Monday, August 1, 2011

முதல் கலிஃபா அபுபக்கரின் தேர்வு



மத ஆய்வு என்பது பாரபட்சமின்றி,ஆதாரப் பூர்வமாக் செய்யப் படவேண்டிய விஷயம்.இதில் நம்பிக்கை என்பதை விட நேர்மை என்பதே முக்கியம்.மத நூல்களில் உள்ள கருத்து சர்ர்சைக்குறியதாக் இருக்கும் பட்சத்தில் அதனை திரித்து அர்த்தத்தை மாற்றிக் கூறுவது மத பிரச்சாரகர்களின் வழக்கம்.சரியான அர்த்தம் அப்போது எப்ப்டி கொள்ளப் பட்டது என்பதும் ஆய்வுக் குறிய விஷயம்.

இப்பதிவில் புஹாரி தொகுப்பில் உள்ள ஹதிதுகளில் திரு முகமதுவின் மரணத்தின் பின் நடந்தவற்றை குறிப்பிடும் சிலவற்றை தொகுத்து அளிக்கிறேன்.

ஒரு சில‌ வரலாற்று குறிப்புகள்.

பொ.ஆ 632: திரு முகமதுவின் மரணம்

பொ.ஆ 632_634 திரு அபுபக்கர் கலிஃபா

பொ.ஆ (634_644) திரு உமர்
644ல் தன் அடிமை ஒருவனால் கொலை செய்யப் படுகிறார்.

பொ.ஆ (644_656) திரு உத்மான்
656ல் சிலரால் கொலை செய்யப் படுகிறார். 

பொ.ஆ (656_661) திரு அலி இபின் அபுதாலிஃப்
பல வாரிசு போர்கள்(ஒட்டகப் போர்கள் என்றழக்கப் படுகின்றன).இவரும் கொலை செய்யப் படுகிறார்.
_____________
உம்மையாது ஆட்சி

அலியிடம் இருந்து ஆட்சி அபு சுஃபியானின் மகன் முவையா & இவரின் வமசம் பொ.ஆ 661_751 வரை ஆள்கின்றனர்.திரு முவையாவின் மகன் யசீதின் ஆட்சியில்தான்[பொ.ஆ 680_683] திரு முகமதுவின் பேரன்(அலி& ஃபாத்திமாவின் மகன்) குடும்பதோடு கொல்லபடுகிறார் .இது மொஹரம் என்றழைக்கப் படுகிறது.திரு முகமதுவின் வம்சத்தை சேர்ந்தவர்கள் பொ.ஆ 751 ஆட்சியை கைப்பற்றி உம்மையாதுக்களின் வமசத்தையே கொலை செய்து அப்பாசித்து வம்ச கலிஃபாக்களின் ஆட்சி அமைக்கின்றன‌ர்.இந்த அப்பாசித்து கலிஃபாக்களின் கால்த்தில்தான் அனைத்து ஹதிதுகளும் தொகுக்கப் படுகின்றன.

அப்பாசித்துகளின் ஆட்சி (750 ல் இருந்து 1258 வரை நீடித்தது.பொ.ஆ 1258ல் செங்கிஸ்கான் படையெடுத்து வம்சத்தையும்,அரசையும் அழித்தார்.பிறகு ஆட்டோமான் துருக்கியர்கள் வசம் ஆட்சி சென்றது.பொ.ஆ 1299 முதல் 1921 வரை ஆட்டோமான் சம்ம்ராஜ்யமே உலக முஸ்லிம்களின் த்லைமை அரசாக அறியப்பட்டது.ஆட்டோமான் பேரரசை தோற்கடிக்க உதவிய இபின் சவுத் அப்துல் அஜீஸ்[1876_1953] சவுதி அரச‌ராக மேலை நாடுகள் உதவி செய்தன.இபின் சவுதின் பெயரிலேயே சவுதி என்று அரேபிய நாடு அழைக்கப் படுகிறது.இவர் மகன் திரு அப்துல்லா 2005ல் இருந்து மன்னர் ஆக‌ இருக்கிறார். 
____________


மெலே கூறிய வரலாறு படித்தலே ஒரு மன்னராட்சி என்பது மாறும்போது அந்த வம்சமே அழிக்கப் பட்டு வந்தது புலனாகும்.இதுதான் நடைமுறை இஸ்லாமிய ஆட்சியாக இருந்தது.பிற மத நாடுகள் சிலவற்றிலும் இதே நடைமுறை இருந்து வந்திருக்கின்ரன என்பதையும் ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

சில மதகுருக்கள் ஜனநாயகத்தை குறை சொல்வதால் 1400 வருட மத ஆட்சிகள்,ஆட்சி மாற்றங்கள் எப்படி நடந்தனை என்பதை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.

முகமதுவின் மரண‌த்திற்கு பின் நடந்த நிகழ்வுகள் பற்றி கூறும் ஹதிதுகளை மட்டும் தருகிறேன்.இத்ன மீது எனது கருத்துகளை கூற விரும்பவில்லை.மதம் என்பது ஆன்மீக தேடலாக ,வழிகாட்டியாக் இருப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. மதரீதியான‌ சர்வ ரோஹ நிவாரன அரசை அமைப்போம் என்று மூளை சலவை செய்வதில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் அக்கால்த்திலும் ,இக்காலம் போன்றே அரசியல் போட்டி,பொறாமைகள் இருந்தன என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். பொற்கால் ஆட்சி என்பது கானல் நீரே!!!!!!!!!!!!!!.மதத்தில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத விஷயங்கள் ஒதுக்கி பண்படுத்துங்கள்.அப்படி எதுவுமே இல்லை,அனைத்தும் சரி என்று கூறும் பிரச்சார பீரங்கிகளிடம் ஜாக்கிரதை.!!!!!!!!!!! .

ஆகவே உலகின் மிகப் பெரிய ஜனநாயக் மத சார்பற்ற நாட்டின் குடிமக்களாகிய நாம் ஜனநாயகம்,மதசார்பின்மை என்பது கிடைப்பதற்கரிய விஷயங்கள் என்பதை அறிய வேண்டுகிறேன்.மத குருக்களின்அரசியல் விட்டு விலகி [மதத்தில் உள்ள] நல்லவர்கள்,கற்றறிந்த அறிஞர்கள் பின் அணி திரள்வதே பயனுள்ள எதிர்கால்த்திற்கு வழி வகுக்கும்.
   
**************

1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார். 
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். 
Volume :2 Book :23
******************
3667. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். - அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), 'அதாவது ஆலியாவில்" என்று கூறினார்.
அப்போது உமர்(ரலி) எழுந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.
Volume :4 Book :62


*************
3668. அப்போது, அபூ பக்ர்(ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போன்றிவிட்டு, 'முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்' அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். மேலும், 'நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே' என்னும் (திருக்குர்ஆன் 39:30-ம்) இறை வசனத்தையும், 'முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அன்சாரிகள் (தம்) 'பனூ சாஇதா' சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம், 'எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்' என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)" என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூ பக்ர், உமர் இப்னு கத்தாப், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர்(ரலி) பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூ பக்ர்(ரலி) மெளனமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூ பக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். எனவேதான் நான் பேச முயன்றேன்' என்று கூறி வந்தார்கள். 

பிறகு, அபூ பக்ர்(ரலி) பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், '(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்' என்று கூறினார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் இப்னு முன்திர்(ரலி),*/ 'இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும்ஆவர். எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'இல்லை" நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்" என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், 'ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்" என்று கூறினார். அதற்கு உமர்(ரலி), 'அல்லாஹ் தான் அவரைக் கொன்றுவிட்டான்" என்று பதில் கூறினார்கள். 
Volume :4 Book :62
*************
6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்துவந்தேன். அவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இந்நிலையில் ஒரு நாள்) நான் 'மினா' பெருவெளியில் அவரின் முகாமில் இருந்து கொண்டிருந்தபோது அவர் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்களிடம் இருந்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார். இது உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது (ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு) நடந்தது. 

(திரும்பி வந்த) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்குத் தெரியுமா? இன்று ஒருவர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் சென்று, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் அவர்கள் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (முதல் கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாக நடைபெற்று முடிந்தது என்று கூறிய இன்னாரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு, 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இன்று மாலை நான் மக்கள் முன் நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையீடு செய்ய நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யப் போகிறேன்' என்றார்கள். உடனே நான், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவ காலத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் தரம் தாழ்ந்தோறும் குழுமுகின்றனர். நீங்கள் (உரையாற்றுவதற்காக) மக்கள் முன் நிற்கும்போது அவர்கள்தாம் உங்களுக்கருகே மிகுதியாக இருப்பர். நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல, அதற்கு உரிய பொருள் தந்து முறையாக விளங்காமல் அவரவர் (மனம்போன போக்கில்) தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் மதீனா சென்று சேரும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், மதீனாதான் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியாகும். நீங்கள் (அங்கு சென்று) மார்க்க ஞானம் உடையவர்களையும் பிரமுகர்களையும் தனியாகச் சந்தித்து நீங்கள் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால், அறிவுபடைத்தோர் உங்கள் கூற்றை அறிந்து அதற்கு உரிய இடமளிப்பார்' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்' என்றார்கள். 

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் பிந்திய பகுதியில் மதீனா வந்து சேர்ந்தோம். வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) அன்று சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது (பள்ளிவாசலை நோக்கி) நான் விரைந்தேன். அப்போது 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களை சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) ஓர் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். உடனே நான் அவர் அருகில் என் முட்டுக்கால் அவரின் முட்டுக்காலைத் தொட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்; அதற்கும் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (சொற்பொழிவு மேடையை நோக்கி) வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட நான் 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களிடம், 'உமர்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நாளிலிருந்து (இந்த நேரம் வரை எப்போதுமே) சொல்லியிராத ஒன்றை இன்று மாலை சொல்ல இருக்கிறார்கள்' என்று கூறினேன். அதற்கு ஸயீத் அவர்கள் 'அப்படியெல்லாம் எதையும் உமர் கூறுவதற்கில்லை' என்று கூறி என்னிடம் மறுத்தார்கள். .

அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:) .

நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும். 

அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். 
மேலும், உங்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறுகூதாக எனக்குச் செய்தி எட்டியது. '(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது' என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஆம்! அது எப்படி (அனைவரிடமும் ஆலோசிக்காமல் அவசரமாக)த்தான் நடந்தது. ஆனால், அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுக்காத்துவிட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (-அரபுகள்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூ பக்ர்(ரலி) அவர்களைப் போன்று இல்லை.44 முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின் ஒரு மனிதருக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுக்கிறவரும் அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம். 

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். 
அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்' என்று கூறிவிட்டு நடந்தோம். பனூசாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம். 

அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்' என்று கூறினார். 

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை. 

இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராகஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம். 

அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்' என்றார். 

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்' என்றார். .

உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)' என்று கூறினேன்.45 மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். 

ஆக, முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம். 
Volume :7 Book :86
************
2741. அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். 
ஆயிஷா(ரலி) அவர்களிடம் மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)" என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்? (நபி(ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?' என்று கேட்டார்கள். 
Volume :3 Book :55
**********************
மேற்கூறிய ஹதிதுகளை படித்தாலே முதல் கலிஃபாவின் தேர்வே குழப்பமாக் நடைபெற்று இருப்பது தெரியும்,ஷியா முஸ்லிம்கள் ஹாதிர் கும் என்னும் இடத்தில் கூறப்படும் ஹதிதில் அலி வாரிசாக அறிவிக்கப் பட்டதாக கூறுகின்றனர்.அபுபக்கருக்கு பிந்தைய உத்மான்,உமர்,அலி மூவரும் கொலை செய்யப் பட்டதும்,ஃபித்னா போர்களும் கூட கவனத்தில் கொள்ள வேண்டியவை.ஆக்வே இஸ்லாமிய பொற்கால் ஆட்சி என்பது எப்போதும் இருந்ததும் இல்லை.இருக்கப் போவதும் இல்லை.ஒருவேளை சொர்க்கத்தில் பொற்கால் ஆட்சி இருந்தால் விரும்புவோர் செல்ல முயற்சிக்கலாம்.. மதத்தை ஆன்மீகத்திற்கு மட்டும் பயன் படுத்தி மதகுருக்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு,ஜனநாயக் மத சார்பற்ற சக்திகளோடு இணைந்து போராடுவதே சிறுபானமையினருக்கு நன்மை பயக்கும்.

11 comments:

  1. //ஒருவேளை சொர்க்கத்தில் பொற்கால் ஆட்சி இருந்தால் விரும்புவோர் செல்ல முயற்சிக்கலாம்..//

    அங்கே எப்ப்டி இருக்கும்னுதான் சொல்லியாச்சில்லா. நல்லாத்தானிருக்கும்....... !

    ReplyDelete
  2. இன்னும் பல விஷயங்களை கூறவில்லை.கீழ்க்கணட சுட்டிகளில் இன்னும் பல விவரங்கள் கிடைக்கும்.

    http://en.wikipedia.org/wiki/Succession_to_Muhammad
    ________
    http://en.wikipedia.org/wiki/Abu_Bakr#Election_of_Abu_Bakr_to_Caliphate
    ___________
    http://en.wikipedia.org/wiki/List_of_Sahaba_not_giving_bay%27ah_to_Abu_Bakr

    ReplyDelete
  3. Al-Muraja'at
    A Shi'i-Sunni dialogue
    (also known as
    'The Right Path')

    http://www.al-islam.org/murajaat/

    ReplyDelete
  4. முல்லாக்கள் செய்யும் மூளைச்சலவையின் பாதிப்பு மிகுதியானது ஆகும். வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா கஷ்டங்களை, அநியாயங்களை இஸ்லாம் ஆட்சி வந்தால் சரியாகிவிடும் என்கிற போதனைத்தான் நடக்கின்றது. அதையும் நம்புவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    மதநெறியை போதனை செயவதற்கு கடைப்பிடிப்பதற்கும் ஆட்சேபனைகள் இல்லை. ஆனால் மதத்தை பின்பற்றுகிறேன் செயல்படுத்துகிறேன் என்று மற்ற மதத்தவருக்கு தீங்கு நேர்ந்தால் அது ஆட்சேபனைக்குரியது.

    உலகில் எந்த ஆட்சிமுறையிலும் இஸ்லாம் ஆட்சி முறை உட்பட எல்லாம் perfect ஆக இருக்கமுடியும் என்பது வெறும் மனக்கோட்டைத்தான் (utopian concept). உலகின் ஆட்சிமுறை பரிணாம வளர்ச்சியில் இப்பொழுது வளர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை ஜனநாயகம் தான். அது செய்ல்முறையில் தன்னகத்தே கொண்டுள்ள குறைகளை கலைக்கிறது. நாட்டுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றார்ப்போல் வளர்கிறது.

    ஜனநாயகத்திற்கு மாற்றாக ஜனநாயாக வளர்ச்சியே தவிர, கற்கால ஆட்சிமுறைகள் அல்ல. மேல் கூறிய அதிஸ்களை பார்த்தால் உலகத்தை ஆள்வதற்கு அரபு குரேஷிகளுக்குத்தான் உரிமையை அல்லா தந்திருக்கிறார் போலும். இதை மறுக்க முடியாது. ஏன் என்றால் முல்லாக்கள் உலகில் நடந்த perfect ஆட்சி என்றால் மூன்று கலிஃபாக்களைத்தான் சொல்வார்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் நரேன்,
    இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள ஆட்சி இப்போது உலகின் உள்ள அனைத்து இஸ்லமிய நாடுகளின் ஆட்சியை விட சிறந்தது.அனைவருக்கும் அவர் கருத்தை கூறும் உரிமை,வாக்குரிமை உண்டு.ஒரு இந்திய ஆணோ ,பெணோ விரும்பிய மதத்தவரை,நாட்டவரை திருமண‌ம் செய்ய முடியும்.
    நமது மக்கள் தொகைக்கு இவ்வளவு பேருக்கு உணவளிப்பதும், உள் நாட்டு போர்கள் இல்லாமல் இருப்ப்துமே மிக பெரிய விஷயம்.
    நம் பிரச்சினை ஊழல் மட்டுமே. அனைவருக்கும் இலவச கல்வி,சுகாதாரம் என்ற இலட்சியத்தின் மிக பெரிய தடைக்கல் இதுவே!!!!!!!!!!!.

    ReplyDelete
  6. நமது மக்கள் தொகைக்கு இவ்வளவு பேருக்கு உணவளிப்பதும், உள் நாட்டு போர்கள் இல்லாமல் இருப்ப்துமே மிக பெரிய விஷயம்..////

    நிச்சயம் மறுக்க முடியாத, மறுக்க கூடாத உண்மை. இதுவே மதவாதிகளையும், ஸ்டாலின்ஸ்ட்களையும் உருத்தி கொண்டே இருக்கிறது. வாழுகின்ற தேசம் வறுமையை தந்தாலும் நன்றி இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. நண்பர் ஓசை வணக்கம்,
    1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த போது அனைவருமே இந்நாடு ஒற்றுமையாக ,ஒரே நாடாக இருக்கமுடியாது என்றே நினைத்தனர்.நாம் நமது முன்னோர்களின் சில வரலாற்றுத் தவறுகளான சாதி ஒடுக்குமுறை போன்ற்வற்றை ஒத்துக் கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய முயற்சித்ததால் இது தவிர்க்கப் பட்டது.இன்னும் பல் படிகள் கடக்க வேண்டியுள்ளது. ஜன்நாயகம்,மத, மொழி உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. மக்களுக்கு பிடிக்காத ஆட்சி எளிதில் ,அமைதியாக மாற்றப் படுகிற‌து.த்மிழகத்தில் செய்துவிட்டோம், மத்தியிலும் செய்வோம். மதவாதிகளும் ஸ்டானிலிஸ்ட்களும் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் இந்தியாவின் அரசியலமைப்பு சிறந்ததே,இன்னும் சிறப்பாக்க தொடர்ந்து முயற்சிப்போம்.
    நன்றி.

    ReplyDelete
  8. இஸ்லாம் வேகமாக பரவும் மதமாக இருப்பதன் காரணத்தை முகவை அப்பாஸ் தெரிவித்திருந்தார். அதனை இங்கே உங்களைப் போன்ற நாத்திக மடையர்களுக்காக பகிர்ந்துள்ளேன்.

    http://pagadu.blogspot.com/2011/08/blog-post.html

    அல்லாஹ்வின் கருணை மழையில் நனைந்து இறையச்சம் பெறுவீர்

    ReplyDelete
  9. வணக்கம் திரு இபின் ஷாகிர்,
    1.இப்பதிவில் முதல் கலிஃபாவாக திரு அபுபக்கர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை ஆதரப்பூர்வ ஹதிதுகள் கூறுவதை அப்ப்டியே கொடுத்திருக்கிறேன். அதில் குரேஷியர்களுக்கும்,அன்சாரிகளுக்கும் நடந்த பிரச்சிஅனைகளும், அபுபக்கரின் தேர்வு குழப்பமாக் நடை பெற்றதும் குறிப்பிடப் பட்டு உள்ளது. இஸ்லாமிலும் பிற‌ அரசுகள் போன்ற வாரிசு போட்டி, பொறாமை, போர்கள் இயல்பே என்பதை காட்டவே இப்பதிவு. இஸ்லாமில் பிரிவுகளுக்கிடையே உள்ள உட்பூசல் இதன் தொடர்சியே என்பதும் வரலாறு.
    இது பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லை ஆக்வே நான் சொன்னதை அப்ப்டியே இதெல்லாம் அரசியலில் சகஜம் என்று கொள்லலாமா?
    __________
    2./இஸ்லாம் வேகமாக பரவும் மதமாக இருப்பதன் காரணத்தை முகவை அப்பாஸ் தெரிவித்திருந்தார்./

    இஸ்லாம் வேகம் குறைவாக பரவுவதாக‌ முகவை அப்பாஸ் தெரிவித்தால் உங்க்ளுக்கு சிக்கல் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.வேகமாக பரவுவது எல்லாம் நல்லவை அல்ல. சில எ.கா
    அ) எயிட்ஸ் ஆ) போதை பழக்கம் இ) மனிதக் கடத்தல் ஈ) வன்முறை.உ) ஆடம்பரம்,ஊ)பொருளாதார சிக்கல்கள் ....சொல்லிக் கொண்டே போகலாம்.
    சரி சகோ முகவை அப்பாஸ் பதிவிற்கு ஆய்வு செய்து ,அதற்கு ஒரு பதிவு நான் எழுத விருப்பம் தெரிவிக்கிறீர்கள்.நேயர் விருப்பம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.உங்கள் அன்பு கட்டலைக்கு நன்றி.
    ___________
    3/அதனை இங்கே உங்களைப் போன்ற நாத்திக மடையர்களுக்காக பகிர்ந்துள்ளேன்./

    மிக்க நன்றி.மடையன் என்றால் சமையல்காரன் என்று அர்த்தம்.இது மிகவும் அருமையான் பணி.
    "வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்க்கெல்லாம்"_
    புத்திசாலியான் மதவாதியாக இருப்பதைவிட இது எவ்வளவோ மேல்.
    ______________
    4./அல்லாஹ்வின் கருணை மழையில் நனைந்து இறையச்சம் பெறுவீர்/

    எனக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் மழை ஒத்துக் கொள்ளாது.
    எவரைக் கண்டும் அஞ்ச விரும்புவதில்லை.மரணத்திற்கு பின் இன்னொரு வாழ்வு தேவையில்லை. இன்னும் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்.
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.அடிக்கடி வாருங்கள் சகோ.

    ReplyDelete
  10. படித்துவிட்டீர்களா?

    இப்போது தெரிந்ததா ஏன் இஸ்லாம் வேகமாக பரவும் மதமாக இருக்கிறது என்று?

    நான் எழுதிய பதிவில் உங்களுக்கு இருந்த பல கேள்விகள் விலகி ஓடியிருக்கும். உங்களது நாத்திக வாதத்தின் மீது செருப்படி விழுந்திருக்கும்.

    வாருங்கள் அல்லாஹ்வின் அருள்மழையில் நனையுங்கள்.

    ReplyDelete
  11. வணக்கம்
    இது என்னது புது விளையாட்டு!!!!!!!!!!!!
    சுத்தமாக் ஏமாந்து விட்டேன்.அருமையான முயற்சி!!!!!!!!
    ஹா ஹா ஹா.வாழ்த்துகள்,கலக்குங்க‌
    நன்றி

    ReplyDelete