இஸ்லாமியர்கள் வெவ்வேறு ஹதித்களை பயன்படுத்துகின்றனர்.
  யாராவது குரான் வரலாற்றை வர்களின் ஹதிதுகளின்படி மட்டும் பதிவிட்டால் நலமாக் இருக்கும் இது குறித்து நான் எழுதிய இரு பதிவுகள் இப்பிரச்சினையின் சில அம்சங்களை விவாதிக்கிறது.

  குரானா? இல்லை குரான்களா?
  http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_22.html

  குரான் ஹதித் கதைகள் எங்கிருந்து வந்தது?
  http://saarvaakan.blogspot.com/2011/04/blog-post_09.html

  ReplyDelete
 3. மதவெறி எப்போது ஏற்படுகின்றது?
  என் மத புத்த்கம் தோன்றியதாக கூறப்படும் விஷயங்கள் மிகவும் சரியானது என்று நம்ப ஆரம்பித்துவிட்டால் மதம் குறித்த அனைத்து கொள்கையாக்கங்களை நடைமுறைப் படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வான்.
  ஆக்வே மத புத்தகத்தின் உண்மையான வரலாறே மத வெறிக்கு மருந்து.நடுநிலையான மனதோடு இது குறித்த குறிப்புகளை தேடும்போது ,மதவாதிகளால் சொல்லப்ப்டும் பல விஷயங்கள் ஆதாரமற்று இருப்பதை உணர்வீர்கள்.

  ReplyDelete
 4. நண்பர் சார்வாகன்
  ஓரளவு புரிந்து கொண்டேன் நண்பரே
  //மத வெறி எப்போது ஏற்படுகிறது?//
  மத புத்தகங்களை படிக்காமலிருந்தாலே இது தானாக குறைந்து விடும் என்றே எண்ணுகிறேன். இன்றைய சூழலில் மத நூல்களைப் படிக்க வேண்டிய அவசியம் தான் என்ன? படித்தவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறார்களா? அல்லது படிக்காதவர்கள் ஒழுக்கக் கேடர்களா? மத நூல்கள் இல்லாமல் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியாதா? இப்பவும் மத நூல்கள் பரன் மேல் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. சடங்குகளுக்கும் சாவுக்கும் எடுத்து ஓதப்படும் நூலால் நாட்டிற்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது? அதைப் படித்தால் தான் வேலையில்லாத் திண்டாடம் தீரும் என்ற நிலை உண்டா? பசி வருமைதான் தீருமா? எந்த வகையில் மனிதவாழ்வுக்கு பயனளிக்கிறது? ஆதிகாலத்தில் பயன்பட்டதை ஆயிரமாண்டு காலத்திற்கும் கடைபிடி என்பதில் அர்த்தமில்லை.

  ReplyDelete
 5. //மத புத்தகங்களை படிக்காமலிருந்தாலே இது தானாக குறைந்து விடும் என்றே எண்ணுகிறேன்.//
  அது மட்டுமல்ல நண்பரே,
  அவை அனைத்தும் முற்காலத்தில் எழுதப்படவை.அக்கால யதார்தத்தையே பிரதிபலிக்கின்றன.அதில் உள்ள அனைத்துமே எக்காலத்திற்கும் பொருந்தும் என்பது சரியல்லஇப்படி பரப்புரை செய்யும் மதவாதிகள் தனிமைப் படுத்தப்பட வேண்டும்.ஆகவே அவ்ற்றையும்,அவ்ற்றை எழுதியவர்கள் மீதும் தவறு காண‌ முடியாது.அவ்ற்றில் இருப்பதில் மனித நேயம் காக்கும் விஷயங்களை பின்பற்றினால் போதும்.சில விஷயங்களை அக்கால சூழ்நிலைக்கு மட்டுமே சொல்லப்பட்டது எனவும்,அரசியலமைப்பு சட்டங்கள் மத சார்பற்றதாக இருக்க வேண்டும்,மதம் கலக்க கூடாது என்று அனைவரும் ஒத்துக் கொண்டால் மதத்தினால்,மத புத்தக்த்தினால் பிரச்சினை வராது .
  வருகைக்கு நன்றி.அப்புறம் நீங்கள் விரும்பிய திரைப்படம் பார்த்தீர்களா?அடுத்த விருப்பம் என?
  நன்றி

  ReplyDelete