Sunday, August 7, 2011

எண்ணெய் பொருளாதாரத்தின் சிக்கல்கள்


உலகில் எண்ணெய் மற்றும் அது சார்ந்த எரிபொருள் தொழில்நுடபம் அதிக பயன் பாட்டில் உள்ளதும் ஒரு நாட்டின் பொருளாதாரமே இதன் மூலம் நிர்ணயிக்கப் படுவதும் அனைவரும் அறிந்ததே.அது குறித்த சில புள்ளி விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.உலகின் ஒரு நாளின் மொத்த எண்ணெய் உற்பத்தி தேவைப்படும் அளவு.சுமார் 80 மில்லியன் பேரல்கள். .உற்பத்தி சுமார் 73 மில்லியன் பேரல்கள்(2010 கண்க்கீடு). 2010 ல் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தன்னுடைய அதிக பட்ச உற்பத்தியை எட்டியதாக பல தகவல்கள் உண்டு.
**************
எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்ய்யும் முதல் 10 நாடுகள்
1 Russia                        10,120,000   2010 est.
2 Saudi Arabia                  9,764,000 ,2009 est.
3 United States                  9,056,000,2009 est.
4 Iran                                  4,172,000,2009 est.
5 China                          3,991,000,2009 est.
6 Canada                          3,289,000,2009 est.
7 Mexico                          3,001,000,2009 est.
8 United Arab Emirates        2,798,000,2009 est.
9 Brazil                          2,572,000,2009 est.
10 Kuwait                         2,494,000,2009 est.
****************
எண்ணெய் அதிகம்  பயன்படுத்தும் முதல் 10 நாடுகள்

1 United States               18,690,000 2009 est.
2 European Union       13,680,000 2009 est.
3 China                         8,200,000 2009 est.
4 Japan                         4,363,000 2009 est.
5 India                         2,980,000 2009 est.
6 Russia                         2,740,000 2010 est.
7 Brazil                         2,460,000 2009 est.
8 Germany                         2,437,000 2009 est.
9 Saudi Arabia                 2,430,000 2009 est.
10 Korea, South                 2,185,000 2010 est.


 *********************



மேலே உள்ள படம் இனி எண்ணெய் உறத்தி குறைந்து கொண்டே வரும் என்பதை விளக்குகிறது.எணெய் என்பது மின் உற்பத்தி,போக்குவரத்து ஆகிய இரு செயல்களுக்கு அதிகமாக் தேவைப்படுகின்றது.மாற்று எரிபொருள் தொழில் நுட்பத்தின் தேவை மிக அதிகமான கால்த்தில் வாழ்கிறோம் என்றால் மிகையாகாது.இந்தியாவின் எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே போவதை பாருங்கள்.
Country                 2001                           2003       2004                    2007            2009
India(barrels/day) 2,130,000 2,320,000 2,450,000       2,722,000 2,980,000



           அதிகமாக் எதிர்பார்க்கப் பட்ட காற்றாலை,சூரிய சக்தி தொழில் நுட்பங்கள்  கை கொடுக்கவில்லை.எண்னெய் மீது சார்ந்த பொருளாதாரம்,வாழ்வு முறை மிக நெருக்கடிக்கு உள்ளாக்கும்,ஆகவே அரசும் ,மக்களும் இது குறித்த விழிப்புணர்வு பெறுதல் அவசியம்.இது குறித்து பல அறிவியல் ஆய்வுகளை செய்யும் படி நமது அரசு ஊக்குவிப்பது அவசியம்.

Crude oilprice chart, 2000-2009
2000 முதல் 2011 வரை எண்ணெய் விலை உயருவதை இப்படம் விளக்குகிறது.

எண்ணெயின் பயன் பாட்டை குறைப்போம்,மாற்று சக்தி வழிமுறைகளை ஊக்குவிப்போம்.2011ன் கண்க்கீட்டின் படி உலக என்ணெய் வள இருப்பு நிலவரம்.படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்தலாம்.


வருமுன் காத்தலே சிறந்தது. 



Peak Oil - Club of Rome



4 comments:

  1. Oil is a precious commodity. We can not assumetaht oil will be avilable for ever.

    20 years ago, I used to see many cyclists in the Roads of Chennai, but now hardly very few people, that too old people who are habituated for cycle.

    But the younger generation, teenegers are roaring in the bikes.

    Another factor is that even the two wheelers have reduced but Cars have increased.

    The Goverment should do something to encourage cycling atleast for short distances!

    ReplyDelete
  2. வணக்கம் சகோ திருச்சிக்காரன்
    எண்ணெய் மீது மட்டுமே சார்ந்த சக்தி பயன்பாடு ஆபத்தானது.இப்போதே மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே ,எண்ணெய் இல்லாமல் போகும்போது நிலைமையை சமாளிக்க முடியும்.எண்ணெய் பயன் பாடு அதிகம் சுற்றுச்சூழ்லை மாசு படுத்துவதால் 10 கி.மீ தூர பயணம் வரைக்கும் அனைவரும் மிதிவண்டி பயன் படுத்தினால் நல்மாக இருக்கும்.கூடுமானவரை நடைப் பயணம் நல்ல உடல் பயிற்சி.உண்மையிலேயே தேசத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டுமெனில் எண்ணெயின் பயன்பாட்டை குறைக்கலாம்.
    நன்றி

    ReplyDelete
  3. //அதிகமாக் எதிர்பார்க்கப் பட்ட காற்றாலை,சூரிய சக்தி தொழில் நுட்பங்கள் கை கொடுக்கவில்லை.எண்னெய் மீது சார்ந்த பொருளாதாரம்,வாழ்வு முறை மிக நெருக்கடிக்கு உள்ளாக்கும்,ஆகவே அரசும் ,மக்களும் இது குறித்த விழிப்புணர்வு பெறுதல் அவசியம்.இது குறித்து பல அறிவியல் ஆய்வுகளை செய்யும் படி நமது அரசு ஊக்குவிப்பது அவசியம்.//ஜார்ஜ் புஷ் ஜூனியர் பெட்ரோலிய எரிபொருளுக்காக மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் நிலையை மாற்றவும் எண்ணெய் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு மாற்று ஆய்வுகளுக்கான ஊக்குவிப்புக்களை கொண்டு வந்தார்.அவை இன்னும் பரிட்சார்த்த முறையிலேயே உள்ளது.காற்றாலை,சூரிய சக்தி போன்று இதுவும் தோல்வியை தழுவலாம் அல்லது புதிய எரிபொருள் புரட்சியை உருவாக்கவும் கூடும்.இதற்கான காலம் சுமார் 25-50 வருடங்கள் கூட ஆகக்கூடும்.எனவே தற்போதைக்கான ஒரே தவிர்க்க முடியாத எரிபொருள் பெட்ரோல் மட்டுமே.

    ReplyDelete
  4. ஒரு பக்கம் முந்தைய சோசலிச காலத்து வாழ்க்கை முறை,இன்னொரு பக்கம் புதிய உலகமயமாக்கலின் நுகர்வு கலாச்சாரத்தை அனுபவிக்க வேண்டிய தேவை,மேலும் இந்தியாவின் வல்லரசுக் கனவும்,அதற்கான பொருளாதார வாய்ப்புக்களும் இருப்பதால் பழமையையும்,புதுமையையும் ஒரே சேர கொண்டு செல்வதே சிறந்த முறையாக இருக்கும்.இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் இவற்றின் சமன்பாட்டோடு பயணிக்கிறதென்றே நினைக்கின்றேன்.இந்தியா போன்ற பெரிய நாடுக்கு எண்ணெய் பயன்பாடு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்பதோடு பின் தங்கிய சுகாதாரம் இரட்டிப்பு பாதிப்பையே கொண்டு வரும்.நடைபயணம்,சைக்கிள் உற்பத்தி போன்றவற்றை ஊக்கப்படுத்துவது அவசியம்.

    ReplyDelete