கிரேக்க புராண கதைகள் பற்றி சில பதிவுகள் எழுத முடிவு செய்து உள்ளேன்.இத்திரைப்படம் அந்த கதைகளின் அடிப்படையில் எடுக்கப் பட்டது.கண்டு மகிழ்க.
Sunday, May 22, 2011
தி க்லாஷ் ஆஃப் டைட்டன்ஸ்(The Clash of Titans) Tamil dubbed
கிரேக்க புராண கதைகள் பற்றி சில பதிவுகள் எழுத முடிவு செய்து உள்ளேன்.இத்திரைப்படம் அந்த கதைகளின் அடிப்படையில் எடுக்கப் பட்டது.கண்டு மகிழ்க.
Friday, May 20, 2011
ஜாதக கணிப்புகள் உண்மையாகும் வாய்ப்பு என்ன?
ஒரு பிரபலமான மனிதரின் ஜாதகத்தை கணிக்கிறேன் என்று பலர் வதந்திகளை பரப்புவதால் நம்க்கு இது குறித்து ஆய்வு செய்யலாம் என்ற எண்னம் ஏற்பட்டு, சோதிடம் பற்றி தெரிந்து கொள்ள்வும் அதனை உங்களோடு பகிரவுமே இப்பதிவில் முயற்சிக்கிறேன்.ஜாதகத்தில் என்க்கு நம்பிக்கை இல்லை.ஆனால் பலர் நம்புகிறார்கள்.பலர் தங்களின் உண்மையான ஜாதகத்தை வெளியே காட்ட மாட்டார்கள்.அவ்வளவு பயம்!!!!!!!!!!!!!!!..
நமது நாட்டிலும் சரி,பல நாடுகளிலும் சரி நம்முடைய எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆசை பலருக்கு உண்டு.இந்த எதிர்காலத்தை அறியும் பல முறைகள் இருப்பதாக நம்பப் படுகின்றது. ஒருவர் பிறந்த நேரம் ,தேதி ,கைரேகை,கால் ரேகை,பெயர், உடலமைப்பு போன்றவற்றை வைத்து ஒருவரிடைய குணாதிசயங்கள்,எதிர்காலம் முதலியற்றை கணிக்கும் முறை வழக்கத்தில் உண்டு.இதில் இந்த ஜாதகம் ,கைரேகை என்பவை மிக பிரபல்மான முறைகள் ஆகும்.இப்பதிவில் ஜாதகம் என்பதை பற்றி மட்டும் பார்ப்போம்..எதை ஆராய்ச்சி செய்தாலும் அந்த முறை வரலாற்று ரீதியாக எப்போது,எவ்வாறு பயன் பாட்டில் உள்ளது,அதன் ஆதார மூலங்கள் என்ன என்பதை பார்ப்பது நல்லது.பொதுவாக இறை நம்பிக்கை உள்ளவர்களே இம்மாதிரி செயல்களை நம்புவதால் இக்கலை இறைவனால் அவன் அடியார்களுக்கு வழங்கியதாகவும்,அதனை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாய்மொழியாக பாதுகாத்து ,போதித்தி,பயன் படுத்து வந்ததாகவும் அவ்ற்றில் சில நூல்கள் வடிவிலும் உள்ளது என்று கூறுவது வழக்கம்.நம் முந்தைய பதிவுகளை படித்த நண்பர்களுக்கு வேறு விஷயங்கள் ஞாபகம் வந்தால் அவ்ர்களை பாராட்டுகிறேன்.
மனித மனம் மிகவும் விந்தையானது.தனக்கு சரி என்று தோன்றும் சூழ்நிலை,சிந்தனை,செயலிலேயே நிலைத்திருக்க முயல்கிறது.பிறந்த சமூக பொருளாதார சூழ்நிலை, வளர்ப்பு அனுபவங்களே ஒருவருடைய நம்பிக்கைகளை தீர்மானிக்கிறது.எதிர்காலத்தை கணிப்பது என்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்துமா என்று யோசித்தாலேயே இதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
இன்னும் ப்ல மனித சமுதாயங்கள் ஆதிவாசிகளாகவே வாழ்கின்றனர்.அவர்கள் குடும்ப அமைப்பு கூட வித்தியாசமாக் இருக்கிறது.இனக்குழுக்களாக வாழும் அவர்கள் கிடைக்கும் பொருள்களை பகிர்ந்து வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களின் வாழ்வு ஒரே மாதிரியாக இருக்கும்.ஒருவரின் பிறப்போ இறப்போ கூட விளைவுகளை ஏற்படுத்தாது.தனிப்பட்ட ,தனிக்குடும்ப அமைப்பு இல்லாத சமுகத்தில் இந்த சோதிடத்திற்கு வாய்ப்பு இல்லை.விலங்குகளுக்கும் சோதிடம் பொருந்தாது. மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கு என்றால் அவ்னுக்கு பொருந்துமா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.சோதிடம் உண்மையாக வேண்டுமென்றால் கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையானால் மட்டுமே வாயப்பு உள்ளது.ஆக சோதிடம் பரிணாம கொள்கைக்கு எதிரானது.சோதிடம் என்பது என்ன ?அது எவ்வாறு கணிக்கப்படுகின்றது? அது உண்மையாகும் வாய்ப்பு எவ்வளவு? என்பதை இப்பதிவுகளில் பார்ப்போம்.(இந்திய சோதிடம் என்பது கிரேக்கத்தில் இருந்தே வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அலெக்சாண்டரின் படையெடுப்பும்,பல கிரேக்கர்கள் இங்கேயே தங்கி விட்டதும் இக்கலையை இங்கு பரப்பியிருக்க வேண்டும்.யவனஜாடகா(சாண்டில்யன் யவன ராணி ஞாபகம் வருகிறதா?) என்னும்( பொ.மு 200 ல்) சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் இந்திய சோத்டத்தில் மிக பழமையானதாகும். கிரகங்கள் ஆண் பெண் என்று பிரிப்பது கூட கிரேகக புராண் கதைகளை அடிப்படையாக கொண்டதாகும்.(.தென்)இந்திய சோதிடம் அல்லது வேத ஜாதக முறை என்பது வராக மிகிரார்(பொ.ஆ 505_587) எழுதிய ப்ரஹா சம்ஹிதா என்னும் சம்ஸ்கிருத நூலை ஆதாரமாக கொண்டது.அதற்கு முன் எகிப்து,மெசபடோமிய ,கிரேக்க நாகரிகங்களிலும் சோதிடம் இருந்தமைக்கு ஆதாரங்கள் உண்டு.
சோதிடம் உண்மையாக வேண்டுமெனில் இவையும் நிரூபிகப்படவேண்டும்.
1.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன்,பரிணாமக் கொள்கை தவறு.
2.கிரேக்க,இந்திய புராணக் கதைகள் அனைத்தும் வரலாறு ஆகும்.
3. இந்த சோதிட நூல்களில் சொல்லப்படும் வானவியலே சரியானது.
4.இது நாகரிகமடையாத ஆதிவாசி இனக்குழுக்களுக்கு பொருந்தாது.
கிரகங்களின் நகர்வுகள் ஒவ்வொரு மனிதர்களையும் கட்டுப்படுத்துகிறது என்னும் போது மனிதனுக்கு சுய சிந்தனை(self will) செயலாற்றல் உண்டா என்னும் கேள்வியும் வருகின்றது.பொதுவாக சோதிடம் என்பதும், கடவுள் ஏற்கெனவெ எல்லாவற்ரையும் தீர்மானித்து விட்டார் அதன்படி மட்டுமே நம்மால் நடக்க முடியும் என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை..சோதிடத்தில் கடவுள்(கள்)ன் இருப்பு அவசியமா என்பதும் சிந்திக்கப் பட வேண்டிய விஷயமே.
இந்த காணொளிகள் வேத சோதிடத்தை பற்றி ஒரு நடுநிலையான ,விளக்கமான் குறிப்புகளை தருகின்றன. இதனை பார்த்தால் சோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கை ஒழியாது போனாலும் அதன் எல்லைகளை உணர முடியும்.பொழுது போகவில்லை என்றால் சும்மா பாருங்கள். சோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.கற்றுக் கொண்ட பின் பலருக்கு கணித்து பிற கணிப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள். சோதிடத்தை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
http://mathinamaideen.webs.com/
Labels:
இறை மறுப்பு
Wednesday, May 18, 2011
IS ISLAM A RELIGION OF PEACE? DEBATE
.
இணையத்தில் பார்த்த இந்த விவாதம பிடித்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மதம் என்பது அதனை பின் பற்றுபவர்களால் எப்படி பார்க்கப் படுகிறது என்பதும் அம்மதம் சாராதவர்களால்(நம்பிக்கை அற்றவர்களால்) எப்படி பார்க்கப்படுகிறது என்பதும் வித்தியாசப் படும்.இத்னை புரியாத பட்சத்தில் மத நல்லிணக்கம் என்பது கானல் நீரே.
பின்பற்றுபவர்களிடையே கூட பல பிரிவுகள் ஒரே வசனத்தை பலவாறாக அர்த்தம் கொள்வதும் அறிந்ததே.இவ்விவாதம் சில விஷயங்களை எடுத்தியம்பியனாலும் அனைத்து விஷயங்களையும் சொல்லவில்லை(சொல்ல முடியாது) என்பது நம் கருத்து.
மதங்களுக்கிடையே புரிந்துணர்வும்,பரஸ்பர அங்கீகரிப்பு மரியாதை மிக அவசியமான ஒன்று.மதம் என்பது தனிப்பட்ட மனிதனின் ஆனிமீகமாக் மட்டுமே இருக்க வேண்டும்.என் மதம் மட்டுமே சரி,பிற மத்ங்கள் அனைத்தும் தவறு என்ற கருத்து காலாவதியான கருத்து என்பதையும் மனித நேயமும்,ஜனநாயகமும், மத சார்பற்ற சட்டங்களை நோக்கிய முன்னெடுத்தலே மனித சமுதாயத்தின் சிக்கல்கலை தீர்க்கும் அருமருந்தாகும்.கண்டு களியுங்கள் காணொளியை!!!!!!!!!!!!!!!!!!!!
Tuesday, May 17, 2011
தமிழர்களுக்கு நீதி கிடைககட்டும்
முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.இப்போர்க் குற்ற விசாரணை நேர்மையாக நடந்து தமிழர்களுக்கு நியாயமான் தீர்வு கிடைக்க வேண்டும். படிக்கும் அனைவரும் இது குறித்து ஏதாவது ஒரு முறையில் தமிழக அரசுக்கும்,சர்வ தேசத்திற்கும் உங்கள் கருத்தினை
தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.நன்றி
Labels:
மனிதம்
Sunday, May 15, 2011
சிந்தனைக்கு சில பாடல்கள்
இப்பாடலுக்கும் அரசியலுக்கும்,தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தமே இல்லை.நம்பிவிடுங்கள் நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!
(மானாட மயிலாட) ஆட்டத்தை பார்க்காமல் ஆளை பார்க்கிறார்களே!!!
கண்னதாசனின் வனவாசம் புத்தகத்தில் தான் கட்சியில் இருந்து வெளிவந்ததும் இப்படி எழுதியிருப்பார் " எதிரியை உதைக்க காலை உயர்த்தினேன், காலில் சலங்கையை கட்டினான் தோழன் என்று"
உல்லாசமாய் வாழ கல்யாணம்(ஒருமுறைக்கு மட்டுமே)
கருடா(தமிழ் மக்களே) சௌக்கியமா?
Friday, May 13, 2011
கடல் நீர் எரிபொருள் ஆகுமா? கடல் தீப்பற்றி எரியுமா?
எரிபொருள் என்பது நவீன உலகில் மிக அதிகமாக தேவைப்படும்,பயன் படுத்தப்படும் ஒன்றாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.எண்ணெய் என்பதே முக்கியமான் எரிபொருள் ஆக இருப்பதால் ,இவ்வளம் பொருந்திய நாடுகள் சார்ந்த அரசியல் உலகில் முக்கிய இடம் வகிக்கிறது.உலகின் எண்ணெய் இருப்பு சுமார் 1.2 ட்ரில்லியன் பேரல் ஆகும்.தினமும் சுமார் 80_90 மில்லியன் பேரல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.இந்த எண்ணெய் வளம் 40_50 வருடம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படி எனில் சின்ன கணக்குதான்!!!
1.2*1000*1000/(80*365)=41 வருடம்==15000 நாட்கள்
இச்சூழ்நிலையில் ஒரு தமிழ் பதிவு படிக்க நேர்ந்தது. அதில் கடல் நீரை எரிபொருளாக மாற்றும் முறையை ஒரு பொறியாளர் கண்டுபிடித்தார் என்றும், வழக்கம் போல் இது அன்றே எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்ற பல்லவி பாடப்ப்ட்டும் இருந்தது..
அந்த பொறியாளர் பற்றியும்,அந்த முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
திரு ஜான் கான்ஞியஸ்( அமெரிக்கவில் உள்ள ஃப்ளோரிடா மநிலத்தை சேர்ந்தவர்.மார்ச் 1,1944ல் பிறந்த்வர்.மிண்ணனுவிய்ல் பொறியாளரான இவர் மின் காந்த அலைகள் மூலம் கேன்சரை குணப்படுத்தும் முறை ஒன்றை கண்டு பிடித்ததாக கூறப்படுகின்றது. கேன்சர் என்றால் கட்டுப்பாடற்ற,தேவையற்ற உடல் செல் வளர்ச்சி[uncontrolled growth of abnormal cells] என்று வரையறுக்கலாம்.இவர் வடிவமைத்த கருவி மூலம் மி.கா அலைகளை உருவாக்கி அதனை கேன்சர் உள்ள உடல் பகுதியின் மீது செலுத்தும் போது அச்செல்கள் இறந்து விடும் என்பது இவருடைய கண்டு பிடிப்பு.இதற்கு காப்புரிமை பெற்றுள்ளார்.இதன் பயன் பாடுகள் குறித்து விவாதிக்காமல் இந்த கருவியின் இன்னொரு பயன்பாடான கடல் நீரை எரிபொருள் ஆக மாற்றும் முறை பற்றியே விவாதிப்போம்..
இக்காணொளி பாருங்கள்!!!!
இந்த மின் காந்த அலைகலை கடல்நீரின் மீது செலுத்தினால் அது எரிபொருள் ஆகிறது என்பதே இவரின் கண்டுபிடிப்பு.உண்மையில் இவருடைய கண்டுபிடிப்பு உப்பு நீர் எரிபொருளாக் மாறுவதை கூறுகின்றது ,அத்னை ஊடகங்கள் கடல் நீர் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டன.இதுவும் சரிதான் என்பதால் கடல் நீர் மட்டுமல்ல உப்பு நீரும் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதே திரு கான்ஞியஸின் கண்டுபிடிப்பு ஆகும்.
அது எப்படி மின் காந்த அலைகளை உப்புநீரில் செலுத்தினால் எரிபொருள் ஆகும் என்று கேட்கிறீர்கள்.நல்லது. அறீவியலில்(மின் வேதியியல்) மின் பகுப்பு என்று ஒரு செயல் பற்றி படித்ததை நினைவு கூறுவோம். நீரில் இரு மின் முனைகள்(Electrodes) இட்டு அதில் முறையே நேர்,எதிர் மின்னூட்டங்க்களை செலுத்தினால் நீரானது ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன் ஆக பிரியும் என்பதுதான் மின் பகுப்பு எனப்படுகிறது. இது நீருக்கு மட்டுமல்ல எந்த ஒரு கரைசலுக்கும் பயன்படுத்த முடியும் என்றாலும் அது இப்பதிவிற்கு தேவையற்றது என்பதால் நீரை மின் பகுப்பு செய்தால் கிரடைக்கும் ஹைட்ரஜன் ஒரு எரிபொருள் ஆகும் என்பதையே விவாதிப்போம்..
இந்த மின் பகுப்பின் எதிர்வினைஃபுயல் செல்(Fuel cell) என்படும் மின் வேதி மாற்றம் ஆகும்.அதாவது ஹைட்ரஜனையும்,ஆக்ஸிஜையும் சரியான விகிதத்தில் கல்ந்து ,சில வினைகளுக்கு உட்படுத்தினால் மின்சாரமும்,(தூய்மையான்) நீரும் கிடைக்கும்.ஆஆக்வேதான் ஹைரட்ரஜன் தயாரிக்க அறிவியலாளர்கள் அரும்பாடு படுகிறார்கள்.ஆகவே கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன்(எரிபொருள்) என்பது ஒரு கல் இரு மாங்காய் (மின்சாரம்+குடி நீர்).
இப்போது மின்பகுப்பு மூலம் கடல்நீரை பிரித்து ஹைடரஜன் தயாரித்தால் போகிறது என்று சொல்கிறீர்களா? அப்புறம் ஒரு கல் இரண்டு மாங்காய் எளிதில் அடிக்கலாம் என்றா?.
Life is not that much simple!!!!!!!!!
10 யூனிட் மின்சாரம் செலவு செய்து மிபகுப்பினால் ‘X’ அளவு ஹைட்ரஜன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்த “X” அளவு ஹைட்ரஜனை கொண்டு ஃப்யல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொது 10 யூனிட்டை விட அதிகமாக மின்சாரமும், அந்த உபரி அளவு இந்த முறைக்கான செலவை எவ்வளவு வருடங்களில் ஈட்டும் என்பதே பிரச்சினை.
இதுவரைக்கும் திருப்தியான முடிவு எட்டப்படவில்லை என்பதே உண்மை.ஆகவே ஹைட்ரஜனை மின் பகுப்பு அல்லாமல் வேறு முறைகளில் குறைந்த செலவில் தயாரிக்க ஆய்வுகள் உலகெங்கும் நடை பெறுகிறது.
இப்போது திரு கான்ஞியஸ் கூறுவது என்ன?
உப்பு நீரில் மின்காந்த அலைகளை செலுத்தினால் எரிபொருள் உண்டாகும் (மைக்ரோ வேவ் ஓவன் மாதிரியா!!!) என்று.அவர் அவருடைய முறையை சரியாக விளக்கவில்லை.எரிபொருள் என்பது ஹைட்ரஜன் மட்டுமே வாய்ப்பு உண்டு.நேரடியாக மின்சரம்(மின் பகுப்பு) இல்லாமல் மின்காந்த அலைகளாக மாற்றி உப்பு நீரில் செலுத்தும் போதும் ஹைட்ரஜனாக மாறலாம்,அது எரியவும் செய்யலாம்.ஹைட்ரஜன் இலேசாக இருப்பதால் அவர் பயன் படுத்திய சோத்னைக் குழாயின் மேல் பகுதிக்கு வந்து எரிவது நம்ம எரிவாயு அடுப்பு மாதிரிதான்.
இங்கும் அவருடைய கருவிக்கு பயன் படுத்தப்படும் மின்சாரத்தின் அள்வுக்கும்,ஹைட்ரஜன் தயாரிப்புக்கும் என்ன விகிதமோ,அது சாதாரண மின்பகுப்பு முறையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே பலன்.
முடிவுரை
1.நிச்சயமாக இலாபகரமாக்(efficient) இருக்காது என்று ஒரு மின்னியல் பொறியாளனாக என்னால் கூற முடியும்.எப்படி என்று விவாதிக்கும் நண்பர்களுக்கு கூறுகிறேன்.
2. இதன் மூலம் பெரிய அளவில் ஹைட்ரஜன் தயாரிக்க முடியாது.மின் காந்த அலைகளின்மின் சக்தி எவ்வளவு என்று யோசித்தால் உங்களுக்கு இது புரிந்து விடும்.
3.ஆகவே இது கொஞ்சம் சோத்னை குழாயில்(சரி போனால் போகுது ஒரு பெரிய பீப்பாய்) நீரை எடுத்து ஹைட்ரஜனாக மாற்றி எரித்து விளையாட்டு காட்ட முடியுமே தவிர பெரிய அளவில கடலையே மின் காந்த அலைகளால் பகுத்து எரிபொருளாக மாறி எரிய வைக்க முடியுமா என்று யோசித்து கொள்ளுங்கள்.இந்த செயல்ஒரு மூடப்பட்ட கொள்கலனில் மட்டுமே நடத்த முடியும் திறந்த கடல் பரப்பின் மீது மி.கா அலைகளை செலுத்தி ஹைட்ரஜன் உருவாக்க முடியுமா என்றுகான்ஞியஸ் கூறவேயில்லை.இது மிகைபடுத்தப்பட்ட மத வி(அ)ஞ்ஞான கற்பனை.ஏன் இப்படி அபசகுனமாய் பேசுகிறீர்கள் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பையே மறுக்கிறீர்களே என்கிறீர்களா.!!!!.
இந்த செய்தியை பாருங்கள்.கான்ஞியஸ் அவர் கண்டுபிடிப்பை பற்றி என்ன கூறுகிறார்?
http://www.waterfuelcarengine.com/john-kanzius.html
இந்த செய்தியை பாருங்கள்.கான்ஞியஸ் அவர் கண்டுபிடிப்பை பற்றி என்ன கூறுகிறார்?
http://www.waterfuelcarengine.com/john-kanzius.html
Water Fuel Related Discovery:
Kanzius, later that year, stated that the same RF transmitter has the ability to actually make salt water catch fire. This revelation took place accidentally while he was trying to know if these radio waves can be used to desalinize water. He said that they were experimenting for something that might desalinize saltwater rather than an energy source, and the more they try, the saltwater gets hotter until it caught fire. At that point, this method can't be used as an energy source because it used more energy to generate the waves than the energy of the burning gas.

He didn't say that his finding would replace oil as an energy source and only described it as “interesting“. The tell tails of his process are still not published until it's patented. He explains that the energy from radio waves absorbed by the water weakens the convalent bond between oxygen and hydrogen to an extent that pairs of both hydrogen and oxygen are created, producing dihydrogen and dioxygen molecules. These newly formed molecules are also affected by the energy of the radio waves which causes them to get in a relatively close proximity in a process called reunification causing them to react together forming water molecules once again and releacing energy in the form of a flame. In other words, this process simply converts radio energy to heat and light form.
Rustum Roy, a materials scientist at Pennsylvania State University confirmed Kanzius experiment in front of the Material Science faculty using the same RF transceiver which he took from Kanzuis lab to be returned the next day. He also stated on his website that Mr. Kanzius was able to show the possibility of producing hydrogen and oxygen from saltwater with the same salt concentration of normal sea water.
He also said that the saltwater itself isn't burning as one might think. The fact is, the RF waves weakens the bonds of saltwater molecules releasing hydrogen in the process, and that what's catches fire and it will keep burning as long as the saltwater sample is exposed to these radio waves with flames varying in colors and temperature, depending on the solutions and concentration.
Philip Ball, the author of "H2O: A Biography of Water" and a consulting editor at Nature, disapproved the idea of water being used as a fuel. Even though he said that kanzius' revelation needs verification through further experiments, he is sure that water can't be a fuel and doesn't burn, and added that it's impossible to harness energy by burning hydrogen extracted from water and based his words on the laws of thermodynamics, as it would be the foundation of a never-ending cycle of motion. He also referred to the lack of information in the media when reporting about unreal science.
இக்கட சூடண்டி!!!!!!!!!!!!!!
ஆ) இனியும் கிட்டாது..மதிப்பிற்குறிய கான்ஞியஸ் கடந்த பிரவரி 18/2009 அன்றே இறந்துவிட்டார்.அவருடையஆய்வுகூட இணைய தளத்தில் இம்முறை பற்றி இப்போது எந்த செய்தியும் இல்லை.
மதவாதிகள் இவர் இறந்த விஷயம் கூட சொல்லாமல் கண்டுபிடிப்பின் மிகைப் படுத்தப்பட்ட செயலை ஏற்கெனவே மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சரி இவர்களுக்கு உதவியாக ஏதோ செய்துவிட்டு போன அண்ணன் கான்ஞியஸ் க்காக ஒரு பிரார்த்தனை செய்தார்களா? செய்யவில்லை என்றால் அவர்கள் மத புத்தகத்தின் பெருமை கூற உதவிய அண்ணன் கான்ஞியஸை நினைவு கூற வலியுறுத்துகிறோம்.
Labels:
இறை மறுப்பு,
இஸ்லாம்
Wednesday, May 11, 2011
கடல் நீர் எரிபொருள் ஆகுமா? கடல் தீப்பற்றி எரியுமா?
எரிபொருள் என்பது நவீன உலகில் மிக அதிகமாக தேவைப்படும்,பயன் படுத்தப்படும் ஒன்றாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.எண்ணெய் என்பதே முக்கியமான் எரிபொருள் ஆக இருப்பதால் ,இவ்வளம் பொருந்திய நாடுகள் சார்ந்த அரசியல் உலகில் முக்கிய இடம் வகிக்கிறது.உலகின் எண்ணெய் இருப்பு சுமார் 1.2 ட்ரில்லியன் பேரல் ஆகும்.தினமும் சுமார் 80_90 மில்லியன் பேரல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.இந்த எண்ணெய் வளம் 40_50 வருடம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படி எனில் சின்ன கணக்குதான்!!!
1.2*1000*1000/(80*365)=41 வருடம்==15000 நாட்கள்
இச்சூழ்நிலையில் ஒரு தமிழ் பதிவு படிக்க நேர்ந்தது. அதில் கடல் நீரை எரிபொருளாக மாற்றும் முறையை ஒரு பொறியாளர் கண்டுபிடித்தார் என்றும், வழக்கம் போல் இது அன்றே எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்ற பல்லவி பாடப்ப்ட்டும் இருந்தது..
அந்த பொறியாளர் பற்றியும்,அந்த முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
திரு ஜான் கான்ஞியஸ்( அமெரிக்கவில் உள்ள ஃப்ளோரிடா மநிலத்தை சேர்ந்தவர்.மார்ச் 1,1944ல் பிறந்த்வர்.மிண்ணனுவிய்ல் பொறியாளரான இவர் மின் காந்த அலைகள் மூலம் கேன்சரை குணப்படுத்தும் முறை ஒன்றை கண்டு பிடித்ததாக கூறப்படுகின்றது. கேன்சர் என்றால் கட்டுப்பாடற்ற,தேவையற்ற உடல் செல் வளர்ச்சி[uncontrolled growth of abnormal cells] என்று வரையறுக்கலாம்.இவர் வடிவமைத்த கருவி மூலம் மி.கா அலைகளை உருவாக்கி அதனை கேன்சர் உள்ள உடல் பகுதியின் மீது செலுத்தும் போது அச்செல்கள் இறந்து விடும் என்பது இவருடைய கண்டு பிடிப்பு.இதற்கு காப்புரிமை பெற்றுள்ளார்.இதன் பயன் பாடுகள் குறித்து விவாதிக்காமல் இந்த கருவியின் இன்னொரு பயன்பாடான கடல் நீரை எரிபொருள் ஆக மாற்றும் முறை பற்றியே விவாதிப்போம்..
இக்காணொளி பாருங்கள்!!!!
இந்த மின் காந்த அலைகலை கடல்நீரின் மீது செலுத்தினால் அது எரிபொருள் ஆகிறது என்பதே இவரின் கண்டுபிடிப்பு.உண்மையில் இவருடைய கண்டுபிடிப்பு உப்பு நீர் எரிபொருளாக் மாறுவதை கூறுகின்றது ,அத்னை ஊடகங்கள் கடல் நீர் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டன.இதுவும் சரிதான் என்பதால் கடல் நீர் மட்டுமல்ல உப்பு நீரும் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதே திரு கான்ஞியஸின் கண்டுபிடிப்பு ஆகும்.
அது எப்படி மின் காந்த அலைகளை உப்புநீரில் செலுத்தினால் எரிபொருள் ஆகும் என்று கேட்கிறீர்கள்.நல்லது. அறீவியலில்(மின் வேதியியல்) மின் பகுப்பு என்று ஒரு செயல் பற்றி படித்ததை நினைவு கூறுவோம். நீரில் இரு மின் முனைகள்(Electrodes) இட்டு அதில் முறையே நேர்,எதிர் மின்னூட்டங்க்களை செலுத்தினால் நீரானது ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன் ஆக பிரியும் என்பதுதான் மின் பகுப்பு எனப்படுகிறது. இது நீருக்கு மட்டுமல்ல எந்த ஒரு கரைசலுக்கும் பயன்படுத்த முடியும் என்றாலும் அது இப்பதிவிற்கு தேவையற்றது என்பதால் நீரை மின் பகுப்பு செய்தால் கிரடைக்கும் ஹைட்ரஜன் ஒரு எரிபொருள் ஆகும் என்பதையே விவாதிப்போம்..
இந்த மின் பகுப்பின் எதிர்வினை ஃபுயல் செல்(Fuel cell) என்படும் மின் வேதி மாற்றம் ஆகும்.அதாவது ஹைட்ரஜனையும்,ஆக்ஸிஜையும் சரியான விகிதத்தில் கல்ந்து ,சில வினைகளுக்கு உட்படுத்தினால் மின்சாரமும்,(தூய்மையான்) நீரும் கிடைக்கும்.ஆஆக்வேதான் ஹைரட்ரஜன் தயாரிக்க அறிவியலாளர்கள் அரும்பாடு படுகிறார்கள்.ஆகவே கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன்(எரிபொருள்) என்பது ஒரு கல் இரு மாங்காய் (மின்சாரம்+குடி நீர்).
இப்போது மின்பகுப்பு மூலம் கடல்நீரை பிரித்து ஹைடரஜன் தயாரித்தால் போகிறது என்று சொல்கிறீர்களா? அப்புறம் ஒரு கல் இரண்டு மாங்காய் எளிதில் அடிக்கலாம் என்றா?.
Life is not that much simple!!!!!!!!!
Life is not that much simple!!!!!!!!!
10 யூனிட் மின்சாரம் செலவு செய்து மிபகுப்பினால் 'X' அளவு ஹைட்ரஜன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்த "X" அளவு ஹைட்ரஜனை கொண்டு ஃப்யல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொது 10 யூனிட்டை விட அதிகமாக மின்சாரமும், அந்த உபரி அளவு இந்த முறைக்கான செலவை எவ்வளவு வருடங்களில் ஈட்டும் என்பதே பிரச்சினை.
இதுவரைக்கும் திருப்தியான முடிவு எட்டப்படவில்லை என்பதே உண்மை.ஆகவே ஹைட்ரஜனை மின் பகுப்பு அல்லாமல் வேறு முறைகளில் குறைந்த செலவில் தயாரிக்க ஆய்வுகள் உலகெங்கும் நடை பெறுகிறது.
இப்போது திரு கான்ஞியஸ் கூறுவது என்ன?
உப்பு நீரில் மின்காந்த அலைகளை செலுத்தினால் எரிபொருள் உண்டாகும் (மைக்ரோ வேவ் ஓவன் மாதிரியா!!!) என்று.அவர் அவருடைய முறையை சரியாக விளக்கவில்லை.எரிபொருள் என்பது ஹைட்ரஜன் மட்டுமே வாய்ப்பு உண்டு.நேரடியாக மின்சரம்(மின் பகுப்பு) இல்லாமல் மின்காந்த அலைகளாக மாற்றி உப்பு நீரில் செலுத்தும் போதும் ஹைட்ரஜனாக மாறலாம்,அது எரியவும் செய்யலாம்.ஹைட்ரஜன் இலேசாக இருப்பதால் அவர் பயன் படுத்திய சோத்னைக் குழாயின் மேல் பகுதிக்கு வந்து எரிவது நம்ம எரிவாயு அடுப்பு மாதிரிதான்.
இங்கும் அவருடைய கருவிக்கு பயன் படுத்தப்படும் மின்சாரத்தின் அள்வுக்கும்,ஹைட்ரஜன் தயாரிப்புக்கும் என்ன விகிதமோ,அது சாதாரண மின்பகுப்பு முறையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே பலன்.
முடிவுரை
1.நிச்சயமாக இலாபகரமாக்(efficient) இருக்காது என்று ஒரு மின்னியல் பொறியாளனாக என்னால் கூற முடியும்.எப்படி என்று விவாதிக்கும் நண்பர்களுக்கு கூறுகிறேன்.
2. இதன் மூலம் பெரிய அளவில் ஹைட்ரஜன் தயாரிக்க முடியாது.மின் காந்த அலைகளின் மின் சக்தி எவ்வளவு என்று யோசித்தால் உங்களுக்கு இது புரிந்து விடும்.
3.ஆகவே இது கொஞ்சம் சோத்னை குழாயில்(சரி போனால் போகுது ஒரு பெரிய பீப்பாய்) நீரை எடுத்து ஹைட்ரஜனாக மாற்றி எரித்து விளையாட்டு காட்ட முடியுமே தவிர பெரிய அளவில கடலையே மின் காந்த அலைகளால் பகுத்து எரிபொருளாக மாறி எரிய வைக்க முடியுமா என்று யோசித்து கொள்ளுங்கள்.இந்த செயல்ஒரு மூடப்பட்ட கொள்கலனில் மட்டுமே நடத்த முடியும் திறந்த கடல் பரப்பின் மீது மி.கா அலைகளை செலுத்தி ஹைட்ரஜன் உருவாக்க முடியுமா என்றுகான்ஞியஸ் கூறவேயில்லை.இது மிகைபடுத்தப்பட்ட மத வி(அ)ஞ்ஞான கற்பனை.ஏன் இப்படி அபசகுனமாய் பேசுகிறீர்கள் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பையே மறுக்கிறீர்களே என்கிறீர்களா.!!!!.
இக்கட சூடண்டி!!!!!!!!!!!!!!
அ) இம்முறைக்கு காப்புரிமை கிட்டவில்லை.
ஆ)மதிப்பிற்குறிய கான்ஞியஸ் கடந்த பிரவரி 18,2009 அன்றே இறந்துவிட்டார்.அவருடைய ஆய்வுகூட இணைய தளத்தில் இம்முறை பற்றி இப்போது எந்த செய்தியும் இல்லை.
மதவாதிகள் இவர் இறந்த விஷயம் கூட சொல்லாமல் கண்டுபிடிப்பின் மிகைப் படுத்தப்பட்ட செயலை ஏற்கெனவே மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சரி இவர்களுக்கு உதவியாக ஏதோ செய்துவிட்டு போன அண்ணன் கான்ஞியஸ் க்காக ஒரு பிரார்த்தனை செய்தார்களா? செய்யவில்லை என்றால் அவர்கள் மத புத்தகத்தின் பெருமை கூற உதவிய அண்ணன் கான்ஞியஸை நினைவு கூற வலியுறுத்துகிறோம்.
இக்காணொளி பாருங்கள் நான் சொல்வதையே இத்தோழரும் கூறுகிறார்!!!!!!!!!!
Labels:
மனிதம்
Tuesday, May 10, 2011
Monday, May 9, 2011
வரலாற்று இயேசுவை தேடி 4.இயேசுவின் பிறந்த தேதி என்ன?
இத்தொடரின் கிறித்தவர்களால் இறைமகன் எனவும் ,இஸ்லாமின் ஒரு இறைதூதராகவும் அறியப்படும் திரு இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்தாரா,அதற்கான ஆதாரங்கள் பற்றியே விவாதித்து வருகிறோம். இப்பதிவில் இயேசுவின் பிறப்பு பற்றியும் அவர் பிறந்த தேதி ஆதாரபூர்வமாக கணக்கிட முடியுமா என்பதனை பார்ப்போம்.
அனைவருக்கும் ஆங்கில கால அளவு இரு பிரிவுகளாக கி.மு(கிறிஸ்துக்கு முன்) ,கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) பிரிக்கப்ப்ட்டு பபயன்பாட்டில் இருப்பது தெரிந்ததே.அதுபோல் டிசம்பர் 25 கிறிஸ்மஸ்(கிறிஸ்துவின் பிறப்பு) என்பதும் தெரியும்..பிறகென்ன கி.பி 0[கி.மு 1] வருடம்,டிசம்பர் 25ல் ,வால் நட்சத்திரத்தில் சுபயோக, சுப இலக்கினத்தில் அவதரித்தார் இறைவனின் திருமகன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடாமல் என்ன ஆராய்சி என்று கேட்கிறீர்களா?
அது எப்படி ?ஒருவர் ஏதாவது சொன்னவுடன் அவர் சொல்வது சரியா என்று ஆதாரபூர்வமாக சரிபார்ப்பது என் இயல்பு.அத்தகைய தேடல்களையே பதிவிட்டு வருகிறேன்.சென்ற பதிவுகளை படித்தவர்களுக்கு திரு இயேசுவின் வரலற்றை ,புதிய ஏற்பாடு(1 to2 நூற்றாண்டு) தவிர சில வரலாற்று குறிப்புகள் மட்டுமே உள்ளன என்பது தெரியும்.. அந்த் வரலாற்றுக் குறிப்புகள் கூட இயேசுவின் பிறப்பை புதிய ஏற்பாட்டின் அடிப்ப்டையிலேயே கூறுகின்றன.சமகால வரலாற்று அறிஞர் திரு ஜோசஃபஸ் பிறப்பு (தேதி) குறித்து எதுவும் கூறவிலை என்றாலும் சில வரலாற்று நிகழ்வுகளாக அவர் குறிப்பிடுவதை வைத்து,புதிய ஏற்பாட்டு ஆகமங்களுடன் ஒப்பிட்டு கண்டு பிடிக்க முயல்கிறேன்.
முதலில் புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் அவர் பிறப்பு எவ்வாறு கூறபட்டு உள்ளது என்பதை பார்ப்போம். மத்தேயு,லூக்க இருவரும் பிறப்பை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளனர்.மாற்கு,யோவான் இருவரும் இதனை பற்றி ஒன்றும் கூறவில்லை.அவற்றை வாசியுங்கள்.
__________________________
மத்தேயு
1 அதிகாரம்
18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
____________
2 அதிகாரம்
1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
3. ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
* * *********
லூக்கா
2 அதிகாரம்
1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
******
லூக்கா
3 அதிகாரம்
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
இதில் இருந்து நமக்கு ஆய்வுக்கு உதவுவது சில வசனங்கள் மட்டுமே அவையாவன.
___________________
மத்தேயு(2 அதிகாரம்)
1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
____________________
லூக்கா
2 அதிகாரம்
1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
.....
16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்த
_____________________
லூக்கா(3 அதிகாரம்)
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
..........................
..........................
21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.
_______________
இதில் இருந்து இந்த வரலாற்று கூற்றுகளை கூறலாம்.
[.பிறப்பு 3 September 63 BC (Roman calendar)_இறப்பு:19 August AD 14 (Julian calendar) (aged 75),அரசாட்சி:16 January 27 BC – 19 August C.E 14
(40 years, 215 days)]
2.கலிலேயா(அப்போதைய பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி)வின் அரசன் ஏரோது.
[பிறப்பு:73/74 BCE__இறப்பு:4 BCE (aged 70),அரசாட்சி:37BCE–4 BCE
3.சீரியா நாட்டிலே சிரேனியு[Cyrenius 51 BC - AD 21)] என்பவர் அரசாண்டார்.
4. திபேரியுஸ் சீசர் (அகஸ்டஸ் சீசரின் வாரிசு) அரசாட்சி ஏற்று 15 வருடங்களுக்கு பிறகு யோவான் தன் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.அப்போது இயேசுவிற்கு 30 வயது
[.பிறப்புNovember 16, 42 BC__ இறப்பு:March 16, C.E 37 (aged 77),அரசாட்சி :18 September 14 C.E,16 March to 37 C.E(22 years, 183 days)]
___________
இதில் இருந்த நாம் விளங்குவது.
1.இயேசுவின் பிறந்த தேதி குறிப்பிட்டு சொல்ல முடியாது.டிசம்பர் 25 என்பது சூரிய கடவுளின் பிறப்பை கொண்டாடிய இரோம மக்கள் இயேசுவின் பிறந்த நாளாக மாற்றிவிட்டனர்.
2.அரசன் ஏரோது பொ.மு 4ல் இறந்து விடுகிறார்.இதனை ஜோசஃபசும் உறிதிப்படுத்துகிறார். இன்னும் இயேசு பிறந்த பின் அவ்வயது குழந்தைகளை கொல்ல ஆணையிட்டதாக (மத்தேயு 2.16)ல் படிக்கிறோம்.
ஆகவே குறைந்த பட்சம் இயேசு பொ.மு 4கு முன்பே பிறந்து இருக்க வேண்டும்.
3.திபெரியஸ் அரசு பொறுப்பேற்றது பொ.பி 14 ஆக 14+15=பொ.பி 29 என்றால் இயேசு குறைந்த பட்சம் பொ.மு 2அல்லது 3 ல் பிறந்து இருக்கலாம்
.
முடிவாக திரு இயேசு என்பவர் பொ.மு(BCE) 4க்கு முன்னரே பிறந்து இருக்க வாய்ப்பு உள்ளது.ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்தே நாள்காட்டி ,மக்கள் தொகை கணக்கிடும் வழக்கம் இருந்து வந்துள்ளது.பொ.மு 6ல் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடந்துள்ளது.முதலில் ஜூலியன் காலண்டர் எனவும் பிறகே ரோமன் காலண்டர் எனவும் நாள்காட்டி அழைக்கப்பட்டது.
போப் கிரிகாரியன் XIII ரோமன் காலண்டரை கிரிகாரியன்(கிறித்தவ) நாள்காட்டிகயாக மாற்றினார்.அதனாலேயே ரோம நாள்காட்டி கிறித்துவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இயேசுவின் பிறப்பு (புதிய ஏற்பாட்டின் படி) சுமார் பொ.மு 6 ல் இருந்து பொ.மு 4க்குள் என்று அறுதியிட்டு கூறலாம்.தேதி கூற முடியாது,தேதி இதுவரை யாராலும் சரியாக கூற இயலவில்லை
__________
குறிப்பு
பொ.மு:பொது வருடத்திற்கு முன்:B.C.E: Before Common Era
பொ.பி:பொது வருடத்திற்கு பின் C.E:Common Era
Labels:
வரலாற்று இயெசு
Saturday, May 7, 2011
(ஆ)சாமி நித்யானந்தாவின் சமாளிப்புகள்.
இந்த காணொளியை பதிவிடுவது எதற்காக என்றால் இதில் இருந்து மதவாதிகள் என்ன கையும் களவுமாக பிடிபட்டாலும்,அத்னையும் சமாளிப்பார்கள் என்பதை காட்டவே.
1. இவருக்கும் அந்த ஒலிபரப்பான கணொளிக் காட்சி தொடர்பு கிடையாது.இது விஞ்ஞான மார்ஃபிங்
2.இவரை மாட்டி விட நாத்திகர்களின் சதி.
முழு நீள நகைசுவை காணொளி. கண்டு மகிழ்க.
Labels:
ஆவணம் படம்,
இறை மறுப்பு
Tuesday, May 3, 2011
ஒசாமா பின் லேடன் மரணம்:சில புரிதல்கள்
சவுதியில் 1957ஆம் ஆண்டு பிறந்த செல்வந்தரான் திரு ஒசாமா பின் லேடன் இரு நாட்களுக்கு முன் அமரிக்க இராணுவப்படையால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கொல்லப்பட்டது அவர்தானா என்றும் சில வதந்திகளும் வெளிவரத் தொடங்கி உள்ளது.
நம் பங்கிற்கு இந்த மரணத்தில் இருந்து நமக்கு என்ன புரிதல் ஏற்படுகின்றது என்பதை மட்டும் இப்பதிவில் பார்ப்போம்.ஒரு முக்கியமான கருத்தை மனைதில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.அதாவது இப்போதைய கால கட்டத்தில் ஊடகங்கள் ஒரு மனிதர்,நாடு,மதம் பற்றிய பிம்பங்களை கட்டியமைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.அந்த பிம்பங்கள் உண்மையாக இருக்குமா என்று சரிபார்க்கும் வாய்ப்பு எப்போதும் இருப்பதில்லை
பொதுவாக இந்த ஊடகங்கள் மூலமாகவே நாம் ஒசாமா பற்றி அறிந்துள்ளோம்.அவற்றை சுருக்கமாக கூறினால்.
1.இவர் சவுதியில் உள்ள ரியாத்தில் பிறந்தார்.சவுதி அரச குடும்பத்தோடு நெருக்கமான தொடர்புள்ள குடும்பம்.
2.சவுதி ஜெத்தாவில் உல்ல கிங் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் கட்டுமான பொறியியல் ப்ட்டம்(1979) பட்டம் பெற்றதாகவும்,கல்லூரி படிப்பின் போதும் மிகுந்த மத ஈடுபாட்டுடன் குறிப்பிட்ட கொள்கையாகத்திலும் பிடிப்பிலும் இருந்தார் என்றும் கூறப்படுகின்றது.இந்த கொள்கையாகக்ம் எது என்று கூற விரும்பவில்லை தேவையற்ற மறுப்புகள், விவாதங்கள் அவசியமற்றது.
3.ஒசாமா 1979 முதல் 1989 வரை பாகிஸ்தான் பெஷாவரில் தங்கி இருந்ததாகவும் ஆப்ரேஷன் சைக்லோன் என்ற அமரிக்க திட்டத்தின் படி சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய முஜாகிதீன் என்ற ஆயுதக் குழுவிற்கு உதவி செய்துள்ளார்.ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை இஸ்லாமின் மீதான ஆக்கிரமிப்பாக காட்டி,பல இஸ்லாமிய,அரபு நாடுகளில் இருந்து பல இளைஞர்களை அழைத்து வந்து போரில் ஈடுபடுத்தியதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
4.1988ல் சொவியத் தன் துருப்புகளை ஆப்கனில் இருந்து வெளியேற்றியதும் தலிபானகள் ஆட்சி பொறுப்பேற்றதும் இவர் புகழ் இஸ்லாமிய நாடுகள் எங்கும் பரவியது.
5. பல இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.1988ல் அல்கொய்தா இயக்கத்தை ஆரம்பித்தார்.1990ல் சவுதிக்கு திரும்புகிறார்.
6. சதாம் ஹுசைனின் குவைத் ஆக்கிரமிப்பு நிகழ்வு(ஆகஸ்ட் 2,1990) சவுதி அரசை பெரும் நிர்ப்பந்தத்தில் ஆழ்த்துகிறது.குவைத்தை கைப்பற்றிய சதாம் ஹுசைன் சவுதியையும் கைப்பற்றி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டதும் அமரிக்கா உட்பட்ட மேலை நாடுகளின் கூட்டுப் படைக்கு த்னது நாட்டில் தளம் அமைத்து கொடுத்தது.
7. ஒசாமா ,சவுதி அரசர் ஃபாகத் ஐ சந்தித்து இஸ்லாமியரல்லாத படைகளின் உதவி வேண்டாம் ,த்னது அல் கொய்தா மற்றும்,முஜாகிதீன் உதவியுடன் சதாம் ஹுசைனை முறியடித்துவிடலாம் என்று கூறுகிறார். அரசர் ஃபாகத்திற்கு தெரியும் ஒருவேளை இதனை ஏற்று குவைத்தை மீட்டால், ஒசாமா சவுதி ஆட்சியை பிடித்து விடுவார் தன் குடும்பம அதோ கதி என்பதை உணர்ந்தார்.
8.ஆகவே அமெரிக்காவின் உதவி ஏற்றுக் கொண்டு சதாம் ஐ தோற்கடிக்க அரசர் ஃபாகத் உதவி செய்தார்.
9.ஒசாமா சவுதி அரசை குறை கூற ஆரம்பித்தார். 1992ல் சூடானுக்கு சென்று த்னது பயிற்சி கொடுக்கும் மையத்தை செயல் படுத்துகிறார்.அங்கிருந்து சவுதி அமெரிக்க ஆதரவு பெற்றதை குறை கூறி வந்ததால் சூடான் மீது சவுதி அரசியல் அழுத்தம் கொடுத்து ஒசாமாவை வெளியேற்ற முனைந்தது.
10.ஒசாமா 1995ல் சவுதி குடியுரிமை இரத்து செய்யப்பட்டது,அவர் குடும்பத்தினர் அவரோடு எந்த் தொடர்பும் கிடையாது என்று கூறிவிட்டனர்.
11. சூடானுக்கு பிரச்சினை என்பதால் 1996ல் திரும்பவும் ஆப்கானிஸ்தான் செல்கிறார் ஒசாமா.
12. 1992 முதல் 2001 வரை ஒசாம அல் கொய்தா பல குண்டு வெடிப்புகள், தாகுதல்கள் நடத்தினார். அவரை அமெரிக்க மேலை நாடுகள் தேட ஆரம்பித்தன.
13.செப்டம்பர் 11,2001 அமரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு முதலில் மறுத்த ஒசாமா பிறகு பொறுப்பேற்றுக் கொண்டார்.
14.அமெரிக்கா 2001ல் ஆப்கன் மீது தாக்குதல் நடத்தில் ,ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது.தலிபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் இன்று வரை ஆப்கன் அரசியலில் ஒரு சக்தியாகவே இருந்து வருகின்றனர்.
15.ஆப்கன் பாகிஸ்தான் எல்லையில் ஒசாமா இருப்பதாக கூறப்பட்டதை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது.இந்த சூழ்நிலையில் மே 2 ,20011 அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் வைத்து சுட்டு கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.சில புகைப்படங்கள் மட்டும் வெளியானது.
16மரபணு பரிசோத்னை செய்து உறுதிப்படுத்தப்ப்ட்டதாகவும் செய்திகள் வந்தன.மத சடங்குகளுக்கு பின் சடலம் கடலில் வீசப்பட்டதாக கூறப்படுவது குழப்பத்தையும் சந்தேகத்தையுமே ஏற்படுத்துகிறது.
முடிவுரை
இன்னும் பல விஷயங்களை கூற முடியவில்லை ஏனெனில் இதில் பல விவரங்கள் அடங்கியுல்ளன்.
அ) இவர் ஆப்கன் சென்று அமெரிக்காவிற்கு உதவியாக சோவியத்திற்கு எதிரான முஜாகிதீன் போராட்டத்தை வெற்றி பெற்ச் செய்ததை மட்டும் செய்து விட்டு,வேறு செயல்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால், இன்னும் நாயகராகவே வலம் வந்து இருப்பார்.ஏதாவது நாட்டுக்கு அரசராக கூட ஆகி இருக்கலாம்.தன்னை பற்றிய கூடுதல் மதிப்பீடே காரணம் எனலாம்.இவர் எதற்காக இதையெல்லாம் செய்தார் என்பது ஒசாமாவிற்கே வெளிச்சம்.
ஆ)யார் நாயகன்,தீவிரவாதி என்பதை அமெரிக்கா ,மேலைநாடுகள் சார்ந்த ஊடகங்களே தீர்மானிக்கின்றன.
இ).பலருக்கும் இந்த மரணத்தில் நிம்மதி.
i) ஒபாமாவிற்கு மக்களிடையே மதிப்பு கூடலாம்.மீண்டும் தேர்ந்தெடுக்கப் படும் வாய்ப்பு அதிகம் ஆகலாம்.
ii)மதவாதிகளும் ஒசாமா மத கருத்துகளை தவறாக பிற்காலத்தில்(i.e அமெரிக்காவை எதிர்க்க ஆரம்பித்த பிறகு!!!!) புரிந்து செயல் பட்டவர்.அவர் செய்தது மதத்தின் படி தவறு என்று கூறி விடுவர்.
iii) சவுதி அரசு,இதர எண்ணெய் வள நாடுகள் அமெரிக்க நட்பில் ,பாதுகாப்பில் இருக்க வேண்டிய கட்டாயத்தையும் வெளிப்படுத்துகிறது.
சவுதி அரசு தனது அமரிக்க ஆதரவு போக்கை மறைக்கவே த்ன்னை ஒரு மத சார்புள்ள ,மத கோட்பாடுகளை காக்கும் நாடாக காட்டி வருகிறது.மத பிரச்சாரங்களுக்கும் பயிற்சி அளித்து உலகமெங்கும் பரப்புரை செய்கிறது.எண்ணெய் வளம் உள்ளவரை (சரியாக தெரிந்து கொள்ள இவ்விணயப் பக்கத்தின் பக்கதின் கீழ் உள்ள புவி காலக் கணக்கீட்டு அளவைகளை காணவும்.) இதுவும் தொடரும்.
Labels:
வரலாறு
Monday, May 2, 2011
உடன் கட்டை ஏறுவதை நியாயப் படுத்தும் மதவாதிக்ள்:ஆவணப்படம்
20 வருடங்களுக்கு முன்பு 17 வயது ரூப் கன்வர் என்னும் பெண் ,தன் இறந்த கணவனோடு கணவனோடு உடன் கட்டை ஏறியதாக் கூறப்பட்ட செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த ஆவணப் படம் இதனை விளக்குகிறது.
Sunday, May 1, 2011
Subscribe to:
Posts (Atom)