Wednesday, August 10, 2011

The.Life.of.Muhammad.-BBC

Part 115 comments:

 1. இந்த காணொளியின் transcripts தமிழாக்கம் செய்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆவணப்படத்தை எடுத்த rageh omar, அமெரிக்கா படை பாக்தாத் நுழைந்து, சதாமின் சிலை உடைக்கப்பட்டபோது, இவர் பி.பி.சி க்காக தந்த செய்தி தான் நினைவுக்கு வருகிறது.

  முன்பே ஐரோப்பாவில் இஸ்லாமின் வரலாறு என்ற ஆவணப்படத்தை தந்தவர் தான். இந்த காணொளி அதைவிட ஆழம் குறைந்ததாக எண்ணுகிறேன். கடைசியில் எழும் எண்ணம் அவர் இஸ்லாமிற்கு ஒரு apologestic ஆக இருக்கிறார்.

  ReplyDelete
 2. வாங்க நரேன்,
  அருமையான் செயல்.திரு முகமதுவின் நடந்ததாக கூறப்படும் செயல்களை நான் கூடுமான்வரை விவாதிப்பதை தவிர்ப்பது உண்டு.அக்கால வழக்கம் என்னவோ அதை அவர் செய்தார் என்பது மிகவும் இயல்பான் விஷயம்.நம்ம பிரச்சார பிரங்கி சகோக்கள் அச்செயல்களை உயர்வு நவிழ்ச்சியாக எக்கால்த்திற்கும் பொருந்தும் என்பதும் ஒரு மனிதனின் ஒவ்வொரு செயலும் மத(த்தின்) குருக்களின் அனுமதியுடனேயே நடக்க வேண்டும் போல் கருத்திடுவது எதிர் வினைகளை தோற்றுவிக்கிறது.

  திரு பிஜேவின் தளத்தில் ஒருவர் கேட்கிறார் ஆண்கள் தங்கம் அணியக்கூடாது என்று திரு முகமது(ஹதிது) கூறுகிறார்,ஆகவே ப்ளாட்டினம் அணியலாம?.அதற்கு திரு பி.ஜே தங்கம் மட்டும்தான் தடை ப்ளாட்டினம் அணியலாம் என்கிறார்.இப்படிப்பட்ட ஆட்கள் அக்யில் ஆட்சி இருந்தால் என்ன ஆகும்?.எதை எப்படி வேண்டுமென்றாலும் திரித்துக் கூறுவதே இவர்களின் வேலையாகிவிட்டது.

  இந்து மதத்தின் சாதிப் பிரச்சினையினால்தான் மதம் மாறினார்கள்,மதத்தின் உள்ள மன‌திற்கு இதமளிக்கும்,சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் வழிமுறைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,எல்லாம் நம்பிக்கை மட்டுமே சார்ந்தது என்று சொன்னால் நலமாக இருக்கும். பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் முடிவு வரை ,சர்வ‌ ரோஹ நிவாரணம்,உலகளாவிய மத ஆட்சி,நேருக்கு நேர் விவாதம் என்றால் எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்க் உள்ளாகிறோம் அல்லவா?

  ReplyDelete
 3. http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/kavaring_nakai_anithal/
  http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/pilaattinam_aniyalaamaa/
  ஆண்கள் ப்ளாட்டினம் அணியலாம்

  ReplyDelete
 4. சகோ சார்வாகன் அவர்களே

  இன்னொரு பதிவும் எழுதியுள்ளேன். அது இறுதி இறைதூதரை பின்பற்றும் மூஃமீன்களுக்குத்தான் என்றாலும் நீங்களும் படிக்கலாம்.

  http://pagadu.blogspot.com/

  ReplyDelete
 5. வணக்கம் ச்கோ,
  அருமையான் ஆய்வு.கடும் உழைப்பும் தேடல் உள்ளவரால் மட்டுமே இம்மாதிரி பதிவு எழுதமுடியும்.(சர்ச்சைகுறிய) குரான் வசனங்களில் அரபியில் இருந்து மொழி பெயர்க்கும் போது சில மாற்றங்கள்,அடைப்புக் குறிக்குள் இல்லாதவற்றை போட்டு இன்னும் தந்திரம் செய்யும் போது மதவாதிகள் நினைக்கும் அர்த்தம், விளக்கம் கொன்டு வர முயும் என்பதை ஐயந்திரிபர நிரூபித்த பதிவு.

  பெரும்பாலும் வசன‌ங்களுக்கு பல பொருள்கள் கொள்ள முடியும் என்பது எப்படி எனில் அரபிக்கு இலக்கணம் ,குரானுக்கு பிறகு,குரானை அடிப்படையாக வைத்து வரையறுக்கப் பட்டது என்றால் தெளிவாக புரிந்துவிடும்.
  ________
  "ஆகவே எதை(மத வாதிகள் அர்த்தமாக) கொண்டுவர நினக்கிறார்களோ அதுவாகவே அது(வசனம்) ஆகிவிடும்"
  ___________
  இது தெரிந்தவுடன் இந்த ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டேன். அவ்வப்போது சில விவாதங்களுக்காக மட்டும் சரிபார்க்கும் வேலை செய்கிறேன்.மீண்டும் ஆய்வு செய்யும் ஆவலை தூண்டிய பதிவு.

  உங்கள் ஆய்வு மலைக்க வைக்கிற‌து.
  கொஞ்சம் முக்கியமான் வரிகளை வேறு வண்ணத்தில் காட்ட சிறு ஆலோசனை. வாழ்த்துகள்.
  simply superb.hats off

  ReplyDelete
 6. எல்லாம் ஏக இறைவனின் அருட்கொடைதான்.

  இந்த பதிவுகளை படித்து நீங்களும் மூஃமீனாகி நபி(ஸல்) அவர்களது வழியை பின்பற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துவா செய்கிறேன்.

  அல்லாஹ் இதில் உங்களை மாதிரி போக்கிரிகளுக்கு நிறைய ஆதாயம் வைத்திருக்கிறான் என்பதை கண்டுகொள்ளுங்கள்.

  சும்மாவா “சிந்திக்க மாட்டீர்களா” என்று மூஃமீன்களிடம் அல்லாஹ் கெஞ்சுகிறான்?

  ReplyDelete
 7. அல்லாஹ்வின் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடைகள் மூன்று. இது பற்றி விவரமாக பதிவு எழுதியிருக்கிறேன்
  படித்து அல்லாஹ்வின் அருள் மழையில் நனைய வாருங்கள்
  முஸ்லீம் உம்மாவுக்கு நமது நபி(ஸல்) அவர்களின் மூன்று அருட்கொடைகள்

  ReplyDelete
 8. நாத்திக போக்கிரியான உங்களது பதிவில் என்னுடைய பதிவுகளை விளம்பரம் செய்வதற்கு மன்னிக்கவும். தமிழ்மணம் தமிழ்வெளியெல்லாம் எடுத்துகொள்ள மாட்டேன் என்று எனது சிறிய இஸ்லாமிய தாவா முயற்சிக்கு எதிராக இருக்கிறார்கள்.

  இப்போது சீப்பு வைத்து தலை சீவுவது பற்றி அல்லாஹ்வின் இறுது இறைதூதர் நபி(ஸல்) என்ன கூறினார்? என்பது போன்ற மூமீன்களுக்கு முக்கியமான கேள்விகளை அலசிக்கொண்டிருக்கிறேன்.
  படித்து உங்களது கருத்தை கூறுங்கள்.

  ReplyDelete
 9. நான் நாத்திக போக்கிரி என்றாலும் உங்களை போன்ற மதவாத சகோதர்களுடன் கருத்து வேறுபாடு மட்டுமே. அதுவும் மதம் குறித்த சில கொள்கையாகங்கள், நடைமுறை சட்டங்கள் குறித்து மட்டுமே. என்னைப் போன்ற காஃபிரை சகோதரனாக் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். உங்கள் மத புத்தகம் படி எல்லோரும் ஆதமின் மக்கள்தானே.!!!!!!!!!!
  நன்றி அடிக்கடி வாருங்கள் சகோ

  ReplyDelete
 10. மூஃமீன்களுக்கு மிக மிக மிக முக்கியமான நபி (ஸல்) அவர்களது எச்சரிக்கையை ரமலான் காலத்தில் நினைவு படுத்தியிருக்கிறேன்.

  உங்களது இஸ்லாமிய நண்பர்களிடமும் இந்த முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்துகொள்ளுங்கள்

  மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது

  இந்த பதிவை படித்தால்தான் ஏன் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவீர்கள்.

  தயவு செய்து பரப்புங்கள். இது மிகவும் அவசியமான எச்சரிக்கை. பலரது அடிப்படை வாழ்வே கேள்விக்குரியாக ஆகிவிடக்கூடிய ஆபத்து நிறைந்தது

  ReplyDelete
 11. மீண்டும் உங்கள் பதிவை விளம்பரம் செய்ய உபயோகப்படுத்திகொள்வதற்கு வருந்துகிறேன்.

  அன்புள்ள மூமீன்களே.


  சுவனத்தின் பாதையை எளிதாக்கிக்கொள்ளுங்கள்...

  ஹராமான உணவுவகைகளை தவிர்த்துகொள்ளுங்கள்.

  எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்

  ReplyDelete
 12. சார்வாகன்

  பெர்மட் தியரம் பற்றிய கட்டுரையில்தான் இதனை போடலாம் என்று நினைத்தேன். அது எனக்கே சரியாக தோன்றவில்லை.
  ஆகவே இங்கே விளம்பரம் செய்கிறேன்.

  ஹைசன்பர்க் அன்சர்டைனிடி பிரின்ஸிபிளை அன்றே சொன்ன அல்லாஹ் பற்றிய கட்டுரையை இப்போது பதிந்திருக்கிறேன்.

  படித்து அல்குரான் அல்லாஹ் அனுப்பிய இறைச்செய்திதான் என்ற ஆதாரத்தை படியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்

  இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்

  ReplyDelete
 13. ஆலிம் ஜனாஃப் இபின் ஷாகிர் அவர்களே,
  உங்கள் தாவாவிற்கு பரம் இரசிகன் ஆகிவிட்டேன்.ஐயப்பாட்டு கொள்கையை ஐயமின்றி குரானின் துணை கொண்டு விளக்கிய அழகே அற்புதம்.
  _________
  நானும் தாவா செய்கிறேன்.இறைவன் நாடியவர்கள் மட்டுமே முமின்கள் ஆக முடியும் என்ற‌ படியாலும்,இறைவன் நாடி மாறினேன் என்று பொய் சொல்ல மனம் வராததாலும் பெரியார்தாசன் போல் ஆய்வு செய்து மாறினேன் என்று உளர முடியாததாலும் என்னால் முமின் ஆக முடியவில்லை. காஃபிரின் தாவாவை இறைவன் ஏஎற்றுக் கொள்வதில்லை என்றாலும் நரக சூடு பூமி நெருப்பை விட 70 மடங்கு என்பதால் எனக்கு பய்மாக் இருக்கிறது.,ஆகவே தாவா செய்யும் எனக்கு பூமி நெருப்பில் மட்டும் வாட்டுமாறு துவா செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன்.
  ________

  3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
  Volume :3 Book :59
  ___________

  இனி காஃபிர் தாவா

  ஐசன்பர்க் அயப்பாட்டு கொள்கை=குரான் அர்த்தம் ஐயப்பாட்டு கொள்கை

  "ஒரு குரானின் வசனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அதன் விளக்கம் இஸ்லாமுக்கு ஒத்துவராது.இஸ்லாமுக்கு ஒத்து வரும் வசனம் தெளிவாக இருக்காது".
  ________
  பாருங்கள் அஜரத்,
  (1) குரான் வசனம் தெளிவு விளக்கம் குழப்பம்
  குரான் 3 நேரம் தொழுகை என்று தெளிவாக சொன்னாலும் அதற்கு அர்த்தம் 5 நேரம் என்று எப்படி குழப்புகிறார் பி.ஜே பாருங்கள்
  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/71-natuth-thozukai-ethu/
  .குரான் 3.81 முகமதுக்கு பிறகு தூதர்கள் உண்டு என்றால் அதற்கு விளக்கம் பாருங்கள்.
  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/95-nabimarkalidam-sduththauruthi-mozi/
  __________
  (2) குரான் குழப்பம் விளக்கம் தெளிவு
  குரான் 33.40 ஹாத்தமுன் நபி என்கிற‌து அதாவது தூதர்களுக்கு முத்திரை என்கிறது.ஹாத்தமுன் என்கிர வார்த்தை குரானில் வேறு எங்கும் இதே அர்த்தத்தில் இல்லை.(வார்த்தையே இல்லை)
  ஹதிது அவர் தோளில் நபித்துவ முத்திரை இருந்தது என்கிற‌து. முத்திரையிடப்பட்ட நபியா, நபிமார்களுக்கெல்லாம் முத்திரையா என்று மண்டையை பிய்க்க வேண்டியதுதான் ஆனால்
  முகம்து இறுதி தூதர் என்ற அடிப்படையில்தான் சுன்னி இஸ்லாமே ஓடிக் கொண்டு இருக்கிறது.
  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/187-iruthi-nabi-muhamathu/

  _________________
  ஆக்வெ குரான விள்கத்தை ஐயப்பாடாக்கி ஐசன் பர்க்கின் குவாண்டம் மெகானிக்சை அன்றே கூறிய ஏக இறைவன் செயலை வியக்கிறேன்.

  ReplyDelete
 14. கண்ணியத்திற்கிறிய ஆலிம் அவர்களே
  காஃபிருக்கு சுவனத்தின் கதவுகள் மூடியே இருந்தாலும்,என் பதிவின் பின்னூட்ட கதவு ஈமானுள்ள உங்களுக்கு திறந்தே இருக்கிற‌து.என் உள்ளத்தை யாரோ இறைவனோ,இப்லீசோ அல்லது ஜின்னோ விரிவாக்கி உள்ளார்கள். ஆக்வே தங்கள் தாவா அழைப்புகளை எங்கு வேன்டுமானாலும் பதியுங்கள்.
  நன்றி
  சார்வாகன்(நாத்திக ,பவுத்த,யூத கிறித்தவ இந்துத்வ,தர்ஹாவாதி=மறுமை நரக்வாசி)

  ReplyDelete
 15. சிலவேளைகளில் நமது மூமீன்களே இஸ்லாம் எளிய மார்க்கம் என்றெல்லாம் குழம்பிவிடுகிறார்கள்.
  ஆகையால் தாவாப்பணியை எப்படி இஸ்லாம் எளிய மார்க்கம் என்று சொல்லி தாவா செய்யும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டியவை என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

  கருத்துக்களை கூறவும்

  இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

  ReplyDelete