எரிபொருள் என்பது நவீன உலகில் மிக அதிகமாக தேவைப்படும்,பயன் படுத்தப்படும் ஒன்றாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.எண்ணெய் என்பதே முக்கியமான் எரிபொருள் ஆக இருப்பதால் ,இவ்வளம் பொருந்திய நாடுகள் சார்ந்த அரசியல் உலகில் முக்கிய இடம் வகிக்கிறது.உலகின் எண்ணெய் இருப்பு சுமார் 1.2 ட்ரில்லியன் பேரல் ஆகும்.தினமும் சுமார் 80_90 மில்லியன் பேரல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.இந்த எண்ணெய் வளம் 40_50 வருடம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படி எனில் சின்ன கணக்குதான்!!!
1.2*1000*1000/(80*365)=41 வருடம்==15000 நாட்கள்
இச்சூழ்நிலையில் ஒரு தமிழ் பதிவு படிக்க நேர்ந்தது. அதில் கடல் நீரை எரிபொருளாக மாற்றும் முறையை ஒரு பொறியாளர் கண்டுபிடித்தார் என்றும், வழக்கம் போல் இது அன்றே எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்ற பல்லவி பாடப்ப்ட்டும் இருந்தது..
அந்த பொறியாளர் பற்றியும்,அந்த முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
திரு ஜான் கான்ஞியஸ்( அமெரிக்கவில் உள்ள ஃப்ளோரிடா மநிலத்தை சேர்ந்தவர்.மார்ச் 1,1944ல் பிறந்த்வர்.மிண்ணனுவிய்ல் பொறியாளரான இவர் மின் காந்த அலைகள் மூலம் கேன்சரை குணப்படுத்தும் முறை ஒன்றை கண்டு பிடித்ததாக கூறப்படுகின்றது. கேன்சர் என்றால் கட்டுப்பாடற்ற,தேவையற்ற உடல் செல் வளர்ச்சி[uncontrolled growth of abnormal cells] என்று வரையறுக்கலாம்.இவர் வடிவமைத்த கருவி மூலம் மி.கா அலைகளை உருவாக்கி அதனை கேன்சர் உள்ள உடல் பகுதியின் மீது செலுத்தும் போது அச்செல்கள் இறந்து விடும் என்பது இவருடைய கண்டு பிடிப்பு.இதற்கு காப்புரிமை பெற்றுள்ளார்.இதன் பயன் பாடுகள் குறித்து விவாதிக்காமல் இந்த கருவியின் இன்னொரு பயன்பாடான கடல் நீரை எரிபொருள் ஆக மாற்றும் முறை பற்றியே விவாதிப்போம்..
இக்காணொளி பாருங்கள்!!!!
இந்த மின் காந்த அலைகலை கடல்நீரின் மீது செலுத்தினால் அது எரிபொருள் ஆகிறது என்பதே இவரின் கண்டுபிடிப்பு.உண்மையில் இவருடைய கண்டுபிடிப்பு உப்பு நீர் எரிபொருளாக் மாறுவதை கூறுகின்றது ,அத்னை ஊடகங்கள் கடல் நீர் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டன.இதுவும் சரிதான் என்பதால் கடல் நீர் மட்டுமல்ல உப்பு நீரும் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதே திரு கான்ஞியஸின் கண்டுபிடிப்பு ஆகும்.
அது எப்படி மின் காந்த அலைகளை உப்புநீரில் செலுத்தினால் எரிபொருள் ஆகும் என்று கேட்கிறீர்கள்.நல்லது. அறீவியலில்(மின் வேதியியல்) மின் பகுப்பு என்று ஒரு செயல் பற்றி படித்ததை நினைவு கூறுவோம். நீரில் இரு மின் முனைகள்(Electrodes) இட்டு அதில் முறையே நேர்,எதிர் மின்னூட்டங்க்களை செலுத்தினால் நீரானது ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன் ஆக பிரியும் என்பதுதான் மின் பகுப்பு எனப்படுகிறது. இது நீருக்கு மட்டுமல்ல எந்த ஒரு கரைசலுக்கும் பயன்படுத்த முடியும் என்றாலும் அது இப்பதிவிற்கு தேவையற்றது என்பதால் நீரை மின் பகுப்பு செய்தால் கிரடைக்கும் ஹைட்ரஜன் ஒரு எரிபொருள் ஆகும் என்பதையே விவாதிப்போம்..
இந்த மின் பகுப்பின் எதிர்வினை ஃபுயல் செல்(Fuel cell) என்படும் மின் வேதி மாற்றம் ஆகும்.அதாவது ஹைட்ரஜனையும்,ஆக்ஸிஜையும் சரியான விகிதத்தில் கல்ந்து ,சில வினைகளுக்கு உட்படுத்தினால் மின்சாரமும்,(தூய்மையான்) நீரும் கிடைக்கும்.ஆஆக்வேதான் ஹைரட்ரஜன் தயாரிக்க அறிவியலாளர்கள் அரும்பாடு படுகிறார்கள்.ஆகவே கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன்(எரிபொருள்) என்பது ஒரு கல் இரு மாங்காய் (மின்சாரம்+குடி நீர்).
இப்போது மின்பகுப்பு மூலம் கடல்நீரை பிரித்து ஹைடரஜன் தயாரித்தால் போகிறது என்று சொல்கிறீர்களா? அப்புறம் ஒரு கல் இரண்டு மாங்காய் எளிதில் அடிக்கலாம் என்றா?.
Life is not that much simple!!!!!!!!!
Life is not that much simple!!!!!!!!!
10 யூனிட் மின்சாரம் செலவு செய்து மிபகுப்பினால் 'X' அளவு ஹைட்ரஜன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்த "X" அளவு ஹைட்ரஜனை கொண்டு ஃப்யல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொது 10 யூனிட்டை விட அதிகமாக மின்சாரமும், அந்த உபரி அளவு இந்த முறைக்கான செலவை எவ்வளவு வருடங்களில் ஈட்டும் என்பதே பிரச்சினை.
இதுவரைக்கும் திருப்தியான முடிவு எட்டப்படவில்லை என்பதே உண்மை.ஆகவே ஹைட்ரஜனை மின் பகுப்பு அல்லாமல் வேறு முறைகளில் குறைந்த செலவில் தயாரிக்க ஆய்வுகள் உலகெங்கும் நடை பெறுகிறது.
இப்போது திரு கான்ஞியஸ் கூறுவது என்ன?
உப்பு நீரில் மின்காந்த அலைகளை செலுத்தினால் எரிபொருள் உண்டாகும் (மைக்ரோ வேவ் ஓவன் மாதிரியா!!!) என்று.அவர் அவருடைய முறையை சரியாக விளக்கவில்லை.எரிபொருள் என்பது ஹைட்ரஜன் மட்டுமே வாய்ப்பு உண்டு.நேரடியாக மின்சரம்(மின் பகுப்பு) இல்லாமல் மின்காந்த அலைகளாக மாற்றி உப்பு நீரில் செலுத்தும் போதும் ஹைட்ரஜனாக மாறலாம்,அது எரியவும் செய்யலாம்.ஹைட்ரஜன் இலேசாக இருப்பதால் அவர் பயன் படுத்திய சோத்னைக் குழாயின் மேல் பகுதிக்கு வந்து எரிவது நம்ம எரிவாயு அடுப்பு மாதிரிதான்.
இங்கும் அவருடைய கருவிக்கு பயன் படுத்தப்படும் மின்சாரத்தின் அள்வுக்கும்,ஹைட்ரஜன் தயாரிப்புக்கும் என்ன விகிதமோ,அது சாதாரண மின்பகுப்பு முறையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே பலன்.
முடிவுரை
1.நிச்சயமாக இலாபகரமாக்(efficient) இருக்காது என்று ஒரு மின்னியல் பொறியாளனாக என்னால் கூற முடியும்.எப்படி என்று விவாதிக்கும் நண்பர்களுக்கு கூறுகிறேன்.
2. இதன் மூலம் பெரிய அளவில் ஹைட்ரஜன் தயாரிக்க முடியாது.மின் காந்த அலைகளின் மின் சக்தி எவ்வளவு என்று யோசித்தால் உங்களுக்கு இது புரிந்து விடும்.
3.ஆகவே இது கொஞ்சம் சோத்னை குழாயில்(சரி போனால் போகுது ஒரு பெரிய பீப்பாய்) நீரை எடுத்து ஹைட்ரஜனாக மாற்றி எரித்து விளையாட்டு காட்ட முடியுமே தவிர பெரிய அளவில கடலையே மின் காந்த அலைகளால் பகுத்து எரிபொருளாக மாறி எரிய வைக்க முடியுமா என்று யோசித்து கொள்ளுங்கள்.இந்த செயல்ஒரு மூடப்பட்ட கொள்கலனில் மட்டுமே நடத்த முடியும் திறந்த கடல் பரப்பின் மீது மி.கா அலைகளை செலுத்தி ஹைட்ரஜன் உருவாக்க முடியுமா என்றுகான்ஞியஸ் கூறவேயில்லை.இது மிகைபடுத்தப்பட்ட மத வி(அ)ஞ்ஞான கற்பனை.ஏன் இப்படி அபசகுனமாய் பேசுகிறீர்கள் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பையே மறுக்கிறீர்களே என்கிறீர்களா.!!!!.
இக்கட சூடண்டி!!!!!!!!!!!!!!
அ) இம்முறைக்கு காப்புரிமை கிட்டவில்லை.
ஆ)மதிப்பிற்குறிய கான்ஞியஸ் கடந்த பிரவரி 18,2009 அன்றே இறந்துவிட்டார்.அவருடைய ஆய்வுகூட இணைய தளத்தில் இம்முறை பற்றி இப்போது எந்த செய்தியும் இல்லை.
மதவாதிகள் இவர் இறந்த விஷயம் கூட சொல்லாமல் கண்டுபிடிப்பின் மிகைப் படுத்தப்பட்ட செயலை ஏற்கெனவே மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சரி இவர்களுக்கு உதவியாக ஏதோ செய்துவிட்டு போன அண்ணன் கான்ஞியஸ் க்காக ஒரு பிரார்த்தனை செய்தார்களா? செய்யவில்லை என்றால் அவர்கள் மத புத்தகத்தின் பெருமை கூற உதவிய அண்ணன் கான்ஞியஸை நினைவு கூற வலியுறுத்துகிறோம்.
இக்காணொளி பாருங்கள் நான் சொல்வதையே இத்தோழரும் கூறுகிறார்!!!!!!!!!!
No comments:
Post a Comment