Monday, August 8, 2011

எண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்?


சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் நடக்க வாய்ப்பே இல்லாதது போல் தெரிந்தாலும் அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கணிப்பதும் ஒருவித ஆச்சர்யமான‌ விஷயமே..இப்பதிவில் உள்ள காணொளியில் உலகில் உள்ள அனைத்து எண்ணெய் வளமும் திடிரென்று மறைந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை படமாக்கி உள்ளார்கள். எந்த ஒரு விபத்தும் உடனடியாக நடக்கும் போது அதன் விளைவுகள் கடுமையாக் இருப்பது போல் உடனடியாக மனித வாழ்வே பெரும் சிக்கல்களை சந்திக்கிறது. இருக்கும் எண்ணெய் வைத்து சில நாட்களை ஓட்டுகின்ற‌னர். சமையல் எண்ணெய் மூலம் டீசல் வண்டிகள் இயக்கப் படுகின்ற‌ன.

மக்களின் வாழ்வு முறை மாறுகின்ற‌து.கிராமப் புறங்களுக்கு குடி பெயருகின்ற‌னர்.நாடுகளுக்கிடையேயான அரசியல்,பொருளாதார தொடர்புகள் குறைகின்ற‌ன. கொஞ்சம் கொஞ்சமாக சோயா,சோள‌ம் இவற்றில் இருந்து மாற்று எண்ணெய் எரி பொருள் தயாரிக்கப் படுகின்றது.மின்சார சேமிப்பின் பேட்டரி தயாரிக்க உதவும் லித்தியம் மிக முக்கியத்துவம் பெருகிறது.லித்தியம் அதிகம் கிடைக்கும் பொலிவியா பணக்கார நாடு ஆகிற‌து. மக்கள் 40 வருடங்களில் எண்ணெய்,ப்ளாஸ்டிக் இல்லாத, இயற்கையோடு இணைந்த வாழ்வு முறைக்கு வந்து விடுகின்ரனர்.விவசாயம் மிக முக்கியமான தொழில் ஆகின்றது.சுற்றுச் சூழல் மேம்ப்டுகின்றது.

கார்கள் மிக இலேசான வடிவமைப்பில்,மின்சாரத்தில் இயங்குகின்றன.ஆனால் விலை மிக அதிகம்.மிதிவண்டி அதிகம் பயன் படுத்தப் படுகின்ரது.சுமார் 40 வருடங்கள் கழித்து மீண்டும் ஆகாய விமானங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.மனிதர்கள் எண்ணெய் ஒன்று இருந்ததையே மறந்து வாழ்க்கையை தொடர்கின்ற‌னர்.

சென்ற பதிவு படித்து இருந்தால் இம்மாதிரி சூழ்நிலை இன்னும் 50 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக் நிச்சயம் வரும் என்று அறியலாம்.வருமுன் காக்க என்ன செய்யப் போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

3 comments:

  1. Indian soceity has been living for moe than 8000 years. Its not impossible live without oil , but we have to be prepared.

    We should concerve energy!

    As mentioned in the article, agricultue will once again become an important occupation.

    ReplyDelete
  2. வாங்க நண்பர் நரேன்,
    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றர் புத்தர்.எதையுமே குறைவாக பயன்படுத்தி வாழவ்து பல சிக்கல்களை குறைக்கும் என்றாலும் யாரும் தன் தேவைகளை சுருக்கி கொள்ளவோ, ஆடம்பர வாழ்வு முறையையோ,பிறரை பாதிக்கும் எதையுமே மாற்றிக் கொள்ள தயாராக் இல்லை.தன்னை நேரடியாக பாதிக்காத எதைப் பற்றியும் எவருக்கும் கவலை இல்லை.
    வாழ்வை அனுபவி இராஜா அனுபவி!!!!!!!!!!!.
    அனுபவிக்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி!!!!!!!!!!!!!!!!!!
    **********
    ஆகவே நிங்கள் சொலவ்து போல் எண்ணெய் குறைப்பு பயன்பாட்டு பிரச்சாரம் பெரிதளவில பயன் தராது.
    என்னுடைய கணிப்பு என்னவெனில் இதை தவிர்க்க முடியாது என்பதால் நிச்சயம் மாற்று ஏற்பாடு[புதிய எண்ணெய் வயல்கள்,மாற்று தொழில் நுட்பம்] ஏற்கென்வே கண்டறிந்து அதன் மூலம் அதிக பட்ட்ச அரசியல், பொருளாதார இலாப்த்திற்காக தாமதிக்கிறார்கள் என்பதே.
    பொறுத்திருந்து பார்ப்போம். கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. sorry naren.I have deleted your comment mistakenly
    **************
    naren has left a new comment on your post "எண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்?":

    50 வருடங்களில் உலக மாற்றம் எப்படி இருக்கும் என்று கணிப்பது கடினம்தான். 1980 களில் இப்பொழுது உலகம் எப்படி இருக்கும் என்று சரியாக கணித்ததில்லை என நினைக்கிறேன். வருவதை மக்கள் எதிர்கொள்வார்கள். catastrophe நிகழ்ச்சிகள் இருக்காது என நினைக்கிறேன்.

    conserve energy இயக்கம் வெற்றி தராது. வியாபாரமயமாக எல்லாம் ஆனதால் ஒரு பொருள் உலகத்தில் இருந்து மறையும் வரை அதை எவ்வளவு சீக்கிரமாக் ப்யன்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பயன்படுத்தப்படும். அதனால் எண்ணெயை மிச்சப்படுத்துங்கள் என்றால் யாரும் கேட்பதில்லை.
    உலகம் என்றால் சில மக்கள் தான் என்ற நிலமை தற்பொழுது வந்துவிட்டது.

    ஆனால் இந்தப் பதிவு தனி மனிதனுக்கு ஒரு பாடம். அவனின் அன்றாட வாழ்கையில் எண்ணெயை சார்ந்திருப்பதை குறைத்தால் அதுனுடைய தாக்கமே வேறுதான். எண்ணெய் தீர்ந்து பொது வாகங்களை பயனபடுத்துவதை விட இப்பொழுதே பயன்படுத்தலாம்.



    Posted by naren to ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை at August 10, 2011 4:43 AM

    ReplyDelete