சவுதியில் 1957ஆம் ஆண்டு பிறந்த செல்வந்தரான் திரு ஒசாமா பின் லேடன் இரு நாட்களுக்கு முன் அமரிக்க இராணுவப்படையால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கொல்லப்பட்டது அவர்தானா என்றும் சில வதந்திகளும் வெளிவரத் தொடங்கி உள்ளது.
நம் பங்கிற்கு இந்த மரணத்தில் இருந்து நமக்கு என்ன புரிதல் ஏற்படுகின்றது என்பதை மட்டும் இப்பதிவில் பார்ப்போம்.ஒரு முக்கியமான கருத்தை மனைதில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.அதாவது இப்போதைய கால கட்டத்தில் ஊடகங்கள் ஒரு மனிதர்,நாடு,மதம் பற்றிய பிம்பங்களை கட்டியமைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.அந்த பிம்பங்கள் உண்மையாக இருக்குமா என்று சரிபார்க்கும் வாய்ப்பு எப்போதும் இருப்பதில்லை
பொதுவாக இந்த ஊடகங்கள் மூலமாகவே நாம் ஒசாமா பற்றி அறிந்துள்ளோம்.அவற்றை சுருக்கமாக கூறினால்.
1.இவர் சவுதியில் உள்ள ரியாத்தில் பிறந்தார்.சவுதி அரச குடும்பத்தோடு நெருக்கமான தொடர்புள்ள குடும்பம்.
2.சவுதி ஜெத்தாவில் உல்ல கிங் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் கட்டுமான பொறியியல் ப்ட்டம்(1979) பட்டம் பெற்றதாகவும்,கல்லூரி படிப்பின் போதும் மிகுந்த மத ஈடுபாட்டுடன் குறிப்பிட்ட கொள்கையாகத்திலும் பிடிப்பிலும் இருந்தார் என்றும் கூறப்படுகின்றது.இந்த கொள்கையாகக்ம் எது என்று கூற விரும்பவில்லை தேவையற்ற மறுப்புகள், விவாதங்கள் அவசியமற்றது.
3.ஒசாமா 1979 முதல் 1989 வரை பாகிஸ்தான் பெஷாவரில் தங்கி இருந்ததாகவும் ஆப்ரேஷன் சைக்லோன் என்ற அமரிக்க திட்டத்தின் படி சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய முஜாகிதீன் என்ற ஆயுதக் குழுவிற்கு உதவி செய்துள்ளார்.ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை இஸ்லாமின் மீதான ஆக்கிரமிப்பாக காட்டி,பல இஸ்லாமிய,அரபு நாடுகளில் இருந்து பல இளைஞர்களை அழைத்து வந்து போரில் ஈடுபடுத்தியதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
4.1988ல் சொவியத் தன் துருப்புகளை ஆப்கனில் இருந்து வெளியேற்றியதும் தலிபானகள் ஆட்சி பொறுப்பேற்றதும் இவர் புகழ் இஸ்லாமிய நாடுகள் எங்கும் பரவியது.
5. பல இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.1988ல் அல்கொய்தா இயக்கத்தை ஆரம்பித்தார்.1990ல் சவுதிக்கு திரும்புகிறார்.
6. சதாம் ஹுசைனின் குவைத் ஆக்கிரமிப்பு நிகழ்வு(ஆகஸ்ட் 2,1990) சவுதி அரசை பெரும் நிர்ப்பந்தத்தில் ஆழ்த்துகிறது.குவைத்தை கைப்பற்றிய சதாம் ஹுசைன் சவுதியையும் கைப்பற்றி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டதும் அமரிக்கா உட்பட்ட மேலை நாடுகளின் கூட்டுப் படைக்கு த்னது நாட்டில் தளம் அமைத்து கொடுத்தது.
7. ஒசாமா ,சவுதி அரசர் ஃபாகத் ஐ சந்தித்து இஸ்லாமியரல்லாத படைகளின் உதவி வேண்டாம் ,த்னது அல் கொய்தா மற்றும்,முஜாகிதீன் உதவியுடன் சதாம் ஹுசைனை முறியடித்துவிடலாம் என்று கூறுகிறார். அரசர் ஃபாகத்திற்கு தெரியும் ஒருவேளை இதனை ஏற்று குவைத்தை மீட்டால், ஒசாமா சவுதி ஆட்சியை பிடித்து விடுவார் தன் குடும்பம அதோ கதி என்பதை உணர்ந்தார்.
8.ஆகவே அமெரிக்காவின் உதவி ஏற்றுக் கொண்டு சதாம் ஐ தோற்கடிக்க அரசர் ஃபாகத் உதவி செய்தார்.
9.ஒசாமா சவுதி அரசை குறை கூற ஆரம்பித்தார். 1992ல் சூடானுக்கு சென்று த்னது பயிற்சி கொடுக்கும் மையத்தை செயல் படுத்துகிறார்.அங்கிருந்து சவுதி அமெரிக்க ஆதரவு பெற்றதை குறை கூறி வந்ததால் சூடான் மீது சவுதி அரசியல் அழுத்தம் கொடுத்து ஒசாமாவை வெளியேற்ற முனைந்தது.
10.ஒசாமா 1995ல் சவுதி குடியுரிமை இரத்து செய்யப்பட்டது,அவர் குடும்பத்தினர் அவரோடு எந்த் தொடர்பும் கிடையாது என்று கூறிவிட்டனர்.
11. சூடானுக்கு பிரச்சினை என்பதால் 1996ல் திரும்பவும் ஆப்கானிஸ்தான் செல்கிறார் ஒசாமா.
12. 1992 முதல் 2001 வரை ஒசாம அல் கொய்தா பல குண்டு வெடிப்புகள், தாகுதல்கள் நடத்தினார். அவரை அமெரிக்க மேலை நாடுகள் தேட ஆரம்பித்தன.
13.செப்டம்பர் 11,2001 அமரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு முதலில் மறுத்த ஒசாமா பிறகு பொறுப்பேற்றுக் கொண்டார்.
14.அமெரிக்கா 2001ல் ஆப்கன் மீது தாக்குதல் நடத்தில் ,ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது.தலிபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் இன்று வரை ஆப்கன் அரசியலில் ஒரு சக்தியாகவே இருந்து வருகின்றனர்.
15.ஆப்கன் பாகிஸ்தான் எல்லையில் ஒசாமா இருப்பதாக கூறப்பட்டதை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது.இந்த சூழ்நிலையில் மே 2 ,20011 அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் வைத்து சுட்டு கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.சில புகைப்படங்கள் மட்டும் வெளியானது.
16மரபணு பரிசோத்னை செய்து உறுதிப்படுத்தப்ப்ட்டதாகவும் செய்திகள் வந்தன.மத சடங்குகளுக்கு பின் சடலம் கடலில் வீசப்பட்டதாக கூறப்படுவது குழப்பத்தையும் சந்தேகத்தையுமே ஏற்படுத்துகிறது.
முடிவுரை
இன்னும் பல விஷயங்களை கூற முடியவில்லை ஏனெனில் இதில் பல விவரங்கள் அடங்கியுல்ளன்.
அ) இவர் ஆப்கன் சென்று அமெரிக்காவிற்கு உதவியாக சோவியத்திற்கு எதிரான முஜாகிதீன் போராட்டத்தை வெற்றி பெற்ச் செய்ததை மட்டும் செய்து விட்டு,வேறு செயல்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால், இன்னும் நாயகராகவே வலம் வந்து இருப்பார்.ஏதாவது நாட்டுக்கு அரசராக கூட ஆகி இருக்கலாம்.தன்னை பற்றிய கூடுதல் மதிப்பீடே காரணம் எனலாம்.இவர் எதற்காக இதையெல்லாம் செய்தார் என்பது ஒசாமாவிற்கே வெளிச்சம்.
ஆ)யார் நாயகன்,தீவிரவாதி என்பதை அமெரிக்கா ,மேலைநாடுகள் சார்ந்த ஊடகங்களே தீர்மானிக்கின்றன.
இ).பலருக்கும் இந்த மரணத்தில் நிம்மதி.
i) ஒபாமாவிற்கு மக்களிடையே மதிப்பு கூடலாம்.மீண்டும் தேர்ந்தெடுக்கப் படும் வாய்ப்பு அதிகம் ஆகலாம்.
ii)மதவாதிகளும் ஒசாமா மத கருத்துகளை தவறாக பிற்காலத்தில்(i.e அமெரிக்காவை எதிர்க்க ஆரம்பித்த பிறகு!!!!) புரிந்து செயல் பட்டவர்.அவர் செய்தது மதத்தின் படி தவறு என்று கூறி விடுவர்.
iii) சவுதி அரசு,இதர எண்ணெய் வள நாடுகள் அமெரிக்க நட்பில் ,பாதுகாப்பில் இருக்க வேண்டிய கட்டாயத்தையும் வெளிப்படுத்துகிறது.
சவுதி அரசு தனது அமரிக்க ஆதரவு போக்கை மறைக்கவே த்ன்னை ஒரு மத சார்புள்ள ,மத கோட்பாடுகளை காக்கும் நாடாக காட்டி வருகிறது.மத பிரச்சாரங்களுக்கும் பயிற்சி அளித்து உலகமெங்கும் பரப்புரை செய்கிறது.எண்ணெய் வளம் உள்ளவரை (சரியாக தெரிந்து கொள்ள இவ்விணயப் பக்கத்தின் பக்கதின் கீழ் உள்ள புவி காலக் கணக்கீட்டு அளவைகளை காணவும்.) இதுவும் தொடரும்.
//சடலம் கடலில் வீசப்பட்டதாக ..//
ReplyDeleteஇப்படி இஸ்லாமிய முறையின்றி விடப்பட்டவர்களுக்கு ‘சுவனம்’ கிடைக்காது என்பது இஸ்லாமியரின் நம்பிக்கையா? இக்கருத்தோடு ஒரு கட்டுரையை இந்துவில் நம் நாட்டு படைத் தளபதி எழுதியதாக நண்பன் கூறினான். இதுவே இறப்பவர்களுக்கான பெரிய தண்டனை என்று கூறியதாக அறிகிறேன்.
உண்மையறிய ஆவல்.
ஷாரியாவின் படி சடலம் கடலில் எறிவதென்றால் மரணம் கப்பலில் பயணம் செய்தபோது ஏற்பட்டதாக இருந்தால் மட்டுமே என்று இச்சுட்டியில் ஒரு மதகுரு கூறுகிறார்.
ReplyDeleteஎனக்கும் இதே சிந்தனை எற்பட்டது.இறை மறுப்பாளர்கள் எது சரியான மத சடங்கு என்பதை நன்கு அறிகிறோம்,அறிய முயற்சிக்கிறோம் என்பதையே காட்டுகிறது.
நன்றி
http://blastmagazine.com/the-news/national/bin-ladens-islamic-burial-a-divided-reaction/
http://news.yahoo.com/s/ap/20110502/ap_on_re_mi_ea/ml_bin_laden_sea_burial